Friday, August 9, 2024

On akshaya truteeya

छत्रोपानत्प्रदानं च गो भू काञ्चन वाससाम् ।
यद्यदिष्टतमं चान्यत् तत् देयमाविशङ्कया ।।

சத்ரோபாநத்ப்ரதாநம் ச கோ பூ காஞ்சந வாஸஸாம் ।
யத்யதிஷ்டதமம் சாந்யத் தத் தேயமாவிஶங்கயா ।।

வைஶாக மாச ஶுக்லபக்ஷ த்ருதீயை அக்ஷய்ய த்ருதீயை என்று அழைக்கப்படுகிறது அக்ஷய்யம் என்றால் குறைவற்றது என்று பொருள் இன்று நம்மால் செய்யப்படும் ஜபம், ஹோமம், பித்ருபூஜனம், ஏழைகளுக்கு அளிக்கப்படும் தானங்கள் இவைகள் அளவற்ற பலன்களை தரும் ஆகையால் , குடை , செருப்பு, பஶு, பூமி, ஸ்வர்ணம், வஸ்த்ரம், முதலிய பொருட்களை இன்று ஏழைகளுக்கு முன்வந்து தானமாக தர வேண்டும் இவ்வாறு நாம் செய்யும் தான பொருட்கள் பல மடங்காக திரும்பக் கிடைக்கும் அத்துடன் குறைவற்ற புண்ணியத்தையும் பெற்று தரும்.

முடியாதவர்கள் பசி தாகத்தால் வாடும் மனிதர்களுக்கு சாப்பிட சாப்பாடும் அருந்த ஜலமும் கொடுப்பதால் அளவற்ற புண்யத்தை தந்து நமது விருப்பத்தை நிறைவேற்றும்.
(இதில் ஜாதி மத இன பாகுபாடு கூடாது)


*ஸ்ம்ருதி கௌஸ்துபம்*

No comments:

Post a Comment