தசரதன் ஒரு சிறந்த
ராஜ குமார ராம்
அவரது தர்ம
பத்தினிகள் மூவ ராம்
பலநாள் பிள்ளைப் பேறு
இன்றித் தவித்தா ராம்
புத்திர காமேக்ஷ்டி யாகம்
ஒன்றைச் செய்தா ராம்
நிவேதனப் பாயசம்
துணைவிகள் அருந்தின ராம்
அதன் பலனாய் மகவு
நால்வரைப் பெற்றன ராம்
கோசலையின் தவப்
புதல்வன் ஸ்ரீராமச்சந்திர ராம்
கைகேயி மகன்
பரதன் என்பவ ராம்
சுமத்திரை ஈன்றது
லஷ்மண சத்ருக்னன ராம்
நால்வரும் படிக்கக்
குருகுலம் சென்றன ராம்
பிள்ளைகளின் குரு
விஸ்வாமித்ர முனிவ ராம்
நால்வரும் ஆய கலைகள்
நன்கு கற்றன ராம்
முனிவர் யாகம்
ஒன்று நடத்தினா ராம்
அதில் தடைகளை
ராட்சதர்கள் புரிந்தன ராம்
இவர்களின் செயல்களை
அடக்க நினைத்தா ராம்
ராம லஷ்மணனைக்
கூட்டிப்போக வேண்டினா ராம்
தசரதன் மகன்களை
அனுப்பத் தயங்கினா ராம்
பின்னர் முனிவரின்
விருப்பம் ஏற்றா ராம்
காட்டில் ராட்சதர்கள்
அதர்மம் செய்தன ராம்
ராமர் அவர்களை
அடக்கி அழித்தா ராம்
மன்னன் பிள்ளைகளின்
வீரம் கேட்டா ராம்
மனதில் மட்டற்ற
உவகை அடைந்தா ராம்
ஜனகன் மிதிலை
தேசத்து மன்னவ ராம்
நிலத்தை உழுகையில்
சீதையைக் கண்டவ ராம்
மகளைப் பண்புடன்
அழகாக வளர்த்தா ராம்
சீதையின் மாளிகையில்
சோதரிகளும் நால்வ ராம்
சீதைக்கு சுயம்வரம்
தந்நை நடத்தினா ராம்
சிவ தனுசை ஒடிக்க
நிபந்தனை விதித்தா ராம்
முனிவரின் ஆசியுடன்
ராமரும் சென்றா ராம்
மிதிலையில் சீதையை
மாடத்தில் பார்த்தா ராம்
அண்ணலும் அவளும்
ஒன்றாய் நோக்கின ராம்
வில்லை எடுத்தது கண்டு
இற்றது கேட்டன ராம்
மிதிலை மக்கள்
மகிழ்ச்சியில் திளைத்தன ராம்
ராமரும் ஜனகனின்
மருமகன் ஆனா ராம்
சீதா ராமன் ஆனந்தமாக
வாழ்வைத் துவக்கினா ராம்
மகனுக்குப் பட்டமளிக்க
மன்னவன் நினைத்தா ராம்
அரசவையைக் கலந்து
நல்ல நாள் குறித்தா ராம்
மக்களிடம் மகிழ்ந்து
விழா குறித்துக் கூறினா ராம்
அனைவரும் அழகிய
தோரணங்கள் கட்டின ராம்
பட்டாபிஷேகம் காண
ஜனங்கள் ஏங்கின ராம்
கைகேயியின் ஆருயிர்த்
தோழி கூனி என்பவ ராம்
அவளது போதனையால்
கைகேயி மனம் மாறினா ராம்
கணவன் தசரதனைக்
கண்டு வெகுண்டா ராம்
முன்னரே தான் கேட்ட
இரு வரம் பற்றிக் கூறினா ராம்
ஒன்றின்படி தன் மகன்
பரதன் மன்னவ ராம்
அடுத்தது ராமன்
வனம் புக விழைந்தா ராம்
மனைவியின் வாக்கினை
தசரதன் ஏற்றா ராம்
புத்திரனைப் பிரிந்த
சோகத்தில் ஆழ்ந்தா ராம்
சீதை தானும் கணவருடன்
வனம் வருவேன் என்றா ராம்
லஷ்மணன் ராமனைப்
பிரிய மறுத்தா ராம்
சீதா ராமனுடன் தானும்
கானகம் தொடர்ந்தா ராம்
வழியில் ஆற்றைக் கடக்க
குகன் படகோட்டினா ராம்
ராமன் குகனையும்
தம்பியாக ஏற்றா ராம்
கானகம் செல்லும் வழியிலே அகலிகை சாபம் தீர்த்தா ராம்
பஞ்சவடி ஆசிரமத்தில்
அனைவரும் தங்கின ராம்
காட்டில் சூர்ப்பனகை எனும்
ராட்சசி ஒருத்தி கண்டன ராம்
லஷ்மணன் ராட்சசியின்
மூக்கை அறுத்தா ராம்
மூக்கறுபட்டவள் அலறி
அண்ணனிடம் சென்றா ராம்
சீதையின் அழகைக் கூறி அண்ணனை மாற்றினா ராம்
சிவ பக்தியில் இணையில்லா இராவணன் இலங்கை மன்ன ராம்
சீதை மேல் தணியாத
காதல் கொண்டா ராம்
வனத்தில் சீதையைத்
தொட நினைத்தா ராம்
சாபம் இருந்ததால்
தொலைவில் நின்றா ராம்
மாயமானை அனுப்பி
ராமரைப் பிரிக்க நினைத்தா ராம்
பொன்மானைக் கண்ட சீதா
பிடித்துத் தரக் கேட்டா ராம்
ராமன் மறுக்க சீதை
கணவரைக் கேலி செய்தா ராம்
மானைப் பிடிக்க ராமன் போக அபயக் குரல் கேட்டன ராம்
தம்பியை உடன் செல்ல
சீதா கட்டளை இட்டா ராம்
மீறின இலக்குவனை
சீதை கடிந்து கொண்டா ராம்
மனமின்றி இலக்குவன்
கோடு ஒன்றை வரைந்தா ராம்
கோட்டைத் தாண்டாதிருக்க
அண்ணியை வேண்டினா ராம்
அண்ணி சொல்லால் தம்பி
ராமனைத் தேடிச் சென்றா ராம்
ராவணன் பர்ணசாலையோடு
சீதையைக் கவர்ந்தா ராம்
வழியில் பறவை ராஜா
ஜடாயு போர் தொடுத்தா ராம்
போரில் தன் இரு
சிறகையும் இழந்தா ராம்
தசமுகன் சீதையை
இலங்கையில் சிறை வைத்தா ராம்
சீதையைப் பிரிந்த
ராமன் துவண்டா ராம்
ஜடாயு கொடுத்த
ஜடைவில்லை பெற்றா ராம்
சீதையைக் கொண்டு சென்ற
ராவணன் பற்றி அறிந்தா ராம்
உயிர் துறந்த ஜடாயுவிற்கு
ஈமக் கிரியைகள் செய்தா ராம்
தேறுதல் சொன்ன
வானரர்களை மதித்தா ராம்
சுக்ரீவன் அண்ணன்
வாலி என்பவ ராம்
அத்துமீறி அட்டகாசம்
மிகப் பல செய்தவ ராம்
சுக்ரீவன் மனம் மகிழ
வாலியைக் கொன்றா ராம்
சீதையைத் தேடி வர
வானரங்களை அனுப்பினா ராம்
வானரக் கூட்டத்தில்
அனுமன் என்று ஒருவ ராம்
ராம நாமத்தையே தனது
மூச்சாக வாழ்ந்தவ ராம்
சீதையைக் காணக்
கடல் தாண்டிச் சென்றவ ராம்
இலங்கையில் சீதம்மாவை
அசோக வனத்தில் பார்த்தா ராம்
சீதை ராமனிடையே நடந்த
உரையாடலைச் சொன்னா ராம்
மகிழ்ந்த சீதை கொடுத்த
கணையாழியைப் பெற்றா ராம்
இலங்கையில் தசமுக
ராவணனைக் கண்டா ராம்
தன் வாலில் வைத்த தீயால்
இலங்கையை எரித்தா ராம்
கண்டேன் சீதையை என்று
ராமனிடம் உரைத்தா ராம்
வானரப் படைகள் கடலில்
பாலம் அமைத்தன ராம்
ராமன் தம்பியுடன்
இலங்கை சென்றா ராம்
படைகளுடன் இலங்கையை
முற்றுகை இட்டா ராம்
தம்பி கும்பகர்ணன் செஞ்
சோற்றுக் கடனால் மாண்டா ராம்
ராவணன் தம்பி
விபீஷணன் என்பவ ராம்
அண்ணனின் தகாத
செயலை வெறுத்தவ ராம்
அதனால் ராமனிடம் சரண்
அடைய நினைத்தா ராம்
சரண் அடைந்த எதிரியை
ராமன் ஏற்றா ராம்
போரில் ராவணன்
அனைத்தும் இழந்தா ராம்
இன்று போய் நாளை வா
என்ற ராமன் சொல் கேட்டா ராம்
இறுதியில் ராமனால்
வானுலகை எய்தினா ராம்
ராமன் சீதையுடன் தம்பி
உடன்வர அயோத்தி வந்தா ராம்
சீதா ராமனாகப் பல்லாண்டு
அயோத்தியை ஆண்டா ராம்
ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய சீதா ராம்
நண்பர்களே படித்து விட்டீர்களா. நீங்களும் இன்று 108 முறை ராம நாமம் கூறியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி . ராம நாமாவை சொன்னால் அனுமன் மிகவும் மகிழ்வார் தானே.
ராம் ராம் ராம் ராம்
No comments:
Post a Comment