Thursday, January 29, 2026

Sacred name Narayana

வேண்டாமே கர்ப்பவாஸம்

 

குலசேகராழ்வார் மிகுந்த மாலையில் ' வேண்டாமே இந்த கர்ப்ப வாசம். பிறவிக் கடலை கடந்து

வைகுண்டப்பிராப்தி வேண்டும்' என்கிறார்.

முகுந்தமாலையில 29ஆவது ஸ்லோகம் .

श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं केन प्रापुर्वाञ्छितं पापिनोऽपि ।

हा नः पूर्वं वाक्प्रवृत्ता न तस्मिंस्तेन प्राप्तं गर्भवासादिदुःखम् ॥ २९॥

ஸ்ரீமன்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்

யேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோऽபி ।

ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மின்

தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ 26॥

ன்னு ஒரு ஸ்லோகம்.

'நாராயணாக்யம்' பகவானுடைய திரு நாமங்களில் நாராயணா என்ற இந்த நாமத்தை 'ஸ்ரீமன்

நாம:' ங்கிறதுக்கு விஷ்ணுவினுடைய பெயர்ன்னு ஒரு அர்த்தம். அதுக்கு ஸுமங்கள

நாமம்ன்னு பரம மங்களமான இந்த நாராயண நாமத்தை ஸ்ரீமன் நாம ப்ரோச்ய – அந்த

நாராயண நாமத்தை சொல்வார்கள் எனில் ப்ராபுர்வாஞ்சி²தம் – இஷ்டப்பட்டதை

அடைவார்கள். யார்? 'பாபிநோபி' பாபம் பண்ணினவர்களா இருந்தா கூட இந்த நாராயண

நாமத்தை சொல்றதுன்னு வெச்சுண்டா அவா இஷ்டப்பட்டதைப் பெறுவார்கள். ஆனால் நான்

இந்த நாராயண நாமத்தை போன பிறவியில சொல்லலேன்னு தெரியறது. முன்னமே

அவரிடத்துல பக்தி வெச்சு, நாராயண நாமத்தை சொல்லியிருந்தேன் எனில் நான் இந்த

கர்ப்பவாஸாதி துக்கத்தை இன்னொரு வாட்டி அனுபவிச்சிருக்க மாட்டேன். வந்து இப்படி

ஒரு தாய் வயிற்றில் பிறந்து இந்த பிறவிக் கடலில் விழுந்து அவஸ்தை படமாட்டேன்னு

சொல்றார். இந்த நாராயண நாமத்தை இப்போதாவது சொல்லி இந்த ஜன்மத்துல

கரையேறனும்கிறது தாத்பர்யம்.

எனக்கு இது கூட தெரியலையே, நான் இவ்ளோ தீனனா இருக்கேனேன்னு அந்த

சரணாகதியில தன்னுடைய குறைகளை நினைச்சு பகவான்கிட்ட முறையிடறது ஒரு

அங்கம்னு சொல்றார்.

நாராயண நாமம்ங்கிறது உசந்தது. ஸந்யாசிகள் கூட நமஸ்காரம் பண்ணினா, நாராயண,

நாராயண, நாராயண, நாராயண னு ஆசீர்வாதம் பண்ணுவா. நாராயண நாமத்துக்கு அவ்ளோ

மஹிமை. விஷ்ணு சஹஸ்ரநாமத்துல நாராயண நாமம் நாலு தடவை வர்றது. திருமங்கை

ஆழ்வார் ஒரு பாசுரத்துல

"குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்

நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெருநிலம் அளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்றதாயினுமாயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

ன்னு சொல்றார். உயர்ந்த குலத்தைக் கொடுக்கும். நிறைந்த செல்வத்தைக் கொடுக்கும்.

அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் நிலந்தரம் செய்யும் – அடியார்களுடைய துயர்களை

எல்லாம் தரை மட்டம் ஆக்கிடும். காணாம போக்கிடும். நீள் விசும்பு அருளும் – வைகுண்ட

பதவியைக் கொடுக்கும். அருளோடு பெருநிலம் அளிக்கும் – அருளையும் கொடுக்கும்.

பகவானுக்கு கைங்கர்யம் பண்ணக் கூடிய அந்த ஒரு பெரிய பாக்யத்தையும் கொடுக்கும்.

நாராயண நாமம் வலம் தரும்னா சக்தியை தரும். பகவானோட பக்தி பண்றதுக்கு நமக்கு

மனசுல ஊக்கத்தையும், சக்தியையும் கொடுக்கும். மற்றும் தந்திடும் – இன்னும் என்ன

 

வேணுமோ, நீ பகவானை அடையறதுக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் நாராயண

நாமமே தரும். பெற்ற தாயினும் ஆயின செய்யும் – உன்னைப் பெற்று வளர்த்த தாயினைக்

காட்டிலும் பெரிய நன்மையை செய்யும். நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்னு சொல்றார்.

பாபிகளா இருந்தாக் கூட பகவானுடைய நாமம் அவாளுக்கு எல்லா தீங்கையும் போக்கி

நன்மையைச் செய்யும்னு இந்த ஸ்லோகத்துல சொல்ற மாதிரி இங்க திருமங்கையாழ்வார்

'நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்னு' சொல்றார்.

அப்படி நாராயண நாமத்துக்கு அபார மஹிமை. முகுந்த மாலையில நிறைய நாராயண

நாமத்தை சொல்றார். நாமும் எல்லாருமா உட்கார்ந்து சாயங்காலம் விளக்கேத்தி நாராயணா

நாமத்தை ஜபிச்சா ஆத்துல ஒரு வியாதி இருக்காது. ஒரு கஷ்டம் இருக்காது. எல்லா

 

மங்களங்களும் வந்து சேரம். "நாராயண நாராயணன்னு ஆயிரத்தெட்டு தடவை ஒரு

பதினைஞ்சு நிமிஷம் சொன்னாலே ஆனந்தமா இருக்கும்.

நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண

No comments:

Post a Comment