*துலா ஸ்நானம்* -
*கடைமுழுக்கு - முடவன் முழுக்கு!* -
*விஷ்ணுபதி புண்யகாலம்*
"வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி" என காவிரியின் பெருமையைச் சொல்கிறது "துலா புராணம்!"
ஐப்பசி மாதத்தில் தினமும் சூர்ய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே "துலா ஸ்நானம்!" அதிலும் ஐப்பசி மாதம் கடைசி இரண்டு நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு!
கங்கை உள்பட 63 கோடி தீர்த்தங்களும் தங்களிடம் சேர்ந்துவிட்ட பாபங்களிலிருந்து விடுபட "ஐப்பசியில் காவிரியை" நாடி வருவதாக புராணங்கள் கூறுகின்றன!
கங்கையை பூமிக்கு அழைத்தான் பாகீரதன். எண்ணற்ற பாபங்களை செய்துவிட்டு, எல்லோரும் அதனை என்னிடம் வந்து சேர்ப்பிக்கின்றனர், எனவே நான் வரமாட்டேன் என்று மறுக்கிறாள் கங்காதேவி!
பாகீரதன், "பாபம் செய்தவர்களை ஏன் சிந்திக்கிறாய்?" "எத்தனையோ மஹான்கள் நீராடுகிறார்களே, அதை நினைத்துப்பார்" என்று சொல்ல, பூமிக்கு வர சம்மதிக்கிறாள் கங்கை!
அதன்படியே "வடக்கே குடிகொண்டுள்ள கங்கா, ஐப்பசி (துலா) மாதம் முழுதும் காவிரியில் சங்கமிக்கிறாள்" என்கிறது "துலா புராணம்!"
மற்ற நாட்களைவிட கடைசி நாளன்று துலா கட்டத்தில் நீராடுவது அதிவிசேஷம், அதுவே *முடவன் முழுக்கு!*
கால் ஊனமுற்ற ஒருவர் கடை முழுக்கு நாளன்று காவிரியில் நீராட வந்தார். ஆனால் அவரால் மறுநாள் தான் வரமுடிந்தது.
*இதையறிந்த கங்கை, அந்த நாளிலும் காவிரியில் வாசம் செய்தாள்! இதனால், கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல்நாள்) "முடவன் முழுக்கு" என்பர்!*
மேலும், *விஷ்ணுபதி புண்ய காலம்* ஆரம்ப நாள் இன்று! கார்த்திகையில் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்த திருமங்கையாழ்வாராலும், நம்பிள்ளை என்ற ஆசார்யராலும், கார்த்திகை ரோஹிணியில் அவதரித்த திருப்பாணாழ்வாராலும், கார்த்திகை பரணியில் அவதரித்த அருளாளப்பெருமாள் எம்பெருமானாராலும் இந்த கார்த்திகை மாதம் *திருநல் கார்த்திகை* யானது!
காவேரீ தீரவாசகா:!
கருணா கடாக்ஷநேசா!!
கஸ்தூரி ரங்கராஜா!!!
🙏🙏
No comments:
Post a Comment