Monday, July 25, 2016

Why we have to worship GOD in temple?

சிந்திக்க வைக்கும் ஆழமான எடுத்துக்காட்டு!

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
ஒருவர் குறுக்கிட்டுக் கேட்டார்...
"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று....
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவரிடம் 
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ? என்று....
அவர் ஓடிப் போய் ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்தார.

சுவாமி கேட்டார் நான் தண்ணீர்தானே கேட்டேன்..எதற்கு இந்த சொம்பு.?
சொம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?
குழம்பிப் போனான் அது எப்படி முடியும்? என்று கேட்டான்.

இப்போது பதில் சொன்னார் சுவாமி ...
ஆம் சகோதரனே.. தண்ணீரைக் கொண்டுவர சொம்பு தேவைப் படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா? அதுதான் ஆலயம்..!

ஆனாலும் சொம்பே தண்ணீர் ஆகாது..!
ஆலயமே ஆண்டவனாகாது..!

No comments:

Post a Comment