Tuesday, August 30, 2022

Beneifts of weraing vibhooti

ஹர ஹர ஜடாதரா 🙏🏻🙏🏻
சம்போ மஹாதேவா 🙏🏻🙏🏻

|| விபூதி பூசுவதால் ஏற்படும் நன்மை ||

திருநீறு இல்லா நெற்றி பாழ் என்பது சித்தர்களின் வாக்கு.

நெற்றியில் அணியும் திருநீறு விளக்கும், உயர்ந்த தத்துவம் என்னவென்றால், 'நாடாண்ட மன்னனும், நூல் பல கற்ற பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள்' என்பதாகும். 

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால், அதன் வழியாக அதிக சக்தி வெளிப் படுவதோடு, இயற்கையின் மற்ற சக்தி அம்சங்களையும் தமக்குள் ஈர்த்துக்கொள்ளும் வர்ம பகுதியாகவும் அது உள்ளது.

சூரிய கதிர்களின் சக்தி அலைகளை ஈர்த்து, நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு நன்றாக செய்யும். அதனால் நெற்றியில் திருநீறு பூசுவது என்பது பல உள்ளர்த்தங்களை கொண்டதாக அறியப்படுகிறது. 

இரட்சை, சாரம், விபூதி, பஸ்மம், பசிதம் என்று திருநீறுக்கு பல பெயர்கள் உள்ளன. நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து, இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அது போல் ஆன்மீகத்தில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு சம்பிராதயமும் ஏன் செய்கிறார்கள் ? என்பதை
தெரிந்து செய்தால் நாம் சீக்கிரமாக கடவுளுக்கு அருகில் செல்ல முடியும் .

விபூதி நம் சைவர்களது புனித அடையாள சின்னம் ."

எவராக இருந்தாலும் இந்த உடல் ஒரு நாள் மரணத்திற்கு பிறகு, இறுதியில் தீயில் வெந்து பிடி சாம்பலாக போகிறது "என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

ஆகையால் ,தூய்மையான அறநெறியில் இறை சிந்தனையோடு வாழ வேண்டும்.

பசுவின் சாணத்திலிருந்து சுட்டு தயாரிக்கப்படுவது திருநீறு.

விபூதி அணியாமல் செய்யும் சிவபூஜை ,
ஜெபம்,பிதுர் கர்மம் ,தேவர்களின் யாகம் முழுமை அடையாது .

ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு உகந்தது விபூதி . 

திரு என்றால் மகா லக்ஷ்மி.
விபூதியை திருநீறு என்று அழைக்கிறார்கள் .

விபூதியை எந்த திசை பார்த்து பூச வேண்டும் ?

நீரில்லா நெற்றி பாழ் 'என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

சைவர் திருநீறும் ,வைணவர்கள் திருமண்ணும் அவசியம் நெற்றியில் இருக்க வேண்டும் .

வடக்கு திசை ,கிழக்கு திசை நோக்கி நின்று கீழே சிந்தாமல் ,மூன்று விரல்களால் (நடு விரல் ,
மோதிர விரல் ,ஆள் காட்டி விரல் )பூச வேண்டும் . 

விபூதி நிலத்தில் சிந்துவது பாவம்.

பூசும் போது சிவாய நம அல்லது சிவ சிவ ஓம் நமசிவாய என்றும் உதடு பிரியாமல் மனம் ஒன்றி சொல்ல வேண்டும் .

திருமணமாகாத பெண்கள் விபூதி பிரசாதத்தை கழுத்தில் பூச வேண்டும்.

இதனால் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் ஏற்படும் .

எப்போது விபூதி பூசலாம் ?

காலை, மாலை ,பூசைக்கு முன்னும் ,பின்னும் ,ஆலயம் செல்வதற்கு முன் ,இரவில்
உறங்க போவதற்கு முன் ,விபூதி தரிக்க வேண்டும் .

மூன்று படுக்கை வசக் கோடு பூசுவதை "திரிபுண்டரம் "எனப்படும் .

இன்னும் விபூதியின் மகிமையை அறிய ஒரு

இதோ உங்களுக்காக புராண கதை !!!

'பர்னாதன்' என்ற சிவபக்தன் இருந்தான்.

உணவு,தண்ணீர் மறந்து சிவனை நினைத்து ,கடும்தவம் இருந்தான் .

ஒரு நாள் ,அவனுக்கு கடுமையான பசி ஏற்பட்டது.

தவத்தை கலைத்துகண் திறந்து பார்த்தான்.

அவனைச் சுற்றி சிங்கங்களும்,புலிகளும் பறவைகளும் என பல உயிரினங்களும் காவலுக்கு இருந்தன .

பறவைகள் பழங்களை பறித்து கொண்டு வந்து ,அவன் முன் வைத்தது. 

பசி தீர சாப்பிட்டான்.

மீண்டும் தவம் செய்ய துவங்கினான் . பலவருடங்கள் கடந்தோடியது.

தவம் முடிந்து ,சிவ வழிபாட்டை தொடங்கினான்.

ஒரு நாள்,தர்பை புல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது.

அவன் பதற்றம் இல்லாமல் இருந்தான்.

ஆனால் அவனை என்றும் காத்து அருளும் ஈசனின் மனம் பதறியது.

சிவபெருமான் வேடன் உருவில் பர்னாதனின் கையைப் பிடித்து பார்த்தார்.

என்ன ஆச்சரியம் !ரத்தம் கொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது.

வந்தது தேவர்களுக்கெல்லாம் தேவர் மஹாதேவர் என்பதை அவன் அறிந்தான் .

ரத்தத்தை நிறுத்தியது யார்?என்பதை அறிவேன் .சுவாமி !'

உங்கள் சுய ரூபத்தை எனக்கு காட்டுங்கள் 'என்று பர்னாதன் வேண்டினான். 

சிவபெருமானும் காட்சி கொடுத்தார்.

"உனக்காகவே சாம்பலை உருவாக்கினேன்.

அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என அழைக்கப்படட்டும் ".உன் நல் தவத்தால் விபூதி உருவானது

அக்னியை யாரும் நெருங்க முடியாதது போல இந்த விபூதியை பூசுபவர்களை துஷ்ட சக்தி நெருங்காது.

விபூதி என் அம்சம் என்று கூறி அவனுக்கு ஆசி வழங்கினார் சிவபெருமான்.

விபூதி பிள்ளையார்

மதுரையில் உள்ள மீனாக்ஷி அம்மன் கோவிலில் அமைத்துள்ள விபூதி பிள்ளையார் . 

இந்த பிள்ளையாருக்கு நம் கையால் விபூதி அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும்.

இவரை வணங்கினால் ,வாழும் காலத்தில்பொருளும் பிறவா நிலையும் கிடைக்கும் என்பது
பக்தர்களது நம்பிக்கை.

நீங்களும் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு போனால் பிள்ளையாரை தரிசனம் செய்யுங்கள். .

விபூதியால் என்ன நன்மை ? என்று பரமாத்மாவான ஸ்ரீராமர் அகஸ்தியரிடம் கேட்டார்.

பகை ,தீராத வியாதி ,மனநல பாதிப்பு ,செய் வினை பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து பூசினால்
அனைத்தும் விலகும் என்று உபதேசம் செய்தார் அகஸ்தியர்.

சரி விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகளை பார்க்கலாம் !!

கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. 

இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
 
திருநீறு பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை:
 
வெள்ளை நிற விபூதி மட்டும் வைக்க வேண்டும். முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறைய பூசவேண்டும்.
 
நடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கி பெறுதல் வேண்டும்.

வடக்கு கிழக்குமுகமாக நின்று தான் திருநீறு பூசவேண்டும். தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.
 
விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து வைக்கக்கூடாது. கோயிலில் விபூதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும்.
 
வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபூதி இடக்கூடாது. ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது.

சரி இந்த விபூதியை நாமே செய்ய முடியுமா !!

மகாலெஷ்மியின் வாசஸ்தலமாக விளங்குகிறது. 

பசுவின் சாணத்தை அக்னியில் இட்டு பஸ்பமாக்கி திருநீறு தயாரிக்கப்படுகிறது. 

இந்த உடலை சுத்தப்படுத்தி, அதற்குள் உள்ள ஆத்மாவை பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றது திருநீறு. 

மஹா பஸ்பமாக கருதப்படும் பரமாத்மாவும், விபூதி எனப்படும் திருநீறு பஸ்மமும் முற்றும் முடிந்த நிலையில் ஒன்றாக கருதப்படுவதால், விபூதி அணிந்து இறைக்காட்சியையும் பெறுவது சாத்தியமே என்று அருளாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பல்வேறு முறைகளில் திருநீறு தயாரிக்கப்பட்டாலும், வீடுகளில் நாமே தயாரிக்கும் முறை பற்றி இங்கே காணலாம். 

காராம்பசுவின் சாணம் பூமியில் விழுவதற்கு முன்னர் பிடித்து, (அவ்வாறு இயலாவிடில், துணியை தரையில் விரித்து வைத்தும் பிடித்துக்கொள்ளலாம்) அதன் கோமியத்தை விட்டு கலக்கி, சிறு உருண்டைகளாக மாற்றி காய வைத்து, தூசிகள் இல்லாது எடுத்து வைத்து கொள்ளவேண்டும். 

அந்த உருண்டைகளை 'திரிபுர ஸம்ஹார காலமான' கார்த்திகை மாத பவுர்ணமியில் வரும் கிருத்திகை நட்சத்திரமான 'கார்த்திகை தீபம்' நாளில், நெருப்பில் இடவேண்டும். 

பாதுகாப்பான இடத்தில் அது நன்றாக எரிந்து தானாகவே ஆறும் வரையில் சில காலம் விடவேண்டும்.

மார்கழி மாதம் முழுவதும் பனி பொழிந்து, அந்த சாம்பலானது நிறம் மாறும் வரையில் விட்டுவிட்டு, தை மாதத்தில் அந்த சாம்பலை கிளறி விடவேண்டும். 

அதன் பின்னர், மாசி மாதத்தில் வரக்கூடிய 'மகா சிவராத்திரி' அன்று காலையில், அந்தச் சாம்பலை எடுத்து, ஒரு பானையின் வாயில் சுத்தமான, மெல்லிய துணியை கட்டி, சாம்பலை துணியின் மேல் போட்டு, கைகளால் தேய்க்க வேண்டும்.

அதன்மூலம், மென்மையான துகள்கள் திருநீறாக பானைக்குள் சேரும். 

அதை எடுத்து சிவபெருமானுக்கு திருநீறு அபிஷேகம் செய்வித்த பின்னர் வீட்டுக்கு எடுத்து வந்து, அதை உபயோகப் படுத்துவது தான் மேன்மையான முறையாகும். 

இந்த முறையை தவிர சாந்திக பஸ்மம், காமத பஸ்மம், பவுஷ்டிக பஸ்மம் ஆகிய சாஸ்திர ரீதியாக தயாரிக்கும் முறைகளும் நடைமுறையில் உள்ளன. (மேற்கண்ட முறையில் திருநீறு தயாரிக்க இயலாவிட்டால், சுத்தமான பசுஞ்சாணம் கொண்டு திருநீறு தயாரிக்கும் பல கோசாலைகள் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம்). இப்படி செய்தால் தான் உண்மையான திருநீறு நமக்கு கிடைக்கும்.

கடைகளில் கிடைப்பது தூய்மையானது என்று எவராலும் கணிக்க முடியாது.

ஏனென்றால் இப்போது பசுவை பார்ப்பதே அரிதாக உள்ளது. பின் எப்படி சாணத்தை பார்ப்பது. !!

காசுக்காக கெமிக்கல்ஸ்களை பாக்கெட்டில் அடைத்து விதவிதமாக விற்பனை செய்கின்றனர்.
இது செவிவழி செய்தி

சிலநேரங்களில் நானும் உண்மையாக இருக்குமோ என்று சிந்தித்திருக்கிறேன்.

கலியுகமல்லவா !!

முக்கியமான விஷயம்

கோவிலில் அர்ச்சகர் தீபாராதனை முடிந்ததும் நமக்கு விபூதி மற்றும் குங்குமம் கொடுக்கிறார்.
அந்த சிவ ப்ரசாதத்தை நீங்கள் கோவிலில் தூணிலோ அல்லது வேறு இடங்களில் கொட்டுவது மிகவும் தவறான விஷயங்களில் ஒன்றாகும்.

அது சிவபெருமானை அலட்சியப் படுத்தியதற்கு சமம்.
தயவுசெய்து இந்த தவறை தெரிந்து செய்ய வேண்டாம்.

இன்னொன்று இதில் சிவன் சொத்து குல நாசம் என்று பெருமையாக ஒரு வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

சிவன் சொத்து குல நாசம் என்பதற்கு சிவன் கோவில்களில் இருக்கும் நகைகள் பணம் இடங்கள் இவைகளை நீங்கள் தவறான முறையில் விற்றால் மட்டுமே உங்கள் குலமே நாசமடையும். 

திருநீறு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு சிவபெருமானை சூஷ்ம ரூபத்தில் பார்க்க முடியும்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

the defect in narasimha avatara

#ந்ருசிம்மாவதாரத்துலேயே 
#பெருமாளுக்கு_பெரிய 
#குறை_இருந்ததாம்
#மாலே! #மணிவண்ணா! என்றாரம்பிக்கும் இந்தப் பாசுரத்தை சேவிக்கும் போதெல்லாம் ந்ருஸிம்ஹனோட ஏக்கம் தான் முன்னாடி வந்து நிக்கும். 
ராமாவதாரத்துலே வனவாசம் போகாதே ராமா என்றுரைத்த கோசலையின் சொல் கேளாது வனவாசம் வந்த பெருமாளுக்கு அம்மாவின் பேச்சைக் கேளாத குறை இருந்தது. க்ருஷ்ணாவதாரத்தின் போது தேவகி மத்த எல்லா கையையும் மறைச்சுக்கோ. ரெண்டு கையோட சாதாரண குழந்தை போல் மாறுன்னதும் அவள் பேச்சைக் கேட்டு நடந்துண்டு ராமாவதாரத்தின் பொழுது உண்டான குறையை போக்கிண்டான். குறையொன்றுமில்லாத கிருஷ்ணாவதாரத்தின் பொழுது யசோதைக்கு மட்டும் ஒரு குறை இருந்தது. அதை பின்னொரு பிரகரணத்தில் போக்கினார் பெருமாள். ஆனால் ராமாவதாரத்துக்கு முன்னால் ந்ருசிம்மாவதாரத்துலேயே பெருமாளுக்கு பெரிய குறை இருந்ததாம். அதென்ன குறை?
ந்ருஸிம்ஹனாய் தான் அவதரிச்ச பொழுது, மாலே மணிவண்ணா அப்படி இப்படின்னு தன்னை கொஞ்சத் தாய் ஒருத்தி இல்லாமப் போயிட்டாளேன்னு ந்ருஸிம்ஹனுக்கு வருத்தமாம். ஒரு க்ஷணப் பொழுதில் உண்டான அவதாரமாச்சே ந்ருஸிம்ஹாவதாரம். இவா தான் தாய் தந்தையர்னு முடிவு பண்ணக் கூட பெருமாளுக்கு அவகாசம் இல்லயாம். எவ்ளோ ரசனை. மிகச் சின்ன அவதாரம் ந்ருஸிம்ஹாவதாரம். ஆனா ரசிக்கறதுக்கு கோடி விஷயங்கள் இருக்கு அதுலே. அப்படி சில விஷயங்களை இன்னிக்கு சேவிப்போம். 
நரசிம்மமாய் அந்த ஸ்ரீமன் நாராயணன் அவதாரம் பண்ணிய பொழுது, அவனது கோபம் முழுவதும் ஒரே ஒருவன் மீது தான் இருந்ததாம். யாரவன்? பிரம்மன். ஏன் என்று பார்ப்போம். மற்றவர் கண்களுக்கு எல்லாம் ஒரு விசித்திரமான உருவமாக காட்சி அளித்தான் நரசிம்மன். அவனுக்கே தனது கோலத்தினைக் கண்டவுடன் அப்படித்தான் தோன்றியதாம். என்னது இது? முழுவதுமாக நரமும் இல்லாமல் சிங்கமும் இல்லாமல் இப்படி ஒரு ரெண்டும் கெட்டான் கோலம் என்று. அவனது பாடு மிகவும் திண்டாட்டமானதாக இருந்ததாம். தன் சினத்தினை அவன் பிரம்மன் மீது காண்பிக்கும் முன்னர் "இந்தத் தூணில் இருக்கின்றானா உன் ஹரி?" என்று ஹிரண்யனது குரல் கேட்டு விட்டதாம். அந்தத் தூணிலிருந்து வந்தான். ஹிரண்யுடன் வதம் செய்தான். அண்டசராசரங்களும் நடுநடுங்க கர்ஜித்தானாம். அப்பிடி அவன் நரமும் சிங்கமும் கலந்த ரூபத்தில் தூணை விட்டு வெளி வந்த பொழுது உண்டான ஒளியை இந்தப் பிரபஞ்சத்தில் யாராலும் கண் கொண்டு பார்க்க முடியவில்லயாம். இந்தப் பிரபஞ்சனம கிடுகிடு என்று ஆட்டம் கண்டதாம் - (ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன).
அப்பொழுது உண்டான ஆட்டத்தில், பிரம்ம லோகத்தில் அமைதியே திரு உருவமாக அமர்ந்து கொண்டு தனது படைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மன் திடீரென்று தனது சிம்மாசனத்திலிருந்து கீழே விழுந்தானாம். கீழே விழுந்த தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்று அவன் சுற்றும் முற்றும் பார்க்க, அதிர்ச்சியடைந்தானாம். வருணன் விழல்ல. இந்திரன் விழல்ல. மற்ற எந்த தேவர்களும் விழல்ல. நாம் மட்டும் ஏன் கீழே விழுந்தோம் என்று யோசித்தானாம். 
நரசிம்மனுக்கு அவ்வளவு கோபமாம் பிரம்மன் மீது. இப்படி தப்புத் தப்பாக ஒரு வரத்தை ஒரு அசுரனுக்கு கொடுத்து என்னை மாட்டி விட்டு விட்டாயே என்று. அமைதியே உருவாக தனது பட்ட மகிஷியாம் பிராட்டியுடன் திருப்பாற்கடலில் மோன நிலையில் இருந்த தன்னை துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று ஓடி வரச் செய்தது பிரம்மன் ஹிரண்ய கசிபுவிற்கு அளித்த அந்த வரத்தினால் தானே என்ற கோபமாம் ந்ருஸிம்ஹனுக்கு. இந்த அவசரத்துல இன்னார் தான் தனது தாய் இன்னார் தனது தந்தை என்று நிர்ணயம் பண்ண அவகாசம் இல்லாம போய்டுத்தாம். 
இதை மிகுந்த ரசனையாக ஆசார்யன் தேசிகன் தன்னோட தசாவதார ஸ்லோகத்துலே சாதிச்சிருக்கார். 
ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம: க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ : |
யத் ப்ராதுர்பவநாத் அவந்த்ய ஜடரா யாதிருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸுர க்ருஹ ஸ்தூணா பிதாமஹ்யபூத் ||
"அவந்த்ய ஜடரா" - இந்தப் பதம் ந்ருஸிம்ஹன் இருந்த தூணினை "மலட்டுத் தன்மை இல்லாத வயிறு" என்று கூறுகிறது. எம்பெருமான், ந்ருஸிம்ஹாவதாரத்தின் போது அண்ட சராசரங்களிலும், ஒரு அணுவினை லட்சம் கூறுகளாகப் பிளந்தால் வரும் சிறு கூறுகளினுள் எல்லாம் ஒளிந்து கொண்டிருந்தானாம். ஆனால் அவன் ஆவிர்பவித்ததென்னவோ அந்த ஒரே ஒரு தூணிலிருந்து மட்டும் தான். அதனால் அவந்த்ய ஜடரா -- மலட்டுத் தன்மை இல்லாத வயிற்றினைக் கொண்டது அந்தத் தூண் என்று ஸாதித்தருள்கிறார் ஆசார்யன் தேசிகன். 
அந்தத் தூணானது அப்படி மலட்டுத் தன்மையில்லாத வயிற்றினைக் கொண்டிருந்ததனால் தான் திடீரென்று உண்டான போதும் இன்ன ரூபம் தரிப்பது என்றறியாது , நினைத்துப் பார்க்கவும் முடியாத வேகத்தில் ந்ருஸிம்ஹனை சடாரென்று ஈன்றதாம். எவ்வளவு ஒசந்த ரஸனை. இது. இந்த ச்லோகத்தில் இருக்கும் இன்னொரு அழகான வார்த்தைப் பிரயோகத்தை பாக்கலாம். .
 "வேதஸாம் பிதாமஹ்யபூத் "- ந்ருஸிம்ஹன் வெளிவந்த அந்தத் தூணானது அனைத்தையும் படைப்பவர்களாகிய ப்ரம்ஹாக்களுக்கே தகப்பனைப் பெற்ற பாட்டி முறை ஆயிற்று" என்கிறார் ஆசார்யன் ஸ்வாமி ஸ்ரீ தேசிகன். படைப்பினைத் தொழிலாகக் கொண்ட ப்ரஹ்மனைப் படைத்தது ஸ்ரீமந்நாராயணன். அந்த ஸ்ரீமந்நாராயணனையே ஈன்றெடுத்ததாம் அந்தத் தூண். அதனால் அந்தத் தூண் ப்ரஹ்மனுக்குப் பாட்டி முறையாயிற்றாம். எவ்வளவு ரஸமான ஒப்புமை!  
இவ்வளவு அழகு நிறைந்த ந்ருஸிம்ஹாவதாரத்துலே, தான் பேரழகனா சிம்ம முகமும் மனித உடலும் கொண்டிருந்தாலும், தன்னைக் தூக்கிக் கொஞ்சுவதற்கு அம்மா இல்லயேங்கற ஏக்கம் ந்ருஸிம்ஹனுக்கு. மாலே மணிவண்ணா பாசுரத்தை சேவிக்கும் போதெல்லாம் மனசுலே தோன்றும். இந்த ஏக்கத்துனால தான் ராமாவதாரத்தில் மூணு அம்மாக்கள், க்ருஷ்ணாவதாரத்துலே ரெண்டு அம்மாக்கள் அப்படின்னு அடுத்து வந்த அவதாரங்களில் அம்மா பாசத்தில் முழுசுமா நனைஞ்சுட்டார் பெருமாள். எவ்ளோ அழகான விஷயம்.

ந்ருஸிம்ஹா ந்ருஸிம்ஹா... உன் தாள் கண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து....
படித்ததில் ஆழ்ந்து ரசித்தது
பட்டு சாஸ்திரிகள்
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி சந்திரா சேஷாத்திரி அவர்கள்

Punctuality by Gujarati


Mispronouncing Sanskrit words - Sloka

Courtesy: Sri. H.S.Sudarshan

यद्यापि बहु नाधीषे तथापि पठ पुत्र व्याकरणम् |
स्वजनः श्वजनो मा भूत् सकलं शकलं सकृत् शकृत् ||

Monday, August 29, 2022

Poorva karma - Periyavaa

ॐ श्री गुरुभ्यो नमः। सर्वेभ्यः सुप्रभातं नमस्काराः च। ஓம் ஶ்ரீ குருப்யோ நம:! அனைவர்க்கும் நற்காலையும், வணக்கங்களும்!

Today's "amruta bindu" from Sri Chandrasekaramrutham - துக்க பரிகாரம் [11.05.2021] - ப்லவ ஆண்டு, சித்திரைத் திங்கள் 28, அமாவஸ்யை, பரணி, செவ்வாய்:
     
* ஒருவனுக்கு ஒரு வியாதி வந்தால் அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுவர். தாது வித்தியாசம் தான் காரணம் என ஆயுர்வேத வைத்தியர்; இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வர். மாறாக வேறு ஒரு "சைகலாஜிக்கல்" காரணத்தை இந்நாளில் பிரபலமாகி வரும் மனோதத்துவ நிபுணர் கூறுவார். 

* மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாறால் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர், இன்ன கிரஹம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ, பூர்வ கர்ம பலனாகத் தான் வியாதி ஏற்பட்டுள்ளது என்பார்கள்.

* வியாதிக்கு மட்டுமன்றி நம் வாழ்வின் அனைத்து சுக - துக்கங்களுக்கும் இவ்வாறு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பல காரணங்களில் எது சத்யம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மா தான் என்பது ஸர்வ நிச்சயம்.

* ஸயன்ஸ்படி பார்த்தாலும் விளைவு [Effect] இருந்தால் காரணம் [Cause] இருந்தே ஆகவேண்டும். ஜகத் முழுதும் காரணம் - விளைவு, செயல் - பிரதிசெயல் [Action & Reaction] என்ற துவந்தத்துக்குள் தான் கட்டுண்டிருக்கிறது.

* பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்தி தான். ஒருவனுடைய ஆக்ஞைப்படி தான் உலக இயக்கம் முழுவதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்பந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்பந்தம் இல்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கைப் பார்க்கிறான் ஸர்வேஶ்வரன்.
     
* ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன், இவையே மனித வாழ்வின் சுக - துக்கங்களுக்கு முழு முதற் காரணம். இதற்கே துணைக் காரணமாக அல்லது அடையாளமாக - க்ரஹசாரம், தெய்வக் குற்றம், ஆரோக்கியக் குறைவு முதலியன அமைகின்றன. 

* ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்த்ரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்ட வழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால் அது ஸ்லாக்கியம். அதுவே பெரிய பரிகாரம்; உண்மையான பரிகாரம்.
    
* பூர்வ கர்ம சமாசாரம் எப்படிப் போயினும் இனிக் கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக் கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதை விட, புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈஶ்வரனைத் துணை கொள்வதே முக்கியம். பூர்வ கர்மாவால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கு உண்மைப் பரிகாரம் ஈஶ்வர த்யானம் தான்; இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈஶ்வர த்யானம் தான்.

प्रदोष शङ्कर। प्रत्यक्ष शङ्कर।।
Pradosha Shankara Pratyaksha Shankara!🙏🙏🙏🙏

Sunday, August 28, 2022

Helping a devotee will fetch more punyam - Spritual story

ஒரு அந்தணர்,
தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
அவர் நெடு நேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர்,
ஐயா... என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார்.

சிவ பூஜைக்கு,
வாழைப்பழம் வாங்குவதற்காக,
ஓரணா வைத்திருந்தேன்.
அது கீழே விழுந்து விட்டது.அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்... என்றார்...

பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகி விட்டது; நான் ஓரணா தருகிறேன்.

வாழைப்பழம் வாங்கி,
பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...என்று சொல்லி,ஓரணாவைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.

அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.

அவரும்,
ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.

தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான்.

சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது.

அந்த சமயம்,
இரண்டு தேவ விமானங்கள் வந்தன.

எமதர்மன், ஓடிப் போய் விமானத்திலிருந்த வரை வரவேற்று உபசரித்தான்.

ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர்.

எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தார்.

புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்... என்று சொல்லி,

அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன்,

எமதர்மனைப் பார்த்து,

இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்!
அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறீர்களே...
என்று கேட்டார்.

அதற்கு எமதர்மன்,
இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர்.

அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.

மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர்.

ஒரு நாள்,
சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்... என்றான் எமதர்மன்.

தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு,
சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்... என்று சொல்லி,

எமதர்மனிடம் விடை பெற்று, தேவலோகம் சென்றார்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால்,

ஒரு சிவ பூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட,

அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகம்.

அதனால் தான்,
எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், என் பணமும் அதில் சேரட்டும்... என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.

ஆற்றுக்கும்,தெய்வத் திருப்பணிகளுக்கும் சேவை செய்தாலும்,
கைங்கர்யம் கொடுத்தாலும் புண்ணியம். கொடுத்து பாருங்கள்,

அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!.

கொடுக்க கொடுக்க மேன்மை அடைய வைப்பது தர்மம் மட்டுமே...செய்த தருமம் தலை காப்பது சத்தியம்... 

Stotram on bharat matha - Sanskrit

श्रीभारतेश्वरीस्तोत्रम्

("महिषासुरमर्दिनीस्तोत्रवत्")

अयि गिरिराजकिरीटविभूषितवारिधिसेवितधौतपदे
जनगणमानसधामविहारिणि काननशैलविहाररते।
मुनिवरवन्दितसैन्यसुरक्षितदैन्यनिवारिणि पुण्यधरे
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि देवनुते॥१

अयि नवकेशरकुङ्कुमरञ्जितदीप्तसमुन्नतभालधरे
सुरतटिनीजलमौक्तिकहारसुशोभितकम्बुककण्ठतले।
सुरभितपुष्पपरागपरिष्कृतपुष्करपल्लवशस्यपटे
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि वीरनुते॥२

अयि यतियोगविवर्धिनि भोगविधायिनि लौकिकरोगहरे
त्रिविधसमीरणवेल्लितवैदिकहोमजधूमसुवासरते।
प्रतिकणिकालयवासरते सुविकासरते मृदुहासरते
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि लोकनुते॥३

अयि रघुवंशशिरोमणिपार्थिवपालितशाश्वतराष्ट्रधरे
यदुकुलनाथकरच्युतमञ्जुलगोरसपानरसज्ञवरे।
कुरुकुलसंयुगशौर्ययशोगुणसङ्घमहास्वनगानरते
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि भूपनुते॥४

अयि कमलापतिपादसरोजरजोलवमण्डिततीर्थधरे
शशिधरमौलिनिबद्धसरित्कणसिक्तकृषिस्थलमध्यगते।
अगणितमर्त्यसमुच्चयतारिणि पापनिवारिणि सर्वसहे
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि सिद्धनुते॥५

अयि पुरपत्तनखेटककाननपर्वतकन्दरवासरते
मुनिगणपर्णकुटीमुपगम्य महीपतिशेखरपीठगते।
शुकपिकवृन्दनिनादरतेऽनिलतालतरङ्गितनृत्यरते
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि सर्वनुते॥६

अयि कनकाचलशृङ्गनिवासिनि निर्धनवेश्मविलासरते
वसनविहीनविषण्णविलोचनसम्भृतमानविशालबले।
शिशुवदनस्थितकेलिसमुत्थितसोमसुधामयहासरते
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि निःस्वनुते॥७

अयि शतकोटिसुतादिकपालिनि लक्षभटाधिपसैन्यधरे
द्विगुणितबाहुधृतोद्धतशस्त्रसुरक्षितदुर्गमदुर्गधरे।
अमितजनाश्रयदानपरे करुणामृतपूरितकुम्भधरे
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि विश्वनुते॥८

अयि शुभदे जननि त्रिदशालयराजसमीहितरेणुलते
मिलितविहङ्गमकूजितनिर्जरपूजितमोक्षदतोयलते।
मम जनिभूः पितृभूः प्रियभूः शुचिभूः कृतिभूर् गतिभूर् वसुधे
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि पुत्रनुते॥९

अयि कवितावनितान्वितभावगृहस्थमहाकविवंशनुते
सकलकलाप्रतिभापटुतानिधिधन्यमहाकविवंशनुते।
अमरगिरा मुदिते सुपुराणनवीनमहाकविवंशनुते
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि काव्यनुते॥१०

क्व न विरमामि रमे! प्रणमामि, रमे तव कीर्तिनिकुञ्जवने
यदि न जपामि सुनाम, न यामि शमं, कथयाम्यनृतं न शिवे।
अयि रसनाबलमेव दयामयि देहि च मे चरतो भुवने
जय जय भारतराष्ट्रजनेश्वरि पावनमेदिनि भक्तनुते॥११

Sincerely,
Kushagra

Kushagra Aniket
Economist and Management Consultant
Columbia University'21
Cornell University'15
New York, NY, U.S.A.

Courtesy:Dr.Nagaraj Paturi

  Kaviraajaviraajita is a name of this meter. 

With the first two laghus replaced by a guru, it turns into Maaninee. The rhythmic nature is probably because of the symmetry coming from the repetition of chaturmaatraaka /chaturasra gati bhaganas followed by a final additional guru. In the Kaviraajaviraajita version only the first bha changes into na-la maintaining the chaturasra gati taala. 

Saturday, August 27, 2022

Pray to Thaayar first

படித்ததில் பிடித்தது :
முதலில் தாயாரை சேவித்த பின்
பெருமாளை சேவிக்க வேண்டும்.....!!!
முதலில் சீதா பிராட்டியாரையும், தொடர்ந்து லட்சுமணனையும் குகனை ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்த பிறகே, குகனை கடாக்ஷிக்கிறாராம் ராமபிரான்.
ஸ்ரீரங்கநாதரிடம் பிரார்த்திக்கும்போது, ஸ்ரீரங்கநாச்சியாரை முன்னிட்டே பிரார்த்திக்கிறார் ஸ்ரீராமாநுஜர். ஏன் நாம் நேராக பெருமாளிடம் போய் கேட்டுக்கொள்ளக் கூடாதா?
பெறவேண்டியவன் நானாகவும், கொடுக்க வேண்டியவன் பெருமாளாகவும் இருக்கும் போது, நேராக பெருமாளிடமே பெற்றுக்கொள்ளலாமே. இடையில் பிராட்டியார் எதற்கு?
இதற்கு, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் செய்யும்போது சொல்கிறார்:
கொடுப்பவன் பகவானாக இருந்தாலும், அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா? அந்த உறுதியான எண்ணத்தை, அதாவது உபாய நிஷ்டையை நமக்கு அருள்பவள்தான் மஹாலக்ஷ்மி பிராட்டியார்.
மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான பக்தி ஏற்பட்டுவிட்ட பிறகு நடப்பது நடக்கட்டும் என்று கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம். இல்லையென்றால், தினமும் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியது
தான். ஒருவர் இருக்கிறார். அவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்.
அதேசமயத்தில் பகவான் கிருஷ்ணர் அருளிய,
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேஹம் சரணம் வ்ரஜ அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
என்ற சுலோகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.
'உன்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். அப்படி இருக்க நீ ஏன் சோகப்படுகிறாய்?' என்ற அர்த்தத்தில், கிருஷ்ணர் அருளிய இந்த சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே அவர் நாள்முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அவருக்கு பகவானிடத்தில் உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை என்றுதான் பொருள். காரணம், மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் அவருக்குக் கிடைக்கவில்லை.
நாம் எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நாம் தான் நம் குடும்பத்தையே காப்பாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த நினைப்புதான் நம்மை எப்போதும் கவலையில் ஆழ்த்திவிடுகிறது. உண்மையில் நாமா எல்லோரையும் காப்பாற்றுகிறோம்?
கூரத்தாழ்வார் ஒரு சுலோகத்தில், 'நான் போன பிறகு, என் மனைவியை யார் காப்பாற்றுவார்கள் என்று இத்தனைநாள் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒருநாள் நான் புரிந்து கொண்டேன். எனக்குப் பிறகு அவர்கள் இன்னும் நன்றாக இருப்பார்கள் என்று அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். இத்தனை நாளாக நான்தான் அவளை ரக்ஷித்துக் கொண்டிருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பகவான்தான் அவளை மட்டுமல்ல என்னையும் சேர்த்தே ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இதுவரை என்னையும் என் மனைவியையும் ரக்ஷித்து வந்த பகவான், என் மனைவியை நான் போன பிறகும்கூட ரக்ஷிக்கத்தான் போகிறான்' என்கிறார்.
இந்த ஜகம் முழுவதையும் பகவான் ஒருவன்தான் ரக்ஷிக்கிறானே தவிர, கணவன் ரக்ஷிக்கிறான், மாதா பிதாக்கள் ரக்ஷிக்கிறார்கள், சொத்துக்கள் ரக்ஷிக்கும் என்றெல்லாம் நினைப்பது அபத்தம். பகவான் மட்டுமே ரக்ஷகர். ஆனால், அவர் அப்படி ரக்ஷிக்க வேண்டுமானால், அவர் திருமகளோடு சேர்ந்து இருக்க வேண்டும்.
அதனால்தான் ஆழ்வார் பாடுகிறார்:
'ஞாலத்தோடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே சாலப்பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ'
திருமகளோடு சேர்ந்திருந்து இந்த உலக உயிர்களை யுகங்கள்தோறும் காத்து ரக்ஷிக்கும் உன் திருவடிகளை அடையாமல் நான் இன்னும் எத்தனை நாள்தான் துன்பப்படுவது என்று கேட்கிறார்.
எனவே, முதலில் மஹாலக்ஷ்மியையும்… பிறகு, பெருமாளையும் சேவிக்க வேண்டும். ஒருவரை சேவித்து விட்டு மற்றவரை சேவிக்காமல் இருக்கக் கூடாது. அதாவது, இருவருடைய திருவடிகளையும் ஒருசேரப் பற்றிக் கொள்ள வேண்டும். இருவரிடமும் பற்றுகொள்ள வேண்டும்
முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியர்:
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்

Friday, August 26, 2022

What to do for snakebite, poisonous fever etc- Swami Desikan

7.5.21

*ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்*?.

ஆழ்வார் அருளிச்செய்த படியே திருவாழியோடு ஆழியான் ஆள்கின்றபோது நமக்கு குறையேது?

உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் என்ற கணக்கிலே ஒருவரிடமும் கை நீட்டாதவர்கள் நம் பரமைகாந்திகள்.*தாளும் தடக்கையும் கூப்பி*என்கிறபடியே தேவதாந்த்ரங்களின் இருப்பிடத்துக்குச் செல்லாமல் நம் பெருமாளிடமே கேட்டு
பெறுவது நலம்.

பாம்பு, நோய், மனக்கவலை, விஷக்கடி, விஷக்ருமிகளால் தொல்லை,விஷஜுவரம் மேலும் இடி, மின்னல் பெருமழை பூகம்பம் நிலச்சரிவு பஞ்சம், பிறரால் தொல்லைகள் முதலானவைகள் ஏற்பட்டால்

பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் பரிசரண குணாந்
ஸத் ஸம்ருத்திம் ச யுக்தாம்
நித்யம் யாசேதநந்யஸ் ததபி பகவதஸ்
தஸ்ய யத்வா ப்தவர்க்காத் 
(ந்யாஸவிம்சதி--19வது ஸ்லோகம்.)

என்கிறமுறைப்படி எம்பெருமானிடமோ, எம்பெருமானின் ஆப்தர்களான அனந்தகருட விஷ்வக்ஸேந-சக்ராதிகளான பாகவதர்களிடமோ தான் நாம் இவைகளை நீக்கி அருள வேண்ட வேண்டும்.அந்த முறைப்படி ஷோடசாயுத ஸ்தோத்ரம் ஏற்பட்டது.

ஸ்வாமிஶ்ரீதேசிகன் பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருந்த காலத்தில் திருபுட்குழியில் ஒருவகையான ஜ்வரம்(கொள்ளை நோய்) ஏற்பட்டு பலர் மடிந்தனர். எந்த மருத்துவத்துக்கும்(அந்த காலத்தில்)
கட்டுப்படவில்லை. அப்போது பெரியோர்கள் ஶ்ரீஸ்வாமியைக் கிட்டி இதற்கு பரிகாரமாக தேவரீர் ஏதாவது செய்தருள வேண்டும் என்று விண்ணப்பிக்க ஸ்வாமிஶ்ரீதேசிகன் காஞ்சி ஶ்ரீதேவராஜன் சன்னதியில் அனந்த சரஸ்ஸின் கரையில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீசக்கரத்தாழ்வானைக் குறித்து இந்த ஷோடசாயுத ஸ்தோத்ரத்தை அருளினார். உடனே ஜ்வரம் அங்கு உள்ளவர்களுக்கு நீங்கி பரமபதித்தவர்கள் போக நீக்கியுள்ளார் உயிர் பிழைத்தனர். பிறகு அந்த ஜ்வரம் அங்கு தலைதூக்கவேயில்லை என்பது சரித்ரம்.

ந்யாஸவிம்சதி19வது ஸ்லோகத்தில் ஸ்வாமிஶ்ரீதேசிகன் தாமே சாதித்தருளியபடியே அனந்த கருட விஷ்வக்ஸேந சக்ராதிகளான எம்பெருமானின் ஆப்தர்களிடம் ப்ரார்த்திப்பது சாஸ்த்ர ஸம்மதமே.

நிஷித்தமான காம்யங்களே யாசிக்கத் தகாதவை என்பதையும், அநிஷித்த காம்யங்கள் பகவத் பாகவத ஆச்சார்ய
கௌங்கர்யோபயுக்தமாகில் அதை எம்பெருமானிடமோ எம்பெருமானின் ஆப்தவர்கங்களான பரமபாகவதர்களிடமோ யாசித்துப் பெறலாம் என்று சாஸ்திரம் உள்ள படியால் இது-நிஷித்தகாம்யரஹிதம் குருமாம் நித்யகிங்கரம் என்பதற்கு அனுகுணமானதே. காஞ்சி அனந்த ஸரஸ்ஸின் கரையில் ஸேவை சாதிக்கும் ஶ்ரீ திருவாழியாழ்வான் திருக்கைகளில் ஸேவையாகும் முறையில் இங்கு திருவாயுதங்கள்16வருணிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த்ரஜித்தின் நாகபாசங்களால் கட்டுண்ட போது இராமன் தனக்குள்ளே ஜபித்த மந்த்ரபலத்தினாலோ பண்டைய தோழமையினாலோ கருடன் விரைவில் எழுந்தருளி விஷத்தினின்று விடுவித்திருப்பதால் இந்த பெரியதிருவடிக்கு ஓர் உயர்ச்சியை இராமபிரான் அளித்தது தோற்ற ஆழ்வார*வலங்கொள் புள்ளுயர்த்தாய் என்னும் என்று அருளியபடி

ஸ்வாமி ஶ்ரீதேசிகன்ஸாதித்த கருடதண்டகமும் இப்போதைய சூழ்நிலையில் அநுசந்தித்தால் ஶ்ரீகருடபகவானும், சக்கரத்தாழ்வானும் நம்மை இப் பரவும் விஷக்காய்ச்சலிலிருந்து காக்கட்டும்.

ஶ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:

*தாஸன் பத்மாரங்கநாதன்

Some religious Q & A

Continued from part 1 

13)Who is a true friend to whom? 

For a Sthree (woman) – Barthaa (husband)   

For a King – Manthri (Minister)   

For  Brahmins - Vedams   

For Satyam (truth) – Dharmam (righteousness) 

14)The journey of our life goes as follows: 

Sareeram - Ratham(chariot)

Jeevan - man who goes in the chariot)

Indhriam(senses) - horses

Kadivalam - Manasu-mind

Therotti - Buddhi 

All the horses should travel in the same direction and with the same speed.This is taken care of by Therotti (charioteer) with the help of Kadivalam.This shows the importance of brain-mind coordination. 

15) A noble person should avoid the following: 

a) Chowriyam (theft) b) Paisuram (backbiting) c) Mathsaram (jealousy)

d) Rajathwishtam (going against the king) 

16) Qualities of a noble soul:

Anasuyai (absence of jealousy)

Aaradhmam (Nermai)

Suddhi (cleanliness-Pushti-inner and susthi-outer)

Santhosha (kind words) Dhaanam (charity)

Sathyam (truth)

Anaayaasam (doing things with pleasure without treating them as burden) 

17) What ignoble souls do not have: 

Aathmagnanam (knowledge of self)

Sambrambam (activity)

Dhidhiksha (tolerance of difficulties)

Dharmanithyatha (decisiveness about Dharma)

Vasiva (protecting a secret) Controlled speed 

18) The destroyers: 

Desire will destroy Bravery (Dhairyam)

Jealousy will destroy Dharma

Krodham (anger) will destroy wealth (aiswaryam)

Helping ignorable fellows will destroy Seelam (nallozhukkam/character) 

Pride will destroy everything 

20) Difference between Unmai,Vaaimai and Mei 

Unmai:Truth in mind Vaaimai: truth in words

Mei:Truth in sariram(body) 

21) Whom to appreciate when 

Annam - after digestion

Pathni - after she loses her youth

Servant - after he completes the work well 

Sons - never(to prevent ego) 

Relatives –after they leave after a visit 

Sanyasi (ascetic)  - after he attains Gnanam (enlightenment)

Soldier (after he wins the war) 

25) Uththamar, Madhyamar and Adhamar:

Adhamar: like water drop falling on fire: it evaporates

Madhyamar: Drop of water on the petal of lotus - looks like pearl, but not one 

Uththamar: like Muthuchippi, becomes a pearl 

26) Difference between loneliness and solitude: 

Loneliness: Has an unhappy connotation no one to talk to 

Solitude: Has a happy association One can pursue his activities undisturbed-no one to disturb. 

27) Danger generally comes from one's own kith and kin:

 A Baby elephant once told his grandfather elephant 'there is danger. We should run for our lives.'

The grandfather asked what the matter was. The Baby elephant said, "people are coming with weapons, fire and iron chains".  

Grandfather said, "no worry.  Are there any other elephants coming?"  

The Baby said, "no".  The Grandfather said that danger generally comes from only our own kith and kin. 

28) According to Vedas, human beings have a lifespan of 100 years, but very rarely do people live up to that age.  Why? 

Excessive pride- Excessive talk

Gluttony -Betraying friends

Excessive anger-Excessive sexual desires 

29) 8 Qualities of a messenger (Dhoothan/ambassador) 

A) Humility  b_ Gift of the gab c) No procrastination  d) Intelligence e) Kindness

F) Health  g) Blemishlessness

H) Not susceptible to temptations 

30)  No one should have any commercial dealings with: 

King who does not enforce law;

Immoral ladies; Servants of the King;

Brothers/sons of the King; Widow with a small child; Soldiers;One who has lost his wealth due to loss in business 

31)  Rules for having snanam in Punyanadhis (sacred rivers) 

Do not put your leg first.  Pray and do aachamanam before entering the river 

Men should have a dip with Panchakacham and women with Madisar 

Do Sankalpam treating sacred ash as theertham.Do not apply soap.After scrubbing with bare hands, have a dip again 

Do Devarishi Tharpanam 

32)  General rules for snanam: 

No snanam before 3 AM or after 6 PM 

No snanam after Pithrukarma

Brahmachari should do one snanam, Grihasthas 2 snanams and Sanyasis 3 snanams 

33)Qualities of those who do snanam in the right way: 

a)Strength b) Roopam/Thejas

C) Kundam(pronunciation)

D) Soft complexion 

33)  Qualities of those who eat Sathvic food moderately (twice a day) 

a)Perfect Health b)Long life c)Strength

d)Children's Health 

34)  Shiva and Shakti are part and parcel of each other.

Siva's colour is white and Shakti's colour is red.  That is why we use this combination everywhere Eg: Dhoti is pure white and the border is generally red. 

Vibhuti is white and Kumkumam is red 

Abishekam, milk is white and honey is brownish red. 

Lily is white and sembarathai flower is red. 

Kolam white rice powder  + semman for decorative. 

35)  When all odds are against you and when you have reached nadir, do not despair.  You cannot go further down. You can only go up. 

Thursday, August 25, 2022

24th ashtapadi in tamil

Courtesy; Dr.Smt.Saroja Ramanujam
அஷ்டபதி 24

அஷ்டபதி 24
கண்ணனுடன் சம்யோகத்திற்குப் பிறகு ராதா கண்ணனை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்.

1. குரு யதுநந்தன சந்தன சிசிர தரேண கரேண பயோதரே 
ம்ருகமத பத்ரகம் அத்ர மனோபவமங்கள கலச ஸஹோதரே 

யது நந்தன – கிருஷ்ணா 
சந்தன சிசிர தரேண கரேண- சந்தனம் போல் குளிர்ந்த உன் கரத்தால் 
மனோபவமங்கள கலச ஸஹோதரே -மன்மதனின் வெற்றிக்கலசம் போன்ற 
அதர பயோதரே – ஸ்தானங்களில் இங்கு
ம்ருகமத பத்ரகம் குரு– கஸ்தூரியால் சித்திரம் வரை.

நிஜகாத ஸா யதுநந்தனே கிரீடதி ஹ்ருதயாநந்தனே ( த்ருவபதம் )
ஸா – அந்த ராதை
யதுநந்தனே – கிருஷ்ணன்
ஹ்ருத்யானநந்தனே க்ரீடதி – மனம் மகிழ சல்லாபித்தபோது
நிஜகாத –கூறினாள்

.2.அலிகுலகஞ்ஜனமஞ்சனகம் ரதிநாயகஸாயக மோசனே 
த்வததர சும்பனலம்பிதகஜ்ஜல உஜ்ஜ்வலய ப்ரிய லோசனே (நிஜகாத)

ப்ரிய- அன்பே 
ரதிநாயகஸாயக மோசனே—மன்மதனின் சரங்களை விடுவதுபோன்ற
 த்வததர சும்பனலம்பிதகஜ்ஜல-உன் இதழ்களால் கலைக்கப்பட்ட தீட்டின மையை உடைய 
லோசனே – கண்களில்
அலிகுலகஞ்சனம் –வண்டுகள் கருமையைப் பழிக்கின்ற 
அஞ்ஜனகம் – மையை 
உஜ்ஜ்வலய – தீட்டிவிடு.

3.நயனகுரங்க தரங்க விகாஸநிராகரே ஸ்ருதிமண்டலே
மனஸிஜபாசவிலாசதரே சுபவேச நிவேசய குண்டலே (நிஜகாத)

சுபவேச –அழகான ஆடை அணிந்தவனே 
நயனகுரங்க தரங்க விகாஸநிராகரே – என் கண்கள் என்ற மான்களின் துள்ளலை கட்டுப்படுத்தும் `
மனஸிஜபாசவிலாஸதரே-காமனின் பாசம் போல் இருக்கும்
ஸ்ருதிமண்டலே- காதுகளில்
 குண்டலே- குண்டலங்களை 
நிவேசய – பூட்டிவிடு.
 
4. ப்ரமரசயம் ரசயந்தம் உபரி ருசிரம் ஸுசிரம் மம ஸம்முகே 
ஜிதகமலே விமலே பரிகர்மய நர்ம ஜனகம் அலகம் முகே (நிஜகாத)

ஜிதகமலே –தாமரையை பழிக்கும் 
விமலே – அழகிய 
மம முகே –என் முகத்தின் 
உபரி- மேல்
ஸுசிரம்- எப்போதும் இருக்கும் 
 ப்ரமரசயம்-வண்டுகள் கூட்டத்தின் தோற்றத்தை 
ரசயந்தம்- தருகின்ற 
ருசிரம் – அழகான 
நர்மஜனகம் – கவர்ச்சியை உண்டாக்கும் 
அலகம் – கூந்தலை 
சம்முகே- என் முன் வந்து 
பரிகர்மய- சரிப்படுத்து

5.ம்ருகமதரஸவலிதம் லலிதம் குரு திலகம் அலிக ரஜநீகரே 
விஹிதகலங்ககலம் கமலானன விச்ரமிதச்ரமசீகரே (நிஜகாத)

  கமலானன- தாமரைபோல் முகம் உடையவனே 
விச்ரமிதச்ரமசீகரே- வியர்வைத்துளிகள் அடங்கியுள்ள 
அலிகரஜநீகரே – அஷ்டமி சந்திரன் போல் உள்ள என் நெற்றியில்
 விஹிதகலங்ககலம்-சந்திரனின் களங்கம் போல் உள்ள
லலிதம்- அழகான 
.ம்ருகமதரஸவலிதம்- கஸ்தூரிக்குழம்பால் ஆன
திலகம்—திலகத்தை
குரு- இடு

6.மம ருசிரே சிகுரே குரு மானத மனஸிஜத்வஜசாமரே
ரதிகலிதே லுலிதே குஸுமானி சிகண்டிசிகண்டகடாமரே (நிஜகாத)

மானத-உள்ளம் கவர்ந்தவனே 
மனஸிஜத்வஜசாமரே-காமனின் கொடியில் உள்ள குஞ்சம் போல 
ரதி கலிதே லுலிதே – உன்னுடன் சேர்ந்திருக்கையில் தூக்கி முடிந்த 
சிகண்டிசிகண்டகடாமரே- மயிற்றோகையைப் பழிக்கும் 
மம ருசிரே சிகுரே- என் அழகிய கொண்டையில் 
குஸுமானி குரு- மலர்களை சூட்டு.

7. ஸரஸகனே ஜகனே மம சம்பரதாரணவாரண கந்தரே
மணிரசனாவஸநாபரணானி சுபாசய வாஸய ஸுந்தரே (நிஜகாத)

சுபாசய- நல்ல உள்ளம் படைத்தவனே 
சம்பரதாரணவாரண கந்தரே-மன்மதன் என்னும் யானை இருக்கும் மலைச்சரிவு போன்ற
ஸரஸகனே ஸுந்தரே –அகன்று அழகிய 
மமஜகனே – என் இடுப்பில் 
ஒட்டியாணம் மற்றும் வஸ்திரம் ஆபரணம் முதலியவைகளை
வாஸய- அணிவிப்பாய்.

8.ஸ்ரீஜயதேவவசஸி ருசிரே ஸதயம் ஹ்ருதயம் குரு மண்டனே
ஹரிசரணஸ்மரணாம்ருத நிர்மித கலிகலுஷஜ்வரகண்டனே (நிஜகாத)

ஹரிசரணஸ்மரணாம்ருத நிர்மித- ஹரியின் பாதாரவிந்தத்தின் ஸ்மரணமாகிய அம்ருதத்தில் தோய்த்து செய்யப்பட்ட 
கலிகலுஷஜ்வரகண்டனே- கலியின் பாபமாகிற ஜ்வரத்தை நீக்கும்
ஸ்ரீஜயதேவவசஸி – ஸ்ரீ ஜெயதேவருடைய வாக்கான 
ருசிரே மண்டனே – அழகிய ஆபரணத்தை 
ஸதயம் ஹ்ருதயம் குரு- யதுநந்தனா உன்னுடைய கருணையுள்ளத்தோடு ஏற்பாயாக.

The KaTaPaYadi Code: An article

Wednesday, August 24, 2022

On mattapalli by mukkoor

மட்டப்பல்லியில் மலர்ந்த மறைபொருள் ( தொடர்ச்சி ) 115
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
" திருவின் கேள்வனின் திருவிளையாடல்கள் "
7. ஸ்ரீசக்ரி கதை
சக்ரி என்கிற குயவன் மட்டபல்லியில் வசித்து வந்தான். ஸ்ரீமட்டபல்லி தம்பதிகளிடம் அளவு கடந்த பக்தியுடையவன்.. எம்பெருமான் ஸ்ரீராஜ்யலக்ஷ்மியுடன் தினமும் அவனது குடிசைக்குள் சென்று அவனுடன் பேசி மகிழ்வான். அவனுக்கு மோக்ஷமளிக்கிறேன் என்றான் எம்பெருமான். அவனோ ஆஞ்சனேயர் போல மட்டப்பல்லி நாதனை எங்கும் எப்போதும் காண விரும்பினான். எம்பெருமானும் அவனது பக்தியைக் கண்டு மெச்சி அவனை ஒரு சிறு கல்லாக்கிக் கர்ம க்ருஹத்தில் தன திருடிக்கொண்டன அருகில் வைத்துக் கொண்டான். ஹே கந்தர்வர்களே! நீங்களும் அக்கல்லை பார்த்தீர்களல்லவா? இதுதான் சக்ரி ஸ்ரீசக்ரியை ( சக்ராயுதத்தை உடையவனை ) அடைந்த கதை.
8. ஸ்ரீயமன் மோஹிநத்த கதை
யமதர்ம ராஜா ஒரு முறை ஒரு ப்ராணன் அபகரிப்பதற்க்காக மட்டப்பல்லிக்கு பாசக் கயிறுடன் வந்தான். வந்தவன் வந்த வேலையை மறந்துவிட்டு எம்பெருமானை ஸேவிக்கப் சென்றான். போனான் போனான் தான் !! எம்பெருமான் முன் மெய்மறந்து நின்று விட்டான். ப்ரதமம்புஷ்பம் பண்ணிக் கொண்டே இருக்கிறான். கணக்கெழுதும் சித்ரகுப்தன் யமன் தேடி மட்டப்பல்லி வந்து அவனும் ப்ரதக்ஷணம் பண்ண ஆரம்பித்து விட்டான்.யம் தன் தொழில் மறந்து மோஹித்து நின்றான். யமனையே மோஹித்து வைத்தவன் மட்டப்பல்லி எம்பெருமான். இவன் ம்ருத்யுவிற்க்கும் ம்ருத்யு. இவனிருக்குமிடத்தில் யமன் என்ன செய்ய முடியும் ?
எம்பெருமானுடைய திருவிளையாடல்கள் அநேகம் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் கூறினேன். மற்றவற்றை சமயம் வரும்போது கூறுகிறேன் என்றார் நாரதர். கந்தர்வர்கள் கதைகளைக் கேட்டு பரமானந்தம் அடைந்தனர்.
ஸிம்ஹாந்ருஸிம்ஹா! ஸிம்ஹாந்ருஸிம்ஹா!
( தொடரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.

Ramayana dhyana sloka with meaning

ஜெய் ஸ்ரீமன் நாராயணா.
ஸ்ரீ மத் ராமாயணம் பாராயண த்யான ஸ்லோகத்தில் அடியேனின் மனம் கவர்ந்த ஸ்லோகம் 
ய:கர்ணாஞ்சலி ஸம்புட்டை ரஹரஹ சம்யக் பிபத்யாதராத் வால்மீகே வதநாரவிந்த கலிதம் ராமாயணாக்யம் மது|
ஜன்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை அத்யந்த சௌபத்ரவம் சம்சாரம்ச விஹாய கச்சதி புமான் விஷ்ணோ:பதம் ஸாஸ்வதம்||
வால்மீகியின் திரு முகமாகிற தாமரையிலிருந்து பெருகும் ராமாயணம் என்கிற தேனை யார் ஒருவர் தன் காதுகளை குவித்து அஞ்சலி கைகளால் நாள் தோறும் விரும்பி நன்றாக பருகுகிறார்களோ அந்த புருஷன் பிறவி நோய் மூப்பு விபத்து மரணம் முதலிய கொடுந்துன்பம் நிறைந்த ஸம்ஸாரத்தை விட்டு விஷ்ணுவின் அழியாத சாயுஜ்ய சாமீப்யம் சரூப்யம் சாஸ்வதமான மோக்ஷ பதவியை அடைவான்.🙏🙏🙇‍♂️🙇‍♂️தாஸன் ஜோத்பூர் பாலாஜி.

Prelude to Bhagavatam - story

*ஶ்ரீமத் பாகவதம்* --34
ஓம்.🙏

இனி கலியுகத்தில் வரும் மாந்தர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. என்றெல்லாம் மகிழ்ந்தவருக்கு தான் கொடுத்த கிரந்தங்களை மக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க ஆவல் ஏற்பட்டது.

கண்களை மூடி சற்று பவிஷ்யத்தைப் பார்த்தவர் இடிந்துபோனார். வேதங்களையும், புராணங்களையும் சீந்துவாரில்லை. எங்கோ ஒரு சிலரைத் தவிர வேறெவரும் அவற்றைச் சட்டை செய்யவில்லை. மிகவும் சுவையான, எக் காலத்திற்கும், அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு தர்மங்களை எடுத்துச் சொல்லும் மஹாபாரதமும் வீண் விவாதங்களுக்கும் பட்டிமன்றம் நடத்துவதற்குமே பயன்பட்டது. மக்கள் எப்போதும் எதையோ தேடி அலைந்துகொண்டேயிருந்தனர்.

தலை சுற்றியது வியாசருக்கு. பகவத் ஸ்மரணையின்றி ஒரு பெரும் மக்கள் கூட்டம். எப்படி கரையேறுவார்கள்? தன் உழைப்பு அவ்வளவும் வீணாகிவிட்டதாய் உணர்ந்தார்.

தளர்ந்த மனநிலையோடு தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
மஹான்களின் கவலை எப்போதும் உலகிலுள்ளோரின் நன்மையைப் பற்றியதே. அவர்களுக்கு அவ்வாறு ஏற்படும் கவலை ஒரு பெருத்த நன்மையில் முடியும்.ஸாதுக்களுக்கு கவலை ஏற்படுமாயின் அவ்விடத்தில் பகவான் உடனே ஆவிர்பவிப்பான். அல்லது தகுந்த குருவை உடனே அனுப்பிவைப்பான். நாரதரின் கவலையைப் போக்க ஸனத் குமாரர் வந்ததை மாஹாத்மியத்தில் பார்த்தோம்.

எந்த ரத்னாகர் என்ற வழிப்பறிகாரனுக்கு உபதேசம் செய்து அவனை வால்மீகி முனிவர் என ஆக்கி ஶ்ரீ இராமாயணம் என்ற மஹா காவியம் உலகிற்கு கிடைக்க வழிவகுத்துக் கொடுத்தாரோ, அதே ஶ்ரீ நாரத மஹரிஷி இப்போது இங்கே ஶ்ரீமத் பாகவதம் உருவாக்கி தர வருகை தந்தார்.
ஆனால் இன்றைய உலகில் இது போன்ற மகரிஷிகளை சிறிது கூட அறிந்து கொள்ளாது கதைகளிலும், புராணம் சொல்பவர்களும், திரைப்படங்களிலும் இவரை ஒரு ஹாஸ்ய பாத்திரமாகவே சித்தரித்து காட்டுகிறார்கள். இவரையே கலகம்பிரியர் என விமரிசிக்கின்றனர்.இது கலியுகத்தில் நடக்கவே செய்யும். என்ன செய்வது?

வியாஸரின் கவலையைப் போக்க நாரதரே அவ்விடம் வந்தார். வியாஸர் நாரதர் வருவதைக் கண்டதும் வரவேற்று, அவரை உரிய மரியாதைகளுடன் பூஜை செய்தார்.
நாரதர், உபதேசம் செய்யலுற்றார்.வியாஸரைப் பார்த்து நாரதர் கேட்டார்

நீங்கள் நலமோடு இருக்கிறீரா?
உடல்நலக்குறைவா? அல்லது
மனத்தில் ஏதாவது கவலையிருக்கிறதா? உம்மைப் போன்ற மஹாத்மாக்களின் கவலை லோகோத்தாரணத்திற்கு வழியாயிற்றே..

வியாஸர் சொன்னார்
நாரதரே நீங்கள் சூரியனைப்போல் அனைத்தையும் அறிவீர். காற்றைப் போல் எல்லா இடங்களிலும் நுழைந்து ஸஞ்சாரம் செய்யக்கூடியவர். தங்களது உபாசனா தெய்வமோ பரமபுருஷனேயாவார்.
தங்களைப் போன்ற ஸாதுக்களிடம் எதையாவது மறைக்க முடியுமா? நீங்கள் ஹ்ருதயம் நுழைந்து அனுக்ரஹம் செய்பவராயிற்றே. என் கவலை தங்களுக்குத் தெரியாதா? அது நீங்குவதற்கு உபாயமும் தாங்களே சொல்லுங்கள்.

நீங்கள் ஒருவரும் சாதிக்கமுடியாத பெரிய காரியத்தை சாதித்திருக்கிறீர்கள். வேதத்தைப் பகுப்பதென்ன எளிதா?
எவ்வளவு புராணங்கள் செய்திருக்கிறீர்! மஹாபாரதம் போல் உண்டா? ஆனாலும்..

என்ன ஆனாலும்?

 "வியாஸரே! நீர் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கைப் பற்றியும் பேசினீர். அதை நீர் செய்திருக்கக் கூடாது. முக்கியமான வீடு பேறாகிற மோட்சத்தை பற்றித்தான் விரிவாக உபதேசித்திருக்க வேண்டும். மக்களிடம் தேவையான அளவு மட்டுமே தர்மத்தை பற்றியும், அர்த்தத்தைப் பற்றியும் கூற வேண்டும். நிரம்ப மோட்சத்தைப் பற்றித்தான் கூற வேண்டும். ஒரு சிறு குழியில் சாதப் பருக்கைகள் கிடந்தால், காக்கைகள் அதை உண்டு விட்டுப் போகும். ஆனால், மானஸரோவரத்தில் பறக்கும் ஹம்ஸப் பறவைகள் அதைத் தீண்டாது. அதேபோல், நீர் செய்திருக்கும் உபதேசம் பெரியோர்களால் தீண்டப்படாது. வியாஸரே! தர்மத்தையும், அர்த்தத்தையும் பேசப் பேசச் செருக்கு வளரும். ஆனால், மோட்சத்தைப் பற்றியும், பகவானைப் பற்றியும் பேசினால் பண்பும், பணிவும் வளரும்" என்றார் நாரதர்.

இதில் இரு வகைப்பட்டவர்களைப் பற்றி வியாஸர் நிரம்பப் பேசினார். அதாவது, நல்லது செய்ய வேண்டும், நல்லவனாக வாழ வேண்டும், அதற்கு மேல் கவலை இல்லை என்பவர்களைப் பற்றியும்; நல்லது செய்து புண்ணியத்தைச் சேமித்து, அதனால் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பவர்களைப் பற்றியும் பேசினார். ஆனால், புண்ணிய - பாபங்கள் இரண்டையும் தொலைத்து முக்தி அடைய வேண்டும் என்பதைப் பற்றிக் குறைவாகக் கூறி விட்டார்.

அதுதான் இப்போது நாரதருக்குக் கவலை. "வியாஸரே! நீர் ஏன் திருப்தி இல்லாமல் இருக்கிறீர் தெரியுமா? உபதேசிக்கும்போது, மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்ததைத்தான் உபதேசிக்க வேண்டும். நீர் 'கர்மங்களைச் செய்வாயாக! அதனால் சொர்க்கம் கிடைக்கும்' என்று உபேசித்தீர். மக்களும் கர்மங்களைச் செய்து, அதனால் மேலும் மேலும் பிறவி அடைவார்கள். நீர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? இந்தக் கர்மங்களோ, பாபமோ, புண்ணியமோ ஏதும் பயன் இல்லை. பலனைக் கருதாமல் செய்த கர்மத்தால் - அதுவும் இறைவனிடத்தில் ஸமர்ப்பிக்கப்பட்டு விட்ட கர்மத்தால்தான் முக்தி கிட்டும். இதைத் தெளிவாகச் சொல்லியிருந்தால், மக்களும் இன்பப்பட்டிருப்பார்கள்; மகேசனும் இன்பப்பட்டிருப்பான்! உம்முடைய உள்ளமும் ஆனந்தப்பட்டிருக்கும். நல்ல வாய்ப்பை இழந்து விட்டீர்!

🙏ஓம்.

               -----------காத்திருப்போம்

Learn sanskrit everyday

*Learn samskrit everyday*
*ଘରେ ରହି ସଂସ୍କୃତ ଶିଖନ୍ତୁ।*
*बालान् अपि संस्कृतं पाठयन्तु।*
*बच्चों को प्रारंभ से संस्कृत सीखाने के लिए सुनहरा अवसर।*

Free YouTube links

अयनम् Class 1


सारिणी Class 2


प्रपद्या Class 3


सुपदा class 4


सुषमा class 5


संस्कृतगीतानि


Vedika Samskrit rhymes


Samskrit for kids


Learn samskrit 
*वर्तमान का सदुपयोग ही
भविष्य का मूल है*


अभ्यासपुस्तकम्


कालबोधिनी


प्रवेशः


परिचयः


शिक्षा


कोविदः


बालकेन्द्रम्


राष्ट्रीयसंस्कृतसंस्थानम्
Part 1-30


Part 31-60

Part 61-90


Part 91- 120


Samskritabharati.in

Single line -5 Gods in tamil

ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா?
முடியும். 

" சிரமாறு உடையான் " 

1. சிரம் மாறு உடையான் - தலையது மாறி வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும்.

2 . சிரம் ஆறு(6)உடையான் - ஆறு முகம் படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும். 

3 . சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும். 

4 . சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம்
பிரம்மாவைக்குறிக்கும். 

5. சிரம் ஆறு(river) உடையான் - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும்
ஸ்ரீரங்கநாதரைக்குறிக்கும்

national anthem in sanskrit

गुणगणमण्डित-यदुवरलसिता
राजति भारतमाता ।
नीतिबोधकपरात्परगीता
बोधकयोगिजनाप्ता ॥१॥


रम्यसुरालय-सरिदाक्रीडैः
भव्यसुललितनिजाङ्गा ।
अभिमतसिद्धा धन्या
शुभफलवृद्धिसुमान्या
जीयाद् भारतशोभा ॥२॥


अनुदिन-मङ्गलदायक-दयया
भारतमाता जयतात् ।
जयतात्, जयतात्, जयतात्
निजजनगणमवतात्

भारतमाता जयतात् ॥३॥

- श्री सीतारामाचार्य:

Tuesday, August 23, 2022

Kurooramma, vilvamangala story

பார்வையிலே சேவகனாய் !!
கௌரி என்ற நம்பூதிரிப் பெண் கண்ணனின் பக்தை. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது அவளது மாமா அவளுக்கு ஒரு கண்ணன் விக்ரகத்தைக் கொடுத்தார். அவள் எப்போதும் அந்தக் கண்ணனுடனே விளையாடுவாள்.
அவள் வளர்ந்ததும் குரூரில் உள்ள ஒரு பிராம்மணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர்.
காலம் கடந்தது. அவளது உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்தனர். அவள் தனித்து இருந்தாள். எப்போதும் கண்ணனின் நாம ஜபம் செய்து கொண்டிருப்பாள். 
ஒரு நாள் அவள், " கண்ணா நீதான் எனக்குத் துணையாக எப்போதும் இருக்க வேண்டும், யசோதையை விட்டுச் சென்றதுபோல் என்னைக் கைவிட்டுவிடாதே" என்று மனமுருகப் பிரார்த்தித்தாள்.
ஒரு நாள், 7,8 வயதுள்ள ஒரு பாலகன் அவள் வீட்டு வாசலில் வந்து, "பாட்டி, .நான் ஒரு அநாதை. எனக்கு ஏதாவது வேலை தாருங்கள்" என்றான். 
அவள், "நீ மிகவும் சிறியவனாக இருக்கிறாய், உன்னால் வேலை செய்ய முடியாதே?" என்றாள். அவனோ,"நான் எல்லா வேலையும் செய்வேன். தங்குவதற்கு இடமும், உணவும் அளித்தால் போதும்" என்று கூறினான். 
இயல்பாகவே கருணை உள்ளம் கொண்ட அவள், மிக மகிழ்ந்து அவனைத் தன் மகனாகவே நினைத்து ஏற்றுக் கொண்டாள். அவனை' " உன்னி" என்று அன்புடன் அழைத்தாள்.
வில்வமங்கலம் ஸ்வாமிகள் என்பவர் பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலேயே பார்ப்பார் என்று கேள்விப்பட்டாள். அவரைத் தன் வீட்டிற்கு வந்து பூஜைகள் செய்து உணவருந்திப் போகுமாறு அழைத்தாள். அவரும் சம்மதித்தார்.
குரூரம்மாவின் அடுத்த வீட்டில் 'செம்மங்காட்டம்மா' என்று ஒரு பணக்காரப் பெண்மணி இருந்தாள். குரூரம்மாவிடம் ஊரிலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையுடன் இருப்பதால் அந்தப் பெண்மணிக்கு எப்போதும் பொறாமை.
 குரூரம்மாவின் வீட்டிற்கு ஸ்வாமிகள் செல்லக் கூடாது என்று, அதே நாளில் தன் வீட்டிற்கு அவரை அழைத்தாள். குரூரம்மாவிற்கு இது பற்றித் தெரியாது.
பூஜையன்று காலை குரூரம்மா குளிக்க ஆற்றுக்குச் சென்றாள். குளித்துவிட்டு ஈரத் துணியைப் பிழியும்போது, அருகில் நீராடிக் கொண்டிருந்த
செம்மங்காட்டம்மாவின் மீது சில நீர்த் துளிகள் தெறித்தது. உடனே அவள் குரூரம்மாவை திட்டிவிட்டு, மீண்டும் நீரில் முங்கி எழுந்து ,"ஸ்வாமிகள் என் வீட்டிற்கு வருகிறார், இப்போது நான் செல்ல வேண்டும்" என்று கூறினாள். 
அதைக் கேட்ட குரூரம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மனம் நொந்தபடியே வீடு திரும்பி, 'உன்னி' யிடம் நடந்ததைக் கூறினாள். அவனும்,"கவலைப்படாதே பாட்டி, ஸ்வாமிகள் நிச்சயம் நம் வீட்டிற்கு வருவார்" என்று அவளைத் தேற்றினான். அவனை நம்பிய அவள், "அப்படியெனில், அதற்கான ஏற்பாடுகள் ஒன்றையும் நான் செய்யவில்லையே" என்றாள். அவனும்," நீ ஓய்வெடு பாட்டி, நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்" என்று கூறி பூஜைக்கு வேண்டியவற்றையும், மற்ற எல்லா வேலைகளையும் விரைவாகச் செய்து முடித்தான்.
செம்மங்காட்டம்மாவின் வீட்டில் ஸ்வாமிகள் வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. ஸ்வாமிகள் வந்துவிட்டதன் அறிகுறியாக அவருடைய சிஷ்யன் சங்கை முழங்கியபோது சங்கிலிருந்து நாதம் எழவில்லை. 
அதை ஒரு துர்நிமித்தமாகக் கருதிய ஸ்வாமிகளுக்கு, உடனே குரூரம்மாவின் வீட்டிற்கு வருவதாக வாக்களித்தது நினைவிற்கு வந்தது.
 அதனால் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று. மீண்டும் சங்கை முழங்கியபோது அதிலிருந்து நாதம் எழுந்தது.
 இறைவனுடைய ஆணையாக அதை ஏற்று அங்கே சென்றார். 'உன்னி' வரவேற்றான். கண்ணனை நேரிலே பார்த்திருந்தும்கூட, மாயையால் அவனை அவர் அறியவில்லை.
எப்போதும், ஸ்வாமிகளின் பூஜைக்கு வேண்டியவற்றை அவரது சிஷ்யர்கள்தான் செய்வது வழக்கம். வேறு எவருக்கும் எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. இங்கோ, பூஜைக்கு வேண்டிய அனைத்தும் முறையாக செய்யப்பட்டு, தயாராக இருந்தது. சிஷ்யர்களுக்கு ஒரே ஆச்சர்யம்!
பூஜை ஆரம்பித்தது. ஸ்வாமிகள் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானித்தார். கண்களை மூடியதும் 'உன்னி' அவர் முன்னே சென்று நின்றான். சிஷ்யர்கள் திகைத்தனர். ஒருவரும் பேசாமல் மௌனமாய் இருந்ததால், சிஷ்யர்களால் 'உன்னி'யைக் கூப்பிட முடியவில்லை. 
ஸ்வாமிகள், பூக்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். கண்களைத் திறந்தபோது,. எல்லா பூக்களும் 'உன்னி'யின் காலருகே இருந்ததைப் பார்த்தார். 
அவனை நகர்ந்து அறையின் மூலைக்குச் சென்று நிற்கச் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடித் தியானித்து அர்ச்சனை செய்தார். இப்போதும் பூக்கள் 'உன்னி'யின் பாதங்களில் விழுந்தன. 
ஸ்வாமிகளுக்கு, குரூரம்மாவிற்காக பகவானே 'உன்னியாக' வந்திருப்பது புரிந்தது. இப்போது அவர் கண் முன் மாயக் கண்ணன் நின்றான்.
அவர் மெய்சிலிர்த்து நமஸ்கரிக்க எழுந்தார். கண்ணன் தடுத்து நிறுத்தினான். "நமக்குள் இது ரகசியமாக இருக்கட்டும், நான் குரூரம்மாவுடன் அவளது 'உன்னியாகவே' இருக்க விரும்புகிறேன்" என்று கண்ணன் அவர் காதருகில் கூறுவது கேட்டது.
பூஜையும் நல்லவிதமாக நடந்து முடிந்தது. ஸ்வாமிகளும் சிஷ்யர்களும் குரூரம்மாவிடம் விடைபெற்றுச் சென்றனர். குரூரம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்.தாள்.
குரூரம்மாவின் காலத்தில் நாமும் பிறந்திருந்தோமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையைத் தட்டச்சு செய்யும்போது, பாரதியாரின்
"நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்., பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதியென்று சொன்னான்" என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றது.
"கண்ணா, மணிவண்ணா, உனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்...
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி சந்திரா சேஷாத்திரி அவர்கள்

Maayan

மாயன்.....!!!
மெய்யன் என்று இவனைச் சொல்ல வேண்டியிருக்க, 'மாயன்' என்றது ஆச்சர்யமான சேஷ்டிதங்களைப் பண்ணி லோகத்தை அனுக்ரஹம் பண்ணுபவன் என்று காட்டவே..! நம் பாபங்களை மாயமாய் போக்கடிப்பதால் (ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி) இவன் மாயன் 'பஹுலீலம் மாதவம் ஸாவதானா' என்று ஸ்வாமி தேசிகன் தயா சதகத்தில் 'அலகிலா விளையாட்டுடையான்' என்று இந்த மாயனுக்குப் பொருள் கூறுவார். நமக்கு ஒரு சந்தேகம்! 'பெருமாள் நம்மோடு பேசுவாரா, கலந்து பழகுவாரா, நமக்குச் சமமாய் உட்கார்ந்து விளையாடி உரையாடுவாரா'என்று! இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு அவதாரம் எடுக்க வேணும் என்ற நெடுநாள் ஆசையுடன் பெருமாள் எடுத்தது இக்கிருஷ்ணாவதாரம்!
ராமாவதாரம் முதலிய மற்ற அவதாரங்களில் தன்னைப் பெருமாளாகக் காட்டிக் கொள்ளாமல், சங்கு, சக்கரம், கதைகளைக் கையிலெடுக்காமல் இருந்தவர், இங்கு அத்திவ்யாயுதங்களுடன் அவதரித்தார். அர்ஜுனனுக்கு தன் விஸ்வரூபத்தையும் காட்டினார். இடைச் சிறுமிகள் கூட இவரை இன்னாரெனப் புரிந்து கொண்டு விட்டனர்.
இந்த அவதாரம் ஒருமுறைதான் என்பதில்லை..! 'யதா யதாஹி தர்மஸ்ய..........ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம்' (ப கீ 4.7) என்று தாமே அருளிச் செய்தபடி 'தர்மத்துக்கு குறைவு ஏற்படும் பொழுதெல்லாம் அத்தர்மத்தை ஸ்தாபிப்பதற்காக (ஸம்பவாமி யுகே யுகே) நான் அவதரிப்பேன் என்று சொன்ன அவதாரமிது..! கிருஷ்ணா! நீ எப்ப வருவேன்னு கேட்டா, நீங்க வேத பாராயணம் பண்றப்போ, யாக யஜ்ஞங்கள் பண்றப்போ வருவேன்னு சொல்லாம, நீங்க அக்ரமம் நிறைய பண்றப்போ வருவேன்னு சொன்ன அந்த மாயனின் அவதாரமிது..! ' மாயாமயினம் ஞானம் என்றதால் மாயா என்பது ஞானம் எனப் பொருள்படும். ஞானம் என்பது ப்ரதானமானது. அதனுடைய விசேஷம் ஆனந்தம். எனவே எம்பெருமான் ஞானானந்த மயமானவன் எனப்படுகிறான்.
ஞான ஸ்வரூபமான எம்பெருமானே மாயன்! 'தன் மதிக்கு விண்ணெல்லாம் விலையாகுமா' எனக் கேட்ட திருமழிசையாழ்வார் ஆதியாகி ஆயனாய மாயமென்ன மாயமோ?' என்று எம்பெருமானை வினவுகிறார். கிருஷ்ணனை இவர் அறிமுகப்படுத்தும் விதமிது! அனைத்துக்கும் ஆதியாகி நிற்கும் எம்பெருமான் பெற்றம் மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் ஆயனாக வந்து பிறந்து விட்டானே என வியப்பு இவருக்கு! ஆதியானவன் ஆயனாக முடியுமா? ஆயனானவன் ஆதியாக இருக்க முடியுமா, இதுவன்றோ மாயம்..!( மாயன் என்பது ஆச்சர்யம் என்று பொருள் தரும்). இவனே மாயன்! இவன் தான் 'ஆதி' என்பதைக் காட்ட ஆதியாகி என்று இவன் அவதரித்த காலம் தொட்டே ஆரம்பிக்கிறார் இவ்வாழ்வார். இக்கண்ணனை அனுபவித்ததில் சுகருக்கு நிகரில்லை..! அவர் 'தமத்புதம் பாலகம்' என்று இவனை'அத்புதம்' என்று கூறி அதிசயித்துப் போகிறார்..! இவன் பெருமையை காவ்யமாகப் பாடிய ஸ்வாமி தேசிகனும், தம் யாதவாப்யுதயத்தில் ' இந்தப் பரம்பொருளானவன் இடைக்குலத்தில் வந்தவதரித்ததே காரணமாக இவனுக்கு பெருமை கூடிற்று' என்கிறார். இடைக் குலத்துக்குப் பெருமை தோன்றியதன்றோ..! யாதவர்களுக்குப் பெருமை அளித்ததால் இவன் மாயன்..!
ஜைனர்களின் அமரகோசம் 'மா' என்னும் சொல்லுக்கு லோகமாதா, ரமா, மங்கள தேவதை என்று பொருள் தருகிறது. 'மா' என்பவள் 'மங்களானாஞ்ச மங்களம்' என்று ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீஸூக்திப்படி பெருமாளுக்கே மங்களத்தைக் கொடுக்கும் லக்ஷ்மியாவாள். அதன்படி மாயன் என்ற சொல் ச்ரிய:பதி என்று பொருள் தருவதாகும். க்ருஷ்ணாவதாரத்தில் லக்ஷ்மி எங்கே என்று தேட வேண்டாம். கோபிகைகள் அனைவருமே லக்ஷ்மி ஸ்வரூபம்தான் என்பது நம் ஸித்தாந்தம். இந்த அவதாரத்திலுள்ளது போல் ஸ்ரீமத்வம் வேறு எதிலும் கிடையாது..!
வேங்கடாசல மாஹாத்ம்யம் 'மாயாவி பரமானந்தம் த்யக்த்வா வைகுண்டமுத்தமம், ஸ்வாமி புஷ்கரணீ தீரே ரமா ஸமோததே' என்று ஸ்ரீவைகுண்ட எம்பெருமானை 'மாயாவி' என்றே குறிப்பிடுகிறது. ப்ரபுத்வம் தோற்ற அங்கிருந்தவன் அதைவிட்டு (த்யக்த்வா) க்ஷீராப்திக்கு வந்தபின் 'மா' வுக்கு அதீனமானான்..! மாயனானான். ' மாயினம்து ப்ரக்ருதிம் வித்யாத்' என்பதால் ப்ரக்ருதிக்கு மாயை என்று பெயர். (மாயினம்து மஹேஸ்வரம் என்பது வழக்கு) 'மம மாயா துரத்யயா என்று பகவத் கீதையில் 'என்னுடைய மாயை' என இவன் அருளிச் செய்தான். மாயையை உடையவனானபடியால் மாயன் எனப்படும் இவன் ஸ்ரீக்ருஷ்ணாவதார எம்பெருமானே...!
(ஸ்ரீ தேசிக ஸேவாவிலிருந்து)
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்

Sudhama story

🍊 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சரித்திரம் X 🍊
********************************
🍁 கிருஷ்ணர் எப்படி சுதாமாவை வரவேற்றார் ??🍁
🍒 துள்ளிக்குதித்து எழுந்தார் கிருஷ்ணர். ஒரு ஏழை நண்பனைக் காண அம்பு போல பாய்ந்து நண்பரைக் காணச்சென்றார். சுதாமா, உம்மை பார்த்து எவ்வளவு நாளாயிற்று ?
🍒 உம்மை மீண்டும் சந்திக்க நான் என்ன தவம் செய்தேனோ ? என் பாக்கியம் தான் என்னே என்று நெக்குருகிப் போன அவர் சுதாமாவை அணைத்தார். அந்த அணைப்பிலேயே சர்வ வறுமையும் அழிந்து போனது. இது எப்படி…
🍒 கிருஷ்ணரின் மார்பில் உறைபவள் அல்லவா மகாலட்சுமி. அவளது பார்வை சுதாமாவின் மேல் பட்டு விட்டது. வறுமை நீங்கி விட்டது. சுதாமாவுடன் வந்தவர்களுக்கம் தனி அறைக் குள் ஒதுக்கப்பட்டு விருந்து உபசாரம் தடபுடலா யிற்று.
🍒 கிருஷ்ணர் சுதாமாவுக்கு தனி மரியாதை செய்தார். சுதாமா ஒரு பிராமணர் என்ற முறையிலே, அவருக்கு பாதபூஜை செய்து, தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார்.
🍒 ருக்மணியும் அவ்வாறே செய்தாள். பின்னர் தனது பஞ்சணையிலேயே அமரச்சொன்ன கிருஷ்ணர், "சுதாமா... அவந்தியில் இருந்து என்னைக் காண நடந்தே வந்தீரா, உமது கால் கள் எவ்வளவு வலித்திருக்கும் என்றவராய் அவரின் கால்களைபிடித்து விட்டபடியே பேசினார்.
🍒 நீண்ட நாள்களுக்கு பிறகு நண்பர்கள் சந்திக்க நேர்ந்தால், பள்ளியில் சக மாணவர்களுடன் செய்த குறும்பு, ஆசிரியருக்கு தெரியாமல் செய்த சேஷ்டைகள், நெகிழ்வான நிகழ்வுகள் என பல விஷயங்களைப் பற்றி பேசத்தானே செய்வோம். கிருஷ்ணர் சுதாமாவுடன் அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவு கூர்ந்தார்.
🍒 பின்னர் " சுதாமா... நம் பழைய நினைவுகள் பற்றியே பேசிக்கொண்டிருந்து விட்டேன். வீட்டைப்பற்றி விசாரிக்கவே இல்லை.
மன்னியார் சவுகரியமாக இருக்கிறாரா ? பிள்ளைகள் கல்விக்கூடம் செல்கிறார்களா ?" என்று குசலம் விசாரித்த கையுடன், 
🍒 "சுதாமா.. என் மன்னி என் மீது மிகுந்த பாசம் கொண்டவராயிற்றே.. எனக்காக பலகாரம் கொடுத்து அனுப்பியிருப்பாரே.. சுதாமா.. அதைக் கொண்டு வந்துள்ளீரா ?.." என்றதும், இங்குள்ள செல்வச் செழிப்பைப் பார்த்து அர ண்டு போயிருந்த சுதாமா, தன் கிழிந்த அங்க வஸ்திரத்தை மறைத்தார். விடுவாரா மாயக் கண்ணன், அதை அப்படியே பறித்து விட்டார்.
🍒 அவசர அவசரமாக பொட்டலத்தைப் பிரித்தார். ஒரு பிடி அவலை வாயில் போட்டார். அவல் வாய்க்குள் போனதோ இல்லையோ, அவந்தி யிலுள்ள சுதாமா வீடு மட்டுமல்ல…. அவரது ஊரிலுள்ள எல்லா குடிசைகளுமே மாளிகைக ளாகி விட்டன. எல்லாருமே செல்வத்தில் திளைத்தனர். இது இங்கிருக்கும் அப்பாவி சுதாமாவுக்கு எப்படி தெரியும் ?
🍒 இதற்குள் இன்னொரு பிடி அவலை எடுத்த வாயில் போடச் சென்ற போது, ருக்மணி தடு த்து விட்டாள். ஒரு இனிய கிருஷ்ண பக்தன் தனக்கு கிடைக்கப்போகும் பணத்தால் மனம் மாறி, பக்தியை மறந்து உலக இன்பங்களில் மூழ்கி விடலாம் இல்லையா ?
🍒 அதனால், அதில் இருந்து சுதாமரை காப்பாற் றினாளாம் அந்த தேவி. பின்னர் அங்கிருந்து விடைபெற்றார் சுதாமர். அவர் கிருஷ்ணரிடம் செல்வத்தைக் கேட்கவுமில்லை. அந்த மாயக் கள்ளன் நண்பனின் வறுமையைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தும் கேட்கவில்லை.
🍒 ஆனால், நண்பன் கொண்டு வந்த அழுக்குத் துணியில் இருந்த அவலை மட்டும் எடுத்துக் கொண்டார். பிறர் பொருளுக்கு யாரொருவன் ஆசைப்படுகிறானோ, அவன் அவ்வாறு பெற்றதை ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் பறித்து விடுவான்
🍒 சுதாமரின் வாழ்விலும் இதுவே நிகழ்ந்தது. பால்யத்தில், இவர்கள் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கற்று வந்த போது, ஒருநாள் முனிவரின் மனைவி, இரண்டு குழந்தைகளையும் அழை த்து, சமையலுக்கு விறகு பொறுக்கிவர அனுப் பினாள். போகும்போது, இருவரும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் எனசொல்லி, வெல்லம் கலந்த அவலைக் ஒரே பொட்டலமாகக் கொடுத்தாள்.
🍒 விறகு வெட்டிக்கொண்டிருந்த நேரத்தில், பசி யெடுக்கவே, குசேலர் பொட்டலத்தை பிரித்தார். சாப்பிட்டார். கிருஷ்ணரை அழைத்த அவரு க்குரிய பங்கை கொடுத்திருக்க வேண்டாமோ. ஆசையோ, பசியோ முழுமையாக சாப்பிட்டு விட்டான்.
🍒 அன்று கிருஷ்ணர் அதற்காக ஏதும் சொல்ல வில்லை. பகவான், உடனே எதையும் தட்டிக் கேட்க மாட்டார். இப்போது அவருடைய நேரம். அன்று தர வேண்டிய தனக்குரிய பங்கை எத்தனையோ வருடங்கள் கழித்து, இன்று கட்டாயமாக பெற்றுக் கொண்டார். 
🍒 உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும், அடுத் தவன் பொருளை வலுக்கட்டாயமாக பறித்தா ல், அவன் இறந்தாலும் சரி, அவனுடைய வம்ச த்தில் வருபவனாவது நிச்சயமாக அதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.
🍒 ஒரு வழியாக சுதாமா அவந்தி வந்து சேர்ந்தார்.
🍒 அவந்தியில் அவர் மனம் எப்படி இருந்தது ??
     ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே...
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...
ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.
           🍒 அவந்தியில் அவர் மனம் எப்படி இருந்தது ??
🍒 அங்கு வைத்து ஏதும் தரமறுத்த அந்த கள்வன் கண்ணன், குசேலர் ஊருக்குள் நுழைந்ததும், அடையாளமே தெரியாமல் உருமாறி விட்டார். உடலெங்கும் நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது.
🍒 பகவானின் இந்த விளையாட்டில் அவருக்கு விருப்பமில்லை. இருந்தாலும், கிருஷ்ண நாம த்தை விடாமல் சொன்னபடி வீட்டை தேடியலை ந்தார். சுசீலை அவரை ஒரு மாடத்தில் நின்று அழைத்தாள். நம் வீடு இதுதான்.. இங்கே வாருங்கள் என்றாள்.

🍒 குழந்தைகள் தங்கம், வைரம், மாணிக்கச் சிறு தேர் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்வளவு வறுமையிலும், அவர் வீட்டில் கூலி யை என்றாவது ஒருநாள் வாங்கிக் கொள்ள லாம் என்று வேலை செய்து வந்த வேலைக்கா ரியின் கழுத்திலேயே நூறு பவுனுக்கு குறை யாமல் தொங்கியது.
🍒 இப்படி அதிசயங்களை நுகர்ந்தபடியே, வீட்டு க்குள் நுழைந்த சுதாமர், நடந்ததை அறிந்தார்.
🍒கிருஷ்ணா..ஏ மாயவனே.. என் ஆத்ம நண்பனே, அடேய்.. இந்த அழியும் செல்வத்தை நாடியா உன்னை நாடி வந்தேன். ஏ கயவனே என்னை ஏமாற்றி விட்டாயடா. நான் உன்னிடம் செல்வத்தை கேட்டேனா. என் பக்திக்கு மரியாதை அவ்வளவு தானா, தாமோதரா.. என் இதய த்தில் உறைபவனே .. பக்தன் என்றால் யார் தெரியுமா உனக்கு ?

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

🍒 யார் ஒருவன் தன் கஷ்டத்தை கடவுளிடம் கூட சொல்லமாட்டோனோ, அதை அவன் கொடுத்த வரப்பிரசாதமாக எண்ணி, அதையும் அனுபவி த்து ரசித்து வாழ்கிறானோ அவனே பக்தன். உன்னிடம் நான் தினமும் என்ன கேட்கிறேன் . அழியா உலகான வைகுண்டத்தில் ஒரு இடம் உன் கமல பாத தரிசனத்தை தினமும் காணும் பாக்கியம். இந்த நிரந்தரச் செல்வத்தை நாடிய ல்லவா வந்தேன்.. பரந்தாமா.. இந்த செல்வம் எனக்கு வேண்டாமடா... என்னை உன்னோடு சேர்த்துக் கொள், எனக் கதறினார்.
🍒 நண்பனின் கதறல் கண்டு கிருஷ்ணர் பொறு ப்பாரா ! வந்து விட்டார் சங்கு சக்ர காதாதாரி யாய் குசேலர் அவருடன் ஐக்கியமானார்.
🍒 பகவான் கிருஷ்ணரின் இந்த வரலாற்றை படித்தவர்கள் இதிலுள்ள கருத்துக்களை பின் பற்றி நடந்தால், இப்பிறவியில் எல்லா இன்ப மும், பிறப்பற்ற நிலையும் பெறுவது உறுதி..
      🍅 ஸ்ரீ கிருஷ்ண சரிதம் முற்றும்..🍅
   🌹🍒ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலிலிருந்து எடுத்தது.

On tiranga - sanskrit poem

त्रिरङ्गि स्वातन्त्र्यम् - कविता
 
( काषायवर्णं लक्ष्यीकृत्य - )
 
म्लेच्छा आक्रमणेन छत्रपतिना,
मृत्योर्गृहं प्रेषिताः
आङ्ग्लास्ते हतकान्तयः प्रतिगता,
भीताश्च वीरेण ये ।
वन्दन्ते भुवने जना विजयिनं,
तद् भारतं भा रतम्
स्वातन्त्र्यमयि पञ्चसप्ततितमे,
वर्षेsजरं जायताम् ।।1।।
 
( धवलवर्णं लक्ष्यीकृत्य -)
 
स्वाधीनां प्रभुतां प्रदर्शयति यः,
केतुस्त्रिरंगी महान्
मध्येsसौ बुधधर्मचक्रसहितो,
राराजतेsहिंसया ।
नासत्यं जयतादिति प्र-वचनं,
राष्ट्रेsस्मदीये सदा
स्वातन्त्र्यमयि पञ्चसप्ततितमे,
वर्षेsमरं जायताम् ।।2।।
 
( हरितवर्णं लक्ष्यीकृत्य - )
 
देशोsयं जलपूरितः सुभवताद्,
धान्येन पूर्णस्तथा
सौख्यं पूर्णनिरामयं गुरु वयः,
प्राप्नोतु सर्वो जनः ।
मुक्ताः कर्मरता भवन्तु सफला-,
स्ते भारतीया जनाः,
स्वातन्त्र्यमयि पञ्चसप्ततितमे,
वर्षेsमृतं जायताम् ।।3।।
 
रचयिता - वसन्तकुमारो भट्टः,
पूर्वनिदेशकः, भाषा-साहित्य भवनम्, गुजरात विश्वविद्यालयः, कर्णावती 380009
Email- v.k.bhatt53@gmail.com