Monday, December 25, 2017

Jains - Periyavaa

ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் 

( அஜாதஶத்ரு - )

டெல்லியிலிருந்து ஒரு பக்தர் பெரியவாளை தர்ஶனம் பண்ண வரும்போதெல்லாம் மயில்த்தோகை விசிறிகளை வாங்கிக் கொண்டு வந்து ஸமர்ப்பிப்பார்.
பெரியவாளும் அதை அவ்வப்போது உபயோஹிப்பார்.

ஒருமுறை அந்த பக்தர் ஒரு டஜன் மயில்தோகை விசிறிகளை வாங்கிக் கொண்டு வந்து பெரியவா முன் வைத்தார். ஸாதாரணமாக எதையுமே தனக்கென்று வைத்துக் கொள்ளாத பெரியவா, அன்று அத்தனை விசிறிகளையும் கையோடு, தான் அமர்ந்திருந்த மேனாவுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டார்!

ஶிஷ்யர்களுக்கோ ஆஶ்சர்யம்!

அப்போது ஈக்கள் அதிகம் காணப்பட்ட season!
கிட்டத்தட்ட ஒருவாரம் கழித்து, ஒரு நாள் காலைவேளையில், ஈக்கள் நிறைய பறந்து கொண்டிருந்ததால், பெரியவா ஒரு மயில்தோகை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். 

அப்போது சில ஜைன ஸன்யாஸிகள், பெரியவாளை தர்ஶனம் செய்ய வந்தனர்.

ஜைன ஸன்யாஸிகளில் திகம்பரர், ஶ்வேதாம்பரர் என்று ரெண்டு பிரிவு உண்டு. 
அன்று வந்தவர்கள் ஶ்வேதாம்பரர்கள்.
வெள்ளை உடை அணிந்து கொண்டு, தங்கள் வாயை, ஒரு வெள்ளைத் துணியால் கட்டிக் கொண்டிருந்தனர்.

பெரியவா அவர்களிடம் ஹிந்தியில் ஸம்பாஷித்துக் கொண்டிருந்தார்.

"ஒங்களுக்கு தெரியுமோ? ஸம்ஸ்க்ருதத்ல அமரகோஶம்-ங்கற dictionary-யை தொகுத்தவரே.... அமரஸிம்ஹன்-ங்கற ஜைனர்தான்!.."

பெரியவா சொன்னதைக் கேட்டதும், அவர்களுக்கு பெரிய ஆஶ்சர்யமாக இருந்தது!

"நீங்கள்ளாம் தெனோமும் காலேல விப்ரக்ஷயம்! விப்ரக்ஷயம்-னு ஒரு ப்ரார்த்தனை மாதிரி.... ஒண்ணு சொல்றதுண்டோ?.."

சுற்றி நின்று இந்த ஸம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த பாரிஷதர்களுக்கும், சில பக்தர்களுக்கும், 'விப்ரக்ஷயம்' என்ற special ப்ரார்த்தனையின் நல்நோக்கு என்னவென்றே தெரியவில்லை!

"இல்லை ஸ்வாமி...! எங்களுடைய குரு மஹராஜ்.... 'இனிமேல் அப்படிச் சொல்ல வேண்டியதில்லை!' என்று சொல்லிவிட்டார்...."
ஹிந்தியில் பதில் கூறினார் அந்த ஜைனத் துறவி.

"விப்ரக்ஷயமா?... அவாளோட குருநாதர் இனிமே அந்த ப்ரார்த்தனை வேணாம்-னுட்டாரா?..."
மண்டையை குடைந்த கேள்விக்கு, பெரியவா "மனஸு உறுத்தி வலிக்கும்" அர்த்தத்தை கூறினார்.

"அந்தக் காலத்ல, வேதவிஹிதமான யாக யக்ஞங்கள் ரொம்ப ஜாஸ்தியா... நடந்துண்டிருந்த காலத்ல, ஶாஸ்த்ரப்படி சில ஆடுகளை பலி குடுக்கறதுண்டு. ஜைன ஆதிக்கம் ஜாஸ்தியானதும், அஹிம்ஸா பரமோ தர்ம:...ங்கறது அவாளோட கொள்கையா இருந்ததுனால, உயிர்பலி குடுக்கற வைதீக நெறி மறைஞ்சு போகணும்-னுட்டு, தெனோமும் காலங்கார்த்தால "விப்ரக்ஷயம்! விப்ரக்ஷயம்!"...னு ப்ரார்த்தனை-ல சேத்துண்டு சொல்லுவா! விப்ரக்ஷயம்... அப்டீன்னா, "ப்ராஹ்மணாளே.... இல்லாமப் போகட்டும்!"ன்னு, ப்ரார்த்தனையாவே பண்ற வழக்கத்தை follow பண்ணினா! ..."

பெரியவா தமிழில் கூறினாலும், அந்த ஜைன ஸன்யாஸிகளுக்கு புரிந்தது.

"ஆமாம்..! 'இந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் யாக-யக்ஞம் பண்ணுவது அனேகமாக நின்றே போய்விட்டது! அதனால், ஜீவஹிம்ஸையும் இல்லை! அதனால் இனிமேல் 'விப்ரக்ஷயம்' என்று சொல்லவேண்டிய அவஶ்யமில்லை!' என்று எங்கள் குருநாதர் கட்டளையிட்டுள்ளார்..."

இதைக் கேட்டதும், பெரியவா எப்படி வருத்தப்பட்டிருப்பார்!

வாஸ்தவந்தானே! ஜைன குரு சொன்னதை அப்படியே உண்மையாக follow பண்ணி "விப்ரக்ஷயம், விப்ரக்ஷயம்" என்று எத்தனை ஶிஷ்யர்கள், எத்தனை முறை சொல்லியிருப்பார்கள்? அது இன்று பலித்தே விட்டது!

அதேபோல், வைதீகர்களும் ஆசார்யர்கள் சொன்னதைக் கேட்டு, அன்றிலிருந்தே என்ன கஷ்டம் வந்தாலும், வேதமாதாவை விட்டுக் கொடுக்காமல், அவள் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையோடு, வேதத்தை விட்டுவிடாமல் அதை தழைக்கச் செய்வதற்கென்றே ஸந்ததிகளை தயார் செய்திருந்தால், இன்று இத்தனை சீர்கேடு இருந்திருக்காதே!

இன்றைக்கும் international level-ல், ஒரு அல்பமான வெங்காயம், பூண்டு இல்லாமல் ஸாத்வீகமாக இருக்கும் ஸாப்பாட்டுக்குக் கூட, "ப்ராஹ்மண போஜனம்" என்றில்லாமல் "Jain food" என்றே அழைக்கும் அளவுக்கு, விப்ரக்ஷய ப்ரார்த்தனை நிறைவேறியிருக்கிறது!

அந்த ஜைன ஸன்யாஸிகள் எல்லாருக்கும், போனவாரம் மேனாவுக்குள் பத்ரப்படுத்தி வைத்திருந்த மயில்தோகை விசிறிகளை ஆளுக்கொன்றாகக் குடுத்தார். மயிலை ஹிம்ஸை செய்யாமல், அதன் உடலிலிருந்து தானாக விழும் ரெக்கைகளைக் கொண்டு செய்யும் அஹிம்ஸா மயில்தோகை விசிறிகளை, பெரியவாளுடைய திருக்கரத்திலிருந்து பெற்றுக் கொண்ட அந்த ஸன்யாஸிகள் வந்தனம் செய்துவிட்டு விடை பெற்றனர்.

வேததர்மம் தழைத்தோங்க பெரியவா அவதாரம் செய்திருந்தாலும், தங்களுடைய மதமும், குருவும் சொன்னதை அப்படியே கடைப்பிடித்த அந்த ஜைன ஸன்யாஸிகளுக்கும் மித்ரனாகவே பரிமளித்தார் நம் அஜாதஶத்ரு!

பெரியவா சரணம்

thanks to the Original Uploader

No comments:

Post a Comment