Monday, December 25, 2017

Yoga vasishtam part11

Courtesyz;Smt.Dr.Saroja Ramanujam

யோகவாசிஷ்டம் - வைராக்ய ப்ரகரணம் - 11

அடுத்து ராமன் பேராசையைப் பற்றி கூறுகிறான்.

அறியாமையால் மயக்குற்ற மனது இரவைப்போல் இருண்டு இருக்கிறது. அதில் ஆசைகள் என்னும் ஆந்தைகள் பறந்து திரிகின்றன.

ஆசைகள் வளர வளர அது பேராசை ஆகிறது. அதனால் மனதில் இருந்த எல்லா நல்லெண்ணங்களும் போய் மனது பேய்பிடித்ததுபோல் ஆகிறது.

மனம் காற்றில் அகப்பட்ட துரும்பு போல் பேராசையினால் அலைக்கழிக்கப் படுகிறது. 
நம்மை நல்வழிப் படுத்தும் எண்ணங்களை பேராசை ஒரு எலி நூலை அறுப்பது போல அழித்து நம்மை ஒரு கூண்டுப் பறவையாகவே மாற்றுகிறது,.

அம்ருதத்தை உண்டால் கூட இந்தப் பேராசை அடங்குமா என்பது சந்தேஹம்.

வெவேறு திசையிலும் மாறி மாறி அலைக்கழிக்கப் பட்டு ஒரு வெறிபிடித்த குதிரையின் மேல் ஏறி இருப்பதைப்போல் உணர்கிறேன்.

மக்கள் மனைவி பந்துக்கள் நண்பர்கள் இவை எல்லாமே ஆசையை வளர்க்கவே செய்கின்றன.

வீரனையும் கோழையாக்கி கண் இருந்தும் குருடன் ஆக்கி சந்தோஷத்தில் இருந்து துக்கத்தில் தள்ளி தொட்டாலே விஷத்தைக் கக்கும் இந்த பேராசை என்னும் விஷப்பாம்பு உள்ளத்தில் புகுந்து தீமையை விளைவிக்கிறது.

ஆகாயத்திலும் அதள பாதாளத்திலும் மாறி மாறி சஞ்சரிக்கும் இந்த பேராசையானது மனதில் ஒருகணம் உண்டாகும் தெளிவை மறு கணம் போக்கிவிடுகிறது.

பேராசை என்பது ஓரிடத்தில் நில்லாது கிடைத்ததில் நிறைவு பெறாமல் கிடைக்காதவற்றிற்காக தாவும் ஒரு குரங்கைப் போன்றது

சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழும் மனிதரைக் கூட இது விட்டுவைப்பதில்லை. அப்படி இருக்கையில் உலகப்பற்று கொண்ட மனிதரைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

பேராசையை விலக்குவதால் எல்லா துன்பங்களும் விலகுகின்றன. பேராசையினால் ஏக்கம் ஏற்படுகிறது. ஏக்கத்தினால் துக்கம் உண்டாகிறது. ஆசையே வளர்ந்து பேராசையாகிறது.

ஆயினும் திட சித்தம் கொண்ட பெரியோர்கள் இந்த ஆசை என்னும் விலங்கை அறிவு என்ற கோடாலியால் பிளக்கிறார்கள்.

No comments:

Post a Comment