20 *மஹா நாராயண உபநிஷத்*
*தைத்திரிய நாராயணவல்லீ*
*மஹா நாராயண உபநிஷத்தில் இதுவரை பரமாத்மாவை பற்றி பார்த்தோம். அதன் சுருக்கத்தை மறுபடியும் இப்போது பார்ப்போம்*
இவ்வுலகிலுள்ள எல்லாம் எதனிடம் ஒன்றாகக் கூடி வாழவும் ஒடுங்கவும் செய்கிறதோ, எதனிடம் எல்லா தேவர்களும் தத்தம் அதிகாரங்களுடன் உறைகிறார்களோ, எது உயர்ந்ததற்கு எல்லாம் உயர்ந்ததோ, பெரியதோ, வெளிப்படையாய்த் தோன்றாததோ, அதுவே ருதம், அதுவே சத்தியம், அதுவே தீர்க்கதரிசிகள் பரப்பிரம்மம் எனக் கூறுவது. அதுவே அக்னி, அதுவே வாயு, அதுவே சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், நிமிஷங்களும், முஹூர்த்தங்களும், இரவு பகல்களும், மாதங்களும், வருஷங்களும், எல்லாம் அதனிடமிருந்தே உண்டாயின. அதை எட்டிப்பிடிக்கவோ, அளவுபடுத்திக் கூறவோ எவரும் இல்லை. கண்ணால் எவரும் அதைக் கண்டதில்லை. ஒருமைப்பட்ட மனதுடன் இருதயத்தில் உறைவதாக அதைத் தியானிப்பவர் அதை அறிந்து சாகா நிலை எய்துகின்றனர்.
யக்ஞங்களில் கூறப்படும் மந்திரங்கள் பலவும், உபாசனை மந்திரங்களும் தற்பொழுது வருகின்றன.
ஸத³ஸஸ்பதிமத்³பு⁴தம் ப்ரிய மிந்த்³ரஸ்ய காம்யம் । ஸநிம் மேதா⁴ மயாஸிஷம் |
*பொருள்*
அற்புதமானவனும், (எல்லோருக்கும்) பிரியமானவனும், இந்திரனால் விரும்பிப் போற்றப்படுபவனும், புத்தி சக்தியை அளிப்பவனும் ஆகிய அந்த உலகநாயகனை அடைய நான் அவாவுகிறேன்.
सदसस्पतिमद्भुतं प्रियमिन्द्रस्य काम्यम् । सनिं मेधामयासिषम् ॥ १
sadasaspatimadbhutaṁ priyamindrasya kāmyam .
saniṁ medhāmayāsiṣam .
*Meaning*
I pray I may attain to the marvellously excellent Lord of the unmanifest cause of the universe who is dear to Indra and my own Self, who is covetable, who is worthy of reverence and who is the bestower of intellectual powers.
*Commentary*
This stanza in Gāyatrī metre is a prayer addressed to the indwelling Paramātman for the gift of mental powers leading to illumination.
The Kena Upaniṣad narrates a tale from which we understand that Indra was the first and foremost of gods who realized Brahman nearest.
The Aitareya Upaniṣad informs us that Indra is the mystic name of the Ātman dwelling in the creatures. So it is evident that the Antaryāmin (indwelling Ātman) is the dearest object to everyone.
No comments:
Post a Comment