Friday, November 22, 2024

Serving parents - spiritual story

நீதி கதைகள் 

(3) ** பிதரோ அர்ச்சாச பத்யு: ச ஸாம்யம் ஸர்வ ஜனேஷுச |
மித்ராத்ரோஹ: விஷ்ணுபக்தி: ஏதே பஞ்ச மஹாமகா ||

தாய் தந்தையரை அர்ச்சிப்பது, பூஜிப்பது, கணவரைப் பூஜிப்பது, மக்கள் அனை வரிடமும் பாகுபாடின்றி ஸமமாக‌ நடப்பது நண்பனுக்கு த்ரோஹம் செய்யாமலி ருப்பது, திருமாலிடம் பக்தி செய்வது ஆகிய இவ்வைந்தும் மாபெரும் வேள்வி களாகும்.

தாய் அனைத்து புண்யநதி ஸ்வரூபமானவள். தந்தையோ அனைத்து தைவ ஸ்வரூபமாக விளங்குபவன்.‌ இவர்கட்குச் செய்யும் சுச்ருஷையோ, பணி விடையோ அனைத்து புண்ய நதி தடாகங்களில் செய்த ஸ்நானத்தின் பலனை யும், எல்லா தெய்வங்களையும் ஆராதித்தின் பலனையும் அளிக்கவல்லது.
இவர்களை மதிக்காதவர்கள் பெரும் துன்பத்தையே பெறுவர்.

நரோத்தமன் ஒரு அந்தணன். முதியோர்களாகிய தாய் தந்தையரை மதித்துப் போற்றி வளர்க்காது, க்ஷேத்ராடனத்திற்குச் சென்று, எல்லா புண்ய நதிகளிலும் நீராடி திவயதேசத்து எம்பெருமான்களையும் வணங்கி வழிபட்டுக் கானகம் சென்று கடும் தவம் புரிந்து வந்தான். ப்ரஹ்மதேஜஸ் வளர்ந்தது. அவன் ஈர வஸ்த்ரத்தை வானத்தில் விரித்தால் அது கீழே விழாமல் அப்படியே உலரும். தலை மீது விரித்துக் கொண்டால் அப்படியே நின்று நிழல்தரும். தவத்தின் பெருமையால் மிக்க கர்வம் தலைக்கேறிற்று. ஒரு சமயம் கொக்கு ஒன்று இவன் தலைமீது எச்சலிட்டு விட்டது. இவன் அதை விழித்துப் பார்க்க அது எரிந்து விழுந்தது. இந்த ஜீவஹிம்சையாகிற பாபத்தினால் முன்பு போல் வஸ்த்ரம் வானத்தில் பறக்கவில்லை.‌ தன் தவத்தின் வலிமை குறையுற்றதைக் கண்டு வருந்தினான். அப்பொழுது அசரீரி பேசிற்று. "நரோத்தமா!‌ தர்மிஷ்டரும் ஊமையுமான சண்டாளரைப் போய் பார். உண்மையை அறிவாய். க்ஷேமம் உண்டாகும்" என்று. உடனே விசாரித்துக் கொண்டு மூகன் வீட்டை அடைந்தான். தூண்கள் இல்லாத வீடு. அதைப் பார்த்து வியந்தான். மூக்கன் நரோத்தமனைக் கவனிக்காமல் தன் தாய் தந்தையருக்கு ஊழியம் செய்து வந்தான். "மூகா! உன் வீட்டிற்கு வந்த அதிதியைக் கவனிக்காமல், வரவேற்காமல் இருக்கலாமா"
எனக் கடிந்தான்.

மூகன் " விருந்தினரே! எனக்கு பித்ரு சுச்ருஷை தான் முக்கியம். அவர்கள் ப்ரீதியே எனக்கு புண்ணியம். வெறுப்பே பாபம். அவர்களை வலம் வருவது பூப்ரதக்ஷணத்திற்குச் சமம். தாய் தந்தையரை வணங்கி வழிபடாது க்ஷேத்ர, தீர்த்தாடனங்களும், தெய்வபக்தியும் வீணானது. எனவே அதை முடித்துப் பிறகு தங்களை உபசரிக்கிறேன். அவசரமானால் பதிவ்ரதையின் வீட்டிற்குச் செல்லுங்கள். உண்மையை அறிவீர் என்று ஜாடையாகக் கூறினான். நரோத்த மனுக்கு அவள் இருக்கும் வீடு தெரியவில்லை. விழித்தான். அப் பொழுது மூகன் வீட்டிலிருந்து ஒரு அந்தணர் வந்தார். அவர் அழைத்துச் சென்று "சுபா" எனும் பதிவ்ரதையைக் காட்டிவிட்டு மறைந்தார். அவளோ பதி சுச்ருஷையில் மூழ்கியிருந்தாள். நரோத்தமனைப் பார்த்து விட்டு " எனக்கு இன்னும் சிறிது நேரமாகும். தங்களுக்கு அவசர மானால் துலாதாரனைப் பாருங்கள். அவர் உமக்கு தத்வோப தேசம் செய்வார்" என்றாள். இவனுக்கு மிகுந்த கோபம். இதை யறிந்த பதிவ்ரதை "என்னைக் கொக்கு என்று நினைத்தீரோ" என்றாள். இதைக் கேட்டதும் நரோத்தமன் திடுக்கிட்டான். இது இவளுக்கு எப்படித் தெரியும் என வியந்தபடியே வெளியேறினான்.

சுபாவின் வீட்டிலிருந்து வந்த அந்தணர் வழிகாட்ட துலாதரன் வீட்டை அடைந் தான். அவன் ஒரு வணிகன். நேர்மையைக் கடைப்பிடித்து எல்லோருக்கும் சமநிலையில் நின்று நெய், மாமிசம் போன்ற பொருளை விற்று வந்தான். இடை இடையே தாய்தந்தையருக்குப் பணிவிடை செய்து வந்தான். அவனை அணுகிய பொழுது, ",ஐயா! எனக்குக் கடையிலா இரவு 10 மணி வரை வியா பாரம் நடக்கும். பிறகு பெற்றோர்கட்ககு ஆவண செய்துவிட்டு பிறகு தான் உம்மோடு பேச முடியும். எனக்கு ஓய்வும் ஒழிவும் இல்லாததினால் தாங்கள் அவசரப்படுவதால் அருகிலுள்ள "ஸஜ்ஜனாத்ரோஹகன்" (நல்லோர்களுக்குக கேடு நினைக்காதவன்) என்பவரிடம் செல்லுங்கள். அவர் உமக்கு கொக்கு இறந்ததனுடையவும வானில் ஆடை உலர்ந்தது பற்றியும் காரணத்தோடு விளக்குவார்" என்றார் நம்மைப் பற்றி துலாதரனும் அறிந்திருக்கிறானே என்னை வியப்புடன் புறப்பட்டான் நரோத்தமன். இப்பவும் குருபாகரன் வீட்டில் இருந்து வந்த அதே அந்த வழிகாட்ட ஸஜ்ஜனாத்ரோ ஹகன் வீட்டிற்குச் சென்றான். இவர் வீட்டிற்கு வரும்போது ‌அந்தணர், ஸஜ்ஜனாத்ரோஹனைப் பற்றிய ஒரு சம்பவத்தை (நிகழ்ச்சியை) ச் சொன்னார். இவருக்கு ஒரு நண்பர் உண்டு. அவள் ஒரு ராஜகுமாரன். நண்பருக்கு வெளியூர் செல்ல வேண்டி யிருந்தது. திரும்பி வர ஒரு வாரமாகும். கட்டழகியாகிய தன் மனைவியைத் தன் வீட்டில் துணையின்றி விட்டுப் போக மனமில்லை. எனவே நண்பன் வீட்டில் விட்டுசா செல்வது என முடிவுக்கு வந்தான். புறப்படும்பொழுது மனைவியை அழைத்து வந்து நண்பனிடம் ஒப்படைத்து" நான் திரும்பி வரும் வரை இவளைப் பாதுகாப்பாயாக. நீயோ‌தர்மிஷ்டன். அறநெறி வழுவாதவன். மேலும் ஜிதேந்த்ரியன்.‌புலன்களை வென்றவன். உன் வீட்டில் விட்டுப் போவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி" என்றான்.  

நண்பன் "ராஜகுமாரா! உனக்கு உதவுவது என் கடமை. ஆனால் இரவில் நான் தூங்கும் பொழுது, ஒரு அழகிய பெண்ணை எவ்வாறு பாதுகாக்க முடியும். எனவே என் மனைவியோடு என் படுக்கையிலேயே இரவில் படுத்துக்கொள்ள வேண்டும்.அதற்கு நீயும் உன் மனைவியும் சம்மதப்பீர்களாகில் இங்கே விட்டுச் செல்லலாம்" என்றான். ராஜகுமாரன் "நண்பா! அப்படியே ஆகட்டும்," எனக் கூறி விடைபெற்றான்.

ஸஜ்ஜனாத்ரோஹியோ புதன்கரை வென்றவன்.‌ஆயினும் ஊர் மக்கள் வம்பளந் தனர். சில நாட்கள் கழித்து ராஜகுமாரனிடம் அவன் மனைவியை ஒப்படைத்து விட்டுப் பேசினான். "நண்பா! ஊர் மக்கள் எவ்விதக் காரணமின்றி என் மீது பழி சுமத்து கின்றனர்.‌ நீ உன் மனைவியை ஏற்றுக்கொள். நான் அக்னிப் ப்ரவேசம் செய்யப் போகிறேன் எனக்கூறி தீக்குளித்தான்.அவனது உடல் சிறிதும் வேக வில்லை.‌. கருகவில்லை.வானத்தினின்றும் தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.
அன்று முதல் ஊர் மக்கள் அவனை மித்ராத்ரோஹி என்றும் ஸஜ்ஜனாத்ரோஹி என்றும் அழைத்தனர்.‌ தான் முன்பு பழித்ததற்கு வருந்தினர் என்று கதையைக் கூறிய அந்தணர் மறைந்தார்.‌‌ 

நரோத்தமன் அவ்வீட்டினுள் சென்று ஸஜ்ஜனாத்ரோஹியை‌சந்தித்தான். அவரோ யாதும் கூறாது "நீர் விஷ்ணு பக்தரிடம் செல்லும். எல்லாம் நன்கு விளங்கும்" எனக்கூறி விடை கொடுத்தார். 

மறைந்த அந்தணரே வந்து வழிகாட்ட அவர் வீட்டை அடைந்தான்.‌அங்கிருந்த விஷ்ணு பக்தன் "'நரோத்தமா! என் வீட்டிலிருக்கும் பரமாத்மாவைக் காண்பா யாக. உனக்கும் எல்லாம் சித்திக்கும் உள்ளே போம்":என்றான். இவன் உள்ளே சென்றதும் ஒரே வியப்பு! இதுவரை இவனுக்கு யார் வழிகாட்டினாரோ அவரே சேஷாஸனத்தில் அமர்ந்திருந்தார். இவரே பரமாத்மா ஸ்ரீமந் நாராயணன் என உணர்ந்தான். இதுவரை உணராததிற்கு வருந்தினான். பரம காருணிகனின் கருணையை நினைத்து அவர் திருவடிகளில் விழுந்து விழுந்து மீண்டும்‌ மீண்டும் வணங்கினான்.‌கண்ணீர் மல்க வாய் விட்டுக் கதறி அழுது புலம்பி னான்.அவனை அரவணைத்து பரமன் பேசுவான்.

" நரோத்தமா!‌ பித்ரு சுச்ருஷையை விட உயர்ந்தது எதுவும் இல்லை.அவர்களைப் போற்றி துதிக்காமல் எத்தகு தவம் புரியினும் அது அவமேயாகும் .சித்திக்காது." என்றார்!

No comments:

Post a Comment