Sunday, December 1, 2024

Thirumangai Azhwar in debate with Sriman Narayana

" மடி பிடி ரஹஸ்யம்......"

திருமங்கை ஆழ்வாரை எம்பெருமான் மடக்க வேண்டும் என்று அவர் அருளிச்செய்த ப்ரபந்தத்தில் இருந்தே கேள்வி கேட்டான்!

ஆழ்வார் எதற்கும் அஞ்சாதவர்!

எம்பெருமான் ஒருபடி சென்றால் ,,,
ஆழ்வார் இன்னும் ஒருபடி மேலே செல்பவராயிற்றே!!!

எம்பெருமான் ,கண்ணுக்கும் நெஞ்சுக்கும் நாம் அல்லவோ ப்ரதானம் என்று ஆழ்வாரைக்கேட்டதற்கு!,,,,ஆழ்வார் பதில் சொல்கிறார்!

" வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண்ணிணையும் களிக்குமாறே' !
..என்று என் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் உணவு உன் அடியார்கள் தானே தவிர,,நீர் அல்ல என்று ஆழ்வார் சொல்கிறார்!

உடனே ,,
எம்பெருமான்!....
உமக்கு அமுத ரஸமாக இருப்பவன் நான்தானே?? சாந்தோக்ய உபநிஷத் என்னைத்தானே சொல்லிற்று...". ஸர்வ ரஸ: ஸர்வ கந்த: " என்று..?
அப்படி நானே பரம ரஸமாய் இருக்கையில்,நீர் எப்படி மறுக்கலாம்!?.. என்று கேட்கிறார்!!

ஆழ்வார்.....
உம் அடியார்கள் ! அவர்கள் எப்போதும், உம்மையே சிந்தித்து இருப்பார்கள்!
அவர்களுக்கு உன் திருவடியே பரம போக்யமாய் இருக்கும்!
அப்படிப்பட்ட உன் திருவடியை சிந்திக்கும் அடியார்களே எனக்கு பரம ரஸம்!

" எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி தித்திக்குமே! "
என்று பதில் தருகிறார் ஆழ்வார்!

எம்பெருமான்....ஆழ்வாரிடம் மாட்டிக்கொண்டு திணறுகிறானா? ஆழ்வாரின் பதிலை சாமர்த்தியமாக.....சமாளிக்கறானா?

விட்டு விடுவானா எம்பெருமான்? 
ஆழ்வார் வாயிலாக ..." அடியார்களின் "மஹிமைகளையும்,பெருமைகளையும் உலகிற்கு உணர்த்தவே இத்தனை கேள்விகள் !!!

எம்பெருமான் ஆழ்வாரிடம் சொல்கிறான்...
உமக்கு நானே உபாயம்,
நானே உபேயம் என்பதை நீர் அறிந்து இருப்பீர்!!
அப்படி இருக்கும்போது என்னை நீர் ஒதுக்கமுடியாதே?!

ஆழ்வார் !!
அப்படி ஒரு எண்ணம் உமக்கு இருக்கோ?
நீர் உபாயம் என்று இருக்கும்போதும்,
உபேயம் என்று இருக்கும்போதும், ...எல்லாவற்றிலும்...துணையாய் இருப்பவர்கள் யார் தெரியுமா?
உன் திருநாமத்தையே அநவரதமும் சொல்லிக்கொண்டு இருப்பவர்களே !

 " பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே!"

நீர் உபாயமாம்போது புருஷகாரமாய் நின்று உனக்கும் முற்பட்டு இருப்பார்கள்!
நீர் உபேயமாகும்போது...
அந்த உபேயத்துக்கு எல்லை நிலமாய் நின்று இறுதியில்...
உத்தேச்யராய் இருப்பார்கள்!

இங்கும்,இப்போதும்,,,
உசாத்துணையாக ( பேச்சுத்துணை) உன் அடியார்கள் அல்லவோ இருக்கின்றனர்?

இப்படியெல்லாம் ஆழ்வார் பதில் ஸாதிக்க,,,,
எம்பெருமான் ஆழ்வாரைநோக்கி....
அவரை மடக்க வேண்டும் என்று....சூடாக கேள்வி கேட்கிறான்?!!" 

எம்பெருமான்...

ஆழ்வாரைக் கேட்கிறான்!

நீர் எனக்கு அடியவனாகத்தானே வந்து புகுந்தீர்?

ஆழ்வார்...
" மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் " உற்றதும் உன் அடியார்க்கடிமை!
உன்னைப் பற்றி பேசினாலும்,,,உன் திருவஷ்டாக்ஷரத்தைக் கற்று அதன் சாரத்தை உணர்ந்ததால்,நான் உன் அடியாரிடத்திலே அல்லவோ நான் அடிமைப்பட்டது!

அதனால்,உன் தாஸர்களுக்கே நான் அடிமை!

எம்பெருமான்!
அப்படியாகில்,,,,நீர் ஏன் கோபுரங்களும், திருமதில் கொட்டாரம் போன்ற கைங்கர்யங்களில் ஈடுபட்டுச் செய்தது ஏன்?

ஆழ்வார் பதில் சொல்கிறார்!

நீர் அலர்மேல் மங்கை உறை மார்பன் ,, மற்றும் உன் திருமார்பு பிராட்டி வசிக்கும் இடம் ...அதனால்.,உமக்கு கைங்கர்யங்கள் செய்தோம்!
பிராட்டியை முன்னிட்டதால் உமக்கு இத்தனைக் கைங்கர்யங்கள்! 

எம்பெருமான்!!

ஆழ்வாரே... தேவதா ஸார்வபௌமன் நான் தானே!

ஆழ்வார்....
அப்படி நீர் இருந்தாலும் ,நமக்கு நிலையுற்றவரே ச்ரேஷ்ட்டர்!

எம்பெருமான்...
அர்ச்சனை செய்வதற்கு நாம் தானே யோக்யர்!
ஆழ்வார்....
விஷ்ணு பக்தர்களே எனக்கு பூஜைக்கு உரியவர்கள்!அதே புருஷார்த்தம்!
ப்ரமாணங்களும் அப்படித்தான் சொல்கிறது!விஷ்ணுவை ஆராதிப்பவர்களே யோக்யர்கள்!

எம்பெருமான்!....
ஆழ்வாரே.. நீர் எம்மை இப்படி பழித்துச்சொல்லலாமா? உமக்கு குற்றம் வராதா?

ஆழ்வார்!
பரத்தாவிடம் விச்வாசத்தினால் பதிவ்ரதைக்கு குற்றம் உண்டாகிலன்றோ அடியேனுக்கு இவ்விடத்தில் குற்றம் என் று சொல்வது? 

எம்பெருமான்!

ஆழ்வாரே!மோக்ஷத்தின்கு உத்தேச்யம் நாம் தானே!

ஆழ்வார்!
சாண்டில்ய மகரிஷி வாக்யம் ...உமக்குத் தெரியுமே!
அச்சுத சேவை செய்பவர்களுக்கு மோக்ஷம் உண்டா இல்லையா என்பதில் சந்தேகம் உண்டு!ஆனால் அவர்அடியார்களுக்கு பண்ணும் சேவை மோக்ஷத்தையே கொடுக்குமே? என்று ரிஷி வாக்யம் உள்ளதே!..என்கிறார் ஆழ்வார்!

ஆழ்வார் இப்படி பாகவத சேஷத்வ பாரதந்த்ரியத்தில் நிஷ்டையாக இருப்தைப் பார்த்தஎம்பெருமான் .....இன்னும் இவரிடம் சோதிக்க வேண்டும் என் நினைத்து கேட்கும் கேள்விகள்!
அடுத்த பதிவில் தொடரும்!
ஹரிப்ரியா தேவநாதன்🙏 
அடியேன் ராமாநுஜ தாஸன்

No comments:

Post a Comment