https://youiandkrishna.org/2026/02/appaiya-deekshidhar-2-j-k-sivan/ அப்பைய தீக்ஷிதர்-2 நங்கநல்லூர் J K SIVAN
காஞ்சிபுரத்தில் ரத்னகேட தீக்ஷிதரை வாதம் செய்து வெல்ல காசியிலிருந்து சில சமஸ்க்ரித வித்வான்கள் சாஸ்திரிகள், பண்டிதர்கள் அவர் வீட்டுக்கு வந்தார்கள். விடிகாலை நாலரை மணிக்கே எழுந்து தீக்ஷிதர் மனைவி வாசலில் பெருக்கி சாணி தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அக்ரஹாரத்தில் பளிச்சென்று எல்லா வீட்டு வாசலில் கோலம் காணப்படும் நேரம்.
''ரத்னகேட தீக்ஷிதர் இருக்கிறாரா அம்மா?'' என்று அவளைக் கேட்டார்கள்.
அந்த பத்னி தெய்வத்துக்கு அவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று பளிச்சென்று தெரிந்து விட்டது. தீக்ஷிதருடன் பழகி அவர் ஞானத்தில் சிறிது பங்காக அவளிடம் சேர்ந்திருக்காதா?
அவர்கள் போக்கு, மூட்டை முடிச்சுடன் வந்திருப்பது, அவர்களுக்குள் சமஸ்க்ரிதத்தில் பேசிக் கொள்வது எல்லாம் அவளுக்கும் புரிந்தது . 'ஓஹோ, இவர்கள் நமது கணவருடன் தர்க்க சாஸ்த்ர விவாதத்துக்கு வந்திருக்கிறார்கள்'' என்று புரிந்து விட்டது. அவளது சாஹித்யம் வந்திருந்த பண்டிதர்களின் அளவுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை என்று அவள் அறிந்து கொண்டால். வாசலில் சாணி , கோமயம், தெளிக்க ஜலம் எடுக்கும் முறையை அனுசரித்து, தாளம் தப்பாமல் ஒரு ஸ்லோகத்தை அவர்களின் கேள்விக்கு பதிலாக அளித்தாள் .
विपश्चितामपि मेधा रत्नकेतदीक्षिते, सपत्नजित्य यत्नतो विवादकेलिमागते । बृहस्पतिः प्रजल्पति प्रसरपति क्व सर्पराट् षडाननो नताननः चतुर्मुखश्च दुर्मुखः ॥
vipaścitām api medhā ratnaketa-dīkṣite sapatna-jitya yatnato vivāda-kelim āgate | bṛhaspatiḥ prajalpati prasarapati kva sarparāṭ
ṣaḍānano natānanaś caturmukhaś ca durmukhaḥ ||
'விபச்சிதாம பச்சி மே தா ரத்ன கேட தீக்ஷிதே ஸபத்னஜித்ய யத்னதோ விவாத கேலிமாகதே
ப்ரஹஸ்பதி ; ப்ரஜல்பதி ப்ரஸர்பதிக்வ ஸர்பராட் ஷடானனோ நதானனச் சதுர்முகச்ச துர்முக;''
தீக்ஷிதர் மனைவி ஸ்லோகமாக என்ன சொல்கிறாள்?
''சகல பண்டிதர்களிலும், சிறந்தவரான ரத்நகேட திக்ஷிதர் விவாதம் என்ற விளையாட்டில் ஈடுபடும்போது எதிர்த்தவர்கள் எவரானாலும் எளிதில் ஜெயிக்கப்படுகிறார்கள். ப்ரஹஸ்பதி தேவரும் சமாளிக்கமுடியாமல் உளறிக் கொட்டுகிறார். ஆதிசேஷன் நைசாக தப்பி ஓடுகிறார். ஷண்முகன் ஆறுதலைகளையும் ஆட்டி தொங்கவிட்டுக்கொண்டு விழிக்கிறார். சதுர்முக ப்ரம்ம நான்கு தலைகளையும் மாற்றி மாற்றி சொறிந்துக்கொண்டு யோசிக்கிறார்.''
சாணி தெளித்துக்கொண்டே தீக்ஷிதர் மனைவி அழகாக தாளம் தப்பாமல் இந்த ஸ்லோகத்தை சிறிதும் யோசிக்காமல் பதிலாக அளித்ததைக் கேட்ட காசி பண்டிதர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அடேயப்பா, ரத்ன கேட தீக்ஷிதரின் மனைவியே இப்படி திறமையுடன் சர்வ சாதாரணமாக ஸ்லோகம் சொல்லும் திறமை படைத்தவராக இருக்கும்போது தீக்ஷிதரின் திறமை எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும் என்று புரிகிறது.
தீக்ஷிதருடன் விவாதம் செய்து அவரை ஜெயிக்க எண்ணியதே பெரும் தவறு அவமானப்படாமல் பேசாமல் வந்தவழியே திரும்பிவிடுவது தான் புத்திசாலித்தனம் என்று தீர்மானித்து புத்திசாலிகளாக காசிக்கே திரும்பினார்கள் என்று ஒரு விஷயம் தீக்ஷிதரின் வித்வத் எப்படிப்பட்டது என்பதை தெரிவிக்கிறது.
தீக்ஷிதர் நிறைய நடந்தார். வேலூர், வேங்கடகிரி, தஞ்சாவூர், விஜயநகரம் எல்லா இடத்திலும் ராஜாக்கள் ஆதரவு. கௌரவம் மரியாதை. பரிசு. தர்க்க வாதங்க ளில் வெற்றி. சைவ மத பெருமைகளை வேத சித்தாந் தங் களை சென்ற இடம் எங்கும் எதிரொலித் தார்.
தீக்ஷிதரை தரிசிக்க நிறைய பக்தர்கள் வருவார்கள். பிரசாதம் போஜனம் அவர்களுக்கு உண்டு. ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பக்தர்கள் வந்து பந்தி பந்தியாக போஜனம் நடந்தது. சமையல் அறை யில் அன்னம் குறைந்து விட்டதே ? உள்ளே அரிசி இல்லை. கடையில் இருந்து வாங்கி சமைத்து பரிமாற நேரம் இல்லையே. 'சாப்பாடு இல்லை. போய் வாருங்கள்' என்று சொல்ல முடியுமா? விஷயம் தீக்ஷிதர் காதை எட்டியது. நேராக சமையல் அறைக்கு வந்தார். நிலைமை தெரிந்து கொண்டு அன்ன லக்ஷ்மியை வணங்கினார் . ஸ்தோத்ரம் உச்சரித்தார்.
''இருக்கும் சாதத்தை இருக்கிறவா எல்லோருக்கும் பரிமாறுங்கள்" என்கிறார்.
அள்ள அள்ள குறையாமல் சாதம் பாத்திரத்தில் நிறைந்து கொண்டே இருந்தது. அன்னம் வைத்திருந்த தவலை அக்ஷய பாத்திரமாகவே மாறிவிட்டது. அன்ன பூரணி ஸ்துதிக்கு இவ்வளவு சக்தியா ?
தீக்ஷிதர் ஒரு முறை திருப்பதி சென்றபோது பாலாஜி வேங்கடேச பெருமாள் அவருக்கு சிவனாக காட்சி யளித்தார் என்று சொல்வதுண்டு.
தீக்ஷிதர் ஒரு சித்த புருஷர். சிவபக்தியில் தலைசிறந்து விளங்கிய அவருக்கு ஒரு சமயம் தன் பக்தி உண்மை தானா? அல்லது மேலுக்கு பக்தி செய்வதுபோல் நடிக்கிறோமா? என் ஆத்மா முழுதுமாக சிவனிடம் ஈடுபட்டிருக்கிறதா? என்று சந்தேகம் வந்துவிட்டது. தன்னை சுயபரீட்சைக்கு ஆட்படுத்திக்கொள்ளத் துணிந்தார். சீடா்களை அழைத்தாா்.என்னுடைய அந்திம காயத்தில் எனக்கு சிவ ஸ்மரணை எப்படி இருக்குமோ தெரியவில்லை. அதை உணர்வதற்காக நான் என் கையில் இருக்கும் ஊமத்தைச் சாற்றை குடிக்கப்போகி றேன். தன்னிலை மறந்து உன்மத்தம் ஆகிவிடுவேன். பைத்தியம் பிடிக்கலாம். அப்போது என் உடலிலே ,உள்ளத்திலே, உணா்விலே, பேச்சிலே ஏற்படும் மாற்றங்களை ஒன்று விடாமல் குறித்துக் கொள்ளுங் கள். ரெண்டு மூணு மணிக்கு அப்பறம் இதோ இந்த சீசாவில் இருக்கும் மாற்று மருந்தை எனக்கு கொடுங்கள். நான் பழைய நிலைக்கு வந்துவிடுவேன்''
ஊமத்தங்காய்களை அரைத்துக் குடித்தால் பித்து பிடித்துவிடும். பித்து பிடித்த நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பதைக் குறித்துக்கொண்டு, பிறகு மாற்று மருந்தைக் கொடுக்கவேண்டும் என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு ஊமத்தை விஷத்தைக் குடித்துவிட்டார்.
ஊமத்தஞ் சாறு தீக்ஷிதரை உன்மத்தராக்கியது. அப்பைய தீக்ஷிதா் குதித்தார், ஆடினாா் பாடினாா், உருண்டாா்,அழுதாா். எல்லாம் சிவனின் புகழைப் பாடிக்கொண்டே. ரெண்டு மூணு மணி நேரத்துக்கு பிறகு மாற்று மருந்தால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
''சிஷ்யர்களே, நான் சொன்னபடி எழுதி வைத்தீர்களா? என்னை மறந்த நிலையில் நான் எப்படி இருந்தேன்?''
'' ப்ரபோ, நீங்கள் முழுக்க முழுக்க சிவனின் புகழையே பாடி வழிபட்டீா்கள். அந்த ஸ்தோத்திரங்களை இதோ நாங்கள் எழுதி வைத்துள்ளோம்"
பரவசமடைந்து ''ஹர ஹர மஹாதேவா'' என உள்ளன்போடு சிவனை வணங்கினார் தீக்ஷிதர். உன்மத்த நிலையில் அவர் இயற்றியது " உன்மத்த பஞ்சாசத்,'' அல்லது ஆத்மாா்ப்பண ஸ்துதி " எனும் உள்ளத்தை உருக்கும் சிவபக்தி ப்ரவாஹ ஸ்லோகங் கள். அதில் 50 ஸ்லோகங்கள் உள்ளன. மூன்று முக்கிய ஸ்லோகங்களை இங்கே சொல்கிறேன்.
कस्ते बोद्धुं प्रभवति परं देवदेव प्रभावं यस्मादित्थं विविधरचना सृष्टिरेषा बभूव । भक्तिग्राह्यस्त्वमिह तदपि त्वामहं भक्तिमात्रात्
स्तोतुं वाञ्छाम्यतिमहदिदं साहसं मे सहस्व ॥ १॥
கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம் யஸ்மாதித்தம் விவிதரசநா ஸ்ருஷ்டிரேஷா பபூவ ।
பக்திக்ராஹ்யஸ்த்வமிஹ ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ ॥ 1॥
''பரமேஸ்வரா, தேவாதி தேவா, இந்த மாய லோக பிரபஞ்சத்தை உற்பத்தி பண்ணிய உன்னுடைய அபார மஹிமையை யாரால் விளக்கமுடியும்? அப்படி இருந்தும், பக்தியால் மட்டும் உன்னை அறிய முடியும் என்பதால் பக்தியால் உன்னை துதிக்க விரும்புகிறேன். என்னுடைய துணிச்சலை பொருத்தருள வேண்டும். . வேதம் உன்னை எந்த விதத்திலாவது ஸ்துதி செய்யும் படி என்னைத் தூண்டுகிறது.
ஆத்மார்ப்பணஸ்துதி என ஏன் பெயர்?
अद्यैव त्वत्पदनलिनयोरर्पयाम्यन्तरात्मन् आत्मानं मे सह परिकरैरद्रिकन्याधिनाथ । नाहं बोद्धुं शिव तव पदं न क्रिया योगचर्याः
कर्तुं शक्नोम्यनितरगतिः केवलं त्वां प्रपद्ये ॥ १५॥
அத்யைவ த்வத்பதநலிநயோரர்பயாம்யந்தராத்மந் ஆத்மாநம் மே ஸஹ பரிகரைரத்ரிகந்யாதிநாத ।
நாஹம் போத்தும் ஶிவ தவ பதம் ந க்ரியா யோகசர்யா: கர்தும் ஶக்நோம்யநிதரகதி: கேவலம் த்வாம் ப்ரபத்யே ॥ 15॥
ஹ்ருதய கமலத்தில் உறையும் பரமேஸ்வரா, அந்தர் யாமியே, இந்த க்ஷணமே உனது இரு பாதார விந்தங் களில் என் பரிவாரங்களோடு சேர்த்து என்னை அர்ப்பணிக்கிறேன். பரமேஸ்வரா, நீ எங்கிருக்கிறாய் என்று என்னால் அறிய முடியாது. எங்கும் இருப்பவன். கர்மாக்களை அவசியம் செய்யவேண்டியதை, செய்வ தற் கும் எனக்கு முடியவில்லை. வேறு வழியில்லா மல் உன் பாதார விந்தங்களை சரணடைந்து விட்டேன். அது தான் என்னால் முடியும். எல்லாம் நீயே, எல்லாம் உன் செயலே, எல்லாம் உன் உடைமையே,
आत्मार्पणस्तुतिरियं भगवन्निबद्धा यद्यप्यनन्यमनसा न मया तथापि । वाचापि केवलमयं शरणं वृणीते दीनो वराक इति रक्ष कृपानिधे माम् ॥ ५०॥
ஆத்மார்ப்பண ஸ்துதிரியம் பகவன் நிபத்தா யத்யப்யனன்ய மனஸா ந மயா ததாபி | வாசாபி கேவலமயம் சரணம் வ்ருணீதே தீனோ வராக இதி ரக்ஷ க்ருபாநிதே மாம் || 50 ||
இது கடைசி ஸ்லோகம். இதில் தீக்ஷிதர் என்ன சொல்கிறார் ;
'நான் ஏகாக்ரசித்தனாக இருந்து, மனதில் ஒரே எண்ண மாக பரமேஸ்வரனையே எண்ணி, இந்த ஆத்மார்ப் பண ஸ்துதியை இயற்றவில்லை. ஏதோ உன்மத்த நிலையில் என்னை இழந்து நான் பாடியவை என்றாலும் பரமேஸ்வரா நீ பிழை பொறுத்தருளும் சர்வேஸ்வரன், தயாநிதியே! ஸ்துதி ரூபமான வார்த் தைகளை (மன முருகாமல்) மட்டுமாவது சொல்லுகிறானே என்று கருணை புரிந்து என்னை ரக்ஷிப்பாயாக.
இன்னும் அப்பைய தீக்ஷிதர் பற்றி சொல்ல வேண்டி யவை நிறைய இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன்.
No comments:
Post a Comment