Friday, October 4, 2024

Andal & Vishnu avatarams

ஆடி ஆனந்தம்--6(பதிவு 23)
ஆண்டாள் பாடிய அவதாரங்கள் !

திருமாலின் ஐந்து நிலைகள்--
பர நிலை (பாகம் 2)
      🔔🥁🎷🎸🎻🎺📯🥁🔔
திருப்பாவை முதல் பாசுரத்தில்,
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று ஸ்பஷ்டமாகப் பரமாத்வாவைப் பாடிய ஆண்டாள் தொடர்ந்து பல பாசுரங்களில் பரமனைப் பாடுகிறார்.எண்ணிறந்த கல்யாண குணங்களைக் கொண்ட எம்பெருமானின் ஒவ்வொரு குணத்தைக் குறிக்கும் வண்ணம் ஆயிரமாயிரம் திருநாமம் இட்டு ஸ்தோத்ரம் செய்யலாம்.ஆனால் பெருமானின் பரநிலையை/பரத்துவத்தை நேரடியாக உணர்த்தும்
படியான சில திருநாமங்களால்,
ஆண்டாள் போற்றிப் பாடுகிறார்.
எந்தப் பாசுரத்தில்,எந்தத் திருநாமத்
தை ,எந்தக் காரணத்துக்காக ஆண்டாள் உரைக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

                 1.   "பரமன் !" 
பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் ! 
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
பரமன் என்பது எம்பெருமானின் பரத்துவத்தைக் குறிக்கிறது.பரமபத நாதனாகிய பரமன்--சர்வசக்தன்,சர்வயக்ஞன்,சர்வ
ரட்சகன் !சர்வ சக்திமானான,
புருஷோத்தமனான பரமன், அடியார்
களைக் காப்பதற்கான அவதாரங்களை எடுக்க வேண்டி அந்தப் பரத்துவத் தன்மையோடு பாற்கடலுள் வந்து பையத் துயின்றார்.பரமனின் தன்மை/மேன்மை மிளிர்ந்தால் தானே அவர் அடியார்களை எந்த நிலையிலும்,
எந்த இடரிலிருந்தும் ரட்சிக்க முடியும்.

"சர்வேஸ்வரன் திருப்பாற் கடலிலே
ப்ரஹ்மாதிகளுடைய(பிரம்மா,ருத்ரன்,மற்றும் இந்திரன் முதலான தேவர்கள்) கூக்குரல் கேட்கும் படி,குடில் கட்டிப் பயிர் நோக்கும் கிருஷிகனைப் (விவசாயி)
போலே,தோள் தீண்டியாக--மிக நெருக்கமாக தோள்தொடும் அளவு-- வந்து கண் வளர்ந்து அருளுகிறான்".
ப்ரஹ்மாதிகள் மட்டுமல்லாது,
எம்பெருமான், தம் அடியார்கள்
(அடியார்கள் அல்லாத சாமான்ய மக்களையும், அடியார்களாக்கி) அனைவரையும் பக்தி உழவு செய்து, உஜ்ஜீவனம் அடையச் செய்வதற்காக அயராது உழவு செய்து கொண்டிருக்
கிறார்.ஆகையால் பரமன் என்பது நாராயணன்  என்பதை விட ஒருபடி மேலானதாம்.
"பரம பதத்தில் நின்றும் ஆர்த்த ரஷணத்துக்காக-திருப் பாற் கடல் அளவும் ஒரு பயணம் எடுத்து-ஜகத் ரஷண சிந்தையிலே அவகாஹித
னாய்--ஆர்த்த த்வனிக்கு செவி கொடுத்துக் கொண்டு கிடக்கிற படி !"

2.               "உத்தமன் !"
ஓங்கி உலகளந்த உத்தமன் !
   👍👌👍👌👍👌👍👌👍👌👍👌
உத்தமன் என்பது "புருஷோத்தமன்--புருஷர்களுள் மிக உத்தமமானவன்"
என்று பொருள்படும்.தான் கெட்டும் பிறரை வாழ்விக்குமவன் உத்தமன்.

பரமாத்மா தன் வடிவைக் குறுகச் செய்து வாமனன் என்னும் சிறு பாலகனாகச் சென்றதும்,ஒரு சாதாரண மன்னன் மஹாபலியிடம்
மூன்றடி மண் பிச்சை கேட்டதும், மஹாபலியை ஏமாற்றி அவன் சொத்தை(?) எடுத்துக் கொண்டார் என்னும் அவப் பெயரை ஏற்றதும் --
இந்திரன் முதலான தேவர்கள் இழந்த லோகங்களை,மீட்டு அவர்களுக்குக் கொடுப்பதற்காகவே !

மேலும்"என் முடி மேல் அடி வைக்க வேணும்" என்று ஒருவரும் வேண்டாதிருந்தும்,அவரை
விலக்காமையையே காரணமாகக் கொண்டு அனைவர் முடியிலும் அடியிட்டருளின எம்பெருமான் உத்தமன் !

தான் நிர்ஹேதுகமாக ரட்சிக்கையும்
அதைத் தன் பேறாய் கருதுகையும் –
ஈஸ்வரர்களும் --பிற தெய்வங்கள்/தேவர்கள் எல்லாம்--தங்களைக் காப்பாற்ற/தங்கள் காரியம் சாதிக்க இவர் திருவடிகளில் விழுந்து வணங்குவதாலே இவரே பரதத்வம் !
தன் திருவடிகளை கிருபையால், தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே -ப்ராப்யமும்! ப்ராபகமும் இவரே !!

        3.   "பற்பநாபன் !"
பாழியம் தோளுடைப் பற்பநாபன் !
🪷🌾🪷🌾🪷🌾🪷🌾🪷🌾🪷🌾🪷🌾
பற்பநாபன்--நாபியில் கமலத்தை/தாமரைப்பூவை உடையவன்.அந்த நாபிக் கமலத்தில்,"வ்யஷ்டி சிருஷ்டி"
க்குக் காரண பூதனான பிரம்மாவைப் பெற்று வைத்து-திருத் தோள்களாலே காத்துக் கொண்டு இருக்கிறவன்.
பிள்ளைகளைத் தொட்டிலில்
வளர்த்தி,புற்பா இட்டுப் பூரித்து ஆயுதம் கொண்டு காத்து இருப்பா
ரைப் போலே,திரு நாபீ கமலத்திலே பிரம்மாவைப் பெற்று வைத்து,திருத் தோள்களாலே காத்துக் கொண்டு இருக்கிறவன் !

பிரம்மாவைப் படைத்தவர் பரமாத்மா தானே ! ஆதலால் பற்பநாபனும் பரமாத்மா !
"நான்முகனை,நாராயணன் படைத்தான் !
நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் !"
என்னும் படி

நாராயணின்/நான்முகனின் படைப்புகள் பல்கி வளர்வது போல
உலகோர் அனைவரும் நலமாக வாழ,
மழை பொழியப் பிரார்த்திக்கிறார்
கள்.

ஸ்ரீமந் நாராயணன் முதலில் பஞ்சபூதங்களான மண்,நீர்,நெருப்பு
காற்று,ஆகாயம் ஆகியவற்றைப் படைத்தார்.பின்னர் இவற்றை வெவ்வேறு விகிதங்களில் பஞ்சீகரணம்--ஒன்றோடொன்றைக் கலக்குவது--செய்து பெரும் பிரம்மாண்டங்களை உருவாக்கினார்-
இதுவரைக்கும், எம்பெருமான் செய்தது "ஸமஷ்டி சிருஷ்டி!"/ "அத்வாரக சிருஷ்டி" 

இதன்பின் இந்தப் பிரம்மாண்டத்
திற்குள்ளே பிரம்மனைத் தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து படைக்கிறார். பிரம்மா பகவானின் ஆணைப்படி அவர் தந்த சக்தி
கொண்டு அவரே மற்றவை அனைத்
தையும் படைத்தார்.இந்த சிருஷ்டிக்கு, "வ்யஷ்டி சிருஷ்டி"
/ "ஸத்வாரஹ சிருஷ்டி"என்று பெயர்.

               4 ."மாயன்"
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை !
    🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏
பரம பதத்திலே பரத்துவம் விளங்க,
அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்,
தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும் இருப்பைச் சொல்கிறது.
அந்தப் பரமன் கிருஷ்ணாவதாரத்
தில் நீர்மை--செளலப்யம்,செளசீல்யம்
வாத்சல்யம் தோற்ற பல லீலைகள் புரிந்தது.

"சூட்டுநன் மாலைகள் தூயன ஏந்த விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்து இமிலேற்றுவன் கூன்
கோட்டிடை யாடினை கூத்து அட லாயர்தம் கொம்பினுக்கே !!"(திருவிருத்தம் 3--1) என்னும்படி.

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

No comments:

Post a Comment