Showing posts with label Mahaperiyavaa. Show all posts
Showing posts with label Mahaperiyavaa. Show all posts

Thursday, July 22, 2021

Relationship beteween Guru & disciple - Periyavaa

****************************************
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர*

*தெய்வத்தின் குரல்*

( *1656*)                             19.12.2020
______________________________
*குரு-சிஷ்ய உறவு* 
- பகுதி - 45
*************************
____________________________
*தெரியாததை ஒருபோதும் சொல்லாதவர்*
__________________________
*குருவின் யோக்கியதையைப் பார்ப்பதும், சரணாகதி செய்வதும்*
__________________________
*குருவும் சீடராகும் உயர்பண்பு*
_________________________

*ஸ்ரீமஹாபெரியவா*

Volume 7.                          பக்கம் 222

 ****************************************
*தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி*
(மஹா பெரியவா அருளுரை)
*மங்களாரம்பம்*
*விநாயகரும் தமிழும்* 
*குரு-சிஷ்ய உறவு* 
- பகுதி - 45

*தெரியாததை ஒரு போதும் சொல்லாதவர்*
(நேற்றைய இந்த பகுதியின் சில உரைகள் மீண்டும் இன்றும்)

கோசல தேசத்து ராஜகுமாரன் ஒருத்தன். ஹிரண்ய நாபன் என்று பேர். அவன் ஸுகேசர் என்ற ரிஷியிடம் கற்றுக் கொள்ள வருகிறான். அந்த ஸுகேசர் யாரென்றால், பிப்பலாத மஹர்ஷியிடம் ஆறு பெரியவர்கள் ஆத்ம வித்யை தெரிந்து கொள்ள வந்தார்கள், ஆளுக்கொரு கேள்வி- ப்ரச்னம் - கேட்டு, அதற்கு அவர் பதில் சொல்வதுதான் ப்ரச்னோபநிஷத் என்றேனோல்லியோ? அந்த ஆறு பேரில் இந்த ஸுகேசரும் ஒருத்தர். அவர்தான் கடைசியான ஆறாவது கேள்வி கேட்டவர். இதற்கு முற்காலத்தில் இதே கேள்வியை அவரிடமே கேட்கத்தான் கோஸல ராஜகுமாரன் போனது. என்ன கேள்வி என்றால்:ஒரு ஜீவனுக்குப் பதினாறு அம்சங்கள் உண்டு. இவற்றைக் கலைகள் என்பார்கள். சந்திரனுக்குக் கலைகள் இருப்பதாக எல்லாரும் சொல்கிறோம். பிறைச் சந்திரனைச் சந்திரகலை என்கிறோம். அப்படிப் பதினாறு கலைகளோடு கூடினவன் ஜீவன். 'ஷோடச கலா புருஷன்' என்று சொல்வது. அந்த ஸமாசாரமாகவே கோஸல ராஜகுமாரன் ஸுகேசரிடம் கேட்டான். அப்போது அது அவருக்குத் தெரியாது. தெரியாததால்தான் பிற்பாடு பிப்பலாதரிடம் கேள்வி கேட்கவந்தார்.

ஏதாவது பதினாறைக் கல்பித்துச் சொல்லி, தத்வார்த்தம் என்று பொய்ப்பந்தல் போட்டு அந்த ராஜகுமாரனை அவர் அனுப்பியிருக்கலாம். ஒரு ராஜகுமாரனே வந்து கேட்கிறானென்றால் அது ஒரு பெருமை. அதோடு அவன் நிறைய ஸம்பாவனை, ஸெளகர்கயங்களும் பண்ணித்தரக் கூடியவன். ஆனாலும் பூர்வகால குருமார் ரொம்பவும் நேர்மையுள்ளவர்களானபடியால் இவர் அவனிடம் தமக்குத் தெரியாது என்று உள்ளதை உள்ளபடிச் சொன்னார்.

அவனுக்கு நம்பிக்கைப்படவில்லை.- உபநிஷத்தில் நேராக அப்படிச் சொல்லியிருக்கவில்லை. ஆனால் ஆசார்யாள் பாஷ்யத்தில் சேர்த்திருக்கிறார். அப்படிச் சேர்த்தால்தான் அப்புறம் வரும் உபநிஷத் வாக்யத்துக்குப் பொருத்தமாக link உண்டாகிறது.

இவர் எங்கேயாவது அறியாதவராக இருப்பாரா என்று ராஜபுத்ரன் ஸந்தேஹப்பட்டான். 'எனக்குத்தான் யோக்யதை போதாதோ என்னவோ? அப்படிக் குற்றம் காட்டாமல் தம்மையே குறைத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறா -ரோ?' என்று நினைத்தான். அவரிடமே சொல்லவும் சொன்னான். அதற்கு மேல் அவர் அவனிடம், "எனக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சிருந்தா உன்னிடம் ஏன் சொல்லாமலிருக்கப் போறேன்?" என்று கேட்கிறார். முன்னே சிஷ்யன் ச்வேதகேது வாயால் நாம் அவனுடைய குருமார்கள் பற்றிக் கேட்ட வாசகமே இங்கே நேராக ஒரு குரு வாயால் வருகிறது

இப்படிச் சொன்னவிட்டு அவர், தனக்குத் தெரியாததைத் தெரிந்ததாகக் காட்டி போதனை என்று பண்ணுவது எப்பேர்ப்பட்ட பாபம் என்று அவனுக்குச் சொல்கிறார். 'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்பதோடு நாம் நிறுத்திக் கொள்கிறோம். உபநிஷத்தோ இங்கே அந்த KS வாயால் அதைவிட ரொம்ப பயங்கரமாகச் சொல்லியிருக்கிறது. பொய்யாக உபதேசம் என்று ஒன்று செய்கிறவன் ஒரு மரம் வேரோடு காய்ந்த போய் நசித்துவிடுகிற மாதிரி நசித்தே போய்விடுவான் என்று KS சொல்கிறார். அவன் இஹம், பரம் இரண்டையும் இழந்து நாசமடைவான் என்று இதற்கு அர்த்தம் என்று ஆசார்ய பாஷ்யம்.

இந்த உபாக்யானத்திலிருந்து இரண்டு முடிவுகள் கூறப்படுகின்றன என்று ஆசார்யாள் காட்டுகிறார். ஒன்று யோக்யதையுள்ளவன், மரியாதை முறைப்படி வந்து கேட்டால், தெரிந்தவன் சொல்லிக் கொடுத்தே ஆகணும் என்பது. இன்னொன்று தெரியாதவன் ஒருகாலும் தெரிந்ததாகப் பொய் பண்ணிவிடக்கூடாது என்பது. 'ஒருகாலும், ஒரு நிலையிலும்' - ஸர்வாஸ்யபி அவஸ்தேஷ§' என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். அப்படி குரு லக்ஷணம், தெரிந்த ஸர்வத்தையும் கற்றுக் கொடுக்கணும், தெரியாத ஒன்றைக்கூட தெரிந்த மாதிரி கற்றுக்கொடுத்து விடக்கூடாது என்றே உபநிஷத் காட்டும் குருமார்கள் இருந்திருக்கிறார்கள்.

குருஸ்தானத்திலிருந்த அந்தப் பெரியவர் - ஸுகேசர் - அவருடைய விஷயஞானம் போதாமையை நிச்சயப்படுத்தினவுடன் அந்தக் கோஸல ராஜபுத்ரன் வாயை மூடிக்கொண்டு ரதத்தில் ஏறிக்கொண்டு போய்விட்டான். 'வாயை மூடிக்கொண்டு' என்பதற்கு ஆசார்யாள் 'வ்ரீடித:' என்று காரணம் காட்டியிருக்கிறார். அப்படியென்றால், 'வெட்கமுற்றவனாக' - அந்த வெட்கத்தினால் வாய் பேசாதவனாகி - போய்விட்டான் என்று அர்த்தம்.

இவருக்குத் தெரியவில்லையென்றால் அவன் வெட்கப்படுவானேன்? 'பாவம்!ஒரு பெரியவர். எத்தனையோ தெரிந்தவர். ஏதோ கொஞ்சம் அவருக்குத் தெரியவில்லை. தெரியாததைப் போய் அவரிடம் கேட்டு, அவ்வளவு பெரியவர் தம்முடைய அறியாமையை வாய்விட்டுச் சொல்லிக்கொள்ளும்படிச் செய்து விட்டோமே!இது மரியாதைப் பண்பாகாதே!' என்று வெட்கப்பட்டிருக்கலாம். இவன் கேட்டதில் அவர் ஒன்றும் embrass ஆகிவிடவில்லை. ஆகாததால்தான் அவரே அப்புறம் பிப்பலாதரிடம் இந்த ஸம்பவத்தை ஸஹஜமாகச் சொல்லி அந்த ஷோடசகலா விஷயம் பற்றிக் கேட்கிறார். ஆனாலும் அவனுக்கு, தான் அவரை அப்படிக் கேட்டிருக்கப்படாது என்று தோன்றி, செய்யப்படாததைச் செய்தோமே என்பதில் வெட்கம்உண்டாயிருக்கலாம்.
(இந்த பாகம் இத்துடன் நிறைவு பெறுகிறது)
(இனி இன்றைய தொடர்ச்சி)

*குருவின் யோக்கியதையைப் பார்ப்பதும், சரணாகதி செய்வதும்*
(இன்றைய புதிய பாகம்)

அல்லது... ஒரு பெரிய விஷயத்திற்கே இங்கே 'எவிடென்ஸ்' கிடைப்பதாகவும் சொல்லலாம். வழி காட்டுகிறவர் என்றே நினைக்கப்பட்டு ஆச்ரயிக்கப்படும் ஒருவர் வழிகாட்ட முடியாதவர் என்று தெரிந்தபோது, தீர விசாரிக்காமல் இப்படிப்பட்ட ஒருவரிடம் வந்தோமே என்பதில் வெட்கப்பட்டுக் கொண்டே அந்தக் கோஸல ராஜபுத்ரன் அவருடைய திக்குக்கு ஒரு நமஸ்காரம் பண்ணிவிட்டு போனான் என்றும் வைத்துக்கொள்ளலாம். அதாவது குருவின் யோக்யதாம்சங்களை நன்றாக உறுதிப்படுத்தித் தெரிந்து கொண்ட பிறகே அவரை ஆச்ரயித்து உபதேசம் கோர வேண்டும், அப்படிப் பண்ணாமல் குரு வரணம் பண்ணிவிட்டு ஒருத்தரிடம் வந்து அவரிடம் சரக்கு இல்லை என்று தெரிந்தால் திக்குக்கொரு நமஸ்காரம் பண்ணிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான் என்று ஆகிறது. கற்றுக்கொள்ள வருகிறவனின் யோக்யதாம்சத்தை குரு நன்றாகச் சீர்தூக்கிப் பார்த்துவிட்டே சிஷ்ய ஸ்வீகரணம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்பது போலவே, கற்றுக்கொள்ளப் போகிறவனும் அவருடைய யோக்யதையை நன்றாகத் தெரிந்து கொண்ட பிறகே அவரை குருவாக வரிக்க வேண்டும் என்ற பெரிய விஷயம் இங்கே வருகிறது.

'குருவிடம் பூர்ண சராணாகதி சிஷ்யன் பண்ணுவதே முக்யம், அதுவே அவன் தர்மம், கடமை. அவர் எப்படி இருந்தாலும் இவன் அவரைத் தியாகம் பண்ணப்படாது. பதி எப்படி இருந்தாலும் பத்னி அவனைத் தியாகம் பண்ணாமல் சரணாகதையாக இருக்கவேண்டுமென்பது போலத்தான் இதுவும்' என்றெல்லாம் சொல்லுவதற்கு முரணாக இங்கே இருக்கிறதே என்ற பெரிய கேள்வியும் எழும்புகிறது....

'தேசிகன்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல ஆரம்பித்தேன். அது ரொம்ப தூரம் எங்கெங்கேயோ போய்விட்டது. 'வழி சொல்கிறவன், திசை காட்டுகிறவன்' என்று பாஷ்யம், பிரஸங்கம் பண்ண ஆரம்பித்து (சிரித்து 'அதிகப்ப்ரஸங்க'மாக திசை தப்பி, வழியை விட்ட எங்கேயோ போனமாதிரி... இல்லை, இதெல்லாமும் குரு - சிஷ்யாள்-தான். அதில் ஒரு பெரிய கேள்வி. 'கேள்வி கேட்காமல், யோக்யதையை பார்க்காமல் (குருவிடம் சிஷ்யனின்) சரணாகதியா? யோக்யதை பார்த்தே (குரு) வரணம், இல்லை என்று தெரிந்தால் த்யாகம் செய்வதா?

யோக்யதையை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் குரு என்று ஒருத்தரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அப்புறம் அவரிடமேதான் சரணாகதி என்று இருக்கவேண்டும் - அவர் வேறே மாதிரியெல்லாம் தெரிந்தால்கூட (அவரிடம் சிஷ்யனாகச் சென்றவன்) மனஸ் கொஞ்சங்கூட மாறாமல் அவரிடமேதான், அவரே சரண்யர் (புகலிடமானவர்) என்று இருக்கவேண்டும் - இதுதான் பதில்.
(இந்த பாகம் இத்துடன் நிறைவு பெறுகிறது)

*குருவும் சீடராகும் உயர்பண்பு*
(இன்றைய மற்றொரு புதிய பாகம்)

தேசிகன் என்றால் அவன் வழிகாட்டியாக வேண்டும். ஒரே லக்ஷ்யத்திற்கு அநேக வழி, கிளை வழி, சுற்றுவழி, குறுக்கு வழி , மெய்ன் ரோட், ஒற்றையடிப் பாதை என்று பல இருக்கும். அதில் எல்லாவற்றிலும் அந்த தேசிகன் வழிகாட்ட வேண்டுமென்பதில்லை. ஸர்வஞ்ராக நம்முடைய ஆசார்யாள், வித்யாரண்யாள் மாதிரியானவர்களைத் தவிர மற்ற குருமாருக்கு அது ஸாத்யமுமில்லை. அப்போது தெரியாத வழியை ஒருத்தன் வந்து கேட்டுவிட்டால் ஸங்கோசப்படாமல் ஸத்யத்தை சொல்லிவிடணும். அவன் கேட்ட வழியைத் தாமும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து, குரு ஸ்தானத்திலுள்ள தாமே, தெரிந்த இன்னாருவரிடம் போய் சிஷ்யனாக இருந்து கொண்டு கற்றுக்கொள்வாரானால் இன்னும் விசேஷம். நாம் பார்த்துக்கொண்டிருக்கும் உபநிஷத KS அப்படித்தான். ஷோடசகலா புருஷ விஷயமாகத் தாமே பிப்பலாதரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக யதாவிதி அவரிடம் அடக்கமாக வந்தார். "அவன் கேட்ட புருஷன் பற்றியே தங்களை நான் கேட்டுக்கறேன்" என்றார்.

"அவன் கேட்ட நாளாக அந்தக் கேள்வி என் ஹ்ருதயத்திலே முள் தைச்சாப்பல பதிஞ்சு போச்சு" என்று அவர் சொன்னதாக இங்கே ஆசார்யாள் பாஷ்யத்திலே அழகா மெருகேற்றிச் சொல்லியிருக்கிறார். 'தன்னை நாடி சிஷ்யன் என்று ஒருத்தன் வந்து கேட்கிறதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் குரு என்கிற தாம் இருக்கலாமா?' என்று சிஷ்யனை உத்தேசித்தும், தன்னையே உத்தேசித்து, பண்ணிக்கணுமே' என்று தவித்தும் இப்படி (இதயத்தில் முள் தைத்தாற்போல்) பண்ணியிருக்கிறார்.

முடிந்த மட்டும் அத்தனை வழியுமே கற்றுக் கொண்டு, அப்புறம் கற்றுக்கொடுக்கிறவனே உச்சியிலுள்ள தேசிகன்.

எல்லாம் தெரிந்தவன் என்று தன்னைப் பற்றி கர்வப்பட்டுக் கொண்டிருந்த சிஷ்யன் ச்வேதகேது அப்புறம் தகப்பனாரிடம் அடக்கமாக ப்ரஹ்ம வித்யோபதேசம் பெற்றதைச் சொன்னேன். எல்லாம் தெரிந்தவர் என்று குருமாரிலும், விதிவிலக்காகத் தம்மைப் பற்றி கர்வப்பட்ட ஒருத்தர் கதை சொல்கிறேன்.
(மேலும் நாளையும் தொடரும்)

*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*

**********************************

*"Deivathin Kural*-Part-7*
*Maha Periyava's Discourses* 

Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma  in advaitham.blogspot*. Our thanks.

*Vinaayagar and Tamil*
*Relationship GURU. SHISYA*

*He Who Never Said What He Did Not Know*
(Yesterday's this chapter's penultimate paragraphs repeated again today)

246.            There was a Prince of the Kosala Desa, namely HiraNya Nãbha.  He had approached Guru Sukesa with the doubt about Purusha of Sixteen Kalas or parts. The Jiva has 16 parts and so is known as 'shodasa kala Purusha:' – 'षोडस कला पुरुष:' about which HiraNya Nãbha had asked and Sukesa did not know the reply.  He could have given the Prince some sort of a reply, describing some sixteen aspects of a Purusha or Jiva and bluffed his way through.  But Sukesa did not do so, despite the fact that the Prince was sure to have rewarded him with many presents in addition to name and fame that would have accrued.  But Sukesa was truthful enough to have told the Prince that he did not know the answer!  (It is this question with which Sukesa came to Guru Pippalãda for being educated in the Sixth part of Prasnopanishad.)  The Prince HiraNya Nãbha could not believe that Guru Sukesa could be unaware of the reply.  He thought, "Possibly I may be lacking in the required qualifications and so instead of telling me on my face, this Guru may be saying that he does not know the answer!"  He even mentioned this to Guru Sukesa, for which the Guru replied, "Had I known the answer, why should I not tell you?"  Here we find the very idea expressed by Swetaketu elsewhere in another Upanishad, is being uttered by a Guru conveying the same meaning!  Then the Guru says that, to utter a lie is a heinous crime and sin.  We generally simply say that, 'The mouth that speaks a lie will not get food to eat' and stop there.  The words of the Upanishad as expressed by Guru Sukesa, is far more awful.  He says that a Guru who bluffs will be destroyed like a tree that rots from the top to the roots!  Our ÃchãryãL explains in his Bhashyam that he loses all benefits of both Iham and Param!  The Prince quietly rode away from the Guru's presence after taking leave of him.

247.               From this anecdote, our ÃchãryãL says we can gather two lessons.  One is that when approached by a worthy student correctly and formally, a Guru has to teach him.  Second is that, a Guru who does not know the answer should never play-act as though he knows!  He uses the phrase – 'sarvasyãpi avasteshu' – 'सर्वस्यापि अवस्तेषु', meaning 'under all circumstances'.   That is the defining characteristic of a Guru that he has to teach all that he knows and should never ever lie and project as though he knows what he does not!  Once that Prince was clear that the Guru really meant what he says, he simply was flabbergasted that there could be things that a Guru like Sukesa may not know and further looking at the enormity of his truthfulness!  ÃchãryãL says that the Prince went away – 'vreedita:' – 'व्रीडित:' meaning slightly abashed and embarrassed, from the presence of Guru Sukesa.  If the Guru could not reply the question because he did not know the answer, one is likely to wonder as to, why should that Prince be abashed and embarrassed.  He might have thought on the following lines, "Poor man, he is so great and of all things, I should go and ask him something that he did not know!"  The Guru was not at all ashamed!  He later told Pippalãda about his not knowing as to what were the 16 Kalas of a Purusha and asked for clarification.  He simply did not feel one bit ashamed because he did not believe in any false airs of assumed omniscience.  The Prince could have felt abashed that he was the cause for asking a question bringing out the fractional ignorance of the Guru!
(End of this chapter)
(Continuing further from here today)

*The Matter of Assessing Guru's Worth and Surrendering to Him*
(A new chapter)

248.            One more thing.  Here we can take it that we are getting evidence of a major issue.  Having thought him to be the guide we go to someone and find that he is himself requiring guidance, is likely to be a cause for disappointment isn't it?  May be that Prince from Kosala Desa was in that sort of a quandary.  That is, only after carefully assessing the Guru's worth, one should be going to him as the Guru and be seeking his advice.  If one were to find out that he is not worth it, we have no option but to say 'good bye' to him and his direction!  So it all comes down to the fact that the way a Guru is supposed to assess the qualifications of a Sishya, to check if he deserves to be accepted as a disciple, the Guru's worth will also have to be evaluated!  Contrarily, there is also another point that comes up.  It is also said that surrender to the Guru implicitly is more important than trying to evaluate him with our limited knowledge and capabilities, is also a major factor.  This is exactly similar to the requirement that a wife has to be devoted to the husband after the marriage.  All assessment and selection is only before the marriage and not afterwards!

249.            I started enlarging on the meaning of the word Desika.  That has taken me all over, far afield!  Having started a lecture    on the subject of what is a Guide, I hope, you do not think that I have lost the way.  I happen to remain totally focussed.  I am emphasising the point that, whether it is the Disciple selecting the Guru or Guru accepting the Sishya or selection of husband and wife; all assessment and evaluation can be done before selection and after selection one should remain truly loyal.  You better be sure as to whom you are going to have as your Guru.  But once you have selected and become his disciple, even if were to be seemingly different, do not regret your earlier decision.  Remain steadfast in your surrender with him as the refuge!
(This chapter ends here)

*The High Culture in which Guru also Becomes Sishya*
(Again a new chapter)

250.            Desika has to show the way.  For the same destination, there could be many ways such as the right royal route, short-cut, circuitous path, paved & unpaved roads and foot-path, isn't it?  Except for some         like our ÃchãryãL and VidyãraNya SwamigaL, not all Gurus can know them all nor are they required to know.  If and when faced with a situation in which a certain gap in one's knowledge is revealed, one should accept the fact of one's ignorance without any hesitation.  If necessary, one should be ready to learn it from another who knows, to fill-in the gap in one's knowledge.  That is how in the Upanishad we have been looking at six well-read Gurus get together to approach another who was capable of clarifying their doubts.  Rishi Sukesa told Pippalãda about how he could not answer the question about 'Shodasa Kalã Purusha' and wished to know about it, the answer to which forms the sixth part of Prasnopanishad.

251.            Our ÃchãryãL in his Bhashyam says that, 'From the day he could not answer the question, it had become a thorn in the mind of Sukesa Rishi, as to what is the explanation for Shodasa Kalã Purusha'!  'When a disciple has come trusting me, I could not reply him, because I did not know!  How can I call myself a Guru anymore?'  This matter had become the hurting thorn in his mind.  The best among all those who claim to be Desika has to be one who is ever ready to learn.  I told you about how Swetaketu who had the pride that he is omniscient, later had to accept defeat and learn from his father.  There was also a Guru who had a bloated image about himself as an exception to the rule!  Let me tell you that story.
(To be continued)

*Maha Periyava thiruvadigal Saranam*
***************************************

Soundarya Lahiri part7 - Periyavaa

*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர*

*தெய்வத்தின் குரல்*


(1587).                             11.10.2020

ஸௌந்தர்ய லஹரி - பகுதி - 176
________________________
*அனைத்து பலன் அருளும் அன்னை வழிபாடு* - பகுதி - 3
________________________
*கர்ப்பூர ஆரத்தி* - பகுதி - 1
________________________

*ஸ்ரீ மஹா பெரியவா*

6 / 7.                                 பக்கம் 1303

*தெய்வத்தின் குரல*் - *ஆறாம் பகுதி*
(மஹா பெரியவா அருளுரை)
*ஸெளந்தர்ய லஹரி*

*அனைத்துப் பலன் அருளும் அன்னை வழிபாடு*
(நேற்று தொடங்கிய இந்த பாகத்தின் கடைசி உரைகள் மீண்டும் ஒருமுறை இன்றும்)

அப்புறம், அம்பாள் இன்னம் எந்த தேவதைக்கு முக்யமாக யஜமானியாயிருக்கிறாள்? காமனுக்கு. இவள் பேரே காமேச்வரி, காமாக்ஷி, காமகோடி என்பதுதானே? அவனைத்தானே இவள் உயிர்ப்பித்து 'ரீயின்ஸ்டேட்' [அதிகாரத்தில் மீண்டும் நியமனம்] செய்தது? அவனும் இவளுடைய பக்தன். மூன்றாவதாக விரும்புகிற அழகைக் கொடுத்து அவனை 'மன்மதாகாரம்' என்னும்படியே ஆக்கிவிடுகிறான்! அம்பாளுக்கே ஸெளந்தர்யத்தை ப்ரதானமாகச் சொல்லும் ஸ்தோத்ரத்தில் உபாஸகனுக்கும் திவ்ய ஸெளந்தர்யம் கிடைப்பதாகச் சொல்கிறார். ஸரஸ்வதி லக்ஷ்மிகள் ஸ்த்ரீ தேவதைகள். அதனால் அவர்களுடைய பதிகளுக்கு அஸூயை ஏற்படுகிற அளவுக்கு தேவீ பக்தன் அறிவும் ஐச்வர்யமும் பெறுவதாகச் சொன்னர். புருஷ தேவதையான மன்மதனின் விலாஸம் பூர்ணமாக ஏற்படுவதைப் பற்றிச் சொல்லும்போது, மன்மத பத்னியான ரதி அந்த உபாஸகனைப் பார்த்து தன்னுடைய பதியேதானோ என்று நினைப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

நிறைந்த அறிவு, நிறைந்த ஐச்வர்யம், நிறைந்த ஸெளந்தர்யம் கிடைச்சாச்சு. இன்னும் ஏதாவது வேண்டுமா?…. ஜோஸ்யர் ஜாதகம் பார்த்துவிட்டு ஒருத்தனுக்குப் பலன் சொன்னாராம். "எல்லாம் பேஷாயிருக்கு ஒண்ணே ஒண்ணு; உன் பிள்ளைக்குக் கர்மத்துக்கு அதிகாரம் வந்துடுத்து" என்றாராம்! அந்த ஒண்ணே பாக்கி எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விடுகிறதல்லவா? அம்பாள் பக்தனுக்கும் அப்படி ஆகிவிட்டால் என்ன ப்ரயோஜனம்? ஆவதில்லை என்கிறார். அவனுக்கு தீர்க்காயுஸும் கிடைக்கிறது. சிரஞ்ஜீவியாயிருக்கிறான் என்கிறார்: "சிரம் ஜீவந்நேவ". அழகான நல்ல தேஹ காந்தியோடு ஒருத்தன் தீர்க்காயுஸாயிருக்கிறான் என்பதிலேயே அவனுக்கு நல்ல ஆரோக்யமும் அநுக்ரஹிக்கப்படுவதாக ஆகிவிடுகிறது. 'நோயற்ற வாழ்வை'த்தானே 'குறைவற்ற செல்வம்' என்பது? அதுவும் அம்பாள் பக்தனுக்குக் கிடைப்பதாக ஆகிறது.

இன்னும் என்ன வேணுமென்றால், இனிமேல்தான் அம்பாளுபாஸனை தருகிற பர நலனை, தலையான பெரிய நலனைச் சொல்கிறார். அறிவு, ஐச்வர்யம், அழகு முதலியவற்றோடு தீர்க்க காலம் ஜீவிக்கிறபோது, தானாகவே ஒரு கட்டத்தில் அந்த அறிவு, 'இந்த அழகையும் ஐச்வர்யத்தையும் வைத்துக்கொண்டு என்ன ஸாதித்தோம்? நித்ய ஸுகத்திற்கு ஒன்றும் வழி பண்ணிக் கொண்டதாகத் தெரியவில்லையே! போதும் இதெல்லாம்! அதற்கு மார்க்கம் தேடிக் கொள்வோம். புது மார்க்கம் என்று எதற்கும் போகவேண்டாம். இவற்றுக்காக, இஹத்துக்காக இத்தனை காலமாகச் செய்து வந்த அம்பாளுபாஸனையையே இனிமேலே பரத்துக்காகச் செய்வோம். அவளிடம் அதையே வேண்டுவோம்' என்று நினைக்க ஆரம்பிக்கும். அப்போது அம்பாள் தன்னுடைய பரமாநுக்ரஹத்தைப் பண்ணுவாள். அம்பாளை உபாஸிப்பதனால் இல்லாமல் பூர்வ கர்மாநுஸாரமாகவே ஒருத்தருக்கு அறிவு, பணம், அழகு, ஆரோக்யம் எல்லாம் வாய்க்கிற பக்ஷத்தில் எத்தனை வயஸானாலும்கூட ஆத்ம சிந்தனை வராமல், இதுகளோடேயே நின்றுவிடுவதாக இருக்கும். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் பார்க்கிறோம். ஆனால் பக்வ புஷ்டியில்லாத ஸ்டேஜில் அவளை உபாஸித்தே இவற்றைப் பெற்றவர்களுக்கு அப்புறம் அவை திகட்டிப்போய் பாரமார்த்திகத்தில் மனஸு திரும்புகிற பக்வம் வராமல் போகாது. அப்போது என்னவாகிறதென்றால்

"சிரம் ஜீவந்நேவ க்ஷபித–பசு–பாச–வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் தவத்–பஜநவாந் ||

— 'உன்னை பஜிப்பவன், உன் உபாஸகன், சிரஞ்ஜீவியாக இருந்துகொண்டு, பசு-பாசங்களின் ஸம்பந்தம் விலகப் பெற்றவனாகி, ப்ரஹ்மானந்தம் என்று புகழ்பெற்ற ரஸத்தை ரஸிக்கிறான்'.
(இனி இன்றைய தொடர்ச்சி)

பசு-பாசம் என்னவென்றால்: ஒரு ஜீவன் மனஸடக்கமில்லாமல் இயற்கையும் இந்த்ரியமும் ஆட்டிவைக்கிறபடியே போய்க் கொண்டிருக்கும் வரையில் ம்ருக ப்ராயமாகவே அவனைச் சொல்வது. அந்த நிலையைத்தான் 'பசு' என்பது. அப்போது கர்மா என்ற கயிறு அவனை ஜன்மா என்ற முளையோடு கட்டிப் போட்டிருக்கிறது. அந்தக் கயிறுதான் 'பாசம்'. இவனுடைய ஆசை என்பதேதான் அப்படிப் பாசமாகி (ஆசாபாசம் என்கிறோமே, அப்படி) இவனை ஸம்ஸார சக்ரத்திலேயே சுற்றிச் சுற்றி வரும்படிப் பண்ணுகிறது. ஞானம் என்கிற கத்தி அந்தக் கயிற்றைத்தான் துண்டித்து ஜீவாத்மப் பசுவை ஜன்மச் சுழலிலிருந்து விடுவித்து வீடு அருளுவது. அப்போது அவன் பசுவேயில்லை. பசுபதியான சிவமே ஆகிறான். "பரானந்தம்" -– உயர்ந்த ஆனந்தம் -– என்று ச்லோகம் சொல்கிற ப்ரஹ்மானந்த ரஸத்தை அத்வைதமாக அந்த ரஸமே ஆகி அநுபவிக்கிறான். அந்த அநுபவத்திற்கு முடிவேயில்லை. அது சாச்வதம்" நித்யஸுகம். "சிரம் ஜீவன்" -– சிரஞ்ஜீவியாக என்றும் இருந்துகொண்டு அந்த ஆனந்த ரஸ ரூபமாக ப்ரகாசிக்கிறான். அதுதான் அத்வைத மோக்ஷானந்தம். பரானந்த ரஸத்தை அந்த பக்தன் குடிக்கிறான் ("பிபதி") என்றோ, ருசிக்கிறான் ("ஆஸ்வாதயதி") என்றோ போடவில்லை. அப்படிப் போட்டால் அந்த ஆனந்தம் வேறே, அதை அநுபவிக்கிறவன் வேறே என்றாகிறது. "ரஸம் ரஸயதி" என்று ஆசார்யாள், 'ரஸம்' என்ற பதத்தையே அதை அநுபவத்திலும் திருப்புவதால் அநுபவிக்கிறவனும் அதோடு அத்வைதமாகிவிடுகிறான் என்று காட்டியிருக்கிறார்.

'ஆகிவிடுகிறான்' என்றால் அவனாகவே அப்படி ஆகிவிடுவானா என்ன? அவள்தான் ஆக்குகிறாள்! உபாஸனா பலனாக இப்படி ஆகிறான் என்றால் உபாஸ்ய தெய்வம் அப்படி ஆக்குகிறது என்றே அர்த்தம். அத்வைதத்திலிருந்து த்வைதமாக இவனை எவள் இவல்யூஷனில் வெளியிலே விட்டாளோ அவளேதான் இன்வல்யூஷனில் இவனை உள்ளே இழுத்துக்கொண்டும் அத்வைதமாக்க முடியும். அவளே கதி என்று உபாஸிக்கிறவனை, பஜிக்கிற பஜன்வானை அப்படிப் பண்ணுகிறாள் என்கிறார்.

ஆனாலும் அத்வைத ஆசார்யாள் இங்கேயும் தம்முடைய ஸமய ஸமரஸத்தில் 'பசு' 'பாசம்' என்று பிற்காலத்தில் சைவ ஸித்தாந்தத்தில் பெரிசாக டெவலப் ஆன தத்வங்களின் பெயரையே குறிப்பிட்டிருக்கிறார். சக்தி மஹிமையை ஓஹோ என்று சிவனுக்கு மேலே சொல்லிக்கொண்டே போனவர் கடைசியில் அவளை சிவனுக்கு அடங்கிய பத்னியாகவே கொண்டுவந்ததற்கேற்க, சாக்த தத்வங்களை நிறையச் சொல்லிக்கொண்டு வந்தவர் முடிக்கும்போது சைவ ஸமயத் தத்வங்களில் இரண்டைச் சொல்லியிருக்கிறார்.

ஒன்று தோன்றுகிறது. மஹா சக்தியான பராசக்தியை ஏன் அவளுடைய ஸ்தோத்ரத்தின் முடிவில் சிவனுடைய தர்ம பத்னி என்றே வைத்துக் கொஞ்சம் அடக்கிச் சொல்லணும்? ஒரு காரணம் சொன்னேன், லோகத்திற்கான ஸ்த்ரீ தர்மத்தைக் காட்டித்தான் முடிக்கணும் என்பதால், என்று. இன்னொன்று என்ன தோன்றுகிறது என்றால் " ஆசார்யாள் விநய ஸ்வரூபம், விநய ஸ்வரூபம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிவந்திருக்கிறேனல்லவா? அதனாலே அவருக்கு இஷ்ட தெய்வமான அம்பிகையையும் முடிவாக விநய மூர்த்தியாகவே காட்டவேண்டும் என்று தோன்றியிருக்கலாம்! இன்னொரு தினுஸில் சொன்னால்: அம்பாளேதானே அவராகி, அவரைப் பாடப் பண்ணினதும்? அவளுக்கு முடிவிலே தன்னைப் பதியான பரமேச்வரனுக்கு ஆத்மார்ப்பணம் பண்ணி விநயத்தோடு அடங்கியிருக்கிற ஸதியாககக் காட்டினால்தான் த்ருப்தியாயிருந்திருக்கும்! அதனால் இப்படிப் பாடச் செய்திருப்பாள்!
(இந்த பாகம் இத்துடன் நிறைவு பெறுகிறது)

*கர்ப்பூர ஆரத்தி*
(இனி இன்றைய புதிய பாகம்)

*பரம மங்களமான ஸ்தோத்ரத்தின் பூர்த்தி ஸ்தானத்திற்கு வந்துவிட்டோம்*. 
லஹரி-ப்ரவாஹம் என்றால் அது ஒரு ஸமுத்ரத்தில் போய் ஸங்கமித்துப் பூர்த்தியாகத்தானே வேண்டும்? அப்படி இந்த வாக் லஹரியானது சப்த ப்ரஹ்ம ரூபிணியான ஸமுத்ரத்தில் ஸங்கமிப்பதாகப் பூர்த்தி பண்ணியிருக்கிறார். 'ஜல நிதி' என்று ஸமுத்ரத்தைச் சொல்வது தெரிந்திருக்கலாம். 'ஸலிலம்' என்றாலும் ஜலந்தான். "ஸலில நிதி" என்றே ஆசார்யாளும் நூறாவது ச்லோகத்தில் சொல்லி, சதகமாக முடித்திருக்கிறார்.

ப்ரதீப–ஜ்வாலாபிர்–திவஸகர–நீராஜந–விதி:
        ஸுதாஸூதேச்–சந்த்ரோபல–ஜல–லவை–ரர்க்ய ரசநா |
ஸ்வகீயை–ரம்போபி: ஸலிலநிதி–ஸெளஹித்ய–கரணம்
த்வதீயாபிர்–வாக்பிஸ்–தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம் ||

[(வாசாம் ஜனனி) வாக்குக்குப் பிறப்பிடமான தாயே! (திவஸகர) பகலைப் பிறப்பிப்பவனான ஸூர்யனுக்கு (ப்ரதீப-ஜ்வாலாபி: ) விளக்கின் ஒளியால் (நீராஜந விதி: ) தீபாராதனை உபசாரம் செய்வது போலவும், (ஸுதா ஸூதே: ) அமுதைப் பிறப்பிக்கும் சந்திரனுக்கு (சந்த்ரோபல) சந்திரகாந்தக் கல்லின் (ஜல லவை: ) நீர்த்துளிகளால் (அர்க்ய ரசநா) அர்க்ய உபசாரம் செய்வது போலவும், (ஸலில நிதி) கடலுக்கு (ஸ்வகீயை: ) அதனுடையதேயான (அம்போபி: ) நீரால் (ஸெளஹித்யகரணம்) தர்ப்பண உபசாரம் செய்வது போலவும் (த்வதீயாபி: ) உன்னுடையதேயான (வாக்பி: ) வாக்குகளாலேயே ஆன (இயம்) இந்த (தவ) உனது (ஸ்துதி) துதி [உள்ளது].]
(இந்த பகுதியின் மேல் உரைகள் மேலும் நாளை தொடரும்)
*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
*********************************************

*"Deivathin Kural*-Part-6*
*Maha Periyava's Discourses on Soundarya Lahari*
Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma  in advaitham.blogspot*. Our thanks.

*Part : SOUNDARYA LAHARI*
*அனைத்தும் பலன் அருளும் அன்னை வழிபாடு*
*Obeisance to AmbãL that Grants All Benefits*
(This chapter's yesterday's last paragraphs)
  
  Then for whom else is she the owner proprietor?  For Kãman aka Manmata too she is the basic source of power.  Her name itself is Kãmeswari, Kãmãkshi, Kãmakoti and such isn't it?   She has revived and reinstated him in his appointment, didn't she?  So he is also one of her devotees and considers it an honour to make AmbãL's devotees get such beauty and attractiveness for people to refer to them as having 'Manmata Akãram'!  In the sloka in which AmbãL's Soundaryam is the main subject, ÃchãryãL says that her devotee gets divine beauty.  Lakshmi and Saraswathi are female deities.  So the poet says that the devotee of AmbãL gets so wealthy and so illustriously learned and knowledgeable that their husbands are getting jealous looking at AmbãL's devotee.  As Manmata is a male deity, the poet says that AmbãL's devotee becomes so fetchingly beautiful that Rathi the wife of Manmata is wondering looking at AmbãL's devotee, if he is her husband, really!

 Wholesome knowledge, plenty of wealth and captivating beauty have been granted, what else is required.  One chap went to an astrologer and showed him his horoscope.  The astrologer studied the same and after some deliberation told him, "Everything is very good but only one thing is pending.  The time is fast coming up for your son to do obsequies for his father"!  That one last thing takes away everything else, isn't it?  What is the use if that sort of a thing happens to the devotee of AmbãL?  It does not happen like that ÃchãryãL says!  He gets longevity too, along with good health also being given automatically!  Otherwise what is the use of longevity without good health?  As the Tamil proverb says, "noyarra vãzhve kuraivu arra selvam" – "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"!  So, the devotee of AmbãL gets that also!

   What else do we want?  Only after this the poet, our ÃchãryãL talks about the most important benefit.  When we live long enough with knowledge, wealth and beauty; that knowledge will make us question ourselves one day or the other, as to what have we achieved with all those assets?  We have gone in for only temporary pleasures and not permanent comfort.  Enough of all this!  Let us find the way for eternal happiness, a status unrelated to anything transient.  The same Upãsana that we have done all along will suffice but there has to be an attitudinal shift in ourselves.  We have so far been praying to AmbãL for transient, worldly benefits only.  Let our Upãsana from now onwards be for the permanent benefits of intrinsic and internal maturity and AmbãL will grant that.  One may be endowed with Arivu, Aisvaryam and ÃyuL with Ãrogyam (four 'A's) even as a result one's own past deeds over life-times and one may go on without a thought of Ãtma-chintan and go on with only the fringe benefits of existence!  We see that happening in the case of many on earth.  But there comes a time, to those who have got all these four 'A's, when they are satiated with them and think about the reality of existence and maturity dawns on them.  Then the devotee of AmbãL gets –

चिरं जीवन्नेव क्षपित-पसु-पाश-व्यतिकर:
chiram jeevanneva kshapita-pasu-pãsha-vyatikara:
परानन्दाभिख्यं रसयति रसं त्वत-भजनवान् ||
Paraanandãbhikhyam rasayati Rasam tvat-bhajanavãn || - 
that means, "Your devotee who is doing your Upãsana with longevity with all attachments to things and people, starts dropping those attachments, and thrives in the highest thrill of Brhmãnandam of oneness!"
(Continuing from here today)

   What is this phrase 'pasu-pãsa' in the two lines quoted above really mean?  For a person without control on one's own mind, the animalistic tendencies to go by every which way the Indriyas and nature manipulates oneself, is what is being a 'pasu'.  Then he is tied to 'janma', the compulsion to repeated births by the rope of Karma.  This tying rope is the attachment – Pãsa.   It is desire – aka 'Ashã' with inescapable rope Pãsa, which in Tamil is said to be – 'ஆசாபாசம்', which makes him go round and round in the 'samsara chakra' – the cycle of repeated births and deaths!  The knife of Gnãna cuts this rope of attachment, relieving this animal from being tied-up (and thereby get bogged down in the whirl-pool of the ocean of attachment), grants this individual 'வீடு' – home – sanctuary and everlasting freedom!  Then he is no more the 'Pasu the animal, but Pasupati' that is Siva!  What the sloka calls the 'Para Anandam' is the Brhmãnandam as he becomes the one with the only reality as the Adwaita Rasam!  That is eternal bliss forever, the Adwaita Moksha Anandam.  It is not said that he drinks that Rasam or enjoys it – 'Rasam pibhati' – or 'aswãdayati' –but turning a noun into verb, the poet says 'rasayati', meaning the enjoyer becomes inalienably one with the object and act of enjoyment! 

    If we say that he becomes, does it mean that he becomes so on his own?  No, she causes him to become one with herself as a result of his devotion.  Then one who pushed him in to duality from Adwaitam in to evolution, pulls him back unto oneness in involution as a prerogative of hers!  She does that to the one who adores her as the only resort.  Still here too, this ÃchãryãL of Adwaitam is using the two terms 'Pasu and Pãsam' which were much enlarged in Saiva Siddhãntam in later days, in his equanimity towards other's points of views. He who had placed Shakti far above Siva in his poems all along by expanding on Sãkta line of philosophy in this Soundarya Lahari, true to depicting her as a woman much subservient to her husband, has made use of two typical terms of value in Saiva Siddhãntam.

  One thing occurs to me as to why should he limit that unlimited power of Parãshakti as a woman, as being obedient to her husband.  One reason I told you earlier was the need to make it according to the way it should ideally happen in the world.  Another idea that occurs to me is that, as I have been repeatedly emphasizing the fact that ÃchãryãL is the very personification of 'Vinaya' – that is modesty and humbleness it is natural that he would wish to portray her also in a similar mould.  Another way of looking at it is that, she is the one who has caused him to sing her praise.  She would have been satisfied only by a depiction of her as the very demure, modest and subservient wife of her husband, in the rightness of the ideal.  So, she would have induced ÃchãryãL to depict her as a model of Vinaya thus!
(This chapter ends here)

*கற்பூர ஆரத்தி*
*Burning Camphor as 'Ãrati*
(Today's new chapter)

  *We have come to the end of a most auspicious stotra – the Soundarya Lahari*. 
 A flowing river has to end in the ocean and then only it can be considered as wholesomely beneficial, isn't it?  This flow of the sound of words must finish in the 'Shabda Brhmam'.  That is what the poet has done.  The Bible says, 'In the beginning there was the word and word was with God and the word was God'!  So this flow of words, of Soundarya Lahari, The Flow of Beauty, about the Ultimate must end in God.  The ocean is called 'Jala Nidhi', in which 'Jala' means water and 'Nidhi' means a fund or repository.  'Salila' also means water and hence 'Salila Nidhi' means an ocean.   ÃchãryãL has finished his 100th sloka of the flow of beautiful words, by offering obeisance to the ocean – 'Salila Nidhi' by its own water / its own words that is, the words of God, as a 'Sadakam' meaning a 'collection of hundred poems'!

  The 100th sloka of Soundarya Lahari is as follows: 

प्रदीप-ज्वालाभिर्-दिवसकर-नीराजन-विधि:
pradipa jwãlãbhir divasakara neerãjana vidhi:
सुधासूतेस्चन्द्रोपलजललवैरर्घ्य रचना |
sudhãsoothe: chandropala jalalavai: arghya rachana 
स्वकीयैरम्भोभि: सलिलनिधि सौहित्यकरणं
svakeeyai: ambhibhi: salilanidhi souhitya karaNam
त्वदीयाभिर्वाग्भिस्तव जननि वाचां स्तुतिरियम् ||
Tvadeeybhi: vãkbhistava janni vãchãm Stuti: iyam ||

 The word to word meaning of the above sloka is as follows: -
वाचां जननि = Mother who is the spring of all speech!  Like showing light to दिवसकर = the Sun who creates the day, नीराजन-विधि: = waving lighted camphor; सुधासूते: = for the one who produces Amrita, the Chandra, चन्द्रोपलजललवै; = by the drops of water that oozes from the Chandra Kanta stone (when the moon light falls on it) अर्घ्य रचना = offering Arghyam; for सलिलनिधि = the repository of water, the Ocean, स्वकीयैरम्भोभि: = by its own waters, सौहित्यकरणं offering hospitality; त्वदीयाभिर्वाग्भिस्तव = by your own words, I am doing स्तुतिरियम् = these prayers to you!

(Continuing with further texts of this chapter tomorrow also)
*Maha Periyava Thiruvadigal Charanam*

Saturday, July 17, 2021

Oru vasagam enru unar - Periyavaa

श्री गुरुभ्यो नमः। सर्वेभ्यः सुप्रभातं नमस्कारः च। ஶ்ரீ குருப்யோ நம:! அனைவருக்கும் நற்காலையும் வணக்கங்களும்!

Today's "amruta bindu" from Sri Chandrasekaramrutham - 21.01.21:

* ஆழ்வார்கள் விஷ்னுபரமாகப் பாடி வைத்துள்ளார்கள்; நால்வர்கள் சிவபரமாகப் பாடினார்கள்.

* வேதத்தில் சகல தெய்வங்களையும் ஒரே மாதிரி ஸ்தோத்திரம் செய்திருக்கிறது.

* உபநிஷத்து என்று போனால், அங்கே தெய்வங்களைப் பற்றி அதிகம் பேச்சில்லாமல் எல்லாம் ஆத்ம தத்துவமாகச் சொல்லியிருக்கிறது.

* இங்கே திருவள்ளுவரை எடுத்துக்கொண்டால் அவர் தெய்வம், தத்வம் இவற்றைப் பற்றி வைதீக சம்பிரதாயப்படியே சொல்லியிருந்தாலும், அதைவிட ரொம்ப அதிகமாகத் தர்மங்கள், நன்னெரிகள் (Morals, Ethics) இவற்றையே சொல்கிறார்.

* இன்னொரு பக்கம் திருமூலரைப் பார்த்தால், அங்கே ஸ்வாமி பக்தி என்பதைவிட பிராணாயாமம், த்யானம், தாரணை, சமாதி போன்ற யோக சமாச்சாரங்கள் தான் நிறைய வருகின்றன.

* "இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சொன்னால் எதை எடுத்துக் கொள்வது?" என்றால் எதை எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை என தான் நான் சொல்வேன்.

* நாம் எடுத்துக்கொண்டதை நடுவிலே விடாமல், அதையே நம்பிக்கையோடு பிடித்துக்கொண்டு போய்க்கொண்டே இருந்தால் முடிவில் எது பரமார்த்த சத்யமோ அதையே அடைந்து விடுவோம். ஆரம்பத்தில் இவை வேறு வேறு வழிகளாகத் தோன்றினாலும், முடிவில் எல்லாம் கொண்டு சேர்க்கிற இடம் ஒன்று தான்.

"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்."

Sunday, July 11, 2021

Soundarya Lahiri part6-Periyavaa

*தெய்வத்தின் குரல*் - *ஆறாம் பகுதி*
(மஹா பெரியவா அருளுரை)
*ஸெளந்தர்ய லஹரி*

*அனைத்துப் பலன் அருளும் அன்னை வழிபாடு*
(நேற்று தொடங்கிய இந்த பாகத்தின் கடைசி உரைகள் மீண்டும் ஒருமுறை இன்றும்)

அறிவு கல்வியாலேயே உண்டாவது. அதனால் வித்யாதாயினியான ஸரஸ்வதியோடு ஸம்பந்தப்படுத்தி அதைச் சொல்கிறார். இங்கே எல்லா நலனும் கொடுப்பது அம்பாள் ஒருத்திதான். ஸரஸ்வதி முதலானவர்களில்லை. செய்வது அம்பாளுபாஸனைதானே? அதனால் அவளே ஸரஸ்வதி அளிப்பதான அறிவையும் அளிக்கிறாள். எந்த அளவுக்கு என்றால் ப்ரஹ்மாவே அஸூயைப் படுமளவுக்கு ஏகமாக அள்ளி அளிக்கிறாளாம்! ப்ரஹ்மாவை ஏன் இழுக்கணுமென்றால்: ஸரஸ்வதி விலாஸம் பரிபூர்ணமாய் இருக்கும் ஸ்தானம் அவளுடைய பதியான ப்ரஹ்மாவாகத்தானே இருக்க முடியும்? நாலு வேதத்தை நாலு வாயால் அவர் சொல்லிக் கொண்டேயிருக்கிறாரென்றால் அதற்கு மிஞ்சியொரு ஸரஸ்வதி விலாஸமுண்டா? ஆனால் அதையும் மிஞ்சிய வித்வத்தை, அறிவை, அம்பாள் தன்னுடைய பக்தனுக்கு அநுக்ரஹித்துவிடுகிறாள்! அவனைப் பார்த்துத்தான், "நம்முடைய பத்னியின் விலாஸம் நம்மைவிட ஜாஸ்தியாய் இவனிடம் இருக்கிறதே!" என்று ப்ரஹ்மா அஸூயைப்படுகிறார்!

அடுத்தபடி ஐச்வர்யம் –- பணம், காசு, ஸொத்து முதலானது.

ஆசார்யாள் இப்படி [அறிவுக்கு அடுத்தபடியாக ஐச்வர்யத்தை] சொல்லியிருந்தாலும் நம் 'சாய்ஸு'க்கே விட்டால் இதைத்தான் முதலில் கேட்போம்! நாம் ஆசைப்படுவது ஐச்வர்யத்திற்குத்தான்! அப்புறந்தான் அறிவைக் கேட்டால் கேட்போம். எது கேட்டாலும் தருகிறேன் என்று சொல்லிக்கொண்டு இப்போது இங்கே பகவான் ப்ரஸன்னமானால் முக்காலே மூணுவீசம் பேர் பணத்தைத்தான் கேட்போம்! அது எவ்வளவு இருந்தாலும் போதுமென்றே தோன்றாமல் இன்னும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றச் செய்வது!

அறிவு, ஐச்வர்யம், அழகு மூன்றுமே நமக்கு வேணும் என்றுதான் இருந்தாலும் ஐச்வர்யத்திற்குத்தான் நம் சாய்ஸில் முதலிடம். இதிலே ஒரு வேடிக்கை! நாம் எப்போதுமே, இப்போதுங்கூட, அறிவாளிதான் என்ற எண்ணம் நமக்கு இருக்கிறது! நம்மை அறிவாளியாகவே லோகத்திற்குக் காட்டிக்கொள்ளப் பார்த்து ஜாஸ்தி அசடு வழிகிறோம்! அறிவை நிஜமாகவே பெறுவதற்கு அப்படியொன்றும் தாபப்படுவதோ, முயற்சி பண்ணுவதோ இல்லை. பணத்திற்குத்தான் தாபம், முயற்சி எல்லாம்! அதே மாதிரி நாம் ரொம்ப அழகு என்றும் எண்ணம் நமக்கு இருக்கிறது. நம்மை லோகமும் அப்படியே நினைக்க வேண்டுமென்று எண்ணுகிறோம். ஆனால் இங்கே அறிவுக்கு முயற்சி பண்ணாத மாதிரி சும்மாயிருந்து விடுவதில்லை. நம்மை எப்படியெல்லாம் அலங்காரம் பண்ணிக்கொண்டு அழகுபடுத்திக் கொள்ளலாமோ அவ்வளவும் பண்ணிக் கொள்கிறோம்! அதனாலேயே பிறத்தியாரின் பரிஹாஸத்திற்கு ஆளாகிறோம்! இப்படி இந்த இரண்டில் இருந்தாலும் ஐச்வர்ய விஷயத்திலே மாத்திரம் வித்யாஸமாயிருக்கிறது! நமக்கு நிரம்ப அறிவு, அழகு இருக்கிறதென்று நினைக்கிற மாதிரி, நிரம்ப ஐச்வர்யம் இருப்பதாக ஒருநாளும் நினைப்பதில்லை; த்ருப்திப்பட்டு விடுவதில்லை. கோடி ரூபாயிருந்தாலும், 'வேண ஐச்வர்யமிருக்கு; இன்னும் வேண்டாம்' என்று தோன்றுவதில்லை! லோகத்திற்கோ நம் ஐவேஜியைக் காட்ட நாம் இஷ்டப்படுவதேயில்லை. எத்தனை இருந்தாலும் இல்லாத மாதிரியே வேஷம் போடுவோம்! பஞ்சப்பாட்டே பாடிக் கொண்டிருப்போம்! ஐச்வர்யந்தான் நம்முடைய first preference.
(இனி இன்றைய தொடர்ச்சி)

ஆனாலும் ஆசார்யாளோ முதலில் அறிவைச் சொல்லி அப்புறமே ஐச்வர்யத்தைச் சொல்கிறார். ஏனென்றால் என்னதான் நமக்காக விட்டுக்கொடுத்து அவர் இஹ நலன்களையும் சொன்னாலும் அவற்றுக்குள்ளே உத்க்ருஷ்டமாக இருக்கப்பட்ட அறிவைப் பின் ஸ்தானத்திற்குத் தள்ள அவருக்கு மனஸ் வரவில்லை! அதோடு நம் நல்லதையே நினைக்கிற அவருடைய அருள் மனஸுக்கு, "அறிவை முதலில் தராமல் ஐச்வர்யத்தைக் கொடுத்தால் அதை ரொம்பவும் ஆத்ம ஹானிகரமாக அல்லவா ப்ரயோஜனப்படுத்திக் கொள்வார்கள்? அவர்கள் ஸ்வயமாக எதை முதலில் கேட்டாலும், நாம் அவர்களுக்கு முதல் பக்ஷமாகக் கேட்கச் சொல்லித் தர வேண்டியது அறிவைத்தான். அறிவைத் தந்து அப்புறம் ஐச்வர்யம் தந்தால்தான் பணத்தை தார்மிகமாகச் செலவு பண்ணி அதையும் ஆத்ம அபிவிருத்திக்கு அநுகூலமாக்கிக் கொள்வார்கள்" என்று நினைத்து முதலில் அறிவு தேவதையான ஸரஸ்வதி விலாஸத்தைச் சொல்லி அடுத்த படியாகவே ஸம்பத்துகளுக்குத் தெய்வமான லக்ஷ்மி விலாஸத்திற்கு வருகிறார். தைத்திரீயோபநிஷத்தில் அறிவை 'மேதை' என்று சொல்லி, ப்ரார்த்தித்துவிட்டு (I.4.1) 'அதற்கப்புறம் (ததோ) ஸ்ரீயைக் கொடு' என்று ப்ரார்த்தனை (I.4.2.) வருகிறது. அதற்கு பாஷ்யம் பண்ணும்போது ஆசார்யாள், இப்படி ஏன் சொல்லியிருக்கிறதென்றால், "அமேதஸோ ஹி ஸ்ரீ: அந்ர்த்தாய ஏவ இதி" -– 'அறிவில்லாதவனுக்குப் பணத்தைக் கொடுத்தால் அனர்த்தமே உண்டாகும் என்பதாலேயே இப்படிச் சொன்னது' என்கிறார். 'பஜ கோவிந்த' ஸ்தோத்ரத்திலும் ஆசார்யாள், "அர்த்தம் எனப்படுகிற செல்வம் வாஸ்தவத்தில் அனர்த்தந்தான் என்று ஸதாவும் நினைவில் வைத்துக்கொள் –- அர்த்தம் அநர்த்தம் பாவய நித்யம்" –- என்கிறார்.

ஸரஸ்வதி விலாஸம் ப்ரம்மாவிடம் பூர்ணம் என்றால் லக்ஷ்மி விலாஸம் பூர்ணமாயிருப்பது மஹாவிஷ்ணுவிடம். அதனால்தான் அவர் கிரீட, குண்டலாதி ஆபரணங்கள், கெளஸ்துபம், பீதாம்பரம் எல்லாம் போட்டுக்கொண்டு வைகுண்ட சக்ரவர்த்தியாய் தர்பார் நடத்துகிறார். அம்பாளை உபாஸித்து அவள் அநுக்ரஹத்தில் ஐச்வர்யவானாகிறவன் அந்தப் பெருமாளையும் மிஞ்சி விடுகிறானாம்! அதனால் அவரும் அவனைப் பார்த்து, "நம்முடைய பத்னியின் விலாஸம் நம்மைவிட ஜாஸ்தியா இவன்கிட்டே இருக்கே!" என்று அஸூயைப்படுகிறாராம்!

அம்பாளுக்கு இரண்டு பக்கமும் லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் சாமரம் போடுவதாக ஸஹஸ்ரநாமத்தில் இருக்கிறது: "ஸ சாமர ரமா வாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா". இவளுக்கு அவர்கள் சேடிகள் என்கிறபோது இவளுடைய உபாஸகனுக்கும் அவர்களுடைய விலாஸம் யதேஷ்டமாகக் கிடைப்பதில் ஆச்சர்யம் இல்லைதானே?

இதற்கு முன்னாடி, 'நீயே ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி எல்லோரும்: மூலத்தில் நீயே துரீய ப்ரஹ்மத்தின் மஹிஷி' என்றபோது, ஸரஸ்வதி லக்ஷ்மிகளை வித்யா தேவதை, ஐச்வர்ய தேவதை என்று வைக்காமல் ஸ்ருஷ்டிகர்த்தாவின் சக்தி, ஸ்திதிகர்த்தாவின் சக்தி என்றே வைத்துச் சொன்னார். அவர்கள் ஒவ்வொரு க்ருத்யத்தின் மூர்த்திக்கு சக்தி என்றால், அம்பாள் ஒரு க்ருத்யமும் இல்லாத நிஷ்க்ரிய ப்ரஹ்மத்திற்குள் அடங்கியிருக்கிற ஸர்வ சக்தி, அவள்தான் அத்தனை க்ருத்யத்திற்கும் மூலம் என்று காட்டினார். இங்கே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் அவர்களாகவே எது எதற்கு தெய்வமோ அந்த வித்யைக்கும் ஐச்வர்யத்துக்கும் அம்பாள்தான் மூலம்; இவளை உபாஸிப்பதாலேயே அவையும் கிடைக்கின்றன என்று தெரிவிக்கிறார்.

அப்புறம், அம்பாள் இன்னம் எந்த தேவதைக்கு முக்யமாக யஜமானியாயிருக்கிறாள்? காமனுக்கு. இவள் பேரே காமேச்வரி, காமாக்ஷி, காமகோடி என்பதுதானே? அவனைத்தானே இவள் உயிர்ப்பித்து 'ரீயின்ஸ்டேட்' [அதிகாரத்தில் மீண்டும் நியமனம்] செய்தது? அவனும் இவளுடைய பக்தன். மூன்றாவதாக விரும்புகிற அழகைக் கொடுத்து அவனை 'மன்மதாகாரம்' என்னும்படியே ஆக்கிவிடுகிறான்! அம்பாளுக்கே ஸெளந்தர்யத்தை ப்ரதானமாகச் சொல்லும் ஸ்தோத்ரத்தில் உபாஸகனுக்கும் திவ்ய ஸெளந்தர்யம் கிடைப்பதாகச் சொல்கிறார். ஸரஸ்வதி லக்ஷ்மிகள் ஸ்த்ரீ தேவதைகள். அதனால் அவர்களுடைய பதிகளுக்கு அஸூயை ஏற்படுகிற அளவுக்கு தேவீ பக்தன் அறிவும் ஐச்வர்யமும் பெறுவதாகச் சொன்னர். புருஷ தேவதையான மன்மதனின் விலாஸம் பூர்ணமாக ஏற்படுவதைப் பற்றிச் சொல்லும்போது, மன்மத பத்னியான ரதி அந்த உபாஸகனைப் பார்த்து தன்னுடைய பதியேதானோ என்று நினைப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

நிறைந்த அறிவு, நிறைந்த ஐச்வர்யம், நிறைந்த ஸெளந்தர்யம் கிடைச்சாச்சு. இன்னும் ஏதாவது வேண்டுமா?…. ஜோஸ்யர் ஜாதகம் பார்த்துவிட்டு ஒருத்தனுக்குப் பலன் சொன்னாராம். "எல்லாம் பேஷாயிருக்கு ஒண்ணே ஒண்ணு; உன் பிள்ளைக்குக் கர்மத்துக்கு அதிகாரம் வந்துடுத்து" என்றாராம்! அந்த ஒண்ணே பாக்கி எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விடுகிறதல்லவா? அம்பாள் பக்தனுக்கும் அப்படி ஆகிவிட்டால் என்ன ப்ரயோஜனம்? ஆவதில்லை என்கிறார். அவனுக்கு தீர்க்காயுஸும் கிடைக்கிறது. சிரஞ்ஜீவியாயிருக்கிறான் என்கிறார்: "சிரம் ஜீவந்நேவ". அழகான நல்ல தேஹ காந்தியோடு ஒருத்தன் தீர்க்காயுஸாயிருக்கிறான் என்பதிலேயே அவனுக்கு நல்ல ஆரோக்யமும் அநுக்ரஹிக்கப்படுவதாக ஆகிவிடுகிறது. 'நோயற்ற வாழ்வை'த்தானே 'குறைவற்ற செல்வம்' என்பது? அதுவும் அம்பாள் பக்தனுக்குக் கிடைப்பதாக ஆகிறது.

இன்னும் என்ன வேணுமென்றால், இனிமேல்தான் அம்பாளுபாஸனை தருகிற பர நலனை, தலையான பெரிய நலனைச் சொல்கிறார். அறிவு, ஐச்வர்யம், அழகு முதலியவற்றோடு தீர்க்க காலம் ஜீவிக்கிறபோது, தானாகவே ஒரு கட்டத்தில் அந்த அறிவு, 'இந்த அழகையும் ஐச்வர்யத்தையும் வைத்துக்கொண்டு என்ன ஸாதித்தோம்? நித்ய ஸுகத்திற்கு ஒன்றும் வழி பண்ணிக் கொண்டதாகத் தெரியவில்லையே! போதும் இதெல்லாம்! அதற்கு மார்க்கம் தேடிக் கொள்வோம். புது மார்க்கம் என்று எதற்கும் போகவேண்டாம். இவற்றுக்காக, இஹத்துக்காக இத்தனை காலமாகச் செய்து வந்த அம்பாளுபாஸனையையே இனிமேலே பரத்துக்காகச் செய்வோம். அவளிடம் அதையே வேண்டுவோம்' என்று நினைக்க ஆரம்பிக்கும். அப்போது அம்பாள் தன்னுடைய பரமாநுக்ரஹத்தைப் பண்ணுவாள். அம்பாளை உபாஸிப்பதனால் இல்லாமல் பூர்வ கர்மாநுஸாரமாகவே ஒருத்தருக்கு அறிவு, பணம், அழகு, ஆரோக்யம் எல்லாம் வாய்க்கிற பக்ஷத்தில் எத்தனை வயஸானாலும்கூட ஆத்ம சிந்தனை வராமல், இதுகளோடேயே நின்றுவிடுவதாக இருக்கும். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் பார்க்கிறோம். ஆனால் பக்வ புஷ்டியில்லாத ஸ்டேஜில் அவளை உபாஸித்தே இவற்றைப் பெற்றவர்களுக்கு அப்புறம் அவை திகட்டிப்போய் பாரமார்த்திகத்தில் மனஸு திரும்புகிற பக்வம் வராமல் போகாது. அப்போது என்னவாகிறதென்றால்

"சிரம் ஜீவந்நேவ க்ஷபித–பசு–பாச–வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் தவத்–பஜநவாந் ||

— 'உன்னை பஜிப்பவன், உன் உபாஸகன், சிரஞ்ஜீவியாக இருந்துகொண்டு, பசு-பாசங்களின் ஸம்பந்தம் விலகப் பெற்றவனாகி, ப்ரஹ்மானந்தம் என்று புகழ்பெற்ற ரஸத்தை ரஸிக்கிறான்'.
(இந்த பகுதியின் மேல் உரைகள் மேலும் நாளை தொடரும்)
*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
*********************************************

*"Deivathin Kural*-Part-6*
*Maha Periyava's Discourses on Soundarya Lahari*
Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma  in advaitham.blogspot*. Our thanks.

*Part : SOUNDARYA LAHARI*
*அனைத்தும் பலன் அருளும் அன்னை வழிபாடு*
*Obeisance to AmbãL that Grants All Benefits*
(This chapter's yesterday's last paragraphs)
  
   Knowledge is by education.  So it is related to 'vidya dãyini' – 'विद्या दायिनि' Saraswathi, who is the Goddess of Learning.  Here AmbãL gives all these benefits and more.  Saraswathi is not the foremost. What we are doing is AmbãL Upãsana, isn't it?  So she provides what is given by Saraswathi also.  To what extent does she give us 'Arivu'?  She does so plentifully that Brhma, Saraswathi's husband is jealous, it seems.  Why bring in Brhma in this comparison?  If that is your question, please tell me as to who should be totally influenced by the effectiveness of Saraswathi's abilities?  Her husband Brhma, isn't it?  He is said to be chanting the four Vedas by each of his four mouths.  Can somebody be more knowledgeable?  But AmbãL sanctions greater 'Vidwat' to her devotee than even Brhma, resulting in Brhma feeling jealous that this man seems to have had more knowledge than me!

  Next is about money, wealth, assets and properties!  Left to ourselves we would have asked for this as the first choice.  What we love is 'aisvaryam' and then may be knowledge, so that we can turn it into money!  If just now God were to come in front of us saying that he will grant us whatever we ask for, most of us will be asking for wealth only.  Because more of wealth will make us want more!  Like one of the quotes from Mahatma Gandhi is, "There is enough in this world for everybody's needs but, there isn't enough for even one man's greed!"   Though we feel that we need 'Arivu, Aisvaryam, and Azhagu', somehow our preference is always for Aisvaryam, the wealth.  One funny thing in this!  We have a feeling that we are always, even now know what we are talking.  I am alright.  I am a sensible knowledgeable human being, is the conviction we always have in our minds.   In trying to show the world that we know everything, we often make a fool of ourselves.  Neither do we try to become more knowledgeable nor do we aspire for it much.  All our aspirations and efforts are directed for becoming more beautiful and wealthier!  As we are not trying hard to become better informed, when it comes to wealth and beauty we try really hard!  By this we often become the target of ridicule. 

  Though that is how we behave in the matter of knowledge and beauty, that is, we believe that we are knowledgeable enough and beautiful enough; we never have a feeling of enough as far as money and wealth is concerned!  We may be very rich but do not feel satisfied in the matter of wealth!  One may be a millionaire or billionaire, but still want more!  This is one area where man is never satisfied!  We are afraid of the Income Tax Department or the dreaded I.R.S. in USA and others who may ask for donation or some help!  So we disguise ourselves as a pauper or a beggar!  So finally, Aisvaryam is our first preference!
(Continuing from here today)

   But ÃchãryãL is placing Arivu first and then only mentioning other items of the agenda!  Because, however much he is ready to accommodate our tendencies, he is not ready to push this subject of Knowledge down in the order of preference.  Moreover, he who is forever interested in our up-lift and ennoblement of the common man felt that, instead of asking for Arivu, if we are given wealth first, will it not be misused by people?  So, it is my responsibility to recommend that they should be asking for Arivu, the sense to have for the right attitude towards life in general and the correct preferences.  First if we are given the right sense and then wealth we will make proper use of our wealth for the good of people and further progress ourselves also intrinsically.  With this intention only he is talking about the bounty and bonanza from Saraswathi. the Goddess of Learning and Knowledge first and then comes to Lakshmi, the Goddess of Wealth. 

    In Taitreeya Upanishad Arivu is called as 'Medha' which is prayed for (I.4.1) and then after that (tato – तथो) the prayer is for Sri, the Wealth.  While writing the Bhashyam for that, our AcharyaL has explained, 'amedaso hi sri: anarthãya eva iti' – 'अमेदसो हि श्री: अनर्थाय एव इति', meaning 'if an idiot is endowed with wealth he is likely to create more problems than otherwise'!  In Bhaja Govindam stotra also our ÃchãryãL has emphasised with endearing rhyme and reason, asking us to remember once every day that ('Artham' that is) wealth can only mostly create more ('un-Artham' that is) problems than it can solve – 'artham unartham bhãvaya niutyam' – 'अर्थं अनर्थं भावय नित्यं'!

  If the Saraswathi's endowment is complete with Brhma, Lakshmi's largesse is total with Maha Vishnu.  That is how he is sporting the royal dress of golden ornaments of crown, rings, necklaces and wearing yellow silk holding court like the Emperor of the Universe that he is!  This devotee of AmbãL it seems by her bounty beats that Maha Vishnu also hands down!  Looking at him PerumaL Maha Vishnu feels, "What is this, this man seems to be better endowed with Lakshmi Katãksham than ourselves!  How is that?"  Lakshmi and Saraswathi are said to be standing on either side of AmbãL as maids waving the ceremonial fan 'Chãmara', as Lalitha Sahasranãma says, 'sachãmara rama vãNi savya dakshina sevita' – 'सचामर रमा वाणी सव्य दक्षिण सेविता'.  So it is but natural that her devotees get the grace of Lakshmi and Saraswathi aplenty. 

   A little before this when saying, "You are yourself, Saraswathi, Lakshmi and Parvathy, they are being considered as the respective counterparts of the power of the Karta for Srushti and Stiti.  As the Mahishi of Parabrhmam, they are all part and parcel of the one source of all powers.   So, as she is the 'Tureeya', Lakshmi and Saraswathi on their own are considering her as the source of all their powers too.   Hence ÃchãryãL is telling us that by being the devotee of that one source, one stands to get all those powers too as from whichever Devata for whichever greatness, AmbãL is the root cause for all their powers too.  Then for whom else is she the owner proprietor?  For Kãman aka Manmata too she is the basic source of power.  Her name itself is Kãmeswari, Kãmãkshi, Kãmakoti and such isn't it?   She has revived and reinstated him in his appointment, didn't she?  So he is also one of her devotees and considers it an honour to make AmbãL's devotees get such beauty and attractiveness for people to refer to them as having 'Manmata Akãram'!  In the sloka in which AmbãL's Soundaryam is the main subject, ÃchãryãL says that her devotee gets divine beauty.  Lakshmi and Saraswathi are female deities.  So the poet says that the devotee of AmbãL gets so wealthy and so illustriously learned and knowledgeable that their husbands are getting jealous looking at AmbãL's devotee.  As Manmata is a male deity, the poet says that AmbãL's devotee becomes so fetchingly beautiful that Rathi the wife of Manmata is wondering looking at AmbãL's devotee, if he is her husband, really!

 Wholesome knowledge, plenty of wealth and captivating beauty have been granted, what else is required.  One chap went to an astrologer and showed him his horoscope.  The astrologer studied the same and after some deliberation told him, "Everything is very good but only one thing is pending.  The time is fast coming up for your son to do obsequies for his father"!  That one last thing takes away everything else, isn't it?  What is the use if that sort of a thing happens to the devotee of AmbãL?  It does not happen like that ÃchãryãL says!  He gets longevity too, along with good health also being given automatically!  Otherwise what is the use of longevity without good health?  As the Tamil proverb says, "noyarra vãzhve kuraivu arra selvam" – "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"!  So, the devotee of AmbãL gets that also!

   What else do we want?  Only after this the poet, our ÃchãryãL talks about the most important benefit.  When we live long enough with knowledge, wealth and beauty; that knowledge will make us question ourselves one day or the other, as to what have we achieved with all those assets?  We have gone in for only temporary pleasures and not permanent comfort.  Enough of all this!  Let us find the way for eternal happiness, a status unrelated to anything transient.  The same Upãsana that we have done all along will suffice but there has to be an attitudinal shift in ourselves.  We have so far been praying to AmbãL for transient, worldly benefits only.  Let our Upãsana from now onwards be for the permanent benefits of intrinsic and internal maturity and AmbãL will grant that.  One may be endowed with Arivu, Aisvaryam and ÃyuL with Ãrogyam (four 'A's) even as a result one's own past deeds over life-times and one may go on without a thought of Ãtma-chintan and go on with only the fringe benefits of existence!  We see that happening in the case of many on earth.  But there comes a time, to those who have got all these four 'A's, when they are satiated with them and think about the reality of existence and maturity dawns on them.  Then the devotee of AmbãL gets –

चिरं जीवन्नेव क्षपित-पसु-पाश-व्यतिकर:
chiram jeevanneva kshapita-pasu-pãsha-vyatikara:
परानन्दाभिख्यं रसयति रसं त्वत-भजनवान् ||
Paraanandãbhikhyam rasayati Rasam tvat-bhajanavãn || - 
that means, "Your devotee who is doing your Upãsana with longevity with all attachments to things and people, starts dropping those attachments, and thrives in the highest thrill of Brhmãnandam of oneness!"
(Continuing with further texts of this chapter tomorrow also)
*Maha Periyava Thiruvadigal Charanam*

Friday, July 9, 2021

Soundarya Lahiri part5 -Periyavaa

*தெய்வத்தின் குரல*் - *ஆறாம் பகுதி*
(மஹா பெரியவா அருளுரை)
*ஸெளந்தர்ய லஹரி*

*ஆசார்யாள் விடுக்கும் எச்சரிக்கை!*
(இந்த பகுதியின் நேற்றைய கடைசி உரைகள்)

இப்படி நவாவரணத்தின் வெளிக்கோடியில் பொம்மனாட்டி தர்வான்களாக  -– காவல்காரிகளாக –- அணிமாதி ஸித்தி தேவதைகள் இருக்கிறார்கள். ஸாவரின் பவரே பொம்மனாட்டிதானே? அதனால் பரிவாரத்திலும் ஒரே ஸ்திரீ மயம்! அஷ்டா மா ஸித்தி, ஸித்தர்கள், சித்து விளையாட்டு என்றெல்லாம் கேள்விப்படுகிறோமல்லவா? அப்படிப்பட்ட, இயற்கைக்கு வித்யாஸமான, ஆச்சர்யமான சக்திகள் எட்டு. அணிமா என்பது அதில் முதல். அதைப் பெற்றால் ஒருவர் அணு மாத்ரமாகச் சுருங்கிவிடலாம். ஒரே பெரிசாகப் பெருக்க 'மஹிமா' என்பதில் ஸித்தி பெற வேண்டும். இப்படி எட்டு. இவற்றோடு இன்னம் இரண்டு கூட்டி அந்த ஸித்திகளுக்கான பத்து தேவதைகளும் நவாவரண வெளியோரக் காம்பவுண்டில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

இவர்களிடம் யாசித்துக்கொண்டு வந்து நிற்பவர்கள். இவர்களைத் தாண்டி அடுத்த அங்கணத்துக்குப் போக அந்தஸ்து பெறாதவர்கள், யார் என்று சொல்கிறார் : "சதமக முகா:" என்கிறார். 'நூறு யாகம் பண்ணிய இந்திரன் முதலானோர்' என்று அர்த்தம்! ['சத' – நூறு; 'மக' – யாகம்.]

இந்த்ரன் அம்பாளிடமே ஞானோபதேசம் பெற்றுக் கொண்டு ஞானியானவன், முருகனோடும் மஹாவிஷ்ணுவோடும் அவனும் அம்பாளிடம் தாம்பூல உச்சிஷ்டத்திற்காகப் போனான் என்றெல்லாம் சொன்னவர், இங்கே ஏன் இப்படி அவன் காவல்காரிகளிடம் பல்லைக் காட்டுகிறான். அவனுக்கு வெளிக் காம்பவுண்டைத் தாண்டி வர அந்தஸ்து இல்லை என்கிறார்?

அவர் ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லை. ஆதி ஸ்ருஷ்டியிலிருந்து இன்று வரை ஒரே இந்த்ரன் இருக்கவில்லை. பல இந்த்ரர்கள் இருந்திருக்கிறார்கள். நமக்கு ஆயிரம் சதுர் யுகமாகவும், ப்ரஹ்மாவுக்கு ஒரு பகலாகவும் உள்ள கல்ப காலம் என்பதில் பதிநாலு மநுக்கள் தோன்றி பூலோகத்தில் ஒவ்வொரு ராஜவம்சத்தை ஆரம்பித்து வைப்பார்கள். ஒரு மநுவின் ஜீவித காலத்திற்கு மன்வந்த்ரம் என்று பெயர். அப்படிப் புதுப்புது மநுக்கள் வரும்போது தேவலோகத்திலேயும் புதுப்புது ஆஸாமிகள் இந்த்ர பதவிக்கு வருவார்கள். நூறு அச்வமேதம் பண்ணிய ஒருவருக்கே இந்த்ரனாவதற்கு யோக்யதை உண்டு. இப்படி யோக்யதை ஸம்பாதித்த பல பேர் ஸ்ருஷ்டியிலிருந்து இன்று வரையிலான அநேக மன்வந்த்ரங்களில் இந்த்ரர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் யாரோ ஒருத்தந்தான் அம்பாளிடம் உபதேசம் பெற்றது; தாம்பூல உச்சிஷ்டத்திற்காகப் போனது. அவன் ஒரு விதி விலக்கான இந்த்ரன் என்று வைத்துக் கொள்ளலாம். பொதுவாக இந்த்ரர்கள் நவாவரணத்தில் வாசல் காவலாளிகளிடம் போய் நிற்கிற அளவுக்குத்தான் இருப்பவர்கள். ஏனென்றால், அம்பாள் "தரல கரணானாம் அஸுலபா" என்றாரே, அதாவது 'மனஸு கட்டுப்பாடில்லாமல் அலை பாய்கிறவர்களுக்கு அகப்படக் கூடியவள் அல்ல' என்று சொன்னாரே, அதனால்தான்! போகபூமியான தேவலோகத்தில் நித்ய யெளவனத்தோடு இருக்கும் இந்த்ரனும் மற்ற தேவர்களும் இந்த்ரிய ஸெளக்யங்களிலேயே மனஸ் இழுபடுபவர்களாகத்தான் இருப்பது வழக்கம். இவர்கள் நவாவரணக் கோட்டைச் சுவர்களுக்கு வெளிவாசலில்தான் நிற்க வேண்டும்!
(இனி இன்றைய தொடர்ச்சி)

'இந்த்ர ஜாலம்' என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். அத்புத அத்புதமாக சித்துக்கள் பண்ணுபவர்களுக்குள் அவன் மஹா கெட்டிக்காரன் என்பதால்தான் அந்த வார்த்தை வந்திருக்கிறது. ஆனால் அவன் மஹா அசடு! தேவராஜாவாக இருந்துங்கூட அம்பாளிடம் போகிற அர்ஹதை -– இந்த்ரிய நிக்ரஹம் என்ற யோக்யதை –- ஸம்பாதித்துக் கொள்ளாமல் அவளுடைய ராஜதானியின் வெளியெல்லையிலேதான் நிற்கிற அசடு!

ப்ரெஸிடெண்ட் எல்லார் மாதிரியும் ட்ரெஸ் போட்டுக்கொண்டு அவர் பாட்டுக்கு அமரிக்கையாயிருப்பார். தர்வான்தான் அமர்க்களமாக ட்ரெஸ், பாட்ஜ், தொப்பி, டவாலி போட்டுக்கொண்டு மிடுக்காக மார்ச் பண்ணுவான். இங்கே காவல்காரிகளான ஸித்திகள் அப்படித்தான் வெளிப்பார்வைக்கு அதிசயமாக சித்து வேலைகள் பண்ணுபவர்கள். ஆனால் அதில் ஆத்மார்த்த ப்ரயோஜனம் எள்ளத்தனைகூட இருக்காது. அதிசயத்தில் இருக்கிற ப்ரமிப்பினால் இதிலேயே முழுகிப் போய் ஆத்மா பக்கமே திரும்பவிடாமல்கூடத் தடுத்துவிடும்! அவர்களை உபாஸிப்பவர்களுக்கும் அந்த சித்துகளைச் சொல்லிக் கொடுப்பார்கள். இந்தக் குட்டி தேவதைகளை யார் வேண்டுமானாலும் உபாஸிக்கவும் முடியும். வெளி விஷயமாக உள்ள மந்தரம், தந்த்ரம், பலி என்று என்ன உண்டோ அதை யார், எவர் பண்ணினாலும் அதுவே போதும். உள்விஷயமான இந்த்ரிய நிக்ரஹம், சித்த சுத்தி என்பது தேவையில்லை. அதனால் இந்த்ராதி தேவர்கள் இவர்களை உபாஸித்து இவர்கள் பதிலுக்குக் கொடுக்கிற ஸித்திகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். "ஸித்திம் அதுலாம்" என்று ஆசார்யாள் சொல்கிறார்: "இணையில்லாத ஸித்திகள்" என்று அர்த்தம். பெரிசாகப் புகழ்கிற மாதிரிச் சொல்கிறார்! ஆனால் இந்த அதுல ஸித்தியுங்கூட அம்பாள் ஸந்நிதியைச் சேர லவலேசமும் உபயோகமாகாது என்று காட்ட, "தவ த்வாரோபாந்த ஸ்திதிபி: அணிமாத்யாதிபி: நீதா:" – 'போயும் போயும் உன் வெளிவாசல் காவலாளிகளாயுள்ள அணிமாதிகளினாலேயே இந்த ப்ரமாத 'அதுல ஸித்தியை' (பரிஹாஸமாகச் சொல்கிறார்!) அடைவிக்கப் படுகிறார்கள்' என்கிறார்.

ஆசார்யாளுடைய நைஸும், நாஸூக்கும்  போகாமலே இங்கே மூன்றாவதாக இன்னொரு வார்னிங்கும் மறைமுகமாக வந்துவிடுகிறது! ஸித்திகளில் போய் மாட்டிக்கப்படாது என்பதுதான் அது. அம்பாளுடைய ஸமூஹத்திற்கு எட்டாத தூரத்திலுள்ள த்வார பாலகிகளே கொடுக்கிறவைதான் அணிமாதி ஸித்தி என்பதிலேயே அவை அவளை அடையப் பண்ணுவதற்கும் எவ்வளவு தூரத்திலிருக்கின்றன என்று குறிப்பாலுணர்த்தி விடுகிறார்! 'போயும் போயும் ஒரு வீட்டு வேலைக்காரி போடுகிற பிச்சையிலா ஆசை வைப்பது?' என்று ஒதுக்கும் படி நயமாகத் தூண்டிக் கொடுக்கிறார்!

ஸித்தர்கள் என்று மஹாபுருஷர்களாகப் பல பேர் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அநேக போலிகளுக்கு நடுப்பற அப்படி இரண்டொருத்தர் இல்லாமல் போகவில்லை. ஆனால் அவர்கள் இந்த்ரிய நிக்ரஹம் பண்ணினவர்கள். ஸ்வார்த்தமாக [ஸ்வய ஆதாயத்திற்காக] சித்து பண்ணுபவர்களுமில்லை. கஷ்டப்படுகிற ஜனங்களுக்கு அத்புத சக்திகளாலும் ஒவ்வொரு நல்லது பண்ண முடிகிறது என்ற கருணையாலேயே ஸித்திகளைக் கையாளுவார்கள். அதோடுகூட ஈச்வர சக்தி எப்பேர்ப்பட்டதென்று தெரிவிப்பதற்காக அத்புதமாகச் சிலது பண்ணுவார்கள். எல்லாம் நம் புத்திக்குள் வந்துவிடாது; இதற்குப் புரிபடாமல், ஸயன்ஸுக்கு அகப்படாமல் அநேக ஸமாசாரங்கள் உண்டு என்று தெரியப்பண்ணவும் ஸித்திகளைக் காட்டுவார்கள். அவர்கள் ஸமாசாரம் மனஸடங்காத பொதுஜனங்களுக்கு லைஸன்ஸ் ஆகாது.

அந்தஃபுர தம்பதியாக சிவ-சக்திகளை எப்படித் தத்வார்த்தத்தில் தெரிந்து கொள்ளணுமோ அப்படி மனக் கட்டுப்பாடில்லாதவர்களால் தெரிந்து கொள்ளமுடியாது. காவ்ய ரீதியிலே அப்படி ஸ்தோத்ரத்தில் வர்ணித்திருப்பதைப் படிக்கும்போதுகூட நமக்கு இந்த ஞாபகம் போகப் படாது. மனஸு கட்டுப்படாத இந்த்ராதி தேவாள் நவாவரண சக்ரரூபமான அம்பாள் ராஜதானியிலே முதல் ஆவரணத்திற்கும் வெளியிலேதான் நிற்கிறார்கள் என்பதால் அந்தக் கட்டுப்பாடு வேண்டுமென்று நிஜமாகவே ஆசைப்படுபவர்கள்தான் சக்ர பூஜை பண்ணவேண்டும். அந்தக் கட்டுப்பாட்டில் ஆசை வந்தால், பூஜைக்கு இப்படி நியமம், இன்ன விதி என்று இருக்கிற கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்றத் தோன்றும். இந்தக் கட்டுப்பாட்டோடு அந்தக் கட்டுப்பாட்டுக்காகப் பூஜை பண்ணினால்தான் அது யுக்தமான ஸ்ரீயந்த்ர பூஜை.

கட்டுப்பாடு இல்லாவிட்டால் தப்பு; விபரீத பலன்கூட ஏற்படும் என்று பயமுறுத்துகிற ரீதியில் ஒரு வார்த்தைகூடப் போடாமல் ரொம்ப நயமாக வார்ன் பண்ணி இப்படி ஒரு ச்லோகம்!
(இந்த பாகம் இத்துடன் நிறைவு பெறுகிறது)

*அம்பிகையின் அதிசயக் கற்பு*
(இன்றைய புதிய பாகம்)

தம்பதிகளாகப் பார்ப்பதில் மனஸின் பரிசுத்தத்தைச் சொல்லிவிட்டதால் படிக்கிறவர்கள் அப்படியே பார்ப்பார்கள் –- கொஞ்ச நாழிக்காவது பார்ப்பார்கள் -– என்ற நம்பிக்கையில் அப்புறம் மூன்று ச்லோகம் த்ரிமூர்த்திகளையுமே தம்பதியாக ப்ரஸ்தாபித்துச் செய்திருக்கிறார், காவ்ய ரீதியில் கவிகள் எப்படி வேடிக்கை பண்ணுவார்களோ அப்படி!

ஒரு ச்லோகத்தில் [96] என்ன சொல்கிறாரென்றால்: உசந்த கவிகளை ஸரஸ்வதி வல்லபர் என்று சொல்லும் வழக்கமுண்டு. சாஸ்த்ரோக்தமாகவோ ப்ரஹ்மா ஒருத்தர்தான் ஸரஸ்வதி வல்லபர். அதே மாதிரி மஹாவிஷ்ணுதான் நிஜமாக ஸ்ரீ என்கிற லக்ஷ்மிக்கு ப்ரபுவானதால் ஸ்ரீமான். ஆனால் பெரிய தனிகர்கள் எல்லாரையுமே லோகத்தில் ஸ்ரீமான், செல்வச்சீமான் என்றெல்லாம் சொல்கிறோம். இப்படி மநுஷ்யர்களோடு அம்பாளை ஸம்பந்தப்படுத்தி எங்கேயாவது சொல்லும் வழக்கமுண்டா, வசனம் உண்டா? கிடையாது. பரமேச்வரனுடைய மஹா பதிவ்ரதையான பத்னியாக அவள் இருப்பதால் புருஷ லோகத்தில் அத்தனை பேருக்கும் அம்மாதானே தவிர, ஒரு பேச்சுக்கு, அதிசயோக்திக்குக்கூட அவளை ஸரஸ்வதி, லக்ஷ்மிகளைப்பற்றிச் சொல்கிற மாதிரி எதுவும் சொல்வதில்லை.
(இந்த பகுதியின் மேல் உரைகள் மீண்டும் நாளை தொடரும்)
*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
*********************************************

*"Deivathin Kural*-Part-6*
*Maha Periyava's Discourses on Soundarya Lahari*
Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma  in advaitham.blogspot*. Our thanks.

*Part : SOUNDARYA LAHARI*
*ஆசார்யாள் விடும் எச்சரிக்கை*
*Warning Notice by ÃchãryãL*
(This chapter's yesterday's last paragraphs)

   There is not just one compound but, three square compounds.  At the outermost entrance are the eight 'Anima' etcetera Siddhis as Devatas as gate keepers.  Thus there are many soldiers and their commanders who are located in all the nine successive inner compounds / ÃvaraNãs and gates!  AmbãL is the Mahãrãgni, the one and only Supreme Commander of the forces!  So by her orders these successive level commanders will sanction to the devotees.  So the Nava-ÃvaraNa-Pooja in a way, is the symbolic representation of what really happens in life as to the progress made by people by self-discipline, control of the senses and the right attitude and approach to God personally and other people of the world socially!  So the Nava-ÃvaraNa-Pooja will be addressed to each one of the important members of that family as a devotional drama!  But the seriousness and intensity of the approach will not be permitted to become easy-going, as the devotees strictly follow the rituals, actions, offerings and Upachãra with the corresponding mantra at various stages as per strict procedures!

     If you host a party for the President, instead of stopping only with the President, you do arrange for the Prime Minister and Cabinet Ministers do get invited.  Then some VIPs and some other dignitaries may also be invited.  Then arrangements are also made for taking care of the Personal Assistant (P.A. to the President), the car driver, right down the front door darwãn, isn't it?  They may also do some good thing for us in various ways or we may not be directly involved with them at all!  But when it comes to hospitality we extend our attention and care to them all, don't we?  Similarly all the Devatas get their due, during the Nava ÃvaraNa Pooja.  So starting from the President, as you come down the order, when it comes to the darwãn, the level must be the lowest and if you have to go to him for a help, I am sure that you will agree that what you get from them is also likely to be way down low!

Now, what you get at the outer most level gate-keepers?  The darwãn-s at the outer most gate in the Sri-Chakra are the 'Ashta Maha Siddhi' the fantastic abilities of Anima, Garima, Mahima, Lagima, Prãpti, Prãkãmya, Ishitva, and Vashitva; meaning, becoming as small as the atom, infinitely heavy,  infinitely huge, almost weightless, ease of access anywhere, knowing other's minds, overall lordship and irresistible attractiveness; respectively!  Adding two more to this list, there are said to be ten Devatas at this outermost gate of outermost compound!   Who are the people waiting here for permission to move in?  They are the, 'shata makha mukhã: amarã:' – 'शत मख मुखा: अमरा:' – celestials who have done hundreds of Yagas like Indra!   What is this?  Isn't Indra much higher in standing? He went with Maha Vishnu and SubrahmaNya for AmbãL's Uchchishta Tãmboolam isn't it?  Why should he be fraternising with the gate keepers here?  Isn't it much below his dignity and standing?

    Point to understand is that in the way things are, there have been many heads of Devatas holding the position of Indra, which is only an appointment for a period.  In a period that is known as a 'Kalpa Kãlam' – for human being it lasts for a thousand 'Chathur Yugas', that is 432,800,000 years, which is one day of Brhma and during which there are said to be 14 Manu-s whose tenure is known as Manvantaram.  During such period there is also a change in the post of Indra as the head of all Devas.   Someone who has conducted 100 Ashwa Medha Yaga, as one of the qualifications becomes Indra.  So there have been and will be many Indrãs.  Amongst them, the account of one getting Upadesa from AmbãL is described in Kenopanishad and he must have one of the rare cases, with an attitude very unlike an Indra.  The one going to AmbãL with Vishnu and SubrahmaNya may be another rare case unlike, how one would expect Indra to behave.  Here may be yet another Indra who is gallivanting with the gate-keepers of Nava ÃvaraNa / Sri Chakra!  As the poet says, 'तरल करणानाम असुलभा' – that she is unattainable and unreachable for people with uncontrolled and undisciplined minds!

  Heavens are the world of pleasure and enjoyment.  As the Devas are ever young and never age, their minds are ever concerned with sensual pleasures and never under control.  So they have to remain outside the outer perimeter of the fort of Nava ÃvaraNa only! 
(Continuing further from here)

We use a phrase as 'Indra Jãlam'!  What does it mean?  He is the leading fellow amongst magicians, but he is quite an Idiot or more of a joker!  Despite being the head of all the Devas, having not attained to Indriya Nigraha – of being able to exercise control over his own senses, he does not deserve to present himself in front of AmbãL and so he has to remain outside the limits!  President will be normally dressed like anybody else.  It will be the Darwãn who will be dressed in much cap, belt, badge, sash and such colourful get-up!  Here the security guards at the gate are such, capable of all sorts of magic!  But what is the use of such Ashta Maha Siddhis which are only the seeming changes in appearances without any effect on reality!

In fact, if one is to be lost in awe and wonder, one is likely to miss out on what is to be absorbed and discarded, comprehended and understood!  So if you are a devotee of these powers, as anyone can easily be; they will teach you some of their tricks and keep you chained in eternal thraldom!  These Mantras and Tantras are such that they can be done without any need for mental or physical deprivations or purity.  Indra and other Devatas pray to these and get 'siddhim atulãm' – 'सिद्धिं अतुलां' – invaluable and incomparable attainments.  But all that Siddhi are of no use whatsoever in reaching AmbãL's Sannidy as he says 'tava dhvaropãnta sthitibhi: aNimãdhyadhibhi: neetã:' – 'तव ध्वारोपान्त स्थितिभि: अणिमाध्याभि: नीता:'!  The indirect message is, "These great awesome attainments are made possible by those Anima etcetera guards, standing at the outer gates itself!"  Without losing his style of understatement and nicety, our ÃchãryãL manages to give one more warning that we are not to get stuck with these magic tricks of Siddhis! Our ÃchãryãL is telling us to guard against falling prey to such temptations as offered by the guard-duty soldiers and going astray from our avowed aim of 'Ãtma Gnãna!'

The point to take note of is the fact that though the powers known as 'Anima etcetera' may seem to be breath-taking and awe-inspiring; they are only sops, like a lolly-pop given to a baby that is crying!  Amongst many who claim such powers there have been some genuine Siddha Purusha-s, (meaning really attained souls), totally unaware of their own powers, devoid of self-aggrandisement, went about doing their bit in helping others, just by their presence!  Mostly they would be instrumental for many miraculous cures and bountiful bonanza, occurring out of their sincere care and concern!  But they would not even notice that they are causing all those miracles!  Occasionally they may do things to just to prove the point that the power of divinity is beyond the human ken in terms of science and logic!  Anyhow their nature, attitude and behaviour will remain a mystery for people whose minds are not under their control!

   The slightest understanding and or comprehension of Siva –Shakti as a divine couple may not be available to people who have no control over their minds!  Even while reading such slokas as Soundarya Lahari as a piece of classical literature, one should not forget this above rider!  The Devas such as Indra etcetera who do not have their minds under control, cannot enter into the Empire of AmbãL in the form of Nava ÃvaraNa Chakra, but stay outside the outer periphery only.   So, it means that those who are sincerely keen that they should so discipline themselves only, should be taking up such difficult practices requiring a high level of control of the mind and senses.  Without putting any warnings and notices high-lighted in red, our ÃchãryãL has managed to quietly but effectively put it across in this sloka, as to who may take up such esoteric procedures as a regular practice and as to who should preferably not be undertaking such practices.    
(This chapter ends here)

*அம்பிகையின் அதிசயக் கற்பு*
*AmbãL's Unique Fidelity & Faithfulness*
( A new chaptet today)

  Since he has emphasised about the need to have a pure and unbiased heart in looking at divinity as so many couples as husband and wife, such as Siva – Parvathy; Vishnu – Lakshmi; and Brhma – Saraswathi; in the belief that the readers will do so at least for some time, he has composed the next three slokas based on the three divine couples of the Holy Trinity of Brhma, Vishnu and Maheshwara.  So, let us see as to what is said in sloka No 96, with this background information!     According to Sãstrãs only Brhma can be thought of or fitting the title 'Saraswathi Vallabha'.  But, any author of poetries or essays or even stories is praised for his literary acumen by being addressed as 'Master of the Goddess of Learning'!  Similarly only Maha Vishnu can be considered as the husband of Lakshmi and so entitled to be addressed as 'Srimãn' (looks and sounds as 'Mr Man'!), though this title in usage is added to the name of any and every rich man of some standing and wealth!  That is as good as calling such a person as, 'the husband of Sri or Lakshmi'!  When it comes to AmbãL there is no such aberration possible and she is always considered as the Mother, Amma and AmbãL; nothing else, as we are all her children forever!  That is the uniqueness of her fidelity that even in exaggeration you do not make a flippant statement about her!
(Further texts of this continue tomorrow)
*Maha Periyava Thiruvadigal Charanam*

Wednesday, July 7, 2021

Soundarya Lahiri part4 -Periyavaa

*தெய்வத்தின் குரல*் - *ஆறாம் பகுதி*
(மஹா பெரியவா அருளுரை)
*ஸெளந்தர்ய லஹரி*

*ஆசார்யாள் விடுக்கும் எச்சரிக்கை!*
(இந்த பகுதியின் நேற்றைய கடைசி உரைகள்)

இரண்டு தினுஸில் முறை தவறலாம்: முதல் ஸெக்‌ஷனில் முக்யத்வம் கொடுத்துச் சொன்ன யந்த்ராராதனையில் நியம நிஷ்டைக்கு லாயக்கில்லாதவர் போய்க் கஷ்டத்தில் மாட்டிக்கொள்வது ஒன்று; இரண்டாம் ஸெக்‌ஷனில் சொன்ன திவ்ய தாம்பத்ய உறவை ஏதோ நாவல், ஸினிமாக் கேளிக்கை மாதிரி எடுத்துக் கொண்டு, குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக்கொண்ட கதையாகப் பண்ணிக் கொள்வது ஒன்று. ஆசார்யாள் காலத்து மநுஷ்யாள் எது ஸரியான அப்ரோச்சோ அப்படித்தான் போயிருப்பார்கள் என்றாலுங்கூட, தப்பு அப்ரோச்சுக்கு இடம் கொடுக்காமல் எச்சரித்து வைத்துவிடுவது நல்லது என்று ரொம்பவும் பொறுப்போடு நினைத்திருக்கிறார். அப்போதைவிட வ்யவஸ்தைகள் கெட்டுப்போய் எதையும் மனம் போகிறபடி அர்த்தம் பண்ணிக்கொள்ளும் துர்தசை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்பவுங்கூட இந்த மாதிரி ஒரு ஸ்தோத்ர பாராயணம் என்று போகிறவர்களில் பெரும்பாலோர் இந்த விஷயம் ஒன்றிலாவது சுத்தமான கண்ணோடுதான் பார்த்துக்கொண்டு போகிறார்கள். ஆனாலும் 'பெரும்பாலோர்' என்றுதான் என்னால் சொல்ல முடிகிறதே தவிர 'எல்லாரும்' என்று சொல்ல யோஜனையாய்த்தான் இருக்கிறது. அது தவிர, ஜனஸமூஹத்தில் இப்படி 'பாராயணம்' என்று பக்தியாகப் படிப்பவர்கள் மட்டுமில்லாமல், க்யூரியாஸிடிக்காகப் படிப்பவர்கள், ஆராய்ச்சி என்று படிக்கிறவர்கள், இலக்கியம் என்றே படிக்கிறவர்கள், தப்புக் கண்டுபிடிப்பதற்கென்றே படிப்பவர்கள் ஆகியவர் இப்போது சேர்ந்திருக்கிறார்கள். ஆகையால் உசந்த மனக் கட்டுப்பாட்டுடன் பாராயணம் பண்ணுவதற்குத்தான் இந்த ஸ்தோத்ரம் ஏற்பட்டது; திவ்ய தாம்பத்யத்தை ரஸிப்பதானாலும் ஸரி, யந்த்ராராதனை ஆரம்பிப்பதானாலும் ஸரி, நல்ல இந்த்ரிய நிக்ரஹத்துடன் தான் செய்யணும் என்று தெரிவிக்க வேண்டியது அவச்யமாகிறது. இதை அன்றைக்கே ஸ்தோத்ரம் எழுதி வைத்தபோது ஆசார்யாள் பன்ணிவிட்டார்.

கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறோமோ என்று கவலையே படாமல், அப்படித் தூண்டிவிட வேண்டுமென்றே இண்டென்ஷனோடு எழுதுகிறவர்கள் இக்காலத்தில் ஜாஸ்தியாகி வருவதாகத் தெரிகிறது. இதை ஜஸ்டிஃபையும் செய்கிறார்கள்; இப்படித்தான் எழுதணும் என்கிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். ஒருத்தர் ஜனங்கள் மனஸ் தப்பிப் போகப் பண்ணுவதற்குக் காரணமாயிருந்துவிட்டால் தப்புப் பண்ணும் ஜனங்களுக்குப் பாபம் ஏற்படுகிறதென்றால், காரணமாகத் தூண்டிக் கொடுத்த அவருக்கு மஹா பாபமே காத்துக் கொண்டிருக்கிறதென்று புரிந்து கொள்ளாததால் இப்படிப் பண்ணி வருகிறார்கள். ஆசார்யாளோ ஒரு க்ரந்தகர்த்தாவுக்கு, நூலாசிரியருக்கு இந்த விஷயத்திலிருக்கும் பொறுப்பை உணர்ந்து, படிக்கிறவர்களுக்கு இருக்க வேண்டிய மனப்பான்மையைப் பற்றிச் சொல்லி முடிக்கிறார்.

'மனக்கட்டுப்பாடு', 'இந்த்ரிய நிக்ரஹம்' என்று சொன்னதைப் பூர்ணமாக ஸாதித்துக் கொள்வது ரொம்பவும் கஷ்டம். அப்படிப் பண்ணினவர்கள்தான் படிக்கலாம், யந்த்ர உபாஸனை பண்ணலாம் என்றால் லக்ஷத்தில் ஒருத்தர்கூடத் தேற மாட்டார்கள்! ஆகையால் முடிந்த அளவுக்காவது இந்தக் கட்டுப்பாட்டுக்கு முயற்சி பண்ணுகிறவர்களும், அல்லது அது ஏற்பட வேண்டும் என்ற தாபமாவது இருக்கிறவர்களும்தான் இவற்றில் பிரவேசிக்கலாமென்று வைத்துக்கொள்ளலாம். படிக்கிற மட்டுமாவது மனக்கட்டுப்பாடு, பூஜை பண்ணுகிற மட்டுமாவது நியம நிஷ்டை அவசியம்.
(இனி இன்றைய தொடர்ச்சி)

அழகாக, ஆனந்தமாக அம்பாளை வர்ணித்துக் கொண்டே போய்க் கடைசியில் முடிக்கிற ஸமயத்தில் 'வார்னிங்' என்று போக்கை மாற்றினால், நல்ல ராஜபாட்டையில் வண்டியை ஓட்டிக் கொண்டு போய் இறக்கி விடுகிற இடத்தில் ஸடன் ப்ரேக் போட்டு மண்டையில் இடித்துக் கொள்ளப் பண்ணுகிற மாதிரி இருக்கப் போகிறதேயென்று, ரொம்ப ஸொகஸாக வண்டியை நிறுத்துகிறாற்போல, வார்னிங்கை நைஸ் பண்ணி நாஸூக்காகவே தெரிவித்திருக்கிறார். "நீங்கள் மனக் கட்டுப்பாட்டோடு உபாஸனை பண்ணுங்கள்" என்று நம்மைப் பார்த்துக்கூடச் சொல்லாமல், அம்பாளையே பார்த்து, மனக்கட்டுப்பாடில்லாமல் அவளிடம் வருகிறவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் சொல்லியே 'குறிப்பாலுணர்த்துவது' என்கிறார்களே, அப்படிப் பண்ணி [95-வது] ச்லோகமாகக் கொடுத்திருக்கிறார்.

முப்புரங்களை அழித்தவர் ஸ்வாமி. அவருக்கு அந்தஃபுரத்தில் ஸந்தோஷம் தருபவள் அம்பாள். இப்படி இரண்டு 'புர'ங்களைச் சேர்த்து த்ரிபுரஸுந்தரியான அம்பாளைக் கூப்பிட்டு ஆரம்பிக்கிறார்: "புராராதே: அந்தஃபுரமஸி". அந்தஃபுர நாயகியாக உன்னை நினைப்பதை ரக்த-மாம்ஸ ச்ருங்காரமாக்கி விட்டால் மஹா தப்பு. உன்னை இந்த்ரிய நிக்ரஹத்தோடுதான் ஸ்மரிக்க வேண்டும் -– "த்வத் சரணயோ: ஸ்பர்யா மர்யாதா தரல–கரணானாம் அஸுலபா" : 'உன்னுடைய பாத பூஜையின் ஒழுங்கான க்ரமம் அலை பாயும் இந்த்ரியமுடையவர்களுக்கு எளிதானதில்லை!'

— இப்படிச் சொல்லி, 'அதனால்தான் இந்த்ரிய நிக்ரஹம் போதாத இந்த்ராதி தேவர்களும் அந்த அந்தஃபுரத்திற்கு ரொம்ப ரொம்ப, எத்தனையோ கோடி யோஜனை (யோஜனை என்றால் எட்டு, ஒன்பது மைல்; அப்படி எத்தனையோ கோடி யோஜனை) தள்ளியே நிற்கிறார்கள்' என்கிறார்.

நவாவரண [ஸ்ரீ]சக்ரத்தில் ஒன்பதாவதாக உள்ளே நடுமத்தியில் இருக்கிற ஸர்வானந்த மய சக்ரத்தில் அம்பாள் பதியோடு ஆனந்தமாயிருந்து கொண்டிருக்கிறாளென்றால், அதிலிருந்து ஒவ்வொரு ஆவரணமாகக் கோடி கோடி யோஜனை தள்ளி முதல் ஆவரணம் இருக்கிறது. அதுதான் அம்பாள் ராஜதானியின் வெளிக்கோடி காம்பவுண்டு. ஒரு காம்பவுண்டு இல்லை; மூன்று சதுரமான காம்பவுண்டுகள். அந்த மூன்றிலும் ரொம்பத் தள்ளி இருக்கும் முதல் காம்பவுண்டில் அணிமாதி ஸித்திகள் தேவதா ரூபத்தில் இருக்கிறார்கள். ஒன்பது ஆவரணங்களிலும் அநேக தேவதைகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு தேவதையும் மஹாராஜ்ஞியான [மஹாராணியான] அம்பாளுக்கு அடங்கிய அதிகாரியாக உபாஸகர்களுக்கு ஒவ்வொரு இனத்தில் அநுக்ரஹம் பண்ணும். ஸாக்ஷாத் அந்த அம்பாள் தரும் மோக்ஷாநுக்ரஹந்தான் வேண்டுமென்று இருப்பவர்களும் ஸ்ருஷ்டி லீலையில் அம்பாள் எப்படியெல்லாம் நவநவமாக, எல்லையே இல்லாமல் விஷயங்களை விரித்து வைத்திருக்கிறாள் என்று நாடக ரஸத்தை அவளுடைய நினைப்போடு சேர்த்துச் சேர்த்து ரஸிப்பதற்காக நவாவரண பூஜை என்று அந்தப் பெரிய தேவதா பரிவாரத்தில் ஒருத்தரும் விட்டுப் போகாமல் பூஜை பண்ணுவார்கள். பக்தி ரஸத்தோடு சேர்ந்த நாடக ரஸம்! ஆனாலும், பக்தி, நாடகம் என்பதால் 'ஈஸி-கோயிங்'காகப் பண்ணலாம் என்று விடாமல், அதிலேயும் கறாராக இப்படியிப்படி மந்த்ரம், இன்னின்ன உபசாரம் என்ற தர்ம லீலை, சட்ட லீலை எல்லாமும்! எல்லாவற்றையும் அந்த உபாஸகர்கள் முறை தப்பாமல் அநுஸரிப்பார்கள்.

பிரெஸிண்டெண்டுக்குப் பார்ட்டி வைத்தால் அவரோடு நிற்காமல் மந்த்ரிகள், எம்.பிக்கள், ஆபீஸர்கள், அவருடைய P.A., கார் ட்ரைவர், வாசல் காக்கிற தர்வான் வரைக்கும் எல்லாரையும் இன்வைட் பண்ணுவது உண்டோல்லியோ? இந்தப் பரிவாரங்களாலும் நமக்கு ஒவ்வொரு நல்லது பண்ணமுடியும். அதற்கான அதாரிடி அவர்களுக்கு அந்த பிரெஸிடெண்டே கொடுத்திருக்கிறார். ஆனால் அவரையே தெரிந்தவர்களுக்கு இவர்களிடம் போய் நிற்கணும், இவர்களை உபசாரம் பண்ணணும் என்று இல்லை. அப்படியிருந்தும் பார்ட்டி என்றால், அவர் வைத்த ஸர்க்கார், அவர் செய்த ஏற்பாடு என்ற மரியாதைக்காக எல்லாரையும் கூப்பிட்டு உபசரிப்பது. அப்படி அவளே கதி என்றிருப்பவர்களும் சுற்று தேவதை ஒன்று விடாமல் நவாவரண க்ரமத்தில் பூஜை பண்ணுவது. ப்ரெஸிடெண்ட் வரை போகாமல் ஒரு மந்த்ரியிடம் போய் ஒரு லைஸென்ஸ், ஒரு எம்.பி.யிடம் போய் ஒரு அட்மிஷன் என்றும் நிற்பவர்கள் இருக்கிறார்கள். தங்களை ஹிம்ஸிக்கிற ஒரு போக்கிரியை மிரட்டி வைப்பதற்காக அவருடைய தர்வானிடங்கூடப் போய் உதவி கேட்கலாம். இவர்களெல்லாம் லிமிடெட் அதாரிடி உள்ளவர்கள்தான். ப்ரெஸிடெண்ட்தான் அத்தனை அதாரிடியும் உள்ளவர். முழு பவரும் அவரிடந்தான்…. அமெரிக்கா ப்ரெஸிண்டெண்டைச் சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்! அவரிடம் ஆரம்பித்து மந்த்ரி, எம்பி, ஆபீஸர் என்று பவர் குறைந்து கொண்டே வந்து தர்வானிடம் ரொம்பக் குறைவாயிருக்கும். வெளி ஜனங்களிலும் அவரவர் அந்தஸ்தைப் பொறுத்தே இவர்களில் ஏதோ ஒரு ஸர்க்கிளிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் . தர்வான் ஸர்க்கிளுக்கு மேலே தொடர்பு வைத்துக் கொள்ள முடியாதவர்கள் என்றால் ஸமூஹத்தில் ரொம்பக் கீழ் ஸ்திதியில் இருப்பவர்கள் என்று அர்த்தம்.

இப்படி நவாவரணத்தின் வெளிக்கோடியில் பொம்மனாட்டி தர்வான்களாக  -– காவல்காரிகளாக –- அணிமாதி ஸித்தி தேவதைகள் இருக்கிறார்கள். ஸாவரின் பவரே பொம்மனாட்டிதானே? அதனால் பரிவாரத்திலும் ஒரே ஸ்திரீ மயம்! அஷ்டா மா ஸித்தி, ஸித்தர்கள், சித்து விளையாட்டு என்றெல்லாம் கேள்விப்படுகிறோமல்லவா? அப்படிப்பட்ட, இயற்கைக்கு வித்யாஸமான, ஆச்சர்யமான சக்திகள் எட்டு. அணிமா என்பது அதில் முதல். அதைப் பெற்றால் ஒருவர் அணு மாத்ரமாகச் சுருங்கிவிடலாம். ஒரே பெரிசாகப் பெருக்க 'மஹிமா' என்பதில் ஸித்தி பெற வேண்டும். இப்படி எட்டு. இவற்றோடு இன்னம் இரண்டு கூட்டி அந்த ஸித்திகளுக்கான பத்து தேவதைகளும் நவாவரண வெளியோரக் காம்பவுண்டில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

இவர்களிடம் யாசித்துக்கொண்டு வந்து நிற்பவர்கள். இவர்களைத் தாண்டி அடுத்த அங்கணத்துக்குப் போக அந்தஸ்து பெறாதவர்கள், யார் என்று சொல்கிறார் : "சதமக முகா:" என்கிறார். 'நூறு யாகம் பண்ணிய இந்திரன் முதலானோர்' என்று அர்த்தம்! ['சத' – நூறு; 'மக' – யாகம்.]

இந்த்ரன் அம்பாளிடமே ஞானோபதேசம் பெற்றுக் கொண்டு ஞானியானவன், முருகனோடும் மஹாவிஷ்ணுவோடும் அவனும் அம்பாளிடம் தாம்பூல உச்சிஷ்டத்திற்காகப் போனான் என்றெல்லாம் சொன்னவர், இங்கே ஏன் இப்படி அவன் காவல்காரிகளிடம் பல்லைக் காட்டுகிறான். அவனுக்கு வெளிக் காம்பவுண்டைத் தாண்டி வர அந்தஸ்து இல்லை என்கிறார்?

அவர் ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லை. ஆதி ஸ்ருஷ்டியிலிருந்து இன்று வரை ஒரே இந்த்ரன் இருக்கவில்லை. பல இந்த்ரர்கள் இருந்திருக்கிறார்கள். நமக்கு ஆயிரம் சதுர் யுகமாகவும், ப்ரஹ்மாவுக்கு ஒரு பகலாகவும் உள்ள கல்ப காலம் என்பதில் பதிநாலு மநுக்கள் தோன்றி பூலோகத்தில் ஒவ்வொரு ராஜவம்சத்தை ஆரம்பித்து வைப்பார்கள். ஒரு மநுவின் ஜீவித காலத்திற்கு மன்வந்த்ரம் என்று பெயர். அப்படிப் புதுப்புது மநுக்கள் வரும்போது தேவலோகத்திலேயும் புதுப்புது ஆஸாமிகள் இந்த்ர பதவிக்கு வருவார்கள். நூறு அச்வமேதம் பண்ணிய ஒருவருக்கே இந்த்ரனாவதற்கு யோக்யதை உண்டு. இப்படி யோக்யதை ஸம்பாதித்த பல பேர் ஸ்ருஷ்டியிலிருந்து இன்று வரையிலான அநேக மன்வந்த்ரங்களில் இந்த்ரர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் யாரோ ஒருத்தந்தான் அம்பாளிடம் உபதேசம் பெற்றது; தாம்பூல உச்சிஷ்டத்திற்காகப் போனது. அவன் ஒரு விதி விலக்கான இந்த்ரன் என்று வைத்துக் கொள்ளலாம். பொதுவாக இந்த்ரர்கள் நவாவரணத்தில் வாசல் காவலாளிகளிடம் போய் நிற்கிற அளவுக்குத்தான் இருப்பவர்கள். ஏனென்றால், அம்பாள் "தரல கரணானாம் அஸுலபா" என்றாரே, அதாவது 'மனஸு கட்டுப்பாடில்லாமல் அலை பாய்கிறவர்களுக்கு அகப்படக் கூடியவள் அல்ல' என்று சொன்னாரே, அதனால்தான்! போகபூமியான தேவலோகத்தில் நித்ய யெளவனத்தோடு இருக்கும் இந்த்ரனும் மற்ற தேவர்களும் இந்த்ரிய ஸெளக்யங்களிலேயே மனஸ் இழுபடுபவர்களாகத்தான் இருப்பது வழக்கம். இவர்கள் நவாவரணக் கோட்டைச் சுவர்களுக்கு வெளிவாசலில்தான் நிற்க வேண்டும்!
(இந்த பகுதியின் மேல் உரைகள் மீண்டும் நாளை தொடரும்)

*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
*********************************************

*"Deivathin Kural*-Part-6*
*Maha Periyava's Discourses on Soundarya Lahari*
Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma  in advaitham.blogspot*. Our thanks.

*Part : SOUNDARYA LAHARI*
*ஆசார்யாள் விடும் எச்சரிக்கை*
*Warning Notice by ÃchãryãL*
(This chapter's yesterday's last paragraphs)

  So there are two possible errors that can take place.  One is some people taking up 'Yantra Ãrãdhanã', and failing in the required level of strictness in observation of rules.  The second possible error is to take the divine relationship between Easwara and AmbãL like what is depicted in the cinema and drama on stage or Tele-vision, thereby watering down the value systems that you went to have a bath and ended up by smearing yourself with muck!

  ÃchãryãL's concern was twofold.  He wished that serious devotees capable of applying themselves for sustained and disciplined efforts should take up the Yantra Ãrãdhanã!  But simultaneously we have to take note of the fact that adopting Yantra Ãrãdhanã was like walking on 'razor's edge' really!  So, one can easily visualize that, there are two types of errors possible.  One is for someone incapable of sustained disciplined efforts taking up Yantra Ãrãdhanã due to some fanciful idea and then suffering unpredictable negative effects personally that would also have some deleterious effect on the society!  Then there is   the likelihood of looking at the divine relationship between AmbãL and Siva in a crude and gross manner as it happens on stages such as dramas, cinemas and television serials, which as I said earlier will prove to be something like going for a ceremonial bath and ending with smearing oneself with muck!  Though in olden times of our ÃchãryãL, people must have approached these issues with greater care and caution, He must have felt it necessary and his duty to obviate the wrong approaches even in the future!

   Compared to those days of the past, systems are failing and nowadays the general attitude is one of 'Anything Goes'.  But mostly even now, those who go in for simply chanting the slokas and doing PãrãyaNam for the sake of understanding the slokas, comprehending the meaning, getting them by-heart or like children practicing for participating in competitions; are quite serious and sincere enough!  Mark the word 'mostly' when I started the above sentence, because there are also those who read these slokas without devotion, out of curiosity, for research, as studying a piece of classic literature and those who are interested mainly in finding faults with the Hindu or Indian approaches and systems!  So, it is necessary to point out that right from the time of composition of these slokas, ÃchãryãL has warned against a flippant and disrespectful approach to chanting of these slokas!

    If there was a time when people were careful not to cater to the base instincts in human beings since 'Man is also an animal only' in some ways, now-a-days there are more people who write for that purpose only and blatantly do so, justifying their actions!  If it is a sin to go astray from the morally right path; it is a greater sin to cause people to go astray from the morally rightful path tending towards injustice!  This point is not understood by many. But the poet of Soundarya Lahari, our ÃchãryãL correctly recognizing his responsibilities as the author, is talking about the correct attitude one should have while reading 'Soundarya Lahari'!  Total control of the mind and 'Indriya Nigraha' that is, 'restraining of the senses' may not be possible for many.  If we say that 100% of 'mano and Indriya Nigraha', as a precondition, there may not be one in millions!  So we should have it that those who are trying to control their minds and senses, at least during PãrãyaNam and Pooja or at least intend to exercise such self- control, should be enabled to do read, study, do PãrãyaNam and also go on to take up Sri Vidya procedures of Sri Chakra.
(Continuing furthet from here)

  Having gone on describing AmbãL happily all along, to suddenly insert a 'Warning' in bold letters would have proved to be the sort of a sudden jerk, in an otherwise royal procession!  So the poet has taken the pains to cloth such warning also in an acceptably indirect manner!  So, instead of telling the readers to have self-discipline and control during Upãsana / Pooja / PãrãyaNa, the poet is telling AmbãL as to what happens to those who are calling on her without control over their minds / senses, in the 95th sloka!  Swami has destroyed the three places of 'Tripura' and AmbãL is in his 'Antahpura' and is known as 'Tripura Sundari'!  ÃchãryãL starts addressing her, 'purãrãte: antahpuram asi' – 'पुराराते: अन्त: पुरमसि', meaning, 'instead of looking at you as the Queen Consort of Siva the Tripurari, who had put to ashes all the three worlds of Tripura; if people were to look at you as made of mortal constituents of flesh and blood, it would be a big mistake!  To pray at your feet is not easy for people with a fickle mind and unbridled senses! 

  You are to be approached or thought of only with strict control over one's mind and senses, because – 'tvat charaNayo: saparya maryãda tarala karaNãnãm asulabhã' – 'त्वत चरणयो: सपर्या मर्यादा तरल-करणानाम असुलभा', it is 'not easy' for the unrestrained!  So, he says that Devas like Indra who lack in self-control and sense-control are held up far away at the entrance to her abode, many crores of Yojanas away from the centre.  One Yojana is about eight or nine miles.  In Nava ÃvaraNa Chakra there are nine such concentric circles with their separate entrances.  So the inner area is virtually crores of miles away from the first entrance, where people with uncontrolled minds are held up, where the Guards are the 'Ashta Maha Siddhis'!  If AmbãL is happily with her husband in the centre of Nava ÃvaraNa Yantra in the 'Sarva Ãnanda Maya Chakra', it is evident that people without any control on their minds and senses are not likely to be anywhere near but outside of the outer compound!

   There is not just one compound but, three square compounds.  At the outermost entrance are the eight 'Anima' etcetera Siddhis as Devatas as gate keepers.  Thus there are many soldiers and their commanders who are located in all the nine successive inner compounds / ÃvaraNãs and gates!  AmbãL is the Mahãrãgni, the one and only Supreme Commander of the forces!  So by her orders these successive level commanders will sanction to the devotees.  So the Nava-ÃvaraNa-Pooja in a way, is the symbolic representation of what really happens in life as to the progress made by people by self-discipline, control of the senses and the right attitude and approach to God personally and other people of the world socially!  So the Nava-ÃvaraNa-Pooja will be addressed to each one of the important members of that family as a devotional drama!  But the seriousness and intensity of the approach will not be permitted to become easy-going, as the devotees strictly follow the rituals, actions, offerings and Upachãra with the corresponding mantra at various stages as per strict procedures!

     If you host a party for the President, instead of stopping only with the President, you do arrange for the Prime Minister and Cabinet Ministers do get invited.  Then some VIPs and some other dignitaries may also be invited.  Then arrangements are also made for taking care of the Personal Assistant (P.A. to the President), the car driver, right down the front door darwãn, isn't it?  They may also do some good thing for us in various ways or we may not be directly involved with them at all!  But when it comes to hospitality we extend our attention and care to them all, don't we?  Similarly all the Devatas get their due, during the Nava ÃvaraNa Pooja.  So starting from the President, as you come down the order, when it comes to the darwãn, the level must be the lowest and if you have to go to him for a help, I am sure that you will agree that what you get from them is also likely to be way down low!

Now, what you get at the outer most level gate-keepers?  The darwãn-s at the outer most gate in the Sri-Chakra are the 'Ashta Maha Siddhi' the fantastic abilities of Anima, Garima, Mahima, Lagima, Prãpti, Prãkãmya, Ishitva, and Vashitva; meaning, becoming as small as the atom, infinitely heavy,  infinitely huge, almost weightless, ease of access anywhere, knowing other's minds, overall lordship and irresistible attractiveness; respectively!  Adding two more to this list, there are said to be ten Devatas at this outermost gate of outermost compound!   Who are the people waiting here for permission to move in?  They are the, 'shata makha mukhã: amarã:' – 'शत मख मुखा: अमरा:' – celestials who have done hundreds of Yagas like Indra!   What is this?  Isn't Indra much higher in standing? He went with Maha Vishnu and SubrahmaNya for AmbãL's Uchchishta Tãmboolam isn't it?  Why should he be fraternising with the gate keepers here?  Isn't it much below his dignity and standing?

    Point to understand is that in the way things are, there have been many heads of Devatas holding the position of Indra, which is only an appointment for a period.  In a period that is known as a 'Kalpa Kãlam' – for human being it lasts for a thousand 'Chathur Yugas', that is 432,800,000 years, which is one day of Brhma and during which there are said to be 14 Manu-s whose tenure is known as Manvantaram.  During such period there is also a change in the post of Indra as the head of all Devas.   Someone who has conducted 100 Ashwa Medha Yaga, as one of the qualifications becomes Indra.  So there have been and will be many Indrãs.  Amongst them, the account of one getting Upadesa from AmbãL is described in Kenopanishad and he must have one of the rare cases, with an attitude very unlike an Indra.  The one going to AmbãL with Vishnu and SubrahmaNya may be another rare case unlike, how one would expect Indra to behave.  Here may be yet another Indra who is gallivanting with the gate-keepers of Nava ÃvaraNa / Sri Chakra!  As the poet says, 'तरल करणानाम असुलभा' – that she is unattainable and unreachable for people with uncontrolled and undisciplined minds!

  Heavens are the world of pleasure and enjoyment.  As the Devas are ever young and never age, their minds are ever concerned with sensual pleasures and never under control.  So they have to remain outside the outer perimeter of the fort of Nava ÃvaraNa only! 
(Further texts of this continue tomorrow)
*Maha Periyava Thiruvadigal Charanam*