Friday, October 18, 2024

Maha Narayana Upanishad - Meaning in tamil part4

4
மஹா நாராயண உபநிஷத்
தைத்திரிய நாராயணவல்லீ

யத : ப்ரஸூதா ஜக ³த: ப்ரஸூதீ தோயேந ஜீவாந் வ்யசஸர்ஜ பூ⁴ம்யாம் ।
யதோ ³ஷதீ⁴பி :⁴ புருஷாந் பஶூ ꣳஶ்ச விவேஶ பூ⁴தாநி சராசராணி ॥ 4॥

பொருள்
உலகை பிரசவிக்கும் பிரகிருதி எவனிடமிருந்து தோன்றிற்றோ, ஜலத்தால் உயிர்களை பூமியில் எவன் தோற்றுவித்தானோ, செடிகொடிகளிலும், மனிதர்களிடத்தும், பசுக்களிடத்தும்,  சராசரமாகிய  பொருட்கள் அனைத்துள்ளும் எவன் புகுந்து உறைகின்றானோ;

விளக்கவுரை
இயற்கை வினோதங்கள் ஏவனிடமிருந்து தோன்றியதோ, நீரினால் எவன் பூமியில் உயிரினங்களை உருவாக்கி தந்தானோ -  இங்கு ஸ்ரீமன் நாராயணனின் அவதார நியமங்களை கொஞ்சம் விஞ்ஞானப் பார்வையுடன் பார்த்தால் மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருள் புரியும். முதல் அவதாரம் மீன். இது நீரில் மட்டும் வாழக் கூடிய ஒரு உயிரினம். அடுத்தது கூர்மம் என்றால் ஆமை. இது நீரிலும் வாழும் நிலத்திலும் வாழும். அடுத்தது வராகம். இது பூமியில் மட்டும் வாழ்வது. இப்படி அவதார நியமங்களை பார்க்கும் பொழுது நீரினால் எவன் பூமியில் உயிரினங்கள் படைத்தான் என்பது புரியவரும்.
இங்கு ஜலம் என்று சொல்லி (தோயேன - ஜலத்தால்) என்ற உபலக்ஷணத்தால் புமி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகிய ஐம்புலன்களும் அடங்கியிருக்கின்றன அல்லது இந்த உலகம் இந்த ஐந்து பூதங்களால் ஆனது என்றும் கொள்ள வேண்டும்.

यतः प्रसूता जगतः प्रसूती तोयेन जीवान् व्यचसर्ज भूम्याम् । यदोषधीभिः पुरुषान् पशूꣳश्च विवेश भूतानि चराचराणि ॥ ४॥

yataḥ prasūtā jagataḥ prasūtī toyena jīvān vyacasarja bhūmyām .
yadoṣadhībhiḥ puruṣān paśūɱśca viveśa bhūtāni carācarāṇi .. 4
Meaning
From whom the Creatrix of the world, Prakṛti, was born, who created in the world creatures out of elements such as water, who entered beings consisting of herbs, quadrupeds and men as the inner controller, who is greater than the greatest, who is one without a second, who is imperceptible,
Commentry
The creation of the world from Brahman through avyakta has been described generally in the previous stanzas.
Here some details are given in the order of evolution, namely, the Prakṛti, the five elements consisting of water and the rest, the terrestrial region, plants, animals and men.
Paramātman dwells as the innermost Spirit of all creatures:

No comments:

Post a Comment