Wednesday, June 9, 2021

Nadhopasana - HH Sri Bharati Teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

                *நாதோபாஸனம்*

ஸ்ருதிகளும், ஸ்மிருதிகளும் 'உலகம் நாதம் அல்லது சப்தத்திலிருந்து தோன்றி வந்தது' என்பதை உறுதிப்படுத்துகின்றன. 

स भूरिति व्याहरन् स भूमिमसृजत। 
என்று ஸ்ருதி கூறுகிறது

नामरूपे च भूतानां कर्मणां च प्रवर्त्तनम्। 
वेद शब्देभ्य एवादौ निर्ममे स महेश्वरः।। 

என ஸ்மிருதி கூறுகிறது

இரு இடங்களிலும் சப்தம் என்ற சொல்லுக்கு' அக்ஷரங்கள்' என்ற அர்த்தமே தவிர 'ஒலி' என்பதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

வேத வியாசரும் அவருடைய சூத்திரத்தில் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார்

 ஆதலால் நாதத்தை உபாசனை செய்வது சிலாக்கியமாக வழிமுறையாகும். ஸாதாரண ஸம்ஸ்காரங்கள் கொண்ட ஜனங்கள் கூட பகவான் நாமங்களை இடைவிடாது உச்சரித்துக் கொண்டு நல்ல ஸாதனைகளை அடைய முடியும், ஏனென்றால் பகவானுடைய திருநாமத்திற்கு அத்தகைய குணாதிசயம் உண்டு. 

செய்யக்கூடாத காரியங்களைச் செய்வதும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறுதலும் இருவகையான பாபங்களாம். 

சிவ பெருமானின் திரு நாமத்தை உச்சரித்தல் மட்டுமே இரண்டு பிராயச்சித்தமாகும். 


ஸ்ரீசங்கர பகவத்பாதர் பக்தியின் ஒன்பது வகையான செயல்முறைகளை விவரிக்கிறார். அவைகளில் பகவானை துதிக்க கீர்த்தனைகளை பாடுவதும் ஒன்றாகும் என்கிறார். அவர் பெரும் அத்வைத தத்வத்தை பின்பற்றினாலும் லோக க்ஷேமத்திற்காக தேவதைகளின் மீது அனேக ஸ்தோத்ரங்களை இயற்றினார்


 புராணங்களிலிருந்து நாரதரும், மற்ற முனிவர்களும் எப்பொழுதும் பகவானின் புண்ணிய நாமாக்களை பாராயணம் செய்து கொண்டிருந்ததும் நமக்கு தெரியவருகிறது. ஆதலால் நாம் எல்லோரும் பகவானின் திருநாமங்களை பாராயணம் செய்து சிரேயஸ்ஸை அடைய வேண்டும்

No comments:

Post a Comment