Thursday, August 15, 2024

Uddhava in Narayaneeyam

ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN --

76. உத்தவன் தூது 

இதுவரை கிருஷ்ணன் பலராமன் இருவருமே எந்த பள்ளிக்கும் சென்றதாகவோ எந்த குரு விடமும் கல்வி கற்றதாக நாம் அறியவில்லை. இப்போது கம்ஸ வதம் முடிந்து பெற்றோரை சிறையிலிருந்து விடுவித்தபின் மதுரா நகரம் உக்கிரசேனரின் ஆட்சிக்கு மீண்டும் வந்தபின் பலராமன் கிருஷ்ணனின் குருகுல அப்பியாசம் தொடங்குகிறது. அவர்களுக்கு ஆசார்யனாக கிடைத்தவர் தான் சாந்தீபனி முனிவர்.

கிருஷ்ணன் தனது உற்ற நண்பன் உத்தவனை பிரிந்தாவனத்துக்கு அனுப்பி தனது பிரிவால் வாடும் கோப கோபியர்க்கு தக்க அறிவுரை அளிக்கச் செயகிறான் என்பது தான் இந்த தசக ஸ்லோகங்களின் கருத்து.

गत्वा सान्दीपनिमथ चतुष्षष्टिमात्रैरहोभि:
सर्वज्ञस्त्वं सह मुसलिना सर्वविद्या गृहीत्वा ।
पुत्रं नष्टं यमनिलयनादाहृतं दक्षिणार्थं
दत्वा तस्मै निजपुरमगा नादयन् पाञ्चजन्यम् ॥१॥

gatvaa saandiipanimatha chatuShShaShTi maatrairahObhiH
sarvaj~nastvaM saha musalinaa sarvavidyaagR^ihiitvaa |
putraM naShTaM yamanilayanaadaahR^itaM dakshiNaarthaM
dattvaa tasmai nijapuramagaa naadayan paa~nchajanyam || 1

க³த்வா ஸாந்தீ³பனிமத² சதுஷ்ஷஷ்டிமாத்ரைரஹோபி⁴꞉
ஸர்வஜ்ஞஸ்த்வம் ஸஹ முஸலினா ஸர்வவித்³யாம் க்³ருஹீத்வா |
புத்ரம் நஷ்டம் யமனிலயனாதா³ஹ்ருதம் த³க்ஷிணார்த²ம்
த³த்த்வா தஸ்மை நிஜபுரமகா³ நாத³யன்பாஞ்சஜன்யம் || 76-1 ||

சாந்தீபனி ரிஷியிடம் கிருஷ்ணனும் பலராமனும் கல்வி கற்றது அறுபத்து நாலு நாட்கள் மட்டுமே என்கிறார் மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி. எல்லாமே அறிந்த எல்லாமே ஆகிய கிருஷ்ணா, உனக்கு இன்னொருவர் கற்பிக்கவேண்டுமா? இருந்தாலும் உலகில் அவதரித்தபின் உனக்கும் ஒரு குரு ஒருவர் இருந்தார் என்ற புகழ் சாந்தீப முனிவருக்கு கிடைக்கச் செய்தாய். அவருடைய ஆஸ்ரமத்தில் முனிவரும் ரிஷி பத்னியும் அடைந்த ஆனந்தம் அவர்கள் உன்னிடமிருந்து பெற்றது.
முனிவரின் புத்ரனை யமலோகம் சென்று மீட்டுத் தந்தாயே அது தான் குரு தக்ஷிணையா? குருகுல வாசம் அதோடு முடிந்து மதுராவுக்கு திரும்பினாயா?

स्मृत्वा स्मृत्वा पशुपसुदृश: प्रेमभारप्रणुन्ना:
कारुण्येन त्वमपि विवश: प्राहिणोरुद्धवं तम् ।
किञ्चामुष्मै परमसुहृदे भक्तवर्याय तासां
भक्त्युद्रेकं सकलभुवने दुर्लभं दर्शयिष्यन् ॥२॥

smR^itvaa smR^itvaa pashupa sudR^ishaH premabhaaraH praNunnaaH
kaaruNyena tvamapi vivashaH praahiNOruddhavaM tam |
kinchaamuShmai paramasuhR^ide bhaktavaryaaya taasaaM
bhaktyudrekaM sakalabhuvane durlabhaM darshayiShyan || 2

ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா பஶுபஸுத்³ருஶ꞉ ப்ரேமபா⁴ரப்ரணுன்னா꞉
காருண்யேன த்வமபி விவஶ꞉ ப்ராஹிணோருத்³த⁴வம் தம் |
கிஞ்சாமுஷ்மை பரமஸுஹ்ருதே³ ப⁴க்தவர்யாய தாஸாம்
ப⁴க்த்யுத்³ரேகம் ஸகலபு⁴வனே து³ர்லப⁴ம் த³ர்ஶயிஷ்யன் || 76-2 ||

கிருஷ்ணா நீ செய்யும் காரியங்கள் சொல்லும் வார்த்தைகள் வாழ்வில் எல்லோருக்கும் நல்ல படிப்பினை. உனது பிரிவை தாங்க வொண்ணாமல் துயரத்தில் ஆழ்ந்திருந்த பிருந்தாவன கோபியர்களை திசை திருப்பி அவர்கள் உலகில் தங்களது கடமையைச் செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று சங்கல்பம் செய்தாய்.. இதற்கு வழி என்ன என்று முடிவெடுத்தாய். அவர்கள் மீது கொண்ட கருணையால், அவர்கள் பக்திக்கு ஈடாக உனது உற்ற நண்பனும் பக்தனுமான உத்தவனை அழைத்தாய். ''உத்தவா பிருந்தாவனம் செல். அங்கே என் மீது அளவற்ற அன்பும் பாசமும் பக்தியும் கொண்ட கோபியர்களை நீ காண்பாய். அந்த அளவு பக்தியை வேறு எங்கும் எவரிடமும் காணமுடியாது. அவர்களிடம் எனது தூதுவனாக நீ சென்று அவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரைகளை வழங்கு.'' என்கிறாய்.

थिमपिशुनं गोकुलं प्राप्य सायं
त्वद्वार्ताभिर्बहु स रमयामास नन्दं यशोदाम् ।
प्रातर्द्दृष्ट्वा मणिमयरथं शङ्किता: पङ्कजाक्ष्य:
श्रुत्वा प्राप्तं भवदनुचरं त्यक्तकार्या: समीयु: ॥३॥

tvanmaahaatmya prathimapishunaM gOkulaM praapya saayaM
tvadvaartaabhirbahu sa ramayaamaasa nandaM yashOdaam |
praatardR^iShTvaa maNimayarathaM shankitaaH pankajaakshyaH
shrutvaa praaptaM bhavadanucharaM tyaktakaaryaaH samiiyuH || 3

த்வன்மாஹாத்ம்யப்ரதி²மபிஶுனம் கோ³குலம் ப்ராப்ய ஸாயம்
த்வத்³வார்தாபி⁴ர்ப³ஹு ஸ ரமயாமாஸ நந்த³ம் யஶோதா³ம் |
ப்ராதர்த்³ருஷ்ட்வா மணிமயரத²ம் ஶங்கிதா꞉ பங்கஜாக்ஷ்ய꞉
ஶ்ருத்வா ப்ராப்தம் ப⁴வத³னுசரம் த்யக்தகார்யா꞉ ஸமீயு꞉ || 76-3 ||

கிருஷ்ணா, உத்தவன் உன் சொல் தட்டாதவன். உடனே பிருந்தாவனம் செல்கிறான். மாலை நேரம் ஆகிவிட்டது. அந்தி வேளையில் கோகுலம், பிருந்தாவனத்தை அடைகிறான். நந்தகோபன், யசோதையின் மாளிகைக்கு செல்கிறான். ஆஹா உன்னைப் பற்றி செய்திகள் அறிந்ததும் எவ்வளவு ஆனந்தம் கொள்கிறார்கள் அந்த பெற்றோர். பொழுது விடிந்தது. கோபியர்கள் கண்ணில் நந்தகோபன் வீட்டு வாசலில் ஒரு அழகிய மணிகளினால் அலங்கரிக்கப்பட்ட தேர் நிற்பதைப் பார்த்து

No comments:

Post a Comment