மந்த்ரார்த்தத்திற்கு முன்னால் சில குறிப்புகள்.
ஈச்வரனுக்கு 'ஸத்யோஜாதன், வாமதேவன், அகோரன், தத்புருஷன், ஈசானன்' என்று ஐந்து முகங்கள். ஸத்யோஜாதன் முதலான நான்கு முகங்கள் நான்கு திசைகளிலும், ஈசானன் ஆகாசத்திலும் விளங்குகின்றன.
ஸத்யோஜாதன் அகங்காரத்தையும் (இருப்பு - Existence), வாமதேவன் மனஸையும், அகோரன் புத்தியையும், தத்புருஷன் மாயாப்ரக்ருதியையும், ஈசானன் ஆத்மாவையும் (புருஷன்) குறிக்கின்றனர்.
வேதத்தில் பஞ்சமுகங்களை துதிக்க ஸத்யோஜாதம் முதல் ஈசான: வரை மந்திரங்கள் உள்ளன. நாம் பார்க்கப்போவது 'ஈசான:' என்று ஆரம்பிக்கும் மந்த்ரம்.
இனி மந்த்ரார்த்தம்.
பதச்சேதம்
ईशान:, सर्वविद्यानाम् , ईश्वर:, सर्वभूतानाम्, ब्रह्माधिपति:, ब्रह्मणोधिपति:, ब्रह्मा, शिव:, मे, अस्तु, सदाशिवोम् ।
எல்லா வித்யைகளிலும் துலங்கும் ஈசானன், எல்லா பூதங்களிலும் (உயிர்களிலும்) விளங்கும் ஈச்வரன், ( ஒப்புநோக்க ஈசாவாஸ்யோபநிஷத் ஆரம்பவரிகள்- ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்- ஜகத்தில் எல்லாம் ஈச்வரனால் வியாபிக்கப்பட்டுள்ளது )
ப்ரம்மத்திற்கு அதிபதி, ப்ரம்மத்தை அறிந்தவர்களின் அதிபதி, ப்ரம்மா (ஸ்வயம்) ஆகிய சிவன்
ஸதாசிவமாக எனக்கு இருக்கட்டும்.
இங்கு சில விஷயங்கள் - வித்யைகளின் மேலான வித்யை ப்ரம்மவித்யை, ப்ரம்மவித்யையை அறிபவன், ஸ்வயம் ப்ரம்மா எல்லாம் சிவம் (சிவம் என்றால் ஆனந்தம் என்ற அர்த்தமும் உண்டு). அப்பேர்ப்பட்ட சிவம் எப்போதும் ஆனந்தமாக (ஸதாசிவமாக) எனக்கு விளங்கட்டும். (அப்படி விளங்கவேண்டுமானால் மாயை விலகி பேதபாவம் கழிந்து ஈச்வரன் எனக்குள்ளே ப்ரகாசிக்கவேண்டும் -அத்வைதபாவம்)
இந்த மந்த்ரத்திற்கு படம் வரைய நினைத்தபோது, சட்டகத்திற்குள் அடங்காமல் ஈச்வரன் வரைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். (ஸத்யம் சிவம் ஸுந்தரம் - ஸத்யம் ஞானம் அனந்தம் - அனந்தத்தை (infinity) எப்படி frame-ல் வரைவது) அதனாலேயே முடியும், முகமும் ஓவியத்தில் முடிவடையாமல் உள்ளது.
No comments:
Post a Comment