Monday, August 19, 2024

aham bhavam - HH Bharati Teertha Mahaswamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

மனிதனுடைய அகம்பாவத்துக்கு காரணமான அவனுடைய பணம், பாண்டித்தியம் அல்லது பலம் அவனை கர்வம் கொள்ள செய்கிறது, ஆனால் இந்த மமதை உண்மையில் சத்ரு என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அது அவனை மிகவும் தொந்தரவு செய்து தவறுகளிளும் ஈடுபட வைக்கிறது.

தன்னை யாரும் எதிர்க்க முடியாது என்று அவன் தவறாக நினைக்கிறான், செய்கிறான். ஆனால் அவனுடைய கெட்ட கர்மாவினால் அவன் கஷ்டங்களை அனுபவிப்பது  நிச்சயம். அகம்பாவத்தை கைவிட்டு இருந்தாலே இதையெல்லாம் தவிர்த்து இருக்கமுடியும்.

பகவத்பாத சங்கரர்
மனிதன் பணம், யௌவனம்,  பாண்டித்யத்தின் காரணமாக கர்வப்படக்கூடாது. எல்லாவற்றையும் காலம் எடுத்துச்சென்று விடும். அவை சாஸ்வதமானவையே அல்ல, என்கிறார்..

பகவத் பாதர் போன்ற மஹரிஷிகள் எவ்வளவு அறிவாற்றல் பெற்றிருந்தாலும் துளி கர்வம் கூட இல்லாதவர்கள். அதனால் தான் ஜனங்கள் அவர்களை மஹாபுருஷர்கள் என்று வர்ணித்திருக்கிறார்கள்.

ஆதலால் எக்காரணத்தைக் கொண்டும் அகம்பாவம் கொள்ளாமல் மனிதன், எளிமையுடன் வாழவேண்டும்.

ஒருவனுடைய சத்துருவும் தொண்டையில் முள் மாதிரி குத்துவதும் ஆன இந்த அகங்காரத்தை அழித்து விட்டு தன்னை கட்டுப்படுத்துவதில் உள்ள சுகத்தை வேண்டுமளவு அடைய ஞானத்தை விரும்பி செல்பவன் நிச்சயம் அறிவான்.

No comments:

Post a Comment