Wednesday, June 9, 2021

Vairagya shatakam of Bhartruhari in tamil

வைராக்ய சதகம் - நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரீ
ராஜா பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம் ஒவ்வொரு எழுத்தும் முத்து.. இன்று கொஞ்சம் ரசிப்போம் .
तृषा शुष्यत्यास्ये पिबति सलिलं शीतमधुरं
क्षुधार्तः शाल्यान्नं कवलयति मांसादिकलितम् ।
प्रदीप्ते कामाग्नौ सुदृढतरमालिङ्गति वधूं
प्रतीकारं व्याधेः सुखमिति विपर्यस्यति जनः ॥ १९॥
த்ருʼஷா ஶுஷ்யத்யாஸ்யே பிப³தி ஸலிலம் ஶீதமது⁴ரம்
க்ஷுதா⁴ர்த: ஶால்யாந்நம் கவலயதி மாம்ஸாதி³கலிதம் ।
ப்ரதீ³ப்தே காமாக்³நௌ ஸுத்³ருʼட⁴தரமாலிங்க³தி வதூ⁴ம்
ப்ரதீகாரம் வ்யாதே:⁴ ஸுக²மிதி விபர்யஸ்யதி ஜந: ॥ 19 ॥
தாகம் தொண்டை வறண்டுவிட்டது. உதடுகள் காய்ந்து வெடிக்கிறது. அந்த நேரத்தில் சுனை ஒன்று தென்பட்டு அதி குளிர்ந்த தேன் சுவை தண்ணீர் பருகினால்?? பசி காதை அடைக்க, கண் பஞ்சடையும் நேரம் இந்தா உட்கார், சாப்பிடு என்று ஒரு பெரிய வாழை இல்லை நிறைய சாப்பாடு, அழகான மனைவி அருகில் இருந்தால் கால் பிடித்து விட்டால். வெற்றிலை மடித்துக் கொடுத்தால்.... பசி தாகம் ஆசை எல்லாவற்றிற்கும் சந்தோஷம், திருப்தி, தான் லக்ஷியம். ஆஹா இந்த திருப்தியை சந்தோஷத்தை அடைவதில் தான் எத்தனை துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
हिंसाशून्यमयत्नलभ्यमशनं धात्रा मरुत्कल्पितं
व्यालानां पशवः तृणांकुरभुजः सृष्टा स्थलीशायिनः।
संसारार्णवलंघनक्षमधियां वृत्तिः कृता सा नृणाम्
यामन्वेषयतां प्रयान्ति सततं सर्वे समाप्तिं गुणाः॥
ஹிம்ஸாஶூந்யமயத்நலப்⁴யமஶநம் தா⁴த்ரா மருத்கல்பிதம்
வ்யாலாநாம் பஶவஸ்த்ருʼணாங்குரபு⁴ஜஸ்துஷ்டா: ஸ்த²லீஶாயிந: ।
ஸம்ஸாரார்ணவலங்க⁴நக்ஷமதி⁴யாம் வ்ருʼத்தி: க்ருʼதா ஸா ந்ருʼணாம்
தாமந்வேஷயதாம் ப்ரயாந்தி ஸததம் ஸர்வே ஸமாப்திம் கு³ணா: ॥ 97 ॥
ப்ரம்மா எவ்வளவு சிறந்த கருணை உள்ளம் கொண்டவன்! ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அல்லவா படைத்தி ருக்கிறான். பாம்புக்கு வெறும் காற்று போதும் அது தான் ஆகாரம். அதற்கு எந்த பிரயாசையும் படவேண்டாம். காற்றைப் பிடித்து அடைத்து விற்கிறார்கள். சைனாவில் ஆக்சிஜன் எனும் பிராணவாயுவை விற்று அதை மாட்டிக்கொண்டு அநேகர் அலைகிறார்களாம். பகவான் காற்றையும் நீரையும் சுத்தமாக நிறைய தந்திருக்கிறான். நாம் தான் அதை அசுத்தப்படுத்துபவர்கள். எங்கு பார்த்தாலும் பச்சைப் புல், செடிகள். ஆடு மாடுகள் சுகமாக உண்டு ஜீவிக்க, அதன் மேல் படுக்கையாக உறங்குவதற்கு தந்தான். காசு கொடுக்கவேண்டாம். நமக்கு புத்தியை கொடுத்தான். சம்சார சாகரம் தாண்ட வழி எல்லாம் வைத்தான். அதற்கான குணமும் உள்ளே திணித்தான். யார் அதைப் பற்றி கவலைப்படுகிறோம்?
एको रागिषु राजते प्रियतमादेहार्धहारी हरो
नीरागेषु जनो विमुक्तललनासङ्गो न यस्मात्परः ।
दुर्वारस्मरबाणपन्नगविषव्याविद्धमुग्धो जनः
शेषः कामविडम्बितान्न विषयान्भोक्तुं न मोक्तुं क्षमः ॥ १७॥
ஏகோ ராகி³ஷு ராஜதே ப்ரியதமாதே³ஹார்த⁴ஹாரீ ஹரோ
நீராகே³ஷு ஜநோ விமுக்தலலநாஸங்கோ³ ந யஸ்மாத்பர: ।
து³ர்வாரஸ்மரபா³ணபந்நக³விஷவ்யாவித்³த⁴முக்³தோ⁴ ஜந:
ஶேஷ: காமவிட³ம்பி³தாந்ந விஷயாந்போ⁴க்தும் ந மோக்தும் க்ஷம: ॥ 17 ॥
சிவன், பரமேஸ்வரன், ஞானி என்றாலும் உமையொருபாகம். பெண்மையை மதிப்பவன், பெண்மையின் சக்திஸ்வரூபம் உணர்ந்தவன். காமன் அவனை எதிர்கொள்ள வந்தபோது அவனை எரித்தவன், என்றாலும் பெண்ணான சக்தியை தன்னோடு இணைத்துக் கொண்டவன். நாம் புலன்களின் ஆளுமையில் நம்மை இழந்தவர்கள். காமம் மோகம் இவற்றின் கைப்பாவையாக நாம் அடிமையுற்று எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்கிறோம். அனுபவித்தாலும் திருப்தியில்லை, விடவும் முடியவில்லை என்று இருதலைக் கொள்ளி அவஸ்தையில் வாடுகிறோம்.
अजानन्दाहात्म्यं पततु शलभस्तीव्रदहने स मीनोऽप्यज्ञानाद्वडिशयुतमश्नातु पिशितम् ।
विजानन्तोऽप्येते वयमिह विपज्जालजटिलान्
न मुञ्चामः कामानहह गहनो मोहमहिमा ॥ १८॥
அஜாநந்தா³ஹாத்ம்யம் பதது ஶலப⁴ஸ்தீவ்ரத³ஹநே
ஸ மீநோঽப்யஜ்ஞாநாத்³வடி³ஶயுதமஶ்நாது பிஶிதம் ।
விஜாநந்தோঽப்யேதே வயமிஹ விபஜ்ஜாலஜடிலாந்
ந முஞ்சாம: காமாநஹஹ க³ஹநோ மோஹமஹிமா ॥ 18 ॥
ஆசை, யாரை விட்டது. விட்டிலுக்கு தான் நெருங் குவது பழமல்ல, நெருப்பு என்று தெரியா மலேயே அதன் கவர்ச்சியில் அடிமை யாகி மாள்கிறது. தூண்டிலில் துடிக்கும் புழுவிற்கு ஆசைப்பட்டு மீன் தனது உயிரை இழக்கிறது. மாயையின் சக்தியை புலன் களின் வேட்கையை எவராலும் வெல்ல முடியவில் லையே. இதை மீறி வென்று என்று ஞானம் பெறுவது?

No comments:

Post a Comment