Thursday, May 1, 2025

Prasnottara malika

ஆதி சங்கரரின் வினா விடை -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

२२.  किं दानं? अनाकाङ्क्षं, किं मित्रं? यो निवारयति पापात्।कोऽलंकारः शीलं, किं वाचां मण्डनं? सत्यं॥
22.  kim daanam? Anaakaangksham, kim mitram? Yo nivaarayati paapaat Ko'lamkaarah? Sheelam, kim vaachaam mandanam? Satyam

55. எது தானம்?
ஒருவர் கேட்காமலேயே  அவருக்கு தேவைப்படும் வஸ்துவை தருவது. 

56. எவன் உண்மையான நண்பன்?
''டேய்  இப்படி செய்யாதே''  என்று நாம் தவறு செய்யாமல், பாபம் செய்யாமல் தடுப்பவன்..

57. எது ஒருவனுக்கு ஆபரணம்?
நன்னடத்தை.

58 எது ஒருவன் வாக்கை, சொல்லை அலங்கரிப்பது?
சத்யம். உண்மை. 

२३. विद्युद्विलसितचपलं किं? दुर्जनसंगतिर्युवतयश्च।  कुलशीलनिष्प्रकंपा: के कलिकालेऽपि? सज्जना एव॥
23.   vidyudwilasitachapalam kim? Durjanasangatir yuvatayashcha Kulasheelanishprakampaah ke kalikaale'pi? Sajjanaa eva
   
59. எது மின்னல் போல் தோன்றி மறைவது? 
தீயவர்கள்  நட்பு. 

60. எவன் இந்த கலிகாலத்திலும்  கூட  நல்வழியிலிருந்து பிறழாதவன். கட்டுப்பாடுடையவன்.?
நன்னெறியை, சன்மார்க்கத்தை விடாமல் கடைப்பிடித்து நடக்கும் நல்லோர். 

२४.   चिन्तामणिरिव दुर्लभमिह किं? कथयामि तच्चतुर्भद्रं।  किं तद्वदन्ति भूयो विधूततमसो विशेषेण?
२५. दानं प्रियवाक्यसहितं ज्ञानमगर्वं क्षमान्वितं शौर्यं।   वित्तं त्यागसमेतं दुर्लभमेतच्चतुर्भद्रं॥

24.   Chintaamaniriva durlabhamiha  kim?  Kathayaami tachchaturbhadram Kim tadwadanti bhooyo  vidhootatamaso visheshena
25.   daanam priyavaaksahitam  jnaanamagarvam  kshamaanvitam shauryam Vittam tyaagasametam durlabhametat chaturbhadram
 
 61. தம்பி உனக்கு தெரியுமா?  சொல்.   எது  சிந்தாமணி போல் இரும்பையும் தங்கமாக்குவது?
''  சாதுர் பத்ரம்  என்ற  நாலு சமாச்சாரங்கள்'

''எது அந்த நாலு சமாச்சாரம் என்று பெரியோர் சொல்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் விளக்கமாக சொல்லேன்?''

1. தர்மமோ தானமோ செய்யும்போது அன்போடு இதமாக, மனதை குளிர்விக்கும் சொற்களோடு அதை தருவது
2. அகம்பாவம்,   கர்வம்,  இல்லாத  கல்வி அறிவு. ஞானம். 
3.மன்னிக்கும்  தன்மை கொண்ட கம்பீரம். வீரம். 
4. செல்வம் இருந்தாலும் அதை தாராளமாக பிறருக்கு அளிக்கும் கொடை  உள்ளம்.   
இந்த நாலும் தான்  அற்புதமான செல்வங்கள்.

२६. किं शोच्यम्? कार्पण्यं, सति विभवे किं प्रशस्तं? औदार्यं ।  कःपूज्यॊ विद्वद्भिः? स्वभावतः सर्वदा विनीतो यः
 26.  kim shochyam? Kaarpanyam, sati vibhave kim prashastam? Audaaryam  Kah poojyo vidwadbhih? Swabhaavatah sarvadaa vineeto yah
  
62. எதற்கு வருந்தவேண்டும்?
கருமித்தனம் இருக்கிறதே என்று. கருமி தானும் அனுபவிப்பதில்லை, பிறரையும் அனுபவிக்க விடுவ தில்லை. அவன் செல்வத்தால் இவ்வுலகிலும்  எவ்வுலகிலும் அவனுக்கு பயனில்லை. 

63.சகல சௌபாக்யங்கள்  இருந்த போதும் எது புகழப்படுகிறது?
தர்ம , தயாள குணம். கருணை உள்ளம்.

64.  எவரை கற்றோர்கள், அறிஞர்கள் போற்றுவார்கள்?
எவன்  இயற்கையாகவே  எளிமை, கருணை இரக்க  ஸ்வபாவம் கொண்டவனோ அவனை.

No comments:

Post a Comment