knramesh
Place of good things . . . If an egg is broken by an outside force, a life ends. If it breaks from within, a life begins. Great things always begin from within.
Saturday, July 19, 2025
Bahalamukhi temple
மத்தியப் பிரதேசத்தில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன. பொதுவாகவே மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர தந்திர சக்திகள் அடங்கிய பல ஆலயங்களை அவர் நிறுவியதாக ஒரு கருத்து உண்டு. ஏன் எனில் அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று பூஜைகள் செய்து தனது சக்தியை அதிகரித்துக் கொள்வது அவருடைய வழக்கமாம். அவற்றில் ஒன்றுதான் பகளாமுகி தேவி ஆலயம் ஆகும். அந்த ஆலயம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி நகரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள நல்கேடா என்ற சிற்றூரில் அமைந்து உள்ளது.
தாந்த்ரீக அடிப்படைக் கொண்ட மகாவித்யா எனும் தச வித்தியா சாதனாவில் பத்து தேவிகள் உள்ளனர். அந்த பத்து தேவிகளும் பார்வதி தேவியின் பல்வேறு தாந்த்ரீக பெண் ஸ்வரூபங்களே ஆகும். நர்மதாவின் கிளை நதியான லகுந்தார் என்ற நதியின் கரையைத் தொட்டபடி உள்ள இந்த ஆலயமும் சக்தி பீடங்களில் ஒன்றே எனக் கூறுகின்றார்கள். ஒரு அதிசய செய்தி என்னவென்றால் உலகிலேயே ஓரிரு பைரவர் ஆலயத்தைத் தவிர அனைத்து தாந்த்ரீக மற்றும் மாந்த்ரீக சக்திகளைத் தரும் ஆலயங்கள் அனைத்துமே பெண் தெய்வங்களை மூலமாகக் கொண்ட ஆலயமாகவே உள்ளது. அதில் முக்கியமானது பகளாமுகி தேவி ஆலயமும் ஒன்றாகும். பகளாமுகி என்றால் கொக்கு முகத்தவள் என்று பொருள்படும். இந்த ஆலயத்தின் பெரும் மகிமை என்ன என்றால் ஆலயத்தின் மிக அருகிலேயே நான்கு பக்கங்களிலும் மயானங்கள் உள்ளன. நான்கு பக்கங்களிலும் மயானங்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலையில் எந்த ஒரு ஆலயமும் எந்த ஒரு இடத்திலும் அமைந்திருக்கவில்லை. மயானங்களின் வான்வெளியில் தெய்வீக மற்றும் பிற ஆத்மாக்கள் உலவிக் கொண்டு இருக்கும் என்பது நியதியின் உண்மை. அங்குள்ள அந்த ஆத்மாக்கள் அனைத்தும் இந்த தேவியின் கட்டுப்பாட்டில் உள்ளனவாம். ஒரு வேளை அதனால்தான் என்னவோ இந்த ஆலயம் தந்திர மந்திர சக்திகளை மிக அதிக அளவில் அடக்கி வைத்து உள்ளது என்று கருத வேண்டி உள்ளது.
பகளாமுகி தேவி ஆலயத்தைப் பற்றி சிறு வரலாறு அங்குள்ள ஒரு கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது. மற்றபடி ஆலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்ற விவரம் இல்லை. அனைத்து செய்திகளுமே அங்குள்ள பண்டிதர்கள் மற்றும் கிராமத்தினர் தரும் வாய்மொழிச் செய்திகளே. இந்த ஆலயத்தின் புராணக் கதையும் மகத்துவமும் அந்த கிராமத்தினரிடையே வம்சாவளியாக பரவி வந்துள்ளன. ஆமாம் பகளாமுகி தேவி எப்படி தோன்றினாள்?
பகளாமுகி தேவி தோன்றிய வரலாறு குறித்து இங்குள்ள கிராம மக்கள் மற்றும் பண்டிதர்களினால் கூறப்படும் கிராமியக் கதை இது. உலகம் படைக்கப்பட்டப் பின்னர் சத்யுகத்தில் ஒரு முறை பெரும் கடல் சீற்றத்துடன் கூடிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச் சென்று விட்டது. அதன் கோர தாண்டவத்தைத் தன்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என மனம் பதறிய காக்கும் கடவுளாக படைக்கப்பட்ட விஷ்ணு பகவான், சௌராஷ்டிராவில் இருந்த ஒரு தனிமையான இடத்தில் சென்று இந்த பிரபஞ்சம் அழிவில் இருந்து காக்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டு தவத்தில் அமர்ந்து கொண்டார். கடுமையான தவத்தின் விளைவாக அவருடைய நாபியில் இருந்து வெளிவந்த ஜோதியும் ஆகாயத்தில் இருந்த நட்சத்திரங்களின் ஒளியும் ஒன்று சேர அந்த ஒளி வெள்ளத்தில் மஞ்சள் நிற ஆடை உடுத்திய ஒரு பெண் உருவில் தோன்றினாள் பகளாமுகி தேவி. இப்படியாகத் தோன்றிய பகுளாமுகி தேவி உடனடியாக விஷ்ணுவிடம் சென்று இந்த உலகை அழிவில் இருந்து காப்பற்ற பார்வதி தேவி தன்னை தோற்றுவித்து அனுப்பி இருக்கின்றாள் என்றும் ஆகவே கவலைப்பட வேண்டாம் என்று கூறி விட்டு இயற்கையின் சீற்றங்களை நொடிப் பொழுதில் அடக்கி, அவற்றை தன்னுள் கிரகித்துக் கொண்டு விட்டாள். தவத்தை முடித்துக் கொண்ட விஷ்ணு பகவானுக்கு தெய்வீகத்தையும் ஆன்மீக சிந்தனைகளையும் அழித்துக் கொண்டு உலகில் கேடு விளைவித்துக் கொண்டு இருந்த தீய சக்திகளை அடக்க பார்வதி தேவியானவள் பகளாமுகி தேவியை தன்னுள் இருந்து படைத்து அனுப்பி இருக்கின்றாள் என்ற உண்மை புரிந்தது. இப்படியான நிலையில் அவதரித்தவளே பகளாமுகி தேவி ஆவாள்.
இந்த ஆலயம் நல்கேடாவில் எழுந்த புராணக் கதையும் கிராமத்தினரால் கூறப்படுகின்றது. புராணச் செய்திகளின் அடிப்படையில் மகாபாரதப் காலத்தில் பாண்டவர்கள் தாம் இழந்த நாட்டை பிடிக்க நடைபெறும் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களிலும் இருந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக மந்திர ஆலயங்களில் வழிபாடு செய்து வந்தார்கள். அதனால் கிருஷ்ண பகவானின் ஆலோசனைப்படி தர்மர் தமது சகோதரர்களுடன் பகுளாமுகி தேவியை இந்த இடத்தில் வந்து வழிபட்டார் எனக் கூறுகின்றனர். பாண்டவர்கள் இங்கு வந்தபோது எந்த ஒரு ஆலயமும் காணப்படவில்லை. ஆனால் ஸ்வயம்புவாக தோன்றி இருந்த பகளாமுகி தேவியின் சிலை தற்போது காணப்படும் அதே சிலையாக ஒரு மரத்தடியில் இருந்தது. உலகில் தீய சக்திகளை அடக்கி தர்மத்தை நிலைநாட்ட வந்ததாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தனக்கு சௌராஷ்ரத்தில் காட்சி கொடுத்த பகளாமுகி தேவி அங்கு வந்து பூமிக்குள் தங்கி இருக்கின்றாள் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமான கிருஷ்ணருக்கும் தெரியும் என்பதினால் கிருஷ்ணர் உருவில் இருந்த மகாவிஷ்ணு பாண்டவ சகோதரர்களை இந்த இடத்துக்கு வந்து யுத்தத்தில் வெற்றி கிடைக்க பகளாமுகி தேவியை வழிபடுமாறு கூறி இருந்தார். அதனால்தான் மகாபாரத யுத்தத்தின் முன்பாக பாண்டவர்கள் இங்கு வந்து பகளாமுகி தேவியை வேண்டி வணங்கி, அவளிடம் இருந்து அதீத சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு அருள் தந்து சக்தி கொடுத்த இந்த தேவிக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கிருஷ்ண பகவான் கூறியதினால் பாண்டவ சகோதரர்கள் இந்த பகளாமுகி தேவியை இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய வழிபாட்டுத் தலம் அமைத்ததான கதை உள்ளது. இப்படியாக பாண்டவ சகோதரர்கள் அமைத்த தற்காலிகமான சிறிய வழிபாட்டுத் தலம் கால ஓட்டத்தில் பல்வேறு நிலைகளில் உருமாறி இன்றைய காட்ச்சியில் உள்ள ஆலயமாக எழுந்தாலும், அதில் உள்ள பகளாமுகி தேவியின் சிலை எந்த மாற்றத்தையோ அல்லது சேதத்தையோ அடையவில்லை என்பது இந்த ஆலயத்தின் மகிமையாகும் என்று பண்டிதர்களும் கிராம மக்களும் கிராமக் கதையாகக் கூறி வருகிறார்கள். மகாபாரத யுத்தம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது என்பதினால் இங்குள்ள பகுளாமுகி தேவியும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டவள் என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். தற்போது இங்குள்ள ஆலய பண்டிதர் இந்த ஆலயத்தில் பூஜைகளை செய்து வரும் பண்டிதர் குடும்பத்தின் பத்தாவது பரம்பரையை சேர்ந்தவர். அவர் பரம்பரையை சேர்ந்தவர்களே இந்த ஆலய நிர்வாகத்தை மேற்பார்வை இட்டும், பூஜைகளை செய்தும் வருகின்றார்களாம். அவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு பூஜைகளை செய்வதில்லை. பல இடங்களில் இருந்து சாதுக்களும் சன்யாசிகளும் இங்கு வந்து சித்த சாதனாக்களை செய்து சித்த சக்தி பெறுகிறார்களாம். அப்படி வழிபாடு செய்யும்போது அவர்கள் பகளாமுகி தேவியை மகிழ்விக்க அவளுக்கு பிடித்தமான மஞ்சள் நிற ஆடையையே அணிகிறார்களாம்.
பகளாமுகி தேவியின் தோற்ற அமைப்பையும், உருவத்தையும் குறித்த செய்தி சில புராணங்களில் காண முடிகின்றது. ஆலயத்தில் காணப்படும் பகளாமுகி தேவிக்கு மூன்று கண்கள் உள்ளன. மந்திர தந்திர சக்திகளின் தெய்வமான அவள் மேனி பொன்னிரமானது. அவளுக்கு பிடித்த வண்ணம் மஞ்சள் நிறம். கடல் நடுவில் மஞ்சள் நிற சம்பகா பூக்கள் நுரைப் போல மிதந்து கொண்டு இருக்க அதன் நடுவே தனது தலையில் உள்ள கிரீடத்தில் சந்திரனை பிறை வடிவில் வைத்துக் கொண்டு தங்க ஆசனத்தில் அமர்ந்து இருக்கின்றாள் என்றும், பகளாமுகி தேவி ஒரு அரக்கனின் நாக்கை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தவாறு காட்சி தருகிறாள் எனவும் அவளுடைய ரூபத்தை வர்ணிக்கின்றனர்.
இங்குள்ள ஆலயத்தில் உள்ள பகளாமுகி தேவி மூன்று கண்களை மட்டும் அல்ல மூன்று முகங்களையும் கொண்ட பகுளாமுகி தேவியாக காட்சி தருகின்றாள். பகளாமுகி தேவியின் சிலை பூமியில் இருந்து தானாக வெளி வந்தது எனவும் கூறப்படுகின்றது. பகளாமுகி தேவி மூன்று தேவிகள் உள்ளடங்கிய தெய்வம், அதாவது பகளாமுகி தேவி, தேவி மகாலஷ்மி மற்றும் தேவி சாமுண்டா என்றும் அப்படிப்பட்ட தேவியை தன்னுள் இருந்து பார்வதி தேவியே படைத்து அனுப்பி உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால் வேறு சிலரோ உலகில் சத்யுகத்தில் விளங்கிய தீமைகளை அழிக்க பகளாமுகி தேவிக்கு பரமசிவனின் மூன்று கண்களின் அபார சக்தியை தந்து அனுப்பியதாகவும் அதை வெளிப்படுத்தும் விதமாகவ பகளாமுகி தேவிே மூன்று கண்கள் மற்றும் மூன்று முகங்களைக் கொண்டு அங்கு காட்சி தருகின்றாள் என்றும் பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
பகளாமுகி தேவியின் பிராகாரத்தைச் சுற்றி பதினாறு தூண்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அந்த தூண்கள் அனைத்தும் மந்திர தந்திர சக்திகளை உள்ளடக்கியவை. அந்த சக்திகள் பகளாமுகி தேவியின் சக்திகள் என்றும் அந்த சக்திகள் தினமும் தொடர்ந்து அந்த தூண்களில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டு அந்த கருவறையை சக்திகள் அடங்கிய அறையாக வைத்துள்ளதாகவும் அந்த சக்திகளையே அங்கு வந்து சாதனாக்களை செய்யும் சாதனாத்விகள் அங்குள்ள பகளாமுகி தேவியின் அருள் கிடைத்ததும் தம்முள் கிரகித்துக் கொள்வதாகவும் நம்பிக்கை உள்ளது. ஆகவேதான் அங்கு வந்து பகளாமுகி தேவியை வழிபட்டுவிட்டு செல்லும் பக்தர்களின் உடலில் அந்த சக்தி புகுந்து கொண்டு விடுவதினால் அவர்களை எந்த தீய சக்தியாலும் எந்த தீமைகளையும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்.
ஆனால் தீய எண்ணங்களை மனதில் ஏந்திக் கொண்டு அந்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக அங்கு வந்து சாதனாக்களை செய்பவர்களுடைய எண்ணம் நிறைவேற பகுளாமுகி தேவி அருள் புரிவது இல்லை. அவர்களுக்கு தந்திர சக்திகள் கிடைப்பது இல்லையாம்.
இங்குள்ள ஆலயத்தில் காணப்படும் பகளாமுகி தேவியின் சிலை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆராய்சியாளர்களும், வரலாற்று வல்லுனர்களும் கூறினாலும், அது உண்மை அல்ல மகாபாரத யுத்தம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது என்பதினால் பாண்டவர்கள் வந்து வழிபட்ட பகளாமுகி தேவி சிலையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
பகளாமுகி தேவியின் மந்திரத்தை உச்சாடனம் செய்து வந்தால் எதிரிகள் அழிவார்கள். இந்த தேவிக்கு வாக்கு வன்மையை அடக்கும் சக்தி உள்ளது என்பதினால் அலுவக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் மற்றும் தேர்வுகளில் வெற்றி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு பலவிதமான பிரிவினர் பகளாமுகி தேவி மந்திரத்தை உச்சாடனம் செய்து துதிக்கின்றார்கள். மேலும் தனது பக்தர்களிடம் அவர்களது விரோதிகள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள் அகலவும், பக்தர்களின் ஏமாற்றங்கள் அவர்களை பாதிக்காமல் இருக்கவும் பகளாமுகி தேவி வகை செய்கின்றாள். இதன் காரணம் இந்த பகளாமுகி தேவியே மஹா வித்யாவில் காணப்படும் எட்டாவது தாந்த்ரீக தேவியாகும் என்பதே.
ஒரு அசுரனின் நாக்கை பிடித்து இழுப்பது போல காணப்படும் பகளாமுகி தேவியின் பின்னணி கதை என்ன?
முன்னர் ஒரு காலத்தில் மதன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பல தவங்களை செய்து அளவற்ற சக்திகளை, முக்கியமாக வாக்கு சித்தியை பெற்று இருந்தான். அதைக் கொண்டு அவனால் அவன் இருந்த இடத்தில் இருந்தே சித்தி, பூஜை மந்திர ஒலி போன்ற எவற்றையும் எந்த இடத்திலும் தடுத்து நிறுத்த முடியும் எனும் வாக்சித்தி வரமாகும். ஆனால் அந்த வரத்தின் பின்னே அவனுக்கே தெரியாத இன்னொரு துணை விதியும் இருந்தது. அதன்படி அவனால் பேச முடியாதபடி அவனது நாக்கு வன்மை சில நொடிகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் அவன் அந்த சக்தியை இழந்து விடுவான் என்பதே துணை விதியாகும்.
அவனுடைய மனம் போன போக்கில் எங்கெல்லாம் பூஜைகளும் யாகங்களும் செய்யப்பட்டனவோ அங்கெல்லாம் ஓதப்பட்ட மந்திரங்களை உச்சரிக்க விடாமல் தடுத்தான். அதனால் அனைவருடைய சித்திகளும், பூஜை மந்திர ஒலிகளும் நின்றன. எவர் எதை ஒதினாலும் அவன் அவற்றை தன் வாக்கு வலிமையினால் தடுத்தான். தேவர்களை மட்டும் அல்லாமல் பூமியில் இருந்தவர்களையும் கொடுமைபடுத்தினான். ஆகவே அவனது தொல்லையை சகிக்க முடியாமல் போன தேவர்கள் தம்மை அவனது கொடுமையில் இருந்து காப்பாற்றுமாறு பகளாமுகி தேவியை வேண்டிக் கொள்ள அதனால் கோபமுற்ற பகுளாமுகி தேவி அந்த அசுரன் மீது படையெடுத்து வந்து அவனுடன் சண்டையிட்டு அவன் நாக்கைப் பிடுங்கி எறிந்து அவனுடைய வாக்கு சக்தியை அழித்தாள். நாக்கு இருந்தால்தானே எதையும் உச்சரிக்க முடியும். அதனால்தான் அவன் நாக்கைப் பிடுங்கி எறிந்து அவனை பேச இயலாதவனாக்கி அவன் சக்தியை அழித்தாளாம். அவனைக் கொல்லும் முன் அவன் அவளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான். தன்னுடைய நாக்கை பிடுங்கி எறியும் அதே காட்சியில் பக்தர்கள் அவளை ஆராதிக்க வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள். அதை பகளாமுகி தேவி ஏற்றுக் கொண்டதினால் அதே கோலத்தில் ஆலயங்களில் காட்சி தந்து அவள் வணங்கப்படுகின்றாள்.
ஒரு தீயவனின் வேண்டுகோளை அந்த பகளாமுகி தேவி ஏன் ஏற்றுக் கொண்டால் என்பதற்கும் ஒரு பின்னணிக் கதை உண்டு. அசுரன் மதன் கொல்லப்பட்டதற்கு பல காலத்துக்கு முன்னர் அவனும் ஒரு தேவ கணமாகவே இருந்திருந்தான். தேவ லோகத்தில் இருந்தவாறு பார்வதி தேவிக்கு உத்தமமான முறையில் பணிவிடைகளை செய்து வந்ததினால் அவனுக்கு தேவலோகத்தில் பெரும் மரியாதை இருந்தது. ஆனால் ஒருநாள் அவன் பார்வதி தேவி தியானத்தில் இருந்தபோது அதை அறியாமல் உரத்த குரலில் பூஜை மந்திரத்தை உச்சரிக்கத் துவங்க பார்வதி தேவியின் தியானம் கலைந்தது. அதனால் கோபமுற்று கண் விழித்த பார்வதி தேவியும் அந்த தேவ கணத்தை அது ஒரு அசுரனாகப் பிறந்து அதே வாக்கு வலிமையினாலேயே அவமானப்பட்டு அழிவை எய்துவான் என சாபமிட்டுவிட அந்த தேவகணமும் அவள் கால்களில் விழுந்து அறியாமல் தான் செய்துவிட்ட பிழையை மன்னிக்குமாறு வேண்டிக் கொள்ள பார்வதி தேவியும் கொடுத்த சாபத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்பதினால் கருணைக் கொண்டு தனது சாபத்தின் தன்மையை மாற்றி அமைத்தாள். அதன்படி அவனுக்கு வாக்கு வலிமையினால் ஏற்படும் மரணம் தனது சக்தி கணத்தினால்தான் நடைபெறும், அதன் பின் அவன் மீண்டும் தன்னுடன் இணைந்து விடுவான் என்றாள். அதனால்தான் பார்வதியின் அவதார ரூபமான பகளாமுகி தேவியே அவனது அடுத்த பிறவியான அசுரன் மதனுடைய நாக்கைப் பிடுங்கி எறிந்து அவன் வாக்கு வலிமையை அழித்துக் கொன்றாள். அவனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவன் நாக்கை பிடுங்கி எறிந்த கோலத்திலேயே பகளாமுகி தேவி தனக்கு தரப்படும் பூஜைகளையும் ஆலயங்களில் ஏற்றுக் கொள்ளத் துவங்கினாள்.
ஸ்ரீ பகளாமுகி தேவியின் மாலா மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர ஆயுள் கூடும், அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது. எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.
ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்:
-----------------------------------------------------
ஓம் நமோ பகவதி|
ஓம் நமோ வீரப்ரதாப விஜய பகவதி பகளாமுகி|
மம சர்வ நிந்தகானாம் சர்வ
துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய|
ஜிஹ்வாம் முத்ரய முத்ரய|
புத்திம் விநாசய விநாசய|
அபாரபுத்திம் குரு குரு||
ஆத்ம விரோதினாம் சத்ரூனாம் சிரோ லலாடம்
முகம் நேத்ர கர்ண நாசிகோரு பாத அன்னு அன்னு|
தந்தோஷ்டஹ ஜிஹ்வாம் தாலு
குஹ்ய குதா கட்டி ஜானு சர்வாங்கேஷு
கேசாதி பாதானாம் பாதாதி கேச பர்யந்தம் ஸ்தம்பய ஸ்தம்பய|
கேம் கீம் மாரய மாரய|
பரமந்திர பரயந்திர பரதந்த்ராணி ச்சேதய ச்சேதய|
ஆத்ம மந்தர தந்த்ராணி ரக்ஷ ரக்ஷ|
க்ரஹம் நிவாரய நிவாரய|
வ்யாதிம் விநாசய விநாசய|
துக்கம் ஹர ஹர|
தாரித்ர்யம் நிவாரய நிவாரய|
சர்வ மந்த்ரஸ்வரூபிணி துஷ்ட க்ரஹ பூத க்ரஹ
பாஷான் சர்வ சாண்டாள க்ரஹ யக்ஷ கின்னர கிம்புருஷ க்ரஹ
பூத பிரேத பிசாசானாம் சாகினி டாகினி க்ரஹானாம்|
பூர்வ திஷம் பந்தய பந்தய வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ|
தக்ஷிண திஷம் பந்தய பந்தய ஸ்வப்ன வார்த்தாளி
மாம் ரக்ஷ ரக்ஷ|
பச்சிம திஷம் பந்தய பந்தய உக்ரகாளி மாம் ரக்ஷ ரக்ஷ|
பாதாள திஷம் பந்தய பந்தய பகளா பரமேஸ்வரி
மாம் ரக்ஷ ரக்ஷ|
சகல ரோகான் விநாசய விநாசய|
சத்ரு பலாயணம் பஞ்சயோஜன்மாதயே
ராஜஜன ஸ்வபக்ஷம் குரு குரு|
சத்ரூன் டஹ டஹ பச பச ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய
மோஹய ஆகர்ஷய ஆகர்ஷய|
மம சத்ரூன்
உச்சாடய உச்சாடய ஹ்லீம் பட் ஸ்வாஹா||
பகளாமுகி காயத்ரி
-----------------------------------
ஓம் பகளாமுக்யை ச வித்மஹே
சதம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
மஹாஸ்தம்பிணி தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
பகளாமுகி ச தீமஹி
தன்னோ அஸ்த்ர: ப்ரசோதயாத்
பகளாமுகி மூல மந்திரம்
--------------------------------------------
ஓம் ஹ்ரீம் பகளாமுகீ சர்வ துஷ்டானாம் வாசம் முகம் ஸ்தம்பய, ஜிஹ்வாம் கீலய கீலய புத்திம் நாசய நாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹ ||
Friday, July 18, 2025
Few sanskrit words with tamil meanings
ஸமஸ்க்ருத வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்கள்
74-ஸமஸ்க்ருத-வார்த்தைகளுக்கான-தமிழ்-அர்த்தங்கள்!
___________________
ஸமஸ்க்ருத வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்கள்!
அக்நி ஹோத்ரம் ப்ராமஹணர்கள் செய்யும் ஒரு கர்மா
அகமர்ஷணம் ஓர் ஜபம்
அர்க்யம் ஜலத்தைக் கையால் எடுத்து மந்திரத்துடன் விடுவது
அதிக்ராந்தம் காலம் கடந்ததற்கு மேல்
அத்யயனம் வேதத்தை ஜபிப்பது, கற்பது, ஒழுகுவது
அதோச்சிஷ்டம் இறக்கும் துருவாயில் ஜல மலம் கழித்தல்
அநுபநீத: உபநயனம் ஆகாதவன்
அநுகல்பம் மத்யமாக
அநுகூலா கணவனுக்கு அனுசரணையாக இருப்பவள்
அநுமாஸிகம் யோக்யதை பெறுவதற்காக சங்க்ரஹமாக செய்யப்பட்ட மாஸிகங்களை மீண்டும் முறைப்படி செய்வது.
அநூடா விவாஹமாஹாத பெண்
ஆத்யம் (மாஸிகம்) இறந்தவர்களுக்கு 11ம் நாள் செய்யப்படும் முதல் ச்ராத்தம்
ஆத்யந்தம் ஆரம்பம் முதல் முடிவு வரை
ஆதித்யாபிமுகம் ஸூர்யனைப்பார்த்தபடி
ஆதாநம் சேர்ப்பது, அக்நி கார்யம் ஆரம்பிப்பது
ஆப்தீகம் முதல் வருஷமுடிவில் செய்யப்படும் ச்ராத்தம்
ஆநந்த ஹோமம் இறந்த பத்தாவது தினத்தில் செய்யப்படும் ஒரு ஹோமம்
ஆமம் அரிசி
ஆலயம் கோயில்
ஆவாஹநம் தேவதைகளை வரவழைத்தல்
ஆவ்ருதாத்யம் இறந்த 11வது நாளில் செய்யப்படும் ச்ராத்தம்
ஆச்ரம ஸ்வீகார: ஸந்யாஸம் செய்துகொள்வது
ஆசௌசம் பிறப்பு, இறப்பு தீட்டுக்கள்
ஆஸ{ரத்துவம் அசுரர்களை அடைதல்
ஆஸந்தி பாடை
ஆஹூதி அக்நியில் மந்திரத்துடன் நெய் அல்லது வஸ்துக்களை சேர்த்தல்.
இத்மம் (20 அல்லது 17) சமித்துகளை கொண்ட ஒரு கட்டு
உபநயனம் பூநூல் போடும் வைதீக கர்மா
உபநீத: உபநயனம் ஆனவன்
உபவீதம் இடது தோளின் மேல் பூநூல் இருப்பது
உபவாஸம் பட்டினிகிடந்து விரதமிருப்பது
உபாகர்மா ஆவணிஅவிட்டம் எனும் பூநூல்போடும் கர்மா
உபநயனம் புணு}ல் போடுதல்
உபாஸநம் தெய்வத்தை தொழுதல்
உல்லேகனம் கோடுகிழித்தல் (அக்நி சேர்க்கும் முன்)
உஷத்காலம் விடியற்காலம்
அந்வஷ்டகா ச்ராத்தம் பண்ணவேண்டிய ஒரு புண்ய காலம்
அபர விஷயம் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள் விபரம்
அபஸவ்யம் அப்ரதக்ஷணம் அல்லது இடதுபுறமாக
அபராஹ்ணம் 18க்கு மேல் 24 நாழிகைக்குள் ( மதியம் சுமார் 1 க்கு மேல்; 4 மணிக்குள்)
அங்கவைகல்யம் நெருப்பினால் எரிபடாத தேஹப்பகுதி
அந்தரிதம் ஒன்றில் அடங்கியது
அந்தஸ்சவம் க்ராமத்திற்குள் இருக்கும் பிணம்
அந்நாபிகாரம் அன்னத்தின்மேல் சுத்தத்திற்காக நெய் விடுவது
ஆகர்ஷணம் கடந்துபோனதை (அதற்காக) செய்வது
(ஆ)க்ராணம் முகர்தல் (மோப்பம்)
ஆசமனம் 3 முறை ஜலம் 3 மந்திரத்தால் உட்கொள்வது
ஆஜ்யாஹ{தி நெய்யினால் மந்திரத்துடன் செய்யப்படும் ஹோமம்.
ஆத்ம ப்ரதக்ஷpணம் தன்னைத்தானே சுற்றிக்கொள்வது
ஆத்மசுத்தி: தன்னை சுத்தம் செய்துகொள்வது
உஷ்ணோதகம் வெந்நீர்
ஊர்த்வோச்சிஷ்டம் வாந்திசெய்து இறப்பது
ருஜு சரி (நிரூபி)
ருதுமதி வயதுவந்தபெண்
ருதுஸந்தி ருதுகால சேர்க்கை
ஏகோத்ரவ்ருத்தி ஒன்று அதிகமாதல் (இறந்த பத்து தினத்தில் செய்யப்படும் திலோதகம் ஒவ்வொருநாளும் ஒன்று அதிகமாகும்)
ஏகோத்திஷ்டம் ஒருவனை உத்தேசித்து ப்ரேதரூபமாகச் செய்யப்படும் ச்ராத்தம்
ஒளதும்பரம அத்தி
ஒளரஸ: ஒருவனுடைய பெண்சாதியிடம் பிறந்த பிள்ளை
கடிசூத்ரம் அரைஞாண் கயிறு
கண்டாவ்ருதம் கழுத்தைச் சுற்றி போட்டுக்கொள்ளுதல்
கர்த்தா ஒரு கர்மாவைச் செய்பவன்
கதளீ விவாஹம் வாழைமரத்துக்கு தாலிகட்டுதல்
கநிஷ்ட: இளையவன்
கர்மா ஒரு காரியம்
காம்யம் பலன் கருதி செய்வது
காஷ்டம் விறகு அல்லது கட்டை
குக்குடாஸனம் குந்தி உட்காருதல்
குணபம் பிணம்
குண்டம் சிறு குழி
குசம் ஒரு வகை (நாணல்) தர்பம்
கூபம் கிணறு
க்ருத்யம், க்ரியை கார்யம்
க்ருஷ்ணம்ருகம் ஒருவகை மான்
கேச: கேசம் அல்லது மயிர்
கோச: புத்தகசாலை
கட்வாதி கட்டில் முதலானவை
கனனம் புதைத்தல்
கர்ப தீக்ஷா பத்திநி கர்பமாக இருக்கும்போது முடி வளர்த்தல்
கர்பிணி கர்பமாக இருக்கும் பெண்
க்ரஸ்தாஸ்தமநம் க்ரஹணம் பிடித்து அஸ்தமனமாதல்
க்ரஸ்தோதயம் க்ரஹணம் பிடித்து உதயமாதல்
க்ருஹஸ்த: சம்சாரி குடும்பஸ்தன்
கோசர்ம பசுவின் தோல்
கோமயம் பசுவின் சாணி
கோமாம்ஸபக்ஷணம் பசுமாமிசம் சாப்பிடுதல்
சாந்திரமானம் அமாவாசைக்கு அமாவாசை மாதம் கணக்கிடுதல்
சௌளம் குடுமி வைத்தல்
ஜனக பிதா ஸ்வீகாரம் கொடுத்தவனை பெற்ற தகப்பனார்
ஜனக ப்ராதா பிறந்த வீட்டுச் சகோதரர்கள் (ஸ்வீகாரம் சென்றவனுக்கு)
ஜனக மாதா பெற்றெடுத்தவள் (ஸ்வீகாரம் எடுத்தவள் மாதா)
ஜனக ஸபிண்ட: பிறந்தவீட்டின் தாயாதி (பங்காளிகள்)
ஜநநம் பிறப்பு
ஜாமாதா மாப்பிள்ளை
ஜீவ பித்ருக: தகப்பனார் உள்ளவன்
ஜெஷ்ட: (ஸர்வ ஜ்யேஷ்டன்) மூத்த ஸஹோதரன் (எல்லோரிலும் மூத்தவன்).
ஜ்யேஷ்டபத்நி மூத்தாள்
ஜ்ஞாதி தாயாதி (பங்காளி)
தர்ஜநி ஆள்காட்டி விரல் அல்லது அதில் அணிந்துள்ள மோதிரம்
தாம்பூலம் வெற்றிலை, பாக்கு
தாருண்யம் யௌவனம் அல்லது இளமை
திலோதகம் எள்ளும் ஜலமும்
திரிபத கண்ட நக்ஷத்திரம் மூன்று பாதத்தோடு முடிகிற நக்ஷத்திரங்கள்
திரிபக்ஷhதி மூன்றாவது பக்ஷம் வகையறா
தத்த: ஸ்வீகாரம் போனவன்
தம்பதி கணவன் மனைவி
தண்டம் கழி அல்லது கொம்பு
தர்வி இலை அல்லது அக்நியில் நெய்விட பயன்படுத்துவது
தசராத்ரம் பத்து இரவுகள்
தர்சம் அமாவாசை
தசாஹ: பத்தாம்நாள்
தஹனம் எரித்தல்
தஹநாங்கம் கொளுத்துதலின் அங்கம்
தக்ஷpணாயனம் ஆடி முதல் மார்கழி முடிய 6 மாதம்
தீக்ஷh முடி வளர்த்தல்
துக்கப்ப்ரச்னம் துக்கம் கேட்பது
துர்ம்ருத: துர்மரணமடைந்தவன்
துஹிதா பெண்
த்ரவம் திரவப் பொருள்
தேவகாதம் தேவதைகளால் வெட்டப்பட்டது
தேவதாந்தரம் சில்லரை தேவதைகள்
த்வேஷம் பொறாமை, வெறுப்பு
தௌஹித்ர: பெண்வயிற்றுப் பிள்ளை (பேரன்)
தௌஹித்ரி பெண்வயிற்றுப் பெண் (பேத்தி)
தநஹாரி தௌஹித்ர: சொத்தை அடைந்த பெண்வயிற்றுப் பிள்ளை (பேரன்)
தமநி ஊது குழாய்
த்வனி சப்தம், ஓசை
நக்ன: நிர்வாணமாயிருப்பவன்
நதம் மேற்குமுகமாக போகும் ஆறு
நதீ ஆறு
நவச்ராத்தம் இறந்தவர்களுக்கு 1, 3, 5, 7, 9, 11ல் செய்யும் ஒரு ச்ராத்தம்
நாஸிகா மூக்கு
நாஸ்திக: தெய்வத்தை இல்லை என்பவன்
நித்யம் தினமும்
நிர்மால்யம் அர்சனை செய்து களைந்த பழைய புஷ்பம்
நியதம் கிளுப்தம்
நியமம் கட்டுப்பாடு
நிர்வாபணம் முடிவு
நிவீதம் பூணலை மாலையாகப் போட்டுக் கொள்வது
நிஷித்தம் தள்ளத்தக்கது
நிஷ்காரணம் காரணமின்றி
நிஷ்பலம் பலனின்றி
நைமித்திகம் கடமைப்பட்ட கார்யம்
பக்வம் சமைத்தது (வேகவைக்கப்பட்டது)
பஞ்சகவ்யம் பசும்பால், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம் சேர்ந்தது
பர்ணம் இலை
பத்நீ மனைவி
பர்யக்நி கர்ணம் அக்நியில் காட்டுவது
பர்யுஷிதம் பழைமையானது
பராந்நம் இதரர் வீட்டுச் சாப்பாடு
பரிதி: அக்நியைச் சுற்றி வைக்கப்படும் ஸமித்து
பரிமளம் வாசனை வஸ்த்துக்கள்
பரிஷேசநம் ஜலத்தினால் சுற்றுவது
பரேஹநி மறுநாள்
பர்வம் அமாவாசை, பௌர்ணமி
பக்ஷpணி இரண்டு இரவு ஒரு பகல் அல்லது இரண்டு பகல் ஓர்இரவு
பாக: சமையல்
பாத்ராபிகாரம் இலையை நெய்விட்டு சுத்தம் செய்வது
பாதேயம் இறந்த முன்னோருக்கு வழி பயணத்திற்காக கொடுக்கப்படும் அந்நம்
பாத்யம் கால் அலம்ப ஜலம் கொடுத்தல்
பாதுகா பாதரiக்ஷ முதலியன
பார்வணம் 3 தலைமுறை பித்ருக்களுக்கு அக்நியுடன் செய்யும் ச்ராத்தம்.
பாவநம் சுத்தம்
பாஷாணம் கருங்கல்
பிண்டநிர்வாபணம் பிண்டம் கொடுத்து முடித்தல்
பிண்டப்ரதானம் பிண்டம் கொடுத்தல்
பிதா தகப்பன்
பிதாமஹ: தகப்பனைப்பெற்றவன்
பிதாமஹீ தகப்பனைப் பெற்றவள்
பித்ரு தீக்ஷh தகப்பன் இறந்த ஒரு வருடத்திற்கு முடி வளர்த்தல்
பித்ருபஹிநி அத்தை, தகப்பனின் ஸகோதரிகள்
பித்ருவ்யன: அப்பா உடன் பிறந்த பெரியப்பா அல்லது சித்தப்பா
பித்ருசேஷ: ச்ராத்தத்தில் ப்ராம்மணர் சாப்பிட்ட மிச்சம்
புண்யாஹ: சுத்தத்திற்காக ஜபிக்கப்படும் மந்திரம்
புத்ர: பிள்ளை அல்லது புத்திரன்
புத்ரி பெண் மகள்
புநர் தஹநம் திரும்பவும் எரித்தல்
பூர்வாஹ்ணம் முற்பகல்
ப்ரகரணம் புத்தகங்களில் ஒரு பிரிவு
ப்ரஜா ஜனங்கள்
ப்ரதிக்ருதி: ஒன்றைப்போல் செய்யப்பட்ட பொம்மை உருவம்
ப்ரதிகூலா கணவனுக்கு விரோதமாயுள்ள மனைவி
ப்ரதிக்ரஹம் தானம் வாங்குதல்
ப்ரதிதினம் தினந்தோரும்
ப்ரதிநிதி ஒன்றுக்குப் பதிலாக
ப்ரதிஷ்டா ஒன்றை ஸ்தாபித்தல்
ப்ரதீக்ஷpதம் ஒன்றை எதிர்பார்த்தல்
ப்ரபிதாமஹ: தகப்பனின் தகப்பனின் தகப்பன் (கொள்ளு தாத்தா)
ப்ரபிதாமஹி தகப்பனின் தகப்பனின் தாயார் (கொள்ளு பாட்டி)
ப்ரபௌத்ர: - ப்ரபௌத்ரீ கொள்ளுப் பேரன் - கொள்ளுப் பேத்தி
ப்ரவர: வம்ச பரம்பரை
ப்ரஸக்தி சந்தர்ப்பம்
ப்ராணாயாமம் மூச்சடக்கிச் செய்யும் மந்திரம்
ப்ராதக்கால: காலைநேரம்
ப்ராயஸ்சித்தம் பாபத்துக்குப் பரிஹாரம் செய்தல்
ப்ராசனம் திரவம் உட்கொள்வது
ப்ரேதம் உடலற்ற ஆத்மா
ப்ரோஷித: தேசாந்திரம் போனவன்
பௌத்ர: - பௌத்ரீ பிள்ளை வயிற்றுப் பேரன் - பிள்ளை வயிற்றுப் பேத்தி
பலி: ஓர் வித ஆகாரம் கொடுத்தல்
பர்ஹிர் பூமி கழிவிடம் (மல மூத்திரம் கழிக்க உபயோகிக்கும் இடம்)
Thursday, July 17, 2025
Narayana kavacham & benefits
#நாராயண_கவசம்: #பிரபஞ்ச_பாதுகாப்பு அங்கவஸ்திரம்
#NarayanaKavacham #SpiritualProtection #SriVishnu #DivineShield #ஆன்மீகஅருள்
நமது வாழ்வில் பல தடைகளை, நோய்கள், கண்ணியமற்ற தாக்குதல்களை, பிணிகளை சந்திக்கிறோம். இத்தகைய ஆபத்துகளிலிருந்து தப்பிக்க வைக்கும் ஒரு உன்னதமான வைஷ்ணவ கவசம் தான் நாராயண கவசம். ஸ்ரீ விஷ்ணுவின் கிருபையினை முழுமையாகப் பெறுவதற்கும், நமக்கு சூழ்நிலைகளில் முழுமையான பாதுகாப்பையும் வழங்குவதற்கும் இது ஒரு சக்தியுடைய வச்சிர கவசமாக விளங்குகிறது.
இந்த அரிய கட்டுரை, நாராயண கவசத்தின் அர்த்தம், அதன் புனித வரலாறு, மந்திர ரகசியம், அதன் பயன்கள், மற்றும் ஆன்மீக பயணத்திற்கான வழிகாட்டுதல்களைச் சார்ந்து விரிவாக விளக்கமாக அமையும்.
1. 🕉️ நாராயண கவசம் என்பது என்ன?
நாராயண கவசம் என்பது பாகவத புராணத்தின் ஆறாம் ஸ்கந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான பகுதி. இது ஒரு ஸ்தோத்திரமாகவும், ஒரு ஆவணமான மந்திரமும் ஆகும். இது யுத்தம், நோய்கள், கீடம், பிசாசு, பாம்பு, தீய சக்திகள் முதலியவற்றின் தாக்கங்களிலிருந்து பாதுகாத்து நம்மை தெய்வீகமாக மறைக்கிறது.
"கவசம்" என்றால் பாதுகாப்பு ஆடையை குறிக்கும்.
அதாவது, நம் உடலின் அனைத்து பகுதிகளையும் இந்த மந்திரத்தால் ஸ்ரீ நாராயணனின் அருளால் மூடிக்கொள்ள முடியும். இதுவே "தேவம் தரும் கவசம்" என அழைக்கப்படுகிறது.
2. 📖 நாராயண கவசத்தின் வரலாறு
இந்த மந்திரம் பாகவத புராணத்தில் ஸ்ரீ நாரதர் மூலம் இன்றைய நமக்கு அறிவிக்கப்பட்டது. நாரதர், இந்த மந்திரத்தை ஸ்ரீ இந்திரனுக்கு கற்றுத் தந்தார். அப்போது இந்திரன், பஹலாசுரனின் தாக்கத்தால் நஷ்டமடைந்த ஸ்வர்கத்தைக் மீண்டும் பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.
இந்திரன், நாராயண கவசத்தைச் ஜபித்து, ஸ்ரீ நாராயணனின் அருளால் சக்தியைப் பெற்று, பஹலாசுரனை வீழ்த்தியதாக புராணங்கள் கூறுகின்றன.
3. 🪔 நாராயண கவசத்தின் மந்திர அமைப்பு
இந்த கவசம் ஓர் பெரிய ஸ்தோத்திரமாக இருந்தாலும், அதில் உள்ள ஒவ்வொரு வரியும் நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் சுட்டுகிறது.
உதாரணமாக:
"ஓம் நாராயணோ மம் ஷிரஸி பது" - நாராயணன் என் தலையை பாதுகாக்கட்டும்
"ஓம் நரஸிம்ஹோ மம் நயனே" - நரசிம்ஹன் என் கண்களை பாதுகாக்கட்டும்
இவ்வாறு, தலை முதல் பாதம் வரை, எட்டுத்திசைகளிலும், காலகட்டங்களிலும் நம்மை பாதுகாக்கும் வகையில் இம்மந்திரம் அமைந்துள்ளது.
4. 🔮 நாராயண கவசத்தின் ஆன்மீக ரகசியம்
இந்த மந்திரத்தில் நமக்குப் பல மூலிகைகள், மந்திரங்கள், ரிஷிகள், யோகிகள் அறிவிக்காத ரகசியங்கள் அடங்கியுள்ளன.
முக்கியமான ரகசியங்கள்:
ஸத்வ குணத்தை மிகுந்த அளவில் கூட்டும்
மன நோய்களிலிருந்து பாதுகாக்கும்
பேய், பிசாசு, கருமம் போன்ற எச்சத்தைத் தூரம் செய்யும்
யோக ஞானம் அதிகரிக்கும்
இது பஞ்சமந்திர கவசங்கள் அல்லது அஷ்ட கவசங்கள் போன்ற அமைப்பில் கடவுளின் பல ரூபங்களை அழைக்கும் வித்தியாசமான அமைப்பைக் கொண்டது.
5. 🕯️ ஜபிக்கும் முறையும் நெறிமுறையும்
நாராயண கவசம் ஜபிக்கும்போது பின்வரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
✅ நேரம்:
அதிகாலை 4 முதல் 6 மணிக்குள்
சனிக்கிழமை, வியாழக்கிழமை, அல்லது பௌர்ணமி நாள் சிறந்தது
✅ இடம்:
சுத்தமான பஜனை அறையில், அல்லது ஆலயத்தில்
வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமரவும்
✅ முறைகள்:
ஸ்நானம் செய்தபின் சுத்த உடை அணியவும்
மனதில் நாராயணனை தியானிக்கவும்
மெதுவாக, அர்த்தம் புரிந்து வாசிக்கவும்
தினமும் 21 நாட்கள் தொடர்ந்து வாசித்தால் பயன்கள் அதிகம்
6. 💫 நாராயண கவசம் வைக்கும் பயன்கள்
இந்த கவசம் பல்வேறு பயன்களை நமக்கு அளிக்கிறது. அவை:
1. தெய்வீக பாதுகாப்பு:
பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற கெடுதல் சக்திகளை அகற்றும்
2. உடல் ஆரோக்கியம்:
உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டும்
நோய்களிலிருந்து பாதுகாக்கும்
3. மன உறுதி மற்றும் தெளிவு:
மனதில் தைரியம், தெளிவு, நிலைத்தன்மை வரும்
4. வாழ்க்கை தடைகளை நீக்கும்:
வியாபாரம், தொழில், குடும்பம் போன்ற துறைகளில் உள்ள தடைகளை அகற்றும்
5. தியானம் மற்றும் யோக பயிற்சிக்கு உதவுகிறது:
ஜபம் செய்யும் போது அதீத ஆனந்தம் மற்றும் ஞான பூரண நிலை கிடைக்கும்
7. 🌟 நாராயண கவசம் மற்றும் சக்திவாய்ந்த ரூபங்கள்
இந்த கவசத்தில் நம்மால் சுட்டப்படும் பல்வேறு விஷ்ணு அவதாரங்களை மந்திரமாக அழைக்கின்றோம்.
நரசிம்ஹர் – தீய சக்திகளை அழிக்க
வராஹர் – பூமி பிதுங்கும் காலங்களில் பாதுகாக்க
வாமனர் – பெருமை கொண்டவர்களை அடக்க
பரசுராமர் – அநீதிக்கெதிரான போராளியாக
ராமர் & கிருஷ்ணர் – தர்மதீபங்களை வழிகாட்டியாக
8. 🙌 எப்போது நாராயண கவசம் ஜபிக்கலாம்?
நாமும் இந்த கவசத்தை பயிற்சி செய்து, நமக்கு தேவையான காலங்களில் அதை நம்மை பாதுகாக்க பயன்படுத்தலாம்.
முக்கியமான சூழ்நிலைகள்:
புதிய வீட்டிற்குள் செல்லும்போது
பயணம் செய்யும் முன்
தீராத நோய்களில்
குடும்பத்தில் அசம்பாவிதம் நடக்கும் போது
பாலர்கள் அழுதுகொண்டு தூங்கும்போது
தீய சக்திகள் தாக்கும் எண்ணம் வரும்போது
9. 🔁 அனுபவங்கள் மற்றும் மக்களின் பகிர்வுகள்
நாராயண கவசத்தை தினமும் 21 நாட்கள் தொடர்ந்து வாசித்த ஒரு குழந்தைக்கு இரவுகளில் பயம் தீர்ந்துவிட்டது.
ஒரு கணவர் தனது மனைவிக்கு ஏற்பட்ட பயங்கர கண் நோயிலிருந்து நாராயண கவசத்தை ஜபித்து குணமடைந்ததாக பகிர்ந்துள்ளார்.
ஒரு தொழிலதிபர், சிறு வயதிலிருந்து தனது வீட்டில் இந்த கவசத்தை தினமும் வாசித்து வந்ததால் எந்தவிதமான சூனியம், சூன்ய சக்தியும் பாதிக்கவில்லை என கூறினார்.
10. 🧘 நாராயண கவசம் – ஆன்மீக ஒலிப்பாடு
இந்த கவசத்தை நீண்ட நாள் பயிற்சியுடன் வாயால் வாசிக்கும்போது, அதன் ஒலிப்பாடுகள் (sound vibrations) நமது நாபி முதல் மூலாதார வரை உள்ள சக்தி மையங்களை தூண்டி உயிர்த் துளியை உயிர்க்கொளுத்துகிறது.
இது ஒரு பரம சத்தா யோகமாகவும் அமையும்.
நமக்கு எவ்வளவு பெரிய பிரச்சனைகளும் வந்தாலும், நம்மை உண்மையில் பாதுகாக்க வல்லது கடவுள் மட்டுமே. அதிலும் நாராயணன் எனும் பரம்பொருள், தன்னுடைய "கவசம்" எனும் அருள் ஆடையை நம்மிடம் வழங்கியுள்ளார்.
நாராயண கவசம் என்பது வெறும் ஸ்தோத்திரம் அல்ல. அது ஒரு ஆன்மீக ஆயுதம்.
அதை தினசரி பாவனையுடன் வாசித்து, நம் வாழ்வில் பாதுகாப்பும், ஆனந்தமும், தெய்வீக அருளும் பெறுவோம்.
🔁 ஜப வார்த்தைகள்:
ஓம் நாராயணோ மம் ஷிரஸி பது
ஓம் நரசிம்ஹோ மம் நயனே
ஓம் வாமனோ மம் ஹ்ருதயே
ஓம் திரிவிக்ரமோ மம் நாபௌ
இந்த நாராயண கவசத்தை உங்கள் வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பு படுக்கையாக நினைத்துக் கொண்டு, தினசரி வாசிக்கத் தொடங்குங்கள் – உங்கள் வாழ்வு ஒரு திருப்பத்தை எடுக்கும். 🕉️🙏✨
Wednesday, July 16, 2025
Fishing - Joke
The rain was pouring down heavily in M.G.Road, Bengaluru. And standing in front of a big puddle outside a pub, was an old Parsi Uncle, drenched, holding a stick, with a piece of string dangling in the water.
Arun, a passer-by stopped and asked, "What are you doing, uncle?"
"Fishing" replied the old man.
Feeling sorry for the old man, Arun said, "Come out of the rain and have a drink with me, uncle."
In the warmth of the pub, as they sip their whiskies, Arun cannot resist asking, "So how many fish have you caught today?"
"You're the eighth" says the old Parsi .
Cheers 😂🤣🥂
Tuesday, July 15, 2025
If one comes other goes - Vidura neethi
*விதுர நீதி...*
*ஒன்று வந்தால் மற்றொன்று* *போய்விடுமாம்* …!!
*எது* *வந்தால் எது போகும்* …?
1. *முதுமை வந்தால் அழகு* *போகும்* .
2. *பொறாமை வந்தால்* *தர்ம மார்க்கம்*
*போய்விடும்* .
3. *கோபம் வந்தால்* *செல்வம் போய்விடும்* .
4. *பேராசை வந்தால்* *தைரியம்*
*போய்விடும்* .
5. *கெட்டவர்கள் சவகாசம்* *வந்தால்* *நமது*
*ஒழுக்கம் போகும்* .
1. *முதுமை வந்தால் அழகு* *போகும்* .
இளமையில் இருக்கும் உடல் அழகு முதுமை வந்து விட்டால் போய்விடும்.. இது இயற்கை.. ஆனால் இயற்கை அல்லாது நம்மிடையே…
2. *பொறாமை வந்தால் தர்ம* *மார்க்கம்* *போய்விடும்* .
நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம் தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ , உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் . எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும்.
3. *கோபம் வந்தால் செல்வம்* *போய்விடும்* .
விசுவா மித்திரருக்கு அவரது தவ வலிமையே செல்வமாகும்.அவருக்கு கோபம் வந்தவுடன் எவ்வாறு அவர் தவவலிமை குறைந்து விட்டதோ, அது போல நமக்கு கோபம் வந்தால் நம்மிடம் உள்ள செல்வம் சென்று விடும்.
4. *பேராசை வந்தால்* *தைரியம் போய்விடும்* .
நம்மிடம் அளவுக்கு அதிக பணமோ பொருளோ நகையோ இருந்து, அதன் மீது அசையும் இருந்தால், பகைவரோ பங்காளியோ, கள்வரோ, அரசோ ( அரசு என்றால் வரியாக சொத்துக் குவிப்பாக) அபகரித்து விடுவார்களோ என்ற எண்ணம் வரும். அந்த எண்ணமே நமது தைரியத்தை பறித்துவிடும்.
5. *கெட்டவர்கள் சவகாசம்* *வந்தால்* *நமது ஒழுக்கம் போகும்* .
சுய லாபத்திற்காக ஒரு கெட்டவனுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கம் பறி போய்விடும்.
மேல் சொன்னவைகள் எதாவது ஒன்று வந்தால் ஒன்று போய் விடும்.ஆனால் ...
அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்துபோகும்.
பொறாமை
கோபம்
அதிக ஆசை
கெட்டவர்கள் சவகாசம்
அஹங்காரம்
இவைகள் அற வழிக்குப் பொருந்தாவையாகும். ஆகவே இவை தவிர்க்கப்பட வேண்டும் என்று அழகாக விதுரர் எடுத்துரைக்கிறார்...
Monday, July 14, 2025
Jaiminiya SAama chanting
https://youtu.be/NUbhGakvlbA?feature=shared
This was recorded on 1968 by prof Staal.
The voice is of famous, great, jaiminiya sama chanter "itti Ravi Nambuthiri"
Friday, July 11, 2025
Miracle of Hot Water - HH Abhinava vidyateertha mahaswamigal
GLORY OF THE GURU
Miracle of Hot Water
Compiled by Smt. S. Vijayalakshmi, Salem
His Holiness is the limitless, sublime ocean of mercy. He is the personification of Lord Shiva, the bestower of boons in this Kali Yuga. He watches over His devotees with the tenderness of a mother and protects them. This episode is a drop of nectar drawn from that vast ocean just to sample the rarity and greatness of His Holiness's benevolence.
Last year I had been to Sringeri during Chaturmasya and had stayed in a room at 'Shankara Krupa' next to the room of Smt. Ananthalakshmi Ammal. The day was the 13th of August, a Dwadasi day. Rain lashed relentlessly since morning. I wanted to offer Biksha vandhanam to His Holiness but was unable to cross river Tunga due to torrential downpour. The next day, I wanted to leave early to achieve the darshan of His Holiness. It was still raining and the spate in Tunga was rising. At 6 am I brought two buckets out and asked the watchman for hot water. He replied that there was a major power outage and that they were short of water. He added that only when the power.
supply was restored could the water tank be filled and be made available to the residents. He also filled the buckets with rain water for my use.
I felt dejected. I had already missed the darshan of His Holiness the previous day and did not want to lose the opportunity today. I contemplated taking bath in the river Tunga. Yet I sought to try the bathroom tap one last time. Speaking to myself audibly, I asked " O Guru! What am I to do today? In this unyielding rain should I bathe in River Tunga?" As I turned the tap, I was speechless to see hot water flowing rapidly from it. None of the other rooms in Shankara Kripa had even cold water supply and my room did not have a water heater either. Yet piping hot water poured out of the tap.
I collected one and half buckets of water. After I bathed I collected another bucket of water. I had also begun heating the rain water on the stove. I offered both water to Sivakumar in the adjoining room and asked him to perform his ablutions without waiting for power supply. I tried opening the tap again and not a drop of water came from it.
That evening beset with gratitude, I told my Guru of the divine sequence of events that happened in the morning. With a benevolent smile He replied "When the river was in spate with no sign of abatement from torrential rain, Acharyal cannot approve of your taking bath in river Tunga. Therefore the tap provided hot water".
My heart ebbs and flows as I contemplate the motherly kindness with which His Holiness provided hot water to counter the bitter cold weather. I know nothing besides humbly reciting the supreme mantra "Sri Guro Paahimaam".
The omnipotent Guru shields His weak devotee from all tribulations. Should difficulty befall His devotees His Holiness who is the cause and effect of everything wards them off and shields His devotee with care.
Thursday, July 10, 2025
Krishna is peculiar
விசித்திர குழந்தை - நங்கநல்லூர் J K SIVAN
உலகத்தில் மற்ற குழந்தைகள் போல் அல்ல கிருஷ்ணன். பிறந்த கணம் முதல் அவன் உயிரைப் பறிக்க எத்தனையோ ராக்ஷஸர்கள் அவனைத் தேடி அலைந்தார்கள். அவர்களின் அத்தனை முயற்சிகளையும் வென்று அவர்களையும் கொன்று குழந்தைமுதலாக கிருஷ்ணன் உயிர் வாழ்ந்து வளர்ந்தான்.
பத்து பதினோரு வயதுக்குள் பல ராக்ஷஸர்களை எதிர்த்து கொன்று அவன் மதுரா சென்றான். அங்கே அவன் சென்றதே அவன் கொடிய மாமன் அவனைக் கொல்ல செய்த சதிதான். அதையும் முறியடித்து, மற்ற ராக்ஷஸர்களையும் கொன்று எண்ணற்ற அதிசயங்களைப் புரிந்து எல்லோர் அன்பையும் சம்பாதித்து, ''இனி நீ தான் எங்கள் மதுராபுரி ராஜா'' என்று நகரமே ஏகோபித்து வேண்டியபோது தான் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது கிருஷ்ணனால்.
'' இல்லை நான் கல்விபயிலும் வயதில் கல்வி குருவிடம் சேர்ந்து பயில வழியில்லாமல் போனது. கல்வி முறையாக குருவிடம் கற்காதவன் அரசனாக தகுதி அற்றவன்'' என்றான்.
தனது தந்தை தாயை விடுவித்தபிறகு இந்த நாட்டின் பழைய ராஜாவையும் சிறையிலிருந்து மீட்டு மீண்டும் ராஜாவாக்கினான்
ஒவ்வொரு பிள்ளையும் பிரம்மச்சாரி யாக குருவிடம் உபதேசம் பெறவேண்டிய வயதில் கிருஷ்ணனுக்கு மட்டும் தாமதம் இத்தனை காலம் ஏற்பட்டது. அதை தவிர்க்க தான் வ்ருஷ்ணிகுல குரு கர்சாச்சார்யார், சாந்தீப முனிவர் இருவரும் உடனே கிருஷ்ண பலராமர்களுக்கு உபநயனம் செய்வித்தார்.
அப்போது தான் கிருஷ்ணன் தனது அத்தை குந்தி தேவி அவள் பிள்ளைகள் பாண்டவர்களை முதலில் சந்தித்தான். ஹஸ்தினாபுரத்திலிருந்து குந்தி தேவி பாண்டவர்கள், விதுரனோடு மதுராவுக்கு வந்தாள் . கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு. இருவரும் நர நாராயணர்கள் அல்லவா?
அவந்தி புரத்தில் இருந்த சாந்தீப முனிவர் ஆஸ்ரமத்தில் கிருஷ்ணன் பலராமன் இருவரும் வேத சாஸ்த்ர ஞானம் பெற்றார்கள். உபநிஷத் கற்றார்கள். க்ஷத்திரியர்கள் என்பதால் ஆயுத, யுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. 64 கலைஞானங்களும் சுலபத்தில் கிருஷ்ணன் அறிந்தான். பகவானையே சீடனாகப் பெற்ற சாந்தீபனி முனிவர் எவ்வளவு புண்யம் பண்ணியவர். அவன் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் என்று எளிதில் புரிந்து கொண்டார். 64 நாட்களிலேயே சகல சாஸ்திரங்களும் தனுர்வேதமும் கண்ணன் அறிந்து கொண்டான் என்று ஹரிவம்ச புராணம் சொல்கிறது. மற்ற சிஷ்யர்கள் போல் இல்லாமல் கிருஷ்ணன் தனது குருவுக்கு அளித்த காணிக்கை குருதக்ஷிணை விசித்திரமானது. அவன் காரியம் எல்லாமே அதிசயம் தானே.
குரு தக்ஷணையாக இறந்து போன சாந்தீபனி ரிஷியின் மகன் உயிரை பாஞ்சஜனன் எனும் ராக்ஷஸனைக் கொன்று மீட்டுத் தந்தான். அந்த ராக்ஷஸன் தான் மீனாக குருவின் மகனை விழுங்கியவன். அந்த ராக்ஷஸனையே சங்காக மாற்றி கையில் வைத்துக் கொண்டான். கிருஷ்ணன் கையில் உள்ள சங்கம் பாஞ்சஜன்யம் என்று தெரியுமல்லவா?
Wednesday, July 9, 2025
Pootana episode
''குழந்தைக்கு பால் தரட்டுமா?'' -- நங்கநல்லூர் J K SIVAN
''பத்து நாள் முன்பு பிறந்த குழந்தைகள் அனைவரையும் கொல்ல வேண்டும். ராஜ்யம் முழுதும் சரியான ஆட்களை அனுப்புங்கள். அவர்கள் கொன்ற விவரங்கள் எனக்கு உடனே வந்து சேரவேண்டும்'' கம்சன் கட்டளை இது.
ராஜ்யம் முழுதும் சென்ற கொலையாளிகளில் ஒருவள் கை தேர்ந்த மாயாஜாலக்கார அரக்கி பூதனை. அழகான இளம்பெண்ணாக கோகுலத்தில் நுழைந்தாள் . கிருஷ்ணன் என்ற குழந்தை இருப்பதை அறிந்து யசோதை வீட்டு வாசலுக்கு வந்து கையில் தாமரை மலரோடு நின்றாள்.''யாரம்மா நீ?''''குழந்தையை ஆசையாக பார்க்க வந்தேன் மா''''வாம்மா ''உள்ளே வந்தவள் கிருஷ்ணன் தொட்டிலில் படுத்திருப்பதை பார்த்தாள் . எத்தனையோ குழந்தைகளைக் கொன்ற போதனையின் முகத்தை பார்க்க பிடிக்காமல் கிருஷ்ணன் தன்னையும் கொல்லவந்ததும் கண்ணை மூடிக்கொண்டான். ஒருவேளை பார்த்தால் அவள் மேல் இரக்கம், கருணை, கொண்டுவிடுவேனோ? ஓஹோ, ராக்ஷஸர்களைக் கொல்லவந்த நான் பிள்ளையார் சுழி போடப்போவதே தாயாக பால் கொடுக்க வந்த இந்த பேய் தானா. ?''''அம்மா, குழந்தை பசியோடு தூங்குறான்னு தோணுது.. நான் கொஞ்சம் பால் கொடுக்கட்டுமா?''
''சரிம்மா''''அரைத்தூக்கத்தில் இருப்பதாக நினைத்து கண் மூடிய கிருஷ்ணனை எடுத்து மடியில் விட்டுக்கொண்டாள் பூதனை.சாதாரண ஒயர் என்று நினைத்து தெரியாமல் தொட்டு உடனே அதிக மின்சார ஓட்டம் கொண்ட கம்பியை தீண்டியதால் அந்தக் கணத்திலேயே கருகி இறந்தவர்களில் ஒருவளோ இந்த பூதனை!தயாராக ஏற்கனவே மிகக் கொடிய விஷத்தை தனது முலைகளின் மேல் நிறைய தடவிக் கொண்டு வந்தவள் அவள். முலைக் காம்பை கிருஷ்ணன் வாயில் அழுத்தினாள்.
''வா, உன் மரணத்தை தழுவு என்று அவள் அளித்த முலைக்காம்பை வாயில் வைத்து அவள் உயிரையே உறிஞ்சினான் கிருஷ்ணன். ''வசமாக வந்தவளே வந்தனம்''..என சிரித்தான் .என்ன ஆயிற்று எனக்கு? பூதனைக்கு தலை சுற்றியது, அறை சுற்றியது, வீடே வேகமாக சுழன்றது. தாங்க முடியாத ஒரு வலி உடலெங்கும். நெருப்பென எரிச்சல். ஐயோ ஐயோ, என்னை விடு..என்னை விட்டுவிடு''. கத்தினாள் பூதனை.கண் இருண்டது . ஸ்வாசம் தடைபட்டது. பெருமூச்சோடு அவள் உடல் தடால் என சாய்ந்தது. தலைவிரி கோலமாக கை கால்கள் விரிந்து அங்கு ஒரு நெடிய ராக்ஷஸி கோரைப்பற்களுடன், சிவந்த கண்களுடன் பெரிய வயிறோடு உயிரற்று கோரமாக கிடந்தாள்.
''ஹா'' என்று கத்திக்கொண்டே எல்லோரும் அங்கே சேர்ந்துவிட்டார்கள். ஒன்றுமறியாத சிசுவாக கண்ணன் அவள் வயிற்றின் மேல் கைகால் அசைத்து விளையாடிக் கொண்டிருந் தான். யசோதை வாரி எடுத்து அவனை அணைத்துக் கொண்டாள் .ராக்ஷஸி உடல் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தம் செய்யப்பட்டது.
''என்ன கும்பல் நம் வீட்டுக்கு முன்பு? ஏற்கனவே வசுதேவர் எச்சரிக்கை கொடுத்ததில் கவலையோடு வீடு திரும்பிய நந்தகோப மஹாராஜா விஷயம் அறிந்து அதிர்ந்து போனார்.
Eating from the hands of sister - Sanskrit essay
Courtesy:Dr.Smt.Balaa Chiraavoori
भगिनी हस्तभोजनम्:-
भगिनी इत्युक्ते अग्रजा वा अनुजा वा स्यात्।भगिन्याः हस्तात् परिवेषितभोजनमिति। कार्तिकशुक्लद्वितीयायां एतत् पर्व सम्भवति। यमराजः सोदर्याः यमुनायाः गेहं गत्वा भोजनं कृतवान्, तां वस्त्रभूषणादीन् प्रदत्तवानिति कारणेन अस्य पर्वस्य नाम यमद्वितीया( भ्रातृद्वितीया) इति अत्रैव न त्रिषु लोकेष्वपि प्रसिद्ध इति श्रीकृष्णः सत्यभामां प्रति पद्मपुराणे अकथयत्।
तत्रैव कार्तिकमासद्वितीया "याम्यका" इत्यपि अभिधीयते इति श्रीकृष्णः अकथयत्।
कार्तिके द्वितीयायां पूर्वाह्णे एव स्नात्वा यमं अर्चयेत्। तेन नरकलोकं न प्राप्स्यामः ।संवत्सरकालपर्यन्तमपि यमधर्मराजः पापिनां प्रति तेषां पूर्वकर्मानुसारं शिक्षावलिः रचयति। तमनुसृत्य भटाः तान् शिक्षयन्ति।अतः नरकलोकवासिनां कृते विश्रान्तिर्नास्ति। किन्तु कार्तिकशुद्धद्वितीयायां यमराट् स्वभगिन्याः गेहं प्रति अत्यन्तप्रीत्या याति। तदर्धं अयं दिवसः नरकलोकवासिनां कृते विरामदिवसः। अस्मिन् दिवसे नरकलोकवासिनां उद्दिश्य तर्पयामश्चेत् ते पापेभ्यः, सर्वबन्धनाच्च विमुक्ताः भवेयुः। तस्मिन् दिवसे नरकलोके स्थिताः सर्वे सन्तष्ठाः भवेयुः। यमराष्ट्रे महोत्सवं विधाय सर्वे सुखमाप्नुवन्ति। अतः यमद्वितीया त्रिषु लोकेष्वपि प्रसिद्धः। तस्मात् स्वगृहे न भोक्तव्यम्। स्नेहात् प्रीत्या च भगिनी हस्तात् भुज्यते चेत् अयुर्वृद्धिः शरीरपुष्ठिवर्धनं च भवेत्। भगिनीभ्यःपुजासत्काराणि विधाय स्वर्णालंकारवस्त्राणि दातव्यानि। तेन संवत्सरकालं यावत् कलहः ,शत्रुभयश्च न जायते।
*महिषासनमारूढो* *दण्डमुद्गरभृत्प्रभुः।*
*वेष्टितःकिङ्करैर्जुष्टैःतस्मै* *याम्याय* *ते नमः।।*
- पद्मपुराणे उत्तरखण्डे 124अध्यायः
तस्मिन् दिने सर्वाः भगिन्यः संपूज्याः भवेयुः। यदि सहोदरी नास्ति चेत् अङगीकृतभगिनीं प्रपूजयेत्।
अत्र मया विचारितं यत् नरकवासिनः सन्तुष्ठाः भवन्ति चेत् अस्माकं श्रेयस्करमिति , इहलोके सम्बन्धः दृढतरो भवेदिति विचिन्त्य एव महर्षिभिः अनेन प्रकारेण विधीयते इति।
यस्यां तिथौ यमुनया यमराजदेवः संभोजितःप्रतितिथौ स्वसृसौहृदेन।
तस्यां स्वसृः करतलादिहयो भुनक्ति
प्राप्नोति वित्तशुभसंपदमुत्तमां सः।।
-बाला...🙏✍️
Tuesday, July 8, 2025
Kundadam Kala Bhairava temple
**** குண்டடம் கால பைரவர்! ****
'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்!
காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!'
இது திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது.
அதற்கு என்ன அர்த்தம்?
காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி காலபைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.
யார் இந்த பைரவர்?
சிவனின் வீர அம்சம்தான் பைரவர். காலச் சக்கர்தை இயக்கும் பரம்பொருள் இவர். காலனாகிய எமனையே நடுங்க வைப்பவர் என்பதால் கால பைரவர் என்ற பெயர் எழுந்தது. அதாவது பைரவரை வணங்குபவருக்கு எம பயம் இல்லை. சிவாலயங்களுக்கும், ஆலயம் அமைந்துள்ள ஊருக்கும் இவர்தான் காவல்காரர். அதனால் க்ஷேத்திரபாலகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. நான்கு வேதங்களே நாய் வடிவில், இவரது வாகனமாக இருக்கிறது.
அத்தனை சிறப்பு மிக்க காசி கால பைரவர் எப்படி இந்த குண்டடம் கிராமத்துக்கு வந்தார் தெரியுமா? அதேபோல், இது என்ன ஊரின் பெயர் குண்டடம் என்று வித்தியாசமாக இருக்கிறதே? என்று நினைக்கிறீர்களா?
இரண்டு கேள்விகளுக்கு விடையைத் தரும் ஆலய வரலாறை இப்போது பர்க்கலாமா?
அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இதற்கு இந்து வனம் என்று பெயர். இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார். அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து, ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவரகளையெல்லாம் அடித்து துரத்தினான். அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று, முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லையே என்று தவித்தார் முனிவர்.
உடனே காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார். விடங்கி முனிவரின் பிரார்த்தனை விஸ்வநாதர் காதில் விழுந்தது. முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும், அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் காசி விஸ்வநாதர் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார்.
நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர். தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து, இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து, கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.
அப்புறம் என்ன..?
முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். பார்த்தார் வடுக பைரவர். கோபத்தின் உச்சிக்கே போன அவர், அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரே அறைதான்! அந்த விநாடியே மாண்டான் சீசகன். காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர், மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார். விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது.
இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படுமுன், பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி சின்னதாய் ஆலயம் எழுப்பினார். விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. அதுமட்டுமல்ல, அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் 'கொன்ற இடம்' என்றே வழங்கப்பட்டது. ...
அதுவே நாளடைவில் 'குண்டடம்' என்று மருவிவிட்டது.
பஞ்ச பாண்டவர்கள், இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது, திரெளபதி மேல் அரக்கன் ஒருவன், ஆசை கொண்டதாகவும், அதனால் கோபப்பட்ட பீமன், அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான் என்பதால் 'குண்டடம்' என்ற பெயர் எழுந்ததாகவும் இன்னொரு புராணம் சொல்கிறது.
எது உண்மையாக இருந்தாலும் போர் நடந்த பூமி இது என்பதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்களே போதும். அவற்றின் பெயர் என்ன தெரியுமா?
ரத்தக்காடு!
சாம்பல் காடு!
களரிக்காடு!
காலங்கள் கடந்தன. வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல், விடங்கி முனிவிர் எழுப்பிய சிற்றாலயமும் மண்ணுக்குள் புதைந்து விட்டது. பூமிக்குள் மறைந்த காலபைரவர் தனக்கு மாபெரும் ஆலயம் எழுப்ப, மிளகை பயறாக்கிய அற்புத சம்பவத்தை நான் சொல்வதற்கு முன்னால் குண்டடம் ஆலயத்தை வலம் வருவோமா?
எட்டு பிராகாரங்களுடன், எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அவையெல்லாம் எங்கே போயின என்பது காலச்சக்கரத்தைச் சுழற்றும் கால பைரவருக்கே வெளிச்சம்!
ஆலயத்தின் எதிரில் அழகுற அமைந்திருக்கிறது திருக்குளம். நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் பளி்ச்சிடுகிறது.
ராஜகோபுரத்திற்குத் தலைவணங்கி உள்ளே நுழைந்து பிராகாரத்தை வலம் வரலாம். சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜ பெருமாள், சனீஸ்வரர், நவகிரக நாயகர்கள் ஆகியோரைக் காணலாம். நந்தவனத்தில் மரங்கள் அசைந்தாடுகின்றன.
இங்கே முருகப் பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக, இடதுபக்கம் நோக்கி அமைந்திருக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு முன்பு, இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம்.
தனித்தனி கோயில்களில் விசாலாட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். காசி விசாலாட்சியும், காசி விஸ்வநாதருமே இவர்கள். முனிவருக்காக பைரவரை அனுப்பியவர்கள் இவர்கள்தான் என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.
அடுத்ததாய், இந்த ஆலயத்தின் கதாநாயகனான கால பைரவ வடுகநாதரின் சன்னதி. காசியிலிருந்து வந்தவர் இங்கேயே தங்கி, இங்கே லீலைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகினறன. இப்போது மிளகைப் பயறாக்கிய கால பைரவரின் கதை!
மிளகு...
***********
மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய், கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர, சோழ, பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும், கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள், இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு, காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு.
அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.
அப்படி ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார்.
அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். 'ஐயா, எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள்' என்றார்.
அந்த வியாபாரி, இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு, 'பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு' என்று பொய் சொன்னார்.
'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர்.
கொங்கு வடுகநாதா! மறுநாள் வியாபாரி, மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு, ஏதோ ஒரு சந்தேகம் வந்து, பாண்டிய மன்னன், மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார்.. வீரர்கள் அப்படியே செய்ய, எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள்! சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
வியாபாரி கதறினான், பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார்.
அதையெல்லாம் நம்பும் நிலையிலா மன்னன் இருந்தான்? 'பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள்' என்றான் கோபத்துடன்.
கதறினான் வியாபாரி. 'கொங்கு வடுகநாதா! என்னை மன்னித்துவிடு' என்று புலம்பினான். அழுதான். அவனது அழுகை குரல் பைரவருக்குக் கேட்டது!
நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். 'நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு!' என்றார்.
மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான்.
'என்னுடைய பெண், பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன், நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன்' என்றான் மன்னன்.
வடுகநாதர் புன்னகைத்தார். அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள், தந்தையே! என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும், தந்தையை நோக்கி நடந்து வந்தான்!
பரவசமடைந்தான் பாண்டிய மன்னன், 'என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே, நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்' என்று துதித்தான்.
வடுக பைரவர் புன்னகைத்தார். 'நானும், விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக. வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து, மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன்' என்று சொல்லி மறைந்தார் பைரவர்.
அதுபோலவே, கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது, பயறு பழையபடி, மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு, குண்டடம் சென்றான். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட, விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும், விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி், கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். மன்னன் மட்டுமல்ல, யார் கால பைரவரை மனமார வேண்டி மிளகு சாற்றி வழிபட்டாலும் அவர் எல்லா நன்மைகளையும் அருளுகிறார் என்பது கண்கூடு. அது மட்டுமல்ல, காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டாலே போதும் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.
சரி, உங்கள் குறைகள் எல்லாம் தீர நீங்கள் எப்போது கொங்கு நட்டுக் காசியான குண்டடம் சென்று கொங்கு கால பைரவ வடுகநாதரை தரிசனம் செய்யப் போகிறீர்கள்? ஒரு விஷயம் மறக்காமல் மிளகு எடுத்துச் செல்லுங்கள். யாராவது உங்களிடம் கொஞ்சம் மிளகு கேட்டால் கொடுத்துவிடுங்கள். ஜாக்கிரதை, ஒரு வேளை மிளகு கேட்பவர் காலபைரவராகவும் இருக்கக்கூடும்.
எங்கே இருக்கிறது: கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது.
கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.
🦚🦚🦚
Monday, July 7, 2025
Yuyutsu - who is he? in Mahabharata
மகாபாரத்தில் மிகவும் அறியப்படாத ஒரு கதாபாத்திரம்!
யுயுத்சு என்கிற வீரனின் கதாபாத்திரம்!
.................................................................
அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்!
ஒருதடவை வியாசபகவான் அஸ்தினாபுரத்தில் விஜயம் செய்தார்!
மகாராஜன் திருதாஷ்டரன் அவரை வரவேற்கும் பொறுப்பை தனது கெட்டியோளாகிய காந்தாரியிடம் ஒப்படைத்தார்!
காந்தாரியின் விருந்து உபசரிப்பில் சந்தோஷித்து நெடுநாட்களாக கர்ப்பஸ்திரீ ஆகாமல் இருந்த காந்தாரிக்கு சந்தானபாக்கியம் நல்கினார்!
புத்திரபாக்கியம் வரவேண்டி அனுக்கிரம் செய்தார்!
ஆகையினால் அவளும் கர்ப்பிணிஸ்த்ரீ ஆகிவிட்டாள்!
அதேசமயம் குந்திதேவியோ பலரோடு கூடி ஐந்து புத்திரர்களை ஜனனம் கொடுத்துகொண்டிருந்தாள்!
காந்தாரிக்கு இரண்டுவர்ஷகாலம் ஆகியும் கர்ப்பம் இருந்தாலும் சிசு ஜெனிக்கவில்லை!
குந்திக்கு அழகான புத்திரர்கள் ஜெனிக்கின்றார்கள்!
,தனக்கு மட்டும் குழந்தைகள் ஜெனிக்கமாட்டேங்கின்றார்களே? என்று
குந்திதேவியின் மீது பொறாமை கொண்டு தனது கர்ப்பமான வயிற்றில் இரும்பு உலக்கைகொண்டு பலதடவை குத்தினாள்!
ஆகையினால் ரத்தபோக்கு ஏற்பட்டது! கர்ப்பம் சிதிலடைந்து போனது!
அதையறிந்த
வியாச முனிவர் ,
அந்த இரத்தபோக்கை நூறு பரணி குப்பியில் பிடித்து, மேலும் மற்றொரு குப்பியில் தனியாகவும் வைத்து இருட்டறையில் வைக்கசொன்னார் தாசிஸ்த்ரீமார்களிடம்
பரணிகுப்பியில் நூறு சிசுக்கள் வளரதொடங்கியது!
ஒவ்வொருவராக சிசுக்கள் ஜெனித்தார்கள்
முதலில் துரியோத னன் ஜெனித்தார்!
நூறு கௌரவன்மார்கள் ஜெனித்தார்கள்!
தனியாக வைக்கப்பட்ட குப்பியில் ஒரு பெண்குழந்தை ஜெனித்தது!
அவ்ளதான் " துச்சளை "
ஆகமொத்தம் நூறு புத்திரன்மார்களும் ,ஒரு மகளும் காந்தாரிக்கு ஜெனித்தார்கள்!
இரண்டுவர்ஷகாலம் கர்ப்பம் தாங்கியதாலும் கடுமையான உதிரபோக்கும் உண்டதாலும்!
நூற்றிஒன்று பிள்ளைகளை கவனிக்கவேண்டியும் அவளால் தனது கெட்டியாகிய திருதாஷ்டரனை கவனிக்கமுடியவில்லை!
அவரை கவனித்துகொள்ளவேண்டி ,
" சுகதா "என்கிற தாசிஸ்த்ரீயை வைத்தாள் காந்தாரி!
காலபோக்கில் திருதாட்ரனுக்கு அந்த தாசிஸ்த்ரீயோடு உறவு ஏற்பட்டது .
பார்வையில்லாமல் இருந்தாலும் சுகதா என்கிற ஸ்த்ரீயிடம் இருவரும் தாங்களின் சரீரத்தை பங்குவைத்தார்கள்!
அவர்களுக்கு ஜெனித்தவன் தான் "யுயுத்சு " என்கிற மகன்!
அச்சடித்ததுபோல் திருதாஷ்டரன் போல் இருந்தான்! அவனுக்கு கண்களில் எந்தவிதமான பார்வை குறைபாடுகள் இல்லாமல் ஜெனித்தான்!
அவனுக்கு திருதாஷ்டரன் தோற்றமும், ஆனாலும்கூட விதுரரின் நல்சுபாவமும் இருந்தது
அவன் வளர்ந்து ஒரு நல்லப்ராயம் அடைந்தான்
அவனுக்கு கௌரவன்மார்களோடும் ,பாண்டவன்மார்களோடும் சகோதரஸ்னேகம் ஒருபோல் பழகிவந்தான்!
மேலும் கண்ணனோடும் மிகபெரிய அபிமானம் கூடிய மரியாதை இருந்தது!
யுயுத்சு மற்ற கௌரவர்கள் போல் துஷ்டசுபாவசீலங்களோ? பாண்டவன்மார்களிடம் வஞ்சனை கோபமோ? கொண்டவனில்லை!
எப்போதுமே நியாயம் நீதியிலிருந்து தவறியவனும் இல்லை!
குருக்ஷேத்திரம் தொடங்கும்போது அன்றைக்கு யானைகளும், பரிவாரங்களோடு குதிரைகளும், பல்வேறுவிதமான மிருகங்கள், சைனிகஸேனகர்களும் குருக்ஷேத்திர யுத்தபூமியில் இரண்டு பக்கமும் கூடியிருந்தார்கள்!
அர்ஜீனன் சொன்னான்!
எதிரில் நிற்கின்ற எல்லா நூறு கௌரவன்மார்களும் கொல்லப்படவேண்டும் என்றான்!
ஆனால் மாதவனோ?
ஒரு கௌரவன் கொல்லப்படகூடியவில்லை என்றார்!
இதைகேட்ட அர்ஜீனன் கண்ணனை ஆச்சர்யம் கலந்த பார்வை பார்த்தான்!
கண்ணன் உத்தேசித்தது யுயுத்சுவை மனதில் வைத்துதான்!
யுதிஷ்ட்ரன் திடிரென ஒரு அறிவிப்பை யுத்தகளத்தில் உரக்கசொன்னார்!
இந்த பக்கம் இருக்கும் பாண்டவசேனைகளிலோ?
அல்லது கௌரவர்கள் சேனைகளையிலோ? யாருக்காவது? தங்களது மனதுபோல் எந்தபக்கம் என்பதை இப்போது தீர்மானிக்கலாம்!
இதை தவறாக பார்க்கப்படாது?
அவர்களை பழிவாங்குவதற்கும் உத்தேசம் இல்லை என்றார்!
அவரவர்கள் மனசாட்சி படி எந்த அணிகளில் மாறிகொள்ளலாம்? கடைசி சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது!
இதைகேட்ட இரண்டு அணி வீரர்களும் மௌனம் காத்தார்கள்!
அப்போதுதான் அந்த அதிசயசம்பவம் நடந்தது!
கௌரவசேனையிலிருந்து ஒரு தேர் பாண்டவர்கள் பக்கம் நகர்ந்தது!
அதுயாருமில்லை! சாட்சாத் யுயுத்சுவின் தேர்தான்!
இதை கண்ட துரியோதன் கடும்கோபம்கொண்டான்!
அவனை பார்த்து அம்புகுறி வைத்தான்!
அதைகண்ட பீஷ்மரோ!
துரியோதனே அவனை ஒன்றும் செய்யயாதே!
அவன் ஒரு தர்மவீரன்!
ஆகையினால் தான் யுதிஷ்ட்ரன் வார்த்தையை கேட்டு அவர்கள் அணிக்கு செல்கின்றான்!
அவன் போனால்போகட்டும்!
அவன் ஒருவன் போவதால் நமக்கு ஒன்றுமே நஷ்டப்படவேண்டியதில்லை! என்றார்!
அவன் அங்கே சென்றவுடன் யுத்தங்கள் தொடங்கும்போது நம்முடைய கௌரவர்க படைவீரன் கொண்டு அவன் நிச்சயமாக கொல்லப்பட்டு விடுவான்! நீ பொறுமை காக்கவேண்டும்!
அதைகேட்ட துரியோதன் அம்பை அம்பறாத்தூணியில் வைத்துகொண்டான்!
கண்ணன் சொன்னான்!
அல்லயோ! அர்ஜீனனே!
இந்த யுயுத்சு ஒரேநேரத்தில் ஆறாயிரம் வீரர்களை ஒரேநேரத்தில் அழிக்ககூடியவன்!
ஒருமுறை உங்களின் பால்யகாலத்தில் துரியோதன் பீமனை கொல்லவேண்டி கிணற்று குடிக்கும் நீரில் விஷம் கலந்துகொடுத்தான்!
அதை பீமனிடம் சொல்லி அவனை ரக்ஷித்தவன்தான் யுயுத்சு ஆவான்! என்றார்!
ஆகையினால் இவனை ரக்ஷிக்ககூடிய உத்தரவாதம் பாண்டவன்மார்கள் ஆகிய உங்களுக்கும் உண்டு!
அவனை கடைசிவரைக்கும் அவனை காக்கவேண்டியதும் என் கடைமையாகும் என்றார்
அன்றைக்கு முதல்நாளில் யுத்தங்கள் முடிந்தபின்னர் அனைவரும் தாங்களின் பாசறைக்கு சென்றுவிட்டார்கள்!
அங்கே கண்ணன் யுயுத்சுவையும் கூட்டிகொண்டு பாண்டவன்மார்கள் பக்கம் வந்து!
இவன் திருதாஷ்டரன் போல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவனின் சுபாவகுணங்கள் பார்க்கும்போது விதுரர் போல் நேர்மை தவறாதவன்!
விதுரர் ஒரு தாசிஸ்த்ரீக்கு தான் ஜெனித்தார்!
அதேபோல்தான் இவனும் ஒரு தாசிஸ்த்ரீக்குதான் ஜெனித்தான்!
அர்ஜீனன் கேட்டான்!
அல்லயோ?
கண்ணனே!
கடைசிவரைக்கும் அவனின் ஜீவனை ரக்ஷிக்கவேண்டும் என்றீர்கள்! எந்த உத்தேசத்தில் சொன்னீர்கள்? என்றான்!
அர்ஜீனனே! இது தர்மயுத்தம், இந்த யுத்தத்தில் நிச்சயமாக நாம் விஜயிப்போம்! கௌரவன்மார்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்!
கடைசியாக கடைசிகாலத்தில் திருதாஷ்ட்ரனக்கும் மரணம் வரும், அப்போது திருதாஷ்டரன் மரணசடங்குகளில் அவருக்காக அந்திம கர்ம்மங்கள் செய்ய ஆள் வேண்டாமா?
ஒரு மகன் வேண்டாமா? என்றார்.
மாதவன் சொன்னதும் அர்ஜீனக்கும் சரியாக பட்டது!
அதேபோல் யுத்தத்தில் பாண்டவன்மார்கள் விஜயித்து யுதிஷ்ட்ரன் பதவிப்ரமாணம் ஏற்றுகொண்டு அஸ்தினாபுரத்தில் ஆட்சியை நடத்திகொண்டு இருந்தபோது பாண்டவன்மார்கள் அனைவரும் சொர்க்கம் சென்றபோது யுயுத்சு தான் ராஜபதவியை ஏற்றெடுத்து நல்லாட்சி நடத்தினார்!
அதன்பிறகு அபிமன்யு புத்திரனாகிய பரீக்ஷத் வளரும்வரை யுயுத்சுவே ராஜபரணமும் நடத்திவிட்டு அதன்பிறகு ராஜபதவியை பரீக்ஷததிடம் ஒப்படைத்துவிட்டு தன்னுடைய தாயாராகிய சுகதாவை கூட்டிகொண்டு அஸ்தினாபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டான்!
அதன்பிறகு
அதன்பிறகு அஸ்தினாபுரத்தில் திரும்பவேயில்லை!
இவன்.
ஸ்னேகம்கூடிய
அஜய்குமார்
Saturday, July 5, 2025
Gopinath
கோபிநாதன் - நங்கநல்லூர் J K SIVAN
சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயின்ற பின் கிருஷ்ணன் மதுரா திரும்பியபோது நகரமே கோலாகலமாக அவனை வரவேற்றது. கிருஷ்ணனின் தாத்தா உக்ர சேன மகாராஜாவின் ஆட்சியில் எங்கும் சுபிக்ஷம். ''கிருஷ்ணா, உனக்காக தான் நான் காத்திருக்கிறேன். உன் கல்வி முடிந்தது, இனி நீயே ராஜா' என்று அறிவித்து விட்டார்.
கண்ணன் சந்தோஷம் அடையவில்லை. அவன் எண்ணம் பிரிந்தாவனம் சென்றது. யசோதா நந்தகோபன், கோபியர், ராதா, பசுக்கள், நண்பர்கள், வசுதேவர் கோகுலம் என்றெல்லாம் திரும்ப திரும்ப பழைய நினைவுகள் மனத்திரையில் ஓடின. தனிமையில் அமர்ந்து நினைவு கூர்ந்து உணர்ச்சி வசப்பட்டபோது கண்களில் நீர் ஆறாக பெருகியது.
கிருஷ்ணன் தந்தை வசுதேவரின் சகோதரன் மகன் உத்தவன் கிருஷ்ணனின் நெருங்கிய நண்பன். அடிக்கடி கண்ணனை சந்திப்பவன். ''கிருஷ்ணா நீ ஏன் சோகமாக இருக்கிறாய் ?''.''உத்தவா, இனி நான் மதுராபுரி அரசன். பழைய பிருந்தாவன கிருஷ்ணனாக பசுக்கள் பின் சென்று சுதந்திரமாக சுற்றி எல்லோருடனும் பழகி ஓடி ஆடி விளையாட முடியாதே.''உத்தவனுக்கு பக்தி உணர்வு போதாது. அவன் பிருந்தாவனம் சென்று அங்கு எல்லோரையும் சந்தித்து ஞானம் பெறவேண்டும் என்று கிருஷ்ணனுக்கு தோன்றியது.
''உத்தவா, நீ பிருந்தாவனம் போ. அங்குள்ள மக்களுக்கு என்னுடைய கடமையை எடுத்துச் சொல். என்னை மறந்து வாழ உபதேசி. வேதாந்த ஞானத்தை போதி. என்னை மறந்து வாழ வேண்டிய நிலையை எடுத்துரைத்து விட்டு வா''
''கிருஷ்ணா, எப்படி கல்வியறிவில்லாத சாதாரண பிருந்தாவன மக்கள் வேதாந்த ஞானம் எல்லாம் புரிந்து கொள்வார்கள்?''
'நீ நினைப்பது தவறு. பிருந்தாவன கோபியர்கள் ஞானிகள், சகலமும் துறந்தவர்கள். கல்வியை விட சிறந்த பூரண அன்பை உணர்ந்து அநுபவிப்பவர்கள். அவர்களுக்கு நீ அறிவை புகட்டு வாய். ஞானம் அளிப்பாய் வேதாந்தம் போதிப்பாய். நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் எப்போதும் கொண்டவன் மறக்கமாட்டேன் என்று சொல். போ. ''
உத்தவன் உருவத்தில் கிருஷ்ணனைப் போலவே இருப்பவன். கிருஷ்ணன் அவனுக்கு பீதாம்பரம் வைஜயந்தி மாலை எல்லாம் அளித்து கோபியரை சந்திக்கும் முன்பு இவற்றை அணிந்து கொள். ''என்னைத் தவிர வேறு யாரையும் அவர்கள் பார்த்ததில்லை. நீ என் தூதன் என்று இந்த உடை அறிவிக்கும். என் தாய் தந்தையரைப் போய் பார். விரைவில் சந்திக்கிறேன் என்று சொல் '' என்கிறான் கிருஷ்ணன்.++
கிருஷ்ணன் சென்றபின் பிருந்தாவனம் சோபை இழந்துவிட்டது. கோபியரின் கண்ணீர் ஆறாக ஓடியது. பசுக்கள் மேய்வதை நிறுத்தி விட்டன. நந்தகோபன் யசோதை உணவை மறந்து பல காலம் ஆகிவிட்டது. கிருஷ்ணன் சாப்பிட்டபின் தானே நான் சாப்பிடும் வழக்கம். அவனுக்காக காத்திருக்கிறேன்'' என்கிறாள் யசோதை.
''நீங்கள் கண்ணனை பசுக்களை மேய்க்க அனுப்பியதால் வந்தது இது. பாவம், அவன் காய்ந்த ரொட்டியை தின்று பசுக்கள் பின் ஓட வேண்டி இருந்தது. இந்த வாழ்க்கை வெறுத்து அல்லவோ அவன் மதுரா சென்றுவிட்டான்'' என்று நந்தகோபனைச் சாடினாள் யசோதை.
''யசோதா, நீ சொல்வது தப்பு, நான் அவனை மேய்ச்சலுக்கு அனுப்பவில்லை, அவனே அல்லவோ இனி நான் பசுக்களை கவனிக்கிறேன் என்று என்னிடம் சொல்லி பொறுப் பேற்றான். பசுக்கள் அவனுக்கு பிடித்தவை. இப்போது மதுராபுரி நகர மஹாராஜா அவன். நம்மை கண்ணையா மறந்து போக வேண்டிய நிலைமை . நாம் என்ன செய்யமுடியும்?''
ஊர்க் கோடியில் தேர் வருவதை பார்த்த கோபர்கள் குதூகலம் அடைந்தார்கள். ''ஆஹா நம் கிருஷ்ணன் வந்துவிட்டான்'' என குதித்தார்கள். தேரை நோக்கி ஓடியவர்கள் உத்தவனைப் பார்க்கிறார்கள்.''கிருஷ்ணனிடமிருந்து சேதி கொண்டுவந்திருக்கிறேன்''.'' விரைவில் உங்களை சந்திப்பான்.
''இல்லை சேதி வேண்டாம். கிருஷ்ணன் தான் வேண்டும். கிருஷ்ணன் கல் நெஞ்சன். எங்களை மறந்துவிட்டான். அவனில்லாமல் நாங்கள் வெறும் நடை பிணங்கள் இங்கே'' என்கிறார்கள்.
வாசலில் தேர் நின்றதை நந்தகோபனும் யசோதையும் பார்க்கிறார்கள்.கிருஷ்ணனை எதிர்பார்த்து ஓடிய நந்தகோபன் வேறு யாரோ இறங்குவதை பார்த்து மயங்கி விழுந்தான். எல்லோரும் கிருஷ்ணனை நினைத்து அவன் வராததால் அழுவதை பார்த்தான்உத்தவன். சோகத்தில் உச்சிக்கு சென்று மரத்துப்போய் யசோதை உணர்ச்சியற்ற மரக் கட்டை யாக பேசாமல் நின்றாள்.
''உத்தவா, நீ கிருஷ்ணனிடம் போய் நந்தகோபன் யசோதை இருவரும் அழுகையில் இருந்து மீளவில்லை. யசோதை உன் நினைவாகவே இருக்கிறாள், அவள் மடியில் நீ அமர்ந்திருப்பது போலவே எப்போதும் உணர்கிறாள். யமுனை நதியின் கருநிறம் உன்னை அவளுக்கு அருகிலேயே நீ இருப்பது போல் ஆறுதளிக்கிறது''என்று சொல்.
உத்தவன் அந்த மக்களின் தூய கிருஷ்ண பக்தியை அறிகிறான். அவர்களுக்கு போதிக்கும் தகுதி தனக்கில்லை என்று உணர்கிறான். எங்கும் கோபியர் பாடும் கிருஷ்ண பஜனையை கேட்கிறான். யமுனையில் கிருஷ்ணனை வணங்கி ஸ்னானம் செய்கிறான். எங்கும் கிருஷ் ணன் புல்லாங்குழல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் என்கிறார்களே'' என்று கிருஷ்ணனை எங்கும் எதிலும் காணும் ஒட்டு மொத்த பக்தர்கள் இவர்கள் என்று புரிகிறது.
கோபியரின் பக்தி புரிகிறது. வேதாந்த ஞானம் போதிக்க முயலவில்லை. அவர்களே ''எங்களுக்கு கிருஷ்ணன் நினைவு ஒன்றே போதும், வேறெதுவும் தேவை இல்லை'' என்று கூறிவிட்டார்களே .
ராதையின் முன் நிற்கிறான் உத்தவன். ''அம்மா உனக்கு கிருஷ்ணன் சேதி அனுப்பி இருக்கிறான் என் மூலம் '' என்கிறான்.
''உன் சேதி வேண்டாம் உத்தவா , கண்ணன் எப்போதும் என்னுள் இருக்கிறான், நானும் அவனும் பேசாத விஷயம் எதுவும் இல்லை, உன் சேதி வேண்டாம் நீயே வைத்துக் கொள்'' என்று அனுப்பிவிட்டாள் .
கோபியருக்கு போதிக்க வந்தவன் அவர்கள் சீடனாக திரும்புகிறான். கிருஷ்ணன் முன் மதுராவில் கைகட்டி நின்றான்.
''என்ன உத்தவா, பிருந்தாவனத்தில் கோப கோபியர் யசோதை நந்தகோபன், ராதை எல்லோ ருக்கும் சேதி சொல்லி அவர்களுக்கு நான் ஒரு அரசனாக புரியவேண்டிய கடமையை எடுத்துச் சொன்னாயா?'' என கேட்கிறான்.
''கிருஷ்ணா, எனக்கு அவர்களுக்கு போதிக்கும் ஞானம் இல்லை. பக்தி என்றால் என்ன, கடவுளை எப்படி மனதில் நிலையாக நிறுத்தி அனுபவிக்கவேண்டும் என்பதை அவர்களிட மிருந்து நான் தான் தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன். கிருஷ்ணா, நீ கிருஷ்ணன் இல்லை,''கோபி நாதன்'' என்கிறான் உத்தவன்.
How to sleep ?
*தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது* :
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.
பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
* _சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்_
*இதன் விளக்கம்* :-
இரவில் நித்திரை செய்யாதவர்கள் தன்உடலில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
* உத்தமம் கிழக்கு
* ஓங்குயிர் தெற்கு
* மத்திமம் மேற்கு
* மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
* மல்லாந்து கால்களையும், கைகளையும்அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.
இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.
* குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
* இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.
மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்
* வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.
சித்தர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் நன்மைக்காகவே இருக்கும்…
💁♂️
Ashada ekadasi & pandharpur
*ஆஷாட ஏகாதசியும் பந்தர்பூர் யாத்திரையின் சிறப்பும்!*🌹
ஆஷாட ஏகாதசி இம்மாதம் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. வியாச பூர்ணிமாவுக்கு முன்னதாக வருவது ஆஷாட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளான இதனை, 'தேவசயனி ஏகாதசி' என்றும் கூறுவர். மகா ஏகாதசி, பத்ம ஏகாதசி, தேவபோதி ஏகாதசி என்றும் அழைக்கப்படும் இந்த நாளில் மகாவிஷ்ணு யோக நித்திரைக்குச் (உறங்கச் செல்வதாக) செல்வதாக ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் பிரபோதினி ஏகாதசியன்று விஷ்ணு பகவான் தனது யோக நித்திரையிலிருந்து விழிப்பதாகக் கருதப்படுகிறது. சயனி ஏகாதசி சதுர் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.
பண்டரிபுரத்தில் ஆஷாட ஏகாதசி: ஆஷாட ஏகாதசி என்பது அன்னை, தந்தையரை போற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை உணர்த்தும் நாளாகக் கூறப்படுகிறது. இந்நாளில்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மிணி தேவியுடன் விட்டலனுக்காக பாண்டுரங்கனாகக் காட்சியளித்தார். எனவே, ஆஷாட ஏகாதசி பண்டரிபுரத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆஷாட ஏகாதசி மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். 700 வருடங்களுக்கும் மேலாக பக்தர்கள் இந்நாளில் பல இடங்களிலிருந்தும் பண்டரிபுரத்திற்கு ஆயிரக்கணக்கில் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
17 நாட்கள் நடைபெறும் நிகழ்வு: புகழ் பெற்ற 'பண்டர்பூர் வாரி யாத்திரை' 17 நாட்கள் நடைபெறும் நிகழ்வாகும். இதில் துறவிகளின் உருவங்களைக் கொண்ட பால்கிகள் (பல்லக்குகள்) எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு அபங்கங்களைப் பாடிக்கொண்டு பாண்டுரங்கனின் தரிசனத்தை நோக்கி மக்கள் வெள்ளமென செல்வர். வைணவ மடங்களில் இந்நாளில் 'தப்த முத்ரா தாரணை' என்ற முத்திரைகளை அணியும் வழக்கமும் உண்டு. இந்நாளில் மக்கள் நாசிக்கில் கோதாவரி நதியில் நீராடக் குவிவார்கள்.
பந்தர்பூர் யாத்திரை: பந்தர்பூர் யாத்திரை ஆஷாட ஏகாதசி அன்று (ஜூலை 6) முடிவடைகிறது. மகாராஷ்டிராவில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. புனேவுக்கு அருகிலுள்ள தேஹுவைச் சேர்ந்த துக்காராம் மகாராஜின் பால்கி, ஆலந்தியைச் சேர்ந்த சாந்த் ஞானேஷ்வரின் பால்கி (பல்லக்கு) மற்றும் பல்வேறு துறவிகளின் வெள்ளிப் பாதுகைகளை சுமந்து கொண்டு ஏராளமான பால்கிகள் (பல்லக்குகள்) 21 நாட்கள் பயணத்துக்குப் பிறகு பந்தர்பூரில் உள்ள பகவான் ஸ்ரீ ஹரிவிட்டல் கோயிலுக்கு வந்து சேர்வார்கள். இவர்கள் விட்டலனின் புகழைப் பாடியபடி கால்நடையாகவே நடந்து சென்று பகவானின் தரிசனத்திற்காக கோயிலை அடைவார்கள்.
புண்டரீகனின் சேவை: புண்டரீகன் பெற்றவர்களிடம் வைத்திருக்கும் அன்பு மற்றும் பக்தியின் சிறப்பை உலகுக்கு உணர்த்த விரும்பிய கிருஷ்ண பகவான், புண்டரீகனின் குடிசைக்கு வந்து வாசலில் நின்று கூப்பிட, பெற்றவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த புண்டரீகன் தனது வீட்டு வாசலில் வந்து நின்ற கிருஷ்ண பகவானை கவனிக்காமல் ஒரு செங்கல்லை போட்டு அதில் கிருஷ்ண பகவானை நிற்கச் செய்தான். தனது பெற்றோருக்கு செய்யும் சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தவன், பிறகு வெளியில் வந்து வந்தது யார் என்ற உண்மை தெரிந்ததும் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டான்.
ஸ்ரீ கிருஷ்ணரோ, ''பெற்றவர்களுக்கு செய்யும் சேவை தெய்வத்திற்கு செய்யும் சேவையை விட உயர்ந்தது. இதை உணர்த்தவே இப்படி ஒரு லீலையை செய்தேன். இனி இந்த இடம் 'பண்டரிபுரம்' என்று அழைக்கப்படும். எல்லோரும் உன்னையும் விட்டல் என்று அழைத்து, உன்னிடம் என்னையே தரிசிப்பார்கள். பெற்றவர்களுக்கு செய்த சேவையால் மகத்தான புண்ணியத்தை அடைந்து விட்டாய். இங்கு வந்து தரிசிப்பவர்களின் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும்' என்று அருளிச் சென்றார்.
பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் பாண்டுரங்கனாகக் கோயில் கொண்ட நாள்தான் ஆஷாட ஏகாதசி. இந்நாளில் பகவானை விரதம் இருந்து வழிபட, அளவற்ற நன்மைகளைப் பெறலாம்.🌹
Friday, July 4, 2025
Lalita sahasranam 10 to 20 in tamil
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர் J K SIVAN
நாமங்கள்: 10- 20
मनोरूपेक्षु-कोदण्डा पञ्चतन्मात्र-सायका ।
निजारुण-प्रभापूर-मज्जद्ब्रह्माण्ड-मण्डला ॥ ३॥
Mano Rupeshu Kodanda Pancha than mathra sayaka
Nijaruna prabha poora majjath brahmanda mandala
மநோரூபேக்ஷு கோதண்டா பஞ்சதந்மாத்ரஸாயகா |
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா || 3
चम्पकाशोक-पुन्नाग-सौगन्धिक-लसत्कचा ।
कुरुविन्दमणि-श्रेणी-कनत्कोटीर-मण्डिता ॥ ४॥
Champakasoka – punnaga-sowgandhika-lasath kacha
Kuru vinda mani – sreni-kanath kotira manditha
சம்பகாசோகபுந்நாக ஸௌகந்திகலஸத்கசா |
குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா || 4
अष्टमीचन्द्र-विभ्राज-दलिकस्थल-शोभिता ।
मुखचन्द्र-कलङ्काभ-मृगनाभि-विशेषका ॥ ५॥
Ashtami Chandra vibhraja – dhalika sthala shobhitha
Muka Chandra kalankabha mriganabhi viseshaka
அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா |
முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா || 5
वदनस्मर-माङ्गल्य-गृहतोरण-चिल्लिका ।
वक्त्रलक्ष्मी-परीवाह-चलन्मीनाभ-लोचना ॥ ६॥
Vadana smara mangalya griha thorana chillaka
Vakthra lakshmi –parivaha-chalan meenabha lochana
வதநஸ்மரமாங்கல்யக்ருஹதோரணசில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீபரீவாஹசலந்மீநாப லோசநா || 6
नवचम्पक-पुष्पाभ-नासादण्ड-विराजिता ।
ताराकान्ति-तिरस्कारि-नासाभरण-भासुरा ॥ ७॥
Nava champaka –pushpabha-nasa dhanda virajitha
Thara kanthi thiraskari nasabharana bhasura
நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா |
தாராகாந்திதிரஸ்காரிநாஸாபரண பாஸுரா || 7
ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 10-20
* 10 * मनोरूपेक्षुकोदण्डा - மநோரூபேக்ஷு கோதண்டா -
அவள் கையில் இருக்கும் கரும்பு வில் என்ன உணர்த்துகிறது? . அவள் இனிய மனத்தை தான் குறிப்பிடுகிறது. பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா? அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு. அதுவே தீயோர்க்கு இரும்பு !
* 11 * पञ्चतन्मात्रसायका -பஞ்சதந்மாத்ரஸாயகா -
தன்மாத்திரைகள் ஐந்து என்ன தெரியுமா? ஐம்புலன்களினால் நான் அனுபவிப்பது.
தொடுவது, நுகர்வது, கேட்பது, ருசிப்பது, காண்பது. இவற்றை அவள் அளித்த, மெய், வாய் கண் மூக்கு செவி எனும் இந்திரியங்களால் உணர்கிறோம். இவை ஐந்தும் ஐந்து வில்லாக ஏந்தியவள் . அவளின்றி நாம் ஏதும் செய்ய இயலாதவர்கள் என்று பொருள் தருகிறது அல்லவா?
12 * निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला - நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா -
உதய சூரியனை கண்டு ஆனந்தித்ததுண்டா? செக்கச்செவேலென கிழக்கே, பெரிய உருண்டை யாக, இன்னொரு உலகமோ என்று வியக்க வைக்கும் செந்நிறம் அம்பாளுடையது. அதில் இந்த புவனமே அடக்கம்., எல்லா மண்டலங்களுமே என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு.
* 13 * चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
அம்பாள் தனது சிரசில் என்னென்ன மலர்களை சூடிக்கொண்டிருக்கிறாள் என்று ஹயக்ரீவர் அறிவார் அல்லவா?. சொல்கிறார் அகஸ்தியருக்கும் நமக்கும். "செண்பகம், புன்னாகம், சௌகந்திகா, (இந்த நறுமண மலரைத் தேடிக்கொண்டு தான் பீமன் விண்ணுலகு சென்று வழியில் ஹனுமான் வாலை நகர்த்தமுடியாமல் தவித்தான்)
* 14 * कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
ஆஹா, வரிசை வரிசையாக பல வித வர்ணங்களில் கண்ணைப்பறிக்கும் நவரத்ன ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ மணி மகுடம் தரித்திருக்
கிறாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை. குருவிந்தமணியைத்தான் குந்துமணி என்று பிள்ளையாருக்கு கண்ணாக வைத்து விநாயக சதுர்த்தியில் களிமண் பிள்ளையார் வாங்குகிறோம். சிவப்பில் கருப்பு புள்ளி அழகோ அழகு.
* 15 * अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
அஷ்டமி அன்று ராத்திரி சந்திரன் கண்டு களித்ததுண்டா?ஒருநாள் மொட்டைமாடியில் நின்று ரசித்தால் தெரியும். அந்தமாதிரி ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றிஅவள் முக லாவண்யத் திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.
* 16 *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
எவ்வளவு விசாலமான அழகிய சந்திரன் போன்ற நெற்றி. அதில் அழகு சேர்க்கும் கஸ்தூரி திலகம், ஹயக்ரீவர் அது எப்படி இருக்கிறது என்று ஒரு உதாரணம் தருகிறார். நான் மேலே சொன்ன சந்திரனில் ஒரு கருப்பு நிழல் தெரியுமே அது போல , என்கிறார். சிலர் அதை பாட்டி உட்கார்ந்து தோசைக்கு மாவு அரைக்கிறாள் என்பார்கள், சிலர் முயல் என்பார்கள், சந்தாமா, அம்புலிமா, பத்ரிகை இந்த முயல்சின்னத்தை பிரபலமாக்கியது.
* 17 * वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
இதோ அழகாக இருக்கிறதே இது தான் மன்மதன் வசிக்கும் இடமா என்று சந்தேகம் வருகிறதா? இல்லை, அத
Lab report & cat scan - Joke
A woman brought a very limp duck into a veterinary surgeon.
As she laid her pet on the table, the vet pulled out his stethoscope
and listened to the duck's chest.
After a moment or two, the vet shook his head
sadly and said, "I'm sorry, your duck Cuddles, has passed away."
The distressed woman wailed, "Are you sure?"
"Yes, I am sure. The duck is dead," replied the Vet.
"How can you be so sure?" she protested.
"I mean you haven't done any testing on him or anything.
He might just be in a coma or something."
The vet rolled his eyes, turned around and left
the room.
He returned a few minutes later with a *Labrador*.
As the duck's owner looked on in amazement,
The dog stood on his hind legs, put his front paws on the examination table and sniffed the duck from top to bottom.
He then looked up at the vet with sad eyes and shook his head.
The vet patted the dog on the head and took it
out of the room.
A few minutes later he returned with a *cat*.
The cat jumped on the table and also delicately sniffed the bird from head to foot.
The cat sat back on its haunches, shook its head, meowed softly and strolled out of the room.
The vet looked at the woman and said, "I'm sorry, but as I said, this is most definitely, 100% certifiably, a dead duck."
The Vet turned to his computer terminal, hit a few keys and produced a bill, which he handed to the woman.
The duck's owner, still in shock, took the bill. "Rs. 3000!" she cried, "Rs. 3000 just to tell me my duck is dead!"
The vet shrugged,
*"I'm sorry. If you had just taken my word for it, the bill would have been Rs.100, but with the "Lab Report " and the "Cat Scan", it's now Rs 3000."*
This is *Healthcare* today!
Good Day. Take Care.
Be Safe. Be Healthy
Thursday, July 3, 2025
I & mine - HH Bharati Teertha Mahaswamigal
*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*
நிர்மமோ நிரஹங்கார:
மனிதனுக்கு, தான் சிறியதொரு நற்காரியம் செய்தாலும்கூட "நான் செய்தேன்" என்று அஹங்காரம் வரும். அந்த அஹங்காரம் நிறைய தவறுகளுக்குக் காரணமாக அமைந்துவிடும். "நான் தவறு செய்தால் என்னை யார் கேட்பார்கள்? எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு எது இஷ்டமோ நான் அதைச் செய்வேன்" என்கிற ஒரு மனோபாவத்தை அஹங்காரம் ஏற்படுத்துகிறது. இத்தகைய மனோபாவம் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படையாகும். எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்பவனைவிட நிறையத் தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எனக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று சொல்பவனைவிடச் சக்தி வாய்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இந்த உண்மையெல்லாம் அஹங்காரம் உள்ளவர்களுக்குத் தெரியாது. மேலும் நாங்கள் செய்கின்ற தீய செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று வேறு நினைத்துக் கொள்கிறார்கள். நம்முடைய செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைப்பது தவறு. நாமும் நமது தவறான செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆதித்யசந்த்ராவனலோSநிலச்ச
த்யெளர்பூமிராபோ ஹ்ருதயம் யமச்ச I
அஹச்ச ராத்ரிச்ச உபே ச ஸந்த்யே
தர்மச்ச ஜானாதி நரஸ்ய வ்ருத்தம் II
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மனிதன் செய்யும் காரியங்களை பஞ்சமஹாபூதங்களான பிருத்வீ, தேஜஸ், ஜலம், வாயு, ஆகாசம், சூரிய சந்திரர்கள், ஸந்தியா காலம், மனதினுள்ளிருக்கும் அந்தர்யாமியான பரமாத்மா – இவ்வளவு பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போது யாரும் பார்க்கவில்லை என்று சொல்வது முறையா? இத்தகைய பேச்சு நமக்கு வருவதற்கு நம்மிடமுள்ள அஹங்காரம்தான் காரணம். அஹங்காரம்தான் தவறுகள் பல நடப்பதற்கும் காரணம். ஆகவே அஹங்காரம் இருக்கக் கூடாது.
Wednesday, July 2, 2025
Knowing GOD - Sanskrit story
'' *ॐ* ''
|| *बोधकथा* || { *गुरूणां* *कथा* }
'' *ईश्वरस्य* *अनुभूतिः* ''
एकधार्मिकः व्यक्तिआसीत् | सः श्रद्धयाः ईश्वरं भजन्ते स्म | तस्यमनसि ईश्वरस्य चित्रमाऽसित | अथवा तेन मनसि ईश्वरस्य चित्रं अलिखितम् आसीत् | एकस्मिन् दिने तेन भक्त्या ईश्वरं आहूता तथा च उक्ता हे ईश्वरः ! मया सह वार्तालापं करोतु इति | तस्मिनक्षणे एकाकोकिला कूजनम् आरब्धवती | किन्तु तेन न श्रुतम्| इदानीम् सः उच्चैः चित्कारं कृतम्| तत्क्षणं एव आकाशे मेघाऽगता तथा च मेघस्य गर्जनम् आरब्धाः , वृष्टिंऽपि पतिता | किन्तु तेन किमऽपि न श्रुताः| उपरि-अधः, अत्र- तत्र ,सः सर्वत्र निरीक्षणं कृतवान् | अनन्तरं उक्तवान् हे ईश्वरः ! मम पुरतः आगच्छतु , अहं भवन्तं द्रष्टुम् इच्छामि | तत्क्षणेऽव मेघाच्छादितसूर्यं भासमानं भूत्वा बर्हिऽऽगता | किन्तु तेन किमऽपि न दृष्टाः |
तथा च अतीऽव उच्चैस्वरेण चित्कारम् आरब्धम् | हे ईश्वरः ! किमऽपि चमत्कारं दर्शयतु माम| तन्ननिमिषेऽव एकशिशुं अजयात,तच्च तेन प्रथमवारं रुदनंआरब्धम् | सर्वत्र रुदनस्य ध्वनिप्रसृताः , किन्तु सः उदासीनव्यक्ति कुत्रापि ध्यानं न दत्तवान् | इदानीम् सः व्यक्तिः रोदनं आरब्धवान् तथा च ईश्वरं याचितवान् – हे ईश्वरः!
मां स्पृशतु | तेन अहं ज्ञातुं शक्नोमि यद् त्वं मम समीपे अस्ति इति तदा एकं डयमानचित्रपङ्तगं तस्य हस्तोऽपरि उपविष्टाः,किन्तु तेन चित्रपङ्तगं न दृष्टाः,अपितु चित्रपङ्तगं विकिरिताः |
तथा च अनुत्साहितमनसा स अग्रे गतवान् | ईश्वरेण विविधानिरूपाणि धृत्वा तस्य समक्ष स्वं प्रस्तुताः तथा च तेन सह वार्तालापं अपिकृता | किन्तु एषव्यक्तिः ईश्वरं ज्ञातुं न शक्ता | सम्भवतः तस्य मनसि ईश्वरस्य किमऽपि चित्रं नासीत |
प्रत्येकस्थानं ईश्वरस्य वासं अस्ति | सर्वत्र ईश्वरं निवासयति एतोऽपरि विश्वासं आवश्यकम् | किन्तु वयं स्वसामर्थ्यानुसारं तं पश्यामः| संवेदनशीलमनेऽव ईश्वरस्यअनुभूतिं कर्तुम् समर्थाः |
सत्यम् उक्ता महाभारतं विदुरेण यद् ---''
'' न देवा दण्डमादाय रक्षन्ति पशुपालवत् |
यं तु रक्षितुमिच्छन्ति बुद्ध्या संयोजयन्ति तम् | ''
ॐॐॐॐॐॐॐॐॐॐ
डॉ.वर्षा प्रकाश टोणगांवकर
पुणे / महाराष्ट्रम्
--------------------------
Bel leaf will remove sins for 7 janmas
#வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் .!!!!!*
🕉 🙏 💐
அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் பற்றிப் பார்ப்போம்
ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்
சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.
வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன
குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்
ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்
வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்
தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு
மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்
வில்வ வழிபாடும் பயன்களும்
சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்
வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது
மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்
எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்
வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன
வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்
அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது
சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்
அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான்
ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்
வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்
ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது
சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது
நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.
மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும்.
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும்
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது
ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்
வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.
வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்
மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே
பொருள் விளக்கம்
போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்
ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.
வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்
இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை "சிவமூலிகைகளின் சிகரம்" எனவும் அழைப்பர்.
வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.
கொலஸ்ட்ரால் வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.
வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி ,சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
Subscribe to:
Posts (Atom)