Showing posts with label Nayanaars. Show all posts
Showing posts with label Nayanaars. Show all posts

Monday, June 22, 2015

Pugazh thunai nayanar

courtesy: Smt.Uma Balasubramanian

புகழ்த் துணை நாயனார் - உமா பாலசுப்ரமணியன்

 

செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்;

அருவரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு

ஒருவர் தமை நிகர் இல்லார்உலகத்துப் பரந்து ஓங்கிப்

பொருவரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார்.

 

செருவில்லிபுத்தூர் என்பது ஒரு சிவஸ்தலம் . அங்கு சிவபெருமான் கோயிலில் முப்பொழுதும் திருமேனி தீண்டிப் பூசனையும் , விழாவும் சிறப்பாக நடைபெறும். சிவமறையோர் திருக்குலத்தில் உதித்த புகழ்த்துணையார் என்னும் சிவபக்தர்.  இறைவனுக்கு அன்பால் பூசித்தல் , வாயால் அருச்சனை செய்தல் , உடம்பால் வழிபாடு செய்தல் , போன்ற மனம் , வாக்கு , காயம் என்ற மூன்றாலும்  இறைவனை வழிபட்டால் அதற்கு நிகர் வேறு சிறந்த தவம் இல்லை  என்ற எண்ணம் கொண்டு தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.


ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.பல ஆண்டுகளாக  மழை பொழியாத காரணத்தால் , நீர் நிலைகள் வறண்டன. வயல்கள் காட்டாந்தரையாகி , ஆடுகளும் , மாடுகளும் தவித்தன. மக்களும் ஊர்விட்டு ஊர் சென்றார்கள். பசி வந்திடப் பத்தும்  பறந்து போம் என்ற சொல்லுக்கு இணங்க, உறவினர்கள் யாவரும் பிரிந்தனர்.


அதன் பின் செருவில்லிபுத்தூர் மயானமாகத் திகழ்ந்தது. கோவிலுக்குள் செல்பவர்கள் இல்லை . ஆனால் இன்னிலையிலும் புகழ்த்துணையார் மாத்திரம் ஊரைவிட்டுச் செல்லாமல் இருந்தார். அவருக்குத் தாம் வழிபடும் சிவபெருமானை விட்டுச் செல்ல மனம் இல்லை. எத்தனை துன்பம் வந்தாலும் சரி , இந்த உடலில் உயிருள்ளவரை எங்கேயிருந்தேனும் பூவும் , நீரும் கொண்டு வழி படுவேன் என்ற திண்ணமான குறிக்கோள் கொண்டிருந்தார்.


  எப்பொழுதுமே குடத்தில் நீர் கொண்டு வரும் அவர் ஒருநாள் அவ்வாறு செய்யும் பொழுது , அங்கங்கே உட்கார்ந்து கொண்டு வந்தார் . ஏனெனில் அவர் வெகு நாட்களாகச் சாப்பிடவில்லை , அதனால் போதுமான தெம்பும் இல்லை . இருந்தாலும் மெல்லச் சிவலிங்கத்தை அடைந்தார். கஷ்டப்பட்டு கையை மேலே உயர்த்தி  குடத்திலுள்ள புனலால் இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்தார். அவ்வாறு செய்யும் பொழுது  அவரால் குடத்தைத் தாங்கிப்   பிடிக்க முடியவில்லை.  தடாலென்று குடத்தைச்  சிவலிங்கத்தின் மேலே போட்டுவிட்டு அவரும் மூர்ச்சையானார்.

              

மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது

சால உறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக்

கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை

ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார்.

 

ஆனால் அவரது மயக்கத்தைத் தெளிவிக்க அங்கு யாரும் இல்லாத நிலை. அப்படி யாரேனும் அங்கு  இருந்திருந்தாலும் , இந்நிகழ்ச்சியைக் கேட்டு ஊரார் , " பைத்தியக்கார பிராம்மணர் . ஊரார் செய்வதுபோல் எங்கும் ஓடாமல் இந்தக் கல்லைக் கட்டிக்கொண்டு அழுகிறாரே!" என்றுதான் சொல்லியிருப்பார்கள்.


ஆனால் அப்போது அந்தப் பேரன்பரைத் தெளிவிக்க சிவபிரானின்  திருவருள் ஒன்றே முன் வந்தது. கீழே மயங்கிக் கிடந்த அவர் கனவில் சிவபெருமான் எழுந்தருளினார். ' அன்பா! உன் தவத்தை வெகுவாக  மெச்சினோம் ! உயிரை இழப்பதானாலும் நம்மைப் பிரியாமல் இருக்கும் உன் உறுதியைக் கண்டு மகிழ்ந்தோம் ! . இனி நீ கவலையுற வேண்டாம் . ஒவ்வொரு நாளும் காலையில் இந்தப் பீடத்தின் கீழே ஒரு பொற் காசைக் காண்பாய் . அதை எடுத்துச் செலவு செய்து உன் உடலைப் பேணிப் பின் நமக்கு வழிபாடு செய்துவருவாயாக ! " என்று  மலர்ந்தருளினார்.


மயக்கத்திலிருந்து எழுந்த அன்பர் கண்ணைத் துடைத்துக் கொண்டார். " என்ன காரியம் செய்தோம்! எம்பெருமான் திருமுடியின் மேல் குடத்தைப் போட்டுவிட்டோமே " என அங்கலாய்த்து வருந்தினார். பிறகு தாம் கண்ட கனவைப் பற்றிய நினைவு வந்தது. இறைவன் பீடத்தைப் பார்த்தார். இறைவன்   கூறியது போல் அங்கே பள பளவென்று ஒரு பொற்காசு மின்னியது, அதைக் கண்டு இறைவன் கருணையை நினைந்து அவர் நெஞ்சம் பாகாய் உருகியது. " என்னுடைய எம்பெருமான் என்னளவில் பஞ்சத்தைப் போக்கிவிட்டான். ஓடாமல் , உழைக்காமல் ஊதியம் அளித்துவிட்டான். தன்னைப் பூசனை செய்தால் கைமேல் பலன் உண்டு என்பதைக் காட்டிவிட்டான்" .  என்று அரற்றிக் கூத்தாடினார்.

 

அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே

இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்

மின் ஆர் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத்தொழில் செய்து

பொன்நாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார்.

 

      அந்தக் காசைக் கொண்டு , உணவுப் பொருள்களையும் , இறைவன் பூசைக்கு வேண்டிய பொருட்களையும் வாங்கினார். அவர், முன் இருந்ததைவிடப் பன் மடங்கு உடலும்  , உள்ளமும் வலிமை பெற்றார். " என் பசியைப் போக்கவேண்டும் என்ற கவலை என் ஐயனுக்கு இருக்கும் போது எனக்கு என்ன கவலை?" என்று பெருமிதம் கொண்டார்.


தன் தொண்டிலே சிறிதும் குறைவறாது மேன்மேலும் சிறப்பாகப்  பூசனை செய்து இறைவன் அருள் பெற்று, இறுதியில்  அவனடி சேர்ந்தார். 

 

பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திருப் பாதம்

வந்து அணையும் மனத் துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்திச்

சந்தம் அணியும் மணிப் புயத்துத் தனிவீரர் ஆம் தலைவர்

கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம்.

Thursday, May 7, 2015

9. Enadinatha Nayanar.

Courtesy:Sri.S.Ramaswamy

9. Enadinatha Nayanar.







Enadinatha Nayanar was a Shanar (toddy tapper). He was born in Eyinanur in Chola Kingdom. It was situated to the south-east of Kumbakonam on the bank of the river Arisol. It was very fertile and rich.

Enadinathar was an ardent devotee of Lord Siva. Like Maiporul Nayanar, however, he was devoted even to the external marks of Siva Bhakti. To Enadiar, the three white lines of Vibhuti or sacred ash on one's forehead were sufficient to evoke his own reverence.

It would not be out of place here to say a word about this mark on the forehead of devotees of Siva. Through this mark Lord Siva teaches silently that the spiritual aspirant should destroy the three types of impurities, viz., Anavam (I-ness), Karma (selfish activity), and Maya (illusion): the three desires or Eshanas, viz., desire for worldly goods, for son and for wife: the three Vasanas or subtle tendencies, viz., Lokavasana (worldliness), Dehavasana (attachment to the body) and Shastravasana (blind faith in the scriptures and polemics), and that he should transcend the three bodies (physical, astral and causal), and the three states, viz., waking, dreaming and deep sleep,—and eventually attain union with Lord. The Shastras assure us that the Bhasma or sacred ash is a divine healer. It cures all diseases, including the disease of birth and death, and bestows on the devotee who wears it, the highest wealth, viz., Moksha.

Such is the glory of the sacred ash: and, no wonder Enadiar worshipped whoever came to him with the ash on his forehead. Enadiar saw Lord Siva in him. He was ready to give even his own life at the feet of the devotee who wore the ash.

Enadinatha Nayanar was a very good swordsman. He was a tutor to the princes in fencing. He earned a good income from his profession. He spent all his income in the service of the Siva Bhaktas. He became very popular, too. This evoked the jealousy of another man belonging to the same profession, by name Atisuran. Contrary to his name (which means a great hero), he was not at all skilful and not strong either, because he was full of vices. Yet, he wanted to fight with Enadinathar and defeat him.

One day Atisuran marched towards Enadinathar's house, with all his relatives, fully armed: he hoped to defeat Enadinathar, with the help of his relatives. He stood in front of Enadinathar's house and challenged him to a fight—jackal coming to fight the lion. Enadinathar accepted the challenge and came forward to fight. Atisuran got frightened. He asked Enadinathar to come to the nearby grove to fight with him. The relatives of Atisuran were waiting in the grove. In the mean time, the friends of Enadinathar had also gathered around him. The two parties fell on each other, and in the terrible fight that ensued many lives were lost. Atisuran ran away from the grove. He wanted to kill Enadinathar, not in open fight (which was impossible), but by strategem.

The next day, he sent a message to Enadinathar: 'Let us fight again, but without any assistance this time: otherwise, many innocent people die on our account. Let us go to a lonely place, without anyone's knowledge and fight.' Enadinathar accepted it. The next morning, Enadinathar went away secretly and was awaiting Atisuran's arrival at the stipulated place. Atisuran, with the sacred ashes on his forehead (which was cleverly hidden by his shield) approached Enadinathar. Enadinathar pounced upon him, with a big roar. In a moment, Atisuran removed the shield, revealing the sacred ashes. Enadinathar quickly lowered his sword and thought: 'What a sin I was about to commit! He has become a Siva Bhakta now. I must not harm him. Let him achieve his object of killing me.' Endinathar wanted to throw the sword away, but kept it in his hand, else he would be compelling his opponent (a Siva Bhakta!) to incur the sin of killing an unarmed person. As he was mutely standing thus, Atisuran killed him.

Lord Siva was highly pleased with this self-sacrificing devotion that Enadinathar had for the ashes. He appeared before Enadinathar as he fell, and took him to His Abode.


Monday, April 20, 2015

12.Manakanchara Nayanar.

Courtesy: Sri.S.Ramaswamy

12. Manakanchara Nayanar.



Kancharur was a fertile place in the Chola kingdom. The people were all Siva Bhaktas. In this place there lived a staunch devotee of Lord Siva by name Manakancharanar. He was a Vellala by caste. He was a hereditary Senathipathi. People of the community had the highest regard for him. He was a contemporary of Sundaramurthi Nayanar. To him adoration of Siva Bhaktas was the highest form of worship of the Lord. He would read their minds from their look, and would serve them without their asking.

He had no children for a long time. He worshipped Siva with faith and devotion and obtained the boon of a daughter from Him. Nayanar celebrated the birth of this divine child, with a lot of charity. In due time, the girl attained the marriageable age. She was engaged to be married to Eyarkon Kalikamar who was also an earnest and sincere devotee of the Lord. The date of the wedding had been fixed and all arrangements made.



In the mean time, Lord Siva wanted to shower His supreme grace on the Nayanar. He took the form of a Maha-Vrathiar (man of great vow) who wears the sacred ash on his forehead, matted locks adorned with a garland of bones, and a sacred thread made of human hair on his chest. The Maha-Vrathiar appeared before Manakancharanar who received him with great delight. When the ascetic enquired about the cause of the festive appearance of the house, Nayanar explained that his daughter was to wed that clay. He asked the girl to bow to the ascetic and receive his blessings. The ascetic saw her flowing hair, and said: 'Oh noble soul, I am delighted to see her hair. This can be conveniently made into a Panchavati (the thread that adorns my chest).' At once, Nayanar took a knife and, without thinking for a moment, cut the hair on his daughter's head and handed it to the ascetic. In his extreme devotion to the Siva Yogi, he did not even consider the fact that he was disfiguring his only daughter, and that the bridegroom might refuse to accept her. The Lord in the form of the ascetic immediately disappeared. He gave Nayanar and his family Darshanam along with Mother Parvathy and blessed them.

Eyarkon Kalikamar, the bridegroom, and his party arrived there soon after, and came to know of all that had happened. He was sorry that he had not come earlier and had the Lord's Darshan. When he saw the disfigured bride and hesitated to accept her, Lord Siva, the Indweller, understood the cause, and restored the hair to her head. Nayanar and his family were very happy and proceeded with the wedding.



Thursday, April 2, 2015

15. Murthi Nayanar.

courtesy: Sri.S.Ramaswamy

15. Murthi Nayanar.




To adore Lord Siva with sandalwood paste, smearing it all over the Lingam is regarded as a great form of His worship. This kind of worship was done by Murthi Nayanar. He was born in Madura in Pandya kingdom. He was a Vaisya by caste. He was a great devotee of Lord Siva. Daily he used to offer sandalwood paste to the Lord.

At that time, the city was invaded by a Karnataka king. In the battle the Pandya king was defeated. The Karnataka ruler became the Pandya king. He was a follower of Jainism. He wanted to exterminate Saivism and to spread his religion. He began to persecute Saivas. 'Murthi Nayanar also had to bear a lot of sufferings. But, he was undaunted. He continued his worship of the Lord, with sandalwood.

The king, with a view to convert Murthi Nayanar forcibly to Jainism, made it impossible for anyone in Madura to obtain sandalwood. This greatly upset the Nayanar. He prayed to the Lord: 'Oh Ocean of Mercy, this country is ruled by a tyrant and he is bent upon exterminating Your devotees. When will we be fortunate enough to get a king who will be devoted to You?' He knew that the people would follow the king, out of fear and in an effort to win his favour. He, therefore, wanted a Saivite king!

He searched throughout the day for a little sandalwood to offer his worship. He could not get any. With a broken heart, he went to the temple: and he had a wonderful idea. He began to rub his own elbow (in the place of sandalwood!). The hand was bleeding profusely. Lord Siva was highly pleased with his devotion. A heavenly voice said: 'Oh noble soul, I am immensely pleased with your devotion. Kindly stop rubbing your elbow. All your grievances will be redressed. Kindly take up the reins of the kingdom. After ruling the country justly and wisely for a long time, you will come to My Abode.' Nayanar was amazed to hear this and to see that his elbow regained its original shape.





Murthi Nayanar did not aspire for kingship, but it was the Lord's will. That night the cruel king died. The next day, the Ministers sent the palace elephant to choose their king, in accordance with an ancient custom. The elephant proceeded towards the temple. Murthi Nayanar had come there for his worship. The elephant bowed to him and placed him on his back and returned to the palace.




The Ministers begged of Nayanar to become their king. Nayanar stipulated this condition: 'If I become king, I will not have any luxury bath, but will bathe only with the sacred ashes. My jewel will be only Rudraksham and my crown will only be matted locks. I shall strive to let the love of Lord Siva be enthroned in the hearts of all.' The Ministers accepted these conditions with great joy and satisfaction.

Nayanar ruled the country justly and wisely for a long time, and eventually attained Siva's Abode.


Monday, March 30, 2015

14. Anaya Nayanar

courtesy: Sri.s.Ramaswamy

14. Anaya Nayanar.



Tirumangalam was an important place of pilgrimage in Mazhanad (Trichnopoly District). The Lord Who dwells in this place is called Samavedesvarar. It was He Who purified Parasurama of the sin of killing his mother and also gave him the axe.

In that enchanting place, there was a cowherd by name Anayar. Because he was tending cows, he was known by that name. He was a staunch devotee of the Lord. He was devoted to the Bhasma, and also to Siva Bhaktas, irrespective of their caste. His devotion to the Lord took the form of playing on his flute the holy Panchakshara Mantra of Siva. He aspired to realise the Lord, through this Mantra.



One day when he was playing the Mantra on his celestial instrument, under a Konrai tree (a favourite of Lord Siva), the music captivated all the cows and calves. Even the birds sat on trees and silently heard the enrapturing music of the flute. The peacocks danced in joy, keeping time with the music. Hearing the music, other animals stood motionless. The music captivated the hearts of the deer, snakes, lions, elephants, tigers, etc. The snake and the peacock, the lion and the elephant, shed their enmity and lived together happily. The rivers stopped in their course. The waves in the sea calmed, to hear the music of Ayanar. Even the celestials (Vidyadharas, Kinnaras and Devas,) came in their celestial cars to hear the music.



The Lord was immensely pleased with Ayanar's sincere devotion. The sweetness of the music of the flute and the effect of the Panchakshara Mantra both melted His heart. He appeared before Nayanar, with Mother Parvathi, blessed him and took him to Kailas.


Sunday, March 29, 2015

Samaya Kuravargal

courtesy:Sri.S.Ramaswamy

Samaya Kuravargal.






Samaya[m] Kuravargal

[Samayam (path of realizing self and god), kuravargal - (Guru or Teacher)]: Before we start reading about 'Nayanmars', it becomes important to know about 'Samayakuravargal'. The contribution of these four saivaites are immorable and unmeasurable. They spread the 'Saivisam' and glories of the Lord all over India. They re-established the 'Saivisam' and the truth.

The four great saints of shaivism who took birth in the world showing us the path of elevating oneself to the Supreme shiva are the samayak kuravarkaL or nAlvar. They are:

  1. thirunyAna chambandhar
  2. thirunAvukkarachar
  3. chundharar
  4. mANikka vAchakar
The thamiz land that was excelling in the vaidhIka path and shaiva tradition in the ancient times underwent a dark period during 4,5,6th century ACE, with the invasions from the north that put the budhdhism and more specifically jainism on the royal throne. The art, architecture and lifestyle of the people that kept them as example of civilization diminished because of the self-punishing and colorless religions. The festivals and worship of God full of love that nourished in the minds of people became like fire covered with ash.
At this time by the Grace of God came the resurgence of the shaivism in the land of God given thamiz happened with the four pillars raising up the glorious light of shaivism. This was a golden period between 7th and 12th centuries. These four traveled through the length and breadth of thamiznAdu kindling the spiritual confidence that the God is not a difficult one and you all can live blissfully and also get supreme liberation, sing, hail, worship our Lord shiva's fame - the truth of the four holy vedhas ! By their tireless effort they brought back the light in the faces of the masses. For bringing about these changes they had to undergo many fatal threats given by the emperors of the land. They were undaunted and roared, "We are slaves only for the Supreme !" The Grace of God acting as the power behind them they won and also brought to their fold the kings who tried to liquidate them. The later two saints kept up the momentum created by the initial two and made the land a real glorious place. The songs of the four gurumAr are very vitalizing and nurture the minds to be a mature loveful and wise abode of the Supreme shiva.

The influence they created through their songs stay even now after a millenium and by the Grace of God should continue to inspire the minds of the generations to come. These beacons of shaivism are the guides the shaiva world looks up to and so they are called samayak kuravargaL .

Note: 
The order in which these four great saints are kept is on the account of the order in which they attained the abode of Lord shiva. It may be recalled that day of attaining the abode of Lord shiva is considered much glorious than the day of birth, for example the gurupUjai of the various nAyanmAr. Though sambandhar was born few decades later than appar, he attained mukthi earlier than appar in his young age. So he is first in the order.




Thursday, March 26, 2015

25.Appuddi Nayanar

Courtesy:Sri.S.Ramaswamy

25. Appuddi Nayanar.



In devotion to the Guru, Appudi Nayanar excelled. He was an ardent Siva Bhakta. He was leading the ideal householder's life. He belonged to a Brahmin family in Tingalur in the Chola kingdom.

Appudi had heard of the glories of Tirunavukkarasar or Appar. He had heard of how God's grace made the stone float and how Appar rode on it and floated on the sea and went to a place of safety. Even though he had not seen Appar, he had taken him as his Guru, and literally worshipped Appar. He knew that Lord Siva Himself, out of compassion for the spiritual aspirants, appeared as the Guru. He meditated on the lotus feet of the Guru. He had named all his children 'Tirunavukkarasu': and all the household articles had also been named after the Guru. He had erected a number of water-sheds, for the service of pilgrims, and had named all of them after the Guru. Thus had he ensured that he would constantly remember the Guru, and experience his grace.



Appar himself passed through Tingalur one day. He went into one of the water-sheds. He was surprised to see his own name everywhere. He found out from some other pilgrims that the shed had been erected by Appudi and went to meet him. Appudi received the Siva Bhakta (though he did not know who it was) with great devotion. Appar said: 'Oh noble soul, I have heard a lot about your greatness and glory. I wanted to pay my respects personally to you. Please tell me, why have you named the water-shed after somebody, and not yourself.' Appudi was upset at this casual reference to the blessed name of his Guru. He said: 'Oh friend, though you appear to be a Siva Bhakta, you do not seem to know Tirunavukkarasu Swamigal, who through the grace of the Lord withstood successfully all the persecutions of the Pallava king and re-established Saivism. Have you not heard how the king tied him to a stone and threw him into the sea, and how he floated back to the shore? Who are you?'



Appar was very much moved by Appudi's devotion and replied: 'I am that humble soul who fell a victim to severe colic and then took shelter under the Lord's Feet. I am that humble soul who, due to the grace of Lord Siva, got cured of that disease and returned to Saivism.' Look at the difference between the two descriptions! Appudi remembers the glory of Appar: whereas Appar chooses to recall his own failing (to preserve his humility) and the Lord's supreme saving grace.

Aum Namasivaya

As soon as he heard this, Appudi understood that the Siva Bhakta was none other than Appar and was overjoyed. He worshipped Appar, along with his wife and prayed to Appar to accept his Bhiksha (food). While their son had gone to the garden to bring a banana leaf, for Appar to use as his plate, the boy was bitten by a cobra. The son of a Nayanar: he was also a great devotee of the Lord! He ran to the mother eager to fulfil his duty. He handed the leaf to his mother and immediately fell down dead. Appudi did not want to let this disturb his worship of Appar Swamigal: and, therefore, hid the corpse. He invited Appar to have his meal. Appar sat down and blessed Appudi and his wife with Bhasma, and then called for their son. Appudi tactfully replied: 'He is not in a position to come.' Appar sensed that there was something wrong and asked Appudi to tell him the truth. Appudi informed him what had happened. Immediately Appar got up and asked Appudi to lay the corpse in front of the temple: and he himself sang a song. A miracle took place. The boy got up, as if from sleep. All were happy, except the parents of the boy. They regretted that this incident had caused some delay in Appar having his meals! Such is the nature of true devotion. Appar immediately took his meals and blessed the family.

Appar lived in Appudi Adigal's house for some time. Appudi gained the grace of the Lord, by his wonderful devotion to his Guru, Appar Swamigal.


Sunday, February 22, 2015

Pugazh chola nayanar

Courtesy:Smt.Uma Balasubramaniam
புகழ்ச் சோழ நாயனார்
                                          உமா பாலசுப்ரமணியன்
               
 
               கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி
              நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்
              மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர்
              உலகில் வளர் அணிக்குஎல்லாம் உள்ளு ஊறையூர் ஆம் உறையூர்.
      
 
       சோழநாட்டின் தலை நகரமான உறையூர் செல்வம் கொழிக்கும்   ஒரு திருநகரமாகும். அங்குள்ள கடை வீதிகளில் பல நாடுகளிலிருந்து தருவித்த பண்டங்கள் நிரம்பியிருக்கும் . யானைப் பந்திகளும் , குதிரைக் கொட்டடிகளும் பல ஆங்காங்கே இருந்தன. மேகத்தை  எட்டும் கோபுரங்களும் , கதிர் ஏறும் மலர்ச் சோலைகளும் தேர் ஏறும் மணி வீதிகளும் உடைய உறையூரின் புகழ் உலகம் எல்லாம் பரவி நின்றது. .
                அந்த நகரத்தில் சோழர்குலப் பெரு  மன்னராக   இருந்து அரசாண்டார் ' புகழ்ச் சோழர் ' என்பவர். அவர் தம் தோள் வலிமையினால் , பல பகைவர்களை அடக்கி அவர்களைத் திறையளிக்கப் பணித்து , மன்னர் மன்னராகச் செங்கோல் ஓச்சி வந்தார்.
       சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டவர்  அவர், ஆலயங்களிலெல்லாம் நன்றாகப் பூசை முதலியவைகள் நடை பெறுவதற்காக வேண்டியன அளித்துப் பாதுகாத்தார். சிவனடியார்கள் யாரையேனும் சந்தித்தால்  அவர்களுக்கு வேண்டியதை உடனே செய்து முடிப்பார்.  . புகழ்ச்சோழர் அடியவர்களுக்குத் தாம் கொடுப்பதை , குறியுடையோர் ஒருவரைப்போலப் பணிந்து நின்று அடியவர்களுக்குக் கொடுப்பார். தொண்டர்களிடம் அவருக்கு இருந்த பெரு மதிப்பும், அன்புமே அதற்குக் காரணமாகும் .
       அவர் கொங்கு நாட்டு அரசரும் ,மேற்குத் திசையில் உள்ள மற்ற நாட்டு அரசர்களும் தம்முடைய திறைகளைக் கொண்டு வந்து கொடுக்க வசதியாகக் கருவூர் என்னும் நகரத்துக்குச் சென்று தம் சுற்றத்தாருடன் தங்கினார். அத் திருத் தலத்திலுள்ள திருக்கோவிலுக்கு 'ஆனிலை ' என்று பெயர்.ஒரு முறை  அக்கோவிலுக்குச் சென்று வணங்கிய பின்னர் தம் திரு மாளிகைக்குச் சென்றார் .மேற் புறத்துள்ள அரசர்கள் ,   மன்னரைக் கண்டு  தம் திறைகளை அளித்துச் சென்றனர்.  
       அப்பொழுது புகழ்ச்சோழர்," இந்தப் பக்கத்திலுள்ள யாவரும் திறை கொண்டுவந்து கொடுத்து விட்டார்களா? யாரேனும் எஞ்சியிருந்தால் கூறுங்கள் " என்று தம் அமைச்சரிடம் சொன்னார்.
       அது கேட்ட அமைச்சர்கள் ,"ஒருவனையன்றி மற்றவர்கள் அளித்துவிட்டார்கள்" என்று பதிலுரைத்தனர்.
      
       " யார் அவன் ? " என்று சோழ மன்னன் கேட்டான்.
      
       "இங்கே அருகில் மலையரணத்துக்குள் இருக்கும் அதிகன் என்பவன் தான்  திறையை இன்னும் கொடுக்கவில்லை " என்றனர்.
 
               
 
 
                                'ஆங்கு அவன் யார் ?' என்று அருள 'அதிகன் அவன் அணித்தாக
              ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான்என உரைப்ப,
                                'ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோபடை எழுந்துஅ
              பாங்கு அரணம் துகள் ஆகப் பற்று அறுப்பீர்எனப் பகர்ந்தார்.
      
"" அப்படியா? அவன் எத்தகைய அரணத்தில் இருந்தால்தான் என்ன ?உங்களுக்கு அது எம்மாத்திரம் ? நீங்கள் படைகளுடன் சென்று அரணை அழித்து வாருங்கள் " என்று மன்னர் கட்டளையிட்டார்.
       அரசரின் ஆணைப்படியே பெரிய படை, அதிகனுடைய அரணை நோக்கிச் சென்றது.
அதிகமானுடைய படையும் , சோழர் படையும் ஒன்றை ஒன்று எதிர்த்து நின்றன. கடுமையான பெரும் போர் மூண்டது. சோழ மன்னனின் படைகளுக்கு முன்னால் அதிகமானுடைய படைகள் வலுவிழந்தன . போரில் அதிகனுடைய யானைகள் , குதிரைகள் யாவும் வெகுவாகக் குலைந்தன. போர் வீரர்கள் பலர் மாண்டனர். தன் படை சீர்குலைந்து போனதைக் கண்டு அதிகமான் கோட்டையை விட்டு எங்கோ ஓடிவிட்டான்.
       போர்க்களத்தில் பகைவர்கள் விட்டுச் சென்ற உயர்ந்த பொருட்களையும் , அந்த அரணில் இருந்த பொன் முதலியவைகளையும்  படை வீரர்கள் கைப்பற்றி, கருவூருக்கு எடுத்துச் சென்றனர். பல படைத்தலைவர்களின் தலைகளையும் , வீரர்களின் தலைகளையும் பார்த்து சோழ மன்னர் கண்டு களிக்கட்டும் என்று எண்ணி , தலைகளைக்  குவியலாகக் கருவூர் கொண்டு சேர்த்தனர்.
       புகழ்ச்சோழர், அதிகன் அரண் விட்டு ஓடியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அவர்கள் கொண்டு வந்த தலைக்  குவியலைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தலையைப் பார்த்து  அதிர்ந்து , " என்ன இது ? " என்று அச்சத்துடன் கேட்டார்.
       அவர் பார்த்த தலையில் ஒரு சிறிய சடை  தெரிந்தது. . அவர் நடுங்கி ,மனம் கலங்கிக் கை தொழுதார். அவர் மீண்டும் மீண்டும் பார்த்து,பின்  அதை அருகில்  கொண்டுவரச் செய்து , சடையைக் கண்டு கண்ணீர் சொரிந்தார்.
தன்னையே நொந்து கொண்டு ," நான் பெரிய படையைப் போக்கி உலகில் சைவ நெறியைப் பாதுகாத்து அரசாட்சி செய்யும் முறை மெத்த அழகாய் இருக்கிறது ! " என்று சொல்லிதன்னை இழித்துச் சொல்லி மீண்டும்  அயர்ந்தார். " இந்தத் தலையை உடையவர் ஒரு சிவன் அடியாராகத்தான் இருத்தல் வேண்டும் , இத்தகைய தலையைப் பார்த்தபின் நான் உலகை ஆள்வது தகுமா? பார் என்ன சொல்லும் ? என் ஆட்சியில் சிவனடியாரைக் கொலை செய்த பாவமன்றோ வந்து சேர்ந்துவிட்டது! " என்று புலம்பி அழுதார்.
 
", இனிமேல் அரசாட்சி செய்யும் தகுதியை நான் இழந்துவிட்டேன் . இனி இறைவனுடைய தொண்டு நெறியில் நின்று , ஒழுக்கம் தவறாது நாட்டைக் காக்க என் மகனுக்கு முடி சூட்டுங்கள்" என்று அமைச்சர்களை நோக்கிக் கூறினார்.
      
       இதை செவியுற்ற அமைச்சர்கள் கலங்கினர். . மேலே என்ன செய்வதென்று  தெரியாது விழித்தனர். சோழ மன்னரும் ," இனி நான் உலகில் உயிர் வாழ்வது முறையன்று , தீக்குளித்து என் உயிரை போக்கிக் கொள்வேன் அடியவர்களுக்குச் செய்யும் அபராதத்திற்கு இதுதான் சரியான தண்டனை " என்று கூறி தீ வளர்க்கச்  சொன்னார். திருநீற்றை உடல் முழுவதும் தரித்துக் கொண்டார் ,
             
 
 
              கண்ட சடைச் சிரத்தினை ஓர் கனகமணிக் கலத்து ஏந்திக்
              கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார்
              அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி,
              மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார்.
 
சடையுள்ள தலையை ஒரு பொன் தட்டில் வைத்து , தம் தலையில் தாங்கிக் கொண்டு அந்தத் தீயை வலம் வந்தார் .கூடவே சிவ பஞ்சாட்சர  மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டே அந்தத் தீப்பிழம்புக்குள் நுழைந்து விட்டார்.  
       தேவர்கள் பூமாரி சொரிந்தனர். அங்கிருந்தவர்கள் கண் மாரி பொழிந்தனர். சிவபெருமான் புகழ்ச் சோழரைத் தம்முடைய திருவடி நீழலில் இருக்கச் செய்து பேரின்பப் பெருவாழ்வை  அருளினான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ! .
       இந்தப் புகழ்ச் சோழர்தான் , எறிபத்த நாயனார் , தம் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்திய போது ," இந்த அபராதத்துக்கு இது போதாதென்றால் என் தலையையும் கொய்தருள வேண்டும் " என்று கூறித் தம் வாளை உருவி நீட்டியவர் ஆவார்.
 
              முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்
              பிரசம் கொள்நறும் தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப்
              பரசும் குற் றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி
              நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம்