ஒரு கார்யத்திற்கு கிளம்பும் பொழுது யார்யார் எந்தெந்த எண்ணிக்கையில் போகக்கூடாது?
नगच्छेत् राज युग्मं च न गच्छेत् ब्राह्मण त्रयम् ।
चतुश्शूद्रो न गच्छेयुः न गच्छेत् वैश्य पञ्चकम् ।।
ந கச்சேத் ராஜ யுக்மம் ச ந கச்சேத் ப்ராஹ்மண த்ரயம் ।
சதுஶ்ஶூத்ரோ ந கச்சேயு: ந கச்சேத் வைஶ்ய பஞ்சகம் ।।
ஒரு கார்யத்திற்கு போகும் போது இரண்டு பேராக க்ஷத்ரியரும், மூன்று பேராக ப்ராம்மணரும், நான்கு பேராக ஶூத்ரரும், ஐந்து பேராக வைஶ்யரும் போகலாகாது.
நீதி ஶாஸ்த்ரம்
பூணூலை நிவீதியாக (மாலையாக) போடவேண்டிய காலங்கள்?
वृद्धमनुः
मनुष्यतर्पणे स्नानवस्त्र निष्पीडने तथा।
निवीती तू भवेद्विप्रः तथा मूत्रपुरीषयोः ।।
வ்ருத்தமனு
மனுஷ்ய தர்பணே ஸ்நானவஸ்த்ர நிஷ்பீடநே ததா ||
நிவீதீது பவேத்விப்ர: ததா மூத்ரபுரீஷயோ:
வ்ருத்தமனு
மனுஷ்ய தர்பணத்திலும். ஸ்நான வஸ்த்ரத்தை பிழிவதிலும். மூத்ரமல விஸர்ஜன காலத்திலும் ப்ராம்ஹனன் நிவீதியாய் இருக்க வேண்டும்
வைத்யநாத தீக்ஷிதீயம் गण्डूष विधिः வாய்க் கொப்பளிக்கும் முறை. 01
अपां द्वादशगण्डूषान् पुरीषोत्सर्जने द्विजः ।
मूत्रेषु चतुरःकुर्यात् भोजनान्ते तु षोडश ।।
அபாம் த்வாதஶ கண்டூஷாந் புரீஷோத்ஸர்ஜநே த்விஜ: ।
மூத்ரேஷு சதுர:குர்யாத் போஜநாந்தே து ஷோடஶ ।।
மல விஸர்ஜன காலத்தில் 12 தடவை வாய்க் கொப்பளிக்க வேண்டும், மூத்ர விஸர்ஜனத்தில் 4 தடவையும், போஜனம் செய்த பிறகு 16 தடவையும் வாய்க் கொப்பளிக்க வேண்டும்.
வைத்யநாத தீக்ஷிதீயம்
கண்டூஷ விதி 02
अपसृत्य ततः पश्चात् गण्डूषान् षोडशाचरेत् ।
विप्रस्य दक्षिणे भागे देवास्तिष्ठन्ति यत्नतः।
आसीन एव गण्डूषान् वाम भागे विसर्जयेत् ।।
அபஸ்ருத்ய தத: பஶ்சாத் கண்டூஷாந் ஷோடஷாசரேத் ।
விப்ரஸ்ய தக்ஷிணேபாகே தேவாஸ்திஷ்டந்தி யத்நத: ।
ஆஸீந ஏவ கண்டூஷாந் வாமபாகே விஸர்ஜயேத் ।।
உத்தராபோசனத்திற்கு பிறகு நகர்ந்து கொஞ்சம் தூரம் சென்று 16 தடவை வாய்க் கொப்பளிக்க வேண்டும் எச்சில் ஜலத்தை உட்கார்ந்து கொண்டு தன் இடது பாக பூமியில் துப்பவேண்டும் ப்ராம்மணனுடைய வலது பாகத்தில் தேவர்கள் இருக்கிறார்கள் ஆகையால் வலதுபாகத்தில் பூமியில் வாய் கொப்பளித்து ஜலத்தை துப்பக்கூடாது.
வைத்யநாத தீக்ஷிதீயம்
எவரிடமும் பிரகடனப்படுத்தக் கூடாத விஷயங்கள்
न कञ्चिदात्मनः शत्रुं नात्मानं कस्यचिद्रि पुम्।
प्रकाशयेन्नापमानं न च निःस्नेहतां प्रभोः ।।
ந கஞ்சிதாத்மந: ஶத்ரும் ஆத்மாநம் கஸ்யசித்ரிபும் ।
ப்ரகாஶயேந்நாபமாநம் ந ச நி:ஸ்நேஹதாம் ப்ரபோ: ।।
எவரையும் தனக்கு எதிரி என்றோ . எவருக்கும் தான் எதிரி என்றோ பிரகடனப்படுத்தாதே, தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை வெளிப்படுத்தாதே. தனது எஜமானன் தன்னிடம் ப்ரியமாக
இல்லையென வெளிப்படையாகக் கூறாதே. வேறொருவர் இதனைப் பயன்படுத்தி எஜமானனுக்கு மேலும் வெறுப்பேற்படச் செய்யக்கூடும்.
।। भावप्रकाशे பாவப்ரகாஶம் ।।क्षौरं शनैश्चर वारे तु पाषाणैर्गन्ध लेपनम् ।*
आत्मरूपं जले पश्यन्न् शक्रस्याऽपि श्रियं हरेत् ।।
க்ஷௌரம் ஶநைஶ்சர வாரே து பாஷாணைர்கந்த லேபநம் ।
ஆத்மரூபம் ஜலே பஶ்யந் ஶக்ரஸ்யாபி ஶ்ரியம் ஹரேத் ।।
1) சனிக்கிழமையில் க்ஷவரம் (முடி வெட்டுதல் , ஷேவ்)செய்து கொள்வதும்.
2) சந்தனம் அரைத்த சந்தனகல்லின் மீது உள்ள சந்தனத்தை பூசி கொள்வதும்.
3) ஜலத்தில் தனது உருவத்தை காண்பதும்.
ஆகிய மூன்று செயல்களும் தேவர்களிள் தலைவனான இந்த்ரனாக இருந்தாலும் கூட அவனது செல்வத்தை அழித்து விடும். ஆகையால் இந்த விஷயங்களில் கவனம் தேவை!
நீதி ஶாஸ்த்ரம்
இலக்கண கல்வி எவ்வளவு முக்யம்???
यद्यपि बहु नाधीषे तथापि पठ पुत्र व्याकरणम् ।
स्वजनः श्वजनो मा भूत सकलं शकलं सकृत्शकृत् ।।
யத்யபி பஹு நாதீஷே ததாபி பட புத்ர வ்யாகரணம்|
ஸ்வஜந: ஶ்வஜனோ மா பூத ஸகலம் ஶகலம் ஸக்ருத்ஶக்ருத் ||
இது ஒரு தந்தை மகனுக்கு சொல்வதாக உள்ள ஶ்லோகம்.
மகனே, நீ நிறைய படிக்கா விட்டாலும் பரவாயில்லை, கொஞ்சமாவது இலக்கணம் (வ்யாகரணம்) அவஶ்யம் தெரிந்து கொள் என்கிறார். ஏனெனில், உன் பேச்சில் ஸ்வஜன (ஸொந்தக்காரர்கள்) , ஶ்வஜன: (நாய்) ஆகி விடும். ஸகலம் (முழுமையானது), ஶகலம் (துண்டானது) ஆகிவிடும், ஸக்ருத் (ஒரு சமயம்), ஶக்ருத் (மாட்டுச்சாணம்) ஆகி விடும்.
இங்கே இலக்கணம் (வ்யாகரணம்) என்று சொன்னது உச்சரிப்பையும் சேர்த்த மொழி இலக்கணம் தான்.
ஸுபாஷிதம் பணம் எப்போது ஸுகத்தை கொடுக்கிறது?
अर्थानामर्जने दुःखमर्जितानां च रक्षणे ।
आये दुःखं व्यये दुःखं धिगर्थाः कष्टसंश्रयाः ॥
அர்தாநாமர்ஜநே து:கமர்ஜிதாநாம் ச ரக்ஷணே ।
ஆயே து:கம் வ்யயே து:கம் திகர்தா: கஷ்டஸம்ஶ்ரயா: ॥
பணத்தை சம்பாதிப்பது கடினம் , சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பது அதைவிட கடினம், பாதுகாத்த பணத்தை செலவு செய்யும் பொழுது வரும் வலி அதை விட கடினமானது. ஆகையால் பணத்தை சம்பாதிப்பதும், பாதுகாப்பதும், செலவிடுவதும், கடினமான செயலே இப்படியிருக்க பணம் எவ்வழியில் ஸுகத்தை கொடுக்கிறது.
பணத்தை ஸுகமாக மாற்றிக் கொள்ளலாமே தவிர பணம் எப்பொழுதும் ஸுகத்தை கொடுப்பதில்லை.
உலக வாழ்க்கையில் இன்பம் தரக்கூடிய ஆறு விஷயங்கள்?
अर्थागमो नित्यमरोगिता च
प्रिया च भार्या प्रियवादिनी च ।
वश्यस्य पुत्रो Sर्थकरी च विद्या
षड् जीवलोकस्य सुखानि राजन् ।।
அர்தாகமோ நித்யமரோகிதா ச
ப்ரியா ச பார்யா ப்ரியவாதிநீ ச ।
வஶ்யஸ்ய புத்ரோர்தகரீ ச வித்யா
ஷட் ஜீவலோகஸ்ய ஸுகாநி ராஜந் ।।
தடையற்று வரக்கூடிய செல்வம் (passive income போல்), நல்ல உடல் ஆரோக்யம், ப்ரியமான மனைவி , ப்ரியமான வார்த்தைகளை பேசும் மனைவி, நமது சொல்லை தட்டாமல் கேட்கும் மகன் (அ) மகள் , மற்றும் நாம் நிபுணத்வம் வாய்ந்த துறையிலிருந்து சம்பாதிக்கும் பணம். இவை ஆறும் நமது உலக வாழ்க்கையில் நமக்கு ஸுகத்தையும் ஸந்தோஷத்தையும் அளிக்கக்கூடியவை.

।। भावप्रकाशे பாவப்ரகாஶம் ।।🙏🙏🙏
🙏ஸ்ரீ மஹாபெரியவா பாதம் சரணம் எப்பொழுதும் மௌனத்தோடு செய்யவேண்டிய கார்யங்கள்
भोधायनः
सन्ध्ययोरुभयोर्जप्ये भोजने दन्तदावने ।
पितृकार्ये च दैवे च तथा मूत्रपुरीषयोः ।
गुरूणां सन्निधौ दाने यागे चैव विशेषतः।
एतेषु मौनमातिष्ठन् स्वर्गं प्राप्नोति मानवः।।
ஸந்த்யயோருபயோர்ஜப்யே போஜனே தந்த தாவநே |
பித்ருகார்யே ச தைவே ச ததா மூத்ரபுரீஷயோ: ||
குரூணாம் ஸந்நிதௌ தானே யாகே சைவ விஶேஷத: |
ஏதேஷு மௌனமாதிஷ்டம் ஸ்வர்கம் ப்ராப்னோதி மானவ: ||
போதாயனர்
ஸந்த்யா காலங்களிலும், ஐபம் மற்றும் போஜனத்திலும், தந்த தாவனத்திலும், பித்ருகார்யத்திலும், தேவகார்யத்திலும், மலமூத்ர விஸர்ஜனத்திலும், குருக்கள் ஸன்னிதியிலும், தானத்திலும், யாகத்திலும், மௌனத்தை அனுஷ்டிக்கும் மனிதன் ஸ்வர்கத்தை அடைவான்.
*வைத்யநாத தீக்ஷிதீயம்🙏
🙏 சாப்பிடும் போது கைகளுடன் கால்களையும் அலம்பிய பின்னரே சாப்பிட வேண்டும்.
आर्द्रपादस्तु भुञ्जीत नार्द्रपादस्तु संविशेत् ।
आर्द्र पादस्तु भुञ्जानो दीर्घमायुरवाप्नुयात् ।।
ஆர்த்ரபாதஸ்து புஞ்ஜீத நார்த்ரபாதஸ்து ஸம்விஶேத் ।
ஆர்த்ர பாதஸ்து புஞ்ஜாநோ தீர்கமாயுரவாப்நுயாத் ।।
அதாவது, ஒருவர் கால்களைக் அலம்பிய பின் ஈரமான கால்களுடையவே போஜனம் செய்யவேண்டும், ஆனால் ஈரமான கால்களால் தூங்கக்கூடாது. கால்களை அலம்பி துடைத்து விட்டு தூங்க வேண்டும். போஜன சமயத்தில் கால்களைக் அலம்புவதன் மூலம் போஜனம் செய்யும் நபருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.
*மநுஸ்ம்ருதி🙏
🙏 அஶ்வமேத யாகத்திற்கு ஸமமான பலனை கொடுக்க கூடிய விஷயங்கள்.
दरिद्राय कृतं दानं शून्य लिङ्गस्य पूजनम् ।
अनाथ प्रेत संस्कारं अश्वमेध समं विदुः।।
தரித்ராய க்ருதம் தாநம் ஶூந்ய லிங்கஸ்ய பூஜநம் ।
அநாத ப்ரேத ஸம்ஸ்காரம் அஶ்வமேத ஸமம் விது: ।।
ஏழ்மையில் உள்ளவனுக்கு கொடுக்கும் தானமும், பூஜையில்லாத கோவிலுக்கு நித்ய பூஜையை உண்டாக்கலும், தயையின்றி இருக்கும் பிணத்தை எடுத்து ஸம்ஸ்காரம் செய்பவனும் அல்லது அதற்கு உபகாரம் செய்பவனும், இம்மூன்றும் அஶ்வமேத யாகத்திற்கு ஸமானமாகுமாம்.
நீதிஶாஸ்த்ரம்
மனிதன் ஒருபோதும் இந்த ஆறு குணங்களை இழக்கக் கூடாது!!!
षडैव तु गुणाः पुंसा न हातव्याः कदाचन ।
सत्यं दानमनालस्यं अनसूया क्षमा धृतिः ॥
ஷடைவ து குநா: பும்ஸாம் ந ஹாதவ்யா: கதாசந |
ஸத்யம் தாநமநாலஸ்யம் அநஸூயா க்ஷமா த்ருதி: ||
உண்மைத்தன்மை, கொடுப்பது, சுறுசுறுப்பு, அஸூயையின்மை (சோம்பேறி தனமாக இல்லாமை), பொறுமை, உறுதி என்ற ஆறு குணங்களை மனிதன் ஒருபோதும் இழக்கக் கூடாது.
விதுரநீதி
🙏லஜ்ஜையற்று ஈடுபட வேண்டிய கார்யங்கள்*
धनधान्यप्रयोगेषु विद्वासंग्रहणे तथा।
आहारे व्यवहारे च त्यक्तलज्ज: सुखी भवेत्।।
தன தான்ய ப்ரயோகேஷு வித்யா ஸங்க்ரஹணேஷு ச
ஆஹாரே வ்யவஹாரே ச த்யக்தலஜ்ஜ: ஸுகீ பவேத்||
பணம் மற்றும் தான்ய பரிவர்த்தனையின் போதும், கல்வி கற்கும்போதும், உணவு உண்பதற்கும் செல்வத்தைத் தேடும்போதும் கடமையைச் செய்யும்போதும், லஜ்ஜயை (வெட்கத்தை) விடவேண்டும் . லஜ்ஜை கொண்டாள் மேற்கண்ட எதுவும் பயனளிக்காது துணிந்து யார் என்ன சொல்வார்களோ என்று அஞ்சாமல் ஈடுபடவேண்டும்.
வ்ருத்த சாணக்ய நீதி🙏
🙏 போஜன விதி
उत्सङ्गे च न भुञ्जीत न च पाणितलेऽजिने ।
शून्यगारे च नाशनियान्न च पाण्यासनस्थितम् ।।
உத்ஸங்கே ச ந புஞ்ஜீத ந ச பாணிதலேஜினே |
ஶூந்யகாரே ச நாஶநியாந்ந ச பாண்யாஸநஸ்திதம் ||
மடியிலும், உள்ளங்கையிலும், தோலிலும், வைத்துக் கொண்டும், பாழான வீட்டிலும், புஜிக்கக் கூடாது, கையை ஆஸனமாய்ச் செய்து கொண்டு புஜிக்கக் கூடாது.
ஆஹ்நிக காண்டம்🙏 🙏போஜன விதி
இலையில் அன்னம் பறிமாறியவுடன் செய்யவேண்டிய விஷயங்கள்
व्यासः
अन्नं दृष्ट्वा प्रणम्यादौ प्राञ्जलिः कथयेत् ततः ।
अस्माकं नित्यमस्त्वेतत् इति भक्त्याऽथ वन्दयेत् ।।
அந்நம் த்ருஷ்ட்வா ப்ரணம்யாதௌ ப்ராஞ்ஜலி: கதயேத்தத: ।
அஸ்மாகம் நித்யமஸ்த்வேதத் இதி பக்த்யாத வந்தயேத் ।।
வ்யாஸர்:
இலையில் அன்னம் வைத்தவுடன்
முதலில் அன்னத்தைப் பார்த்து நமஸ்கரித்து அஞ்ஜலியுடன் அஸ்மாகம் நித்யமஸ்த்வேதத் अस्माकं नित्यमस्त्वेतत् (இவ்வுணவு என்றும் நமக்கு கிடைக்கட்டும்.) என்று ப்ரார்தித்து. பிறகு பக்தியுடன் நமஸ்கரிக்க வேண்டும்.
வைத்யநாத தீக்ஷிதீயம்🙏
🙏 நிவீதியுடன் செய்ய வேண்டிய கார்யங்கள்

மனுஷ்ய தர்பணத்திலும். ஸ்நான வஸ்த்ரத்தை பிழிவதிலும். மூத்ரமல விஸர்ஜன காலத்திலும் விப்ரன் நிவீதியாய் இருக்க வேண்டும்.
வைத்யநாத தீக்ஷிதீயம்🙏
🙏ஒரு மனிதனுக்கு வித்யையானது எவ்வுளவு முக்கியம்?।।
रूपयौवन संपन्ना विशाल कुल संभवाः ।
विद्या हीनानशोभन्ते निर्गन्धा इव किंशुकाः ।।
ரூபயௌவந ஸம்பந்நா விஶால குல ஸம்பவா: ।
வித்யாஹீநாந ஶோபந்தே நிர்கந்தா இவ கிம்ஶுகா: ।।
நல்ல அழகான ரூபமும், இளமையான வயதும் , நல்ல குலத்தில் பிறந்தவராயினும், தன் தொழிலுக்கு ஏற்ற படிப்பு இல்லாவிடில் அவரால் ப்ரகாஶிக்க முடியாது. எதுபோலவெனில், கல்யாண முருங்கை பூவானது எவ்வளவு அழகுள்ளதாயிருந்தும் வாஸனை இல்லாததால் ப்ரகாஶிக்க முடியாதது போல்.
நீதி ஶாஸ்த்ரம்🙏
🙏ஆசமன விதி
भोक्तुकामे यदा विप्रे ह्याचान्ते त्वासनस्थिते ।
अभिवादं करोत्यन्य आचामेत् स पुनस्ततः ।।
போக்துகாமே யதா விப்ரே ஹ்யாசாந்தே த்வாஸநஸ்திதே ।
அபிவாதம் கரோத்யந்ய ஆசாமேத் ஸ புநஸ்தத: ।।
சாப்பிட விரும்பிய விப்ரன் ஆசமனம் செய்து ஆஸனத்தில் இருக்கும் பொழுது, மற்றவர் தனக்கு நமஸ்காரம் செய்தால் சாப்பிடுபவர் மறுபடி ஆசமனம் செய்ய வேண்டும்.
।। ஸ்ம்ருதி ரத்னாவளி ।।
🙏
🙏கல்வி கற்றுக் கொள்வதின் முக்ய ஸாராம்ஸமே அதை புரிந்துகொண்டு மனப்பாடம் செய்வதே!!!।।
कण्ठस्था या भवेद्विद्या सा प्रकाश्या सदा बुधैः ।
या गुरो पुस्तके विद्या तथा मूढः प्रतार्यते ।।
கண்டஸ்தா யா பவேத் வித்யா ஸா ப்ரகாஶ்யா ஸதா புதை: ।
யா குரோ புஸ்தகே வித்யா ததா மூட: ப்ரதார்யதே ।।
மனப்பாடமாக உள்ள வித்யை பண்டிதர்களால் பலரிடம் ஒளி போல பரவுகிறது. புஸ்தகத்திலும் குருவிடமும் விடப்பட்ட வித்யை மூடர்களால் முட்டாள் தனத்தை பரப்பவே பயன்படுகிறது. அதாவது மனப்பாடம் இல்லாமல், அங்கொன்றும்
இங்கொன்றுமாய் உள்ள கல்வி முட்டாள்தனத்தை பெருக்கும் என்பது கருத்து.
நீதி ஶாஸ்த்ரம்🙏
🙏சாதுர்மாஸ்ய வ்ரதம் 02-07-20 முதல் 26-11-20 வரை ।।
चतुरो वार्षिकान् मासान् देवस्य उत्थापनाऽवधि ।
इमं करिष्ये नियमं निर्विघ्नं कुरु मेच्युत ।।
சதுரோ வார்ஷிகாந் மாஸாந் தேவஸ்ய உத்தாபநாऽவதி ।
இமம் கரிஷ்யே நியமம் நிர்விக்நம் குரு மேச்யுத ।।
சாதுர்மாஸ்ய வ்ரதத்தில் ஸன்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருப்பது நமக்கு தெரியும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் க்ரஹஸ்தர்களுக்கும் வ்ரதம் உண்டு. சாந்த்ரமான படி ஆஷாட மாஸம் முதல் கார்திக மாஸம் வரை ஆஹாரத்தில் சில நியமங்களுடன் இந்த நான்கு மாஸ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
श्रावणे वर्जयेच्छाकं दधि भाद्रपदे तथा ।
दुग्धमाश्वयुजे मासि कार्तिके चामिषं त्यजेत् ।
ஶ்ராவணே வர்ஜயேச்சாகம் ததி பாத்ரபதே ததா ।
துக்தமாஶ்வயுஜே மாஸி கார்திகே சாமிஷம் த்யஜேத் ।।
ஶாக வ்ரதம் - 02-07 முதல் 30-07 வரை அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் புளி மிளகாய் தேங்காய் முதலியவைகள் சாப்பிடக்கூடாது
ததி வ்ரதம் - 31-07 முதல் 29-08 வரை தயிர் மற்றும் தயிர் வகைகளை சாப்பிடக் கூடாது
பயோ வ்ரதம் - 30-08 முதல் 27-10 வரை பால் மற்றும் பால் வகைகளை சாப்பிடக்கூடாது
த்வி தள வ்ரதம் - 28-10 முதல் 26-11 வரை பருப்பு போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விதைகள் இருக்கக்கூடிய தானியங்களை (பருப்பு வகைகளை) சாப்பிடக்கூடாது.
இப்படி சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பதால் உடல் ஆரோக்கியமும் மன அமைதியும் உண்டாகும்
।।ஸ்ம்ருதி கௌஸ்துபம்।।🙏🙏

No comments:
Post a Comment