Saturday, July 4, 2026

Birth of shrAddham

ச்ராத்தம் உண்டானது எப்படி?
உலகில் முதலில் ச்ராத்தம் உண்டானது எப்படி என்று அறிந்துகொள்வது அவசியம்.

அது ஸ்ரீமன் மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் 138வது அத்யாயத்தில் பரக்க நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

அதைப்பற்றி ‘ஸ்ரீவேதாந்த தீபிகை’யில் அடியேன் படித்த ஒரு கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ப்ருஹ்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மஹரிஷி உண்டானார். அந்த மஹரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் மஹா தபஸ்வியாயிருந்து ஒரு ஆயிரம் வருஷம் தபஸ் செய்துகொண்டிருக்கையில் ஒரு நாள் அவன் காலமாய்விட்டது. நிமி புத்ர சோகத்தால் மனவருத்தமுற்று மிகவும் வருந்தி அவனுடைய சரீரத்தை ஸம்ஸ்காரம் செய்து தனக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். சதுர்த்தசியன்று அநேக த்ரவ்யங்களைச் சேர்த்து அன்று ராத்திரி துக்கப்பட்டே நித்ரையை அடைந்தார். விடியற்காலத்தில் எழுந்து என்ன செய்கிறது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் மனதில் சில பிராஹ்மணர்களை அழைத்து, போஜனம் செய்வித்தால் தன் பிள்ளையின் ஆத்மாவுக்குத் திருப்தி உண்டாகும் என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று. அதை யோஜித்துப் பார்க்க மிகவும் சரி என்று அவர் மனதில் பட்டது. பொழுது விடிந்ததும் அமாவாஸ்யை அன்று தன் பிள்ளைக்கு எந்த எந்த பதார்த்தங்களிலிஷ்டமோ அவை அவ்வளவையும் சேகரித்து அவைகளை அவனுக்கு இஷ்டமானபடி பாகம் செய்வித்து, ஏழு ப்ராஹ்மணர்களை அழைத்து, அவர்களுக்கு அர்க்ய, பாத்ய, ஆசமநீயம் கொடுத்து, தர்ப்பாஸனத்தில் அவர்களை உட்காரவைத்து, ச்யாமாகான்னத்தையும் இன்னும் ஸித்தம் பண்ணிவைத்த எல்லா பதார்த்தங்களையும் உப்பு இல்லாமல் போஜன பாத்ரத்தில் பரிமாறி அமுது செய்வித்து, அவர்களுக்குப் பக்கத்தில் தர்ப்பத்தைத் தெற்குநுனியாக வைத்து அதன்மேல் (தன் பிள்ளையின் கோத்ரத்தையும் பெயரையும் சொல்லி) அன்னத்தால் செய்த பிண்டங்களை வைத்துத் தத்தம் செய்தார். எல்லாம் முடிந்து ப்ராஹ்மணர்களும் அவரவர்கள் க்ருஹங்களுக்குப் போனபிறகு, நிமிக்கு இதுவரை ஒருவராலும் அனுஷ்டிக்கப்படாத கார்யத்தைச் செய்தோமே, அது சரியாகுமோ ஆகாதோ என்று பச்சாத்தாபமும், ருஷிகள் இதைக்கண்டு தன்னைச் சபித்துவிட்டால் என்ன செய்கிறது என்று பயமுமுண்டாயிற்று. இந்தத் துக்கத்தால் மிகவும் வருத்தமுற்று, தன் வம்சகூடஸ்தரான அத்ரிமஹரிஷியை த்யானம் செய்தார். இந்த வருத்தத்தை அறிந்த அத்ரிமஹரிஷியும் உடனே நிமி முன் ப்ரத்யக்ஷமாகி, புத்ர சோகத்தால் வருந்தும் நிமிக்கு ஸமாதானம் பண்ணி ஆதரவான வார்த்தைகளைச் சொல்லி, “ உன் மனஸில் தோன்றி, பிறகு நீ அனுஷ்டித்த கர்மாவானது பித்ருக்களுக்குச் செய்த யாகம்; நீ பயப்படாதே, நீ தபோதனன் அல்லவா, இறந்துபோனவர்களுக்கு இவ்விதம் கர்மா செய்யவேண்டுமென்று

உன் மனஸில் தோன்றி, பிறகு நீ அனுஷ்டித்த கர்மாவானது பித்ருக்களுக்குச் செய்த யாகம்; நீ பயப்படாதே, நீ தபோதனன் அல்லவா, இறந்துபோனவர்களுக்கு இவ்விதம் கர்மா செய்யவேண்டுமென்று ப்ருஹ்மாவாலேயே வெகுகாலத்துக்கு முன் ஸங்கல்பிக்கப் பட்டிருந்தது. நீ செய்த காரியம் ப்ருஹ்மாவால் முன்னமே ஸங்கல்பிக்கப் பட்டதுதான். உன் தபோபலத்தால் உன் மனதில் தோன்றும்படி அவர் அனுக்ரஹித்தார். ஆகையால் நீ செய்தாய். ப்ருஹ்மாவைத்தவிர எவர் இந்தக் கர்மாவை ஏற்படுத்த முடியும்? ச்ரத்தையுடன் செய்கிற கர்மாவாகையால் இதற்கு ச்ராத்தம் என்று பெயர்” என்று சொல்லி, பிறகு அவருக்கு ச்ராத்தம் செய்யும் ப்ரகாரத்தை விஸ்தாரமாய் உபதேசித்துவிட்டு ப்ருஹ்மலோகம் போய்ச்சேர்ந்தார். பிறகு நிமி அதேமாதிரி அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவரைப் பார்த்து மற்ற எல்லா ருஷிகளும் செய்யத் தொடங்கினார்கள். அதுமுதல் ச்ராத்தம் உலகத்தில் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

பிறகு, பித்ருக்கள் என்பவர்கள் எவர்? ஏன் அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது? என்று விசாரிப்போம். முன் ஒரு காலத்தில் ப்ருஹ்மா தேவர்களை ஸ்ருஷ்டித்து நீங்கள் என்னை யஜ்ஞங்களால் ஆராதித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். இவர்கள் ப்ருஹ்மா கட்டளையிட்டபடி செய்யாமல் தங்களுடைய இந்திரியங்களை த்ருப்தி செய்துகொண்டு காமபரவசர்களாகி ஜ்ஞான சூன்யர்களாகி விட்டார்கள். இவர்களுடைய நடத்தையைப் பார்த்து ப்ருஹ்மாவும் ஜ்ஞானமில்லாமல் போகக்கடவீர்களென்று சபித்துவிட்டார். அவர்களிருந்த லோகமும் இவர்களைப்போல் ஜ்ஞானமில்லாமல் ஆகிவிட்டது. இந்தத் தேவர்கள் பிறகு வெட்கத்துடன் ப்ருஹ்மாவைச் சரணாகதி செய்தார்கள். அவர் நீங்கள் சரியான நடத்தை யில்லாதவர்களாயிருந்ததால் தபோதனர்களான உங்களுடைய பிள்ளைகளிடம் போய் ப்ராயச்சித்தம் செய்து ஜ்ஞாநோபதேசம் செய்துகொள்ளுங்கள் என்று உத்தரவு செய்தார். தேவர்களும் அப்படியே அவர்களுடைய பிள்ளைகளை ப்ராயச்சித்தம் செய்யும்படி வேண்டிக்கொள்ள, அவர்கள் தங்களுடைய தகப்பனார்களான தேவர்களுக்கு ப்ராயச்சித்தமும் ஜ்ஞாநோபதேசமும் செய்து, “பிள்ளைகளே, போங்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். தேவர்கள், தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் புத்திரர்கள் என்று சொன்னதால் கோபங்கொண்டவர்களாய் ப்ருஹ்மாவிடம் முறையிட, அவரும் “அவர்கள் செய்ததும் சரிதான். நீங்கள் அவர்களுடைய சரீரத்தை உண்டாக்கினீர்கள். அதனால் நீங்கள் அவர்களுக்குப் பிதாக்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு ஜ்ஞானத்தைக் கொடுத்ததால் அவர்கள் உங்களுக்குப் பிதாக்கள் . ஆகையால் அவர்கள் சொன்னது சரிதான் . இதுமுதல் அவர்கள் ஜ்ஞானத்தால் உங்களுக்குப் பிதாவானதால் அவர்கள் பித்ருக்கள் என்று வழங்கப்படட்டும். நீங்கள் தேவர்களென்று வழங்கப்படுவீர்கள்” என்று ஆணையிட்டார். அதுமுதல் அவர்கள் பித்ருக்களானார்கள்.

இந்தப் பித்ருக்கள் ஏழுகணங்கள் அல்லது ஸமூஹங்கள். அவர்களில் நான்கு கணத்தார் உருவை உடையவர்கள். மூன்று கணங்கள் மூர்த்தி இல்லாதவர்கள். ஸுகாலர்கள், ஆங்கிரஸர்கள், ஸுஸ்வதர்கள், ஸோமபர்கள் என்று நாலு கணத்தார்களும் மூர்த்தியையுடையவர்கள். இவர்கள் கர்மத்தால் பிறந்தவர்கள். வைராஜர்கள், அக்னிஷ்வரத்தர்கள், பர்ஹிஷதர்கள் என்று மூன்று கணத்தார்கள் மூர்த்தி இல்லாதவர்கள். தங்களுடைய தர்மபூத ஜ்ஞானத்தால் விபுவாயுமிருப்பார்கள். அணுவிலேயும் ப்ரவேசிக்கச் சக்தி உள்ளவர்கள். தங்களுக்கு இஷ்டமான ரூபங்களை எடுத்துக்கொண்டு ஸஞ்சரிக்கிறவர்கள். இவர்கள் வஸிக்குமிடத்துக்கு ஸநாதன லோகம் என்று பெயர். அதற்குப் பித்ரு லோகம் என்றும் பெயர். இவர்களுக்குப் பித்ருகணங்கள் என்று பெயர்.

நம்மால், நம்முடைய இறந்துபோன பிதா, பாட்டன், ப்ரபிதாமகன் முதலானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஹவிஸ்ஸு எப்படி அவர்களுக்குப் போய்ச்சேருகிறது? என்றால் இறந்துபோன பந்துக்களுக்கு நேராகப் போவதில்லை. அவைகள் பித்ருக்களுக்குப் போகின்றன. அவர்கள் தங்களுடைய யோகபலத்தால் பூர்புவஸ்ஸுவ: என்னும் பெயருள்ள மூன்று லோகங்களிலிருக்கும் தேவ கந்தர்வ மனுஷ்யர்கள் முதலிய எல்லாப் பூதங்களுக்கும் அவர்கள் எவ்விடத்திலும் எந்த ரூபத்திலிருந்தாலும் அவர்களுக்குச் சேரும்படி செய்கிறார்கள். பீஷ்மர் அவருடைய தகப்பனாருடைய ச்ராத்தம் செய்து பிண்டதானம் செய்யும்போது பூமியைப்பிளந்துகொண்டு ஒருகை வெளியில் வந்து பிண்டத்தைக் கொடு என்று கேட்டது. அதில் அநேக ஆபரணங்களும் கேயூரங்களும் அணியப்பட்டிருந்தன. அந்தக்கை அவருடைய தகப்பனாருடையது. அவர் செத்துப்போவதற்கு முன்னிருந்ததுபோலவே இருந்தது. பீஷ்மரும் இந்தக் கல்பத்தில் பிதா கையில் பிண்டதானத்தைச் செய்வது சரியில்லையென்று நினைத்து பூமியில் தர்ப்பத்தைப் போட்டு அதில் தத்தம் செய்தார். தர்மம் தெரிந்து நடந்ததற்கு அவர் தகப்பனார் சந்தோஷப்பட்டு அவருக்கு ஸ்வச்சந்த மரணம் உண்டாகட்டும் என்று அனுக்ரஹம் செய்து மறைந்துவிட்டார். ஆகையால் நாம் செய்யும் பிண்டதானமும், ஹவிஸ்ஸும், மேற்கூறிய பித்ரு தேவதைகளுக்குப்போய் அவர்களால் இறந்துபோன பந்துக்களான ஜீவாத்மாக்களுக்குச் சேர்ப்பிக்கப் படுகின்றன. இந்த ரஹஸ்யம் மார்க்கண்டேயருக்கு ஸநத்குமாரரால் சொல்லப்பட்டது என்று ஹரிவம்சத்தில் முதல் பர்வத்தில் 16, 17வது அத்யாயங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

நிமி ஏற்படுத்தின ப்ரகாரம் எல்லாரும் ச்ராத்தம் செய்ததும், பித்ருக்கள் ஏராளமான ஹவிஸ்ஸை புஜித்து அஜீர்ணமுண்டானவர்களாய் சந்த்ரனிடம் முறையிட்டார்கள். அவர் ப்ருஹ்மாவிடம் போகும்படி சொல்ல, பித்ருக்கள் ப்ருஹ்மாவிடம் போய்த் தங்களுடைய கஷ்டத்தை நிவிர்த்திக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அவர் அக்னி பகவான் உங்கள் குறையை நிவர்த்திப்பார் என்றார். பிறகு பித்ருக்கள் அக்னியை வேண்ட, அவரும் இனி ஹவிஸ்ஸுக்களை என்னுடன் புஜியுங்கள், அதிகமான பாகங்களை நான் சாப்பிட்டுவிடுகின்றேன் என்று சொன்னார். அதுமுதல் அக்னியில் ஹவிஸ்ஸானது ஹோமம் செய்யப்பட்டு வருகிறது.

ஆதலால் ச்ராத்தமென்பது ஆதிகாலத்திலேயே வேதங்களான ப்ரமாணங்களைக் கொண்டு, ப்ருஹ்மாவால் அறியப்பட்டு, அவருடைய ப்ரபௌத்ரனாகிய நிமிக்குத் தபோமஹிமையால் ப்ரகாசித்து, அதை, இது ப்ருஹ்மாவினுடைய இஷ்டத்தை அனுஸரித்ததுதான் என்று அந்த நிமி தெரிந்து, தான் அனுஷ்டித்து, பிறரை அனுஷ்டிக்கும்படி செய்த முக்யமான கார்யம். இதில் ப்ராஹ்மணர்களுக்குக் கொடுக்கப்படுகின்றனவும் அக்னியில் ஹோமம் செய்யப்படுகின்றனவுமான த்ரவ்யங்கள் எல்லாம் பித்ருகணங்களென்று சொல்லப்படும் தேவதைகளின் வழியாக நம்முடைய இறந்துபோன பந்துக்களுக்கு எந்த லோகத்திலும் எந்த ஜன்மத்திலும் போய்ச்சேர்ந்து அவர்களுக்கு த்ருப்தியை உண்டாக்குகிறதென்று சாஸ்த்ரங்களில் ஏற்பட்ட வ்யவஸ்தை. இது இப்படிநிற்க, இறந்துபோன பந்துக்கள் ப்ரபன்னர்களாய் மோக்ஷத்தை அடைந்தவர்களாய் இருந்தால் அவர்களுக்குப் பசி, தாஹம் முதலியது ஒன்றுமில்லாமலிருந்தபோதிலும் சாஸ்த்ரங்களில் ஏற்பட்ட மரியாதையை ஒருவனும் குலைக்கக்கூடாது என்று பகவத்கீதை பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முதலியவைகளில் சொல்லப்படுகிறபடியினால் பகவானுடைய ஆராதனமாக எண்ணி ச்ராத்தங்களைச் செய்யவேண்டியது. அதனால் பகவான் தானே த்ருப்தியடைகிறார். அப்படிச் செய்யாதவர்களுக்குப் பொதுவான சாஸ்த்ர மரியாதையைக் குலைப்பதினாலுண்டாகும் பகவானுடைய கோபமும் அதனால் சிக்ஷையும் வருமென்று பூர்வாசார்யர்களுடைய தீர்மானம்.

Friday, July 3, 2026

Sanskrit text-to-speech that understands vruttam

https://prathosh.in/vagdhenu/

Sanskrit text-to-speech that understands vruttam

Ramayan by asukavi saarvabhauma srinidhi

*உயிரை காத்த ராமன் உண்மை சம்பவம் -* 👆👇

1943ம் வருடம். கும்பகோணத்தை அடுத்த திருவிடை மருதூரில் ‘ஆசுகவி சார்வபௌமர்’ என்று போற்றப் படும் வடமொழிக் கவிச் சக்கர வர்த்தியான வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி வாழ்ந்து வந்தார். 

அவர் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் ராமனின் மேல் பேரன்பும் பக்தியும் கொண்டவர். அம்மை நோயால் பலர் மடிந்து வந்த அக்கால கட்டத்தில் ஸ்ரீநிதி சுவாமி க்கும் அம்மை நோய் ஏற்பட்டது. 

மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்த்து விட்டு அவரது மனைவி யிடம், “இன்று இரவைத் தாண்டு வதே கடினம்! என்னை மன்னித்து விடுங்கள்!” என்று சொல்லி விட்டுச் சென்றார். 

அன்று இரவு அவரது வாழ்க்கையின் இறுதி இரவு என்றே நிச்சயித்த அந்த இரவில் ஸ்ரீநிதி சுவாமி தன் இஷ்ட தெய்வமான ராமனிடம் வேண்டினார்.
“ராமா! என் உயிர் போவதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. ஏனெனில் உடலை நீத்தவுடன் நான் வைகுந்தத்தை அடையப் போவது நிச்சயம். 

ஆனால், முப்பதே வயதில் நான் மாண்டு போனால் என் தெய்வமான உனக்கன்றோ அவப்பெயர் ஏற்படும்! ராமன் ஏன் அந்த அடியவனைக் காக்கவில்லை என உலகம் உன்னைப் பழித்துப் பேசுமே! அதனால் உன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள விழைந்தால் என்னுயிரைக் காப்பாற்று!” என்று சொன்ன அவர், அன்று இரவு நான்கே ஸ்லோகங்களில் முழு ராமாயணத் தையும் எழுதினார். 

முதல் ஸ்லோகத் தில் ராமன் பிறந்தது முதல் சீதா கல்யாணம் வரை, இரண்டாம் ஸ்லோகத்தில் பரசுராமரை வீழ்த்தியது முதல் சுக்ரீவ பட்டா பிஷேகம் வரை, 

மூன்றாம் ஸ்லோகத்தில் அநுமனின் தூது முதல் ராவண வதம் வரை, இறுதி ஸ்லோகத்தில் ராம பட்டாபிஷேகத்தைசொல்லி, *“அந்த ஜானகி ராமன் எப்போதும் என்னுடன் இருக்கையில் நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்!”* என்று சொல்லி நிறைவு செய்தார். 

அடுத்த நாள் காலை அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவரது மனைவியை அழைத்து, “அம்மா! என்ன அதிசயம்! இவர் நன்கு குணமடையத் தொடங்கி விட்டார்!” என்றார். ராமனின் அருளால் வெகு சில நாட்களிலேயே அவர் பூரணமாகக் குணமடைந்தார். மஞ்சு ராமாயணம் என்றும் மந்தஸ்மித ராமாயணம் என்றும் மேலும் இரண்டு ராமாயணங்கள் எழுதினார். 

1986-ம் வருடம் இந்தியக் குடியரசுத் தலைவர் அவருக்கு வடமொழி இலக்கியத்துக்கான சிறப்பு விருதும் வழங்கினார். சுமார் 90 வயது வரை நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து பற்பல ஸ்தோத்திரங் களை இயற்றினார். 

அம்மை நோயால் தவித்த அந்த இரவில் அவர் எழுதிய நான்கு ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணம் “ *சதுஸ்ஸ்லோகீ ராமாயணம்”* என்றழைக்கப் பட்டது. 

அதைப் படித்த சிலர் அவரிடம் கேட்டார்களாம், “நீங்கள் எழுதிய இந்தச் சிறிய ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திச் சென்றதை எழுதாமல் விட்டு விட்டீர்களே!” என்று. 

அதற்கு ஸ்ரீநிதி சுவாமி, “நான் காரணத்தோடு தான் அதை எழுதாமல் விட்டேன். அன்று அம்மை நோயால் உயிர்போகும் அளவு வேதனை யுடன் இந்நூலை எழுதினேன். 

அச்சமயத்தில், சீதையை ராவணன் அபகரித்து சென்றான் என எழுதினால், அந்த துக்கத்திலேயே என் உயிர் பிரிந்திருக்கும். 

அதனால் அதை எழுதாமல் விட்டு விட்டு, இலங்கை யில் சீதை இருப்பதை அநுமன் மூலம் ராமன் அறிந்து கொண்டான் என மறைமுகமாக ராவணன் சீதையை அபகரித்த செய்தியைத் தெரிவித்தேன்!” என்று கூறினார். “ 

*வில் பிடித்த ராமன் விஷயமாக, வில்லூரில் பிறந்த கவிஞன் எழுதிய இந்த நான்கு ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தைப் படிப்பவர்களை  நோய் ஒன்றும் செய்யாது!”* என்று ஐந்தாவதாக ஒரு ஸ்லோகத் தையும் அவர் இணைத்தார். 

அந்த 5 ஸ்லோகங் களையும்  படிப்பவர்களை எந்த கொடிய நோயிலிருந்து ராமன் காத்தருள்வான்.

ராம ஜனனம் முதல் ஸீதா கல்யாணம் வரை

ராம: கௌசிகம் அன்வகாத் பதிமுனேர் வாசா வதீத் தாடகாம்
ஸத்ரம் தஸ்ய ரரக்ஷ தேன கதிதா: ஸுச்ராவதாஸ்தா: கதா: கத் வாதோ மிதிலாம் விதாய த்ருஷதம் யோஷிந்மணிம் ஸந்முநே:
பங்க்த்வா தூர்ஜடி சாபமாப ரமணீம் ஸீதாபிதானாமபி ||

பரசுராமரை வெல்வது முதல் சுக்ரீவ பட்டாபி ஷேகம் வரை

ஸீதாயா: கரலாலனேன ஸ க்ருதி ஜித்வா முனிம் பார்கவம்
ஸாகேதம் தரஸா ப்ரவிச்ய ஜனனீம் ஆனந்தயன் மத்யமாம் |
ஆஸீத் யோ விபினே சதுர்தச ஸமா ரக்ஷன் முனீன் ஆனதான்
ரக்ஷஸ்ஸங்கம் அதாவதீத் அகடயத் ராஜ்யம் ச ஸூர்யாத்மஜே ||

அநுமன் தூது செல்வது முதல் ராவண வதம் வரை

வாயோராத்ம புவா ததோ ஹநூமதா பாதோதி பார ஸ்திதாம்
ப்ராணேப்யோபி கரீயஸீம் ப்ரியதமாம் விஜ்ஞாய ரக்ஷோ ஹ்ருதாம் |
ஸேதும் வாரிநிதௌ விதாய விவிதானந்தாக வித்வம்ஸனம்
லங்காயாம் விலுலாவ ராவண சிரோ ப்ருந்தானி வந்தேய தம் ||

சீதா ராம பட்டாபிஷேகம்

ஆருஹ்யாத விபீஷணேன ஸுபகம் பக்த்யா ஸமா வேதிதம்
மான்ய புஷ்பகம் அஞ்ஜஸா நிஜபுரீம் ஆகத்ய மித்ரைர் வ்ருத: |
ஆனந்தாய வஸிஷ்ட காச்யப முகை: பட்டாபிஷிக் தோ விபு:
தஸ்மின் ஜாக்ரதி ஜானகீ ப்ரியதமே கா நாம பீதிர் மம ||

இந்த ஸ்தோத்திரத்தின் பலன்

தநுஷ்கர சதுச்ச்லோகீ தநுஷ்புர கவீரிதா |
மாரீகாதர சித்தானாம் மாரீதிமிதராம் திசேத் ||

சீதையும் பரதனும் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணிய போது, ஆஞ்ஜ நேயர் பாடிய ராமாயணம் அவர்களின் உயிரைக் காத்தது என்பதை நாம் அறிவோம். ஆனால் திரேதா யுகத்தில் மட்டுமல்ல, கலியுகத்திலும் ராமாயணம் உயிரைக் காக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். 

24000 ஸ்லோகங்கள் முழுவதுமாகக் கூடச் சொல்ல வேண்டாம். நான்கே ஸ்லோகங்களில் சொன்னாலும் ராமாயணம் உயிர் காக்கும் மருந்தாக விளங்கும் என்பதை ஸ்ரீநிதி சுவாமியின் உயிரை ராமன் காத்த இச்சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது.

எனவே தன் அடியார்கள் விரும்பும் பலன் எதுவாக இருந்தாலும்  இம்மைக்கான பலனாக இருந்தாலும் சரி, மறுமைக்கானதாக இருந்தாலும் சரி  அவற்றைத் தந்தருள்பவராகத் திருமால் விளங்குவதால் ‘ஸர்வாதிஹி என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 100-வது திருநாமம். “ஸர்வாதயே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தர்மத்துக்கு விரோதமின்றி விரும்பும் அனைத்துப் பலன்களையும் திருமால் தந்தருள்வார்.

இவர் பிரபல உபன்யாசகர் ஶ்ரீ கருணாகராச் சாரியார் அவர்களின் தந்தை என்பது விசேஷமான தகவல் !!!

Thursday, May 21, 2026

Deer and Advaita - yoga vashishta

पाशबद्धोऽपि हरिणो यथा तृणमनुस्मरन् ।
न बोधयति दुःखं स्वं तथैव विषयेषु जनः ॥

यथा मृगः स्वच्छरसं तृणानि
भुङ्क्ते न जानाति च पाशबन्धम् ।
तथा नरः शब्दरसादिसक्तो
न पश्यति स्वात्मविनाशहेतुम् ॥
Uploaded Image

Saturday, May 2, 2026

Glory of Brahmins - various quotes

*🌼 निम्नलिखित वचनोंके अनुसार सलिङ्गसंन्यासमें जन्मकर्मसंस्कारसे विशुद्ध, वर्णाश्रमधर्मपालक, श्रौतस्मार्त्तधर्मनिष्ठ ब्राह्मणोंको ही प्रशस्त अधिकार प्राप्त है :*

'ब्राह्मणाः पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति' 
(बृहदारण्यकोपनिषत् ३.५.१),

'ब्राह्मणानामेवाधिकारो व्युत्थाने' 
(शाङ्करभाष्य-बृहदारण्यकोपनिषत् ३.५.१), 

'पारिव्राज्यदर्शनाच्च' 
(शाङ्करभाष्य-बृहदारण्यकोपनिषत् १.४.१५),

'एतमात्मानं विदित्वा प्रव्रजेयुरेव ब्राह्मणाः' 
(शाङ्करभाष्य-बृहदारण्यकोपनिषत् ४.४.२२),

'इतरवणपिक्षया वा यावज्जीवश्रुतिः। न हि क्षत्रियवैश्ययोः पारिव्राज्यप्रतिपत्तिरस्ति।' 
(शाङ्करभाष्य-बृहदारण्यकोपनिषत् ४.५.१५),

'यस्यैतानि सुगुप्तानि जिह्वोपस्थोदरं करः।
संन्यसेदकृतोद्वाहो ब्राह्मणो ब्रह्मचर्यवान्॥'
(नारदपरिव्राजकोपनिषत् ३.१४),

'ब्राह्मणः परिव्रज्य' 
(नारदपरिव्राजकोपनिषत् ३.८६),

'सन्यासिनं द्विजं दृष्ट्वा स्थानाच्चलति भास्करः।
एष मे मण्डलं भित्त्वा परं ब्रह्माधिगच्छति॥'
(सन्यासोपनिषत् ६),

'ब्राह्मणः प्रव्रजेद् गृहात्'
(मनुस्मृति ६.३८),

'पारिव्रज्याश्रमप्राप्तिर्बाह्मणस्यैव चोदिता'
(विष्णुस्मृति ५.१३),

'ब्राह्मणस्याश्रमाश्चत्वारः, क्षत्रियस्याद्यास्त्रयः, वैशस्य आद्यौ'
(वैखानसगृह्यसूत्र १.१०-१२),

'मुखजानामयं धर्मो वैष्णवं लिङ्गधारणम्।
बाहुजातोरुजातानां नायं धर्मो विधीयते॥'
(देवल / दत्तात्रेय),

'ब्राह्मणस्य तु चत्वारस्त्वाश्रमा विहिताः प्रभो।
वर्णास्तान् नानुवर्तन्ते त्रयो भारतसत्तम॥'
(महाभारत-शान्तिपर्व ६२.२),

'चरितब्रह्मचर्यस्य ब्राह्मणस्य विशाम्पते।
भैक्ष्यचर्यास्वधीकारः प्रशस्त इह मोक्षिणः॥'
(महाभारत-शान्तिपर्व ६१.७),

'तस्माद् धर्मो विहितो ब्राह्मणस्य दमः शौचमार्जवं चापि राजन्। तथा विप्रस्याश्रमाः सर्व एव पुरा राजन् ब्राह्मणा वै निसृष्टाः।'
(महाभारत-शान्तिपर्व ६३.७),

'चतुराश्रम्यधर्माश्च वेदधर्माश्च पार्थिव।
ब्राह्मणेनानुगन्तव्या नान्यो विद्यात् कदाचन॥'
(महाभारत-शान्तिपर्व ६५.९),

'गार्हस्थ्यं ब्रह्मचर्यं च वानप्रस्थं त्रयाश्रमाः।
क्षत्रियस्यापि कथिता ये चाचारा द्विजस्य हि॥
वैखानसत्वं गार्हस्थ्यमाश्रमद्वितयं विशः।
गार्हस्थ्यमुत्तमं त्वेकं शूद्रस्य क्षणदाचर॥'
(वामनमहापुराण १४.११९-१२०),

'ब्रह्मचर्यं च गार्हस्थ्यं वानप्रस्थं तथैव च।
प्रोक्ता वेदेषु संन्यास आश्रमा वेदवादिभिः॥
ब्राह्मणानां क्रमेणैते मताश्चत्वार आश्रमाः।
क्षत्रियाणां च वैश्यानां संन्यासो न प्रविद्यते॥
गार्हस्थ्यमेव शूद्राणामाश्रमः परिकीर्तितः।
अन्त्यजानां तदेवापि ज्ञातव्यं विबुधैः सदा॥'
(मुद्गलपुराण ३.१८.२-४),

'चत्वार आश्रमाश्चैते ब्राह्मणस्य सदैव हि।
अन्येषामन्त्यहीनाश्च क्षत्रविट्शूद्रकर्मणाम्॥
वर्तयन्त्योऽन्यथा दण्ड्या या वर्णाश्रमजातयः।'
(शुक्रनीति ४.३४०, ३४२)

Tuesday, April 21, 2026

Sanskrit tongue twister-1 ghaTA ghata ghaTA bakO bakO

मेघा नाद घटा घटा घट घटा घाटा घटा दुर्घटा, मण्डूकस्य बको बको बकबको बाको बको बूबको । विद्युज्ज्योति चकीमकी चकमकी चाकीमकी दृश्यते, इत्थं नन्दकिशोर-गोपवनिता-वाचस्पतिः पातु माम् ॥

मेघानां नादेन घटानां संघट्टः इव शब्दः जायते,
वर्षाकाले मण्डूकानां “बको‑बको” इति कूजनं दृश्यते,
विद्युतः च चमकमानाः ज्योतयः प्रकटन्ति।
एवं नानाविधैः नादैः अलङ्कृतं जगत् दर्शयन्
नन्दकिशोरनामकः वाग्वैभवसम्पन्नः कविः
(अथवा तद्भिराराधितः शिवः) माम् अवतु।





Who is beautiful - Lord Narasimha

*பெருமாள்களில் அழகன் யார்???*
*நரஸிம்மமா,*

*ராகவ சிம்ஹமமா*,

*யாதவ சிம்ஹமமா*

*ஆழ்வாரின் தீர்ப்பு........*

ॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐ

*ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம்.*

1). *மத்ஸ்ய,*
2). *கூர்ம,*
3). *வராஹ,*
4). *நரசிம்ம,*
5). *வாமன,*
6). *பரசுராம,*
7). *ஸ்ரீராம,*
😎. *பலராம,*
9). *கிருஷ்ண,*
10). *கல்கி*........

அவதாரங்களை வரவழைத்தார்.

முதல் சுற்றில் ............
*மத்ஸ்ய, கூர்ம, வராஹ*
மூன்று அவதாரங்களும் முறையே .............
*மீன், ஆமை, பன்றி* ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார். 

*நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை.* 

நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.

இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார். 

“மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு விட்டுப் பெரிய காலால், மூவுலகையும் அளந்தவர் நீங்கள். 

அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. 

எனவே உங்களை நிராகரிக்கிறேன்!”, என்றார் திருமழிசைப் பிரான்.

பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார். 

பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது. 

யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார். 

தம்பிக்காக பலராமன் 
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,
“நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார். 

இறுதியாக, .............

*நரசிம்மன்,* 

*ராமன்,* 

*கண்ணன்,*

மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.

மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான், *“நரசிம்மர்தான் அழகு!”* என்று தீர்ப்பளித்தார். 

“ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால், மனிதனாகவே 
வாழ்ந்ததால் ஒரு வண்ணானின் பேச்சுக்காக தன் தேவியையே துறந்தார்.

அதனால் ஆழ்வாரால் நிராகரிக்கப்பட்டார்

கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை. 

ஆனால், அந்த கோபிகைகளையும் விரக வேதனையில் தவிக்க விட்டுச் சென்று விட்டார்.

ஆனால், ஆபத்தில்
யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள். 

பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள், நரசிம்மர். 

எனவே அவர்தான் அழகு!” என்று கூறினார்.

இருவரும்
ராகவ யாதவ சிம்ஹம் என்ற பெயர்களையே சூட்டிக் கொண்டாலும்,
செயலாலே நரஸிம்ஹனே வென்றான்.

பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும், அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம். 

ஏனெனில், நமக்குத் துன்பங்கள் நேரும்போது அவன் திருவடிகளைத்தான் நினைத்துக் கொள்கிறோம். 

துயரறு சுடரடியான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கின்றன!!

எனவே அவைதான் 
மிகவும் அழகு. 

அவ்வாறே, ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர்.

*இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய, நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.*

*அழகியான் தானே* 
*அரி உருவன் தானே*
*பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே*
*மீனாய் உயிரளிக்கும் வித்து.*

- என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார்.

அதனால்தான், அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை. 

*ஆனால், நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார்.*

அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு *‘ஸ்ரீமான்’* என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது. 

*ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.*

மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்? 

*ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டு களிக்க வேண்டுமெனில், திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.*

*மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்?*

அதனால்தான்... 

*ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.*

படித்ததில் பிடித்தது.

Monday, April 20, 2026

AI-Powered Sanskrit Vyākaraṇa Assistant

A Sanskrit AI based app

AI-Powered Vyākaraṇa Assistant
Receive precise, context-aware explanations of complex grammatical rules and derivations instantly.

Saturday, March 14, 2026

கும்பாபிஷேகம் பற்றிய அரிய செய்திகள் !!!

 
கோவில் கும்பாபிஷேகம் அதிகம் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது.
 
கும்பாபிஷேகத்தின் வகைகள்.

1. ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.

2. அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3. புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4. அந்தரிதம் – கோவில் உள்ளே ஏதேனும் தகாதன நேர்ந்துவிடின் அதன் பொருட்டு செய்யப்படும் பரிகார பூஜை.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் அவசியமான பூஜைகள் பற்றிய விளக்கம்.

1. அனுக்ஞை – (அனுமதி வாங்குதல்) செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் (புரோகிதர்) தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

2. சங்கல்பம் – இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

3. பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.

4. கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

5. வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

6. பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

7. பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு செய்யப்படும் பரிகாரம்}

8. மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில் இருந்து மண் எடுத்து அந்த பள்ளத்தில் அபிஷேகம் செய்தல். { ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் சாந்தி பரிகாரம்}

9. அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

10. ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} பூஜைகளை செய்யும் ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் எவ்வித இடையூறுகளும் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.

11. கும்ப அலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

12. கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

13. யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

14. சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் சூரிய சந்திரனை வழிபடுதல்.

15. மண்டப பூஜை – அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

16. பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

17.நாடி சந்தானம் – யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். {இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இணைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}

18. விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் பூஜை செய்வது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது

19. பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

20. ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

21. அஷ்டபந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

22. பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

23. கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

24. மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

25. மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில.

ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைத்தல்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2 காலம், 4 காலம், 8காலம், 12 காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

Friday, March 13, 2026

Valmiki Ramayana in 3 languages - Sanskrit, English & Tamil

To buy trilingual Valmiki Ramayanam
procedure
1. One set of books (3 volumes) costs INR 2000
2. ⁠for every two sets bought. The third set will be given free
3. ⁠The money may be paid by GPay or PayTM to phone number 9443352151(V Gopalakrishnan)
4. ⁠The payment should be followed by the senders name, postal address, phone number and email I'd if any through WhatsApp or email.
5. ⁠if stocks are available the books will be sent by courier immediately and the time taken will be based on courier delivery time to the said address only
6. ⁠if stocks are not available the books will be freshly printed and sent. It may take 2 to 3 weeks including printing and courier delivery time

Friday, February 27, 2026

Appaya dikshitar

https://youiandkrishna.org/2026/02/appaiya-deekshidhar-2-j-k-sivan/ அப்பைய தீக்ஷிதர்-2 நங்கநல்லூர் J K SIVAN

காஞ்சிபுரத்தில் ரத்னகேட தீக்ஷிதரை வாதம் செய்து வெல்ல காசியிலிருந்து சில சமஸ்க்ரித வித்வான்கள் சாஸ்திரிகள், பண்டிதர்கள் அவர் வீட்டுக்கு வந்தார்கள். விடிகாலை நாலரை மணிக்கே எழுந்து தீக்ஷிதர் மனைவி வாசலில் பெருக்கி சாணி தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அக்ரஹாரத்தில் பளிச்சென்று எல்லா வீட்டு வாசலில் கோலம் காணப்படும் நேரம்.
''ரத்னகேட தீக்ஷிதர் இருக்கிறாரா அம்மா?'' என்று அவளைக் கேட்டார்கள்.
அந்த பத்னி தெய்வத்துக்கு அவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று பளிச்சென்று தெரிந்து விட்டது. தீக்ஷிதருடன் பழகி அவர் ஞானத்தில் சிறிது பங்காக அவளிடம் சேர்ந்திருக்காதா?
அவர்கள் போக்கு, மூட்டை முடிச்சுடன் வந்திருப்பது, அவர்களுக்குள் சமஸ்க்ரிதத்தில் பேசிக் கொள்வது எல்லாம் அவளுக்கும் புரிந்தது . 'ஓஹோ, இவர்கள் நமது கணவருடன் தர்க்க சாஸ்த்ர விவாதத்துக்கு வந்திருக்கிறார்கள்'' என்று புரிந்து விட்டது. அவளது சாஹித்யம் வந்திருந்த பண்டிதர்களின் அளவுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை என்று அவள் அறிந்து கொண்டால். வாசலில் சாணி , கோமயம், தெளிக்க ஜலம் எடுக்கும் முறையை அனுசரித்து, தாளம் தப்பாமல் ஒரு ஸ்லோகத்தை அவர்களின் கேள்விக்கு பதிலாக அளித்தாள் .

विपश्चितामपि मेधा रत्नकेतदीक्षिते, सपत्नजित्य यत्नतो विवादकेलिमागते । बृहस्पतिः प्रजल्पति प्रसरपति क्व सर्पराट् षडाननो नताननः चतुर्मुखश्च दुर्मुखः ॥
vipaścitām api medhā ratnaketa-dīkṣite sapatna-jitya yatnato vivāda-kelim āgate | bṛhaspatiḥ prajalpati prasarapati kva sarparāṭ
ṣaḍānano natānanaś caturmukhaś ca durmukhaḥ ||
'விபச்சிதாம பச்சி மே தா ரத்ன கேட தீக்ஷிதே ஸபத்னஜித்ய யத்னதோ விவாத கேலிமாகதே  
ப்ரஹஸ்பதி ; ப்ரஜல்பதி ப்ரஸர்பதிக்வ ஸர்பராட் ஷடானனோ நதானனச் சதுர்முகச்ச துர்முக;''

தீக்ஷிதர் மனைவி ஸ்லோகமாக என்ன சொல்கிறாள்?
''சகல பண்டிதர்களிலும், சிறந்தவரான ரத்நகேட திக்ஷிதர் விவாதம் என்ற விளையாட்டில் ஈடுபடும்போது எதிர்த்தவர்கள் எவரானாலும் எளிதில் ஜெயிக்கப்படுகிறார்கள். ப்ரஹஸ்பதி தேவரும் சமாளிக்கமுடியாமல் உளறிக் கொட்டுகிறார். ஆதிசேஷன் நைசாக தப்பி ஓடுகிறார். ஷண்முகன் ஆறுதலைகளையும் ஆட்டி தொங்கவிட்டுக்கொண்டு விழிக்கிறார். சதுர்முக ப்ரம்ம நான்கு தலைகளையும் மாற்றி மாற்றி சொறிந்துக்கொண்டு யோசிக்கிறார்.''

 சாணி தெளித்துக்கொண்டே தீக்ஷிதர் மனைவி அழகாக தாளம் தப்பாமல் இந்த ஸ்லோகத்தை சிறிதும் யோசிக்காமல் பதிலாக அளித்ததைக் கேட்ட காசி பண்டிதர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அடேயப்பா, ரத்ன கேட தீக்ஷிதரின் மனைவியே இப்படி திறமையுடன் சர்வ சாதாரணமாக ஸ்லோகம் சொல்லும் திறமை படைத்தவராக இருக்கும்போது தீக்ஷிதரின் திறமை எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும் என்று புரிகிறது.
தீக்ஷிதருடன் விவாதம் செய்து அவரை ஜெயிக்க எண்ணியதே பெரும் தவறு அவமானப்படாமல் பேசாமல் வந்தவழியே திரும்பிவிடுவது தான் புத்திசாலித்தனம் என்று தீர்மானித்து புத்திசாலிகளாக காசிக்கே திரும்பினார்கள் என்று ஒரு விஷயம் தீக்ஷிதரின் வித்வத் எப்படிப்பட்டது என்பதை தெரிவிக்கிறது.

தீக்ஷிதர் நிறைய நடந்தார். வேலூர், வேங்கடகிரி, தஞ்சாவூர், விஜயநகரம் எல்லா இடத்திலும் ராஜாக்கள் ஆதரவு. கௌரவம் மரியாதை. பரிசு. தர்க்க வாதங்க ளில் வெற்றி. சைவ மத பெருமைகளை வேத சித்தாந் தங் களை சென்ற இடம் எங்கும் எதிரொலித் தார்.

தீக்ஷிதரை தரிசிக்க நிறைய பக்தர்கள் வருவார்கள். பிரசாதம் போஜனம் அவர்களுக்கு உண்டு. ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பக்தர்கள் வந்து பந்தி பந்தியாக போஜனம் நடந்தது. சமையல் அறை யில் அன்னம் குறைந்து விட்டதே ? உள்ளே அரிசி இல்லை. கடையில் இருந்து வாங்கி சமைத்து பரிமாற நேரம் இல்லையே. 'சாப்பாடு இல்லை. போய் வாருங்கள்' என்று சொல்ல முடியுமா? விஷயம் தீக்ஷிதர் காதை எட்டியது. நேராக சமையல் அறைக்கு வந்தார். நிலைமை தெரிந்து கொண்டு அன்ன லக்ஷ்மியை வணங்கினார் . ஸ்தோத்ரம் உச்சரித்தார்.

''இருக்கும் சாதத்தை இருக்கிறவா எல்லோருக்கும் பரிமாறுங்கள்" என்கிறார்.
அள்ள அள்ள குறையாமல் சாதம் பாத்திரத்தில் நிறைந்து கொண்டே இருந்தது. அன்னம் வைத்திருந்த தவலை அக்ஷய பாத்திரமாகவே மாறிவிட்டது. அன்ன பூரணி ஸ்துதிக்கு இவ்வளவு சக்தியா ?

தீக்ஷிதர் ஒரு முறை திருப்பதி சென்றபோது பாலாஜி வேங்கடேச பெருமாள் அவருக்கு சிவனாக காட்சி யளித்தார் என்று சொல்வதுண்டு.

தீக்ஷிதர் ஒரு சித்த புருஷர். சிவபக்தியில் தலைசிறந்து விளங்கிய அவருக்கு ஒரு சமயம் தன் பக்தி உண்மை தானா? அல்லது மேலுக்கு பக்தி செய்வதுபோல் நடிக்கிறோமா? என் ஆத்மா முழுதுமாக சிவனிடம் ஈடுபட்டிருக்கிறதா? என்று சந்தேகம் வந்துவிட்டது. தன்னை சுயபரீட்சைக்கு ஆட்படுத்திக்கொள்ளத் துணிந்தார். சீடா்களை அழைத்தாா்.என்னுடைய அந்திம காயத்தில் எனக்கு சிவ ஸ்மரணை எப்படி இருக்குமோ தெரியவில்லை. அதை உணர்வதற்காக நான் என் கையில் இருக்கும் ஊமத்தைச் சாற்றை குடிக்கப்போகி றேன். தன்னிலை மறந்து உன்மத்தம் ஆகிவிடுவேன். பைத்தியம் பிடிக்கலாம். அப்போது என் உடலிலே ,உள்ளத்திலே, உணா்விலே, பேச்சிலே ஏற்படும் மாற்றங்களை ஒன்று விடாமல் குறித்துக் கொள்ளுங் கள். ரெண்டு மூணு மணிக்கு அப்பறம் இதோ இந்த சீசாவில் இருக்கும் மாற்று மருந்தை எனக்கு கொடுங்கள். நான் பழைய நிலைக்கு வந்துவிடுவேன்''

ஊமத்தங்காய்களை அரைத்துக் குடித்தால் பித்து பிடித்துவிடும். பித்து பிடித்த நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பதைக் குறித்துக்கொண்டு, பிறகு மாற்று மருந்தைக் கொடுக்கவேண்டும் என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு ஊமத்தை விஷத்தைக் குடித்துவிட்டார்.

ஊமத்தஞ் சாறு தீக்ஷிதரை உன்மத்தராக்கியது. அப்பைய தீக்ஷிதா் குதித்தார், ஆடினாா் பாடினாா், உருண்டாா்,அழுதாா். எல்லாம் சிவனின் புகழைப் பாடிக்கொண்டே. ரெண்டு மூணு மணி நேரத்துக்கு பிறகு மாற்று மருந்தால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

''சிஷ்யர்களே, நான் சொன்னபடி எழுதி வைத்தீர்களா? என்னை மறந்த நிலையில் நான் எப்படி இருந்தேன்?''

'' ப்ரபோ, நீங்கள் முழுக்க முழுக்க சிவனின் புகழையே பாடி வழிபட்டீா்கள். அந்த ஸ்தோத்திரங்களை இதோ நாங்கள் எழுதி வைத்துள்ளோம்"

பரவசமடைந்து ''ஹர ஹர மஹாதேவா'' என உள்ளன்போடு சிவனை வணங்கினார் தீக்ஷிதர். உன்மத்த நிலையில் அவர் இயற்றியது " உன்மத்த பஞ்சாசத்,'' அல்லது ஆத்மாா்ப்பண ஸ்துதி " எனும் உள்ளத்தை உருக்கும் சிவபக்தி ப்ரவாஹ ஸ்லோகங் கள். அதில் 50 ஸ்லோகங்கள் உள்ளன. மூன்று முக்கிய ஸ்லோகங்களை இங்கே சொல்கிறேன்.

कस्ते बोद्धुं प्रभवति परं देवदेव प्रभावं यस्मादित्थं विविधरचना सृष्टिरेषा बभूव । भक्तिग्राह्यस्त्वमिह तदपि त्वामहं भक्तिमात्रात्
स्तोतुं वाञ्छाम्यतिमहदिदं साहसं मे सहस्व ॥ १॥

கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம் யஸ்மாதித்தம் விவிதரசநா ஸ்ருஷ்டிரேஷா பபூவ ।
பக்திக்ராஹ்யஸ்த்வமிஹ ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ ॥ 1॥

''பரமேஸ்வரா, தேவாதி தேவா, இந்த மாய லோக பிரபஞ்சத்தை உற்பத்தி பண்ணிய உன்னுடைய அபார மஹிமையை யாரால் விளக்கமுடியும்? அப்படி இருந்தும், பக்தியால் மட்டும் உன்னை அறிய முடியும் என்பதால் பக்தியால் உன்னை துதிக்க விரும்புகிறேன். என்னுடைய துணிச்சலை பொருத்தருள வேண்டும். . வேதம் உன்னை எந்த விதத்திலாவது ஸ்துதி செய்யும் படி என்னைத் தூண்டுகிறது.

ஆத்மார்ப்பணஸ்துதி என ஏன் பெயர்?

अद्यैव त्वत्पदनलिनयोरर्पयाम्यन्तरात्मन् आत्मानं मे सह परिकरैरद्रिकन्याधिनाथ । नाहं बोद्धुं शिव तव पदं न क्रिया योगचर्याः
कर्तुं शक्नोम्यनितरगतिः केवलं त्वां प्रपद्ये ॥ १५॥

அத்யைவ த்வத்பதநலிநயோரர்பயாம்யந்தராத்மந் ஆத்மாநம் மே ஸஹ பரிகரைரத்ரிகந்யாதிநாத ।
நாஹம் போத்தும் ஶிவ தவ பதம் ந க்ரியா யோகசர்யா: கர்தும் ஶக்நோம்யநிதரகதி: கேவலம் த்வாம் ப்ரபத்யே ॥ 15॥
ஹ்ருதய கமலத்தில் உறையும் பரமேஸ்வரா, அந்தர் யாமியே, இந்த க்ஷணமே உனது இரு பாதார விந்தங் களில் என் பரிவாரங்களோடு சேர்த்து என்னை அர்ப்பணிக்கிறேன். பரமேஸ்வரா, நீ எங்கிருக்கிறாய் என்று என்னால் அறிய முடியாது. எங்கும் இருப்பவன். கர்மாக்களை அவசியம் செய்யவேண்டியதை, செய்வ தற் கும் எனக்கு முடியவில்லை. வேறு வழியில்லா மல் உன் பாதார விந்தங்களை சரணடைந்து விட்டேன். அது தான் என்னால் முடியும். எல்லாம் நீயே, எல்லாம் உன் செயலே, எல்லாம் உன் உடைமையே,

आत्मार्पणस्तुतिरियं भगवन्निबद्धा यद्यप्यनन्यमनसा न मया तथापि । वाचापि केवलमयं शरणं वृणीते दीनो वराक इति रक्ष कृपानिधे माम् ॥ ५०॥

ஆத்மார்ப்பண ஸ்துதிரியம் பகவன் நிபத்தா யத்யப்யனன்ய மனஸா ந மயா ததாபி | வாசாபி கேவலமயம் சரணம் வ்ருணீதே தீனோ வராக இதி ரக்ஷ க்ருபாநிதே மாம் || 50 ||

இது கடைசி ஸ்லோகம். இதில் தீக்ஷிதர் என்ன சொல்கிறார் ;

'நான் ஏகாக்ரசித்தனாக இருந்து, மனதில் ஒரே எண்ண மாக பரமேஸ்வரனையே எண்ணி, இந்த ஆத்மார்ப் பண ஸ்துதியை இயற்றவில்லை. ஏதோ உன்மத்த நிலையில் என்னை இழந்து நான் பாடியவை என்றாலும் பரமேஸ்வரா நீ பிழை பொறுத்தருளும் சர்வேஸ்வரன், தயாநிதியே! ஸ்துதி ரூபமான வார்த் தைகளை (மன முருகாமல்) மட்டுமாவது சொல்லுகிறானே என்று கருணை புரிந்து என்னை ரக்ஷிப்பாயாக.

இன்னும் அப்பைய தீக்ஷிதர் பற்றி சொல்ல வேண்டி யவை நிறைய இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன்.

Monday, February 16, 2026

Where is Goddess Meenakshi?

ஸ்ரீ குருப்யோ நம :

 :

அவள் எங்கே இருக்கிறாள்?

மதுரையிலிருந்து சென்னை செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. விமானம் கிளம்பும் முன்பே துாங்கிவிட்டேன். சில நிமிடங்களில் துாக்கம் கலைந்தது. பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தாள்.
''மனதில் பெரிய கேள்வியை வைத்துக்கொண்டு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறாய்?''
திடுக்கிட்டு நிமிர்ந்தேன். 
பக்கத்து இருக்கைக்காரி பச்சைப்புடவைக்காரியாக மாறியிருந்தாள்.
''உன் கண்களுக்கு மட்டும்தான் தெரிவேன். உன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்.''

''தாயே மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், திருக்கடையூரில் அபிராமியாகவும் இருக்கிறீர்கள். 
நீங்கள் மிகவும் விரும்பி உறையும் இடம் என்ன?''

''முட்டாளே! நான் மதுரையிலும், காஞ்சியிலும், காசியிலும் இல்லை. மதுரை, காஞ்சி, காசி இவை எல்லாம் தான் என்னுள் இருக்கின்றன. நான் உலகத்தில் இல்லை. இந்த உலகம் தான் என்னுள் இருக்கிறது.''

''தாயே தத்துவம் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த இடம்?''

''வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவியடா நான்.''

''மீண்டும் தத்துவமா? பிடித்த இடம் என்னவென்று சொல்வீர்களா அதைவிட்டு விட்டு..''

''அங்கே நடக்கும் காட்சியைப் பார்''

இடம் மும்பை. ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் முன்னிலையில் ஒரு ஆறு வயதுச் சிறுமி அமர்ந்திருக்கிறாள். மறுநாள் அவளுக்கு ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 
அவளுடைய பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள்.

''பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லைம்மா. நீ எதுக்கும் கவலைப்படாத. நான் இருக்கேன். பாத்துக்கறேன்.''

''ஐயையே! நான் பயப்படல டாக்டர். எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.''

''சொல்லும்மா.''

''நீங்க என் இதயத்த திறந்து பாப்பீங்க இல்லையா?''

''ஆமாம்மா. இது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி. இதயத்தைத் திறந்து தான் செய்யணும்.. ஆனா உனக்கு வலிக்கவே வலிக்காது.''

'அதைப் பத்தி எனக்குப் பயமில்லை டாக்டர். எங்கம்மா தினமும் சாமி கும்பிடுவாங்க. ஒரு நாள் சாமி எங்க இருக்காருன்னு கேட்டேன். உன் இதயத்துக்குள்ள இருக்காருன்னு சொன்னாங்க. 
நீங்க என் இதயத்தைத் திறந்தா சாமியப் பாப்பீங்கல்ல? சாமி எப்படி இருக்காருன்னு எனக்குச் சொல்றீங்களா?''

திகைத்துப் போன அறுவை சிகிச்சை நிபுணர் சிறுமியை இறுக அணைத்துக்கொண்டார்.

மறுநாள் அதிகாலை. அறுவை சிகிச்சை தொடங்கியது. 
அவர் நினைத்ததைவிட சிக்கல்கள் அதிகமாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அறுவை சிகிச்சை தொடங்கி நாற்பத்தியைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இதயத்திற்குச் சென்று கொண்டிருந்த ரத்தம் நின்றுவிட்டது. இனிமேல் அந்தச் சிறுமி பிழைக்கமாட்டாள் என்று தோன்றியது... 
அறுவை சிகிச்சை செய்த இடத்தைத் தைத்தபின் சிறுமியின் உடலை அவளுடைய பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். சே, என்ன வாழ்க்கை இது!
அப்போதுதான் முதல் நாள் அந்தச் சிறுமி சொன்னது நினைவிற்கு வந்தது. தன் இதயத்திற்குள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாளே அவள்!
கழற்றத் தொடங்கிய முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டார். பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு இதயத்தைப் பார்த்துக் கைகூப்பினார்.
''இறைவா நீ இந்த இதயத்தில் இருக்கிறாய் என்று இந்தக் குழந்தை நம்புகிறது. இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். இனி இந்தக் குழந்தை உன் கையில். இவள் வாழ்வதும் சாவதும் உன் கையில். நான் கற்ற கல்வி, இத்தனை ஆண்டுகளில் பெற்ற திறமை அனைத்தையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். 
இந்தக் குழந்தை இனி உன்னுடையவள்.''
அவர் கண்களில் நீர்.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அலறினார்.
''டாக்டர் இதயம் நல்லாத் துடிக்க ஆரம்பிச்சிருச்சி. பாருங்க ரத்த அழுத்தம் கடகடன்னு ஏறுது.'' அறுவை சிகிச்சையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் நிபுணர். 
அதன்பின் நான்கரை மணி நேரம் சிகிச்சை தொடர்ந்தது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இப்போதெல்லாம் அந்த நிபுணர் கோயிலுக்குச் செல்வதில்லை. 

எப்போதெல்லாம் குருதியில் அமிழ்ந்திருக்கும் மனித இதயத்தைப் பார்க்கிறாரோ அப்போது எல்லாம் கைகூப்பி வேண்டிக்கொள்கிறார். ஒவ்வொரு முறையும் தன் கல்வி, திறமை அனைத்தையும் இறைவனின் திருவடி சமர்ப்பணம் செய்துவிட்டுப் பதட்டமில்லாமல் சிகிச்சை செய்கிறார்.

'இன்னும் பத்து நிமிடங்களில் விமானம் சென்னையில் தரையிறங்கும்' என்ற அறிவிப்பு வந்தது.

''இப்போது உனக்கே தெரியுமே, எனக்குப் பிடித்த இடம் எதுவென்று?''

''ஆம் தாயே. உங்கள் அன்பில் நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்கள்தான் சிறந்த திருக்கோவில்கள். 
'என் செயலாவது யாதும் இல்லை. எல்லாம் அவள் செயல்' என்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் அந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் போன்றவர்களின் திருக்கரங்களில் நீங்கள் ஜொலிக்கிறீர்கள்.

யாராவது அடுத்தவர்களுக்காக உருகிக் கண்ணீர் சிந்தினால் அந்த உப்புத் திரவத்தில் இந்த உமா மகேஸ்வரி இருப்பாள்.
''இந்தப் பாடத்தை என்றும் மறவாதே!''
விமானம் தரையைத் தொடும் சமயத்தில் பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டாள்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

ஸ்ரீ குருப்யோ நம :

Saturday, February 14, 2026

Valentine's Day

வாலன்டின்  தினம் – நங்கநல்லூர்  J K SIVAN 
இன்று பெப்ரவரி 14  வாலன்டின் காதலர் தினம். சுப்புலக்ஷ்மி  பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. மண்டையை குடைந்தது. எதிர் வீட்டு காமாக்ஷி மாமியிடம் கேட்டாள்."ஏண்டி காமு, இன்னிக்கு என்னடி விசேஷம்?."தெரியலே மாமி, சிறுசுகள் லவ் பண்ணலாமாம் . உலகம் பூரா அதுக்கு சரின்னு  கொண்டாடடறாளாம். எங்க   காம்ப்ளெக்ஸ்லேயும் அநேக சிறுசுகள் ஆணும் பொண்ணுமா அங்கேயும் இங்கேயும்  நடந்துண்டே பேசறது.  எதுக்கும்  பூமிலே  கால் பாவலே.    ஒண்ணையும்  கையிலே பிடிக்க முடியலே. ஆடறது ஓடறது.   தஸ்  புஸ் ன்னு  இங்கிலீஷ்லே  பேசிண்டே இருக்கு.  செல் போனும் கையுமா தனக்குத் தானே  பேசிண்டு  தானா சிரிச்சுக்கிறது. தலையை ஆட்டறது. கையை ஆட்டி என்னென்னவோ குசுகுசுன்னு பேசறது.   இப்போல்லாம்  ஒண்ணோடு ஒன்னு  நேரேயே  அந்த சின்ன டெலிபோனிலே  பார்த்துக்க முடியுமாம்.  நாலு பேர் பக்கத்திலே இருக்காளா ,  பார்க்கறாளா என்கிற  விவஸ்தை கூட இல்லாம டெலிபோனுக்கு முத்தம் கொடுக்கிறதோ  இல்லே.  அதிலே தெரிகிற  தாடிக்காரனுக்கு  முத்தமா?...   ஒண்ணுமே  புரியலே மாமி. இளவட்டங்கள் எல்லாமே  தாடியோடு  சுத்தறது.  சிலது ஜடாதாரியா இருக்கு.
''ஆமாண்டி  காமு,  உன் வாய்க்கு சக்கரை  தான் போடணும் காமு.  எனக்கு  ஒன்பது வயசிலே கல்யாணம்.எங்காத்துக்காரர்  சங்கமேஸ்வர மாமா  கட்டுக்குடுமியோடு, காதுலே  கடுக்கன்,வாயில் வெத்தலை கொதப்பிண்டு நெத்திலே பளிச்சுனு  விபூதி, கழுத்திலே  கௌடிசரடு உத்திராக்ஷம் வெத்து மார்பிலே  சந்தனம், பூணலோடு, எனக்கு ஜாம் ஜாம்னு  கல்யாணம் ஆச்சு. எங்காத்து மாமா கும்மோணம்காலேஜ் B A ....  என்ன அழகு என்ன அழகு போ.. இதுகளும்  இருக்கே. பீடைகள். அது சரி, இன்னிக்கு ஏதோ விஷேம்ங்கறாளே அது என்னடி?'' என கேட்டாள்  சுப்புலக்ஷ்மி பாட்டி.  'வாலன்டின் என்கிறவன் ரோமாபுரிலே ஒரு  துறவி. அவன் காலத்துக்கு முன்னாலே  அங்கே  லுபெற்காலியா ன்னு ஒரு பண்டிகை. அதிலே  ஆண்கள் நிர்வாணமா  ஒரு ஆட்டையோ நாயையோ வெட்டி பலிகொடுத்து  ஆட்டு தோலை உரிச்சு அந்த ரத்தத்தில் தோய்த்து  பெண்கள் மீது விளாசுவார்கள். இப்படிப்பண்ணா பெண்களுக்கு பிள்ளைப்பேறு சக்தி அதிகரிக்குமாம்.  அடப் பாவிகளா.  இதை அப்புறம் ஒரு ரோமாபுரி  போப்  கலசியஸ் என்கிறவர் வாலன்டின் தினம் என்று மாத்திட்டார். அதுக்கு பின்னாலேயும் ஒரு கதை.
ரோமாபுரி சக்ரவர்த்தி ஸர்வாதிகாரி  2ம் கிளாடியஸ் என்பவன் ராஜ்யத்தில் ஆண்கள்  அவனுடைய படையில் வேலை செய்யவேண்டும். கல்யாணமே பண்ணிக்கொள்ளக்கூடாது என்று ஆணையிட்டான்.  பிரம்மச்சாரி வீரர்களுக்கு சக்தி ஜாஸ்தி என்று நினைத்தான். ஆனால் அந்த ஊரில்  வாலன்டின் என்கிற ஒரு துறவி இருந்தார் அவர் அநேக பெண்களுக்கும் ஆண்களுக்கும் ரகஸ்யமாக  கல்யாணம் நிறைய பண்ணி வைத்தது  அந்த கொடூர  ராஜா காதில் விழுந்துவிட்டது. அப்புறம் என்ன.?  வாலன்டின் துறவிக்கு  தலை காணாமல் போய்விட்டது.
காலம் செல்லச்செல்ல  பாவம் அந்த வாலன்டின் துறவி என்று வெட்டப்பட்டாரோ அந்த தினம் (14.2.269)  14 பெப்ரவரி  ஒரு வாலன்டின் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதல்கள்  கல்யாணத்தில் முடியவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள்  வேண்டும், வாழ்த்தும், தினம். இன்று  சிகப்பு ரோஜாவுக்கு டிமாண்ட்.  அது காதலர் புஷ்பம் அல்லவா?அந்த காதல் கத்திரிக்காயை எல்லாம் விடு  காமு.  நா எனக்கு தெரிந்த காதல்  சமாச்சாரம் ஒன்று சொல்றேன் கேள்.  வேறு யார்?  கிருஷ்ணனை ருக்மணி காதலித்து கடிதம் அனுப்பின சமாச்சாரம் தான்.  இதில் ஒரு  வேடிக்கை. இந்த ருக்மணி காதல் கடிதத்தை ரஹஸ்யமாக எடுத்துக் கொண்டு சென்றதும்  ஒரு துறவி தான்.
ருக்மணியின் காதல் விஷயம் சுருக்கமாக சொல்லி அவள் கடிதத்தை  வெளியிடுகிறேன்.
மஹாராஜா பீஷ்மகர் என்பவருக்கு ருக்மி என்ற பிள்ளை, ருக்மிணி என்ற பெண். ருக்மி அசுரர் பலம் கொண்டவன். கிருஷ்ணனை வெறுப்பவன். அவன் ராஜாவாக செயல்பட்டான். தங்கை ருக்மிணியை நண்பன் கிருஷ்ணன் எதிரி சிசுபாலனுக்கு கல்யாணம் பண்ணிவைக்க ஏற்பாடு செய்துவிட்டான். ருக்மிணிக்கோ கிருஷ்ணன் பிரதாபங்கள் கேள்விப்பட்டு அவனையே கல்யாணம் பண்ணிக்க துடித்தாள். என்ன செய்யமுடியும்?  கல்யாண நாள் குறிச்சாச்சு. இன்னும்  ஒரு சில தினங்களே இருக்கிறது.
ஒன்று கிருஷ்ணனுடன் திருமணம். இன்றேல் மரணம் என்ற நிலைக்கு ருக்மிணி வந்துவிட்டாள் . இதை எப்படி கிருஷ்ணனுக்கு தெரிவிப்பது?. துவாரகை எங்கோ தூரத்தில் உள்ள ராஜ்யமாயிற்றே?   அரண்மனைக்கு  சுனந்தனன் என்கிற  ப்ராமண ரிஷி வந்தார். எப்படியோ  தனியாக அவரை சந்தித்து  கிருஷ்ணனுக்கு  ஒரு  கடிதம் கொடுத்து  எப்படியாவது  கிருஷ்ணனிடம் இதை கொடுத்து விடுங்கள்"  என்றாள்.
இது தான்  ருக்மிணியின் கடிதம்."கிருஷ்ணா, புவன சுந்தரா (உலகிலேயே  அழகா), அழகு, வீரம், தைர்யம், அறிவும், சாதுர்யம்  அனைத்திலும் சிறந்தவா!!  உன்னை  நான் பார்த்ததே இல்லை, உன்னை பற்றி கேள்விப்பட்டே  உன்னையே  என்  கணவனாக  வரித்து விட்டேன். எந்த அளவுக்கு உன் மேல் காதல் இருந்தால் வெட்கத்தை விட்டு அந்நிய புருஷன் உனக்கு இதை எழுதுகிறேன். புரிந்து கொள். உடனே என்னை வந்து காப்பாற்றி அழைத்து செல்.இன்னொருவன் எனக்கு  தாலிக்கயிறு  கட்டு முன்  தூக்கு கயிறு என் கழுத்தை அலங்கரித்து விடும். ஒருவேளை இந்த ஜன்மத்தில் உன்னை  அடைய முடியாவிட்டால்  அடுத்தடுத்த ஜன்மங்க ளிலாவது உன்னை  அடைய பாடு படுவேன். – — உனக்காகவே  வாழும் ருக்மிணி"
ருக்மணியின் கடிதத்தை ஓட்டமும் நடையுமாக சென்று குறித்த நேரத்தில்  சிசுபாலனோடு கல்யாணத்துக்கு முன்பே  கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டார் ரிஷி. அவரிடமிருந்து ருக்மிணி  பற்றிய சகல விவரம் கிருஷ் ணன் அறிந்து, அவரிடம் உடனே திரும்பி ருக்மிணியைப் பார்த்து  "கிருஷ்ணனிடம் கடிதம்  கிடைத்தது.  தக்க தருணத்தில் வந்து அவளை காப்பாற்றுகிறேன்" என்று  சொல்லுங்கள் என்ற சேதியும்  சொல்லி அனுப்பி னான்.
குல வழக்க  பிரகாரம் கல்யாணத்திற்கு முதல் நாள் மணப்பெண் தனியாக தோழிகளுடன்  ஊருக்கு  வெளியே  இருந்த  பார்வதி கோவிலில்  பூஜை செய்து பிரசாதம் பெற்றுக்கொள்ள  சென்றாள்.  அங்கு  ஒரு  ரதம் காத்திருந்தது.   மாறு வேடத்தில் கிருஷ்ணன்  அவளை  அங்கு  சந்தித்து அவளை கடத்தி சென்றான்.  ருக்மிணி கிருஷ்ணனுக்கு மனைவியாகவும் த்வாரகையில் ருக்மிணி ராணியும் ஆனாள். 
என்னுடைய  வாலன்டின் தின காதல் கதை எப்படி?

Sunday, February 1, 2026

Sanskrit game.

https://games.sanskrit.dev/yugmaani.html

New Game updated !!!

*भगवद्गीता (पदम् अध्यायश्च) - ३*

Read the phrase and identify the chapter in Bhagavat Gita....

What are you waiting for ? Sanctify your Sunday soon 🙂

Friday, January 30, 2026

Sanskrit puzzle cum Devi sloka

*ஸம்ஸ்க்ருத வினோதம்: விடுகதையா? ஸ்லோகமா?* 

 *அம்பாளைத் துதிப்பதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது. இது பார்ப்பதற்கு ஒரு பெரிய விடுகதை போல் அமைந்துள்ளது.*

*ஒரு பெரிய முடிச்சு எப்படி ஒவ்வொன்றாக அவிழுமோ அது போல இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் மிக அழகாக அவிழ்ந்து கொண்டே செல்கிறது.* 
*அது எப்படி என்று கீழே பாருங்கள்!* 

गोग-ज-वाहन-भोजन-भक्ष्यो-द्भूत-प-मित्र-सपत्न-ज-शत्रोः ।
वाहन-वैरि-कृतासन-तुष्टा मामिह पातु जगत्त्रय-जुष्टा ॥

(கோ³க³-ஜ-வாஹன-போ⁴ஜன-ப⁴க்ஷ்யோ-த்³பூ⁴த-ப-மித்ர-ஸபத்ன-ஜ-ஶத்ரோ꞉ ।
வாஹன-வைரி-க்ருʼதாஸன-துஷ்டா மாமிஹ பாது ஜக³த்த்ரய-ஜுஷ்டா ॥)

  * கோ³க³: (गोगः)
   * ரிஷபத்தின் மீது செல்பவர் யார்?
   சிவன் (शिवः).

 * கோ³க³-ஜ: (गोगजः)
   *  அவரிடமிருந்து (சிவனிடம்) பிறந்தவர் யார்?
    கார்த்திகேயன் (कार्तिकेयः).

 * கோ³க³ஜ-வாஹன: (गोगजवाहनः)
   *  அவரின் (முருகனின்) வாகனம் எது?
    மயில் (मयूरः).

 * கோ³க³ஜவாஹன-போ⁴ஜனம் (गोगजवाहनभोजनम्)
   *  அதற்கு (மயிலுக்கு) உணவு எது?
    பாம்பு (सर्पः).

 * கோ³க³ஜவாஹனபோ⁴ஜன-ப⁴க்ஷ்ய: (गोगजवाहनभोजनभक्ष्यः)
   * விளக்கம்: பாம்புகள் "வாயு பக்ஷக:" (காற்றை உண்பவை) என்று அழைக்கப்படும்.
    வாயு / காற்று (वायुः).
 *கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴த: (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतः)
   *  வாயுவினால் தோன்றியவர் (வாயுபுத்திரர்) யார்?
    ஹனுமான் (हनुमान्).

 *  கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴த-ப: (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपः)
   *  ஹனுமானால் காக்கப்படுபவர் அல்லது ஹனுமானுக்குத் தலைவன் யார்?
    ஸுக்ரீவன் (सुग्रीवः).

 * கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தப-மித்ரம் (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रम्)
   *  அந்தச் ஸுக்ரீவனின் நண்பன் யார்?
    ஶ்ரீராமர் (रामः).
 *கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ர-ஸபத்ன: (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नः)
   *  ராமரின் விரோதி யார்?
    ராவணன் (रावणः).

 * கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ரஸபத்ன-ஜ: (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नजः)
   *  ராவணனின் மகன் யார்?
    இந்த்ரஜித் (इन्द्रजित्).

 * கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ரஸபத்னஜ-ஶத்ரு: (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नजशत्रुः)
   *  இந்திரஜித்தின் எதிரி யார்?
    இந்திரன் (इन्द्रः).

 * கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ரஸபத்னஜ-ஶத்ரோ: வாஹனம் (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नजशत्रोः वाहनम्)
   *  இந்த்ரனின் வாகனம் எது?
    யானை / ஐராவதம் (गजः / ऐरावतः).

 * கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ரஸபத்னஜ-ஶத்ரோ: வாஹனவைரீ (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नजशत्रोः वाहनवैरी)
   *  யானைக்குப் பரம எதிரி (கஜாரி) யார்?
    சிங்கம் (सिंहः).

 * கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ரஸபத்னஜ-ஶத்ரோ꞉ வாஹனவைரிக்ருதாஸனா (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नजशत्रोः वाहनवैरिकृतासना)
   *  அந்தச் சிங்கத்தையே தனது ஆஸனமாகக் (வாஹனமாகக்) கொண்டவள் எவளோ அவள்.
 
 *ஸ்ரீ துர்கா தேவி! (ஸிம்ஹ வாஹினி).* 

 துஷ்டா மாமிஹ பாது ஜக³த்த்ரய-ஜுஷ்டா"
(तुष्टा मामिह पातु जगत्त्रय-जुष्टा)
 மூன்று உலகங்களாலும் வணங்கப்படுபவளான அந்த தேவி, மகிழ்ச்சி கொண்டவளாக இந்த ஸம்ஸாரத்தில் இருந்து என்னைக் காக்கட்டும்!

Thursday, January 29, 2026

Sacred name Narayana

வேண்டாமே கர்ப்பவாஸம்

 

குலசேகராழ்வார் மிகுந்த மாலையில் ' வேண்டாமே இந்த கர்ப்ப வாசம். பிறவிக் கடலை கடந்து

வைகுண்டப்பிராப்தி வேண்டும்' என்கிறார்.

முகுந்தமாலையில 29ஆவது ஸ்லோகம் .

श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं केन प्रापुर्वाञ्छितं पापिनोऽपि ।

हा नः पूर्वं वाक्प्रवृत्ता न तस्मिंस्तेन प्राप्तं गर्भवासादिदुःखम् ॥ २९॥

ஸ்ரீமன்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்

யேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோऽபி ।

ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மின்

தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ 26॥

ன்னு ஒரு ஸ்லோகம்.

'நாராயணாக்யம்' பகவானுடைய திரு நாமங்களில் நாராயணா என்ற இந்த நாமத்தை 'ஸ்ரீமன்

நாம:' ங்கிறதுக்கு விஷ்ணுவினுடைய பெயர்ன்னு ஒரு அர்த்தம். அதுக்கு ஸுமங்கள

நாமம்ன்னு பரம மங்களமான இந்த நாராயண நாமத்தை ஸ்ரீமன் நாம ப்ரோச்ய – அந்த

நாராயண நாமத்தை சொல்வார்கள் எனில் ப்ராபுர்வாஞ்சி²தம் – இஷ்டப்பட்டதை

அடைவார்கள். யார்? 'பாபிநோபி' பாபம் பண்ணினவர்களா இருந்தா கூட இந்த நாராயண

நாமத்தை சொல்றதுன்னு வெச்சுண்டா அவா இஷ்டப்பட்டதைப் பெறுவார்கள். ஆனால் நான்

இந்த நாராயண நாமத்தை போன பிறவியில சொல்லலேன்னு தெரியறது. முன்னமே

அவரிடத்துல பக்தி வெச்சு, நாராயண நாமத்தை சொல்லியிருந்தேன் எனில் நான் இந்த

கர்ப்பவாஸாதி துக்கத்தை இன்னொரு வாட்டி அனுபவிச்சிருக்க மாட்டேன். வந்து இப்படி

ஒரு தாய் வயிற்றில் பிறந்து இந்த பிறவிக் கடலில் விழுந்து அவஸ்தை படமாட்டேன்னு

சொல்றார். இந்த நாராயண நாமத்தை இப்போதாவது சொல்லி இந்த ஜன்மத்துல

கரையேறனும்கிறது தாத்பர்யம்.

எனக்கு இது கூட தெரியலையே, நான் இவ்ளோ தீனனா இருக்கேனேன்னு அந்த

சரணாகதியில தன்னுடைய குறைகளை நினைச்சு பகவான்கிட்ட முறையிடறது ஒரு

அங்கம்னு சொல்றார்.

நாராயண நாமம்ங்கிறது உசந்தது. ஸந்யாசிகள் கூட நமஸ்காரம் பண்ணினா, நாராயண,

நாராயண, நாராயண, நாராயண னு ஆசீர்வாதம் பண்ணுவா. நாராயண நாமத்துக்கு அவ்ளோ

மஹிமை. விஷ்ணு சஹஸ்ரநாமத்துல நாராயண நாமம் நாலு தடவை வர்றது. திருமங்கை

ஆழ்வார் ஒரு பாசுரத்துல

"குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்

நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெருநிலம் அளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்றதாயினுமாயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

ன்னு சொல்றார். உயர்ந்த குலத்தைக் கொடுக்கும். நிறைந்த செல்வத்தைக் கொடுக்கும்.

அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் நிலந்தரம் செய்யும் – அடியார்களுடைய துயர்களை

எல்லாம் தரை மட்டம் ஆக்கிடும். காணாம போக்கிடும். நீள் விசும்பு அருளும் – வைகுண்ட

பதவியைக் கொடுக்கும். அருளோடு பெருநிலம் அளிக்கும் – அருளையும் கொடுக்கும்.

பகவானுக்கு கைங்கர்யம் பண்ணக் கூடிய அந்த ஒரு பெரிய பாக்யத்தையும் கொடுக்கும்.

நாராயண நாமம் வலம் தரும்னா சக்தியை தரும். பகவானோட பக்தி பண்றதுக்கு நமக்கு

மனசுல ஊக்கத்தையும், சக்தியையும் கொடுக்கும். மற்றும் தந்திடும் – இன்னும் என்ன

 

வேணுமோ, நீ பகவானை அடையறதுக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் நாராயண

நாமமே தரும். பெற்ற தாயினும் ஆயின செய்யும் – உன்னைப் பெற்று வளர்த்த தாயினைக்

காட்டிலும் பெரிய நன்மையை செய்யும். நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்னு சொல்றார்.

பாபிகளா இருந்தாக் கூட பகவானுடைய நாமம் அவாளுக்கு எல்லா தீங்கையும் போக்கி

நன்மையைச் செய்யும்னு இந்த ஸ்லோகத்துல சொல்ற மாதிரி இங்க திருமங்கையாழ்வார்

'நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்னு' சொல்றார்.

அப்படி நாராயண நாமத்துக்கு அபார மஹிமை. முகுந்த மாலையில நிறைய நாராயண

நாமத்தை சொல்றார். நாமும் எல்லாருமா உட்கார்ந்து சாயங்காலம் விளக்கேத்தி நாராயணா

நாமத்தை ஜபிச்சா ஆத்துல ஒரு வியாதி இருக்காது. ஒரு கஷ்டம் இருக்காது. எல்லா

 

மங்களங்களும் வந்து சேரம். "நாராயண நாராயணன்னு ஆயிரத்தெட்டு தடவை ஒரு

பதினைஞ்சு நிமிஷம் சொன்னாலே ஆனந்தமா இருக்கும்.

நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண

Monday, January 26, 2026

Friendship & love - do you need to handshake?

🌞ஒருவர் எச்சிலை மற்றொருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் . 

🌞அது போல ஒருவர் செருப்பை மற்றொருவர் போட்டாலோ, இல்லை துணி மணியை உபயோகித்தாலோ, இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ, இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ, ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ, ஒருவர் உள்ளங்கையை இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ, அவர்கள் குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .

🌞திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும், சண்டை போட கூடாது என்பதால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.

அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல் , ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல் , இருவர் உள்ளங்கையையும் சேர்த்து பாணிக்கிரஹணம் என்று பிடித்தல் , ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் , ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல் , என்று இருவருடைய வாசனைகள் , குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர் .

அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால் , சண்டைகள் குறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதே காரணம்.

🌞இதனால் தான் சாஸ்திரங்கள் மஹான்கள் /பக்தர்கள் சாப்பிட்ட எச்சிலை சாப்பிடு , அவர்களுக்கு கால் பிடித்து விடு , அவர்கள் உடுத்திய வஸ்திரத்தை நீ வாங்கிக்கொள், அவர்களுக்கு போட்ட பூமாலையை நீ போட்டு கொள், அவர்கள் கால் பட்ட மண்ணை தலையில் போட்டு கொள் என்றெல்லாம் சொல்வதற்கு காரணமும் இதுவே . 

அப்படியாவது அவர்களிடம் உள்ள தெய்வீகத்தில், குணங்களில் ,வாசனைகளில் கொஞ்சமாவது அழுக்கு படிந்த நமக்கு தப்பி தவறி வந்து விடாதா?? என்ற காரணமே.

🌞கோயில்களில் இறைவனுக்கு சாத்திய புஷ்பங்கள் வஸ்திரங்கள் பிரசாதங்கள் நமக்கு கொடுக்கும் காரணமும் இதுவே🌞

எனவே ஆபீஸிலோ, வெளி இடங்களிலோ ஒருவருடன் ஒருவர் பழகும் போது இவைகளை நாம் செய்யாதிருத்தல் நமக்கு நல்லது . FRIENDSHIP வேறு சுத்தமாக இருத்தல் வேறு , இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாமல் பழகவேண்டும் .

🌞உபநிஷத்துகளில் மிக பெரிய தவங்கள் செய்த ஒரு மகரிஷி இன்னொருவர் செருப்பை போட்டு கொண்டதினால் இன்னொரு பிறவி எடுத்தார் .

🌞நாரதர் சாதாரண கீழ் குலத்தில் இருந்து நாரத மகரிஷி ஆனதிற்கு காரணம், ரிஷிகள் சாப்பிட்ட எச்சில் பிரசாதத்தை அவர் உட்கொண்டு வந்ததே .இது போல எண்ணற்ற உதாரணங்கள் நமது சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது .

🌞தண்ணீருக்கு இந்த வாசனைகளை போக்கும் சக்தி உண்டு . அதனால் தான் ரிஷிகள் ஒரு கமண்டலுவில் அருகில் தண்ணீர் வைத்து கொள்வார்கள் . 

ஒரு திருடனின் வாசனையை மோப்பம் பிடிக்கும் நாய் , தொடர்ந்து சென்று அவன் போகும் பாதையை கண்டுபிடிக்கிறது . ஆனால் அவன் ஒரு நீர் நிலையை தாண்டிவிட்டால் அந்த நாயினால் அவனுடைய வாசனைகளை கண்டுபிடிக்க முடிவதில்லை . தண்ணீருக்கு அத்தனை சக்தி உண்டு . அதனால் தான் பெரியோர்கள், மஹான்கள் அடிக்கடி குளித்துக் கொண்டே இருக்கின்றனர் ,

எனவே சுத்தமாக தொட்டு தொட்டு கலந்து பழகாமல் இருக்க முடியவில்லை என்றாலும் அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பது தவறு ஏதும் இல்லை . நமக்கு மற்றவர்களிடம் இருந்து வரும் கெட்ட வாசனைகளில் , குணங்களை கொஞ்சமாவது குறைக்க முயற்சி செய்யலாம் .

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் ஒருவரிடம் நாம் மிகவும் நெருக்கமானவராக காட்டி கொள்வதற்காக , வித்யாசம் பார்க்கவில்லை என்பதை காட்டிக்கொள்வதற்காக , நம் சுத்தத்தை விட்டு கொடுத்து , எச்சிலை சாப்பிட்டு , தொட்டு தொட்டு பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை .

சுத்தம் வேறு, ஒருவரிடம் அன்பாக பழகுவது என்பது வேறு...!!!

Sunday, January 25, 2026

Vyasa teertha story

வியாச தீர்த்தர்

பொன்னி நதியில் நீராடிவிட்டு, புருஷாத்தம குகைக்குச் சென்று கொண்டு இருந்தார் பிரம்மண்ய தீர்த்தர்.  

சுவாமீ பாதத்தில் விழுந்தாள் ஒரு பெண். தீர்க்க சுமங்கலி பவ... அவர் வாழ்த்தினார். அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. 

நா குழறியபடி, சுவாமீ! உங்கள் மகிமையைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்தேன். என் கணவர் பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறார்... அவள் அழுதாள். 

கவலைப் படாதே! உன் மஞ்சள் குங்குமத்திற்கு ஒரு குறைவும் ஏற்படாது, என்றவர், அவளுடன் புறப்பட்டார். தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை மயங்கிக்கிடந்தவன் மீது தெளித்தார். 

தூக்கத்தில் இருந்து எழுவதைப் போல அவன் எழுந்து அமர்ந்தான். அப்போது அவளிடம், சீக்கிரம் உனக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கும். 

ஆனால்.... என்ன ஆனால்...அவள் கேள்விக்குறியுடன் அவரை ஏறிட்டாள். அதை என்னிடம் ஒப்படைத்து விடுவது உன் பொறுப்பு,. அவர் அவளது பதிலுக்கு காத்திராமல் வேகமாகப் போய்விட்டார். அந்தப்பெண்ணும் தாய்மை அடைந்தாள். 

1447, ஏப்ரல் 22ல் அவளுக்கு அந்தக் குழந்தை பிறந்தது. குழந்தையை எடுத்துக் கொண்டு, பிரம்மண்ய தீர்த்தரிடம் சென்றாள். 

அவர் அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டார். விஜயராஜர் எனப் பெயரிட்டார். ஐந்து வயதில் உபநயனம், பிரம்மோ பதேசம் செய்து வைத்தார். 

ஏழு வயதானதும், சந்நியாசதீட்சை வழங்கி வியாசதீர்த்தர் என்று திருநாமம் சூட்டினார். பாதராயர் என்ற குருவிடம், வியாசதீர்த்தர் வேதம், சாஸ்திரம், தத்துவம் கற்றுக் கொண்டார். 

பின், தவவாழ்வில் ஈடுபட்டார். பிரம்மண்ய தீர்த்தரின் காலத்திற்குப்பின், 1467ல் வித்யாபீடத்தின் அதிபதியாக வியாசதீர்த்தர் பொறுப்பேற்றார். 

விஜயயாத்திரையாக பல திருத்தலங் களுக்குச் சென்று மத்வமத சித்தாந்தத்தை நிலைநாட்டினார். வியாசதீர்த்தரின் புகழ் நாடெங்கும் பரவியது. 

பொறாமை கொண்ட சிலர், மடத்தின் சமையல்காரனின் உதவியுடன், தீர்த்தரின் உணவில் விஷம் கலந்தனர். எப்போதும் உணவை கடவுளுக்கு நைவேத்யம் செய்து விட்டுச் சாப்பிடுவது தீர்த்தரின் வழக்கம்.

விஷ உணவும் வழக்கம்போல நைவேத்யத்திற்கு வைக்கப்பட்டது. சமையல் காரருக்கு குற்ற உணர்வு உண்டானது. 

தீர்த்தர் உணவைச் சாப்பிட அமர்ந்த போது, சமையல்காரர் தீர்த்தரின் பாதத்தில் விழுந்து, தான் செய்த தவறைச் சொல்லி அழுதார். தீர்த்தர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. 

விஷ உணவை இயல்பாக சாப்பிட்டு எழுந்தார். பக்தர்கள் அனைவரும் சமையல்காரனுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தீர்த்தர் அதையும் ஏற்க மறுத்து விட்டார். 

ஏற்கனவே 12 ஆண்டுகள், வேதம் கற்பித்த குருநாதர் பாதராஜரிடம், மீண்டும் சிலகாலம் வேதசாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். 

ஒருநாள் உடல்நலம் இல்லாமல் படுத்து இருந்தார் பாதராஜர். தான் செய்ய வேண்டிய பூஜையை வியாசதீர்த்தரைச் செய்யச் சொன்னார். 

பூஜை பெட்டிகளில் இருந்த விக்ரஹங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார் வியாசதீர்த்தர். ஒரு பெட்டியை மட்டும் திறக்க முடியவில்லை. அந்தப் பெட்டிக்கு மூடிய நிலையிலேயே தினமும் தீபாராதனை நடக்கும் என்று அங்கிருந்தவர்கள் கூறினர். 

தீர்த்தர், அந்தப்பெட்டியை திறந்ததோடு அதிலிருந்த வேணுகோபால விக்ரஹத்திற்கு பூஜையும் செய்து மகிழ்ந்தார்.

படுக்கையில் கிடந்த பாதராஜரின் காதில் பாடல் ஒலி கேட்டது. கஷ்டமானநிலையிலும் எழுந்து வந்து விட்டார். வேணுகோபாலனையும், தீர்த்தரையும் கண்டு மெய்சிலிர்த்தார். தீர்த்தருக்கு விக்ரஹத்தை பரிசளித்தார்.  

சந்திரகிரியைத் தலைநகராகக் கொண்டு, விஜயநகரப் பேரரசை ஆட்சி செய்த நரசிம்ம பூபாலன், பாதராஜரைத் தன் அரண் மனையில் ராஜகுருவாக இருக்கும்படி வேண்டினான். ஆனால், பாதராஜரோ பரம ஞானியான வியாசதீர்த்தரே ராஜகுரு பதவிக்குத் தகுதியானவர் என்று மன்னருக்குப் பரிந்துரை செய்தார். 

அதன்படி வியாசதீர்த்தரே ராஜகுருவாக நியமிக்கப்பட்டார். விஜயநகர மன்னராக இருந்த கிருஷ்ணதேவராயருக்கும், வியாசதீர்த்தர் மீது அளவுகடந்த பக்தி உண்டு. 

அரண்மனை ஜோதிடர்கள் கிருஷ்ணதேவராயரின் ஜாதகத்தை கணித்தனர். மன்னருக்கு குக யோக காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தசமயத்தில் அவரது உயிருக்கு ஆபத்து விளையும் என அறிந்தனர். இதை அறிந்த கிருஷ்ணதேவராயர் தப்பிக்கும் வழிமுறையை ஆராய்ந்தார். 

ராஜகுருவான வியாசதீர்த்தரையே விஜயநகரத்தின் மன்னராக்கினார். குகயோகம் வந்த நாளில், கிருஷ்ண தேவராயர் வியாசதீர்த்தரின் முன் பணியாள் போல நின்று கொண்டிருந்தார். 

அப்போது, கொழுந்து விட்டு எரிந்த தீப்பிழம்பு அரண்மனைக்குள் நுழைந்தது. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த வியாசதீர்த்தர், தான் போர்த்தியிருந்த காவித் துண்டை அதன் மீது வீசினார். அந்த துணி எரிந்து சாம்பலானது. அத்துடன், குகயோகத்தின் ஆற்றலும் காணாமல் போனது.

வியாசதீர்த்தர் கிருஷ்ண தேவராயரிடம், இனி பயம் வேண்டாம். மீண்டும் அரசாட்சி செய்! என்று கட்டளையிட்டார். கிருஷ்ணதேவராயர் மீண்டும் பதவியேற்றார். வியாச தீர்த்தருக்கு 92 வயதான போது இறைவனோடு ஐக்கியமானார். இவரே மீண்டும் ராகவேந்திர சுவாமியாக அவதரித்ததாகச் சொல்வர்.