Saturday, January 22, 2022

Camphor in chin of venkatesa Perumal

திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் கற்பூரம்.....!!!

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதரின்
திருப்பணிகளை ஏற்றுக்கொண்ட
ஸ்ரீ ராமானுஜருக்கு திருமலையில் ஸ்ரீரங்கம் போல திருப்பணிகள் நடக்கவில்லையே?

யார் போய் திருப்பணிகளை செய்ய அனுப்புவது என்று தன் சீடர்களில் யாராவது போய் திருப்பணி செய்கிறீர்களா என கேட்ட போது
அனந்தாழ்வான் நான் சென்று 
நந்தவனத்தை உருவாக்கி பெருமாளுக்கு கைங்கரியம் செய்கிறேன் என்றார்.

திருமலை நம்பி திருமலையில்
அனந்தாழ்வானை வரவேற்று ஓர் குடிலை கட்டி தந்தார்.

அனந்தாழ்வான் தனது கர்ப்பினி மனைவியுடன் திருமலையில் அந்த குடிலில் வசித்து
ஒர் அழகிய நந்தவனத்தை உருவாக்கி அதற்கு 
"ஸ்ரீ ராமானுஜ நந்தவனம்" என பெயர் வைத்து தினம் பூக்கும்
பூக்களை கட்டி பெருமாளுக்கு தினம் 
கைங்கரியம் செய்து வந்தார்.

மழைகாலத்தில் பெய்த மழையால் நந்தவனம் பூத்து குலுங்கியது
வெயில் காலத்தில் தண்ணீருக்கு எங்கே போவது என யோசித்த 
அனந்தாழ்வான் ஓர் சிறிய குளம் வெட்டி தண்ணீரை தேக்க பள்ளமான பகுதியை தேர்ந்தெடுத்து இன்னும் ஆழமாக ஆக்க தினம் 
பள்ளம் வெட்டினார்.
அந்த குளம்
"கோகர்ப்ப ஜலபாகம்' என்று இன்றும் திருமலையில் உள்ளது.

கர்ப்பினி மனைவியும் அவருக்கு
துணையாக இறைபணி செய்கிறேன் என வந்து 
வெட்டும் மண்ணை சுமந்து சிறிது தூரம் சென்று கொட்டி கரை அமைத்தார்.

கடப்பாரையால் ஆழமாக குத்தி மண்ணை எடுத்து எடுத்து கர்ப்பினி மனைவியிடம் தந்து
அந்த பெண் சரியான இடத்தில் கொட்டுகிறாளா எனவும் பார்த்து வந்தான் அனந்தாழ்வான்.

ஓர் இளைஞன் சுவாமி என்னையும்
இந்த வேலையில் சேர்த்து கொள்ளுங்க. கொஞ்சமாக சம்பளம் தாங்க என்றவனை யாரும் வேலைக்கு வேண்டாம் என்றார்.

தானும் தன் மனைவி மட்டுமே இறைபணி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

மறுபடியும்

சம்பளம் வேண்டாம் இறைபணி செய்யவாவது என்னை சேர்த்து கொள்ளுங்க என்றான்.

திட்டி திருப்பி அனுப்பினார்.

சிறிது தூரம் சென்ற இளைஞன்
அனந்தாழ்வானுக்கு தெரியாமல்
அவரின் மனைவியிடம் கர்ப்பிணியான தாங்கள் கஷ்டப்படுவதை பார்க்க கஷ்டமாக இருக்கு அவரின் கண் பார்வையில்
இருந்து மறைந்தவுடன் என்னிடம் 
நீங்கள் சுமக்கும் மண்ணை கொடுங்க என்றான்.

அவளும் இளைஞனிடம் மண்ணை கொணர்ந்து கொடுத்து சிறிது களைப்பாறினாள்.

அனந்தாழ்வான் தன் மனைவி மண்ணை கொண்டு போவதை பின் தொடந்து வந்து பார்த்த போது
அவள் சுமையை அந்த இளைஞனிடம் கொடுப்பதை பார்த்து கோபப்பட்டு கடப்பாறையை தூக்கி 
அந்த இளைஞனை நோக்கி வீச
அது அந்த இளைஞனின் தாடையை பதம் பார்த்தது.

தாடையை பிடித்தபடியே அந்த இளைஞன் ஓடி மறைந்தான்.

மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்ய வந்த பட்டர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

"பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு குரல் கேட்டது. 

உடனே அவரை அழைத்துவந்தனர்.

பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். 

அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.

''சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் தங்களையே அடித்துவிட்டேன் என்னை மன்னிக்க வேண்டும்" என்று விழுந்து வணங்கினார்.

பெரிய பெருமாள் சிரித்தபடியே .
அனந்தாழ்வானை தேற்றி உன் கர்ப்பிணியான மனைவி வேலை பார்த்தது மனதை கஷ்டப்படுத்தியது ஆதலாலே நான் வந்தேன் என்றார்.

'' ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அனைவரும் குழம்பி இருந்த வேலையில்,

"தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார்.

மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. 

இதை நினைவுபடுத்தும் விதமாகவே 
திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.

திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாசலின் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். 

இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம் பாருங்கள். 

காரணம் அந்தக் கடப்பாரை பெருமாளை ஸ்பரிசித்த பெருமை கொண்டது.

No comments:

Post a Comment