Friday, October 4, 2024

What sloka to recite for darbha sangraham?

ஜபம் ஹோமம் போன்ற அனைத்து வைதிக காரியங்களிலும் உபயோகப்படுத்தப்படும் தர்பையை அவ்வப்போது எடுத்து வந்துதான் உபயோகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தர்பைகளுக்கு யாதயாம (பழமை) தோஷம் ஏற்படும், ஆனால் மாக அமாவாஸையான அன்று சேகரித்து வைத்துக் கொள்ளும் தர்பைகளுக்கு ஒரு வருஷம் வரை யாதயாம தோஷம் கிடையாது. ஆகவே இயன்றவர்கள் அன்று தர்பையை கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி அறுத்து சேகரித்து வைத்துக்கொள்ளலாம்:

 विरिञ्चिना सहोत्पन्न परमेष्ठी निसर्गज | 

नुद सर्वाणि पापानि दर्भ स्वस्तिकरो मम ||

விரிஞ்சிநா ஸஹோத்பன்ன பரமேஷ்டீ நிஸர்கஜ |

நுத ஸர்வாணி பாபாநி தர்ப' ஸ்வஸ்திகரோ மம ||

பிப்ரவரி மாத 'வைதிகஸ்ரீ ' இதழில் இருந்து...

No comments:

Post a Comment