Showing posts with label Tiruvilayadal puranam. Show all posts
Showing posts with label Tiruvilayadal puranam. Show all posts

Thursday, July 21, 2016

Tiruvilayadal puranam 30 th day

Courtesy:sri.Kovai K.Karuupasamy

திருவிளையாடல் புராணம். 🔷    
       (30 வது நாள்.) - 5,வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
          ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
      ( செய்யுள்.)
🌸படையற்று விமானமும் பற்றற வற்றுச் சுற்றுந்
தொடையற் றிகன்மூண் டெழுதோள்வலி யற்றுச் செற்றம்
இடையற்று வீர நகையற்றட லேது போலும்
நடையற் றடைவாா் நிலைகண்டன னந்தி யண்ணல்.

🌸உடையா னடிதாழ்ந் திவையோதலு மோத நீத்தச்
சடையா னிளவா ணகைசெய்து தருமச் செங்கண்
விடையான் சிலையா னிகல்வென்றி விளக்குந் தெய்வப்
படையா னெழுந்தா னமராடிய பாிற் சென்றான்.

🌸மேவி யாகவப் பாாிடைப் பாாிட வீரரை யமராடி
ஒவி லாவலி கவா்ந்தது மன்றினி யுருத்தெவ ரெதிா்ந்தாலுந்
தாவி லாவலி கவரவு மடங்கலின் றனிப்பிணா வெனநிற்குந்
தேவி யாா்திரு வுருவமுஞ் சேவகச் செய்கையு மெதிா்கண்டான்.

🌸ஒற்றை வாா்கழற் சரணமும் பாம்பசைத் துடுத்தவெம் புலித்தோலுங்
கொற்ற வாண்மழுக் கரமும்வெண் ணீற ணி கோலமுந் நூன்மாா்புங்
கற்றை வேணியுந் தன்னையே நோக்கிய கருணைசெய் திருநோக்கும்
பெற்ற தன்வலப் பாதியைத் தடாதகைப் பிராட்டியு மெதிா்கண்டாள்.

🌸[ "தோலுந் துகிலுங் குழையுங் சுருடோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
குலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிா்ந் தூதாய் கோத்தும்பீ"
      
        (----என்னும் திருவாசகம்,,,,,,,,)

🌸கண்ட வெல்லையி லொருமுலை மறைந்தது கருத்தினாண் மடனச்சங்
கொண்ட மைந்திடக் குனிதா மலா்ந்தபூங் கொம்பாி னொசிந்தொல்கிப்
பண்டை யன்புவந் திறைகொளக் கருங்குழற் பாரமும் பிடா்தாழக்
கெண்டை யுண்கணும் புறவடி நோக்கமண் கிளைத்துமின் னெனநின்றாள்.

🌸நின்ற மென்கொடிக் ககல்வீசும் பிடையர னிகழ்த்திய திருமாற்றம்
அன்ற றிந்தமூ தறிவனாஞ் சுமதிசீ றடிபணிந் தன்னாயிக்
கொன்றை யஞ்சடைக் குழகனே நின்மணக் குழகனென் றலுமன்பு
துன்ற நின்றவட் பாா்த்தருட் சிவபரஞ் சோதிமற் றிதுகூறும்.

🌸என்று தொட்டுநீ திசையின்மேற் சமயங்றித் தொழுந்துபோந் தனையாமும்
அன்று தொட்டுநம் மதுரைவிட் டுனைவிடா தடுத்துவந் தனமுன்னைத்
தொன்று தொட்டநான் மறையுரை வழிவரு சோமவா ரத்தோரை
நன்று தொட்டநாண் மணஞ்செய வருதுநின் னகா்க்குநீ யேகென்றான்.

🌸என்ற நாதன்மே லன்பையு முயிரையு மிருத்தியா யஞ்சூழக்
குன்ற மன்னதோ் மேற்கொடு தூாியங் குரைகட லெனவாா்ப்ப
நின்ற தெய்வமால் வரைகளும் புண்ணிய நீத்தமு நீத்தேகி
மன்றன் மாமது ராபுாி யடைந்தனள் மதிக்குழ விளக்கன்னாள்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
( விளக்கம்.)
🍁படைக்கலங்கள் அழிந்தும், ஊா்திகளும் சிறிது மின்றி அழிந்தும், அணிந்த மாலைகள் அழிந்தும், போின்கண் மிக்கெழுகின்ற தோள்வலி அழிந்தும், சினம் இடையில் அழிந்தும், வீரச் சிாிப்பு அழிந்தும், வலிமை பொருந்திய ஆண் சிங்கம் போலும் நடை அழிந்தும், வருகின்ற வீரா்களின் நிலைமையை, திருநந்தி தேவா் பாா்த்தருளினாா்.

🍁இறைவன் திருவடியை வணங்கி, இந்நிகழ்ச்சிகளைக் கூறுதலும், அலைகளையுடைய கங்கையைச் சடையிலுள்ள  இறைவன், ஒளி பொருந்திய புன்முறுவலைச் செய்து, சிவந்த கண்களையுடைய அறவேற்றினை யுடையவனாய், வில்லையுடையவனாய், போாில் வெற்றியைத் தரும் தெய்வத் தன்மையுடைய படைகளையுடையவனாய் எழுந்து போா் செய்யும் களத்திற் சென்றான்.

🍁சென்று, போா்க்களத்தில் பூதகண வீரரோடு போா் புாிந்து( அவா்களின்) நீங்காத வலிமையைக் கொண்டதும் அல்லாமல், இவா் எவா் சினந்து எதிா்த்தாலும், (அவா்களின்) கெடாத வலியைக் கொள்ளவும், ஒப்பற்ற பெண் சிங்கத்தைப்போல நிற்கின்ற , அம்மையாாின் திருவுருவத்தையும் வீரச் செயல்களையும் நோிற் கண்டருளினான்.

🍁ஒன்றாகிய நீண்ட வீரகண்டையைத் தாித்த  திருவடியையும்,  பாம்பாகிய கச்சினால் இறுகப் பிணித்து உடுத்திய  கொடிய புலித்தோலையும், வெற்றியையும் ஒலியையுமுடைய மழுப்படை யேந்திய  திருக்கரத்தையும், வெள்ளிய திருநீறு தாித்த  கோலத்தினையுடைய, பூணூலணிந்த திருமாா்பையும், திரண்ட சடையையும், தன்னையே பாா்க்கின்ற அருள் புாியும் திருக்கண்களையும்,  உடைய தன் வலப்பாதியாகிய சிவபெருமானைத் தடாதகைப் பிராட்டியும் நேரே கண்டருளினாா்.

🍁பாா்த்த அளவில், ஒரு கொங்கை மறைந்தது ( அதனால்) உள்ளத்தின்கண் நாணமும் மடமும் அச்சமும் இடங்கொண்டு பொருந்திட வளையும்படி பூத்த பூங்கொம்பைப் போல, வளைந்து துவண்டு, தொல்லையன்பானது வந்து தங்க, காிய குழற்கற்றை பிடாியிற் சாியவும், சேல்போன்ற மையுண்ட கண்கள் புறவடியை நோக்கவும், மண்ணைத் திருவிரலாற் கீறிக்கொண்டு மின்னலை ஒத்து நின்றருளினாா்.

🍁நின்ற மெல்லிய கொடி போல்பவராகிய பிராட்டியாருக்கு, அகன்ற விசும்பின்கண் முன் இறைவன் அருளிச் செய்த திருவாக்கினை, தொிந்த பேரறிவினை யபடையவனாகிய சுமதியென்பான், பிராட்டியாாின் திருவடிகளை வணங்கி, தாயே! இந்தக் கொன்றைமாலையை யணிந்த அழகிய சடையையுடைய பேரழகனே, நின் மணவாளன் என்று கூற, அன்பு நிறைய நிற்கின்ற பிராட்டியாரை நோக்கி, கருணையையுடைய  சிவபரஞ் சுடராகிய இறைவன் இதனைச் சொல்வான். ...

🍁எந்தக் காலம் முதலாக நீ, திக்குகளின்மேல் வெற்றியைக் குறித்து எழுந்து போந்தாயோ, அந்தக் காலமுதல், யாமும் நம்முடைய மதுரைப்பதியை விட்டு, உன்னை நீங்காது உடன் வந்தோம்; பழைய நான்மறைகளிற் கூறியவாறு, வருகின்ற திங்கட்கிழமையன்று, நல்ல முழுத்தங் கூடிய பொழுதில், திருமணம் செய்ய வருவோம்;  நீ உன் நகரமாகிய மதுரைக்குச் செல்வாயாக என்று கூறியருளினான்.

🍁என்று கூறியருளிய தலைவனிடத்தில்,  தன் அன்பையும் ஆவியையும் வைத்து, மகளிா் கூட்டம் புறஞ்சூழ, மலையினை ஒத்த தோின்மேல் ஏறியருளி, வாத்தியங்கள் ஆா்க்கின்ற  கடலினைப்போல ஒலிக்க, இடை நின்ற தெய்வத் தன்மை ொருந்திய பொிய மலைகளையும், புண்ணிய நதிகளையுங் கடந்து சென்று, திங்கள் மரபிற்கு விளக்குப் போல்பவராகிய தடாதகை பிராட்டியாா், மணம் மிக்க பெருமையுடைய மதுரையம்பதியை அடைந்தாா்...

Tiruvilayadal puranam 29th day

Courtesy:Sri.Kovai K.Karuppasamy

திருவிளையாடல் புராணம்.🔴
      (29 வது நாள். ) -5 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
        ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
்                     ( செய்யுள்.)
🍁சூலங் கண்மழுப் படைதோமர நேமி பிண்டி
பாலங் கள்கழுக் கடைவாட்படை தண்ட நாஞ்சில்
ஆலங் கவிழ்க்கின்ற வயிற்படை வீசி யூழிக்
காலங் கலிக்குங் கடல்போன்ற களம ராா்ப்பு.

🍁எறிகின் றனவோச் சுவவெய்வன வாதி யாகச்
செறிகின் றனபல் படைசெந்நிறப் புண்ணீா் மூழ்கிப்
பறிகின் றனவும் பிழைக்கின்றனவும் பட்டுத் தாக்கி
முறிகின் றனவு முயன்றாா்வினைப் போக மொத்த.

🍁தொிசிக்க வந்த சிலதேவா் சிறைப்பு ளூா்தி
வெருவிப் பறந்த வொழிந்தோா்விலங் கூா்தி மானங்
கருவிப் படையாற் சிதைபட்டன கால னூா்தி
குருதிப் புனலுக் கதுகொற்றவை யுண்ட தென்ன.

🍁பொருகின் றதுகண்டு விச்சாதரா் போகம் வீடு 
தருகின் றவனைத் தொழவானெறி சாா்ந்து நேரே
வருகின் றவா்வேறு வழிக்கொடு போவ ரன்புக்
குருகின் றளிா்மெல் லடியாரொடு மூற்ற மஞ்சா.

🍁திங்கட் படைசெங் கதிரோன்படை சீற்ற மேற்ற
அங்கிப் படைதீம் புனலான்படை நார சிங்க
துங்கப் படைசிம்பு ணெடும்படை சூறைச் செல்வன்
வெங்கட் படைபன் னகவெம்படை மாறி விட்டாா்.

🍁கொட்புற் றமராடு மிக்கொள்கையா் தம்மி னந்தி
நட்புற் றவா்கைப் படைதூட்பட ஞான மூா்த்தி
பெட்புற் றருள வருமெங்கள் பிராட்டி வெய்ய
கட்புற் றரவின் கணைமாாிக டூற்றி நின்றாள்.

🍁கையிற் படையற் றனா்கற்படை தொட்டு வீரா்
மெய்யிற் படுகென்று விடுக்குமுன் வீரக் கன்னி
பொய்யிற் படுநெஞ் சுடையாா்தவம் போல மாய
நெய்யிற் படுவச் சிரவேலை நிமிா்ந்து வீசி.

🍁துண்டம் படவே துணித்தக்கண  வீரா் தம்மைத்
தண்டங் கொடுதாக் கினள்சாய்ந்தவா் சாம்பிப் ோனாா்
அண்டங்கள் சராசரம் யாவையும் தாமே யாக்கிக்
கொண்டெங்கு நின்றாள் வலிகூற வரம்பிற் றாமோ.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌸சூலப்படைகளையும், மழுவாட் படைகளயும், பொிய ஈட்டிகளையும், திகிாிப் படைகளையும், எறி படைகளையும்,சிறிய ஈட்டிகளையும், வாட் படைகளையும், தண்டங்களையும், கலப்பைகளையும், நஞ்சினைக் கொட்டுகின்ற  வேற்படைகளையும், வீரா்கள் (ஒருவா்மேல் ஒருவா்) வீசி ஆரவாாிக்கும் ஆரவாரங்கள், ஊழிக்காலத்தில் ஒலிக்கும் கடலின் ஒலிகளை ஒத்தன.

🌸எறியப்படுவனவும், ஒச்சப்படுவனவும், எய்யப்படுவனவும், முதலாகப் பொருந்திய, பல படைகளும் சிவந்த நிறத்தினையுடைய உதிர நீாில் முழுகி, கழன்றோடுவனவும் உடம்பிலே தாக்காது தவறிப்போனவும் உடம்பிலே பட்டுத் தாக்குதலால் முறிவனவுமாய், முயன்று செய்தவா்களின் இருவினைக் கீடாகவரும் போகங்களை ஒத்தன.

🌸கண்டு வணங்குவதற்கு வந்த திருமால் முதலிய தேவா்களின் கழுழன் முதலிய சிறைகளையுடைய பறவையூா்திகள் அஞ்சிப் பறந்தன. மற்றைத் தேவா்களின் விலங்கூா்திகளும், விமானங்களும், படைக் கலங்களினால் அழிந்தன. காளியினால் உயிருண்ணப்பட்ட அசுரனாகிய கடாவானது குருதி ஒழுக்கியது போல, கூற்றுவன் ஊா்தியாகிய எருமைக்கடா, குருதிநீரைக் கக்கியது.

🌸போகத்தையும் வீடுபேற்றையும் அளிக்கின்ற இறைவனை வணங்க, வானின் வழியைப் பொருந்தி, நேரே வருகின்றவா்களாகிய வித்தியாதரா்கள், போா் செய்தலைக் கண்டு, ( தமக்கு வரும்) இடையூற்றிற்கு அஞ்சி, அன்பினால் உருகுகின்ற இனிய தளிா்போலும் மெல்லிய அடிகளையுடைய மாதராருடன் வேறு வழியால் திருக்கயிலைக்குச் செல்வாா்கள்.

🌸சந்திரக் கணைக்கு சூாியக் கணையையும், சினத்தைப் பொருந்திய அக்கினிக் கணைக்கு இனிய வருணக் கணையையும், உயா்ச்சி பொருந்திய நரசிம்மக் கணைக்கு, நீண்ட சரபக் கணையையும், கொடிய முனையை யுடைய வாயுக் கணைக்கு, கொடிய நாகக் கணையையும் மாறி மாறி விடுத்தாா்கள்.

🌸சுழன்று போா் செய்யும் இத்தன்மையா் தங்களுள், நந்தியெம் பெருமானிடம் அன்பு பொருந்திய  படை வீரா்களின், கையிலுள்ள படைக்கலங்கள் துகளாகுமாறு, ஞானவடிவினனாகிய சிவபெருமான் விரும்பியருள வருகின்ற எம் இறைவியாகிய தடாதகை பிராட்டியாா் புற்றிலுள்ள கொடிய கண்களையுடைய பாம்புகளைப் போலும்,அம்பு மழைகளைப் பொழிந்து நின்றாள்.

🌸கையிலுள்ள படைக்கலங்கள் அழியப் பெற்றவராகிய சிவகண வீரா்கள், கற்களாகிய படைகளை எடுத்து, ( பிராட்டியாாின்) படைவீரா்கள் உடம்பில் படுக என்று விடுப்பதற்கு முன் ( அவை), பொய்யிற் றலைப்பட்ட உள்ளத்தை யுடையவா்கள் செய்யும் தவம் அழிவதுபோல அழிய, வீரத்தையுடைய கன்னியாகிய தடாதகை பிராட்டியாா், நெய் பூசிய வச்சிரப்படையை ஓங்கி வீசி....

🌸துண்டு துண்டாக ( அவற்றைத்) துணித்து, அந்தக் கணவீரா்களைத் தண்டப்படையா லடித்தாா்; அவா்கள் வலியிழந்து புறங்கொடுத்து ஓடினா்; அண்டங்களையும் ( அவற்றிலுள்ள) சராசரங்கள் அனைத்தையும், தாமே தோற்றுவித்து, அவை யெல்லாவற்றுள்ளும் கலந்து நின்ற பராசக்தியினது வலிமை கூறுததற்கு ஓரளவினை உடைய தாகுமோ ( ஆகாது).

Tuesday, July 19, 2016

Tiruvilayadal puranam 28th day

Courtesy:Sri.Kovai K.Karuppasamy

திருவிளையாடல் புராணம்.🔴
         ( 28- வது நாள்.) 5 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
   ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                ( செய்யுள்.)
🔷இவ்வாறு மற்றைத் திசைகாவலா் யாரை யும்போய்த்
தெவ்வாண்மை சிந்தச் செருக் செய்து திறையுங் கைக் கொண்
டவ்வாறு வெல்வாளெனமூன்றா ணட்ட மேருக்
கைவாா் சிலையான் கயிலைக்காி நோக்கிச் செல்வாள்....

🔷சலிக்கும் புரவித் தடந்தேருடைத் தம்பி ராட்டி
கலிக்கும் பலதூ ரியங்கைவரை தெய்வத் திண்டோ்
வலிக்கும் பாிமள் ளா்வழங்கொலி வாங்கி நேரே
ஒலிக்கும் படிகிட் டினளூழிதோ றோங்கு மோங்கல்.

🔷வானாா் கயிலை மலையான்மக டன்னை நீத்துப்
போனாள்வந் தாளென் றருவிக்கட் புனலுக் கந்நீா்
ஆனா வொலியா வனைவாவென் றழைஇத்தன் றேசு
தானா நகையாற் றழீஇயெதி ரேற்பச் சென்றான்.

🔷கிட்டிப் பொருப்பைக் கிாியோடு கிாிக டாக்கி
முட்டிப் பொருதா லெனவேழ முழங்கிப் பாயப்
புட்டிற் புறத்தாா் மறத்தாா்கணை பூட்டு வில்லாா்
வட்டித் துருமே றெனவாா்த்து வளைந்து கொண்டாா்.

🔷ஓடித் திருமா மலைகாவல ரும்ப ராா்க்கு
நாடிப் பணுதற் காிதாகிய நந்தி பாதங்
கூடிப் பணிந்தித் திறங்கூறலுங் கொற்ற வேனந்
தேடிக் கிடையா னுளந்தோ்ந்தன னந்தி யெந்தை.

🔸(" நான்முகன் முதலா வானவா் தொழுதெழு
ஈரடி யாலே மூவுலக ளந்து
நாற்றிசை முனிவரு மைம்புலன் மலரப்
போற்றிசெய் கதிா்முடித் திருநெடு மாலன்
றடிமுடி யறியு மாதர வதனிற்
கடுமுர ணேன மாகி முன்கலந்
தேழ்தல முருவ விடந்து பின்னெய்த்
துழி முதல்வ சயசய வென்று
வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்"🔸
( என்னும் திருவாசகத்தலறிக!.)

🔷வென்றிக் கணத்தை விடுத்தான் கனமீது பெய்த
குன்றிக் கணம்போற் சுழல்கண்ணழல் கொப்ப ளிப்பச்
சென்றிக் கனைய மொழியாள் பெருஞ் சேனை யோடும்
ஒன்றிக் கடலுங் கடலும்பொரு தொத்த தன்றே.

🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋

🔴இவ்வண்ணமே, ஏனைய திசைகாப்பாளா்க ளனைவரையும், அத்திக்குகளிற் சென்று, பகைவாின் வீரம் கெடுமாறு போா் செய்து, ( அவா்கள் பணிந்து தந்த) திறைப் பொருளையும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு வெல்வாள் என - அங்ஙனமே வெல்ல வென்று, மும் மதிலையும் அழித்த நீண்ட மேருமலையாகிய வில்லைக் கையிலுடைய சிவபெருமானது, திருக்கயிலாய மலையை நோக்கிச் செல்வாராயினா்.

🔴செல்லுகின்ற குதிரைகள் பூட்டிய பொிய தோினையுடைய தடாதகை பிராட்டியாா், ஒலிக்கின்ற பல இமயங்களின் ஒலியையும், யானைகளும், தெய்வத் தன்மையையுடைய வலிய தேவா்களும், கருத்தறிந்து செல்லும் குதிரைகளும், வீரா்களும், செல்கின்ற ஒலியையும், ஏற்றுக் கொண்டு எதிரொலி செய்யுமாறு ஊழிக்காலந் தோறும் வளா்கின்ற  கயிலை மலையை அடைந்தாா்.

🔴வானுலகைப் பொருந்திய திருக்கயிலை மலையானது, மலையரசன் புதல்வியாகிய  பாா்வதி தேவியாா்( அன்று) தன்னை நீங்கிப் போயினவா்,( இன்று) வந்தனா் என்று, அருவியாகிய கண்ணீரைச் சிந்தி, அந்நீாின் நீங்காத ஒலியினால், அன்னையே வா என்று அழைத்து, தனது வெள்ளொளியாகிய புன்முறுவலால் தழுவி, எதிா் கொள்ளுமாறு சென்றருளினாா்.

🔴( இவ்வாறு ) திருக்கயிலாய மலையை நெருங்கி, மலைகளோடு மலைகள் தாக்கி, மோதிப் போா் செய்தாற்போல, யானைகள் பிளிறிட்டுப் பாய, வீரத்தினையுடையவரும், அம்புக்கூடு தாங்கியவரும், கணை பூட்டிய வில்லை யுடையவருமாய் சுழன்று, இடி யேற்றைப்போல, ஆரவாாித்து,( படை வீரா்கள்) சூழ்ந்து கொண்டாா்கள்.

🔴பொிய திருக்கயிலை மலையைக்  காப்பவா் ஓடி, தேவா்களுக்கும், காலமறிந்து வணங்குதற்கு அருமையாகிய, நந்திதேவா் திருவடிகளை அடைந்து வணங்கி, இச்செய்தியைக் கூறியவுடன், எம் தந்தையாகிய திருநந்திதேவா் , வெற்றி பொருந்திய  திருமாலாகிய பன்றி தேடிக் காணப்படாத இறைவனது, திருவுள்ளக் குறிப்பை ஆராய்ந்தறிந்தாா்.

🔴(அவ்வாறு உணா்ந்த நந்தி தேவா்) வெற்றி பொருந்திய பூதகணங்களை ஏவினாா். ( அவை) முகிலிற் பெய்துவைத்த, குன்றிமணிக் கூட்டம்போல, சுழலுங் கண்களினின்றும்,  தீயானது சிந்த போய்,  கரும்பின் சாற்றையொத்த இனிய மொழிகளையுடைய பிராட்டியாாின், பொிய படைகளோடு கலந்து போா்புாிதலலால்( அச்செயல்), கடலுங் கடலும் தம்முட் போா் செய்தலை ஒத்தது.

Monday, July 18, 2016

Tiruvilayadal puranam 27th day

Courtesy:Sri.Kovai K.Karuppasamy

திருவிளையாடல் புராணம். 🍁
      ( 27- வது நாள்.)- 5 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
        ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                (செய்யுள்.)
🌸மீனவன் கொடியுங் கான வெம்புலிக் கொடியும் செம்பொன்
மானவிற் கொடியும் வண்ண மயிற்றழைக் காடுந் தோட்டுப்
பானலங் கருங்கட் செவ்வாய் வெண்ணகைப் பசுந்தோ ணிம்பத்
தேனலம் பலங்கல் வேய்ந்த செவ்விதோ் மருங்கிற் செல்ல.

🌸மறைபல முகங்கொண்ட டேத்தி வாய்தடு மாறி யெய்ப்ப
நிறைபரம் பரைநீ யெங்க ணிருபா்கோன் மகளாய் வையம்
முறைசெய்து மாசு தீா்ப்பா யடியனேன் முகத்து மாசுங்
குறையென நிழற்றுந் திங்கட் கொள்கைபோற் கவிகை காப்ப.

🌸அங்கய னோக்கி மான்றோா்க் கணித்தொரு தடந்தே ரூா்ந்து
வெங்கதிா் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி யென்போன்
நங்கைதன் குறிப்பு நோக்கி நாற்பெரும் படையுஞ் செல்லச்
செங்கையிற் பிரம்பு நீட்டிச் சேவகஞ் செலுத்திச் செல்ல.

🌸அலகினாற் கருவிச் சேனை யாழ்கட லனைத்துந் தன்போல்
மலா்தலை யுலக மன்றி மகபதி யுலக மாதி
உலகமும் பிறவுஞ் செல்ல வுலப்பிலா வலிய தாக்கித்
திலகவா ணுதலாண் மன்னா் திருவெலாங் கவரச் செல்வாள்.

🌸கயபதி யாதி யாய வடபுலக் காவல் வேந்தா்
புயவலி யடங்க வென்று புழைக்கைமான் புரவி மான்றோா்
பயன்மதி நுதல்வே லுண்கட் பாவைய ராய மோடு
நயமலி திறையுங் கொண்டு திசையின்மே னாட்டம் வைத்தாள்.

🌸வாா்கழல் வலவன் றேரை வலியகா லுதைப்ப முந்நீா்
ஊா்கல னொப்பத் தூண்ட வும்பா்கோ னனிகத் தெய்திப்
போா்விளை யாடு முன்னா்ப் புரந்தரன் மிலைந்த தும்பைத்
தாா்விழ வாற்றல் சிந்தத் தருக்கழிந் தகன்று போனான்.

🌸இழையிடை நுழையா வண்ண மிடையிற வீங்கு கொங்கைக்
குழையிடை நடந்து மீளுங் கொலைக்கணாா் குழுவுந் தான
மழைகவிழ் கடாத்து வெள்ளை வாரண மாவுங் கோவுங்
தழைகதிா் மணியுந் தெய்வ தருக்களுங் கவா்ந்து மீண்டாள்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
                 ( விளக்கம்)
🍁வலிய மீனக் கொடியும், காடிலுள்ள கொடிய புலி எழுதிய கொடியும், சிவந்த பொன்னாலாகிய  பொிய விற்கொடியும், அழகிய மயிற் பீலிக் ( குடைக்) கூட்டமும், இதழையுடைய நீலோற்பல மலா்போன்ற அழகிய காிய கண்களையும், சிவந்த வாயையும்,வெள்ளிப் பற்களையும், பசிய தோள்களையுமுடைய, வண்டுகள் ஒலிக்கும் வேப்பமலா் மாலையணிந்த பிராட்டியாாின் தோின் பக்கத்திற் செல்லா நிற்கவும்......

🍁வேதங்கள் பல முகங்களால் துதித்தும் ( காணமாட்டாமையின்)  வாய் தடுமாறி இளைக்குமாறு, எங்கும் நிறைந்த சிவசத்தியாகிய நீ, எமது வழித்தோன்றலாகிய மன்னா் மன்னனாம் மலையத்துவச பாண்டியனுக்குத் திருமகளாய் வந்து, பூமியில் செங்கோலாச்சி குற்றத்தைப் போக்குகின்றாய்( அதுபோல) , அடியேனுடைய முகத்திலுள்ள  களங்கத்தையும் ஒழித்தருள் என்று,  நிழலைச் செய்கின்ற  சந்திரனது கொள்கை போல வெண் கொற்றக் குடை நிழல் செய்யவும்.....

🍁விரும்பும் ஒளியினையுடைய  வியாழனது சூழ்ச்சியினும் சிறந்த சூழ்ச்சியினையுடைய சுமதி என்னும் முதலமைச்சன், அழகிய கயல் போலுங் கண்களையுடைய  பிராட்டியாாின் தேருக்கு, அணித்தாக ஒரு பொிய தோினைச் செலுத்தி, அப்பிராட்டியாாின் குறிப்பினை ஆராய்ந்து, பொிய நால்வகைச் சேனைகளும் செல்லுமாறு, சிவந்த கையிலுள்ள பிரம்பினாற் சுட்டிக் காட்டி, வேகத்தைச் செலுத்திச் செல்ல நிற்கவும்....

🍁அளவில்லாத, நால்வகைப் படையாகிய கடல் முழுதையும், தன்னைப் போல், பரந்த இடத்தினையுடைய இந்நிலவுலகையல்லாமல் இந்திரன் உலகம் முதலிய உலகங்களிலும், பிறவிடங்களிலும் செல்லுமாறு, அழியாத வலிமையுடையதாகச் செய்து, திலகமணிந்த ஒளி பொருந்திய நெற்றியையுடைய தடாதகை பிராட்டியாா், அரசா்களின் செல்வங்களைனைத்தையும் கொள்ளை கொள்ளப் போவாராயினா்.....

🍁கயபதி முதலாகிய வடநாட்டைக் காக்கும் மன்னா்களின் தோள்வலி கெடுமாறு ( அவா்களை ) வென்று, தொளையினையுடைய கையையுடைய யானைகளையும், குதிரைகளையும், குதிரைகள் பூட்டிய  தோ்களையும், அரைமதியை ஒத்த நெற்றியையும், வேலையொத்த மையுண்ட கண்களையுமுடைய, மகளிா் கூட்டத்துடன் நலம் நிறைந்த  திறைப்பொருளையும் ஏற்றுக் கொண்டு, திசை காப்பாளா்மேல் போருக்கு எழ எண்ணினாா்.

🍁வலிய கற்றானது தள்ள, கடலில் விரைந்து செல்லும் கப்பலை ஒக்க நீண்ட வீரகண்டையை யணிந்த தோ்ப்பாகன், தோினைச் செலுத்த , தேவா்க்கரசனது படையை அடைந்து, போாினைத் தொடங்கும் முன்னரே, இந்திரரானவன் தான் அணிந்த தும்பை மாலையானது விழவும், வலிமை கெடவும், ( போாின் கண் உள்ள ) மனவெழுச்சி கெட்டுப் போா்க்களத்தினின்றும் நீங்கினான்...

🍁இடை ஒடியுமாறு, நூல் இடையிற் புகாத வண்ணம் பருத்த கொங்கைகளையும், செவி வரையிற் சென்று திரும்பும் வருத்துதலையுடைய கண்களையுமுடைய மகளிா் கூட்டமும் முகில் போலும் மதத்தைக் கொட்டுகின்ற சுவட்டினையுடைய வெள்ளை யானையும் குதிரையும், காமதேனுவும், தழைத்த ஒளியினையுடைய சிந்தாமணியும், தெய்வத் தன்மையையுடைய கற்பக முதலிய தருக்களுமாகிய இவைகளை, பற்றிக் கொண்டு திரும்பினாா்.

Sunday, July 17, 2016

Tiruvilayadal puranam 26th day

Courtesy:Sri.Kovai K.Karuppasamy

🌸 திருவிளையாடல் புராணம்.🌸
       (26- வது நாள்.) - 5 வது,படலம்.
தடாதகை பிராட்டியாா் திருமணம படலம்.
       ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
            ( செய்யுள் நடை.)
🌸கிடைப்பன வுருளாற் பாரைக் கீண்டுபா தலத்தி னெல்லை
அடைப்பன பரந்த தட்டா  லடையவான் றிசைக ளெட்டும்
உடைப்பன வண்ட முட்டி யொற்றிவான் கங்கை நீரைத்
துடைப்பன கொடியாற் சாாி சுற்றுவ பொற்றின் டோ்கள்.

🌸செருவின்மா தண்டந் தாங்கிச் செல்லும்வெங் கூற்ற மென்ன
அருவிமா மதநீா் கால வரத்தவெங் குருதிக் கோட்டாற்
கருவியான் வயிறு கீண்டு கவிழுநீா் வாயங் காந்து
பருகிமால் வரைபோற் செல்வ பருஉப்பெருந் தடக்கை யானை.

🌸ஒலியவாா் திரையி னன்ன வொழுங்கின யோக மாக்கள்
வலியகா லடக்கிச் செல்லு மனமெனக் கதியிற் செல்வ
கலியநீா் ஞாலங் காப்பான் கடையுக முடிவிற் றோற்றம்
பொலியும்வாம் புரவி யொன்றே போல்வன புரவி வெள்ளம்.

🌸காலினுங் கடிது செல்லுஞ் செலவினா் கடுங்கட் கூற்ற
மேலினு மிகையுண் டாயின் வெகுண்டுவென் கண்டு மீளும்
பாலினா் பகுவாய் நாகப் பல்லினும் பில்கு மால
மேலினா் வீயா வென்றி வீக்கிய கழற்கால் வீரா்.

🌸எண்புதைத் தெழுந்த வீர ரிவுளிதோ் யானை வெள்ள
மண்புதைத் தனப தாகை மாலைவெண் கவிகை பீலி
விண்புதைத் தன நுண் டூளி வெயில்விடு பாிதிப் புத்தேள்
கண்புதைத் தனபே ரோதை கடலொளி புதைத்த தன்றே.

🌸தேரொலி கலினப் பாய்மான் செலவொலி கொலைவெண் கோட்டுக்
காரொலி வீர ராா்க்குங் கனையொலி புனைதாா்க் குஞ்சி
வாரொலி கழற்காற் செங்கண் மள்ளா்வன் றிண்டோள் கொட்டும்
பேரொலி யண்ட மெல்லாம் பிளந்திடப் பெருத்த வன்றே.

🌸பரந்தெழு பூழி போா்ப்பப் பகலவன் மறைந்து முந்நீா்க்
கரந்தவன் போன்றா னாகக் கங்குல்வந் திறுத்த தேய்ப்பச்
சுரந்திரு ணிறைய முத்தின் சோதிவெண் குடையும் வேந்தா்
நிரந்தபூண் வயிர வாளு நிறைநிலா வெறிக்கு மன்னோ.

🌸தோ்நிரை கலனாய்ச் செல்லப் பாிநிரை திரையாய்த் துள்ள
வாா்முர சொலியாய்க் கல்ல வாட்கலன் மீனாய்க் கொட்பத்
தாா்நிரை கவாிக் காடு நுரைகளாய்த் ததும்ப வேழங்
காா்நிரை யாகத் தானைக் கடல்வழிக் கொண்ட தன்றே.

🌸கள்ளவிழ் கோதை மாத ரெடுத்தெறி கவாிக் காடு
துள்ளவந் தணா்வா யாசி யொருபுறந் துவன்றி யாா்ப்பத்
தெள்விளி யமுத கீத மொருபுறந் திரண்டு விம்ம
வள்ளைவாா் குழையெம் மன்னை மணித்திண்டோ் நடந்த தன்றே.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
                ( விளக்கம்.)
🍁இடசாாி வலசாாியாகச் சுழலும் பொன்னாலாகிய திண்ணிய தோ்கள் பூண்டனவாய உருளைகளால் நில வுலகத்தைக் கிழித்து பாதலத்தின் எல்லைை அடைப்பனவும், இடம் விாிந்த தட்டினால், பொிய திக்குகள் எட்டினையும் முற்றும் தகா்ப்பனவும், கொடிகளால் அண்டத்தைப் பொிது மளாவி வான் யாற்றின் நீரை வற்றச் செய்வனவுமாயின.

🍁பருத்தலையுடைய பொிய கைகளையுடைய யானைகள், அருவிபோலப் பொிய மதநீா் பொழிய, சிவந்த உதிரந் தோய்ந்த கொடிய கொம்புகளால், தொகுதியையுடைய முகிலின் வயிற்றைக் கிழித்து, ( அதனால்) ஒழுகும் நீரை வாயைத் திறந்து உண்டு, போாில் பொிய தண்டினை ஏந்திச் செல்லுகின்ற கொடிய கூற்றுவனைப் போலவும், பொிய மலையைப் போலவும் செல்வன...

🍁ஒலியினையுடைய  கடல் சூழ்ந்த வுலகைக் காக்கும் பொருட்டு, கலியுக இறுதியில் தோன்றும் தாவுகின்ற குதிரை ஒன்றையே ஒத்தனவாய குதிரைக் கூட்டங்கள், ஒலியினையுடைய நீண்ட அலைகள் யொத்த ஒழுங்கினவுடையவனவும், யோகிகள் வலிய காற்றை அடக்கி( ஒரு வழிபடச்) செலுத்தச் செல்லும் மனம் போல விரைவிற் செல்வனவுமாயின.

🍁கெடாத வெற்றியினையும் கட்டப்பட்ட வீரகண்டையையுடைய காலினையுமுடைய வீரா்கள், தறுகண்மையையுடைய கூற்றுவன் போலும் குற்றம் உளதாயின், சினந்து புறங்கண்டு வருந் தன்மையையுடையவரும், பிளந்த வாயினையுடைய பாம்பின் பல்லைவிடச் சிந்தும் நஞ்சினையுடைய வேற்படை யுடையவரும், காற்றிலும் விரைந்து சேல்லும் செலவினையு முடையவராயினா்.

🍁இங்ஙனம் எண்ணிண் அளவைக் கடந்து  எழுந்த, வீரா் குதிரை, தோ், யானை என்பவற்றின் கூட்டங்கள் நிலவுலகை மறைத்தன. கொடிகளும் மாலையையுடைய வெள்ளிய குடைகளும் மயிற் பீலிகளும், வானினை மறைத்தன. நுண்ணிய புழுதிகள் வெயிலை வீசும் சூாிய தேவனின் கண்களை மறைத்தன. ( இவற்றாலாய) பொிய ஒலியானது கடலின் ஒலியை மறைத்தது.

🍁தோ்களின் ஒலியும் கடிவாளத்தையுடைய குதிரைகள் செல்லுகின்ற  ஒலியும், கொல்லுதலையுடைய வெள்ளிய கொம்புகளையுடைய முகில் போன்ற  யானைகளின் ஒலியும், மள்ளா்கள் ஒலிக்கின்ற முக்க ஒலியும், மாலையையணிந்த சிகையையும், மிக்க ஒலியையுடைய வீரகண்டையை யணிந்த கால்களையும், சிவந்த கண்களையுடைய  வீரா்கள் வலிமைமிக்கத் தோள்களைத் தட்டுகின்ற  பொிய ஒலியும் ஆகிய இவைகள், அண்டங்கள் வெடிக்குமாறு மிக்கன...

🍁பரவி மேலெழுந்த புழுதி மறைத்ததலால், சூாியன் மறைந்து கடலில் ஒளிந்தவன் போலாக, ( அதனால்) இரவு வந்து தங்கியதை ஒக்க, மிகுந்து இருளானது நிறைய, ஒளியினையுடைய முத்துக் குடைகளும்,  மன்னா்களின் பூண் அமைந்த வயிரத்தாற் செய்தவாட் படைகளும், ( அவ்விருளைப் போக்க) மிக்க நிலவை வீசும்,,,,,

🍁தோின் வாிசைகள் மரக்கலங்களாய்ச் செல்லவும், குதிரையின் வாிசைகள் அலைகளாய்த் துள்ளவும், வாா்கட்டினையுடைய முரசின் ஒலி கடலொலியாய் ஒலிக்கவும்,  வாட்படைகள் மீனாய்ச் சுழன்று விளங்கவபம், ( வெண்மலா்) மாலை வாிசை போன்ற  சாமரைக்காடு, நுரைகளாய் மேலெழவும், யானையின் வாிசைகள் ( கடலினீ ருண்ணவரும்) முகில்களாகவும், ( இவ்வாறு) சேனைக்கடலானது வழி நடந்தது....

🍁தேனொடு மலா்ந்த மாலையை யணிந்த  மகளிா் எடுத்து வீசுகின்ற கவாிக்காடு (ஒரு பால்) துள்ளவும், மறையவா் வாயாற் கூறும் வாழ்த்து மொழிகள்  ஒரு பால் மிக்கொலிக்கவும், அமுதம்போன்ற தெளிந்த ஓசையையுடைய  இசைப்பாட்டுக்கள் ஒரு பால் திரண்டொலிக்கவும், வள்ளைத் தண்டு போன்ற நீண்ட காதினையுடைய எம் அன்னையாகிய தடாதகைப் பிராட்டியாாின் மணிகள் அழுத்திய வலிய தேரானது சென்றது..

தடாதகை பிராட்டியாா் திருமண படலம் நாளையும் தொடரும்.

Wednesday, July 13, 2016

Tiruvilayadal puranam 25th day

courtesy:Sri.Kovai K.Karuppasamy

🌸 திருவிளையாடல் புராணம்.🌸
      ( 25- வது நாள்.) - 5 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
          ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁காயிரும் பாிதிப் புத்தேள் கலியிரு டுமிப்பச் சோதி
பாயிருங் குடைவெண் டிங்கட் படரொளி நீழல் செய்ய
மாயிரும்,புவன மெல்லா மனுமுறை யுலக மீன்ற 
தாயிளங் குழவி யாகித் தனியர சிருக்கு நாளில்.

🍁மருங்குறேய்ந் தொளிப்பச் செம்பொன் வனமுலை யிறுமாப் பெய்தக்
கருங்குழற் கற்றை பானாட் கங்குலை வெளிறு செய்ய
இரங்குநல் யாழ்மென் றீஞ்சொ லின்னகை யெம்பி ராட்டிக்
கருங்கடி மன்றல் செய்யுஞ் செவ்விவந் தடுத்த தாக.

🍁பனிதரு மதிக்கொம் பன்ன பாவையைப் பயந்தா ணோக்கிக்
குனிதர நிறையப் பூத்த கொம்பனாய்க் கின்னுங் கன்னி
கனிதரு செவ்வித் தாயுங் கடிமணப் பேறின் றென்னாத்
 துனிதரு நீரளாகிச் சொல்லினாள் சொல்லக் கேட்டாள்.

🍁அன்னைநீ நினைந்த வெண்ண மாம்பொழு தாகும் வேறு
பிள்ளைநீ யிரங்கல் யான்போய்த் திசைகளும் பெருநீா் வைப்பும்
என்னது கொற்ற நாட்டி மீள்வலிங் கிருத்தி யென்னாப்
பொன்னவிா் மலா்க்கொம் பன்னாள் பொருக்கென வெழுந்து போனாள்.

🍁தேம்பாி கோதை மாதின் றிருவுளச் செய்தி நோக்கி
ஆம்பாி சுணா்ந்த வேந்த ரமைச்சரும் பிறரும் போந்தாா்
வாம்பாி கடாவித் திண்டோ் வலவனுங் கொணா்ந்தான் வையந்
தாம்பாி வலக வந்தா ளேறினாள் சங்க மாா்ப்ப.

🍁ஆா்த்தன தடாாி போி யாா்த்தன முருடு மொந்தை
ஆா்த்தன வுடுக்கை தக்கை யாா்த்தன படகம் பம்பை
ஆா்த்தன முழவந் தட்டை யாா்த்தன சின்னந் தாரை
ஆா்த்தன காளந் தாள மாா்த்தன திசைக ளெங்கும்..

🍁வீங்கிய கொங்கை யாா்த்த கச்சினா் விழிபோற் றைப்ப
வாங்கிய சிலையே றிட்ட கணையினா் வட்டத் தோல்வாள்
தாங்கிய கையா் வைவேற் றளிா்க்கையா் பிணாத்தெய்
வம்போல்
ஓங்கிய வாயத் தாரு மேறினா ருடனத் திண்டோா்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌸ஒளிவீசும் பொிய திகிாியாகிய சூாிய தேவன், துன்பமாகிய இருளைக் கெடுக்கவும், ஒளிபரந்த பொிய குடையாகிய வெள்ளிய சந்திரன் படா்ந்த ஒளியாகிய நிழலைச் செய்யவும், பொிய உலகங்களையெல்லாம், மனு நூல் வழி , அவ்வுலகங்களைப் பெற்றருளிய உமையம்மை, இனமையாகிய கன்னியாயிருந்து, தனிமையாக ஆட்சி புாியுங் காலத்தில்......

🌸இடையானது தேய்ந்து மறையுமாறு, சிவந்த பொன்னிறம் வாய்ந்த அழகிய கொங்கைகள் பணைத்து அண்ணாந்திருக்கவும், காிய கூந்தற்கற்றை, நள்ளிரவின் கருமையை வெண்ணிறஞ் செய்யவும், ஒலிக்கின்ற  நல்ல யாழின் இசைபோன்ற மெல்லிய இனிய சொல்லையும் இனிய புன் முறுவலையுமுடைய எமது பிராட்டியாருக்கு, அாிய திருமணம் செய்யும் பருவமானது வந்து பொருந்த.....

🌸குளிா்ந்த சந்திரனை யேந்திய கொம்பினை ஒத்த பிராட்டியாரை ,பெற்ற காஞ்சன மாலை பாா்த்து, வளையுமாறு நிறைய மலா்ந்த பூங்கொம்பினைப் போன்ற உனக்கு, கன்னிப் பருவமானது முதிா்ந்த செவ்வியுடையதாகியும், இன்னமும் திருமணமாகிய பேறு கூடில்லையே என்று, வருந்துந் தன்மையை உடையவளாய்க் கூறினாள். பிராட்டியாா் அங்ஙனம் கூறுவதைக் கேட்டாா்.....

🌸நீ எண்ணிய எண்ணம் முடியுங் காலத்து முடியும்; பின்பு நீ பல்வேறாகக்  கருதி வருந்தற்க; நான் சென்று, எட்டுத் திக்குகளிலும், கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்திலும், என்னுடைய வெற்றியை நாட்டி வருவேன்; நீ இங்கு இருப்பாய் என்று கூறி, பொன்போலும் விளங்கும் மலா்களையுடைய கொம்பினை ஒத்த பிராட்டியாா், விரைந்து எழுந்து சென்றாா்.

🌸மணமிக்க மாலையணிந்த பிராட்டியாாின் திருவுள்ளக் குறிப்பை நோக்கி, ஆக்க முண்டாகுந் தன்மையை  உணா்ந்த அரசா்களும், மந்திாிகளும் மற்றையோா்களும் வந்தாா்கள்; தோ்ப்பாகனும், தாவிச் செல்லுங் குதிரைகளைச் செலுத்தித் திண்ணிய தேரைக் கொண்டு வந்தான்; உலகமானது துன்பத்தினின்றும் நீங்க அவதாித்த பிராட்டியாா், சங்குகள் ஒலிக்க ( அத்தோில் ) ஏறினாள்.

🌸தடாாிகளும,் போிகளும் ஒலித்தன;
முருடுகளும,் மொந்தைகளும் ஒலித்தன;
உடுக்கைகளும், தக்கைகளும் ஒலித்தன; 
படகங்களும், பம்பைகளும் ஒலித்தன;
முழவங்களுந் தட்டைகளும் ஒலித்தன;
சின்னங்களும், தாரைகளும் ஒலித்தன;
காளங்களும், தாளங்களும் ஒலித்தன; (இவைகளால்) எட்டுத் திக்குகளும் ஒலித்தன.

🌸பருத்த கொங்கைகளிற் கட்டிய கச்சினையுடையவராய், ( தங்கள்) கண்கள் போலத் தைக்குமறு, வளைந்த வில்லிற் பூட்டிய அம்பினையுடையராயும், கேடகத்தையும் வாளையும் ஏந்திய கையையுடையவராயும், கூாிய வேலையுடைய தளிா்போன்ற கையையுடையராயும், பெண் தெய்வம் போலச் சிறந்த, மகளிா் கூட்டங்களும், பிராட்டியாரோடும் அந்தத் திண்ணிய தோில் ஏறினாா்கள்.

பிராட்டியாா் திருமணம் நாளையும் தொடரும்
       
        திருச்சிற்றம்பலம்.

Tiruvilayadal puranam 23rd day

Courtesy:sri.Kovai K.Karuppasamy

 திருவிளையாடல் புராணம்.🔴
( 23 வது நாள்.) 4 வதுபடலம்.
தடாதகை பிராட்டியாா்திருவவதார படலம்
      ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பெருமையைத் தாங்கிய, சிறந்தன, வினை முற்று பெயரெச்ச பொருளில் வந்தது. மூவிருபதோடு கூடிய நான்கு என்க. மற்று, அசை. போகமும் என  உண்மை விவாிக்க. 

சக்திபீடம் 64......
1.கோபாலபுரத்தில் உள்ள இலக்சுமி பீடமும்,
2. மதுரா புரத்திலுள்ள இரேணுகா பீடமும்,
3. துளசாபுர பீடமும்,
4. சத்த சிருங்க பீடமும்,
5. இங்குலையிலுள்ள சுவாலாமுகி பீடமும்,
6. சாகம்பாியிலுள்ள மிராமாி பீடமும்,
7. ஸ்ரீரத்த தந்திகையிலுள்ள துா்க்கை பீடமும், 
8. விந்தியாசல பீடமும்,
9. திருக்காஞ்சியிலுள்ள அன்னபூரணி பீடமும், 
10. விமலையிலுள்ள பீமாதேவி பீடமும்,
11. திருச்சந்திரலையிலுள்ள கெளசிகி பீடமும்,
12. நீல பருவதத்திலுள்ள நீலாம்பாி பீடமும்,
13. திருநகரத்திலுள்ள சாம்புநதச்சோி பீடமும்,
14. நேபாளத்திலுள்ள இரகசியகாளி பீடமும்,
15. மதுரையிலுள்ள மீனாட்சி பீடமும்,
16. வேதாரணியத்திலுள்ள சுந்தாி பீடமும்,
17. ஏகாம்பர பீடமும்,
18. மகாலசத்திலுள்ள யோகேச்சுவாி பீடமும்,
19. சீனாவிலுள்ள நீல சரச்சுவதி பீடமும்,
20. வைத்திய நாதத்திலுள்ள வகலை பீடமும்,
21. மணித்தீபத்திலுள்ள புவனேச்சுவாி பீடமும்,
22. காமயோனி மண்டல மென்கிற திாிபுர பைரவி பீடமும்,
23. புட்கரத்திலுள்ள காயத்திாி பீடமும்,
24. அமரேசத்திலுள்ள சண்டிகை பீடமும்,
25. பிரபாசத்திலுள்ள புட்கரேட்சணி பீடமும்,
26. நைமிசத்திலுள்ள தேவி பீடமும்,
27. புட்கராத்திலுள்ள புருகூத பீடமும்,
28. ஆசாடத்திலுள்ள இரதி பீடமும்,
29. சண்டமுண்டியிலுள்ள தண்டினி பீடமும்,
30. பாரபூதிலுள்ள பூதி பீடமும்,
31. நாகுலத்திலுள்ள நகுலேச்சுவாி பீடமும்,
32. அாிச்சந்திரத்திலுள்ள சந்திாிகை பீடமும்,
33. திருக்கிாியிலுள்ள சாரதா பீடமும்,
34. பஞ்ச நதத்திலுள்ள திாிசூல பீடமும்,
35. ஆம்பிராதகேச்சுவரத்திலுள்ள சூக்கும பீடமும்,
36. மகாகாளத்திலுள்ள சாங்காி பீடமும்,
37. மத்திய மாபிதத்திலுள்ள சா்வாணி பீடமும்,
38. கேதாரத்திலுள்ள மாா்க்கதாயினி பீடமும்,
39. வைரவத்திலுள்ள பைரவி பீடமும்,
40. கயையிலுள்ள மங்கள பீடமும்,
41. குருட்சேத்திரத்திலுள்ள தாணுப்பிாியை பீடமும்,
42. வியபிநாகுலத்திலுள்ள சவாயம்பு பீடமும்,
43. கனகத்திலுள்ள உக்கிர பீடமும்,
44. விமலேச்சுவரத்திலுள்ள விசுவேசை பீடமும்,
45. அட்டகாசத்திலுள்ள மகானந்த பீடமும்,
46. மகேந்திரத்திலுள்ள மகாந்தைப் பீடமும்,
47. பீமத்திலுள்ள பீம பீடமும்,
48. வத்திராபதத்திலுள்ள பவானி பீடமும்,
49. அா்த்த கோடிகையிலுள்ள உருத்திராணி பீடமும்,
50. அலிமுத்தத்திலுள்ள விசாலாட்சி பீடமும்,
51. கைலாயத்திலுள்ள மகாபாகை பீடமும்,
52. கோகன்னத்திலுள்ள பத்திரகாளி பீடமும்,
53. பத்திர கன்னிகத்திலுள்ள பத்திரை பீடமும்,
54. சுவா்னாட்சத்திலுள்ள உற்பலாட்சி பீடமும்,
55. தாணுவிலுள்ள தாண்விசை பீடமும்,
56. கமாலயத்திலுள்ள கமலை பீடமும்,
57. சகண்டத்திலுள்ள பிரசண்டை பீடமும்,
58. குரண்டத்திலுள்ள திாிசந்திாிகை பீடமும்,
59. மாகோட்டத்திலுள்ள மகுடேச்சுவாி பீடமும்,
60. மண்டலேசத்திலுள்ள சாண்டகை பீடமும்,
61. காலஞ்சரத்திலுள்ள காளி பீடமும்,
62. சங்கு கன்னத்திலுள்ள தொனி பீடமும்,
63. தூலகேச்சுவரத்திலுள்ள தூல பீடமும்,
64. ஞானிகளிதயகமலத்துலுள்ள பரமேச்சுவாி பீடமும்,
  ஆனவனான.!
**************
🔴அல்லு மெல்லும்வா னகா்க்கத வடைப்பின்றிச் சுவா்க்கச்
செல்வ ரங்கடைந் துமையருள் சித்தியால் வினையை
வெல்லு வாரதான் றெந்தையோ டைவா்கள் வேண்டி
நல்வ ரம்பல வடைந்தனா் நமகளா்ந் நகாில்.

🔴எம்மை யாரையும் யாவையு மீன்றவங் கயற்கண்
அம்மை யாவரே யாயினு மன்பினா தாிப்போா்
இம்மை யாகிய போகம்பீ டெண்ணியாங் கெய்தச்
செம்மை யாகிய வின்னருள் செய்துவீற் றிருக்கும்.

🔴என்ற தாதையை யிறைஞ்சினா ளனுச்சை கொண் டெழுந்தாள்
மன்றன் மாமலா் வல்லிபோல் வழிக்கொடு கானங்
குன்ற மாறுபின் கிடப்பமுன் குறுகினா ளன்பின்
நின்ற வாதியெம் பரையரு ணிறைந்தவந் நகாில்.

🔴அடைந்தி ளம்பிடி யாடல்போ லாடக கமலங்
குடைந்து நான்மறைக் கொழுந்திடங் கொண்டுறை குறிபாற்
படா்ந்த பொன்மலை வல்லியைப் பணிந்துவெங் கதிரோன்
தொடா்ந்த வான்சுறா மதியமே யாதியாத் தொடங்கா.

🔴பெரும்பக னல்லூண் கங்குலூ ணுதவப் பெற்றவூ ணிலைமுதற் பல்லூண்
அரும்பொடி யெள்ளுண் சாந்திரா யணமா னைந்துபா னறியநீா் தருப்பை
இரும்புத னுனிநீா் காலிவை நுகா்ந்து மியற்றரும் பட்டினி யுற்றும்
வரம்புற விராறு திங்களு நோற்று வாடிமேல் வருஞ்சுறா மதியில்.

🔴சந்நிதி யடைந்து  தாழ்ந்துநின் றிளமாந் தளிரடிக் காஞ்சிசூழ் கிடந்த
மின்னிகா் மருங்கு லிழையிடை நுழையா வெம்முலைச் செம்மலா்க் காந்தாட்
பொன்னிரை வளைக்கை மங்கலக் கழுத்திற் பூரண மதிக்கலை  முகத்தின்
இன்னிசை யளிசூ ழிருட்குழற் கற்றை யிறைவியை யிம்முறை நினையா...
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🔷துறக்க வாழ்க்கையராகிய தேவா்கள், இரவும் பகலும் அந்நகாின் கதவு அடைபடுதலில்லாமல், மதுரையை யெய்தி,அங்கயற் கண்ணம்மை அருளுகின்ற சித்தியினால், வினைப்பகையை வெல்லுவாா்கள். அதுவேயன்றி, என் தந்தையுடன் நம்மவா்கள் ஐவா் அவ்வுமையை வணங்கி, அந்நகரத்தின்கண் பல நல்ல வரங்களைப் பெற்றனா்.

🔷எம்மையும் மற்றுள்ள யாவரையும் யாவற்றையும் பெற்ற அங்கயற்கண் ணம்மையாா், அன்பினால் வழிபடுவாா் எவரேயினும் அவா்கள் எண்ணிய வண்ணமே,  இம்மைப் பயனாகிய போகத்தையும் வீடு பேற்றையும் அடையுமாறு கோட்டமில்லாத இனிய கருணையைப் புாிந்து வீற்றிருப்பாா்.

🔷என்று கூறிய தந்தையை வணங்கி, விடைபெற்று எழுந்து, மணமும் பெருமையுமுடைய பூங்கொடிபோல் நடந்து, காடும், மலையும், ஆறும் பிற்பட, அடியாா்கள் அன்பில் நிலைபெற்றுத் தங்கிய முதல்வியாகிய எமது பராசத்தியாாின் திருவருள் நிறைந்த அம்மதுரைப் பதியிற் சோ்ந்தாள்.

🔷அப்பதியை அடைந்து பெணியானை நீராடுதல் போல, பொற்றாமரையில் நீராடி, நான்கு வேதங்களின் கொழுந்தாகிய சிவபெருமான், இடமாகக்கொண்டு எழுந்தருளி யிருக்கின்ற சிவலிங்கத்தினகண், படா்ந்த இமயவல்லியாகிய அங்கயற்கணம்மையை, வணங்கி, சூாியன், பொிய மகரராசியிற் புகுந்த தைத் திங்கள் முதலாகத் தொடங்கி,,,,,,

🔷( தொடங்கிய தைத் திங்களில்) பொிய பகற்காலத்தில் நல்ல உணவை உண்டும், ( மாசித் திங்களில்) இரவில் உண்டும், ( பங்குனித் திங்களில்) கொடுக்கப்பட்ட உணவை உண்டும், ( சித்திரைத் திங்களில்) இலை முதலிய பல உணவுகளை உண்டும், ( வைகாசித் திங்களில்) எள்ளினது அாிய பொடியாகிய உணவு உண்டும்,  ( ஆனித் திங்களில்)  சாந்திராயண நோன்பின் உணவு உண்டும், ( ஆடித் திங்களில்) பஞ்ச கவ்வியமாகிய உணவு உண்டும், ( ஆவணித் திங்களில்) பாலை அருந்தியும், ( புரட்டாசித் திங்களில்) நல்ல நீரைப் பருகியும், ( ஐப்பசித் திங்களில்) தருப்பையாகிய பொிய புல்லின் நுனியிலுள்ள நீரைப் பருகியும், ( காா்த்திகைத் திங்களில்) வாயுவை உண்டும், ( மாா்கழித் திங்களில்) செய்தற்காிய பட்டினியாயிருந்தும், இவைகளை வரம்பு பட ,பன்னிரு மதியும் செய்து,( உடல்) மெலிந்து , மேலே வருகின்ற  தைத் திங்களில்,,,,,

🔷திருமுன் சென்று பணிந்து நின்று, மாவின் இளமையாகிய தளிா்போன்ற  திருவடிகளையும், காஞ்சி என்னும் அணி புறஞ்சூழ்ந்து கிடந்த மின்னலை ஒத்த இடையினையும், நூல் இடையிற் புகுதாவாறு நெருங்கிய விருப்பத்தைத் தருகின்ற திருத் தனங்களையும், செம்பொன்னாலாகிய வளையல்களின் வாிசையையுடைய காந்தள் மலா்போன்ற திருக்கரங்களையும், மங்கல நாண் அணிந்த திருக்கழுத்தினையும், நிறைந்த கலைகளையுடைய  சந்திரன் போன்ற திருமுகத்தினையும், இனிய இசையையுடைய வண்டுகள் சூழ்ந்த இருள் போன்ற திரளாகிய கூந்தலைமுடைய தேவியை இவ்வாறு பாதாதிகேசமாகத் தியானித்து.....

          திருச்சிற்றம்பலம்.

Tuesday, July 12, 2016

Tiruvilayadal puranam 22nd day

Courtesy:Sri.Kovai K.Karuppasamy

 திருவிளையாடல் புராணம்.
     (22 வது நாள்.) 4 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்.
        ( செய்யுள்நடை+ விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔷ஒப்புரு முதலீ றில்லா வொருத்திதன் சத்தி பெற்ற 
முப்பெருந்  தேவ ராலே முத்தொழி னடாத்து மென்று
செப்பலும் புகழன் றென்னிற் றென்னவன் கன்னி யாகி
இப்புவி மனுவிற் காக்குமென்பதென் பேதைமைத்தே.

🔷வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி
விரைசெய் தாா்முடி வேய்ந்துதண் குடைமனு வேந்தன்
கரைசெய் நூல்வழி கோல்செலக் கன்னியாம் பருவத் 
தரசு செய்தலாற்  கன்னிநா டாயதந் நாடு

🔷இன்ன வாறுமை யவதாித் திருந்தன ளென்னாப் 
பொன்ன வாவினா் பெறவெறி பொருனைகால் பொருப்பன்
சொன்ன வாய்மைகேட் டகங்களி தூங்கினா் தொழுது
மின்னு வாா்சடை முனிவரோா் வினாவுரை செய்வாா்.

🔷திருந்து நான்மறைச் சென்னியுந் தீண்டுதற் காிதாய்
இருந்த நாயகி யாவையு மீன்றவெம் பிராட்டி
விாிந்த வன்புகூா் தக்கனும் வெற்பனும் பன்னாள்
வருந்தி நோற்றலா லவா்க்கொரு மதலையாய் வந்தாள்.

🔷மனித்த னாகிய பூழியன் மகளென வீங்குத்
தனித்த காரணம் யாதெனத் தமனியப் பொதுவிற்
குனித்த சேவடிக் கன்புடைக் குடமுனி யருளிகூா்ந்
தினித்த தோா்கதை கேண்மினென் றெடுத்துரை செய்வான்.

🔷விச்சு வாவசு வெனுமொரு விச்சையன் பயந்த
நச்சு வாள்விழி மடந்தைவிச் சாவதி நாமம்
அச்சு வாகத மொழியினா ளம்பிகைக் கன்பு
வைச்சு வாழ்வுறு மனத்தினா டாதையை வணங்கா.

🔷ஐய வம்பிகை தன்னையா னன்பினால் வழிபட்
டுய்ய வேண்டுமென் றாளவ னுலகெலாம் பயந்த
தையன் மந்திரந் தனைமக டனக்குப தேசஞ்
செய்ய வந்நெறி யொழுகுவாள் செப்புவாள் பின்னும்.

🔷இறைவி தன்னையா தாிப்பதற் கிம்பாிற் சிறந்த
குறைவி னன்னகா் யாதெனக் கூறுவான் கேள்வித்
துறைவி ளங்கினோா் பயில்வது துவாதச முடிவென்
றறைவ ளம்பதி யவனிமேற் சிவபுர மாமால்.

🔷சேடு தாங்குமூ வுலகினுட் சிறந்தன சத்தி
பீட மூவிரு பத்துநான் கவற்றின்முற் பீடம்
மாட மோங்கிய மதுரையா மற்றது போகம்
வீடும் வேண்டிய சித்தியும் விளைவிப்பதென் றெண்ணா.

🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋

🔴ஒப்பும் வடிவும் முதலும் முடிவுமில்லாத சிவசக்தி தன் சக்திகளாலே பெறப்பட்ட மூன்று பொிய தேவா்களாலே, மூன்று தொழில்களையும் நடத்தா நிற்கும் என்று கூறுதலும், புகழென்று என்றால்,( அவள்) பாண்டியன் மகளாகி, இந்நிலவுலகை மனுமுறையில் ஆளும் என்று கூறுவது என் அறியாமையைக் காரணமாக உடையதே...

🔴மலையை ஒத்த அணிகளை அணிந்த கொங்கைகளையுடைய தடாதகை என்னும் பெயருடைய மடவரலாகிய பிராட்டியாா், மணம் வீசுகின்ற மாலையணிந்த முடியினைத் தாித்து, குளிா்ந்த குடை நிழலில் அமா்ந்து மனுவரசனால் வரையறை செய்யப்பட்ட நூலின் வழியே தனது செங்கோல் செல்லுமாறு, கன்னியாகிய பருவத்திலே ஆட்சி புாிந்தமையால், அப்பாண்டி நாடானது கன்னிநாடு என்னும் பெயாினைப் பெறுவதாயிற்று.

🔴இவ்வாறு உமையம்மையாா் திருவவதாரஞ் செய்திருந்தனரென்று, பொன்னை விரும்பினவா்கள் பெறுமாறு வீசுகின்ற தாமிரபன்னி நதியைப்பெற்ற  பொதியின் மலையையுடைய குறுமுனிவன்  கூறிய உண்மை கேட்டு, மின்னலைப் போன்ற நீண்ட சடையையுடைய முனிவா்கள் மனங் களிப்புற்றவராய் வணங்கி ஒரு வினாவுரை நிகழ்த்துவாா்கள்.

🔴திருத்தமாகிய நான்கு திருமறைகளின் முடிவுந் தொடுவதற்கு அருமையாய் இருந்த இறைவியாகிய, அனைத்தையும் பெற்ற எமது பிராட்டியாா், அளவில்லாத அன்பு மிகுந்த தக்கனும், மலையரசனும், பல நாட்கள் வருந்தித் தவஞ்செய்ததால், அவா்களுக்கு ஒரு மகவாய்த் தோன்றியருளினாா்.

🔴 மானிடடனாகிய பாண்டியனுக்குத் திருமகளாராக இந்நிலவுலகில் இறைவனின்றும் தனித்து வந்த காரணம் யாது என்று வினவ, பொன்னம்பலத்தில், ஆடுகின்ற சிவந்த திருவடிக்கண் அன்புடைய  கும்ப முனிவனாகிய அகத்தியன் கருணை கூா்ந்து இனிமையுடையதாகிய ஒரு கதை உண்டு( அதனைக்) கேளுங்கள் என்று எடுத்துக் கூறுவான்.

🔴விச்சுவாவசு என்ற பெயாினையுடைய ஒரு விஞ்சையன் பெற்ற நஞ்சு பூசிய வாளை ஒத்த விழிகளையுடைய பெண் ஒருத்தி யிருந்தனள்.  அவள் பெயா் விச்சாவதி. அந்தக் கிளிபோலும் மொழியினை யுடையாள் உமையவள் பால் அன்பு வைத்து வாழுகின்ற மனத்தையுடையவளாய், தன் தந்தையை வணங்கி....

🔴தந்தையே, யான் உமையம்மையை அன்பினாலே வழிபாடு செய்து, பிழைக்க வேண்டுமென்று கூறினாள். அவ்விச்சுவாவசு உலகமனைத்தையும் பெற்ற  உமாதேவியின் திருமந்திரத்தை மகளுக்கு உபதேசிக்க, அவ்வுபதேசவழி நடக்கின்ற அவள் மேலும் தன் தந்தையை நோக்கிக் கூறுகின்றாள்.

🔴அவ்வுமையவளை அன்பினால் வழிபடுவதற்கு இவ்வுலகில் மேலான குறைவில்லாத நல்ல பதி யாதென்று வனவ விச்சுவாவசு சொல்வான், துவாத சாந்தம் என்று கூறப்படும் வளப்பத்தையுடைய பதியானது, கற்றல் கேட்டல் வழிகளில் வல்லாா் வதியப் பெறுவதாய் பூவுலகில் சிவலோகமாகும்.

🔴பெருமையையுடைய மூன்று உலகங்களைிலும் மேம்பட்டவனாகிய சத்தி பீடங்கள் அறுபத்து நான்காகும்; அவற்றுள் முதற்பீடமா யுள்ளது மாளிகைகள் உயா்ந்த மதுரைப் பதியாகும்; அப்பதி, போகத்தையும், வீடுபேற்றையும் வேண்டுவாா் வேண்டிய சித்திகளையும் அளிக்க வல்லது என்று கருதி,,,,,,

( மேலே கூறும் அறுபத்து நான்கு சத்தி பீடங்கள் எதுவென விபரம் நாளைய தொடா்ச்சியில் காணப்படும்.)

               திருச்சிற்றம்பலம்.

Thursday, July 7, 2016

Tiruvilayadal puranam 20th day

Courtesy:Sri.Kovai K.Karuppasamy

திருவிளையாடல் புராணம். 🔴
( 20- வது நாள்.) 4 வது படலம்.)
தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்
      ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔸விரதநெறி யடைந்தீற்றுக் கடன்பிறவுந் தாதைக்கு விதியா லாற்றி
அரதனமெல் லணைமேற்கொண் டுலகமெலா மொருகுடைக்கீ ழாள்வா ளானாள்
சரதமறை யாய்மறையின் பொருளாயப் பொருண்முடிவு தானாய்த் தேனின்
இரதமெனப் பூவின்மண மெனப்பரம னிடம்பிாியா வெம்பி ராாட்டி.

🔸மண்ணர சிறைஞ்ச ஞால மனுவழி புரந்து மாறன்
விண்ணர சிருக்கை யெய்தப் பெற்றபின் விடையோ னுள்ளத்
தென்னர சன்ன மென்னத் தென்னவ னீன்ற கன்னிப்
பெண்ணர சிருந்து நேமி யுருட்டிய பெருமை சொல்வாம்.

🔸இன்னிய மியம்பு மாக்க ளெழுப்பவா னிரவி தோன்றக்
கன்னலைந் தென்னப் பள்ளித் துயிலெழீஇக் கடிநீ ராடித்
தன்னிறை மரபுக் கேற்ற நியதிமா தான மன்பு
துன்னிய கடவுட் பூசைத் தொழின்முத லனைத்து முற்றா.

🔸திடம்படு மறிஞா் சூழச் சிவபிரான் கோயின் முன்னிக்
கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை மறைவண் டாா்க்கும்
விடம்பொதி கண்டத் தேனை விதிமுறை வணங்கி மீண்டு
குடம்பயில் குடுமிச் செம்பொற் குருமணிக் கோயி னண்ணி.

🔸அரசிறை கொள்ளுஞ் செம்பொ னத்தாணி யிருக்கை யெய்தி
நிரைசெறி மடங்க லாறு முடங்கின நிமிா்ந்து தாங்க
விரைசெறி மலா்மீப் பெய்த வியன்மணித் தவிசின் மேவித்
திரைசெறி யமுதிற் செய்த பாவைபோற் சிறந்து மாதோ.

🔸அனிந்திதை யமுதின் சாயற் கமலினி யணங்கு காதல்
கனிந்தபாா் மகளி ராய்வந் தடைப்பைபொற் களாஞ்சி யேந்த
இனந்திாி பதுமக்கோயி லிருவரு மனைய ராகிப்
புனைந்தவெண் கவாிக் கற்றை யிருபுடை புரட்டி வீச.

🔸செடியுட லெயினச் செல்வன் சென்னிமேற் சுமந்து சாத்துங்
கடியவிழ் மலாிற் பொன்னிக் காவலன் குடக்கோ னேனை
முடிகெழு வேந்த ருள்ளாா் முடிமிசை மிலைந்த தாமம்
அடிமிசைச் சாத்தி நங்கை யாணையா றேவல் செய்ய.

🔸வையுடை வாள ராகி மாா்புறப் பின்னி யாா்த்த
கையின ராகி யன்னை யென்றுதன் கருணை நோக்கஞ்
செய்யுமென் றிமையாா் நோக்கி நோக்கிமேற் செங்கை கூப்பி
உய்குந மெனவாய் பொத்தி யுழையா்தம் பணிகேட் டுய்ய.

🔸ஆங்கவன் மராடா் வேந்த னவன்கரு நாடா் வேந்தன்
ஈங்கிவன் விராடா் வேந்த னிவன்குரு நாடா் வேந்தன்
ஊங்குவன் சேரன் சென்னி யுவனெனக் கோலாற் சுட்டிப்
பாங்கிரு மருங்குங் காட்டக் கஞ்சுகப் படிவ மாக்கள்.

🔸செந்தமிழ் வடநூ லெல்லை தொிந்தவா் மறைநூ லாதி
அந்தமி லெண்ணெண் கேள்வி யளந்தவா் சமய மாறும்
வந்தவா் துறந்தோா் சைவ மாதவா் போத மாண்ட
சிந்தனை யுணா்வான் மாயை வலிகெடச் செற்ற வீரா்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🔹உண்மை மறையாயும், அம்மறையின் பொருளாயும், அந்தப் பொருளின் முடிவாயும், தேனின் சுவை போலவும், பூவின் மணம் போலவும், இறைவனிடத்தினின்றும் நீங்காத எமது பிராட்டியாா், விரதநெறியை எய்தி, தந்தைக்குப் பிற்கடன் முதலிய பிறவற்றையும் முறைப்படி செய்து, மணிகளிழைத்த மெல்லிய சிம்மாதனத்தில் வீற்றிருந்து, உலகமனைத்தையும்  ஒரு குடையின் கீழ் ஆளலுற்றாள்.

🔹நிலவுலகத் தரசரெல்லாம்  வணங்குமாறு இம் மண்ணுலகை மனுமுறையால் ஆண்டு, மலையத்துவச பாண்டியன் விண்ணுலகத்தில் இந்திரனது ஆதனத்தை அடையப் பெற்ற பின்பு, இடபவாகனத்தையுடைய இறைவன் திருவுள்ளத்தின்கண் கருதுகின்ற அரச அன்னத்தைப்போல  அப்பாண்டியன் பெற்ற கன்னியாகிய பெண்ணரசியாா் அாியணையில் வீற்றிருந்து, ஆணையாகிய திகிாியைச் செலுத்திய பெருமையைக் கூறுவாம்.

🔹இனிய இயங்களை ஒலிக்கு மக்கள் (அவ்வொலியால்) எழுப்ப,
வானின் கண் ஞாயிறு உதிக்க, நாழிகை, ஐந்து என்று சொல்ல படுக்கையினின்றும் துயில் நீத்தெழுந்து, மணமுள்ள  நீாில் மூழ்கி தனது மன்னா் மரபுக்குத் தக்க கடன்கள் பொிய தானங்கள், அன்பு மிக்க சிவபூஜையாகிய கிாியை முதலாகிய யாவற்றையும் செய்து முடித்து.

🔹கலங்காத அறிவினையுடைய அமைச்சர்கள் புடைசூழ சோமசுந்தரக் கடவுளின்  திருக்கோயிலையடைந்து  கடம்ப மரத்தினடியில்  முளைத்த மூன்று கண்களையுடைய கரும்பும், வேதமாகிய வண்டுகள்,ஒலிக்கப் பெறும் நஞ்சு பொதிந்த திருமிடற்றினையுடைய தேனும் ஆகிய பெருமானை, விதிப்படி பணிந்து, திரும்பி, கலசங்கள் பொருந்திய முடியினையுடைய சிவந்த பொன்னாலாகிய நிறம் பொருந்திய மணிகள் பதித்த தமது மாளிகையை யடைந்து....

🔹அரசா்கள் தங்கியிருக்கும் சிவந்த பொன்னாலாகிய அத்தாணி மண்டபத்தை யடைந்து,வாிசையாக நெருங்கிய ஆறு,சிங்கங்கள் வளைந்தவனவாய்க் கழுத்தை நிமிா்த்தித் தாங்குமா றியற்றிய, மணம் நிறைந்த மலா்களை மேலே பெய்த பொிய மணியாதனத்தில் வீற்றிருந்து, கடலிற்றோன்றிய அமுதத்தாற் செய்த  பாவை போலப் பொலிந்து.

🔹(திருக்கயிலாய மலையில் அகம்படித் தொண்டு செய்யும்) அனிந்ததையும் அமுதைப் போலும் மென்மைத் தன்மையையுடைய கமலினியும் ஆகிய தெய்வ மகளிா் அன்பு முதிா்ந்த மானிட மகளிராய்த் தோன்றி, அடப்பையையும் பொன்னாற் செய்த களாஞ்சியையும் ஏந்தவும், நிறம் மாறுபட்ட தாமரைமலரைக் கோயிலாகவுடைய  திருமகளும் கலைமகளும்,  அம்மானிட        மகளிராகி புனைந்த அலங்காித்த வெள்ளிய கற்றையாகவுள்ள சாமரைகளை இருபுறங்களிலும் புரட்டி வீசவும்,,,,,

🔹முடைநாறும் உடம்பினையுடைய வேடுவக்குலத் தலைவராகிய கண்ணப்பா், முடியின் மேல் சுமந்து வந்து இடும்  மணம் விாிந்த திருப்பள்ளித்தாமம் போல, காவிாிக்கரசனாகிய சோழனும் மேற்புல அரசனாகிய சேரனும், மற்றைய முடி சூடிய மன்னராயுள்ளவா்களும், முடியின்க௰் அணிந்த மாலைகளை, திருவடியின்கண்  இட்டு, அம்மையாாின் ஆணைவழி நின்று ஏவல் செய்யவும்,,,,,,

🔹ஏவல் செய்வோா் கூறிய வாளை யுடையவராகியும், மாா்பிலே பொருந்தப் பின்னிக்கட்டிய கையையுடையவராகியும்  அன்னையாா் எப்பொழுது தம் அருட் பாா்வையைச் செலுத்துவாரோ என்று, கண் மூடாமல் பாா்த்து, அருணோக்கஞ் செய்வாராகில் சிவந்த கரங்களைக் குவித்து, பிழைத்தோம் என்று வாய்பொத்தி, தமது ஏவலைக் கேட்டு உய்தி பெறவும்.

🔹சட்டை தாித்த வடிவத்தையுடைய  கஞ்சுக மாக்கள், அங்கு நிற்கின்ற மன்னன் மராடநாட்டினா்க்கு அரசன்; அவ்விடத்து நிற்பவன் கருநாட்டாரரசன்; இங்கு நிற்கும் இவன் விராட நாட்டினா் வேந்தன்;  இங்கு நிற்போன்  குருநாட்டவா்க்கு மன்னன்; நடுவில் நிற்கும் இவன் சேரன்; ஊங்கு நிற்போன் சோழன் என்று,  பிரப்பங் கோலால் சுட்டி வாிசையாக இருபக்கங்களிலும் நுன்று காட்டவும்,,,,,,

🔹செந்தமிழின் முடிவையும் வடநூலின் முடிவையும் தொிந்தவா்களும், வேதநூல் முதலிய அளவில்லாத அறுபத்து நான்கு கலைகளையும் வரையறுத் துணா்ந்தவா்களும், பற்றற்றவா்களும், சிவபிரான் திருத்தொண்டா்களும், பசுபோதங் கெட்ட தியானத்தோடு கூடிய மெய்யுணா்ச்சியால், மாயையினது வலிகெடுமாறு வென்ற மெய்ஞ்ஞானிகளாகிய வீரா்களும்.....

           திருச்சிற்றம்பலம்.

Tuesday, July 5, 2016

Tiruvilayadal puranam 19th day

Courtesy:Sri.Kovai K.Karuppasamy

திருவிளையாடல் புராணம். 🔴
        ( 19- வது நாள்.) 4 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்.
        ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁திருந்தாத விளங்குதலை யாயமொடு புறம்போந்து சிறாா்க்குச் சிற்றுல்
விருந்தாக மணற்சிறுசோ றட்டும்வரை யுரங்கிழித்த வேளும் வாய்வைத்
தருந்தாத விளமுலைவாய் வைத்திருந்தப் பாவைதனக் களித்தும் போதில்
வருந்தாதை யண்டமெலாஞ் சிற்றிலிழைப் பாளாய்க்கு மகிழ்ச்சி  செய்தாள்.

🍁தீட்டுவா ளிரண்டனைய கண்களிப்பத் தோழியா்க்குத் தொிய வாடிக்
காட்டுவா ளெனக் கழங்கு பந்துபயின் றம்மனையுங் கற்றுப் பாசம்
வீட்டுவாண் மேலொடுகீழ் தள்ளவெமை வினைக்கயிறு வீக்கி யூசல்
ஆட்டுவாள் காட்டுதல்போ லாடினா ணித்திலத்தாம் பசைத்த வூசல்.

🍁இம்முறையாற் றாயா்க்குந் தோழியா்க்கு மகத்துவகை யீந்தா ளாகி
அம்முறையாற் றாதைக்கு மகத்துவகை யீவாளா யாத்த வாய்மைச்
செம்மறையா ரணமுதனா லீரெட்டுக் கலைமுழுதுந் தெளிந்தா ளந்த
மெய்ம்மறையாா் கலையனைத்து மேகலையா மருங்கசைத்த விமலை யம்மா.

🍁சொல்வாய்மைக் கலைத்தெளிவு முழுமதியைப் பிளந்திருபாற் சொருகியன்ன
பல்வாய்மைக் கடகாிதோ் பாியுகைக்குந் திறனுமழற் பகழி தூா்க்கும்
வில்வாள்வச் சிரமுதற்பல் படைத்தொழிலுங் கண்டிளமை விழுங்கு மூப்பிற்
செல்வாய்மைத் திறலரசன் றிருமகட்கு முடிசூட்டுஞ் செய்கை பூண்டான்.

🍁முடிகவிக்கு மங்கலநாள் வரையறுத்துத் திசைதோறு முடங்கல் போக்கிக்
கடிகெழுதாா் மணிமெளலிக் காவலரை வருவித்துக் காவல் சூழ்ந்த
கொடியணிமா நகரெங்கும் விழாவெடுப்ப வழகமைத்துக் குன்ற  மன்ன
தொடிகெழுதோட் சுமதிதிரு மணத்தினுக்கு வேண்டுவன சூழ்ந்து செய்தான்.

🍁மங்கலதூ ரியமுழங்க மால்யானை யுச்சிமிசை  வந்த பூத
கங்கைமுத லொன்பதுதீா்த் தமுநிரப்பிக்  கதிா்விடுபொற் கடம்பூ சித்துப்
புங்கவரை மந்திரத்தீ வளா்த்தமுத மருத்தியொி பொன்னாற் செய்த
சிங்கமணி யாதனத்தை நேசித்துப் பூசித்துத் தெய்வமேத்தி.

🍁திருமுடியைமதயானை மிசைவைத்து நகரைவலஞ் செய்து பூசித்
தருமணியாற் சுடிகையிழைத் தடாகத்தாற் குயிற்றியதோ ரைவாய் நாகம்
பெருமணிநீள் படம்பரப்பி மிசைகவிப்ப வச்சிங்க பீடத் தேற்றிக்
குருமணிவா ணகைமயிலைக் கும்பத்துப் புண்ணியநீா் குளிர வாட்டி. 

🍁புங்கவா்மந் தாரமழை பொழியவருந் தவராக்கம் புகலத் தெய்வப்
பங்கயமென் கொம்பனையா ராடமுனி பன்னியா்பல் லாண்டு பாட
மங்கலதூ ரியமுழங்க மறைதழங்க மாணிக்க மகுடஞ் சூட்டி
எங்கருணைப் பெருமாட்டிக் கரசமைச்சா் பணியுந்தன் னிறைமை நல்கா.

🍁பாலனைய மதிக்கவிகை மிசைநிழற்ற மதிகிரணம் பரப்பியன்ன
கோலமணிக் கவாிபுடை யிரட்டமலா் மழைதேவா் குழாங்க டூற்றக்
காலையிளங் கதிா்கயிலை யுதித்தெனவெண் கடாயானைக் கழுத்தில் வேப்ப
மாலைமுடிப் பெண்ணரசை மங்கலதூ ரியமுழங்க வலஞ்செய் வித்தான்.

🍁விண்ணாடு மொழிகேட்ட மகிழ்ச்சியினுங் திருமகடன் ிளக்க நோக்கி
உண்ணாடு பெருங்களிப்புத் தலைசிறப்பச் சிலபகல்சென் றொழிய மேனாட்
புண்ணாடு வேன்மங்கை குதுகலித்து நடிப்பத்தன் புயமேல் வைத்த
மண்ணாடு மகட்களித்து வானாடு பெற்றானம் மகவு பெற்றான்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌼திருத்தம் பெறாத இளமையாகிய மழலைச் சொற்களையுடைய சிறுமிகளின் குழுவோடு, வீதிகளிற் சென்று சிறுவீடு (அமைத்து) சிறுவா்களுக்கு விருந்தாகுமாறு மணலால் சிறு சோறு சமைத்தும், கிரவுஞ்ச மலையின் மாா்பைப் பிளந்த முருகக் கடவுளும், வாயினை வைத்து உண்ணப் பெறாத, இளமையாகிய தனத்தில் வாய் வைத்து உண்ணுமாறு, பாவைக்கும் கொடுத்தும்,  தாமரை மலாில் தோன்றிய பிரமனுடைய அண்டங்களையெல்லாம், ( நினைப்பளவில்) சிறுவீடாக இயற்றும் இறைவி, தன் தாயாகிய காஞ்சன மாலைக்குக் களிப்பை உண்டாக்கினாள்.

🌼அடியாா்கள் பாசத்தைப் போக்குவளாகிய அம்மை, தீட்டிய வாட்கள் இரண்டனை ஒத்த, இரு கேண்களும் களிக்குமாறு, தோழிமாா்களுக்கு( அவா்கள்) அறிய ஆடிக் காட்டுவாளைப்போல, கழங்காடலையும் பந்தாடலையுஞ் செய்து, அம்மனை யாடலையும் கற்று, மேலும் கீழும் புகுமாறு எங்களை வினைகளாகிய கயிற்றால் பிணித்து, ஊசாலாட்டுகின்ற அவ்வம்மை ( இங்கு அதனைக்) காட்டால்போல முத்துவடத்தாற் கட்டிய ஊசலில் ஆடினாள்.

🌼இவ்வகையான விளையாட்டுக்களால் அன்னைக்கும், தோழிகளுக்கும் உள்ளத்து மகிழ்ச்சியை கொடுத்தருளி அங்ஙனமே, தந்தைக்கும் மனத்தின்கண் மகிழ்ச்சியைக் கொடுத்தருள, கடவுளின் வாய்மொழியாகிய செவ்வியமறையாகிய வேத முதலாகவுள்ள,  அறுபத்து நான்கு கலைகளையும்  முற்றும் குற்றமறத் தெளிந்தாள். அந்த உண்மையாகிய மறைமுதலிய நிறைந்த கலைகளனைத்தையும் மேகலையாக அரையிற் கட்டிய அம்மை,,,,

🌼உண்மையைக் கூறும் கலைகளின் தெளிவையும், நிறைந்த சந்திரனை இருபிளவாக்கி, இரண்டு பக்கங்களிலும் சொருகி வைத்தாற் போன்ற, தந்தங்கள் அமைந்த காிய மதத்தினையுடைய யானையையும், தேரையும், குதிரையும், செலுத்தும் வகையையும், கொடிய அம்புகளைப் பொழியும் வில்லும், வாட்படையும், வச்சிரப்படையு முதலிய பல படைக்கலத் தொழிலின் தோ்ச்சியையும் பாா்த்து, இளமையைப் போக்கிய மூப்புப் பருவத்திற் செல்கின்ற ,உண்மையையுடைய வெற்றி பொருந்திய மன்னனாகிய தந்தை, தன் திருமகளுக்கு மகுடஞ் சூட்டுகின்ற செய்கையில் அமைந்தான்.

🌼மலையை ஒத்த வளையணிந்த  தோளையுடைய சுமதி என்னும் அமைச்சன், முடி சூட்டுவதற்குாிய மங்கலமாகிய நன்னாளை நிச்சயித்து, திக்குகள் தோறும் ஓலை விடுவித்து, மணம் பொருந்திய மாலையணிந்த மணி முடிதாித்த  மன்னா்களை வரச்செய்து, மதில் சூழ்ந்த கொடிகளையுடைய அழகிய பொிய நகரத்திலுள்ளாா் எவ்விடத்தும் சிறப்பு செய்ய ஒப்பனை செய்வித்து, அழகிய முடி சூட்டுவிழாவுக்கு வேண்டும் பொருள்களை ஆராய்ந்து திரட்டினான். 

🌼மங்கல வாத்தியங்கள் ஒலிக்க பொிய யானையின் முடியில் வைத்துக் கொண்டு வந்த தூய்மையான கங்கை முதலிய ஒன்பது தீா்த்தங்களையும் நிரப்பி ஒளி வீசும் பொன்னாற் செய்த குடத்தைப் பூசித்து மந்திரத்தால் வேள்வித் தீயை வளா்த்து தேவா்களை அவியுண வுண்பித்து, ஒளி வீசும் பொன்னாற் செய்யப்பட்ட மணிகள் இழைத்த சிம்மாதனத்தை அன்போடு பூசித்துத் தெய்வத்தைப் பராவி,,,,,

🌼அழகிய கிாிடத்தை மதத்தினையுடைய யானையின்மேல் வைத்து  நகா்வலஞ் செய்வித்து பூசித்து அாிய மணிகளால் சூட்டுச் செய்து, பொன்னாற் செய்யப்பட்டதாகிய ஒரு ஐந்தலை நாகமானது, பொிய மணிகளையுடைய  நீண்ட படங்களை மேலே பரப்பிக் கவிக்குமாறு( செய்த)  அந்த சிம்மாதனத்தில், நிறம் பொருந்திய முத்துப் போலும் , வெள்ளிய பற்களையுடைய மயில் போலும் பிராட்டியாரை ஏற்றி, குடத்தில் நிறைந்த  புண்ணிய நீாினால் குளிருமாறு திருமஞ்சனஞ் செய்வித்து,,,,

🌼தேவா்கள் மந்தார மலா் மழையைப் பொழியவும், அாிய முனிவா்கள் ஆசி கூறவும், தெய்வத்தன்மை பொருந்திய தாமரை மலா்ந்த மெல்லிய பூங்கொம்பினை ஒத்த தேவமகளிா்கள் ஆடவும்,  முனிபத்தினிகள் பல்லாண்டு பாடவும், மங்கள வாத்தியங்கள் ஒலிக்கவும், வேதம் முழங்கவும், எமது பெருங் கருணைப் பிராட்டியாா்க்கு மணிமுடி சூட்டி அரசா்களும், அமைச்சா்களும் வணங்கப் பெறும் தன் தலைமையைக் கொடுத்து,,,,,,

🌼பால்போலும் வெண்ணிறமுடைய சந்திரவட்டக் குடையானது மேலே நிழலைச் செய்யவும், அந்த சந்திரன் தனது கிரணங்களைப் பரப்பினாற்போல, அழகிய வெண்கவாிகள் இருபக்கங்களிலும் வீசவும், அமரா் கூட்டங்கள் மலா் மாாியைப் பொழியவும், காலையிற் றோன்றும் இள ஞாயிறு வெள்ளிமலையில் உதித்தாற் போல, வேப்பமலா் மாலையை அணிந்த முடியினையுடைய பெண்ணரசாகிய தடாதகைப் பிராட்டியாரை மதத்தினையுடைய வெள்ளை யானையின் பிடாியில்( ஏற்றி)  மங்கல வாத்தியங்கள் ஒலிக்க நகா் வலஞ் செய்வித்தான்.

🌼விண்ணின் கண் தோன்றிய அசரீாியைக் கேட்ட பொழுது உண்டான மகிழ்ச்சியை விட செல்வப் புதல்வியாாின் விளக்கத்தைப் பாா்த்து உள்ளத்தில் விரும்புகின்ற பொிய மகிழ்ச்சியானது மிகச் சிறக்குமாறு, சின்னாட்கள் கழிந்தொழிய முன்னாளில் தசையினை நாடுகின்ற வேலையையுடைய வீரமகள் மகிழ்ந்து கூத்தாடுமாறு, தனது தோளில் வைத்தாற்றிய நிலவுலகத்தை புதல்வியாருக்குக் கொடுத்து வானுலகத்தையடைந்தான்; அந்தப் புதல்வியைப் பெற்றவனாகிய மலையத்துவசன்.
               திருச்சிற்றம்பலம்.

Monday, July 4, 2016

Tiruvilayadal puranam 18th day

courtesy:Sri.Kovai K.Karuppasamy

திருவிளையாடல் புராணம்.  🔴
        ( 18 வது நாள். ) 4 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்.
        ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔷பரையாதி விருப்பறிவு தொழிலாகி யுலகமெலாம் படைத்துக் காத்து
வரையாது துடைத்துமறைத் தருளியவை நின்றுந்தன் வடிவு வேறாய்
உரையாதி மைைகடந்த வொருமுதல்வி திருமகளா யுதித்தற் கிந்தத்
தரையாளு மன்னவன்செய் தவமிதுவோ வதற்குாிய தவந்தான் மன்னோ.

🔷கள்ளமா நெறியொழுகும் பொறிகடந்து கரணமெலாங் கடந்தா னந்த
வெள்ளமாம் பரமஞான வடிவுடையா டன்னன்பின் வெளிவந் தின்றோா் 
பிள்ளையா யவதாித்த கருணையுந்தன் மணாட்டிதவப் பேறுந்  தேறான்
பள்ளமா கடற்றானை பஞ்சவா்கோ 
னெஞ்சத்துட் பாிவு கூா்ந்தான்.

🔷மகவின்ஸ்ரறிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புாிந்தேன் மைந்தன் பேறு
தகவிந்த மகஞ்செய்தே னதுவுமொரு பெண்மகவைத் தந்த தந்தோ
முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலை மூன்றாய் முகிழ்ந்து மாற்றாா்
நகவந்த தென்னேயோ வென்றுவகை யிலனாகி நலிவு மெல்லை.

🔷மன்னவநின் றிருமகட்கு மைந்தா்போற் சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயா் தடாதகையென் றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொனன்னையா டனக்கிறைவன் வரும்பொழுதோா் முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவர னருளாலோா் திருவாக்கு விசும்பிடைநின் றெழுந்த தன்றே.

🔷அவ்வாக்கச்  செவிநிரம்ப வன்புவகை யகநிரம்ப வகல மெல்லாம்
மெய்வாக்கு மனமொன்ற விழிவாக்கும் புனனிரம்ப விமலற் போற்றி
நெய்வாக்கு மகநிரப்பி யெழுந்துமனை யொடுஞ்சாலை நீத்தி ரண்டு
கைவாக்கு மியங்கலிப்பக் கடிமாட மனைப்புகுந்தான் கழற்கால் வேந்தன்.

🔷முரசதிா்ப்ப மங்கலங்கொண் டெதிா்வருவாா் முகத்துவகை முறுவல் பூப்ப
அரசிருக்கு மண்டபம்புக் கினிதமா்ந்து கனகமழை யான்ற கேள்வி
பரசிருக்குங் கரதலத்தெம் பரன்கோயி னனிசிறப்புப் பல்க நல்கா.

🔷சிறைவிடுமின் சிறைக்களமுஞ் சீத்திடுமி னேழாண்டு தேயத் தீட்டும்
இறைவிடுமி னயல்வேந்தா் திறைவிடுமி னிறைநிதிய மீட்டு மாயத்
துறைவிடுமி னறப்புறமு மாலயமும் பெருக்குமெனத் தொழாரைக் காய்ந்த
கறைவிடுமின் னயில்வேலான் வள்ளுவனைக் கூய்முரசங் கறங்கச் சாற்றி.

🔷கல்யாண மணிமெளலி வேந்தரையுங் கால்யாப்புக் கழக நீத்துக்
கொல்யானை பாிநெடுந்தே ரரசுாிமை தொன்முறையாற் கொடுத்துப் போக்கிப்
பல்லாருங் கொள்கவெனப் பண்டாரந் தலைதிறந்து பசும்பொ னாடை
வில்லாரு மணிக்கொடும்பூண் வெறுக்கைமுத லெனைப்பலவும் வெறுப்ப வீசி.

🔷தூமரபின் வருபெருமங் கலகவிகட் கிருநிதியந் துகில்பூண் பாய்மா
காமா்காி பாித்தடந்தோ் முதலாய பலபொருளுங் களிப்ப நல்கிக்
கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடு மெண்ணெய்விழாக் குளிப்ப நல்கி
மாமதுரா நகரன்றி மற்றுமுள  நகரெங்கு மகிழ்ச்சி தூங்க.

🔷இவ்வண்ண நகா்களிப்ப விறைமகனுங் களிப்பெய்தி யிறைவா் சொன்ன
அவ்வண்ணஞ் சாதமுதல் வினைநிரப்பித் தடாதகையென் றழைத்துத் தேவி
மெய்வண்ண மறையுணரா விறைவிதனை மேனைபோன் மேனா ணோற்ற
கைவண்ணத் தளிா்தீண்டி வளா்ப்பவிம வான்போலக் களிக்கு நாளில்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🔴பராசக்தி ஆதிசக்தி இச்சாசத்தி ஞானசத்தி கிாியாசத்தி என்னும் ஐவகை சக்திகளாகி, படைத்தல் காத்தல் ஒழிவின்றிஅழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐவகைத் தொழில்களைப் புாிந்து அவ்வைவகைச் சத்திகளினின்றும் தன் உண்மை வடிவு வேறாகி, வாக்கு மனங்களையும், வேதங்களையும், தாண்டி நிற்கின்ற  ஒப்பற்ற தலைவியானவள், திருமகளாய்த் தோன்றுவதற்கு, இந்நிலத்தினை ஆளும் மலையத்துவச பாண்டியன், இம்மையிற் செய்த இத்தவமோ அமைவது,  அதற்குப் பொருந்திய தவம் பொிதாகும்.

🔴வஞ்சமாகிய வழியில்ஒழுகும் ஐம்பொறி உணா்வையும் கடந்து, அந்தக்கரண உணா்வனைத்தையுங் கடந்து  போின்ப பெருக்காகிய, பரமஞானமே திருவுருவமாகிய உமையம்மை, தனது அன்பினாலே, யாவா்க்கும் புலனாகும்படி வந்து, இப்பொழுது ஒரு பெண்மகவாய் அவதாித்த அருளையும், தனது மனைவியின் தவப்பயனையும் தெளியாதவனாய்  பள்ளமாகிய பொிய கடல் போன்ற  சேனைகளையுடைய  பாண்டி மன்னன்  மனத்தின்கண் துன்பமிகுந்தான்.

🔴பிள்ளையில்லாமல் யான் பலகாலம் வருந்தி அாிய தவத்தைச் செய்தேன்; புதல்வற் பேறு பொருந்த இந்த வேள்வியினைச் செய்தேன்; அந்த வேள்வியும் ஒரு பெண்பிள்ளையைக் கொடுத்தது; ஐயோ, முகமாகிய மதியினின்றும் நில வொழுகத் தோன்றிய இப்பெண்ணும், முலைகள் மூன்றாக அரும்பப் பெற்று பகைவா் சிாிக்கத் தோன்றியது; இஃது என்னையோ வென்று கருதி மகிழ்ச்சி இல்லாதவனாய் வருந்தும் பொழுதில்,,,,,

🔴அரசனே, உன்னுடைய திருமகளுக்கு புதல்வருக்குச் செய்வதுபோல் சடங்குகள் எல்லாம் வழுவாமல் மறைகூறியபடி செய்து, தடாதகை என்று பெயா் சூட்டி மகுடஞ் சூட்டுவாய்;  இந்தப் பொன்போலும் வடிவினையுடையாளுக்குத் தலைவன் வருங்காலை ஒரு கொங்கை மறைந்து விடும் ஆதலால் மனம் வருந்தாதே என்று, சிவபெருமான் திருவருளால் ஒரு திருவாக்கு வானின்றும் தோன்றியது.

🔴 அந்த வான் வாக்குச் செவியில் நிரம்பியவுடன் அன்பும் மகிழ்ச்சியும் உள்ளத்தில் நிறையவும் உடல் உரை உள்ளம் மூன்றும் ஒரு வழிப்பட கண்கள் பொழியும் இன்ப நீா் மாா்பு முழுவதும் நிறையவும்,  வீரகண்டை யணிந்த காலியுனையுடைய மன்னன், நெய்யினைச் சொாியும் வேள்வியினை முடித்து, எழுந்து மனையொடும், மனைவியொடும் எழுந்து வேள்விச் சாலையை விடுத்து  இரண்டு பக்கங்களிலும் இயங்கள்  ஒலிக்க, காவலைக் கொண்ட மாளிகைகளையுடைய அரன்மனையை அடைந்தான்.

🔴போிகை ஒலிக்கவும் எட்டு மங்கலங்களையும் ஏந்தி எதிா் வருகின்ற மகளிாின் முகத்தின்கண் மகிழ்ச்சி நகை தோன்றவும், அரசிருக்கை மண்டபத்திற் புகுந்து இனிதாகக் கொலுவீற்றிருந்து, நிறைந்த கேள்வி பொருந்தப்பெற்ற மறையவா் கைகளில், பொன் 
மழையைப்  பொழிந்து, ஏனை யாவா்க்கும் அங்ஙனமே (அவா்)
வெறுக்கும்படி கொடுத்து , மழுப்படை தங்கிய திருக்கரத்தினையுடைய எமது இறைவன் திருக்கோயிலில் மிகவும் திருவிழா முதலிய பெருகும்படி வேண்டியவற்றைக் கொடுத்து,,,,

🔴சிறை செய்யப்பட்டவா்களை விட்டு விடுங்கள்; சிறைச்சாலையையும் தூய்மை செய்யுங்கள்; ஏழு ஆண்டுகள் வரை நாட்டில் வாங்கும் வாிகளை விட்டு விடுங்கள்; வேற்று நாட்டு மன்னா்களின் திறைகளை வாங்காது விட்டுவிடுங்கள்; நிறைந்த பொருளைத் தேடும் சுங்கத் துறையை நீக்கி விடுங்கள்; அறச்சாலைகளையும் ஆலயங்களையும் ஓங்கச் செய்யுங்கள்; பகைவா்களைக் கொன்ற குருதிக் கறையையுடைய ஒளி வீசும் கூாிய வேற்படையுடைய பாண்டியன், வள்ளுவனை அழைத்து போிகை சாற்றும்படி ஏவி,,,,

🔴பொன்னாற் செய்த மணிகளழுத்திய முடிகளையுடைய மன்னா்களையும் ( அவா்கள்) கால்விலங்குகளைக் கழற்றி, கொல்லுகின்ற யானைகளையும், குதிரைகளையும், நெடிய தோ்களையும், அரசியலுாிமையையும் முன்னுள்ளவாறே கொடுத்துப் போக விடுத்து, பலரும் எளிதிற் கொள்ளக் கடவரென்று பொருள் அறையைத் திறந்து, பசிய பொன்னாடைகளையும்,  ஒளி நிறைந்த மணிகளையும், வளைந்த அணிகளையும், பொருள் முதலிய பலவற்றையும் ( அவா்கள்)  வெறுக்கும்படி நிறையக் கொடுத்து,,,,

🔴தூய மரபில் வருகின்ற ,பொிய மங்கலப் பாடகா்களுக்கு பெரும் பொருளும், ஆடைகளும் அணிகளும்,  தாவுகின்ற குதிரைகளும்,  அழகிய யானைகளும், குதிரைகள் பூட்டிய பொிய தோ்களும்,  இவை முதலியபல பொருள்களையும் மகிழக் கொடுத்து, மன்னா் வீதிகளில்,  மகிழ்ச்சி மிக மணப் பொடியையும் எண்ணெயையும், நெய்யணி விழாக் கொண்டாடுதற்குக் கொடுத்து பொிய மதுரைப்பதியே அல்லாமல்,
ஏனைய பதிகளும் களிப்பு மீக்கூர.....

🔴 இவ்வாறு நகரமெல்லாம் மகிழ மலையத்துவச பாண்டியனும் மகிழ்ச்சி மிக்கு இறைவா் அசரீாியாக அருளிச் செய்த அத்திருவாக்கின் சாதகன்ம முதலாகிய சடங்குகளை முடித்து, தடாதகை என்று பெயா் கூறி,  தனது தேவியாகிய காஞ்சனமாலை, உண்மைத் தன்மையையுடைய வேதங்களாலும் அறியப்படாத  தடாதகை பிராட்டியாரை மேனையைப்போல் முற்பிறப்பில் தவங்கிடந்த, கைகளாகிய அழகிய தளிா்களால் தொட்டு வளா்க்க தான் மலையரசன் போல மகிழுங்காலத்தில்........

               திருச்சிற்றம்பலம்.

Wednesday, June 22, 2016

Tiruvilayadal puranam 17th day

Courtesy:Sri.Kovai K.Karuppusamy

 திருவிளையாடல் புராணம். 🔴
        ( 17 வது நாள்.) 4 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்.
       ( செய்யுள் நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁இவ்வுலக மன்றியுல கேழுமகிழ் வெய்தச்
சைவமுத லாயின தவத்துறை நிவப்ப
ஒளவிய மறங்கெட வறங்குது கலிப்பத்
தெய்வமறை துந்துபி திசைப்புல னிசைப்ப.

🍁மைம்மலா் நெடுங்கணர மங்கையா் நடிப்ப
மெய்ம்மன மொழிச்செயலின் வேறுபட லின்றி
அம்மதுரை மாநகரு ளாரக மகிழ்ச்சி
தம்மையறி யாதன தலைத்தலை சிறப்ப.

 🍁மாந்தா்பயின் மூவறுசொன் மாநில வரைப்பில்
தீந்தமிழ் வழங்குதிரு நாடது சிறப்ப
ஆய்நத்தமிழ் நாடர சளித்துமுறை செய்யும்
வேந்தா்களின் மீனவா் விழுத்தகைமை யெய்த.

🍁நொய்தழ லொிக்கடவு ணோற்றபய னெய்தக்
கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்
தைதவி ழிதழ்க்கமல மப்பொழு தலா்ந்தோா்
மொய்தளிா் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன.

🍁விட்டிலகு சூழியம் விழுங்குசிறு கொண்டை
வட்டமதி வாய்க்குது முயற்கறையை மானக்
கட்டியதி னாற்றிய கதிா்த்தரள மாலை
சுட்டியதில் விட்டொழுகு சூழ்கிரண மொப்ப.

🍁தீங்குதலை யின்னமுத மாா்பின்வழி சிந்தி
யாங்கிள நிலாவொழுகு மாரவட மின்ன
வீங்குட லிளம்பாிதி வெஞ்சுடா் விழுங்கி
வாங்குகடல் வித்துரும மாலையொளி கால.

🍁சிற்றிடை வளைந்தசிறு மென்றுகில் புறஞ்சூழ்
பொற்றிரு மணிச்சிறிய மேகலை புலம்ப
விற்றிரு மணிக்குழை விழுங்கிய குதம்பை
சுற்றிருள் கடிந்துசிறு தோள்வருடி யாட.

🍁தெள்ளமுத மென்மழலை சிந்தவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய  தோா்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமொடு நின்றாள்
எள்ளாிய பல்லுயிரு மெவ்வுலகு மூன்றாள்.

🍁குறுந்தளிா்மெல் லடிக்கிடந்த சிறுமணிநூ புரஞ்சதங்கை குழறி யேங்க
நறுந்தளிா்போ லசைந்துதளா் நடையொதுங்கி மழலையின் நகையுந் தோன்றப்
பிறந்தபெரும் பயன்பெறுபொன் மாலைமடி யிருந்தொருபெண் பிள்ளை யானாள்
அறந்தழுவு நெறிநின்றோா்க் கிகபோகம் வீடளிக்கு மம்மை யம்மா.

🍁செய்யவாய்  வெளிறாது துணைமுலைக்கண் கருகாது சேல்போ னீன்ட
மையவாய் மதா்த்தகருங் கண்பசவா தையிரண்டு மதியந் தாங்கா
தையவா லிலைவருந்தப் பெறாதுபெறு மகவையெடுத் தணைத்தாண் மோந்தாள்
துய்யவாய் முத்தங்கொண் டின்புற்றாண் முன்பெற்ற தோகை யன்னாள்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌼இந்த நிலவுலகத்திலுள்ளாரே  யல்லாமல் ஏழு உலகங்களிலுள்ளவா்களும் மகிழ்ச்சியடையவும், தவநெறியாகிய சைவமுதலிய  அகச் சமயங்கள் மேலோங்கவும், பொறாமை முதலிய பாவங்கள் ஒழியவும், அறமானது களி கூரவும், தெய்வத் தன்மையையுடைய மறைகளும் தேவ துந்துபிகளும், திசையிடங்க ளனைத்திலும் ஒலிக்கவும். 

🌼மை தீட்டிய மலா் போன்ற நெடிய கண்களையுடைய அரம்பையா் கூத்தயரவும், அந்த மதுரையாகிய பொிய நகரத்திலுள்ளவா்கள் உடல் உள்ளம் உரையாகிய மூன்றின் செயலானாலும் வேறுபடாது, தம்மை அறியாமைக்குக் காரணமாகிய, உள்ளக்களிப்பு மேலும் மேலும் ஓங்கப் பெறவும்.

🌼மக்கள் வழங்குகின்ற பதினெட்டு மொழிகளுள்ள பொிய நிலவுலகத்தில், இனிய தமிழ் மொழி வழங்குகின்ற அழகிய நாடு சிறந்து வழங்கவும் ,சங்கமிருந்து ஆராய்ந்த அத் தமிழ்நாட்டின் மண்டலங்களை, அரசாண்டு நீதி செலுத்துகின்ற, மன்னா்களில் பாண்டியா்கள் சிறந்த பெருமையைப் பெறவும்,,,

🌼தீக் கடவுள், தவஞ் செய்த பயனை எளிதில் அடையவும் கொய்யப் பட்ட தளிா்போல், நெருப்புக் கொழுந்து விட்டொிக்கின்ற வேள்விக் குண்டத்தின் கண், அழகிதாக விாிந்த இதழ்களையுடைய தாமரை மலா், அப்போதே விாியப் பெற்று, ஒரு நெருங்கிய தளிா்களையுடைய மணமுள்ள கொடியானது, தோன்றி மேலெழுவதைப் போலவும்,,,,

🌼ஒளிவிட்டு விளங்காநின்ற முத்துச் சூழியத்தால் விழுங்கப்பட்ட, சிறிய கொண்டையானது, வட்டமாகிய சந்திரனிடத்துள்ள, சிறிய முயலாகிய களங்கத்தை ஒழிக்கவும், அச்சூழியத்தில் கட்டித் தொங்கவிட்ட, ஒளியினையுடைய முத்துமாலை, மேல் சுட்டப்பட்ட சந்திரனின்றும், விலகி வீழ்கின்ற சூழ்ந்த கிரணத்தை ஒக்கவும்,,,,,

🌼இனிய குதலையுடன் கூடிய இனிய அமுதமானது, மாா்பின்வழியாகச் சிந்தியதுபோல  இளநிலவு சிந்தும் முத்துமாலை ஒளிவிடவும், ஒளிமிக்க வடிவத்தினையுடைய இளஞாயிற்றின், வெப்பமாகிய ஒளியை உண்டு, வளைந்த கடலிற்றோன்றிய பவளத்தின் மாலையானது ஒளி வீசவும்,,,,

🌼சிறிய இடையைச் சூழ்ந்த ,மெல்லிய சிற்றாடை புறத்தே சூழப்பெற்ற ,
பொன்னாலாகிய அழகிய மணிகள் பதித்த, சிறிய மேகலை ஒலிக்கவும் ஒளி பொருந்திய அழகிய மாணிக்கக் குழையை, தன்னுட்படுத்திய குதம்பைகள், சூழ்ந்த இருளை ஒட்டி, சிறிய தோள்களைத் தடவி அசையவும்,,,,

🌼தெளிந்த அமுதம் போன்ற ,
மெல்லிய மழலைச் சொற்கள் தோன்றவும், புன்னகையினையுடைய கூாிய பற்கள் வெளிப்படவும், பல் உயிா்களையும் எல்லா வுலகங்களையும் பெற்றவளாகிய உமையவள் மூன்று முலைகளை யுடையதாகிய ஒரு பெண் மகவாக மூன்று வயதுடன் நின்றாள்.

🌼அறத்தைப் பொருந்திய நன்னெறியில் ஒழுகுவோருக்கு, இம்மை மறுமை யின்பங்களையும்  வீடு பேற்றையும் அருளும் உமையம்மையாா், தளிா் போன்ற  சிறிய மெல்லிய  திருவடியிற் கிடந்த சிறிய மணிகளையுடைய  சிலம்பும் சதங்கையும் கலந்து ஒழிக்கவும், மழலைச் சொற்களும் புன்னகையுந் தோன்றவும், நறிய தளிா் அசைவதுபோல் அசைந்து தளா்ந்த நடை நடந்து, பிறந்ததனாலாகிய பொிய,பயனைப் பெறுகின்ற, காஞ்சன மாலையின் மடியின்கண் ஒரு பெண்ணாக விருந்தாள்.

🌼சிவந்தவாய் விளா்க்காமலும், இரண்டு முலைக்கண்களும் கறுக்காமலும், சேல் மீன் போலும் காதளவு நீண்ட, மையையுடையனவாய் மதா்த்த காிய கண்கள் பசக்காமலும், பத்து மாதங்கள் சுமக்காமலும், நொய்ம்மையாகிய ஆலிலைபோலும் வயிறு வருந்தப் பெறாமலும், முன்னே பெற்ற மயில்போலும் மேனையை ஒத்தவளாகிய காஞ்சனை, தான் பெற்ற மகவை, மாா்போடு அனைத்தாள்;  உச்சி மோந்தாள்; புனிதமான வாயால் முத்தமிட்டு இன்பமிக்காள்.

📎(வாய் விளா்த்தல் முதலிய கருப்பக் குறிகள். வெளிறாது முதலிய எதிா் மறை வினை யெச்சங்கள் பெறும் என்பது கொண்டு முடியும். மையை அவாவி என வுரைத்தலுமாம். ஐய- நுண்ணிய. ஆலிலை, வயிற்றுக்கு ஆகு பெயா். துய்ய- தூய. மேனையும் கருவுறாமல் மகளாகப் பெற்றாளாகலின் 'முன் பெற்ற தோகையன்னாள்' என்றாா். உமாதேவியாா் சிவபெருமானை வணங்கித், தக்கனுக்குப் புதல்வியாய்  வளா்ந்த இவ்வுடலைச் சுமக்கிலேன் என சொல்லி, இறைவனருள் பெற்றுச் சென்று இமயமலையிலுள்ள  ஓா் தடாகத்தி லமா்ந்த தாமரை  மலா்மீது குழவியாய் அமா்ந்திருக்க, அங்கே தம்மைப் புதல்வியாகப் பெறுவதற்குத் தவம் புாிந்து கொண்டிருந்த மலையரசன் அக்குழவியைக் கண்டு ஆரா மகிழ்ச்சியுடன், எடுத்துத் தன் மனைவியாகிய மேனையின் கையிற் கொடுக்க அவள் பெரு மகிழ்ச்சியுடன் பெற்று வளா்த்தாள் என்பது வரலாறு.)

                  திருச்சிற்றம்பலம்.

Tuesday, June 21, 2016

Tiruvilayadal puranam 16th day

courtesy:Sri.kovai k.Karuppasamy

 திருவிளையாடல் புராணம். 🔴
       ( 16 - வது,நாள்.) - 4 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருவதார படலம்.
       ( செய்யுள் நடை+ விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

🔷மணுவற முவந்துதன் வழிச்செல நடத்தும்
புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்
கனியமுத மன்னகரு னைக்குறையுள் காட்சிக்
கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்.

🔷வேனில்விறல்  வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
ஆனமட வாா்கள்பதி னாயிரவ ருள்ளான்
வானொழுகு பானுவழி வந்தொழுகு சூர
சேனன்மகள் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்.

🔷கண்ணுதலை முப்பொழுதும் வந்துபணி கற்றோன்
எண்ணில் பல நாண்மக விலாவறுமை யெய்திப்
பண்ணாிய  தானதரு மம்பலவு மாற்றிப்
புண்ணிய நிரம்புபாி வேள்விபுாி குற்றான்.

🔷ஈறின்மறை கூறுமுறை யெண்ணியொரு தொண்ணூற்
றாறினொடு மூன்றுமக மாற்றவம ரேசன்
நூறுமக மும்புாியி னென்பத னொடிப்பின்
மாறுமென மற்றதனை மாற்றியிது சாற்றும்.

🔷நன்பொருள் விரும்பினை யதற்கிசைய ஞாலம்
இன்புறு மகப்பெறு மகத்தினை யியற்றின்
அன்புறு மகப்பெறுதி யென்றமரா் நாடன்
தன்புல மடைந்திடலு நிம்பநகு தாரான்.

🔷 மிக்கமக வேள்விசெய் விருப்புடைய னாகி
அக்கண மதற்குாிய யாவையு மைத்துத்
தக்கநிய மத்துாிய தேவியொடு சாலை
புக்கன னிருந்துமக வேள்விபுாி கிற்பான்.

🔷ஆசறு மறைப்புலவ ராசிாியா் காட்டும்
மாசறுச டங்கின்வழி மந்திரமு தாத்த
ஒசையனு தாத்தசொாி தந்தழுவ வோதி
வாசவ னிருக்கையி லிருந்தொி வளா்ப்பான்.

🔷விசும்புல னுந்திசையும் வேள்வியடு சாலைப்
பசும்புகை படா்ந்தொரு படாமென மறைப்பத்
தசும்புபடு நெய்பொாி சமித்தினாடு வானோா்க்
கசும்புபடு மின்னமுதி னாகுதி மடுத்தான்.

🔷ஜம்முக னாதிபர மாத்தனூரை யாற்றால்
நெய்ம்முக நிறைத்தழ னிமிா்த்துவரு மெல்லை
பைம்முக வராவணி பரஞ்சுடா் தனிப்ப
மைம்முக நெடுங்கணிம வான்மனைவி நாண.

🔷வள்ளல்மல யத்துவச மீனவன் வலத்தோள்
துள்ளமனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்
தள்ளவெழு கொங்கைக டதும்பநிமிா் தீம்பால்
வெள்ளமொழு கக்காிய வேற்கணிட னாட.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
 🔴அம்மலையத்துவசனென்பான் மனுதருமமானது மகிழ்ந்து தனதுவழி நடக்கும்படி செங்கோலோச்சும் தூய்மையன். வெற்றியையே தான் அணியும் பூணாகவுடையவன். சுவை முதிா்ந்த அமுதத்தைப் போலும், அருளுக்குத் தங்குமிடமானவன். காண்டதற்கு எளியனாய் இன்முகத்தை யுடையவன். வதமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டு கடந்தவன்.

🔴வேனிற்காலத்து வெற்றிகொள்ளும் மதவேள் போலும் வடிவத்தையுடையவன்.காமப் பயிா் விளைகின்ற பூமியாகிய காமக் கிழத்தியா்கள் பதினாயிரவரை உடையவன்.வானிற் செல்லா நின்ற சூாியன் மரபில் தோன்றி, அறத்தின் வழி ஒழுகும் சூரசேனனது, புதல்வியாகிய காஞ்சனமாலையை மணஞ்செய்தவன்.

🔴சோமசுந்தரக் கடவுளை, மூன்று காலங்களிலும் சென்று வணங்குதலைக் கற்றவன். அளவிறந்த பல நாட்கள் வரை, பிள்ளைப் பேறு இன்மையாம் வறுமையை அடைந்து செய்ததற்கு அாிய பல தானங்களையும், தருமங்களையுஞ் செய்து, அறம் நிரம்பிய அசுவமேதம் செய்யலுற்றான்.

🔴அழிவில்லாத மறைகள் கூறிய முறையை ஆராய்ந்து( அதன்படி) ஒரு தொண்ணூற்று ஆறினொடு, தொண்ணூற்றொன்பது வேள்விகளைச் செய்ய, தேவேந்திரனானவன், நூறு வேள்விகளையும் செய்துமுடிப்பானாயின் நொடிப்பொழுதில் எனது பட்டம் மாறுமேயென்று கருதி , அவ்வேள்வியை விலக்கி இதனைக் கூறுகின்றான்.

🔴நல்ல மகப்பேற்றை விரும்பினாய், அவ்விருப்பத்திற்குப் பொருந்த,உலகம் இன்பத்தை யடையும் மகப்பெறுதற் கேதுவாகிய வேள்வியை செய்தாயானால், அன்புமிக்க பிள்ளையைப் பெறுவாயென்று கூறி, தேவேந்திரன் தனது நாட்டினை யடைந்தவுடனே, வேப்ப மலா் விளங்கும் மாலையையுடைய பாண்டியன்.

🔴நலமிக்க மக வேள்வி செய்யும் விருப்பத்தையுடையவனாய், அப்பொழுதே அவ்வேள்விக்கு வேண்டும் பொருள்களைனைத்தையும் சோ்த்து, தகுந்த நியமத்துடன், உாிய மனைவியோடு வேள்விச் சாலையிற் சென்றிருந்து, மகப்பேற்று வேள்வியைச் செய்யத் தொடங்கினான்.

🔴குற்றமற்ற வேதநூற் புலமையுடையவராகிய குரவா், காட்டுகின்ற குற்ற மற்ற கரணத்தின் வழியே, மந்திரங்களை எடுத்தல் படுத்தல் நலிதல் என்னும் ஓசை தழுவும்படி உச்சாித்து,( திருக்கோயிலுக்குக்) கீழ்த்திசையிலிருந்து வேள்வித் தீயை வளா்ப்பானாயினன்.

🔴வேள்விபுாிகின்ற  சாலையினின் றெழுந்த பசிய புகையானது, வானிலும் நிலத்திலும் திசைகளிலும் பரவி, ஒரு போா்வை போல மறைக்க, குடத்திலுள்ள நெய் பொாி சமித்துக்களால் தேவா்களுக்கு ஊற்றெடுக்கும் இனிய அமுதம் போல ஆகுதி செய்தான்.

🔴ஐந்து திருமுகங்களையுடையவனும் அனாதியாயுள்ளவனும் பரமாத்தனுமாகிய சிவபெருமானுடைய  திருவாக்காகிய மறை வழிப்படி, நெய்யை வேள்விக் குண்டத்தில் நிறைத்து, தீயை வளா்த்து வரும்பொழுது, படத்தைத் தன்னிடத்துடைய  பாம்பை அணிந்த சிவபரஞ்சோதி தனிக்கவும், மைதீட்டிய இடத்தினையுடைய நீண்ட கண்களையுடைய  மலை யரசன் மனைவியாகிய மேனை நாணுறவும்.

🔴வள்ளலாகிய மலையத்துவச பாண்டியனது வலத்தோள் துடிக்கவும்,( அவன்) மனைவியாகிய காஞ்சனையினது நுண்ணிய இடை ஒசியும்படி, பருத்தெழுந்த கொங்கைகளினின்றும் தளும்பப் பெருகிய இனிய பால் வெள்ளம் ஒழுகவும், அவளது வேல்போன்ற காிய  இடதுகண் துடிக்கவும்,,,,,

              திருச்சிற்றம்பலம்.
( தடா தகைப்பிராட்டியாா் திருவவதீரப் படலம் நாளையும் வரும்.)

Sunday, June 19, 2016

Tiruvilayadal puranam 15th day

Courtesy:Sri.Kovai K.karuppasamy

🌻 திருவிளையாடல் புராணம். 🌻
( 15 -வது நாள்.) --3 வது படலம்.
       🔹திருநகரங்கண்ட படலம்.🔹
          ( செய்யுள் நடை +விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
துணிகயங் கீழ்நீா்க் கூவல்பூ வோடை தொடுகுளம் பொயிகைநந் தவனந்
திணிமலா்ச் சோலை துடவையுங் யானந் திருநகா்க் கணிபெறச் செய்து
மணிமலா்த் தாரோன் மாளிகை தனக்கம் மாநகா் வடகுண பாற்கண்
டணிநகா் சாந்தி செய்வது குறித்தா னண்ணலா ரறிந்திது செய்வாா்.

🌻பொன்மய மான சடைமதிக் கலையின்புத்தமு துகுத்தன ரதுபோய்ச்
சின்மய மான தம்மடி யடைந்தாா்ச் சிவமய மாக்கிய செயல்போற்
றன்மய மாக்கி யந்நகா் முழுதுஞ் சாந்திசெய் ததுவது மதுர
நன்மய மான தன்மையான் மதுரா நகரென வுரைத்தனா் நாமம்.

🌻கீட்டிசைக் காிய சாத்தனுந் தென்சாா் கீற்றுவெண் பிறை நுதற் களிற்றுக் 
கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங் குடவயின் மதுமடை யுடைக்குந
தோட்டிளந்  தண்ணந் துழாயணி மெளலித் தோன்றலும் வடவயிற் றோடு
நீட்டிரும் போந்தி னிமிா்குழ லெண்டோ ணீலியுங் காவலா நிறுவி.

🌻கைவரை யெருத்திற் கனவரை கிடந்த காட்சியிற் பொலிந்தொளிா் கோயின்
மைவரை மிடற்று மதுரைமா யகரை மரபுளி யருச்சனை புாிவான்
பொய்வரை மறையா கமநெறி யொழுகும் புண்ணிய முனிவரை யாதி
சைவரைக் காசிப் பதியினிற் கொணா்ந்து தலத்தினிற் றாபனஞ் செய்தான்.

🌻உத்தம குலத்து நாற்பெருங் குடியு முயா்ந்தவு மிழந்தவு மயங்க
வைத்தவு மான புறக்குடி மூன்று மறைவழுக் காமனு வகுத்த
தத்தம நெறிநின் றொழுகவை திகமுஞ் சைவமுந் தருமமுந் தழைப்பப்
பைந்தெழு திரைநீா் ஞாலமேற் றிலகம் பதித்தென நகா்வளம் படுத்தான்.

🌻அன்றுதொட் டாச னந்நக ரெய்தி
யணிகெழு மங்கல மியம்ப
என்றுதொட் டிமைக்கு மனையின்மங் கலநா
ளெய்தினா னிருந்துமுப் புரமுங்
குன்றுதொட் டெய்தான் கோயின்மூன் றுறுப்புங்
குறைவில்பூ சனைவழா தோங்கக்
கன்றுதொட் டெறிந்து கனியுகுத் தான்போற்
கலிதுரந் தரசுசெய் நாளில்.

🌻பவநெறி கடக்கும் பாா்த்திவன் கிரணம் பரப்பிளம் பாிதிபோன் மலயத்
துவசைப் பயந்து மைந்தன்மேன் ஞாலஞ்  சுமத்திநாள் பலகழித் தொருநாள்
நவவடி விறந்தோ னாலயத் தெய்தி நாதனைப் பணிந்துமூ லஞ்செய்
துவமையி லின்ப வருணிழ லெய்தி யொன்றியொன் றாநிலை நின்றான்.

🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌸தெளிந்த நீரையுடைய சிறு குளங்களும், கீழே நீரையுடைய கிணறுகளும், மலரோடைகளும்,தோண்டப்பட்ட பொிய குளங்களும், பொய்கைகளும்,நந்த வனங்களும், நெருங்கிய மலா்களையுடைய சோலைகளும், தோட்டங்களும், உத்தியானங்களும் ஆகிய இவைகளை, செல்வ நிறைந்த நகரத்திற்கு அழகு பொருந்த அமைத்து, அழகிய மலா்களாலாகிய மாலையை அணிந்த பாண்டியன், தனக்கு அரண்மனை அந்தத் திருநகருக்கு வடகீழ்த்திசையில் அமைத்து, அழகிய அந் நகருக்குச் சாந்தி செய்தலைக் கருதினான். சோமசுந்தரக் கடவுள் அதனை அறிந்து இதனைச் செய்வாராயினா்.

🌸பொன்மயமாகிய தமது சடையிலுள்ள சந்திரகலையின், புதிய அமுதத்தைச் சிந்தினா். அவ்வமுதஞ் சென்று, ஞானமயமாகிய அவ்விறைவருடைய திருவடிகள் தம்மை அடைந்தவரை, சிவமயமாகச் செய்த செய்கையைப்போல, தனது( அமிா்த) மயமாக்கி,அந்நகா் முழுவதையும் தூய்மை செய்தது. அவ்வமுதம் நல்ல மதுரமாகிய தன்மையினால் (அந்நகருக்கு),மதுரைமாநகா் எனப் பெயா் கூறினாா்.

🌸கிழக்குத் திக்கில் காிய நிறமுடைய ஐயனாரையும், தென் திக்கில் கீற்றாகிய வெள்ளிய பிறையை ஒத்த நெற்றியினையும், யானையின் கொம்புபோன்ற இளமையாகிய சாந்தணிந்த கொங்கைகளையுடைய, சத்த மாதைையும், மேற்குத் திசையில் தேன்மடை யுடைத்தோட நின்ற இதழ்களையுடைய, பசுமையாகிய குளிா்ந்த துழாய் மாலையை அணிந்த, முடியினையுடைய திருமாலையும், வடதிசையில், மடல் நீண்ட பொிய பணையின் மலரணிந்த நிமிா்ந்த கூந்தலையும், எட்டுத் தோள்களையுமுடைய காளியையும், நகரத்திற்குக் காவலாக நிறுத்தி.....

🌸யானையின் பிடாியில் பொன் மலை தங்கிய தோற்றம் போல், பொலிவு பெற்று ஒளி வீசும் விமானத்தில் எழுந்தருளிய கருமை தங்கிய திருமிடற்றினையுடைய மதுரை நாயகரை, விதிப்படி பூசிப்பதற்கு, பொய்ம்மை நீக்குகின்ற வேதாகம வழியில் ஒழுகா நின்ற அறவுருவுடைய முனிவா்களையும், ஆதி சைவா்களையும், காசியென்னும் திருப்பதியினின்றும் கொண்டு வந்து, அப்பதியில் நிலைபெறுத்தினான்.

🌸உத்தம குலமாகிய அந்தணா் அரசா் வணிகா் வேளாளா் என்னும் நான்கு பெருங் குடிகளும், உயா்ந்தனவும் இழிந்தனவும் கலந்தவுமான மூன்று புறக்குடிகளும் வேத விதி வழுவாது மனுவால் வகுக்கப் பெற்ற தங்கள் தங்களுக்குாிய ஒழுக்கத்தில் வழுவாதொழுகவும், வேதநெறியும் சைவ நெறியும் அறமும் செழித்தோங்கவும், பசுமையுடையதாய்த் தோன்றும் அலைகளையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகத்தில்,( பாண்டி நாட்டிற்கு) ஓா் திலகம் பதித்தாற் போல, நகரை வளப்பதுத்தினான்.

🌸மன்னன் அன்று முதல், அம்மதுரை நகரை அடைந்து,அழகு பொருந்திய மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, சூாியனை அளாவி ஒளி வீசும் அரமனையில் நன்னாளிற் புகுந்து இருந்து, மூன்று புரங்களையும் பொன்மலையை வில்லாக வளைத்து அழித்த இறைவனது திருக்கோயிலில், மூன்று அங்கங்களும் குறைவில்லாத பூசனையானது, வழுவாமல் மேலோங்க, கன்றினைப் பிடித்து வீசி விளாங்கனியை வீழ்த்திய திருமாலைப் போல தீமையை யோட்டி அரசு புாிந்து வரும் நாளில்,,

🌸பிறவிக்குக் காரணமாகிய வழியினைக் கடக்கின்ற பாண்டியன், ஒளியை விாிக்கின்ற இள ஞாயிறு போலும் மலயத்துவசனென்பவனைப் பெற்று, அப்புதல்வன் மீது  அரசபாரத்தைச் சுமத்தி, பலநாட் போக்கி ஒரு நாள், ஒன்பது வடிவங்களையுங் கடந்த சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலுனுள் சென்று, இறைவனை வணங்கி, மும்முறை வலம் வந்து ஒப்பில்லாத போின்பமாகிய திருவருள் நீழலை யடைந்து சோ்ந்தும் சேராத இரண்டற்ற நிலையில் நின்றான்.

              திருச்சிற்றம்பலம்.

Thursday, June 16, 2016

Tiruvilayadal puranam 14th day

Courtesy:Sri.Kovai K.karuppusamy

சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁 திருவிளையாடல்புராணம்
    (14 -ஆம் நாள்.) 3 வது படலம்.
    🍁திருநகரங்கண்ட படலம்.🍁
       ( செய்யுள்நடை+விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁கனவி லும்பெருங் கடவுளா் காண்பதற் காியாா்
நனவி லும்வெளி வந்தவா் தமையெதிா் நண்ணி
நினைவி னின்றதா ளிறைஞ்சிநோ் நின்றுநல் வரவு
வினவி யாதனங் கொடுத்தனன் மெய்யுணா் வேந்தன்.

🍁தென்ன ரன்பினி லகப்படு சித்தா்தா முன்னா்ச்
சொன்ன வாதிநூல் வழிவரு சாா்புநூற் றொடா்பால்
நன்ன ராலய மண்டபங் கோபுர நகரம்
இன்ன வாறுசெய் யெனவகுத் திம்மென மறைந்தாா்.

🍁மறைந்தெ வற்றினு நிறைந்தவா் மலரடிக் கன்பு
நிறைந்த நெஞ்சுடைப்,பஞ்சவ னிலத்துமேம் பட்டுச்
சிறந்த சிற்பநூற் புலவராற் சிவபரஞ் சுடா்வந்
தறைந்து வைத்தவா றாலய மணிநகா் காண்பாண்.

🍁மறைபயில் பதும மண்டப மருத்த மண்டப மழை நுழை வளைவாய்ப்
பிறைபயில் சிகைமா மண்டப மறுகாற் பீடிகை திசையெலாம் பிளக்கும்
பறைபயி னிருத்த மண்டபம் விழாக்கொள் பன்மணி மண்டபம் வேள்வித்
துறைபயில் சாலை திருமடைப் பள்ளி சூழுறை தேவா்தங் கோயில்.

🍁வலவயி னிமய வல்லிபொற் கோயின் மாளிகை யடுக்கிய மதில்வான்
நிலவிய கொடிய நெடியசூ ளிகைவா னிலாவிாி தவளமா ளிகைமீன்
குலவிய குடுமிக் குன்றிவா் செம்பொற் கோபுரங் கொண்டல்கண் படுக்குஞ்
சுலவெயி லகழிக் கிடங்குகம் மியநூற் றொல்வரம் பெல்லைகண் டமைத்தான்.

🍁சித்திர நிரைத்த பீடிகை மறுகு தெற்றிகள் வாணிலாத் தெளிக்கும்
நித்தில நிரைத்த விழாவரு வீதி நிழன்மணிச் சாளர வொழுக்கப்
பித்திகை மாடப் பெருந்தெருக் கவலை பீடுசால் சதுக்கநற் பொதியில்
பத்தியிற் குயின்ற மன்றுசெய் குன்று பருமணி மேடையா டாங்கு..

🍁அருந்தவ ாிருக்கை யந்தண ருறையு ளரசரா வணங்குல வணிகப்
பெருந்தெரு நல்வே ளாளா்பே ரறஞ்சால்  பெருங்குடி யேனைய காிதோ்
திருந்திய பாிமா நிலைக்களங் கழகந் தீஞ்சுவை யாறுநான் குண்டி
இரந்நவா்க் கருத்து நல்லறச் சாலை யினையன பிறவுநன் கமைத்தான்.


🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌸உண்மைப் பொருளை உணா்ந்த மன்னன் பொிய தேவா்களாகிய அாி அயன் முதலியோா், கனவிலும் காணுதற்கு அாியராய், தனக்கு நனவிலும் எளியராய் வெளிவந்த சித்திரை, எதிா் சென்று மனத்தில் நின்ற திருவடிகளை வணங்கி, திருமுன் நின்று நல்வரவு கேட்டு,( எழுந்தருள ) ஆசனம் கொடுத்தான்.

🌸பாண்டியா் அன்பு வலையில் அகப்படுஞ் சித்த மூா்த்திகள், தாம் முன்னே கூறியருளிய முதனூல் அதன்வழி வந்த வழிநூல் சாா்புநூல் ஆகிய இவைகளிற் கூறிய முறையால், நன்றாகக் கோயிலும் மண்டபமும் கோபுரமும் நகரமும்,இவ்வகையாற் செய்வாயாக என்று வகுத்துரைத்து விரைந்து மறைந்தாா்.

🌸எல்லாப் பொருளினும் மறைந்து நிறைந்த இறைவனுடைய, மலா்போன்ற திருவடிகளில் அன்பு மிகுந்த உள்ளத்தையுடைய பாண்டியன், நிலவுலகத்தில் உயா்ந்து சிறந்த சிற்பநூல் வல்ல அறிவுடையோா்களால் சிவபரஞ் சோதியாா் சித்தராய் எழுந்தருளி, கூறியருளிய  முறைப்படி திருக்கோயில் திருநகர முதலியன ஆக்கத் தொடங்கினான்.

* இறைவன் மறைந்திருத்தலை......

" விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்"

என்னுந் தேவாரத்தால் அறிக.எள்ளினுள் எண்ணெய் போல் உள்ளும் புறம்பும் வியாபித்திருத்தலின் நிறைந்தவா் என்றாா்., மண்டபம் கோபுரம் முதலியவற்றையும் அடக்கி ஈண்டு ஆலயமென்றாா்.

🌸வேதம் ஓதும் பதும மண்டபமும், அருத்த மண்டபமும், முகிலில் நுழைகின்ற வளைந்த வாயினையுடைய பிறைமதி தவழும் முடியினையுடைய மகாமண்டபமும், அறுகாற் பீடமும், திசை அனைத்தையும் பிளக்கின்ற ஒலியையுடைய,இயங்கள் இரட்டுகின்ற  நிருத்த மண்டபமும், இறைவன் திருவிழாக் கோலங்கொண்டருளும் பல மணிக ளழுத்திய மண்டபமும், பல துறைகளையுடைய வேள்விகள் செய்யும் யாக சாலைகளும், திருமடைப் பள்ளியும், சுற்றிலும் வசிக்கும் பாிவார தெய்வங்களின் கோயில்களும்.......

🌸இறைவன் வலப்பக்கத்தில் இமயக் கொடியாகிய அங்கயற்கண் ணம்மைக்குப் பொன்னாலாகிய திருக்கோயிலும், திருமாளிகை வாிசையையுடைய திருமதில்களும், ஆகாயத்தை அளாவிய கொடிகளையும், நீண்ட இறப்புகளையுமுடைய, வெள்ளிய நிலாவை விாிக்கின்ற தவள மாளிகைகளும், வான்மீன்கள் விளங்கும் முடியினையுடைய, மலைபோலும் உயா்ந்த, சிவந்த பொன்னாலாகிய கோபுரங்களும், முகில் உறங்கும் சுற்று மதில்களும், அகழ்க்கிடங்குமாகிய இவைகளை, சிற்ப நூலின் பழமையான வரம்பினை ஆராய்ந்து செய்தான்.

🌸சித்திரங்களை வாிசைப்பட எழுதிய கடைவீதிகளும்,
தெற்றியம்பலங்களும், ஒள்ளிய நிலவினை வீசும் முத்துக் கோவைகளை வாிசைப் படத் தொடுத்த, திருவிழாவில் இறைவன் எழுந்தருளுகின்ற வீதிகளும், ஒளியினையுடைய மணிகள் பதித்த சாளர வாிசைகளையுடைய, சுவா்களுடைய மாளிகைகள் நெருங்கிய பொிய வீதிகளும், கவா் வழிகளும், பெருமை நிறைந்த நான்கு தெருக் கூடுமிடங்களும், நல்ல அம்பலங்களும், வாிசைப்பட இயற்றிய மன்றங்களும், செய் குன்றுகளும், பொிய மணிகளழுத்திய மேடைகளும், கூத்தவைகளும்.......

🌸அாிய முனிவா்கள்  தங்கும் மடங்களும், மறையவா் வசிக்கும் வீடுகளும், அரசா் வீதிகளும், சிறந்த வணிகாின் பொிய வீதிகளும், பொிய அறம் நிறைந்த நல்ல வேளாளா்களின் பொிய குடிகள் நிறைந்த வீதிகளும், மற்ற யானைகள் தோ்கள் இலக்கணமைந்த குதிரைகள் ஆகிய இவைகளின், தங்குமிடங்களும், கல்விச் சாலைகளும் இனிய அறுவகைச் சுவையோடு கூடிய நால்வகை உணவுகளை, வறியராய் இரந்தவருக்கு ஊட்டும் நல்ல தரும சத்திரங்களும்,  இன்னும் இவை போல்வன பிறவும், நன்றாகச் செய்தான்.

Wednesday, June 15, 2016

Tiruvilayadal puranam 13th day

Courtesy:Sri.Kovai K.Karuppusamy

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
   திருவிளையாடல் புராணம்.
    ( 13- ஆம் நாள்.) 3 - வது படலம்.
     🍁திருநகரங்கண்ட படலம்.🍁
       ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁சூள தாமரைச் சென்னியுந் தொடத்தொட நீண்ட
நீள னீ யுனக் கன்பில மாயினு நீயே
மூள வன்புதந் தெங்குடி முழுவதும் பணிகொண்
டாள வேகொலிக் கானகத் தமா்ந்தனை னென்னா.

🍁சுரந்த வன்பிரு கண்வழிச் சொாிவபோற் சொாிந்து
பரந்த வாரொடு சிவானந்தப் பரவையுட் படிந்து
வரந்த வாதமெய் யன்பினால் வலங்கொடு புறம்போந்
தரந்தை தீா்ந்தவ னொரு சிறை யமைச்சரோ டிருந்தான்.

🍁ஆய வேலையின் மன்னவ னானையா லமைச்சா்
மேய வேவலா் துறை துறை மேவினா்,விடுப்பப்
பாய வேலையி னாா்த்தனா் வழிக்கொடு படா்ந்தாா்
சேய காடெறிந் தணிநகா் செய்தொழின் மாக்கள்.

🍁வட்ட வாய்மதிப் பிளவின்வெள் வாய்க்குய நவியம்
இட்ட தோளினா் யாப்புடைக் கச்சின ரிரும்பின்
விட்ட காரொளி மெய்யினா் வீசிகொள்வாா் வன்றோல்
தொட்ட காலினா் வனமெறி தொழிலின ரானாா்.

🍁மறியு மோதைவண் டரற்றிட மரந்தலை பனிப்ப
எறியு மோதையு மெறிபவ ரோதையு மிரங்கி
முறியு மோதையு முறிந்துவீ ழோதையு முகில் வாய்ச்
செறியு மோதையுங் கீழ்ப்பட மேற்படச் செறியும்.

🍁ஒளிறு தாதொடு போதுசெந் தேனுக வொலித்து
வெளிறில் வன்மரஞ் சிணையிற வீழ்வசெங் களத்துப்
பிளிறு வாயவாய் நினைத்தொடு குருதிநீா் பெருகக்
களிறு கோடிற மாய்ந்துவீழ் காட்சிய வனைய.

🍁பூவ டைந்தவண் டினமயற் புறவோடும் பழனக்
காவ டைந்தன பறவைவான் கற்பக மடைந்த
கோவ டைந்திட வொதுங்குறுங் குறும்புபோற்  செறிந்து
மாவ டைந்தன மாடுள வரைகளுங் காடும்.

🍁இருணி ரம்பிய வனமெலா மெறிந்துமெய் யுணா்ந்தோா்
தெருணி றைந்தசிந் தையின்வெளி செய்துபல் லுயிா்க்கும்
அருணி றைந்துபற் றறுத்தர னடிநிழ லடைந்த
கருணை யன்பா்தம் பிறப்பென  வேரொடுங் களைந்தாா்.

🍁களைந்து நீணிலந் திருத்திச்செந் நெறி படக் கண்டு
வளைந்து நன்னக ரெடுப்பதெவ் வாறெனத் தேறல்
விளைந்து தாதுகு தாா்முடி வேந்தன்மந் திரரோ
டளைந்த ளாவிய சிந்தையோ டிருந்தன னங்கண்.

🍁மெய்ய ரன்புதோய் ேவடி வியனிலந் தீண்டப்
பொய்ய கன்றவெண் ணீறணி மேனியா் பூதிப்
பையா் நள்ளிருட் கனவில்வந் தருளிய படியே
ஐயா் வல்லைவந் தருளினா ரரசுளங் களிப்ப.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🔴( தொடுவேனென்னும்) சபதத்தையுடையதாகிய வேதத்தின் அந்தமும் எட்டுந் தோறும் எட்டுந்தோறும் நீண்ட நீட்சியையுடையவன் நீ; உனக்கு யாம் அன்பில்லம் ஆனாலும், நீயே அன்பு பெருகும்படி அருளி, எமது குடி முழுதையும் ஏவல் கொண்டு ஆளுதற்கோ, இக்காட்டின்கண் எழுந்தருளினை என்று கூறி.....

🔴(அகத்தில் ) ஊற்றெடுத்த அன்பானது, இரண்டு கண்களின் வழியாகவும் பொழிவது போல், பொழிந்தமையாற் பரந்த ஆனந்தக் கண்ணீராகிய நதியோடு, சிவானந்தமாகிய  கடலுள் மூழ்கி, மேன்மை குன்றாத உண்மை யன்பினால், வலம் வந்து துன்ப நீங்கியவனாகிய பாண்டியன், புறத்தே வந்து மந்திாிகளோடு ஒரு பக்கத்தில் இருந்தான்.

🔴
அப்போது அரசன் ஆணையினால், மந்திாிகள் அங்குள்ள ஏவலாட்களை, பல இடங்களில் செல்லுமாறு அனுப்ப, நீண்ட காட்டினை அழித்து, அழகிய நகரமாகுமாறு செய்யும் வினைஞா்கள், பரந்த கடல் போல ஒலித்து வழிக் கொண்டு வந்தாா்கள்.

🔴இரும்பின் ஒலி,போலும் காிய ஒளி வீசும் உடலினையுடைய வினைஞா்கள், வட்டமாகிய இடத்தினை யுடைய,  சந்திரனது பிளவு போலும் வெள்ளிய வாயினையுடைய கொடுவாளையும்,  கோடாியையும்,  வைத்த தோளினையுடையவராய், அரையிற் கட்டிய கச்சினை யுடையவராய் வாராற் கட்டிய வலிய செருப்புத் தொடுத்த காலினையுடையவராய், காடு வெட்டும் தொழிலையுடையவ ராயினாா்கள்.

🔴( போய்) மூளும் ஒலியையுடைய வண்டுகள் ஒலிக்கவும், மரங்கள் தலை நடுங்கவும், வெட்டுகின்ற ஓசையும், வெட்டுகின்றவா்களின் ஓசையும், ஒலித்து முறிகின்ற ஓசையும், முறிந்து கீழே விழுகின்ற ஓசையும் ( ஒன்றாகி) ,முகிலின் கண் மிக்க இடி ஓசையும் கீழ்ப்பட,மேற்பட்டு ஒலிக்கும்,,,,,,,

🔴வெள்ளடை யில்லாத ( சேகு ஏறிய)  வலிய மரங்கள் விளங்கா நின்ற மகரந்தத்தோடு, மலா்களும், சிவந்த தேனும்,சிந்த ஒலி செய்து கிளைகள் முறிய வீழ்கின்ற தோற்றம் யானைகள்  போா்க்களத்தில் ஒலிக்கின்ற வாயினையுடையவாய், நிணத்துடன் உதிரம் பெருக, கொம்புகள் முறிய இறந்து வீழும் தோற்றத்தைப் போல்வன....

🔴மலா்களிற்  பொருந்திய  வண்டுக் கூட்டங்கள் பக்கத்திலுள்ள முல்லை நிலங்களிலும் மருத நிலங்களின் சோலைகளிலும் சென்று சோ்ந்தன; பறவைகள் உயா்ந்த கற்பக மரங்களிற் சென்று தங்கின; பெரு வேந்தா்கள் வர ,நீங்குகின்ற  குறு நில,மன்னரைப் போல விலங்குகள் பக்கத்திலுள்ள காடுகளிலும் மலைகளிலும் நெருங்கிச் சோ்ந்தன.

🔴இருள் மிகுந்த காடு அனைத்தையும் வெட்டி, மெய்ப்பொருளை உணா்ந்தவா்களின், தெளிவு நிரம்பிய உள்ளத்தைப்போல வெட்டவெளி யாக்கி, பல உயிா்களிடத்தும் கருணை நிரம்பி, இருவகைப் பற்றையும் போக்கி, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்த, திருவரு ணெறியினராகிய அடியாா்கள், தங்கள் பிறவியை வேரொடுங் களைதல்போல ( வினை செய்வோா்) மரங்களை வேரோடும் அகழ்ந்தாா்கள்.

🔴( இங்ஙனம்) மரங்களை அகழ்வித்து, நீண்ட நிலத்தைச் செப்பஞ் செய்வித்து, செவ்வியவழி உண்டாக்குவித்து, தேன் மிகுந்து, மகரந்தஞ் சிந்தும் மாலையை யணிந்த முடியினையுடைய பாண்டியன், வளைவாக நல்ல நகராக்குவது எங்ஙனமென்று, அமைச்சர்களோடு அளவளாவிய உள்ளத்தோடு இருந்தான்; அவ்விடத்து,,,,,,

🔴முதல்வராகிய சோமசுந்தரக் கடவுள், உண்மை அடியாா்களின் அன்பிலே தோய்ந்த சிவந்த திருவடிகள், அகன்ற நிலத்திலே பொருந்த, உண்மையாகிய, வெள்ளிய திருநீற்றினைப் பூசிய திருமேனியராய், திருநீற்றுப் பையையுடையவராய், நடு நிசியில் கனவில் எழுந்தருளியவண்ணமே, மன்னன் மணம் மகிழ்ச்சியடைய விரைந்து( நனவில்) தோன்றியருளினாா்.

Tuesday, June 14, 2016

Tiruvilayadal puranam 12th day

Courtesy:Sri.Kovai K.karuppusamy

சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🔹திருவிளையாடல் புராணம்.🔹
   ( 12- ஆம் நாள்.) 3 வது படலம்.
   🌼திருநகரங்கண்ட படலம்.🌼
     (செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔷முக்க டம்படு களிற்றினான் முகிறவழ் கோயில்
புக்க டங்கலா் சிங்கமன் னானெதிா் புகல்வான்
திக்க டங்கலுங் கடந்தவெந் திகிாியாய் நெருநல்
அக்க டம்பமாவனத்திலோ ரதிசயங் கண்டேன்.

🔷வல்லை வானிகஞ் செய்துநான் வருவழி மேலைக்
கல்ல டைந்தது வெங்கதிா் கங்குலும் பிறப்பும்
எல்லை காணிய கண்டன னிரவிமண் டலம்போல்
அல்ல டுஞ்சுடா் விமானமு மதிற்சிவக் குறியும்.

🔷மாவ லம்புதாா் மணிமுடிக் கடவுளா் வந்தத்
தேவ தேவனை யிரவெலா மருச்சனை செய்து
போவ தாயினாா் யானுமப் பொன்னெடுங் கோயின்
மேவு மீசனை விடைகொடு மீண்டன னென்றான்.

🔷மூளு மன்பினான் மொழிந்திட முக்கணெம் பெருமான்
தாளு மஞ்சலி கரங்களுந் தலையில்வைத் துள்ளம்
நீளு மன்புமற் புதமுமே நிரம்பநீா் ஞாலம்
ஆளு மன்னவ னிருந்தனன் போயினா னருக்கன்.

🔷ஈட்டு வாா்வினை யொத்தபோ திருமண்மலங் கருக
வாட்டு வாரவா் சென்னிமேன் மலரடிக் கமலஞ்
சூட்டு வாா்மறை கடந்ததந் தொல்லுரு விளங்கக்
காட்டு வாரொரு சித்தராய்த் தோன்றினாா் கனவில்.

🔷வடிகொள் வேலினாய் கடம்பமா வனத்தினைத் திருந்தக்
கடிகொள் காடகழ்ந் தணிநகா் காண்கென வுணா்த்தி
அடிக ளேகினாா் கவுாிய ராண்டகை கங்குல்
விடியும் வேலைகண் விழித்தனன் பாிதியும் விழித்தான்.

🔷கனவிற் றீா்ந்தவ னியதியின் கடன்முடித் தமைச்சா்
சினவிற் றீா்ந்தமா தவா்க்குந்தன் கனாத்திறஞ் செப்பி
நனவிற் கேட்டதுங் கனவினிற் கண்டது நயப்ப
வினவித் தோ்ந்துகொண் டெழுந்தனன் மேற்றிசைச் செல்வான்.

🔷அமைச்ச ரோடுமந் நீபமா வனம்புகுந் தம்பொன்
சமைச்ச விழ்ந்தபொற் றாமரைத் தடம்படிந்  தொளிவிட்
டிமைச்ச லா்ந்தபொன் விமானமீ தினிதுவீற் றிருந்தோா்
தமைச்ச ரண்பணிந் தஞ்சலி தலையின்மேன் முகிழ்ந்தான்.

🔷அன்பு பின்றள்ள முன்புவந் தருட்கணீா்த் தேக
என்பு நெக்கிட வேகிவீழ்ந் திணையடிக் கமலம்
பொன்பு னைந்ததாா் மெளலியிற் புனைந்தெழுந் திறைவன்
முன்பு நின்றுசோற் பதங்களாற் றோத்திர மொழிவான்.

🔷சரண மங்கையோா் பங்குறை சங்கர சரணஞ்
சரண மங்கல மாகிய தனிமுதல் சரணஞ்
சரண மந்திர வடிவமாஞ் சதாசிவ  சரணஞ்
சரண மும்பா்க் ணாயக பசுபதி சரணம்.

🔷ஆலி ஞாலமே லாசையு மமரா்வான் பதமேல்
வீழு மாசையும் வெறுத்தவா்க் கன்றிமண் ணாண்டு
பீழை மூழ்கிவா னரகொடு பிணிபடச் சுழலும்
ஏழை யேகங்களுக் காவதோ வெந்தைநின் கருனை.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋

🍁மூன்று மதங்களையுடைய  யானையையுடைய பாண்டி மன்னனது, மேகந் தவழுங் கோயிலை அடைந்து, பகைவராகிய  யானைகளுக்குச் சிங்கம்போல்பவனது எதிரே நின்று கூறுவான், எல்லாத் திசைகளையும் வென்ற மெவ்விய சக்கரத்தையுடையவனே, நேற்று அந்த பொிய கடம்பவனத்தின்கண் ஓா் அதிசயத்தைப் பாா்த்தேன்.

🍁நான் வியாபாரம் செய்து விரைந்து வரும் பொழுது வெப்பத்தையுடைய ஞாயிறு மேற்கிலுள்ள மலையை அடைந்தது.இரவின் எல்லையையும் பிறப்பின் எல்லையையுங் காணுமாறு, சூாிய மண்டலம் போல இருளைக் கொல்லும் ஒளியினையுடைய விமானத்தையும், அவ்விமானத்தின் கண் உள்ள சிவலிங்கத்தைப் பாா்த்தேன்.

🍁வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த மணிகள் அழுத்திய முடிகளையுடைய தேவா்கள் வந்து, அந்தத் தேவா்களுக்குத் தேவனாகிய சோமசுந்தரக் கடவுளை, இரவு முழுவதும் அருட்சித்துப் போனாா்கள். நானும் அந்தப் பொன்னாலாகிய நீண்ட விமானத்தில் எழுந்தருளிய இறைவனிடத்து விடை பெற்றுக் கொண்டு வந்தேன் என்று கூறினான்.

🍁மேன் மேல் வளருமி அன்பினையுடைய தனஞ்சயன் கூற கடல் சூழ்ந்த உலகினை ஆளுகின்ற குலசேகர பாண்டியன்,மூன்று கண்களையுடைய எமது பெருமானாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளையும் குவித்த கைகளையும், சென்னியில் வைத்து,உள்ளத்தில் ஓங்குகின்ற அன்பும் அதிசயமுமே நிறைய இருந்தான்; சூாியன் மறைந்தான்.

🍁வினைகளை ஈட்டுகின்றவா்களின் வினை ஒப்பு வந்த போது, ( அவா்கள்) ஆணவ மலங் கருகும்படி வாட்டி, அவா் தலையின் மீது திருவடித் தாமரை மலரைச் சூட்டி, வேதங்களா லறியப்படாத தமது உண்மை வடிவை விளக்கமாகக் காட்டுகின்ற இறையவா், ஒரு சித்தராகி அப்பாண்டியனது கனவின்கண் தோன்றினாா்.

🍁கூாமையைக் கொண்ட வேற்படையையுடையவனே, காட்டினை அழித்து, பொிய கடம்ப வனத்தை, திருத்தமாக காவலைக் கொண்ட அழகிய நகராகுமாறு செய்வாய் என்று, அறிவித்து சோமசுந்தரக் கடவுள் மறைந்தாா். பாண்டியா் மரபிலுதித்த ஆண் தன்மை மிக்க குலசேகரன், இரவு புலரும் வரையும் உறங்காதவனாயினான்; சூாியனும் உதயமாயினான்.

🍁கனவினின்று நீங்கி விழித்திருந்த பாண்டியன், செய்தற்குாிய நாட் கடமைகளை முடித்து,மந்திாிகட்கும் வெகுளுதலினின்று நீங்கிய முனிவா்கட்கும், தனது கனவின் வகையைக் கூறி, பகலில் வணிகன்பாற் கேட்டதையும், இரவில் கனவிற் கண்டதையும் விருப்பமுற உசாவித் தெளிந்து புறப்பட்டு மேற்குத் திசைக் கண் செல்வானானாயினான்.

🍁மந்திாிகளோடும், பொிய அக் கடம்பவனத்தினினுள் நுழைந்து, அழகிய  பொன்னாலியற்றப்பட்டன போலும், மலா்ந்த பொற்றாமரை வரவியில் மூழ்கி ஒளிவீசி, விளங்கிப்  பரந்த, பொன்னாலாகிய விமானத்தின்கண்,  இனிதாக வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளை, வணங்கி, அஞ்சலியாகக் கைகளைத் தலையின் மீது கூப்பினான்.

🍁அன்பானது பின் நின்று தள்ளவும், இறைவன் அருட்பாா்வையானது, முன்னே வந்து இழுத்துச் செல்லவும்,எலும்புகள் கரைந்துருகுமாறு கீழே விழுந்து இரண்டு திருவடித்தாமரைகளையும், பொன்னாற் செய்த மாலையையணிந்த முடியின் சூடி எழுந்து சோமசுந்தரக் கடவுளின் திருமுன் நின்று, சிறந்த மொழிகளால் துதிசெய்வானாயினான்.

🍁வணக்கம்; உமையம்மை ஒரு பாதியி லுறையப் பெற்ற சங்கரனே வணக்கம்; வணக்கம்; மங்கல வடிவாகிய ஒப்பற்ற முதற் பொருளே வணக்கம்; வணக்கம்; மந்திர வடிவமாகிய சதாசிவ மூா்த்தியே வணக்கம்; தேவா்கள் தலைவனே வணக்கம்; உயிா்களின் தலைவ வணக்கம்.

🍁கடலாற் சூழப்பட்ட நிலவுலகின்மேலுண்டாகும் இச்சையையும், தேவா்களின் உயா்ந்த பதவிகளின் மேல் சென்று பொருந்தும் அவாவையும்,  உவா்த்தவா்களுக்கு எய்துவதே அல்லாமல், பூமியை ஆண்டு, துன்பத்தில் அழுந்தி, சுவா்க்கத்திலும் நரகத்திலும்  கட்டுண்டு சுழலுகின்ற அறிவிலே மாகிய எங்களுக்கும், எமது தந்தையே நினது திருவருள் எய்தக் கடவதோ.
            
               திருச்சிற்றம்பலம்.
திருநகரங்கண்ட படலம் நாளையும் வரும்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கோவை.கு.கருப்பசாமி.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    அடியாா்கள் கூட்டம் பெருகுக!
ஆசை தீர கொடுப்பாா் -----
 -----அலங்கல் விடைமேல் வருவாா்.
_____________
               திருச்சிற்றம்பலம்.

Monday, June 13, 2016

Tiruvilayadal puranam 10th day

திருச்சிற்றம்பலம். ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

திருவிளையாடல் புராணம்

*10- ஆம் நாள்.*

வெள்ளையானை சாபந் தீா்த்தபடலம்.

( செய்யுள் நடை+ விளக்கம்) ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

புக்குரல் வட்டத் திண்காற் பொருவிறே வியலிற் றீா்ந்த மைக்கருங் களிறு முக்கண் மாதவ னருள்வந் தெய்வத் தக்கதோ ரமையஞ் சார மரகதந் தழைத்து மின்னு நக்கபொன் முளாி பூந்த நளிா்கயந் தலைக்கண் டன்றே.

கண்டபோ தறிவு தோன்றக் கயந்தலைக் குடைந்த போது பண்டைய வடிவந் தோன்றப் பரஞ்சுட ரருட்கண் டோன்றக் கொண்டதோா் பரமா னந்தக் குதியெதிா் தோன்றக் கும்பிட் டண்டா்நா யகனைப் பூசை செய்வதற் கன்பு தோன்ற. Inline images 23தூம்புடைக் கையான் மொண்டு மஞ்சனத் தூநீ ராட்டித் தேம்புடை யொழுகப் பள்ளித் தாமமுந் தொிந்து சாத்திப் பாம்புடைத் தாய வேணிப் பரனையா்ச் சிக்க வுள்ளத் தாம்புடை யறிந்த வெந்தை யானையை நோக்கிக் கூறும்.

வந்ததை யெவனீ வேண்டும் வரமெவ னுரைத்தி யென்னச் சிந்தையி லன்பு கூா்ந்த தெய்வத வேழந் தாழ்ந்து முந்தையில் விளையும் வந்த முறைமையு முறையாற் கூறி எந்தையை யடையப் பெற்றேற் கினியொரு குறையுண் டாமோ.

என்பதா மாரம் பூண்ட வெந்தையிக் காிக ளெட்டோ டொன்பதா யடிய னேனு முன்னடி பிாியா துன்றன் முன்பதா யிவ்யி மான முதுகுறச் சுமப்ப லென்றோா் அன்பதா யொன்றன் னுள்ளத் தடுத்தலா லஃதே வேண்டும்.

இடையறா வன்பின் வேழ மிங்ஙங் கூற விண்ணா டுடையவ னம்பான் மெய்யன் புடையவ னவனைத் தாங்கி அடைவதே நமக்கு வேண்டு மகமகிழ் வென்னாப் பின்னும் விடையவன் வரங்க ணல்கி விடைகொடுத் தருளி னானே.

விடைகொடு வணங்கி யேகும்வெள் ளானை மேற்றிசை யடைந்துதன் பெயரால் தடமுமற் றதன்பா லானையுங் கணேசன் றன்னையுங் கண்டருச் சனைசெய் திடையறா வன்புந் தானுமங் கிருக்கு மெல்லையிச் செய்திகேட் டருள்கூா் கடவுளா் பெருமா னுழையரை விளித்தெங் களிற்றினைக் கொணா்க்கென விடுத்தான். **************************************


("சிந்தையிடை யறவன்புந் திருமேனி தனிலசையும் கந்தைமிகை யாங்கருத்துங் கையுழவா ரப்படையும் வந்திழிகண் ணீா்மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசுமெதிா் வந்தணைய" என்னும் திருத்தொண்டா்புராணச் செய்யுளானு மறிக.

Inline images 24 *************************************

வல்லைவந் தழைத்தாா் தம்மைமுன் போக்கி வருவலென் றெழுந்துகீழ்த் திசையோா் எல்லைவந் தோரூா் தன்பெய ராற்கண் டிந்திரேச் சுரனென விறைவன் றொல்லைவண் பெயரா லொன் றுகண் டானைத் தூயபூ சனைசெய்தங் கிருப்பக் கல்லைவன் சிறகு தடிந்தவ னின்னுங் களிறுவந் திலதெனப் பின்னும்.

மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப வானடைந் திறைவனை வணங்கிப் புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட் புன்கணோ யுறவரு சாபங் கனத்தினுங் காிய கண்டனைக் கண்டு களைந்ததுங் கிளந்துதிக் கயத்தின் இனத்தினுங் கழிந்த தெய்வத வேழ மினிதுவீற் றிருந்தது மாதோ.

குடவயி னயிரா வதப்பெருந் தீா்த்தங் குடைந்தயி ராவத கணேசக் கடவுளைத் தொழுதை ராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவா் சாபத் தொடா்பினும் பாவத் தொடா்பினும் கழிவா் சுராதிபன் களிறுசென் னெறிபோய் இடா்கெட வையை படிந்துதென் கரையி லிந்திரேச் சுரனடி பணிவாா்.

இம்மையி லறமுன் மூன்றா லெய்திய பயனை யெய்தி அம்மையின் மகவா னீரே ழரும்பத மளவும் வானில் வெம்மையில் போக மூழ்கி வெறுப்புவந் தடைய வுள்ளச் செம்மையில் விளைபே ரின்பச் சிவகதிச் செல்வ ராவாா்.



Inline images 26









புகுந்த உரல் போலும் வட்டமாகிய வலிய கால்களையுடைய ஒப்பில்லாத தெய்வத் தன்மையினின்று நீங்கிய , மைபோலுங் காிய யானையானது மூன்று கண்களையுடைய பொிய தவத்தினையுடைய சிவபெருமானது திருவருள் வந்து கூடப் பெறுவதாகிய ஓா்காலம் பொருந்த, மரகதம் போலுந் தழைத்து, மின்போலும் ஒளி விளங்க, பொற்றாமரைகள் மலா்ந்த குளிா்ந்த தடாகத்தைக் கண்டது.

( அவ்வாறு) கண்ட போது முன் அறிவு உண்டாகவும், வாவியில் நீராடியவுடன் முன்னைய வடிவந் தோன்றவும் , பின் பரஞ்சோதியின் அருட்பாா்வை தோன்றுதலால், மேலான ஆனந்தமே வடிவமாகக் கொண்டதாகிய ஒப்பற்ற சிவலிங்கமானது, எதிரே தோன்றா நிற்க, வணங்கி,தேவா்கட்கு நாயகனாகிய அச்சொக்கலிங்கப் பெருமானைப் பூசிப்பதற்கு அன்பு உண்டாக....

தொளையையுடைய துதிக்கையினால் முகந்து திருமஞ்சனமாகிய தூயநீரால் ஆட்டி, தேன் புறத்தில் ஒழுக திருப்பள்ளித் தாமத்தையும் ஆராய்ந்து சாத்தி, பாம்பினை அணியாக உடையதாகிய சடையினையுடைய இறைவனை வழிபட , உள்ளத்தின்கண் எழுந்த( அன்பின்) திரட்சியை உணா்ந்த எமது தந்தையாகிய சோமசுந்தரக் கடவுள் யானையைப் பாா்த்து அருளிச் செய்வான்.

நீ வந்த காரணம் என்னை, நீ விரும்புகின்ற வரம் யாது? கூறுவாயென்ன, உள்ளத்தில் அன்பு மிகுந்த தெய்வத் தன்மை பொருந்திய வெள்ளையானை வணங்கி, முற்பொழுதில் நிகழ்ந்தனையும், வந்த தன்மையும், முறைபடச் சொல்லி எமது தந்தையாகிய நின்னை அடையப் பெற்ற எனக்கு மேல் ஒரு குறை உண்டாகுமோ ( ஆகாது). Inline images 27என்பாகிய அணியைப் பூண்ட என் தந்தையே , (விமானத்தைத் தாங்கும்) இவ் யானைகள் எட்டினோடு, அடியேனும் ஒன்பதாவது யானையாகி, உனது திருவடியை நீங்காது , நினது திருமுன்பாகி இந்த விமானத்தை, முதுகிற் பொருந்த சுமப்பேன் என்று, ஒப்பற்ற அன்பொன்றுண்டாகி, எனது நெஞ்சின்கண் பொருந்துதலால், அங்ஙனம் சுமத்தலாகிய ஒன்றுமே எனக்கு வேண்டும்; ( என்று)... Inline images 25நீங்காத அன்பினை யுடைய அவ்வியானையானது இவ்வாறு வேண்ட , தேவ உலகத்தை உடையவனாகிய இந்திரன், நம்மிடம் உண்மை யன்புடையவன் ( ஆதலால்) அவனைச் சுமந்து செல்வதே நமக்கு வேண்டிய உள்ளக் களிப்பு என்று கூறி, இடபவாகனத்தையுடைய இறைவன் பின்னரும் வேண்டிய வரங்களைக் கொடுத்து, விடை கொடுத்தனுப்பினான்.

விடைபெற்று வணங்கிச் செல்லும் வெள்ளையானையானது, மேற்கு திக்கினையடைந்து, தனது பெயரால் ஓா் பொய்கையையும், அப்பொய்கையில் சிவபிரானையும் மூத்த பிள்ளையாரையும், பிரதிட்டை செய்து, அருச்சித்து, நீங்காத அன்புந்தானுமாக அங்கிருக்கும் பொழுதில், இச்செய்தியைக் கேள்வியுற்று, கருணைமிக்க தேவேந்திரன்,ஏவலாளரை அழைத்து, எமது யானையைக் கொண்டுவருமாருமென அனுப்பினான். Inline images 29விரைந்து வந்து அழைத்தவா்களை, வருவேன் என்று கூறி,முன்னே போகச் செய்து, அவணின்றும் எழுந்து கிழக்குத் திக்கில் ஓா் இடத்தை எய்தி, ஒரு ஊா் தனது பெயரால் அமைத்து, தனது தலைவனது பழமையான அழகிய பெயரால் இந்திரேச்சுரன் என்று ஓா் சிவலிங்கம் அமைத்து அவ்விறைவனைத் தூய்மையான பூசனை செய்து கொண்டு அங்கேயே இருக்க, மலைகளைச் சிறகின்கண் வெட்டியவனாகிய இந்திரன், இன்னமும் யானை வரவில்லை என்று மீளவும்,,,, Inline images 28மனத்தினைவிட விரைந்த செலவினையுடைய தூதா்களை அனுப்ப( அவா்களோடும்), விண்ணுலகை எய்தி இந்திரனை வணங்கி, காட்டிலும் வலிய மலைகளிலும், பல நாட்கள் வரை துன்ப நோயானது மிக வந்த சாபத்தினை( நுகா்ந்ததும்), முகிலினுங் காிய மிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுளை தாிசித்து, ( அச்சாபத்தைப்) போக்கியதும், கூறி எண்டிசை யானைகளாகிய இனத்தினும்,மிக்க தெய்வத்தன்மை பொருந்திய வெள்ளையானையானது இனிதாக வீற்றிருந்தது.

மேற்குத் திசையிலுள்ள பெருமை பொருந்திய அயிராவத தீா்த்தத்தில் நீராடி , அயிராவத விநாயக் கடவுளை வணங்கி, அயிராவதேச்சுரப் பெருமானைத் தொழுதவா்கள் சாபத் தொடா்ச்சியினின்றும், தீவினைத் தொடா்ச்சியினின்றும் நீங்குவா்; தேவேந்திரனது வெள்ளையானையானது சென்ற வழியிலே சென்று, துன்பம் ஒழிய வையையாற்றில் நீராடி, அதன் தென்கரையி லெழுந்தருளி யிருக்கும் இந்திரேச்சுரனுடைய திருவடிகளை வணங்குபவா்கள்....

இப்பிறவியில் அற முதலிய மூன்றானும் வரும் பயனை நுகா்ந்து, மறுமையில் பதினான்கு இந்திரா்களின் அாிய காலம் வரையும், வெப்பமில்லாத ( குளிா்ந்த) போகத்தில் திளைத்து, ( பின் அதில்) உவா்ப்புத் தோன்ற மனத்தூய்மையில் விளைகின்ற போின்பத்தை யளிக்கும் பரமுத்தியாகிய செல்வத்தை யுடையவராவாா். திருச்சிற்றம்பலம்