Sunday, September 22, 2024

Mahalaya Paksha

*மஹாளய பித்ரு ஆராதனை - குட்டி ஆராய்ச்சி*

*ஏன் இந்தப் பக்ஷத்தில் அநுஷ்டிக்கிறோம்*

 தைத்தீரிய உபநிஷத் முதல் ப்ரஶ்னத்தில் ஒரு விவாதம் ""நாம் எந்த எந்தக் கார்யங்களைச் செய்யத் தவறவே கூடாது???""" 

அந்தக் கேள்விக்கு உபநிஷத் பதிலில் ஒரு பாகம்:: ::: *देव पितृ कार्याभ्यां न प्रमदितव्यम्* 

 அதாவது (1) தேவ ஆராதனை (2) பித்ரு ஆராதனை இந்த இரு ஆராதனைகளைச் செய்ய *தவறவே* கூடாதாம்.

Fine. 

இந்த இரண்டு ஆராதனைகளுக்காக எல்லாவற்றையும் இரண்டு இரண்டாய் பிரித்தனர்.

 *வருடம்* :::: (1)உத்ராயணம் தேவ ஆராதனைக்கு. (2) தக்ஷிணாயனம் பித்ரு ஆராதனைக்கு

*மாதம்:*(1)சுக்ல பக்ஷம் தேவ ஆராதனைக்கு, (2) கிருஷ்ண பக்ஷம் பித்ரு ஆராதனைக்கு.

*பகல்* ::: (1) முன் பாதி தேவ ஆராதனைக்கு, (2) பின் பாதி பித்ரு ஆராதனைக்கு. ( ச்ராத்தம்/தர்ப்பணம் எல்லாம் அபரான்ன காலத்தில்தான்)  

*மனித உடல்* : (1)இடது பாகம் தேவாம்சம் (hence உபவீதி/ஸம்வீதம்) (2)வலது பாகம் பித்ரு அம்சம் (hence ப்ராசீன வீதி.

Ok 

பாரதீய எல்லா குடும்பத்தினரும் ஒருமித்தமாய் ஓரே காலத்தில் அவரவர் வர்கத்வய பித்ருக்கள் மட்டுமன்றி, அவரவர் ஸர்வ *காருணிக பித்ருக்களை* யும் விசேஷமாய் ஆராதிக்க நாம் ஆர்வப் பட்டால் எந்த நாட்களில் அந்த விசேஷ ஆராதனையைச் செய்யலாம்????

The obivous choice is (பித்ருக்களுக்கு உகந்த) தக்ஷிணாயனம் & அதில் ஒரு ( பித்ருக்களுக்கு உகந்த) கிருஷ்ண பக்ஷம்.

தக்ஷிணாயத்தில் 6 கிருஷ்ண பஷங்கள் உள. எதைத் தேர்ந்து எடுப்பது?

நமது ரிஷிகள் தக்ஷிணாயத்தின் *முதல்* க்ருஷ்ண பக்ஷத்தை தேர்ந்து எடுத்த மஹாளய பக்ஷ ஆராதனை செய்தனர்.

பல பல நூறு ஆண்டுகளுக்கு முன் அத்தகு மஹாளாய பக்ஷம் (தக்ஷிணாயன *முதல்* கிருஷ்ண பக்ஷம்) சாந்தரமான பாத்ரபத மாஸத்தில் இருந்தது (Source:: ,*Orion, A Research into the antiquity of the Vedas*, BG Tilak)

 Hence ரிஷிகள் அன்று செய்த பாத்ரபத க்ருஷ்ண பக்ஷத்தில் நாமும் இந்நாளிலே அதே பாத்ரபத க்ருஷ்ண பக்ஷத்தில் பித்ரு ஆராதனை செய்கிறோம்

ஆனால் இப்போது ( *அயனாம்ஸ* மாற்றத்தினால்) தக்ஷிணாயனம் (நிரயண) ஆஷாட மாதத்தில் வருகின்றதே. 

So ஆஷாட கி. பக்ஷத்தில் அல்லவா நாம் இந்நாளில் இந்த மஹாளயம் அநுஷ்டிக்க வேண்டும்.??
ஆனால் பாத்ரபத கி.பக்ஷத்தில் அநுஷ்டிக்கிறோமே.! 

இந்த வேறுபாடை நமது சாஸ்த்ர வல்லனுர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்??

மஹாளய ஸங்கல்பத்தில் முந்நாளைய ரிஷிகள் காலத்து தக்ஷிணாயன முதல் கிருஷ்ண பக்ஷத்திற்கும் இந்நாட்களில் நாம் காணும் தஷிணாயான முதல் கிருஷ்ண பஷத்திற்கும் இடடையே உள்ள *கால இடைவெளி* யைக் குறிக்கும் வாக்யங்களைச் சேர்த்துக் கொண்டனர்.

அதாவது

(இக்கால) ஆஷாட கி.பக்ஷத்திற்கும் (அக்கால) பாத்ரபத கி.பக்ஷத்திற்கும் கால இடைவெளி எவ்வளவு?? 

      ஆஷாட கி.பக்ஷம்
     (அதிக ஶ்ராவண வருஷமானால்
     அதிக ஶ்ராவண சு.பக்ஷம்
            அதிக ஶ்ராவண கி.பக்ஷம்)
     ஶ்ராவண சு.பக்ஷம்
     ஶ்ராவண கி.பக்ஷம்
     பாத்ரபத சு.பக்ஷம்
     பாத்ரபத கி.பக்ஷம் 

கால இடைவெளி 5 (அதிக ஶ்ராவண வருடத்தில் 7) பக்ஷங்கள்

Thus
ஆஷாட கி.பக்ஷத்திலிருந்து 5 ( or 7) வது பக்ஷத்தில் இந்த ஸத்கார்யம் செய்கிறோம் எனும் அர்தத்துடன் *ஆஷாடாத்* (ஆஷாடத்திலிருந்து)
*பஞ்சம (or ஸப்தம)* (5வது or 7 வது) *அபர பக்ஷ ப்ரயுக்த* (பக்ஷங்கள் பின்னால் அமைந்துள்ள ) என வார்த்தைகளை ஸங்கல்பத்தில் சேர்த்துக் கொள்கிறோம்.

Thus 

ரிஷிகளின் மஹாளய மரபை மறக்காமால் அவர்கள் அநுஷ்டித்த பக்ஷத்திலேயே, அதே ஸமயத்தில் அயன மாற்ற நிகழ்வுகளையும் மறக்காமல் மனதில் கொண்டு ஸங்கல்பத்தில் அதற்கான வாக்கியங்களைச் சேர்த்துக் கொண்டு மஹாளயம் அனுஷ்டிக்கிறோம்

கிருஷ்ணன்
ஶ்ரீ காஞ்சி கைங்கர்ய ஸபா
கோரேகான், மும்பை

No comments:

Post a Comment