Thursday, March 13, 2025

Prasnottara malika part1

ஆதி சங்கரரின் வினா விடை  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

१९. कस्मै नमांसि देवाः कुर्वन्ति? दयाप्रधानाय।  कस्मादुद्वेगस्स्यात्? संसारारण्यतः सुधियः॥
19.  kasmai namaamsi devaah kurvanti? Dayaapradhaanaaya  kasmaadudwega syaat? Samsaaraaranyatah sudhiyah

48.  யாரோ   தேவர்கள் கூட  வாழ்த்தி மதிப்பார்கள்?
எவரிடம்  கருணை, தயை, இளகிய மனது பிரதான குணமாக இருக்கிறதோ  அவர்களை.

49.  எது மனதில் எப்போதும் ஒரு வித பயத்தை உண்டாக்குகிறது?
சம்சார பந்தம், அதன்  தொடர் வினைகள் ஒரு பெரிய  கருத்த  இருந்த காடாக  கற்றோர்கள் மனத்திலும் பயம் தரும்  காட்சி அளிக்கிறது.

२०. कस्य वशे प्राणिगणः? सत्यप्रियभाषिणो विनीतस्य।   क्व स्थातव्यं? न्याय्ये पथि दृष्टादृष्टलाभाढ्ये॥
 20.  kasya vashe praaniganah? satyapriyabhaashino vineetasya    kwa sthaatavyam? Nyaaye pathi drishtaadrishta laabhaadhye

50. உலகில் வாழும் ஜீவன்கள்  யார் கட்டுப்பாட்டில் உள்ளன?
எவர்  வாக்கு  சுத்தமானதோ, சத்யமானதோ, எவர்  குணம்  எளிமையும்  உன்னதமும்  கொண்டதோ அவரிடம் சகல ஜீவன்களுக்கு கட்டுப்படும்.

51. ஒருவர் எந்தவிதமான வழியில் நடக்கவேண்டும்?
தர்மம் நியாயம் நேர்மை யான பாதையில் செல்பருக்கு  இந்த உலகம் மட்டும் அல்ல, இனி அடுத்த உலகங்களிலும் நன்மையே கிடைக்கும்.

२१. कोऽन्धो? योऽकार्यरतः को बधिरो? यो हितानि न शृणोति।    को मूको? यो काले प्रियाणि वक्तुं न जानाति॥
 21.  ko'ndho? Yo'kaaryaratah,  ko badhiro? Yo hitaani na shrinoti  ko mooko? Yah kaale priyaani vaktum na jaanaati

52. யார்   கண் பார்வை இழந்தவன்?
எவனுடைய  செயல்பாடுகள் தவறானவையோ அவன்.

53. எவன் செவிடன்?
மஹான்கள் அறிவுரையை ஏற்காதவன் காத்திருந்தும் செவிடன் தான்.

54.  எவன் ஊமை?
சரியான வார்த்தைகளை,  தக்க நேரத்தில்  புண்பட்ட இதயங்களுக்கு,   இதமாக,  மனதிற்கு ஆறுதலாக சொல்லாதவன், சொல்ல இயலாதவன் வாயிருந்தும் ஊமை.

No comments:

Post a Comment