Tuesday, April 15, 2025

Krathanaka the camel - sanskrit story

क्रथनकस्य कथा

कस्मिंश्चित् वने मदोत्कटः नाम सिंहः वसति स्म । गजः, शृगालः, काकः च तस्य अनुचराः आसन् ।

एकदा क्रथनकः नाम उष्ट्रः तत् वनम् आगतवान् । तं दृष्ट्वा सिंहस्य अनुचराः उक्तवन्तः "प्रभो ! तम् उष्ट्रं मारयतु । तस्य मांसं खादामः" इति ।

सिंहः उक्तवान् - "तथा न करणीयम् । सः अस्माकं अतिथिः" इति । सः उष्ट्रं समीपम् आहूय उक्तवान् - "भोः ! भवान् कुतः आगतवान् ?" इति । क्रथनकः उक्तवान् -"अहं समीपग्रामतः आगतवान्" इति। "भवान् पुनः ग्रामं मा गच्छतु । अत्र एव निर्भयेन वसतु" इति सिंहः तम् उक्तवान् । क्रथनकः तद्नुसारं वने निर्भयेन वसति स्म ।
एकदा सिंहस्य अनारोग्यम् अभवत् । निःशक्त्या सः चलितुम् अपि असमर्थः । अतः सः अनुचरान् उक्तवान् -"भोः ! कमपि मृगम् आनयन्तु । तं मारयित्वा तस्य मांसं खादामः" इति । अनुचराः बहु अन्वेषणं कृतवन्तः । परन्तु कोऽपि मृगः न लब्धः । ते चिन्तितवन्तः 'कथञ्चित् एषः उष्ट्रः मारणीयः' इति । अनन्तरं शृगालः सिंहस्य समीपम् आगत्य उक्तवान् - "प्रभो । अन्यः मृगः न लब्धः । क्रथनकम् एव मारयामः वा ?" इति ।

 सिंहः क्रोधेन उक्तवान् - "मूर्ख ! पुनः एवं मा वदतु । अहं क्रथनकस्य अभयदानं दत्तवान् अस्मि । सः न मारणीयः" इति ।

"अभयदानं दत्त्वा पुनः तस्य मारणं चेत् दोषः एव । परन्तु सः एव यदि स्वामिकार्यार्थम् आत्मार्पणं कर्तुम् इच्छति तर्हि तस्य मारणे दोषः नास्ति एव" इति शृगालः उक्तवान् । "तर्हि यथा रोचते तथा करोतु" इति सिंहः उक्तवान् ।

तदनन्तरं ते सर्वे अनुचराः क्रथनकेन सह पुनः सिंहस्य समीपम् आगतवन्तः । काकः सिंहम् उक्तवान् - "प्रभो ! आहारार्थ कोऽपि मृगः न लब्धः। अतः भवान् मां खादित्वा स्वप्राणान् रक्षतु । तेन मम अपि स्वर्गप्राप्तिः भविष्यति" इति । तदा शृगालः "भोः काक ! भवतः शरीरे अत्यल्पं मांसम् अस्ति । तत् महाराजाय पर्याप्तं न भवति" इति उक्त्वा सिंहम् उक्तवान् - "प्रभो ! माम् एव खादतु" इति । तदा गजः उक्तवान् - "भवतः शरीरम् अपि अल्पम् एव । तदपि महाराजाय पर्याप्तं न भवति । अतः महाराजः माम् एव खादतु । अहं स्वामिकार्यार्थ प्राणार्पणं करोमि । मम स्वर्गप्राप्तिः भवतु" इति।

एतत् सर्वं श्रुत्वा क्रथनकः 'सर्वे अपि 'मां खादतु, मां खादतु' इति सिंहं विज्ञापितवन्तः । परन्तु सिंहः कमपि न खादितवान् । अतः अहमपि तथा विज्ञापयामि। सिंहः माम्
 अपि न खादति' इति चिन्तयित्वा उक्तवान् - "प्रभो ! गजस्य मांसं खादितुं बहु कष्टं भवति । तत् जीर्णम् अपि न भवति । अतः मां खादतु" इति । क्रथनकस्य वाक्यसमाप्तितः पूर्वमेव ते अनुचराः तस्य उपरि आक्रमणं कृतवन्तः । तं मारितवन्तः । सन्तोषेण मांसं खादितवन्तः च ।

"The Story of Krathanaka"

In a certain forest, there lived a lion named Madotkata. An elephant, a jackal, and a crow were his attendants.

One day, a camel named Krathanaka entered the forest. Seeing him, the lion's attendants said, "Lord! Let us kill this camel and eat his flesh."

The lion said, "That should not be done. He is our guest." Then he called the camel and asked, "Friend! From where have you come?"
Krathanaka replied, "I have come from the nearby village."
The lion said, "Do not go back to the village. Stay here fearlessly."
So Krathanaka stayed in the forest without fear.

One day, the lion fell ill. He was so weak that he couldn't even move. So he told his attendants, "Friends! Bring some animal. We will kill and eat it."
They searched a lot but couldn't find any animal. Then they thought, "Somehow, this camel should be killed."

Later, the jackal came to the lion and said, "Lord, no other animal is found. Shall we kill Krathanaka instead?"

The lion angrily replied, "Fool! Don't speak like that again. I have given him protection. He must not be killed."
The jackal said, "If someone is killed even after being promised protection, it is wrong. But if he himself is willing to sacrifice his life for his master, then there is no fault in killing him."

The lion said, "Then do as you wish."

Then all the attendants came to the lion along with Krathanaka.
The crow said, "Lord, no animal could be found. So, please eat me and save your life. By this, I will also attain heaven."
The jackal replied, "O crow! Your body has very little flesh. That won't be sufficient for our king."
Then he said to the lion, "Lord, please eat me instead."

Then the elephant said, "Your body is also small. It will not suffice for the king. So let the king eat me. I offer my life for my master and may I attain heaven."

Hearing all this, Krathanaka thought, "Everyone is saying 'Eat me! Eat me!' to the lion. But the lion is not eating anyone. So I too shall say the same, and the lion will not eat me either."
He said, "Lord! It is very difficult to eat elephant's meat. It is not even digestible. So, please eat me instead."

Even before he finished speaking, the attendants attacked him, killed him, and ate his flesh with satisfaction.

Glory of bhagavan nama

நாமத்தின் மகிமை

🌼🌼🌼🌼🌼

முற்கலன்

பூலோக வாழ்வு முடிந்த படியால் அவனை இழுத்து வந்து நரகத்தின் வாசலில் நிறுத்துகின்றனர். நரகத்தின் உள்ளிருந்து எமன் (நமன்) வெளியே வந்து..

"ஏன்யா, இப்படி வந்து நிற்கிறாய்?

நீ ஒருதடவையாவது கடவுள் நாமத்தை சொல்லாமல் என்ன செய்தாய்? கடவுள் நாமத்தைச் சொல்வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

"சஹஸ்ரநாமம் என பகவானின் நாமங்கள் ஆயிரம் உள்ளதே? அதில் ஒரு நாமத்தையாவது
சொல்லி இருக்கலாமே?

"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
சஹஸ்ரநாம தத் துல்யம் ராமநாம வராநநே!!"

என்று ராம நாமம் கூடவா உனக்குத் தெரியாது என்று கடவுள் நாமத்தின் மகிமையைப் பற்றி முற்கலனுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தான் எமன்."

"ரங்கா" என்று ஒருதடவை சொல்லி இருந்தால் நரகத்திற்கு வந்திருக்க வேண்டாமே?

"அறிவிலா மனிதர் எல்லாம்
அரங்கமென்றுஅழைப்பராகில்
பொறியில்வாழ் நரகம் எல்லாம்
புல்லெழுந்து ஒழியுமன்றோ?"

அறிவு இல்லாத மனிதன் கூட ஓரு தடவை "அரங்கா" என்று அழைத்தால் நரகம் எல்லாம் புல் முளைத்துப் போயிருக்கும். எனக்கு வேலை இருந்திருக்காதே ஐயா! 

இது மட்டுமா "அரங்கா" என்று சொல்லாத உனக்கு, இடும் சோற்றை நாய்க்கு இடுங்கள், அது கூட நன்றியோடு இருந்திருக்கும் ஐயா!"

" அணி திருவரங்கம் என்னா மிண்டர் பாய்ந்து உண்ணும சோற்றைவிலக்கி நாய்க்கு இடுமினீரே!"

"உங்களுக்காகத் தானே தொண்டரடிப்பொடிஆழ்வார், போன்ற ஆழ்வார்கள் எல்லாம்,
சொல்லி இருக்கிறார்கள். 

நீ ஒரு தடவை கூட சொல்லவில்லை போலிருக்கு" என்று எமன் முற்கலனிடம் நாமத்தின் மகிமையை விளக்கிச் சொல்லி விட்டு தன் வேலையாளிடம், "இவனை நரகத்துக்கு இழுத்துப் போங்கள்" என்று ஆணை இட்டுவிட்டு தான் இருப்பிடத்தை நோக்கி நகருகிறான்.

நரகத்தைக் காணோம்!

உள்ளே செல்ல முற்படும், எமனை காவலாளி தடுத்து "உங்களுக்கு வேலையில்லை, நரகம் எல்லாம் சொர்க்கமாகிவிட்டது ஐயா"
"என்னப்பாசொல்கிறாய்?" என்று எமன் கேட்க.... ஆம் ஐயா, நாமத்தின் மேன்மையை நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இங்கு அதனைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் சொர்க்கத்துக்குப் போய் விட்டார்கள், நரகம் இல்லாமல் போய்விட்டது ஐயா!" என்று காவலாளி சொன்னான். 

"நமனும் முற்கலனும் பேச
நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சொர்க்கமாகும்
நாமங்கள் உடைய நம்பி"

அப்படிப்பட்டது அவன் நாமம். நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களை!

தினமும் சொல்வீர்

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

 🌸ஆனந்தம் அடைவீர்🌸

ஹரேகிருஷ்ண பிரபுபாத் கீ ஜெய்

Monday, April 14, 2025

5 golden arrows to kill pandavas

*மகாபாரதத்தில் ஐந்து தங்க* *அம்புகளின் கதை*:

மகாபாரதப் போரில் கௌரவர்கள் தொடர் தோல்வி அடைந்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு துரியோதனன் பீஷ்மர் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் பாண்டவர்களின் மீது கொண்டுள்ள அன்பினால் போரில் உங்களுடைய முழுமையான பலத்தினைப் பயன்படுத்தி போரிடவில்லை என்று குற்றஞ்சாட்டினான்

இதனால் மிகுந்த கோபமடைந்த பீஷ்மர் ஐந்து தங்க அம்புகளை எடுத்து நாளை நடக்கவிருக்கும் போரில் இந்த ஐந்து அம்புகளால் பாண்டவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் என மந்திரித்தார். 

இந்த அம்புகளைக் கொண்டு பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று துரியோதனனிடம் பீஷ்மர் வாக்களித்தார்‌. 

ஆனால் பீஷ்மரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாத துரியோதனன் அந்த அம்புகளை என்னிடம் தாருங்கள்,நான் அதனைப் பாதுகாப்பாக வைத்து நாளை காலை தருகிறேன் என்று அந்த அம்புகளைக் கேட்கிறான்

ஒரு ஃபிளாஷ் பேக்

மகாபாரதப் போர் நடைபெறுவதற்கு சில காலத்திற்கு முன்னால் பாண்டவர்கள் ஒரு காட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர். 

அப்போது பாண்டவர்கள் தங்கியிருப்பதற்கு எதிரில் உள்ள குளத்தின் அருகில் துரியோதனன் தனது முகாமை வைத்திருந்தான். 

ஒரு முறை துரியோதனன் அந்த குளத்தில் குளிக்கும் போது மேலுலக இளவரசர் கந்தர்வர்களும் கீழே வந்தனர். 

அதில் அவர்களுடன் துரியோதனன் போரிட நேர்ந்தது. 

இதில் துரியோதனனைக் காக்க அர்ச்சுனன் போரிட்டு துரியோதனனைக் காப்பாற்றினான்

இதில் துரியோதனன் நாணம் கொண்டான்.

ஆனால் அவன் சத்திரியன் என்பதால் கைமாறாக அர்ச்சுனனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். 

ஆனால் அர்ச்சுனன் அதை மறுத்து தனக்கு வேண்டுமென்பதைத் தேவையான நேரத்தில் 
கேட்டுக் கொள்கிறேன் 
என்று கூறிவிட்டான்.

மகாபாரதப் போர் நடக்கும் சமயத்தில் பீஷ்மர் துரியோதனனிடம் தங்க அம்புகளை அளித்த அந்த இரவில் கிருஷ்ணர் அருச்சுனனிடம் துரியோதனனிடம்
பெறாமல் இருந்த அந்த வரத்தை நினைவுபடுத்தி துரியோதனனிடம் இருக்கும் அந்த ஐந்து தங்க அம்புகளை வரமாக பெறச்சொன்னார்‌. 

அருச்சுனனும் அவ்வாறே சென்று துரியோதனனிடம் வரமாக அந்த ஐந்து அம்புகளையும் கேட்டான். 

அதனால் துரியோதனன் மிகவும் அதிர்ச்சியடைந்தான். 

இருந்தாலும் தான் ஒரு சத்திரியன் என்பதால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதற்கு ஒப்புக் கொண்டான். 

பின்பு தன்னிடம் தங்க அம்புகள் இருப்பதை யார் சொன்னது என்று கேட்டார்‌. 

அதற்கு அருச்சுனன் கிருஷ்ணனைத் தவிர வேறு யார் கூறமுடியும் என்றான். 

பின்பு துரியோதனன் மீண்டும் பீஷ்மரிடம் சென்று மேலும் ஐந்து தங்க அம்புகளைத் தருமாறு கோரினான். 

இதற்கு பீஷ்மர் சிரித்துக் கொண்டு அவ்வாறு பெறுவதெல்லாம் சாத்தியமில்லாதது என்றார்.

பீமனால் ஏற்பட்ட மோசமான காயங்களுடன் துரியோதனன் போர்க்களத்தில் படுத்துக் கொண்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாரன். 

அப்போது அவனால் பேச முடியாமல் தனது மூன்று விரல்களை உயர்த்திய நிலையிலேயே வைத்திருந்தான்.

அந்த மூன்று விரல்கள் உயர்த்தியதன் பொருளைப் புரிந்துகொள்ள அவனது ஆட்கள் முயற்சிகள் மேற்கொண்டும் பயனற்று போனது. 

அவனது அவலநிலையைப் பார்த்த கிருஷ்ணர் துரியோதனனிடம், "உன்னுடைய மனதில் 
உள்ள பிரச்சனைகளை நான் அறிவேன் .

அவற்றை நான் நிவர்த்தி செய்கிறேன்" என்றார்.

கேள்விகளும் அதற்கான பதில்களும்

கிருஷ்ணர் துரியோதனனின் மூன்று கேள்விகளைத் தனது ஞானத்தால் அறிந்துக் கொண்டார். 

அவை அஸ்தினாபுரத்தைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டாதது, 
விதுரனைப் போரில் ஈடுபடச் செய்யாதது, துரோணரின் மரணத்திற்குப் பிறகு அஸ்வதாமனைத் தளபதியாக ஆக்காமல் இருந்தது. 

ஆனாலும் இவற்றைச் செய்திருந்தால் முறியடிக்க வியூகங்களும் கிருஷ்ணரிடம் இருந்தது. 

அவர் அளித்த பதில்கள் இவை தான்: நீங்கள் அங்கு ஒரு கோட்டையைக் கட்டியிருந்தால், குதிரையைக் கொண்டு கோட்டையைத் தகர்க்க நகுலனிடம் அறிவுறுத்தியிருப்பேன் என்றும் விதுரனைப் போரில் பங்கேற்கச் செய்திருந்தால் நானும் போரில் ஈடுபட்டிருப்பேன் என்றும், நீங்கள் அஸ்வதாமனைத் தளபதியாக நியமித்திருந்தால், நான் யுதிஷ்டிரனின் கோபத்தைத் தூண்டியிருப்பேன்.

கிருஷ்ணரின் இந்த பதில்களைக் கேட்ட துரியோதனன் மூன்று விரல்களையும் மூடிவிட்டு 
சில நொடிகளில் அவன் மரணித்தான். 

நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம் நகுலன் தனது குதிரையை கனமழையில் கூட ஈரமாக்காமல் ஓட்ட முடியும் என்பது அதோடு நனையாமல் மட்டுமல்ல ஒரு துளிக்கும் இன்னொரு துளிக்கும் இடையில் வேகமாக பயணிக்கவும் முடியும். 

கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களில் நகுலனால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். 

யுதிஷ்டிரருக்குக் கோபம் வந்தால், அவரது கண் பார்வையால் அனைத்தையும் எரிக்க முடியும்.

Mangalagiri panaka narasimha temple

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
                #மங்களகிரிநரசிம்மர் 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 ⭐ மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி. இந்தியாவில் உள்ள பல பெருந்தலங்களில் இதுவும் ஓன்று. #ஸ்ரீமகாலட்சுமி_வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப்பெயர் பெற்றது. 

  ⭐ மங்களகிரியில் மொத்தம்  
#மூன்று_நரசிம்மசுவாமிகோயில்கள் உள்ளன.  

 🍒ஒன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில். 

🍒 இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். 

🍒 மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி ஆகும். 
 இந்த மலை #யானைவடிவில்_அமைந்துள்ளது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும். 

  🐘 இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் #பாரியாத்ரா என்ற ஒருஅரசன் இருந்தான். அவனது மகன் #ஹரஸ்வஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதத் தலமான மங்களகிரியை வந்தடைந்தான். அங்குமூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான். அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்றி அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர்.அவனும்

 🌺 ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். அப்பொழுதுஅவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனைதன்னோடு அழைத்துச் செல்ல வந்தான். ஆனால், ஹரஸ்வ ஸ்ருங்கியோ #யானைவடிவம்பெற்ற_மலையாகமாறி பகவான் ஸ்ரீமகாவிஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான். 

  🌺 திருமால் நரசிம்ம வடிவில் அங்கு எழுந்தருளினார். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை #பானகநரசிம்மசுவாமி என்று அழைத்தனர். 

⭕ மகாவிஷ்ணு ஒரிசா மாநிலத்தின் பூரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதராக நின்று உணவருந்திவிட்டு,  

⭕ ஆந்திர மாநிலத்து சிம்மாசலத்தில் உடலை சந்தனக் குழம்பில் குளிர வைத்துக்கொண்டு,  

⭕ மங்களகிரியில் பானகம் அருந்தி, 

⭕ திருப்பதியில் ஆட்சி செய்துகொண்டு, 

⭕ ஸ்ரீரங்கத்தில் சயனித்திருந்து #ஜகத்கல்யாணமூர்த்தியாகத் திகழ்வதாகப் புராணங்கள் கூறுகிறது.திருமால் இரண்யனை வதம் செய்து தன் பக்தன் பிரகலாதனைக் காக்க தூணில் தோன்றிய கணநேர அவதாரம் நரசிம்ம அவதாரம். சிம்ம முக நரசிம்மர் அருட்பாலிக்கும் கோயில்கள் பல உண்டு. அவற்றில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிலிருந்துகுண்டூர் செல்லும் சாலையில் 26 கி.மீட்டர் தொலைவில்அமைந்திருக்கும் மங்களகிரி என்ற புனிதத் தலத்திலுள்ள மலைக் குகைக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது. சங்கு சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டும், தானாகத் தோன்றிய #ஸ்வம்வ்யக்த அதாவது தானே தோன்றிய மூர்த்தமாக அமைந்து,பக்தர்கள் நிவேதனம் செய்யும் #பானகத்தில்பாதியை_மட்டும்_அருந்தி அருட்பாலிக்கும் பானக நரசிம்மர் கோயில் அது.

 🍂 பாரதத்திலுள்ள மலைகளில் மஹேந்திரம், மலையம், ஸஹ்யம், சுக்திமான், ருக்‌ஷம், விந்தியம், பாரியாத்ரம் என்பவை ஸ்பதகுல பர்வதங்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது. ஸர்வ சுகஸ்வ ரூபிணியான மகாலட்சுமி அமிர்தத்தை மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக, #பாரியாத்ர_பர்வதத்திற்கு_மங்களகிரி என்ற பெயர் வந்தது. *#ஹஸ்திகிரி____தர்மாத்ரி__கோத்தாத்ரி_முக்தியாத்ரி என்பவை அதன் ஏனைய பெயர்கள் என புராணங்கள் கூறுகின்றன. வேதபுராணத்தில் இத்தலத்திற்கு #சபலதா என்ற பெயரும் உள்ளதாக சொல்லியிருக்கிறது.இந்த மலைப் பிராந்தியத்தில் மேய்ந்து வந்த பசு ஒன்று தினமும் மாலையில் பாலின்றி திரும்புவதைக் கண்ட பசுவின் சொந்தக்காரன் அதைக் கண்காணித்தபோது, ஒருநாள் மாலை வேளையில் நிழல் உருவம் ஒன்று பசுவின் பாலை அருந்திவிட்டு குகையொன்றில் சென்று மறைவதைக் கண்டான். அன்றைய இரவு அவனது கனவில் மகாலட்சுமி சமேதராய் நரசிம்மர் தோன்றி, #மொமூச்சி என்ற கொடிய அரக்கனுக்காகத் தாம் அந்தக் குகையினுள் மறைந்திருப்பதாகக் கூறினார்.மறுநாள் பசுவின் சொந்தக்காரன் அந்தக் குகை துவாரத்தில் தனது பசுவின் பாலை ஊற்ற, அதில் பாதி பிரசாதமாக வெளியே வழிந்ததை அவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான்.இந்தச் சம்பவத்தை அவன் அந்தப் பிராந்தியத்தை ஆண்டு வந்த திரிலோக விஜயன் என்ற அரசனிடம் கூற, அரசன் நரசிம்மருக்கு குகை மீது கோயில் கட்டியதாக பானக நரசிம்ம தலத்தின் புராணம் கூறுகிறது. 

 🔥 கொடிய அரக்கனான மொமூச்சி கொட்டைப் பாக்கில் பொருந்திய ஊசி முனைமீது ஒற்றைக்கால் கட்டை விரலில் சூரியனை நோக்கி நின்று கொண்டு கைகூப்பி பிரம்மனைக் குறித்து தவம் செய்தபொழுது, அந்த தவவலிமையில் ஈரேழு புவனங்களும் ஆடின. இதையடுத்து அன்ன வாகனத்தின் மீது அமர்ந்து நொமூச்சிக்கு காட்சி தந்த பிரம்மன், எந்த மானிடனாலோ அல்லது ஆயுதத்தினாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தருளினார்.இதைத் தொடர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி வந்த நொமூச்சியிடமிருந்து தம்மைக் காக்கத் தேவர்கள் திருமாலிடம் முறையிட, திருமாலும், நரசிம்மராக மங்களகிரி குகைக்குள் தங்கியிருந்தது, மொமூச்சியை எதிர்நோக்கி நின்றார். அச்சமயம் இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை நரசிம்மர் தனது நகங்களில் ஏற்றுக்கொண்டு #குகையருகில்_மொமூச்சியைசம்ஹாரம் செய்தருளினார் என ஈசன் உமையவளுக்குக் கூறியதாக, பிரம்ம வைவர்த்த புராணத்தின் பவானி சங்கர கீதை கூறுகிறது. இதன் காரணமாகவோ என்னவோ, இத்தல #நரசிம்மரதுநகங்கள்_சுதர்சனசக்கரத்தின்_அம்சமாகக் கருதப்படுகின்றன.தொடர்ந்து குகையில் தங்கிய நரசிம்மரது உக்ரம் தணியாமல் தகிக்க, பிரம்மன், நாரத மகரிஷி மற்றும்இந்திராதி தேவர்கள் அவரை தோத்திரங்களால் துதிக்க,  

 🌕 நரசிம்மர்,ஆகாய கங்கையில் நீராடி, தேவர்களை அமிர்தத்தை எடுத்து வரச்சொல்லி #அருந்திவிட்டு_அதில்பாதிஅமிர்தத்தைப்பிரம்மாதி_தேவர்களுக்குப்_பிரசாதமாக அளித்தார். அச்சமயம்அவரது உக்ரம் தணியத்தொடங்கியதாம்.அவ்வாறு 

#கிருதயுகத்தில் அமிர்தத்தை அருந்திய உக்ர நரசிம்மர்  

#திரேதாயுகத்தில் பசு நெய்யையும், 

#துவாபர யுகத்தில் பசுவின் பாலையும், நிகழும்  

#கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி சாந்தமாக நின்று அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது.  

 🍎இவ்வாறு திருமால் பானக நரசிம்மராக வீற்றிருக்கும் குகைக்கோயில் மங்களகிரியிலுள்ள மலை மீது சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அகன்றநானூறு படிகளின் வழியாக சிரமமின்றி ஏறி, பானக நரசிம்மர் கோயில் சந்நதியை அடையலாம். மலையடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரமராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும், தொடர்ந்து அருகில் கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் மலை ஏறத் தொடங்குகின்றனர். சுமார் 50 படிகள் ஏறியபின் மேற்கு நோக்கி நின்று அருள்புரியும் #வேங்கடேஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்கிறோம்.

🔯 ஒரு சமயம் #சர்வசுந்தரி என்ற அப்ஸரஸ் பெண் இட்ட சாபத்தினால் நாரத மகரிஷி பால் விருட்சமாக மாறி நின்றார். புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் அப்பால் விருட்சத்தைச் சுற்றி வந்து பழங்களை விநியோகம் செய்ய, அவர்களுக்குப் புத்திரகடாட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்குள்ளமக்களிடையே நிலவுகிறது. வேங்கடேஸ்வர ஸ்வாமி சந்நதியருகே வளர்ந்த பால் சொட்டுசெடியை பிற்காலத்தில் மலையடிவாரத்திலுள்ளகருடாழ்வார் சந்நதியருகில் நட்டதாகக் கூறப்படுகிறது.வேங்கடேஸ்வரரைத் தரிசித்து, தொடர்ந்து படி ஏறிச்சென்றால் துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள். இந்தவிளக்கில் #முன்னூற்று_அறுபத்தைந்து_திரிகள் இருப்பதாகவும், #ஒருதீபம்_ஏற்றினால்__ஒர்ஆண்டு_தீபம்_ஏற்றியபலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது. இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும்.அர்த்த மண்டபத்துடன் உள்ளே தீப ஒளி மட்டும் வீசும் இருள் சூழ்ந்த குகை சந்நதியை அடைகிறோம்.இக்குகை கருவறைச் சுவரில் அமைந்த பெரிய பிறை ஒன்றில் மேற்கு திசை நோக்கி பானக நரசிம்மர், சங்கு - சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, பல் வரிசைகள் வெளியேதெரியும். சிம்ம #முகவாய்_அகன்று__திறந்தவண்ணம் முகத்துடன் மட்டும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாகக் காட்சி தருகிறார். இந்தப் பானக நரசிம்மருக்கு பிரத்யேக உருவம் கொண்ட விக்ரகம் எதுவும் கிடையாது.

🔯 ஆனால் 15 செ.மீ. அகலம்உடைய #வாய்ப்பகுதிமட்டும்_உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும். இந்தக் கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜைசெய்வதாக ஐதீகம். அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும். அப்படி விடும் பொழுது இறைவன் அதை நிஜமாகவேபருகுவது போல் "#மடக்_மடக்_என_பருகும்சத்தம்கேட்கும். சற்று நேரம் கழித்துஅந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம்அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும். இதுஒரு நாள், இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல. தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.கருவறைக்கு வெளியே மகாமண்டபத்தில் கோயில் சிப்பந்திகள் பானக நிவேதனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சார்பில் அவ்வப்போது பானகத்தைக் கரைத்து செம்பிலோ, சிறிய அல்லது பெரிய குடத்திலோ நிரப்பி சந்நதிக்கு எடுத்து வருகின்றனர். பானக அளவுக்குத் தக்கபடி இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சந்நதியிலுள்ள வைஷ்ணவ பட்டர் **#பெரியவலம்புரி_சங்கினால்_திறந்த_வாய்க்குள்_ஊற்ற, இப்புனித பானகம் உள்ளே சென்றுமறைந்து விடுகிறது. பானக பாத்திரத்தின்கொள்ளளவு எதுவாக இருந்தாலும், நிவேதனத்துக்கு எடுத்துச் செல்லும் பானகத்தில் பாதியளவு மட்டுமே வாய்க்குள் செல்கிறது.தொடர்ந்து ஊற்றப்படும் பானகம் வெளியே வழிந்துவிட, அவ்வாறு மீறும் பானகத்தை அந்த பக்தருக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுகின்றனர். பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு #பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

Sunday, April 13, 2025

Fate is unconquerable - Spiritual story

#விதியின்_சூட்சமம்...

விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா அல்லது அந்த நிகழ்வும் விதியின் விளையாட்டா?

ஒரு மிகப் பெரிய மலையின் அடிவாரத்தில் அழகிய காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் ஒரு பறவை மிகவும் இன்பமாக சுற்றித் திரிந்து உலா வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது மலை மீது ஆகாயத்தில், மேகங்களுக்கு இடையில் சில தேவர்கள் வேகமாக மிதந்து சென்று கொண்டு இருந்தனர். அவர்களைக் கண்ட அந்த அழகிய பறவை ஒரு பெரிய மரத்தின் மேல் உள்ள கிளையில் தன் இறகுகளை மடித்து சற்றே அமர்ந்தது.

ஆகாயத்தில் முதலில் அக்னி தேவன் செல்வதையும் அவர் பின்னால் வாயு தேவன் மற்றும் அனைத்து தேவர்களும் செல்வதைக் கண்டு பறவை ஆச்சரியம் அடைந்தது.

அனைத்து தேவர்களுக்கும் பின்னால் தேவேந்திரன் செல்வதையும் பறவை கவனித்தது. பறவைக்கு தேவர்கள் அனைவரும் எங்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை.

"சரி, நம் வேலையை பார்ப்போம்" என்று எண்ணி பறவை அருகில் இருந்த மா மரங்களில் இருந்து விழுந்திருந்த மாம்பழங்களை கொத்திக் கொண்டு இருந்தது. வயிறார சில மாங்கனிகளை உண்ட பின்னர் சற்று இளைப்பாற எண்ணி ஒரு மரக்கிளையில் சாய்ந்தது.

அப்பொழுது அனைத்து தேவர்களும் ஆகாயத்தில் ஏதோ பேசிக் கொண்டு தேவலோகத்திற்கு திரும்பிச் செல்வதை உறங்கும் கண்களோடு பறவை கவனித்தது.

பறவை ஒரு நிமிடம் அதிர்ந்து போனது. அதன் அதிர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா?.

அனைத்து தேவர்களையும் கண்ட பறவை இறுதியில் எமதர்ம ராஜன் கதையையும் பாசக் கயிற்றினையும் சுமந்துகொண்டு நடந்து வரும் காட்சியை கண்டதனால்தான்.

பறவை சற்று அச்சம் அடைந்தது. ஒருவர் இறக்கும் தருவாயில் அல்லவா எமதர்மனை காண இயலும். அப்படி எனில் தாம் மரணமடைய போகின்றோமா என்றெல்லாம் பறவை சிந்தித்தது. ஆனால் எமதர்மன் தன்னைக் காணவில்லை என்று பறவை நிதானம் அடைந்தது.

என்ன ஆச்சரியம்!
அடுத்த நொடியே எமதர்மன் தன் தலையை திருப்பி தொலைதூரத்தில் உள்ள கானகத்தில் உள்ள மரக்கிளையில் சாய்ந்து கொண்டிருந்த பறவையை பார்வையிட்டான். அந்த பார்வையே பறவையை நிலை குலையச் செய்தது.

எமதர்மர் சில வினாடிகள் பறவையை நோக்கி விட்டு தேவர்களை பின் தொடர்ந்து சென்று விட்டார்.

இந்த அச்சமூட்டும் சம்பவம் பறவைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை எமதர்மன் என்னைத் தேடி இந்த கானகத்திற்கு வந்து விட்டால் என்செய்வேன்? எங்கே போவேன்? இந்த அச்சத்திலிருந்து எப்படி நான் விடுதலை அடைவேன்?

சிறிது நேரம் சிந்தித்ததில் பறவைக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அது என்னவென்றால் தான் எமனின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் எம்பெருமான் மகா விஷ்ணுவை துதிக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

கண்களை இறுக மூடிக் கொண்டு நாராயணனை அகக்கண்ணால் வழிபடத் தொடங்கியது.

கண்ணில் கண்ணீர் மல்க பரந்தாமனைத் துதி பாடியது பறவை.
பறவையின் இசை கேட்டு இன்பமுற்று நாராயணர் தன் கருட வாகனத்தில் ஏறி பறவையைக் காண கானகத்திற்கு வந்தார்.

"பறவையே! உனது கண்களை திறவாய்! உனது பக்தி மயமான துதியைக் கேட்டு யாம் அகம் மகிழ்ந்தோம்! உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்" என்று நாராயணர் புன்னகையுடன் வினவினார்.

பறவை மெதுவாக கண்களைத் திறந்து, "ஐயனே! வைகுண்ட வாசா! உனது வைகுண்டத்தில் எனக்கு ஒரு சிறு இடம் அளிப்பாயா? எம தர்மராஜன் என்னை தன் கண்களால் மிரட்டி விட்டுச் சென்றார். நீ அறியாதது ஒன்றுமில்லை. என்னை நீயே காப்பாற்ற வேண்டும்" என்று நெகிழ்ச்சியுடன் உரைத்தது.

நாராயணரும், "அப்படியே ஆகட்டும்" என்று பறவைக்கு அருள்மொழி மொழிந்தார்.

பறவை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. சில நொடிகளிலேயே நாராயணர் பறவையை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்.

வைகுண்டத்தை அடைந்த பறவை அளப்பரிய இன்பத்தைப் பெற்றது. நாராயணர் வைகுண்டத்தில் ஒரு குளத்திற்கு அருகில் உள்ள சிறிய பாறையை பறவைக்கு காண்பித்து, "பறவையே! நீ இந்த குளத்தை சுற்றியும், பாறைக்கு அருகிலும் எங்கு வேண்டுமெனிலும் சுற்றித் திரிந்து விளையாடிக் கொள்ளலாம். வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டாம்" என்று கூறி விட்டு தன் பத்தினியான இலக்குமியைக் காணச் சென்றார்.

பறவை ஆனந்தம் அடைந்து குளத்திற்கு அருகில் சிறிது நேரம் விளையாடியது. பின்னர் பாறைக்கு பின்னே உள்ள சின்னஞ்சிறு செடிகளில் உருண்டு பிரண்டு இன்புற்றது. ஆனால் சற்று நேரத்திலேயே குளமும் பாறையும் பறவைக்கு சலித்துப் போயின. பெருமாள் சொன்ன இடங்களை தாண்டியது.

பறவை சற்று தூரத்திற்கு பறந்து சென்றது. வைகுண்டத்தின் பரந்து விரிந்த இயற்கை அழகினை கண்டது. குளத்திற்கு சற்று தூரத்திலுள்ள ஒரு பெரிய மாமரத்தை கண்டது. அதன் மேல் பறவை சென்று அமர்ந்தது. சில மாங்கனிகளை உண்டது. சற்று நேரத்திலேயே எங்கிருந்தோ வந்த ஒரு வேடனது அம்பானது அந்தப் பறவையின் இதயத்தை துளைத்தது.

பறவை தன் கண்களில் நீர் மல்க மரத்திலிருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்பொழுது எமதர்மராஜன் பறவைக்கு அருகில் நடந்து வந்து அமர்ந்து கொண்டார். பறவை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தருணத்தில் எமதர்மரிடம், "பிரபு! தாங்கள் என்னை கண்டு விட்டீர்கள் என்று அச்சம் அடைந்து எனது வசிப்பிடத்தை நீங்கி வைகுண்டம் அடைந்தேன். ஆனால் தாமோ இங்கு வந்து எனது உயிரை பறித்து விட்டீர்! விதியை மதியால் வெல்ல நினைத்து இறுதியில் தோல்வியையே சந்தித்தேன். என்னாளிலும் விதியை வெல்ல ஒருவராலும் முடியாது என்று நான் நன்கு உணர்ந்து கொண்டேன்" என்று உரைத்தது.

எமதர்மராஜன் பறவையின் கூற்றைக் கேட்டு மெல்ல சிரித்தார். "அன்பிற்குரிய பறவையே! நான் ஏன் உன்னை மலையிலிருந்து கவனித்தேன் என்று நீ அறிவாயா? நீ உயிர் விடும் தருவாயில் வைகுண்டத்தில் இருக்க வேண்டும் என்பதே உனது விதி! ஆனால் நீ இருந்ததோ இந்த வைகுண்டத்தில் இருந்து தொலை தூரத்திலுள்ள உனது வசிப்பிடத்தில். நீ ஒரு வேளை உனது வசிப்பிடத்தை நீங்கி இங்கே வந்து இருக்காவிடில் நான் உனது உயிரை பறித்து இருக்க இயலாது. என் பணியை நீயே எளிதாக்கி விட்டாய். மதியை செயல்படச் செய்வதும் செயல் இழக்கச் செய்வதும் விதியே ஆகும். ஆனால் ஒன்றை அறிந்து கொள்.

விதி என்றும் சதி செய்யாது. விதி நமக்கு இறுதியில் மிகப்பெரிய நன்மையைத் தரும். இன்று நீ மட்டும் வைகுண்டம் வரவில்லை எனில் இன்னும் பல ஆயிரம் பிறவிகள் எடுத்திருப்பாய். நீ வைகுண்டத்தில் உயிர் துறப்பதால் மறு பிறவி இன்றி இறைவனடி இணைந்தாய்.
எல்லாம் நன்மைக்கே.

விதி என்ன நிகழ்வை நிகழ்த்தினாலும் அதன் சூட்சமத்தைப் புரிந்து கொள்பவரே மதியில் சிறந்தவராவார்" என்று எமதர்மர் எடுத்து உரைத்தார்.

இந்த அற்புத உண்மையைக் கேட்டு பறவை ஆனந்தக் கண்ணீருடன் தன் இறுதி பிறவியிலிருந்து விடுதலை பெற்றது.

இது வெறும் கதை என விட்டு விடாமல் நிஜமான வாழ்க்கையை உணர்ந்தும் தெளிந்தும் வாழ்வோம்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!     

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!    

#வாழ்த்துகள்.

#வாழ்க_வளத்துடன்.

Sumangali prarthanai - Periyavaa

*கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை* - பெரியவா *ⓀⓃ*

இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்பது காஞ்சிப் பெரியவாளின் விருப்பம்.

ஒரு சந்தர்ப்பத்தில் வயதான தம்பதியர், தட்டில் பழம், பூ, அம்பாளுக்கு பட்டுப் புடவை, ரவிக்கையோடு பெரியவாளைக் காண காஞ்சிபுரம் வந்திருந்தார்கள்.

மாயவரத்தில் இருந்து வந்த அவர்களிடம், "காவிரிக்கரையில் இருந்து வரும் நீங்கள் துலா ஸ்நானம் (ஐப்பசி மாதம் காவிரியில் நடக்கும் தீர்த்த நீராடல்) செய்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

தம்பதிகள் இருவரும், "ஆமாம்! சுவாமி! துலாஸ்நானம் ஆயிடுத்து!" என்றனர்.

பெரியவா அடுத்த கேள்வியாக, "மாயவரம் ஆற்றங்கரைக்கு துலாஸ்நானம் செய்ய ஏகபட்ட சுமங்கலிகள் வருவாளே!" என்றார்.

"வருவா" என்றனர் அவர்கள்.

"அது சரி! உங்க அகத்திலே சுமங்கலிப் பிரார்த்தனை எல்லாம் ஒழுங்கா நடக்கிறதா?" என்று பெரியவா கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் தம்பதியர் முகம் வாடினர்.

"முன்பெல்லாம் ஒழுங்காக நடந்தது. இப்போ சுமங்கலி பிரார்த்தனை நடந்து பல வருஷமாச்சு!" என்று சொல்லி அந்த அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அந்த அம்மாளின் கணவர் மனைவியை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார்.

பெரியவாளிடம், "சுவாமி! என்னோட கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண், ஒரே ஒரு பெண். அவளும் மூன்று வருஷத்திற்கு முன் இறந்துவிட்டாள். அதற்கு முன்பே சுமங்கலி பிரார்த்தனையை நடத்தாமல் விட்டுவிட்டோம். இப்போ எங்கள் குடும்பத்தில் வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. ஆனா, குடும்பத்தில் யாருக்கும் சுகமோ, மனநிம்மதியோ இல்லை. என் ஐந்து வயது பேரனுக்கு பேச்சு வரவில்லை. என் மூத்த நாட்டுப்பொண்ணுக்கோ (மருமகள்) ரத்தப் புற்றுநோய். மனநிம்மதி வேண்டியே உங்களைத் தரிசிக்க வந்தோம், "என்று சொல்லி முடித்தார்.

சற்றுநேரம் மவுனம் காத்த பெரியவா, "இப்போ என் முன் வைத்திருக்கும் பழம், பூ தான் உங்களுக்கு கொடுக்கும் பிரசாதம். கொண்டு வந்த பட்டுப்புடவையை மூத்த நாட்டுப் பொண்ணுக்கு கொடுத்து கட்டிக்கச் சொல்லு! இனிமேல் பட்டுப்புடவையே வேண்டாம். அது நல்லதல்ல. அது ஒண்ணும் உசத்தியானது கிடையாது. ஆடம்பரம் நமக்கு எதுக்கு? குலதெய்வத்திற்கு, கொண்டு வந்த பூவைப் போடுங்கோ. அதோடு முக்கியமான ஒரு காரியமும் செய்ய வேணும்," என்று சொல்லி பெரியவா பேச்சை நிறுத்தினார்.

கேட்டுக் கொண்டிருந்த தம்பதியர் வணங்கி, "பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் அதை அப்படியே செய்றோம்" என்று கண் கலங்கினர்.

"உன் சகோதரியின் நினைவுநாளில் 108 சுமங்கலிகளுக்கு சாதாரண நூல் புடவை, ரவிக்கை, மங்கல திரவியங்கள் கொடுப்பதோடு, முடிஞ்சா அன்னதானமும் செய்யவேண்டும். அதன்பிறகு எல்லாம் நன்மையாகவே முடியும்!" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

தம்பதிகள் பெரியவாளின் உத்தரவுப்படியே சுமங்கலி பூஜையைச் செய்தனர். மூன்று ஆண்டுகளில் பேரனும் பேசத்தொடங்கி விட்டான். மூத்த மருமகளும் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணம் பெற்றார். பெரியவாளின் வழிகாட்டுதலால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.

*ⓀⓃ*

Saturday, April 12, 2025

Chitrakoot and ramayana

everyonefollowme ஒரு புனித oயாத்ரை 3        - நங்கநல்லூர்   J K  SIVAN 
  
மத்திய பிரதேசத்தில் உள்ள சித்ரகூடம்  எனும் க்ஷேத்ரத்தில்  ஒன்பது நாள் ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணம்  ப்ரம்ம ஸ்ரீ சேங்காலிபுரம் சுப்ரமணிய தீக்ஷிதர் நடத்துகிறார் என்று அறிந்து, அதில் பங்கேற்க  நூற்றுக்கு மேல் பக்தர்கள்  தேசத்தின் பல இடங்களிலிருந்தும் வந்து சேர்ந்தார்கள்.  சென்னையில் இருந்து  கிட்டத்தட்ட  அறுபது பேர்  கயா எஸ்பிரஸில் இடம் பிடித்தோம். வாரத்துக்கு ஒருநாள் ஓடும் ரயில் அது. இடம் பிடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒருமாதம் முன்பே இடம் பிடித்தேன். 16-17 மணி நேர பிரயாணம்.காலை உணவு, பகல் உணவு இரவு உணவு எல்லாம் முன்பே  ஜபல்பூர், விஜயவாடா போன்ற சந்திப்புகளில்  வண்டி ஐந்து நிமிஷம் நிற்கும்போது கொண்டுவந்து தேர ஒரு நண்பர் ஏற்பாடு செய்தார். ரயிலில் எதையும் வாங்கி சாப்பிட பிடிக்கவில்லை.  பாத்ரூம் தண்ணீர்  டீயாக விற்கப்படுகிறது என்று கேள்விப்பட்டால் எப்படி எதை வாங்குவது?.

சித்ரகூடம்   பரதன் ஆறாயிரம் ஏழாயிரம் வருஷங்களுக்கு முன் அயோத்தியிலிருந்து ராமனைக் காணச் சென்ற ஸ்தலம். பரதன் சென்றபோது இருந்த சித்ர கூடம்  இப்போது இல்லை. எங்கும் ஒரே காடு, விலங்குகள், ராக்ஷஸர்கள் நடமாட்டம்.  
ரயிலோ, பஸ்ஸோ, தெருக்களோ , பாதைகளோ, தீப வெளிச்சமோ இல்லாத காலம் அது.                  

சித்ரகூட மலைக்கும் கங்கை நதிக்கும் இடையே ஒரு  வனப்பிரதேசம் . சித்ர கூட மலையில்  வடக்கு தெற்காக, கிழக்கு மேற்காக விசாலமான இரு பர்ண சாலைகளை லக்ஷமணனும்  பாரத்வாஜ மஹரிஷியின்  சிஷ்யர்களும் நிர்மாணிதார்கள். 
 பரிசுத்தமான அந்த குடில்களில் ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் வாசம் செய்தனர். சித்ரகூட ரிஷிகள், முனிவர்கள், மக்கள் அனைவரும் ராமனை சூழ்ந்து கொண்டு சீதா ராம லக்ஷ்மணர்களுக்கு உபசாரம், சிஸ்ருஷை செய்தும் ஆசீர்வாதம் பெற்றும் மகிழ்ந்தனர்.
சித்ரகூட மலை அருகில் இருந்த வால்மீகி ஆஸ்ரமத்தை  ராமலக்ஷ்மணர்கள் சீதா  ஆகியோர்  அடைந்தனர். சித்ரகூட பர்வதத்தில் எப்போதும் அநேக முனிவர்கள் ரிஷிகள் தவம் செய்வார்கள், மிருகங்களும் பக்ஷி இனங்களும் நிறைந்திருந்தது. அவை ஆனந்தமாக வயிறு நிறைய உணவருந்தி பாடிக்கொண்டிருந்தன. ரிஷிகளும்  விலங்குகளும்  நட்புறவோடு வாழ்ந்த ஜீவன்கள். கனிவகை பல ஜாதி புஷ்பம் நிறைந்த மரங்கள் அடர்ந்து  காணப்பட்டது. அந்த வனப்பகுதியில் ஆஸ்ரமம்  ஒன்றில் இருந்த வால்மீகி முனிவர் ராமன் வருகை அறிந்து எதிர் கொண்டு அழைத்து வணங்கி னார். சீதா ராம லக்ஷ்மணர்களை கண்குளிரக் கண்டு ஆனந்தித்தார். அன்போடு உபசரித்து காய் கனி கிழங்குகள் அளித்து மகிழ்ந்தார். ராமர்  வால்மீகி  முனிவரிடம் அந்த வனத்தில் தங்குவது பற்றி வினவும்போது,
''லோக நாயகா, சகல உயிர்களும் தங்கும் அடைக்கல மாளிகை நீ, உனக்கு தங்க வசதி செய்வது என் கடமை. நீ தங்கவேண்டியது என் மனத்தில். சீதா லக்ஷ்மண சமேத ராமா, எவர் உன்னை மனமார பூஜிக்கிறார்களோ அவர்கள் இதயம் நீ தங்கும் இடம். உலக இயல் விருப்பு வெறுப்புகளில் சிக்காது உன் நாமம் ஒன்றே இருப்பிட மாக கொண்ட பக்தர்களின் நெஞ்சம் நீ தங்கும் இடம். நான் பிராமணனாக பிறந்தும், ஒரு காலத்தில் வேடுவ னாக அலைந்தேன், கொலை செய்தேன், திருடினேன் ,சகல பாப கார்யங்களையும் புரிந்தேன்.காட்டில் ஒரு தரம் சப்த ரிஷிகளை பார்த்தேன். அவர்கள் பொருள் ளைக் கவர பின் தொடர்ந்தேன். அவர்கள் என்னை பார்த்து, ''ஏ, பிராமணப் பதரே, எதற்கு எங்களைப் பின் தொடர்கிறாய்'' என்றார்கள். என் மனைவி மக்கள் பசியால் வாட அவர்களுக்கு உதவ உங்கள் பொருள் களை அபகரிக்க வந்தேன்'' என்று உண்மையைச் சொன்னேன். அவர்கள் என்னை ஏளனமாகப் பார்த்து சிரித்துவிட்டு, 'நீ முதலில் உன் வீடு திரும்பு, நீ செய்யும் பாப கார்யங்களில் உன் மனைவி மக்களுக்கு பங்கு ஏற்க சம்மதமா'' என்று கேட்டுத் தெரிந்து கொண்டுவா. நாங்கள் இங்கே உனக்காக அதுவரை காத்திருக்கி றோம்.'' என்றார்கள். நான் அவ்வாறே வீடு திரும்பி அவர்கள் சொல்லியவாறே என் மக்களைக் கேட்டேன். என் மனைவி மக்கள் எவருமே என் பாபத்தில் பங்கேற்க மறுத்து விட்டு, என் வருமானத்தில் மட்டுமே பங்கு கேட்டார்கள். எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. வருத்தத்துடன் காடு சேர்ந்து ரிஷிகளை சந்தித்தேன். அவர்களிடம் என் குடும்பத்தினர் சொன்ன பதிலைக் கூறினேன். அவர்களைக் கண்ட வினாடியே என்னுள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. என் வில் அம்பு கத்தி, எல்லாவற் றையும் வீசி எறிந்துவிட்டேன். அவர்கள் காலடியில் வீழ்ந்தேன். ''நரகத்தை நோக்கி செல்லும் என்னைக் காத்தருள்வீர் '' என்று கதறினேன். '' உனக்கு உபதேசம் செய்கிறோம். இனி நீ உய்வாய்'' என்று 'ஒ, ராமா, உன் பெயரை மாற்றி '' மரா மரா '' என்று இடைவிடாது நாங்கள் இங்கு மீண்டும் திரும்பி வரும் வரை ஜெபம் செய்து வா'' என்று உபதேசித்தார்கள். ஏகாக்ர (ஒன்று பட்ட மனத்தோடு ) சித்தத்தோடு அவ்வாறே இடை விடாது இரவும் பகலும் ஜெபம் செய்தேன். என்னையே மறந்தேன், காலம் நேரம்,இரவு பகல் எண்ணங்கள் எல்லாம் மெதுவாக நின்றன. ''மரா  மரா '' ஜெபம் ஒன்றே எனது மூச்சு''.  என்று ஒரே மூச்சில் வால்மீகி தனது சரித்திரம் சொல்கிறார்.  
ஒருநாள்  வழக்கம்போல விடியற்காலை சீதா தேவி கண் விழித்தாள். சித்ரகூடம் அமைதியான சூழ்நிலையில் எப்போதும் போலவே மூழ்கி இருந்தது. பட்சிகள் குரல் மட்டுமே  அந்த அதி காலை நேரத்தில் கேட்டது. காலை யில் ராமன் காலைத் தொட்டு வணங்கி வெளியே வந்த சீதா தான் முதலில் யாரோ ஒருவர் வந்து எதிரே நிற்பதைப் பார்த்தாள் .
''ஆஹா அது பரதன் அல்லவா, அடையாளமே தெரியாமல் மிகவும் வாடி வருத்தத்தோடு நம்மைப் போல் மரவுரி தரித்து அல்லவோ நிற்கிறான்'' என்று வியந்தாள். பரதனோ கை கூப்பியவாறு அந்த பர்ணசாலையை வணங்குவதும் ராமன் சீதா லக்ஷ்மணன் பாத சுவடு பட்ட மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்வதுமாக  நின்றான். ராமன் திருவடி பட்ட மண்ணில் விழுந்து புரள என்ன பாக்கியம் செய்தேனோ'' என கீழே விழுந்து புரண்டான்.
 ராமன்  பர்ணசாலையில் இருந்து விஷயமறிந்து  வெளியே வர,ஆஸ்ரம வாயிலிலே பரதன்  ராமனைக் கண்டான்.
அருகம்புல்லின் துளிர் பச்சை நிறம். அகன்ற கரிய விழிகள். ஜடா மகுட கோபுரம் தலையில். மரவுரி ஆடை இவற்றிடையே அன்றலர்ந்த தாமரை முகம். அளவற்ற சந்தோஷத்தில் பரதன் ஓடிச் சென்று ராமனின் பாத கமலங்களைப் பற்றி கண்ணில் ஒற்றிக்கொண்டான். ராமன் பரதனை வாரி அணைத்தான். தாய்ப் பசு கன்றைக்  காணாமல் தேடிக் கண்டுபிடித்ததைப் போல் கோசலை ராமனைக் கண்டு அருகில் ஓடி வந்தாள். ராமன் அவளைக் கண்டதும் அருகில் சென்று அவள் காலில் விழுந்து வணங்கினான். கண்ணீர் மல்க அவளும்  ராமனை இறுக அணைத்தாள். ராமன்  பரதன் அருகே  நின்றிருந்த வசிஷ்டர் அருகே சென்று அவரையும் வணங்கினான்.
''முனி புங்கவரே, என் தந்தை நான் விடைபெறும்போது வாட்டத்தோடு இருந்தாரே இப்போது அவர் உடல் நலம் நன்றாக இருக்கிறதா?'' என்று ராமன் கேட்டபோது வசிஷ்டர் கண்களில் நீர் துளிர்த்ததைக் கண்ட ராமன் கலங்கினான்.
'' குருநாதா, ஏன் கண் கலங்குகிறீர்கள்? என்ன நடந்தது உடனே சொல்லுங்கள்''
''ராமா, உன் பிரிவை தாங்கமுடியாத உன் தந்தை '' ராமா. சீதா. லக்ஷ்மணா'' என்று அரற்றியவாறே உயிர் நீத்தார்''

இடி காதில் விழுந்ததைப்  போலாயிற்று ராமனுக்கு. ''என் அன்புத் தந்தையே, எங்களை அனாதை யாக்கி விட்டீர்களே '' என்று கண்களில் நீர் ஆறாக பெருக மாளா துயரத்தோடு ராமனும் லக்ஷ்ம ணனும் கீழே அடியற்ற மரமென சாய்ந்தார்கள். ராமனின் துயரம் மற்றவர்கள் கண்களைக் குளமாக்கியது. மெழுகாய் உருகினார்கள்.

நடந்ததை எல்லாம் வசிஷ்டர் சொல்லக் கேட்ட ராமர் லக்ஷ்மண சீதை மற்றோருடன் சேர்ந்து அருகிலே இருந்த மந்தாகினி நதிக்கு சென்று நீராடி தந்தைக்கு தர்ப்பணம் செய்தார்.

நாம்  எந்த உணவை விரும்புகிறோமோ அதுவே பித்ருக்களுக்கும் பிடித்தது. தேன் கலந்த நாவல் பிண்ணாக்கு தசரதன் ஆத்மாவுக்கு படைக்கப்பட்டது. மற்றவர் அனைவரும் நீராடி தீட்டைப் போக்கிக் கொண்டார்கள். இரவு ஒன்றும் ஆகாரம் உண்ணாமல் ராமரும் மற்றவர்களும் உபவாசம் இருந்தனர் . இரவெல்லாம் பரதன் ராமனை மன்றாடி அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்துகொள்ள வற்புறுத்தி னான். ராஜ்ய பாரம், மக்களுக்கு கடமை எல்லாவற்றை யும் எடுத்து உரைத்தான். கெஞ்சினான். தனது அன்னை யின் பாதகச் செயலுக்கு மன்னிப்பு கேட்டான். அமைதி யாக எல்லாவற்றையும் கேட்ட ராமன் பதிலளித்தான்.
''பரதா, நன்றாகக் கேள், நம் தந்தை மிகத் தெளிவாக அயோத்தி ராஜ்ஜியம் உனக்கு. தண்டகாரண்யம் எனக்கு 14 வருஷம்'' என்று தந்தை கட்டளை இட்டதை நாம் மீற முடியாது. அதை வழுவாமல் காப்பது நமது கடமை. எனவே நாட்டை நீ ஆள்வாயாக, காட்டை நான் ஆள்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. கவனத்தில் கொள்.''

''அப்பா, உங்கள் வாக்கை நான் மெய்யாக்குகிறேன் என்று நான் அவர் ஆசியோடு புறப்பட்டவன், சத்யம் தவற மாட்டேன். நீயும் தவறக்கூடாது. நாம் ரகுவம்சத் தில் தோன்றியவர்கள். சொன்ன சொல் பொய்யாகக் கூடாது. ''
'அண்ணா, 'நான் இப்போதே லக்ஷ்மணனைப் போலவே மரவுரியொடு ஜடாமுடியோடு காட்டில் உங்களுக்கு சேவை செய்ய அனுமதி கொடுங்கள். இலையேல் இங்கேயே உங்கள் கண் எதிரே ப்ராயோபவேசம் ( தற்கொலை போன்று உயிர் நீத்தல்) செய்து கொள்கி றேன்.'' என்ற பரதனின் பிடிவாதம் ராமரை வசிஷ்டரை நோக்க வைத்தது. ராமன் ஜாடை காட்ட வசிஷ்டர் புரிந்து கொண்டார்.
பரதனை தனியே அழைத்து வசிஷ்டர் சொன்னது:

''பரதா உனக்கு ஒரு தேவ ரகசியம் சொல்லும் நேரம் வந்து விட்டது. ராமன் மகா விஷ்ணு அம்சம். தேவர்கள் வேண்டுகோளுக் கிணங்கி ராவண வதம் நிமித்தமாக ராமனாக அவதரித்திருக்கிறார். யோகமாயை சீதை யாக உள்ளாள் . ஆதிசேஷன் தான் லக்ஷ்மணன். ராமனைப் பாதுகாப்பது அவன் கடமை. கைகேயியைக் குறை கூறாதே. எல்லாமே தேவர்கள் தூண்டுதலால் தான் என்பதை உணர்ந்து கொள். ராமனைத் திரும்ப அயோத்திக்கு வா'  என்று சொல்லாதே. பிடிவாதத்தைக் கை விடு. நீ திரும்பச்சென்று உனக்கிட்ட கடமையைச் செய். ராமன் தனது உரிய காலத்தில் திரும்ப வருவான்.''
பரதன் பிரமித்தான். தைர்யம் அடைந்தான் ராமனை வணங்கி ''சுவாமி தங்கள் கட்டளைப் படி என்னால் ராஜ்யம் நிர்வாகம் எல்லாம் நன்றாகவே நடக்கும்.  கவலை வேண்டாம். பதினான்கு ஆண்டுகள் நீங்கள் திரும்பி வரும் வரை அயோத்திய ராஜ்யத்தை நிர்வகித்து தங்களிடம் பொறுப்பாக ஒப்படைப்பேன். ஆனால் ஒன்று. சிம்மானத்தில் அரசனாக மட்டும் உங்களது பாதுகைகள் தான் எனக்கு கட்டளையிடும். நான் அதன் சேவகனாக நாடாள்வேன் ''

பரதனின் சமயோசிதம் ராமனை மகிழ்வித்தது. தனது பாதுகைகளை பரதனிடம் அளித்தார் . அவற்றை பய பக்தியோடு சிரமேற் தாங்கி பரதன் திரும்பிச் செல்லு முன் '' அண்ணா,  தாங்கள் 14 ஆண்டுகள் முடிந்த மறுநாளே வரவேண்டும். இன்றேல் நான் அக்னி ப்ரவேசம் செய்து கொள்வேன். ''
''பரதா, அப்படியே செய்வேன். நீ செல்வாயாக.''
அருகில் நின்றிருந்த கைகேயி ராமனை அணுகி தன் தவறுக்கு வருந்த ராமன் அவளை வணங்கி பதில் சொன்னான்;
 ''அன்னையே, நீங்கள் பொம்மலாட்டத்தில் ஒரு ஆட்டு விக்கப்பட்ட பொம்மை. ஆட்டுவித்தபடி ஆடியவர்கள். எந்த தவறும் நீங்களாகவே செய்ததாக வருந்த வேண் டாம். என் சங்கல்பத்தாலேயே நீங்கள் சொன்னது நடந்தது என அறிவீர்களாக. இனி வரும் நாளை 
நாரயணன் மேல் பக்தி செலுத்தி மோக்ஷ பெறுவீர்க ளாக. கர்மத்தளைகளோ, தடைகளோ உங்களை ஒட்டாது.'' என்று ராமன் உபதேசித்தார்.
ராமனை வலம் வந்து வணங்கி திருப்தி அடைந்தவளாக கைகேயி புது வாழ்க்கை மேற்கொள்ள திரும்பினாள். 
பரதன் அனைவரோடும் அயோத்திக்கு பயணமானான். அங்கிருந்து தான் மட்டும் நந்திக்ராமம் என்ற அயோத்தி எல்லையில் அருகே உள்ள கிராமத்துக்கு சென்றான். அங்கே ராஜாவின் சிம்மாசனத்தில் ராமனின் பாதுகை களை வைத்து பய பக்தியுடன் பூஜித்து எப்போது 14 ஆண்டு முடியும் என்று ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டு ஒரு பிரம்ம ரிஷியாக, ராஜ்ய பரிபாலனம் செய்தான். ராமன் இருப்பதை அறிந்த அநேக மக்கள் கூட்டம் சித்ரகூடம் வருவதை உணர்ந்து ராமன் அங்கிருந்து வெளியேற தீர்மானித்தான்.. 

Ramanuja antaadi and its glory

உயர்ந்த குணத்துத் "திருவரங்கத்து 
அமுது" ஓங்கும் அன்பால்,
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே !!
👏📣🎤📢🔔🔈👌👍🏻

அண்ணல் இராமானுசரை,
அநுதினமும் போற்றிப் பாட 108 ப்ரபன்ன காயத்ரி தந்த திருவரங்கத்து அமுதனார் திருநட்சத்திரம்-இன்று (12/03/2025)
--பங்குனி ஹஸ்தம்.
.'பெரிய கோயில் நம்பி'என்று அறியப்பட்ட இவர் பாடிய இராமானுச நூற்றந்தாதி அமுதம் போன்றிரு
ந்ததால், உடையவர் இவர'
"அமுதனார்"என்றுபோற்றினார்.

  ஹஸ்தமும்,தியாகமும்
   🙏🤚🙏🤚🙏🤚🙏🤚
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில்,
ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்த மஹான்கள் எல்லோருமே பெரும் தியாகங்களைச் செய்துள்ளார்கள்.

இந்த வரிசையின் தலைவர் தியாகராஜர் என்று போற்றப்படும் காஞ்சி தேவப்பெருமாள்! பேரருளாளர் !!
அவர் யாக நெருப்பில் தம்மையே தியாகம் செய்து திருமேனி எங்கும் தீப்புண் பெற்றார்.தம்முடைய திருக்குமாரைப் போலப் பாவித்து, காத்து,வளர்த்து,தவராசன் ஆக்கிய இராமாநுசரை ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்குத் தியாகம் செய்தார்.
அவரோடு சேர்த்து கூரத்தாழ்வான், முதலியாண்டான் மற்றும் பல சிறந்த ஆசார்யர்களையும் தியாகம் செய்தார்.
தாமே பிள்ளை லோகாசார்யராக ஸ்ரீரங்கத்தில் அவதாரம் செய்தார்.

தை ஹஸ்தத்தில் அவதரித்த கூரத்தாழ்வான் "(ஸ்ரீவைஷ்ணவ)
தரிசனம் காக்க தம் தரிசனம் இழந்தார்"கிருமி கண்ட சோழனிடமிருந்து இராமாநுசரைக் காப்பாற்ற தம் இரு கண்களையும் தாமே பிடுங்கி எறிந்து தியாகம் செய்தார்.கூரத்தில் ராஜாவாக,மிகப் பெரிய செல்வந்தராக இருந்த ஆழ்வானும், அவர்தம் தேவியர் ஆண்டாளும் அனைத்து செல்வங்களை யும் ஒரு வினாடியில் துறந்து,உடுத்திய வஸ்திரத்துடன் வந்து இராமாநுசர் திருவடிகளில் சரணடைந்தனர். அமுதனாரே பாடியது போல,

"மொழியைக் கடக்கும் பெரும்புகழான்
லஞ்ச முக்குறும்பாம் (உயர்குடிப்பிறப்பு,ஞானம்,செல்வம் இவற்றால் இயற்கையாகவே உண்டாகும் அகங்ஹாரம்),
குழியைக் கடக்கும்(தியாகம் செய்த) நம் கூரத்தாழ்வான் !"(இரா.நூற்.7)

பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த நம் திருவரங்கத்து அமுதனார், 'பெரிய கோயில் நம்பி' (பெரிய கோயிலின் தலைமை அதிகாரி/நிர்வாக அறங்காவலர்)என்னும் உயர்ந்த பொறுப்பையே இராமானுசருக்
காகத் தியாகம் செய்தார்.அந்தக் காலத்தில் மிகப்பெரிய கெளரவ
மான பதவி ! தம்மிடம் இருந்த கோயில் சாவியையும், நிர்வாகப்பொறுப்பையும் கூரத்தாழ்வான் மூலம் இராமாநுசர் வசம் ஒப்படைத்தார்.பெரிய கோயிலில் அவர் செய்து வந்த புரோகிதக் கைங்கர்யம்,பெற்று வந்த கோயில் மரியாதைகள் அனைத்தையும் தியாகம் செய்தார்.
இராமாநுசர் நியமனப்படி ஆழ்வானை ஆசார்யராக ஏற்றார்.

மேற்சொன்ன இராமாநுச நூற்றந்தாதிப் பாசுரத்தின் அடுத்த இரண்டு வரிகள் அமுதனாரின் தியாகத்தைச் சொல்வதாக உள்ளது.

"பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடியல்லா,
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தம் அன்றே !!"
(மேலும் பல பாசுரங்களிலும் அமுதனாரின் தியாகப் பான்மையைக் காணலாம்.)

அமுதம் அருளிய அமுதனார்:
🥭🍌🍇🍈🍉🍊🍋🍍🥥🍚🍚
ஆண்டாள், நாச்சியார் திருமொழியில்,
"என் அரங்கத்து இன்னமுதர் குழலகர் வாயழகர்,
கண்ணழகர்,கொப்பூழில் எழுகமலப் பூவழகர்"என்று அரங்கரைப் பாடுகின்றார்.

அது போல் அமுதனார் பாடிய,

"காவியத் தலைவர் அமுதம்,
சொல் அமுதம்,
பொருள் அமுதம்,
பாங்கு/பாவம் அமுதம்,
இன்புற்ற சீலம் அமுதம்,
அசை,இசை அமுதம்,
முன்னோர் மாண்பு அமுதம்,
தம் நைச்சியம் அமுதம் !!"

சாதாரணமாக நாம் உண்ணும் பிரசாதம் என்னதான் அமுதமாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் தித்திக்கும்/திகட்டும்.ஆனால் அமுதனாரின் அமுதம் படிக்கப் படிக்க,பருகப்,பருக,இன்னும்,
இன்னும் என்று ஆர்த்தியைத் தூண்டும்.108 பாசுரங்களும்,
பாசுரத்தின் ஒவ்வொரு சொல்லும் அமுதமே.அப்படி ஒரு சொல் தான் 'கார்த்திகையானும்' என்று தொடங்கும்,22 ஆம் பாசுரத்தின் இறுதிவார்த்தை "சேமவைப்பே"

சேம வைப்பு என்பதை ஆங்கிலத்தில் Provident Fund என்பார்கள். வாழ்க்கையில் பணி செய்யும் காலம் முடிந்து,ஓய்வுகாலத்துக்கு உதவுவது தான் சேமவைப்பு.வாழும் காலமே முடிந்து, மீண்டும் பிறவாநிலை என்னும் மோட்சத்தை ஸ்ரீவைகுண்ட நாதரின் திருவடியில் அடைய வேண்டும் என்றாலும் ஒரு சேம வைப்பு தேவை.அநத சேமவைப்பே "இராமானுசன்"என்கிறார் அமுதனார். இதற்கான விளக்கத்தை 23 ஆம் பாசுரத்தில் சொல்கிறார்.

"வைப்பாய வான்பொருளென்று,
நல்லன்பர் மனத்தகத்தே ,
எப்போதும் வைக்கும் இராமானுசனை,
இருநிலத்தில் ஒப்பார் இல்லாத இருவினையேன்(??),வஞ்ச நெஞ்சில் வைத்து,
முப்போதும் வாழ்த்துவன்,
என்னாம் இது அவன் மொய்புகழ்க்கே!!!"

ஒருவகையில் பார்த்தால் இராமானுச நூற்றந்தாதியும் ஒரு இதிகாசமே.!!!
🙏🌺🍀🌸🙏🏿
இதிகாசம் என்பது காவியத்தலைவர் வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்டு,
அவர் செவிசாற்றி அருளிய உன்னத கிரந்தம்.அந்த வகையில் வால்மீகி முனிவர் இராமர் காலத்திலேயே இராமாயணம் பாட,ஶ்ரீ இராம பிரான்(தம் பிள்ளைகள் லவ,குசர்கள் மூலம்) கேட்டு மகிழ்ந்தார்.
வேதவியாசர் ஶ்ரீ கிருஷ்ணர் காலத்திலேயே மகாபாரதம் பாடினார். மகாபாரதத்தின் சத்தான விஷ்யமான 'விஷ்ணுசஹஸ்ரநாமம்' பீஷ்மரால் சொல்லப்படும் போதே ஶ்ரீகிருஷ்ணர் கேட்டு அருளினார்.
அதே போல் பெரிய கோயில் நம்பி என்றழைக்கப்பட்ட திருவரங்கத்து அமுதனார்,ராமானுசர்
காலத்திலேயே "இராமானுச நூற்றந்தாதி" இயற்றினார்.
அதை அவரே பாட இராமானுசர் கேட்டு மங்களாசாசனம் செய்தார்.

ஒரு நாள் இராமாநுசரை வர வேண்டாம் என்று நியமித்து,
பெரியபெருமாளே அமுதனாரைப் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார்!!.

ஆழ்வார்களின் அருளிச்செயல் வரிசையில் "இராமாநுச நூற்றந்தாதி"யையும்
 "நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்" சேர்க்குமாறு பெருமாள் நியமித்தார்.

முக்கோல் முனிவருக்கு மூன்று சாற்றுமறைப் பாசுரங்கள் !!!
    👌👌👌👌👌👌👌👌👌👌
ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களில் கடைசி இரண்டு பாசுரங்களும் சாற்றுமறைப் பாசுரங்களாக இரண்டு முறை சேவிக்கப் படும். ஆனால் அமுதனாரின் இராமாநுச நூற்றந்தாதியில் மட்டும் மூன்று பாசுரங்கள்- "இருப்பிடம்வைகுந்தம்"(106),
"இன்புற்ற சீலத்து இராமாநுச"(107),
"அங்கயல் பாய் வயல்"(108)
சாற்றுமறைப் பாசுரங்கள். இதற்குக் காரணம் அமுதனாரும் அவர் சீடர்களும் காட்டழகிய சிங்கர் சந்நிதியில் அமர்ந்து, இராமாநுச நூற்றந்தாதி எழுதிக் கொண்டிரு
ந்தனர்.105 ஆவது பாசுரம் முடித்து,106 தொடங்கும் முன்னர் அழகியசிங்கரைச் சேவிக்க உடையவரே அங்கு வந்து விட்டார். உடனே அவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரைச் சேவித்தனர்.
சாற்றுமறைப் பாசுரங்களை எழுந்து நின்று சேவிப்பதால், எழுந்து நின்றதற்குப் பின்னால் சேவித்த மூன்று பாசுரங்களும் சாற்று மறைப் பாசுரங்கள் ஆயின!!!

இராமாநுச நூற்றந்தாதி உற்சவம் !!
🔕🙏💐🔕🙏💐🔕🙏💐🔕🔕
பங்குனி பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாளான இன்று இரவு (அமுதனார் அவதரித்த ஹஸ்த நட்சித்திரத்தில்),"சப்தாவரணம்" 
(சப்தம் இல்லாமல் பெருமாள் வீதி உலா வருவது) நடைபெறும்.
பெருமாள், வீதி புறப்பாடு நடக்கும்போது அத்யாபக கோஷ்டியாரை இராமானுச நூற்றந்தாதி பாசுரத்தைக் கோஷ்டியில் சாதிக்கச் சொல்லித், தானும் மற்ற அனைத்து மக்களும் காதுகுளிரக் கேட்பதற்காகப் பெரிய மேளத்தை, விடுத்து சிறிய மிருதங்கத்தை இசைக்கச் சொல்லி கட்டளையிட்டார். இந்த காரணத்தினால் இந்த விழா சப்தாவரணம் எனப்படுகிறது.
ஸ்ரீ ரங்கா! ரங்கா கோபுரத்திலிருந்து புறப்படும் போது சில வினாடிகள் வாத்தியம் ஒலிக்கப்படும்.பின்னர் உத்திர வீதியின் நான்கு மூலைகளிலும் பெருமாள் எழுந்தருளும் போது சில வினாடிகள் ஒலிக்கப்படும்.(பெருமாள் புறப்பாட்டில் எழுந்தருள்கிறார் என்று அந்தந்த வீதிகளில் உள்ளோர் அறிகைக்காக).மற்றபடி மிக அமைதியாக அத்யாபகர்கள் இராமாநுச நூற்றந்தாதி சேவிப்பது மட்டும் கேட்கும்.பெருமாளும் தம் "உடையவரின்" பெருமையைப் கவனமாகக் கேட்டு இன்புற்று வருவார்.

இந்த திருநாளில் பெருமாள் வீதி வலம் வந்தபின், தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, உடையவர் சந்நிதிக்கு எழுந்தருள்வார். இராமாநுசரும் கைத்தலமாக (அர்ச்சகர் கையில் தாங்கியபடி) சந்நிதி திருமுற்றத்தில் எழுந்தருளி,பெருமாளைக்
கண்குளிரச் சேவிப்பார். பெருமாள் இராமாநுசருக்கு உடுத்துக் களைந்த பீதக ஆடை,மாலை,சந்தனம்,தீர்த்தம்,
சடாரி சாதிப்பார். இராமாநுசர் பெருமாளுக்கு இளநீர் அமுது நைவேத்யம் செய்வார்.
பெருமாள் போனகம் செய்த சேடத்தை புனிதமாக ஸ்வீகரித்துக் கொள்வார் இராமாநுசர்.

இந்த இராமாநுச நூற்றந்தாதி சப்தாவரணம் விழா பங்குனி உற்சவத்தில் மட்டுமல்லாது,
தை,மற்றும் சித்திரை உற்சவங்களின் பத்தாம் நாளன்றும், இதே போல நடைபெறுகிறது.

"நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,
சயந்தருகீர்த்தி இராமானுசமுனி 
தாளினைமேல்,
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது,ஓங்கும் அன்பால்,
இயம்பும்,கலித்துறை அந்தாதி ஓத,இசைநெஞ்சமே!!"

திருவரங்கத்தமுதனார் வாழி திருநாமம் !!
👌🥁🎸🎺🎻🎷👌🔔

"எந்தாதை கூரேசன் இணையடியோன் வாழியே !
எழில் மூங்கிற்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே !
நந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியே !
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே !
பைந்தாம் அவ்வரங்கர் பதம் பற்றினான் வாழியே !
பங்குனியில் அத்த நாள் பாருதித்தோன் வாழியே !
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே !
அணியரங்கத்து அமுதனார் அடியிணைகள் வாழியே !!!"

(அடியேன் பார்த்தசாரதி இராமாநுசதாசன்)

Number 7 and Srirangam

*ஸ்ரீரங்கம் ~ ஏழின் சிறப்பு...!!!*

*01.* ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் *ஏழு பிரகாரங்களுடன்., ஏழு மதில்களை* கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

*02.* ஏழு *பெரிய* பெருமை உடைய....
1) பெரிய கோவில்.,
2) பெரிய பெருமாள்.,
3) பெரிய பிராட்டியார்.,
4) பெரிய கருடன்.,
5) பெரியவசரம்.,
6) பெரிய திருமதில்.,
7) பெரிய கோபுரம்.,
இப்படி அனைத்தும் *பெரிய* என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்....

*03.* ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சிமார்கள்....
1) ஸ்ரீதேவி.,
2) பூதேவி.,
3) துலுக்க நாச்சியார்.,
4) சேரகுலவல்லி நாச்சியார்.,
5) கமலவல்லி நாச்சியார்.,
6) கோதை நாச்சியார்.,
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்....

*04.* ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாஹனத்தில் எழுந்தருளுவார்....
1) விருப்பன் திருநாள்.,
2) வசந்த உற்சவம்.,
3) விஜயதசமி.,
4) வேடுபரி.,
5) பூபதி திருநாள்.,
6) பாரிவேட்டை.,
7) ஆதி பிரம்மோத்சவம்.,
ஆகியவை....

*05.* ஸ்ரீரங்கம் கோவிலில் வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்....
1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆடி.,
4) புரட்டாசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி....

*06.* ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்....
1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆவணி.,
4) ஐப்பசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி....

*07.* ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் *ஏழாம் திருநாளன்று* ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

*08.* தமிழ் மாதங்களில் *ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும்* (30 நாட்களும்) தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

*09.* ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். *ராமாவதாரம் ஏழாவது* அவதாரமாகும்.

*10.* இராப்பத்து *ஏழாம் திருநாளன்று* நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

*11.* ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். 
1) கோடை உற்சவம்.,
2) வசந்த உற்சவம்.,
3) ஜேஷ்டாபிஷேகம்., திருப்பாவாடை.,
4) நவராத்திரி.,
5) ஊஞ்சல் உற்சவம்.,
6) அத்யயநோத்சவம்., 
7) பங்குனி உத்திரம்....

*12.* பன்னிரண்டு ஆழ்வார்களும் *ஏழு சன்னதிகளில்* எழுந்தருளி இருக்கிறார்கள். 
1) பொய்கையாழ்வா., பூதத்தாழ்வார்., பேயாழ்வார்.,
2) நம்மாழ்வார்., திருமங்கையாழ்வார்., மதுரகவியாழ்வார்.,
3) குலசேகராழ்வார்.,
4) திருப்பாணாழ்வார்.,
5) தொண்டரடிப் பொடியாழ்வார்., 
6) திருமழிசையாழ்வார்.,
7) பெரியாழ்வார்., ஸ்ரீஆண்டாள்....

*13.* இராப்பத்து *ஏழாம் திருநாள்* நம்மாழ்வார் பராங்குச நாயகி அலங்காரத்தில் வருவதால் அன்று மட்டும் ஸ்ரீஸ்தவம் மற்றும் ஸ்ரீகுணரத்ன கோசம் சேவிக்கப்படும்....

*14.* பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் *ஏழு கோபுரங்கள்* உள்ளன. 
1) நாழிகேட்டான் கோபுரம்.,
2) ஆர்யபடால் கோபுரம்.,
3) கார்த்திகை கோபுரம்.,
4) ரங்கா ரங்கா கோபுரம்.,
5) தெற்கு கட்டை கோபுரம் - I.,
6) தெற்கு கட்டை கோபுரம் - II.,
7) ராஜகோபுரம்....

*15.* ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். 
1) வசந்த உற்சவம் ~ நீராழி மண்டபம்.,
2) சங்கராந்தி ~ சங்கராந்தி மண்டபம்.,
3) பாரிவேட்டை ~ கனு மண்டபம்.,
4) அத்யயநோற்சவம் ~ *(தெரிந்தவர்கள் கூறுங்கள்)*
5) பவித்ர உற்சவம் ~ பவித்ர உற்சவ மண்டபம்.,
6) ஊஞ்சல் உற்சவம் ~ ஊஞ்சல் உற்சவ மண்டபம்.,
7) கோடை உற்சவம் ~ நாலுகால் மண்டபம்....

*16.* ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்....
1) பூச்சாண்டி சேவை.,
2) கற்பூர படியேற்ற சேவை.,
3) மோகினி அலங்காரம்., ரத்னங்கி சேவை., 
4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்.,
5) உறையூர்., ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை.,
6) தாயார் திருவடி சேவை.,
7) ஜாலி சாலி அலங்காரம்....

*17.* திருக்கோயில் வளாகத்தில் உள்ள *ஏழு மண்டபங்களில்* நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்....
1) நவராத்ரி மண்டபம்.,
2) கருத்துரை மண்டபம்.,
3) சங்கராந்தி மண்டபம்.,
4) பாரிவேட்டை மண்டபம்.,
5) சேஷராயர் மண்டபம்.,
6) சேர்த்தி மண்டபம்.,
7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்....

*18.* திருக்கோவிலில் உள்ள *ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள்* உள்ளன.

*19.* *ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள்* அமையப் பெற்றுள்ளன.

*20.* திருக்கோயில் வளாகத்தில் *ஏழு ஆச்சார்யர்களுக்கும்* தனி சன்னதி உள்ளது....
1) ராமானுஜர்.,
2) பிள்ளை லோகாச்சாரியார்.,
3) திருக்கச்சி நம்பி.,
4) கூரத்தாழ்வான்.,
5) வேதாந்த தேசிகர்.,
6) நாதமுனி.,
7) பெரியவாச்சான் பிள்ளை....

*21.* சந்திர புஷ்கரிணியில் *ஆறு முறையும்.,* கொள்ளிடத்தில் *ஒருமுறையும்* இப்படியாக *ஏழு முறை* சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்....
1) விருப்பன் திருநாள் ~ சித்திரை மாதம்.,
2) வசந்த உற்சவம் ~ வைகாசி மாதம்., (3) பவித்ரோத்சவம் ~ ஆவணி மாதம்.,
4) ஊஞ்சல் உற்சவம் ~ ஐப்பசி மாதம்.,
5) அத்யயன உற்சவம் ~ மார்கழி மாதம்.,
6) பூபதி திருநாள் ~ தை மாதம்.,
7) பிரம்மோத்சவம் ~ பங்குனி மாதம்....

22. நம்பெருமாள் *மூன்று முறை எழுந்தருளும் ஏழு வாஹனங்கள்*....
1) யானை வாஹனம் ~ சித்திரை., தை., மாசி.,
2) தங்க கருடன் வாஹனம் ~ சித்திரை., தை., பங்குனி.,
3) ஆளும் பல்லக்கு ~ சித்திரை., தை., பங்குனி.,
4) இரட்டை பிரபை ~ சித்திரை., மாசி., பங்குனி.,
5) சேஷ வாஹனம் - சித்திரை., தை., பங்குனி.,
6) ஹனுமந்த வாஹனம் - சித்திரை., தை., மாசி.,
7) ஹம்ச வாஹனம் ~ சித்திரை., தை., மாசி....

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் *ஏழு வாஹனங்களில் மட்டும்* உலா வருவார்.

24. கற்பக விருட்சம்.,
ஹனுமந்த வாஹனம்.,
சேஷ வாஹனம்.,
சிம்ம வாஹனம்., ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாஹனங்கள் தங்கத்திலும் யாளி வாஹனம்., இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் ~ ஆகிய *ஏழு வாஹனங்களை தவிர* மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ ஆனது.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை....
1) தச மூர்த்தி.,
2) நெய் கிணறு.,
3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில்.,
4) 21 கோபுரங்கள்.,
5) நெற்களஞ்சியம்.,
6) தன்வந்தரி.,
7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி....

கொடுக்கப்பட்டுள்ள 25ல் ~ *இரண்டையும்., ஐந்தையும் கூட்டினால் வருவது ஏழு (2 + 5 = 7)*

*பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர்.*

Thukkiri paatti - Periyavaa

*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ராமநாம பாட்டி*

காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து பக்தர் ஒருவர் காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க மடத்திற்கு வந்திருந்தார். அந்த ஊரில் சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோ கிடையாது. ஒரே ஒரு பிள்ளையார் கோயில் மட்டும் தான். 

வந்திருந்த பக்தர் தன்னுடைய ஊரைச் சொன்னதும், பெரியவர் அவரிடம், "உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலை, ராமபிள்ளையார் கோயில் என்று தானே கூறுவார்கள்," என்றார். அவரும்,"ஆமாம் சுவாமி!" என்று சொல்லித் தலையசைத்தார்.

சிறிது நேர யோசனைக்குப் பின் பெரியவர் மீண்டும் பக்தரை அழைத்து, "உங்க கிராமத்தில் அந்த காலத்தில் துக்கிரிப்பாட்டி என்றொருத்தி இருந்தாள் தெரியுமா?" என்று கேட்டார். பக்தரும் பயபக்தியுடன்,"நான் கேள்விப்பட்டிருக்கிறேன்!" என்றார்.

"உங்கள் ஊர் துக்கிரிப்பாட்டி பற்றி நானே உனக்குச் சொல்கிறேன்" என்று தொடர்ந்தார்.

"அந்த காலத்தில் உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் தான் ராமநாமஜெபம் நடக்கும். அதனால் அக்கோயிலுக்கு 'ராம பிள்ளையார் கோயில்' என்ற பெயர் வந்தது" என்றார். பெரியவர் பேச்சை பக்தர் மெய்மறந்து கேட்கத் தொடங்கினார். பெரியவர், "அதுசரி! ராமபிள்ளையார் இருக்கட்டும். துக்கிரிப்பாட்டி கதைக்கு வருகிறேன்!" என்று தொடர்ந்தார்.

"துக்கிரிப்பாட்டியின் இளவயதிலேயே கணவர் இறந்து விட்டார். அதனால், அவளை உலகம் பழித்துப்பேசியது. அவளைக் கண்டால் ஆகாது என்று எண்ணி "அடி! துக்கிரி! துக்கிரி!" என்று திட்டித்தீர்த்தது. விதியின் கொடுமையை எண்ணிய அவள் தன் மனநிம்மதிக்காக ராமநாமாவைச் சொல்லத் தொடங்கினாள். 

அதுவே ஜபவேள்வியானது. ஆண்டுகள் உருண்டோடின. அவளும் பாட்டியாகிவிட்டாள். ஒரு சந்தர்ப்பத்தில், ஊர் பிரமுகரின் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனது. வயிற்றுவலியால் குழந்தை துடித்தது. வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை. விஷயத்தை அறிந்த துக்கிரிப்பாட்டி தானாகவே பிரமுகரின் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். 

ராமநாமத்தை ஜெபித்து, குழந்தையின் நெற்றியில் விபூதியிட்டு, "பூரண குணம் உண்டாகும்" என்று சொல்லிச் சென்றாள். என்ன ஆச்சர்யம்! அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை "துக்கிரிப்பாட்டி" என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர். 

"ராமநாம பாட்டி" என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள். நீயும் அந்த பாட்டிபோல சதாசர்வ காலமும் ராமநாமத்தை ஜெபித்துவா. எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும்," என்று ஆசியளித்து அனுப்பினார்.

பெரியவரின் பேச்சைக் கேட்ட அனைவரும் ராமநாமத்தின் மகத்துவத்தை உணர்ந்தனர்.

பெரியவா சரணம்!

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org*

Satanagati to thayaar first

(ஸ்ரீ ராமாநுஜர் எம்பெருமானிடம் சரணாகதி அடையும் முன், முதலில் தாயாரை சரணடைகிறார்)

"ஓம் பகவான் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப,
ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதிக;
அதிசய அசங்க்யேய கல்யாண குண காணாம்,.பத்மவ நாலயாம் பகவதீம் ஸ்ரீயம் தேவீம் நித்ய,
அநபாயிநீம் நிர்வத்யாம் தேவ தேவ திவ்ய மஹிஷீம்:
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம் அசரண்ய,
சரண்யாம் அநந்ய சரணம் அஹம் ப்ரபத்யே"
-சரணாகதி கத்யம்
-
*ஸமஸ்த கல்யாண குணங்களுக்கு பரிபூரணனான ஸ்ரீமந் நாராயணனுக்கு உகப்பாயும் இருக்கிற - எல்லையில்லா குணங்களுடைய ஜஸ்வர்யம், சௌசீல்யம், வாத்ஸல்யம் இவைகளை கொண்டவளும், பகவானைவிட்டு பிரியாதவளும், கமலவனத்தை வாசஸ்தலமாக கொண்டவளும், பரிசுத்தமானவளும், ஜகத்துக்கெல்லாம் தாயானவளும், பெருமாளின் திவ்ய மஹிஷியுமான பிராட்டியை சரணடைகிறேன்!*
*தாயே! சரணாகதியானது அமைய வேண்டிய விதத்தில் ஒரு இடையூறும் இல்லாமல் இருக்க உன்னை சரணடைகிறேன்!*
(என்று சரணாகதி கத்யத்தில் பிரார்த்திக்கிறார். தாயாரும் அவ்வாறே ரக்ஷிக்கிறாள்!)
🙏🙏

Vishnu Sahasranamam intro

எவரை சரணடைந்தால் சம்சார பந்தம் அறுபடும்?

யுதிஷ்டிர உவாச:

கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயாணம்:
சத்துவந்த; கம் கமர்ச்சந்த: ப்ராப்நியூர் மணவாஸ் ஸுபம்''

யுதிஷ்டிரன் பய பக்தியுடன் பீஷ்மரை மெதுவாக கேட்கிறான்: 

''இந்த பூவுலகிற்கே ஒரே கடவுள் என்று எவரைச் சரணடையலாம்? '' என கேட்கிறான் யுதிஷ்டிரன்.

''கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜந்ம ஸம்ஸார பந்த நாத்

''இந்த மனித குலமே எவரை போற்றி துதித்து, வழிபட்டு அமைதியும், வளமும் பெற்று உய்யமுடியும் ?'' 

''எவரை உபாசித்தால் பிறவியினால் ஏற்படும் பந்தங்களை, கட்டுக்களை உதறிவிட்டு பரிசுத்தமாகலாம்? எது சிறந்த, உயர்ந்த தர்மம் என்று உங்களுக்கு தோன்றுகிறது?''

''கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜென்ம சம்சார பந்தனாத்:''
''எந்த மந்திரங்களை உச்சரித்து ஒருவன் பிறவி - மரண துன்பத்திலிருந்து விடுபட முடியும்?''

'' தாத்தா, நீங்கள் எல்லாம் தெரிந்தவர், நீங்களே சொல்லுங்கள்,நீங்கள் எதை உயர்ந்த தர்மம் என்று கருதுகிறீர்கள்? எந்த ஜெபத்தை, மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உலக ஜீவ ராசிகள் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறும்?'' - யுதிஷ்டிரன்.

ஸ்ரீ பீஷ்ம உவாச:

''ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: ||

''இந்த பூவுலகில் எல்லோர் நலனுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தன்னையே தியாகம் செயது கொள்பவர் ஸ்ரீ மஹா விஷ்ணு ஒருவரே. ஆதி அந்தம் இல்லாத பிரபு''

''தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம் |
த்யாயந் ஸ்துவந்நாமஸ்யம்ச யஜமாநஸ் தமேவச ||

அப்படிப் பட்ட மகா புருஷனை ஸ்தோத்ரம் பண்ணியும், வழிபட்டும் ஒருவன் முக்தி பெறலாம்.

''அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வதுக்காதிகோ பவேத் ||

தர்ம ஸ்வரூபனான மூவுலகும் காப்பவனான மஹாவிஷ்ணு ஆதியோ அந்தமோ இல்லாத மகேஸ்வரன். அவனது நாமத்தை நாமத்தை ஸ்மரிப்பவன் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு துக்கங்களற்ற நிலை அடைகிறான்.

''ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம் |
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் ||

ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோமத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச்சேந் நர:ஸதா||

பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப: |
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||

மகா விஷ்ணுவை தான் ஒளி மயமான 'மஹத்' என்போம் . அவரல்லவோ சர்வ ஜன ரக்ஷகர். சத்ய ஸ்வரூப மானவர். பர ப்ரம்மம் ;

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் |
தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா ||

எதெல்லாம் பவித்ரம் என்று கருதுகிறோமோ அவற்றையே பவித்ரமாக்குபவர் மஹா விஷ்ணு. தேவாதி தேவன். சாஸ்வதன் . ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தை.

யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ யுக்க்ஷயே ||

யுக சந்திகளில் பிரளயம் நேரிடும்.அப்போது சகல ஜீவராசிகளும் அழியும். பிரளய முடிவில் அனைத்தும் மீண்டும் தோன்றும்.எல்லாம் அவனிலிருந்து வந்தவை. முடிவில் அவனடியே சேரும்.

தஸ்ய: லோக ப்ரதாநஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே|
விஷ்ணோர்நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம் ||

''யுதிஷ்டிரா, நான் உனக்கு அந்த கீர்த்தி வாய்ந்த மகா விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை சொல்கிறேன். வேதங்கள் அவனையே பாடுகின்றன ஏனென்றால் அவனல்லவோ அனைத்து பாபங்களையும் சம்சார பயத்தையும் போக்குபவன்.

''யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மநா : |
ரிஷி பி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே ||

''நான் சொல்லப்போகும் விஷ்ணுவின் நாமங்கள் எல்லாமே அவனது கல்யாண குணங்களை அறிவுறுத்தும். ரிஷிகளின் வாக்கியங்களில் பொதிந்தவை அவை.

ரிஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹா முநி: |
சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீஸுத: ||

''ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயர் கொண்ட வேத வியாசர் தான் இந்த ஆயிரம் நாமங்களை தொகுத்து அளித்தவர். அவை அனுஷ்டுப் எனும் சப்த அளவில் சொல்லவேண்டும். இந்த ஆயிர நாமங்களுக்கும் தலைவன், நாயகன், தேவகி மைந்தனான ஸ்ரீ கிருஷ்ணனே.

ஓம் நமோ நாராயணாய !

Friday, April 11, 2025

Panguni utthiram at Srirangam

#பங்குனி_உத்திரம்

#மட்டையடி, #ப்ரணயகலஹம் மற்றும் #நம்பெருமாள் பெரிய பிராட்டியார் #சேர்த்தி


பங்குனி உத்திரம் பெரிய பிராட்டியாரின் திருநட்சத்திரம். திருவரங்கத்தில் அந்த ஒரு நாள் மட்டுமே தாயாருக்கும் பெருமாளுக்கும் சேர்த்தி நடைபெறும். 

பெரிய பிராட்டியார் கருணையின் பிறப்பிடம். நம்மைப் போன்ற அடியார்களின் பிழைகளை போக்க புருஷாகாரம் செய்பவர். 

பங்குனி உத்திரம் அன்று நடைபெறும் நிகழ்வுகள்:

பெருமாள் 8 வீதிகள் எழுந்தருள்வார்
தாயார் சன்னதியில் மட்டையடி நடைபெறும்
பெருமாளுக்கும் தாயாருக்கும் நடைபெறும் வாக்குவாதம் – பிரணய கலஹம்
பெரிய பிராட்டியார் சேர்த்தி
ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய பாராயணம்
பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் திருமஞ்சனம்
பெருமாள் தேரில் எழுந்தருளல் கோரதம்
அதிகாலை 4 மணி பெருமாள் ராஜகோபுரத்தை தாண்டியவுடன், பெரியமேளம் (உடல்) நிறுத்தப்பட்டது. சப்தமின்றி நேரே வெளி ஆண்டாள் சன்னதியை அடைகிறார். மாலை மாற்றிக் கொண்டு சப்தமில்லாமல் மூலஸ்தானத்திற்கு எழுந்தருளி விடுகிறார்.

ஏன்? உறையூர் சேர்த்தி முடிந்து திரும்பி வருவதனால்!!!

ஏழாம் திருநாள் எப்போதும் போல் இரவு தாயார் சன்னதிக்குச் சென்று திருமஞ்சனம் கண்டருளுகிறார். எட்டாம் திருநாள் அன்று கொள்ளிடத்தில் இறங்கி பின்னர் உள்ளே செல்கிறார்.

மேலே சொன்ன விஷயங்களுக்கும் பங்குனி உத்திரத்திற்கு என்ன சம்பந்தம்? சம்பந்தம் உள்ளது, தொடர்ந்து படிக்கவும்.

பங்குனி உத்திரத்தன்று காலை பெருமாள் 8 வீதிகளும் வலம்வருதல்
காலை 6 மணிக்கு பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். 

முன்னே அரையர் தாளம் இசைக்க, சத்தம் இல்லாமல் மெதுவாக 8 வீதிகளும் பெருமாள் எழுந்தருளுகிறார்.

மட்டையடி வைபவம்
அதுவரை நிதானமாக வந்து கொண்டிருந்த பெருமாள், சக்கரத்தாழ்வார் சன்னதியை தாண்டியவுடன் திடீர் பரபரப்பு! பெருமானின் முகத்தில் கூடுதல் பொலிவு!!

மின்னல் வேகத்தில் தாயார் சன்னதியை அடைகிறார். பெரியமேளம் (உடல்) ஒலிக்கத் தொடங்குகிறது. விண்ணைப் பிளக்கும் வேகத்தில் தாயார் சன்னதிக்குள் நுழைய முற்படுகிறார். பெருமாள் வருவது கண்டு தாயார் சன்னதி கதவுகள் மூடப்படுகின்றன. உறையூர் சென்று வந்த பெருமாளை, தாயார் அனுமதிக்க மறுப்பதால் கதவுகள் மூடப்படுகின்றன.

கதவுகள் மூடப்படுவதை கண்ட பெருமாள் மெல்ல பின்னே செல்கிறார். தாயார் சன்னதி கதவுகள் மீண்டும் திறக்க இரண்டாவது முறையாக பெருமாள் ஓட்டத்தில் வேகமாக உள்ளே நுழைய முற்படுகிறார். இந்த முறையும் கதவுகள் மூடப்பட்டு பூவும், தயிரும் வீசப்படுகின்றன. மீண்டும் பெருமாள் பின்னே மெதுவாக சென்று விடுகிறார். (மட்டையடி வாங்கிய சிலர்)

மூன்றாவது முறையாக கதவுகள் திறக்கப்பட்டு பெருமாள் முன்னே ஓட, கதவுகள் மீண்டும் மூடப்படுகிறது. பெருமாள் மெதுவாக பின்னே சென்று நின்று விடுகிறார்!!

தாயார் தன் மீது கோபத்தில் இருப்பதால், இனி பேச்சுவார்த்தை நடத்துவது உசிதம் என்று பெருமாள் நினைக்க! மணியக்காரர் சமயம் சொல்லி அரையருடன் நம்மாழ்வார் சமாதானம் செய்ய வருகிறார்.

பிரணய கலஹம் – பெருமாளுக்கும் தாயாருக்கும் நடக்கும் வாக்குவாதம்
பெருமாள் சார்பாக அரையரும், தாயார் சார்பாக பண்டாரியும் விண்ணப்பம் செய்வார்கள். இந்த விண்ணப்பங்கள் தம்பிரான் படி வியாக்கியானத்தை கொண்டு அரையர்கள் சேவிப்பார்கள்.

இந்த விண்ணப்பங்களின் சுருக்கத்தை மட்டும் நாம் இங்கே பார்ப்போம். முழுவதுமாக அறிந்து கொள்ள கோயிலொழுகு புத்தகத்தை படிக்கவும்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்-1:
தாம் தாயாரை காண வந்தால் தன்னை உள்ளே வரவேற்று, சிம்மாசனத்தில் அமர்த்தி உபசாரங்கள் செய்வீர். இன்று தன்னை பார்க்காமல், கதவுகளை மூடி, பூக்களை எறிந்து இப்படி அவமானம் செய்வது ஏன்?

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-1:
பெருமாள் எப்போதும்போல் எழுந்தருளியிருப்பது மெய்யானால்:

திருக்கண்கள் சிவந்து இருப்பானேன்?
கஸ்தூரி திலகம் கலைந்து இருப்பானேன்?
திருவதரம் வெளுத்து இருப்பானேன்?
திருமேனியில் குங்குமப் பொடி இருப்பானேன்?
தாம் நேற்று எழுந்தருளிய இடத்திற்கே செல்லலாம் என நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -2
திருக்கண்கள் சிவந்து இருப்பானேன்?

தாம் "செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்" ஆதலால் இரவு முழுவதும் தூக்கமின்றி ஜெகத்ரக்ஷகம் செய்ததால் கண்கள் சிவந்து இருக்கிறது!

கஸ்தூரி திலகம் கலைந்து இருப்பானேன்?

சூரியனின் கிரணங்கள் காரணமாக கஸ்தூரி திலகம் கலைந்து இருக்கு!

திருவதரம் வெளுத்து இருப்பானேன்?

அசுரர்களை அழிக்க பாஞ்சஜன்யதை பயன்படுத்தியதால், ஆதரம் வெளுத்து இருக்கு!

திருமேனியில் குங்குமப் பொடி இருப்பானேன்?

தேவதைகள் புஷ்பங்கள் தூவியதால் குங்குமம் திருமேனியில் இருக்கு!

தான் வேட்டையாடி வரும்போது திருமங்கையாழ்வார் வந்து தன் பொருட்களை களவாடினார். அவரை திருத்தி, பின்னர் ஆபரணங்களை கருவூலத்தில் சேர்த்தோம். அப்போது பார்த்தால் கணையாழி தொலைந்து இருக்கு! ஆகையாலே தான் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்றுக் கொண்டு தன்னை உள்ளே அழைக்கச் சொல்லி பெருமான் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-2:
கணையாழி மோதிரம் காணாமல் போனது மெய்யல்ல. தாங்கள் அதிகாலையில் கிளம்பி உறையூர் சென்று அங்கு நாச்சியாருடன் சேர்த்தி கண்டருளிய தடயங்கள் இவை. இந்த பொய்களை ஏற்க முடியாததால், நேற்று எழுந்தருளிய இடத்திற்கே இன்றும் செல்லலாம் என்று நாச்சியார் அருளிச்செய்த பரிகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -3
நாம் உறையூரை கண்ணாலும் கண்டதில்லை காதாலும் கேட்டதில்லை!
யாரோ சிலர் சொன்னதை நம்பி தன்னை அவமானம் செய்கிறீர். ஆகவே தான் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்று உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

இதை அறிந்து தான் ஆண்டாள் பாடினால் போலும்

"ஏலாப் பொய்கள் உறைப்பான இங்கே போதக் கண்டீரே"

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-3:
ஏழாம் திருநாள் அன்று இங்கு எழுந்தருளிய போது நாங்கள் செய்த உபசாரங்களை சரியாக ஏற்றுக் கொள்ளாமல், தாங்கள் மிகவும் அசதியாக இருந்தீர். நாங்கள் பதறிப்போய் தங்கள் திருமேனிக்கு என்ன ஆயிற்று என்று தங்கள் அந்தரங்க பரிஜனங்களிடம் விசாரித்ததில் தாங்கள் உறையூர் சென்று வந்த விஷயம் அறிந்தோம்! ஆகையாலே தாங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -4:
இந்த சந்தேகங்கள் தீர தான் சில பிரமாணங்கள் செய்து தருகிறோம்.

கடலில் முழுகுகிறோம்
அக்னிப்பிரவேசம் செய்கிறோம்
பாம்பு குடத்தில் கை இடுகிறோம்
இப்படிப்பட்ட பிரமாணங்களை ஏற்று உள்ளே அழைக்க சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-4:
கடலில் முழுகுகிறோம் என்று சொல்ல வந்தீரே!!

பிரளய காலத்தில் சகலத்தையும் வயிற்றில் வைத்து ஒரு ஆலிலையில் துயின்ற உமக்கு சமுத்திரத்திலே முழுகுவது அருமையா?

அக்னி பிரவேசம் செய்கிறேன் என்று சொல்ல வந்தீரே!!

பிரம்மாவின் வேள்வியில் ஆவிர்பவித்த உமக்கு அக்னி சுடுமோ?

பாம்புக் குளத்தில் கட்டுகிறோம் என்று சொல்ல வந்தீரே!!

திருவனந்த் ஆழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருக்கிற உமக்கு பாம்பு குடத்தில் கைவிட்டால், பாம்பு கடிக்குமா?

இப்படிபட்ட பிரமாணங்களை ஏற்கும் இடத்திற்கு செல்லவும் என்று நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -5:
நாம் சொல்லும் பிரமாணங்களை பரிகாசம் செய்து, சற்றும் இறக்கம் வராமல் கோபத்தில் – "கண்கள் சிவந்து இருக்கு!" "திருமுகம் கருத்து இருக்கு!" இப்படி இருந்தால் நமக்கு என்ன கதி இருக்கிறது?

அழகிய மணவாளன் தாயார் சன்னதி வாசலில் தள்ளுப்பட்டு கொண்டிருக்கிறார் என்ற அவமானம் தங்களுக்கே!! எனவே தன்னை அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-5:
தாம் ஆண்டுக்கு ஒருமுறை இப்படி வழிமாறி சென்று இங்கு மீண்டும் வந்து பிரமாணங்கள் செய்வதை பொறுக்க மாட்டோம். நம்மாழ்வார் வந்து மங்களமாக சொன்னதால் பொறுத்தோம்! பொறுத்தோம்!! பொறுத்தோம்!!!
பெருமாளை உள்ளே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம். 

பெருமாளின் மாலை, சந்தனம், சால்வை ஆகியவை தாயாருக்கு கொடுக்கப்படும். தாயாரிடம் அனைவருக்கும், பெருமாளிடம் பண்டாரிக்கும் விண்ணப்பம் செய்ததற்காக மரியாதை வழங்கப்படும்.

முதல் ஏகாந்தம்: பெருமாள் பல்லக்கில் தாயாரை பார்த்தபடி நேராக எழுந்தருள்வார். ஏகாந்தத்தில் நாயனம் சற்று நேரம் வாசிக்கப்பட்டு பின்னர் முதல் ஏகாந்த தளிகைகள் சமர்ப்பிக்கப்படும்.

பெருமாளும் தாயாரும் சேர்த்தியில் நமக்கு சேவை சாதிப்பார்கள்

இரவு சின்ன பெருமாள் கொள்ளிடத்திற்கு சென்று தீர்த்தவாரி கண்டு, பின்னர் தாயார் பெருமாளுடன் சேர்த்து எழுந்தருளுவார்.

ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய கோஷ்டி
ஸ்வாமி இராமானுஜர் இதே பங்குனி உத்திர நாளில் சேர்த்தியில் சரணாகதி அனுஷ்டித்தார். கத்யத்ரயம் சொல்லி இருவரிடம் சரணாகதிஅடைந்தார். இதற்காக கத்ய த்ரயம் பாராயணம் செய்யப்படும். இதன் பின்னர் இரண்டாவது ஏகாந்தம் நடைபெறும்

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் நடைபெறும் திருமஞ்சனம்
திருமஞ்சன நேரத்தில் வசந்தனுக்கு அருளப்பாடு ஆகும். அதன் பின்னர் 18 முறை பெருமாளுக்கும், தாயாருக்கும் ஈரவாடை (வஸ்திரம்) மாற்றி திருமஞ்சனம் நடைபெறும். உடையவர் திருக்கோஷ்டியூருக்கு ரகசியங்களை அறிய 18 முறை நடந்ததை எடுத்துக் காட்டுவதற்காக, இந்த திருமணத்தில் 18 முறை ஈரவாடை மாற்றப்படுகிறது.

இதன் பின்னர் மூன்றாவது ஏகாந்தம் முடிந்து தாயார் உள்ளே செல்ல பெருமாள் பிரிய மனமில்லாமல், தாயார் சன்னதி வாசலில் சற்று நேரம் நின்று பின்னர் கோரததிர்க்கு எழுந்தருளுவார்.

Tuesday, April 8, 2025

shulba sutram of Katyayana - Sanskrit essay

🌸 *कात्यायन शुल्बसूत्रम्।।*🌸

शुक्ल यजुर्वेदस्येकमेव शुल्बसूत्रं कात्यायनसुल्बसूत्रं सर्वत्र प्रसिद्धम्। प्रायेण अध्ययनक्रमे अस्यैव शुल्बस्य महत्वं दृश्यते। अस्य भागद्वयमस्ति सूत्रभाग:, कारिका भागश्च। सूत्रभागे षट् कण्डिका: सन्ति। अस्य प्रथमो भाष्यकार: कर्काचार्य: विद्यते। कर्काचार्यस्य भाष्ये चत्वारिंशत् कारिका: कारिका भागे सन्ति तत्रैव द्वितीयो भाष्यकार: महीधरो राजते। महीधरस्य भाष्ये त्रितत्वारिंशत् कारिका: सन्ति। तत्रैव। विद्याधर शर्मगौडमहोदयस्य टीकायां एकोन चत्वारिंशत् कारिका: पठिता:। सर्वेषु व्याख्याकारेषु प्रख्यातयशा: श्रीरामवाजपेयी महोदयो बभूव। श्रीरामवाजपेयी नैमिषारण्य वास्तव्य: आसीत्। कर्कभाष्ये वार्तिकं लिलेख वाजपेयी महोदय:। अस्य पितुर्नाम सूर्यदास: माता विशालाक्षी, गुरोर्नाम विद्याकर: हरिस्वामी च आसीत्। महीधर: अनन्तरं भाष्यं चकार अस्य भाष्यस्य नाम विवरणभाष्यं विद्यते। अन्ते विद्याधर शर्मण: वृत्ति: वर्तते। कात्यायन शुल्बसूत्रस्य प्रथमायां कण्डिकायां दिक्साधनं विचार्य वेदे: श्रोण्यंशयो: स्थानं प्रोक्तम्। तथा च प्राग्वंशनिर्णय:, सदोनिर्णय:, गार्हपत्याहवनीयदक्षिणाग्नीनाञ्च स्थानं निरुपितम्। द्वितीयायां कण्डिकायां रथमात्री--पैतृमेधिकी--उत्तर वेदीनाञ्चावयवानां सोदाहरणं विवेचनं प्राप्यते।

*वशिष्ठ व्यास*

Saturday, April 5, 2025

Pre requisite for performing upanayana


🕉️

*என் மகனின் உபநயனத்தின் போது காயத்ரி மந்திர உபதேசத்தை (பிரம்மோபதேசம்) கொடுக்க நான் உண்மையில் தகுதியானவனா? தகுதி மற்றும் தீர்வைக் கண்டறிய முழுமையாகப் படியுங்கள்!*

நமஸ்காரம்

தொடர்ந்து தண்ணீர் செலுத்தாமல் இருந்தால் செடி வாடுவது போல, நமக்கு உபதேசம் என்று சொல்லப்படும் மந்திரத்தைத் திரும்பத் திரும்ப ஜபிக்காமல் இருந்தால், அது சக்தியற்று, பலனில்லாமல், பூஜ்ஜிய பலனைத் தரும். இதன் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன்?

ஒரு பையனுக்கு உபநயனம் நடக்கப்போகிறது என்றும் பையனுடைய தந்தை அவனுக்கு உபதேசம் செய்யப்போகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். அவர் (தந்தை) தனது சிறு வயதில் தனது சொந்த உபநயனத்திற்கு பிறகு, சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள முறையான முறைகளில் சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரி மந்திர ஜபம் செய்ததில்லை என்று வைத்துக்கொள்வோம். இதனால் காயத்ரி மந்திரோபதேசத்தை மகனுக்குக் கொடுக்கும் தகுதியை இழக்கிறார். எப்படி சார்ஜ் ஆகாத பேட்டரிக்கு முதன் முதலாக சார்ஜ் செய்த பிறகு அதனால் மின்னோட்டத்தை/கரன்ட் அனுப்ப முடியாதோ, அதே போல சிறுவயதில் உபநயனத்தின் போது உபதேசமாக எடுத்துக் கொள்ளப்படும் மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்காமல் இருந்தால் சக்தியற்றதாகிவிடும். அப்படியானால் எந்த அதிகாரமும்/தகுதியும் இல்லாத தந்தை எப்படி தன் மகனுக்கு உபதேசத்தைக் கொடுக்க முடியும்?

வேத ரிஷிகள் மிகவும் கருணை உடையவர்கள். மேற்கூறியவற்றை உணர்ந்து இது போன்று வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை முன்மொழிந்துள்ளனர்.

காயத்ரி மந்திரத்தின் விதை உங்கள் உபநயனத்தின் போது உங்கள் காதில் பிரம்மோபதேசம் (காயத்ரி உபதேசம்) மூலம் விதைக்கப்படுகிறது (இது ஒரு இரகசிய மந்திரம், எனவே இது காதில் மட்டுமே ஒலிக்கப்படுகிறது). துரதிர்ஷ்டவசமாக இன்று பல பேரும் மூலை முடுக்கிலும் இந்த மந்திரத்தை தாங்கள் விரும்பும் வழியில் ஒலிக்கிறார்கள். இது சாஸ்திரங்களுக்கு முற்றிலும் எதிரானது. ஒருவர் பல வருடங்களாக சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரி ஜபம் ஆகியவற்றை தினமும் செய்யாதிருந்தால் காயத்ரி மந்திரம் எனும் விதை செயலற்றதாகிவிடும், ஆனால் அழிந்திருக்காது. காயத்ரி மந்திரத்தை நம் விருப்பப்படி எங்கும், எந்த இடத்திலும், பேருந்து / ரயில் / நடைபயிற்சி போன்றவற்றில் ஜபிக்க முடியாது. நமது ரிஷிகள் குறிப்பிட்டது போல், ஜபிப்பதற்கு அதன் சொந்த விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன.
*மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைக்கான தீர்வுகள் பின்வருமாறு:*

1. உங்கள் மகனின் உபநயன தேதிக்கு முடிந்தவரை பல மாதங்கள்/நாட்கள் முன்னதாக சந்தியாவந்தனம் / காயத்ரி ஜபம் செய்யத்தொடங்குங்கள். அப்பொழுதுதான் உங்களுக்குள் மந்திரத்தின் சக்தி அதிகரித்து, அதை உங்கள் மகனுக்கு அளிக்க முடியும். நமது ரிஷிகள் மூலம் கொடுக்கப்பட்ட காயத்ரி ஜபம் மற்றும் சந்தியாவந்தன விதிமுறைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றுங்கள். உங்கள் மகனின் உபநயனத்திற்கு சில பல மாதங்கள்/நாட்களுக்கு முன்பே, முதலில் இருவேளை காலையிலும் மாலையிலும் செய்யத்தொடங்கி பின்பு முக்காலமும் செய்யுங்கள். உங்கள் மகனுக்கு மந்திரோபதேசத்தைக் கொடுப்பதற்கும், உங்களுக்குள் இருக்கும் மந்திரத்தின் விதையை செயலற்ற நிலையில் இருந்து மீண்டும் உயிர்ப்பிப்பதற்கும், காயத்ரி மந்திரத்தின் சக்தியை உங்களுக்குள் ஏற்றிக்கொள்ளுங்கள்.

2. மகனின் உபநயனத்திற்கு முன் தந்தை, தனது பிரம்மோபதேச யோக்யத சித்திக்கு ( *காயத்ரி உபதேச யோக்யத சித்தி* ) *குறைந்தது 12,000 காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்* என்று தர்ம சாஸ்திரம் குறிப்பிடுகிறது. இந்த 12,000 ஜபங்கள், அவர் சந்தியாவந்தனத்தின் போது செய்ததற்குள் அடங்காமல் கூடுதலாக ஜபிக்க வேண்டும். இந்த 12,000 ஜபங்களை சில நாட்கள்/மாதங்கள் முன்பிலிருந்து தொடங்கி பகுதிகளாக செய்யலாம். காயத்ரி உபதேச யோக்யதா சித்திக்கான ஒரு சிறப்பு சங்கல்பத்துடன் சந்தியாவந்தனம் செய்த பிறகு இந்த கூடுதல் ஜபங்களை ஜபிக்க வேண்டும்.(இதில் ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்). இதை சீக்கிரமாக அதாவது உபநயனத்திற்கு சில மாதங்களுக்கு முன் தொடங்கினால், அது உங்களுக்கு எளிதாக இருக்கும். மேலும், காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் இருப்பதால், இந்த சிறப்பு கூடுதல் காயத்ரி ஜபத்தை 24,000 ஆக அதிகரித்து ஜபிக்க முடிந்தால் நல்லது. குறிப்பாக வாழ்க்கையில் முறையாக சந்தியாவந்தனம் செய்யாதவர்கள் 12000 அல்லாமல் 24000 ஜபங்கள் செய்தால் அதிக புண்ணியங்கள் உண்டாகும். சாஸ்திரங்களின்படி குறைந்தபட்சம் 12000 கூடுதல் காயத்ரி ஜபம் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

3. உபநயனத்திற்கு முன், தந்தை மற்றும் மகன் இருவரும் " *கிரிச்சரம்* " எனப்படும் வழிமுறையை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள், இது ஒரு வகையான "ப்ராயச்சித்தம்" (பரிகாரம்) ஆகும். இந்த முறை மகனுக்கு சற்று கடினம் ஆகையால் தந்தை செய்ய முயற்சிக்க வேண்டும். இந்த கடுமையான கிரிச்சர முறைக்கு பதிலாக (பிரத்யமணாயம்- ஆக) மகனின் உபநயனத்திற்கு முன், ஒரு வேத பிராமணருக்கு கோ-தானம் (பசு தானம்) மற்றும் பிராமண போஜனம் (வேத பிராமணர்களுக்கு உணவளித்தல்) போன்றவற்றைச் செய்யலாம் என தர்ம சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

4. *நினைவில் கொள்ளுங்கள் - உங்கள் மகனின் உபநயனத்திற்குப் பிறகு, நீங்கள் சந்தியாவந்தனம் செய்யாவிட்டால், அவன் சந்தியாவந்தனம் செய்ய மாட்டான். நீங்கள் உங்கள் மகனுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும், மற்றும் நித்யகர்மாவின் சிறப்புகளை (பிராமணர்களின் தினசரி கடமைகளை) மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.* அதற்குப் பதிலாக அதைத் தவிர்க்கவும் அல்லது மகன் மட்டுமே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது *ஒரு பெற்றோராக, உபநயனத்திற்குப் பிறகு நம் குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும் மற்றும் நித்யகர்மாவில் எந்த சமரசத்தையும் அனுமதிக்கக்கூடாது. உங்கள் மகன் சிறுவயதில் அதன் முக்கியத்துவத்தை உணர மாட்டான். ஆனால் அவன் வளர்ந்தவுடன் சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரி ஜபம் செய்ய வைத்ததற்கு நன்றி சொல்வான். முறையாக ஜபம் செய்துகொண்டு இருந்தால், காயத்ரி தேவி அவரை வாழ்நாள் முழுவதும், எல்லா முயற்சிகளிலும் பாதுகாத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை அளிப்பார்.*

*சிறுவனை காயத்ரி உபதேசத்தில் துவக்கி வைக்கும் உபநயனம் போன்ற மிக மிக உயர்ந்த வேத கர்மாவை சாதாரணமாகவோ அல்லது இது மற்றொரு சடங்கு என்று நினைத்துக் கொண்டு அதை ஒரு சம்பிரதாயமாக கடந்து போகவோ கூடாது. சிறுவனின் முழு எதிர்கால வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு முறையாக உபநயன கர்மா செய்வதும், பிறகு முறையாக சந்தியாவந்தனம் செய்வதும் மிக மிக முக்கியப்பங்கு வகிக்கிறது. இது தவறுவதால் தெய்வ அனுக்கிரஹம் இல்லாமல் சிறுவன் தனது வாழ்க்கையில் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறான். நமது ரிஷிகளாலும் வேதங்களாலும் ஆயிரகக்கணக்கான பக்கங்களளில் கூறப்பட்டடுள்ள மிக சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசமாக இன்று பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதனை அன்றைய நாள் மாலையிலிருந்தே அல்லது மறுநாளிலிருந்தே செய்ய நிறுத்தினால் உபநயனம் மற்றும் மந்திரோபதேசத்தால் என்ன பயன்? துரதிர்ஷ்டவசமாக இன்று பலரும் காயத்ரி மந்திரம் மற்றும் அதன் பிரயோகத்தின் மதிப்பு, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என்ன அற்புதங்களைச் செய்யும் என்பதை உணரவில்லை. இவ்வாறு உணராமல் இருந்தால் உபநயனம் என்பது மற்றுமொரு விளம்பர நிகழ்ச்சியாகவும், பொதுமக்கள் மற்றும் உறவினர்களுடன் கூடும் குடும்ப கூட்டமுமாகவு மே இருக்கும், அவ்வளவுதான்.*

வேத கோஷம் தற்போதைய உலகில் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் மிக முக்கியமான தர்ம சாஸ்திர விதிகளை மக்களுக்கு கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை உணராததால் மக்கள் தாங்கள் துன்பப்படும்போது, பிரச்சனையிலிருந்து விடுபட பல்வேறு வழிகளில் அடைக்கலம் தேடி, தங்கள் பிரச்சனையில் இருந்து விடுபட பரிகாரம் தேடி பெரும் தொகையை செலவிடுகிறார்கள்.

வேத கோஷம் வேதம் மற்றும் நித்யகர்மானுஷ்டானம் பற்றிய தொடர் வகுப்புகளை நடத்துகிறது. உபநயன மந்திரார்த்தம் (மந்திரங்களின் பொருள்) பற்றிய வகுப்புகளையும் நடத்துகிறது. மேலும் தந்தைகள் தங்கள் மகனின் உபநயனம் செய்ய சரியான வழியில் வழிகாட்டுகிறோம். உங்களுக்கு ஏதேனும் விபரம் அல்லது உதவி தேவைப்பட்டால் vedaghosham@gmail.com- இல் எங்களைத் தொடர்பு கொள்ளவும்

நமஸ்காரம்

🕉️

Science and religion

சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - - #சுஜாதா

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், "வயசானா உனக்கே #புரியும். 

புரியும்போது ...
கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!" 

இந்தப் பதில் இன்னும் குழப்பும்.  

அப்பா....
 பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும். 

"நீ ஏதோ டபாய்க்கிற.!" என்பேன்.

"நீ #சயன்ஸ் படிக்கிற, 
அதனால் இதை எல்லாம் கேட்கிற. 
நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்", என்பார். 

அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும், 
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார், 

அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது, "நிறைய #அறிவு கொடு என்று வேண்டிக்கோ", என்பார்.  

இவை எல்லாம் ....
எனக்குப் புரிந்ததே கிடையாது. 

சின்ன வயதில் 
அவர் சொன்னது ...

சில வருடங்கள் முன் ....
புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது. 

புளி டப்பாவைத் திறந்தபோது,  
அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது.
 
 ஏர்-டைட் ...டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது.!  

அதற்குள்....
 பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன்.  

நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா.?" என்றார்கள்.

 தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று ...
மேலும் ....
பலமாகச் சொறிந்துகொண்டேன்.  

ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள். 

 குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன். 

 எப்படி?யொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும்.? என்று யோசித்தேன். 

மீண்டும் குழப்பம்.  

கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பதே தெரியாமல் இருக்க, ....

தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்.?

 பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு ...

நரசிம்மருக்கு ...யார் ?
தாய் என்று புரிந்துகொள்ள முடியுமா.? 

இந்தக் கேள்விகளுக்கு 
ஆழ்வார் பாசுரங்களையும் 
ஸ்வாமி தேசிகனையும் நாடினேன்.  

ஸ்வாமி தேசிகன். ..
 நரசிம்மர் தூணிலிருந்து வந்தார், 

அதனால்
அவருடைய தாய் ....
அந்தத் தூண் தான் என்கிறார்.  

தேசிகன் கூறிய பிறகு
 அதை மறுத்துப் பேச முடியுமா.? 

(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ ?

அதே போல் 
ஆழ்வார்கள் 
ஆசாரியர்கள் எது செய்தாலும் ....

அதில் 
தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும். 

ஆசாரியன் கூறிய பிறகு
 அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம். 

வள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்கிறார். 

 இதற்குப் பொருள், "எந்தப் பொருளை யார் சொன்னாலும்,
 அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு". 

அதாவது 
பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. 

ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்து அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும்.  

எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்துகொள்வதே அறிவு என்கிறார் நம்மாழ்வார்.  

கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள்பற்றிப் பேசுகிறேன் என்று ...

அவர்களின் 
பி.எச்.டியை வைத்துக்கொண்டு ...

கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

நம் சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனை அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.  

நம் அறிவு என்பது
 எவ்வளவு சின்னது என்று ....

ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிறேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré,

 "சிந்தனைப் பரிசோதனை" என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார்.  

இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது. 

அதனால் ....?
நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள் :

இன்று தூங்கி ...நாளை எழுந்துகொள்ளும்போது ....

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும்...

உங்கள் அப்பா, அம்மா,  
நாய்குட்டி, 

வீடு, கோயில், செடி, 
 தட்டு, அரிசி,  

பேனா, பென்சில், சட்டை,  
அணுக்கள், நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில், 

ஏன்,?
 நீங்கள் என....

உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே பெரிதாகிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

மறுநாள் காலை 
நீங்கள் எழுந்த பிறகு ...

எல்லாம் பெரிசாகிவிட்டது என்று 
உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றால்...?

முடியாது என்கிறார் Jules henri. 
அவ்வளவு தான் நம் அறிவு.

சாதாரணமாக இதையே #அளக்க முடியாதபோது ....

பெருமாளை ...
இப்படித்தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.

ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.

- திருப்பாணாழ்வார்

எழு உலகையும் உண்டு 
ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று சொல்லும்போது ....

உலகை உண்ட பிறகு 
அந்த இலையில் எப்படிப் படுத்துக்கொள்வான் என்று கேள்வி எழும்.

கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்தபோது அதில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம். 

அதே போல 
மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்.

( உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் ....
நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.! )

எப்படி என்று ...இதை எல்லாம் ....யோசிக்கவே முடியாது.  
முயற்சியும் செய்யாதீர்கள்.! 

இது தான் 
அகடிதகடனா சாமர்த்தியம். 
(லிஃப்கோ தமிழ் அகராதியில் - "perfectly accomplishing even the impossible" என்று கொடுத்திருக்கிறார்கள். ). 

நம் இரைப்பையில்
 'ஹைட்ரோ குளோரிக் அமிலம்' இருக்கிறது என்றால் நம்புவீர்களா.? 

அதை
 ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும். 

அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்.! 

ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது. 

 நம் வயிறு, 
ஆசிட் வைத்திருக்கும் ரவுடி.!  

இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை.?  

பேன் தலையில் இருந்தால் ...
அந்த 'இச்சிங்' உணர்வை நாம் எப்படி உணர்கிறோம்.

 இச்சிங்கோ, டச்சிங்கோ
 நாம் அதை உணர்வது எப்படி.?
 உணர்த்துவது யார்.? என்று கேட்கும் கேள்விகளுக்கு ....

விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது. 

நாம் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும். 

 தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டிவிடுகிறோம்.

 'உண்டியே உடையே உகந்து ஓடும்' என்று ஆழ்வார் சொல்லுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறோம்.  

ஆனால் ....
என்றாவது ?

எனக்கு 'அறிவு இல்லை, 
அது வேண்டும்', என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா.? கேட்டதில்லை, 

காரணம்
 நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.

#யாதுமாகி நிற்பவன் அவனே...

அவனின்றி ஓர் அணுவும் அசையாது