Sunday, September 22, 2024

List of my relatives - Saint Thyagaraja

அனாதையாக இருக்கிறோம், நமக்கு யாருமில்லை என்று கருதுபவர்களுக்காகவே தியாகைய்யா ஒரு கீர்த்தனை செய்துள்ளார்.  அதபற்றி ஒரு பதிவு

           சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜஸ்வாமிகளுக்கு சதா சர்வகாலமும் ராம பக்தி தான்.  எழுந்தால் ராமன் அமர்ந்தால் ராமன் உண்டால் ராமன் உறங்கினால் ராமன் ராமனை தவிர ஒன்றும் தெரியவில்லை.  அவர் அண்ணா ஜபேசன் உலகநினைப்பே இல்லாமல் இருக்கிறாயே குடும்பத்தை பார்க்க வேண்டாமா என்று சத்தமிட்டு இவருடன் சரியாக பேசுவதில்லை.  ஒருமுறை ராமன் தியாகைய்யருக்கு அருள் செய்ய எண்ணிணான்.  சாதாரண தம்பதியர் போல் வேடம் தரித்துக்கொண்டான் அந்த அலகிலா விளையாட்டுடையான்.  ஜாடிக்கேற்ற மூடி போல் அவருக்கேற்ப வேடமிட்டாள் சீத்தம்மா.  மாருதியும் அவர்களுக்கு உடன்வர தியாகைய்யரின் இல்லம் அடைகின்றனர்.  தாம் வெளியூரில் இருந்து வருவதாகவும் ஓரிரவு தங்க இடம் கிட்டுமா என்று கேட்கிறார் மாறுவேடத்தில் வந்த ராமன்.  உடனே வந்தவரை வரவேற்று ஆசனமிட்டு அமரச்செய்தார் தியாகைய்யர்.  அவர்களுக்கு தருவதற்கு தியாகைய்யா இல்லத்தில் பிடி உணவு இல்லை (ராஜ வெகுமதியை வேண்டாம் என்றதால் ராஜதண்டனைக்கு பயந்து உஞ்சவ்ருத்தி கூட சரியாக வருவதில்லை) பலநாளாக தியாகைய்யாவும் கமலாம்மாவும் அரைவயிறு கால்வயிறுதான்.  வந்தவருக்கு என்ன தர என்று கையை பிசைந்துகொண்டு இருக்கும்போது மாறுவேடத்தில் வந்த சீத்தம்மா தாம் கொண்டுவந்த பழம் உணவுப்பொருளை தியாகைய்யர் மனைவி கமலாம்மாவிடம் கொடுக்க அதைக்கொண்டு உணவு தயாரித்து வீட்டில் ராமனுக்கு அர்ப்பணித்து பின் அணைவரும் உண்டனர்.  அப்போது மாறுவேடத்தில் வந்த மாருதி சொல்வான் ஏன்யா இப்படி எல்லாத்தையும் வெறுத்துட்டு அனாதையா இருக்க, அண்ணன் சொன்ன மாதிரி காசு சம்பாதிக்கவேண்டியதானன்னு சொல்றார்.  அப்போ தியாகராஜ ஸ்வாமிகள் பாடினார்

சீதம்ம மாயம்மா ஸ்ரி ராமுடு மா தன்றி

 என்றாராம்.  சீத்தம்மா தான் எங்கம்மா பிரபு ஶ்ரீராமசந்திரமூர்த்தி தான் எனக்கு தந்தைன்னு சொல்றார்.  மேலயும் சொல்வார்

வாதாத்மஜ சௌமித்ரி வைனதேய ரிபு மர்தண 
தாத பரதடுலு சோத்ருலு மாக்கு ஓ மனசா

பரமேஷ வஷிஷ்டா பராஷர நாரத ஷௌனக சுக சுரபதி கௌதம லம்போதர குஹ சனகாடுலு தரைஜ பாகவதாக்ரேசருலு எவ்வரோ வாரெல்லரு வர த்யாகராஜுனிகி பரம பாந்தவுலு மனசா

 என்றாராம்.

வாயு மைந்தன், சௌமித்திரி, வினதை மைந்தன், சத்துருக்கினன்,
தாதை, பரதன் ஆகியோர் சோதரர்கள் நமக்கு,

பரமேசன், வசிட்டர், பராசரர், நாரதர், சௌனகர், சுகர்,
தேவர் தலைவன், கௌதமர், லம்போதரன், குகன், சனகாதியர்,
புவியில் நிச பாகவதர்களில் தலைசிறந்தோர் எவரோ, அவர் யாவரும்
அருளுடைத் தியாகராசனுக்கு நெருங்கிய சுற்றத்தினர் என்றாராம்.  தியாகராஜர் தனக்கு மட்டும் சுற்றம் எனவில்லை யாரும் அற்றவர் என்று கருதும் யாருக்கும் இது பொருந்தும். இனி நமக்கு தந்தைன்னா தந்தை ராமசாமி, சீதாலக்ஷ்மின்னு தான் நினைக்கனும்.  

ராம ராம ராம ராம

No comments:

Post a Comment