Monday, August 19, 2024

Kumarasambhavam sarga 1 - tamil translation

குமாரசம்பவம்-சர்கம் 1. 

8.ய: பூரயன் கீசக ரந்த்ரபாகான் தரீமுகோத்தேன ஸமீரணேன
உத்காஸ்யதாம் இச்சதி கின்னராணாம் தானப்ரதாயித்வம் இவ உபகந்தும்

ய: -ஹிமவான் , கீசகரந்த்ரபாகான் – மூங்கில்களின் த்வாரங்களை, தரீமுகோத்தேன – குகைகளின் வாயிலில் இருந்து வெளிப்படும், ஸமீரணேன- காற்றால், பூரயன், நிரப்புவானாக , உத்காஸ்யதாம்- உரத்த ஸ்தாயியில் பாடும், கின்னராணாம்- கின்னரர்களுக்கு, தானப்ரதயித்வம் -பக்கவாத்யமாக, , உபகந்தும் இச்சதி இவ- தொடர விரும்பியதைப் போல இருந்தது.

இமயமலையின் குகைகளில் வீசும் காற்று அங்குள்ள மூங்கில்களின் த்வாரத்தை நிரப்புவதனால் சங்கீத ஒலிபோல் இருந்தது . அங்கு உள்ள கின்னரர்கள் பாடும் பாட்டிற்கு அது பக்கவாத்தியம் போல் இருந்ததால் அதை ஹிமவான் பக்கவாத்தியம் வாசிக்க விரும்பினான் என்று கூறுகிறான் காளிதாசன். 

உச்சஸ்தாயி என்றதன் பொருள், தேவலோகத்துப் பாடகர்களான கின்னர கந்தர்வர்கள் பாடுவது காந்தாரக்ரமம் எனப்படும். ஷட்ஜக்ராமம் அல்லது மத்யம க்ராமம் மனிதர்கள் பாடுவது.என்று சொல்லப்படுகிறது.

9. கபோலகண்டூ: கரிபிர்வினேதும் விகட்டிதானாம் ஸரளத்ருமாணாம் 
யத்ர ஸ்ருதக்ஷீரதயா ப்ரஸூத: ஸானூனி கந்த: ஸுரபீகரோதி

யத்ர- அந்த ஹிமாலயத்தில், கரிபி:-யானைகளால், கபோலகண்டூ:-மத்தகத்திலும் கன்னத்திலும் ஏற்பட்ட அரிப்பை , வினேதும்- போக்க, விகட்டிதானாம் -உராய்ந்து கொள்ளப்பட்ட , ஸரளத்ருமாணாம் – தேவதாரு மரங்களின் (ஓருவகை ஊசியிலை மரங்கள் மருத்துவ குணம் கொண்டவை)-ஸ்ருதக்ஷீரதயா-ஒழுகிய சாறுகள், ப்ரஸூத: உண்டான , கந்த: மணம், ஸானூனி-மலைச்சரிவுகளை , ஸுரபீ கரோதி-மணமுள்ளனவாகச் செய்கிறது.

யானைகள் உராய்வதால் மரங்களின் பட்டைகள் உரிந்து உள்ளே இருக்கும் சாறுகள் ஒழுகுகின்றன. அதனால் மலைச் சரிவுகள் மணம் வீசுகின்றன என்றதன் மூலம் மலையில் யானைகள் மிகுதியாக இருப்பது புலனாகிறது.

No comments:

Post a Comment