ரீமத்பாகவதம் -தசமஸ்கந்தம்
அத்தியாயம் 42
கண்ணனும் பலராமனும் ராஜவீதியில் சென்றுகொண்டிருக்கையில் சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு சென்றுள்ள ஒரு அழகான ஆனால் கூன் முதுகுடைய ஒரு பெண்ணைக் கண்டனர்.
அவளிடம் அதை எல்லாம் யாருக்கு கொண்டு செல்கிறாள் என்று கேட்க அவள் அதை கம்ஸனுக்கு எடுத்துச்செல்வதாகக் கூறினாள். அப்போது கண்ணன் அவளிடம் அதை எல்லாம் தங்களுக்குக் கொடுத்தால் அவள் நன்மை அடைவாள் என்று கூற அவளும் அதற்குத் தகுந்தவர்கள் கண்ணனும் பலராமனுமே என்று கூறி அவர்களிடம் கொடுத்து விட்டாள்.
பிறகு கண்ணன் அவள் பாத்த்தின்மேல் ஏறி நின்று அவள் மோவாயை இரண்டு விரள்களால் பிடித்து அவள் கூனை நிமிர்த்தினான். அதுவரை கூனல் முதுகுடையவளாக இருந்ததனால் த்ரிவக்ரா என்று அழைக்கப்பட்டவள் கூன் நிமிர்ந்து மிக அழகாகத் தோற்றமளித்தாள். அவள் கண்ணனைத் தன் இல்லத்திற்கு வருமாறு அழைக்க அதற்கு அவன் தான் வந்த காரியம் முடிந்ததும் வருவதாகக் கூறினான்.
இதை நாராயண பட்டாதிரி மிக அழகாகக் கூறுகிறார்.
'சித்தஸ்தம் ருஜுதாம் அத ப்ரதயிதும் காத்ரெ அபி தஸ்யா: ஸ்புடம்',
அவள் உள்ளத்தின் நேர்மையை அவள் அங்கங்களில் காட்டுவது போல கண்ண்ன் அவளை நேராக்கினான் என்று.
பின்னர் கண்ணனும் பலராமனும் அங்கு காவலாளிகளால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வில் இருக்கும் இடம் சென்றனர். அங்கு காவல் இருந்தோர் தடுத்தும் கேளாமல் கண்ணன் அந்த வில்லை எடுத்து வளைத்து நாணேற்றுகையில் அது முறிந்தது. எதிர்த்த சேவகர்கள் அவர்களால் கொல்லப்பட்டனர். அந்த வில் முறிந்த ஓசை கேட்ட கம்சனின் தேகத்தில் நடுக்கம் ஏற்பட்டதாம்.
No comments:
Post a Comment