விஷ்ணு ஸஹஸ்ர நாமம்
839.அணு:-அணுவைக் காட்டிலும் சூக்ஷ்மமாக இருப்பவர். மிகச் சிறியதான ஹ்ருதயாகாசத்தில் அடங்கி அந்தராத்மாவாக இருப்பவர்.
840. ப்ருஹத்- மிகவும் பெரிதாக இருப்பவர். சர்வவ்யாபியானதால். அணோரணீயான் மஹதோ மஹீயான் – கடோபனிஷத்
ப்ருஹத் என்றால் பெரிய என்ரு பொருள். எல்லாவற்றைக் காட்டிலும் பெரியதாக இருப்பது ப்ரஹ்மம் .
841. க்ருச: -மெல்லியவர். காற்றுப் போல் எங்கும் புகுவதால்
842.. ஸ்தூல: - ஸ்தூலமானவர். எல்லாமாக இருப்பதால்.
843. குணப்ருத் –அனந்த கல்யாண குணங்களை உடையவர் .
ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகியவற்றிற்குக் காரணமான முக்குணங்களை மேற்கொள்பவர். (சங்கரர்)
844. நிர்குண: -குணங்கள் இல்லாதவர் . அதாவது முக்குணங்களைத் தாண்டி நிற்பவர்.
845. மஹான் – எல்லாவற்றிலும் மிகச் சிறந்தவர்.
846. அத்ருத: -எது ஒன்றினாலும் தாங்கப்படாதவர்.
847. ஸ்வத்ருத: - தம்மைத்தாமே தாங்குபவர்.
848. ஸ்வாஸ்ய:- சோபனம் ஆஸ்ய யஸ்ய ஸ:-சிறந்த இருப்பை உடையவர். ஆஸ்ய என்றால் முகம் என்றும் பொருள் . அழகிய முகம் அல்லது சிறந்த முகம் ( வேதம் இவர் முகத்திலிருந்து தோன்றியதால்)
849. ப்ராக்வம்ச: - எல்லா வம்சத்திற்கும் ஆதாரமானவர். அவரிடம் இருந்தே எல்லாம் தோன்றியதால்.
850. வம்சவர்த்தன: -நித்யர், முக்தர், பத்தர் என்ற மூன்றுவிதமான ஜீவர்களை பெருகச் செய்பவர்.
851. பாரப்ருத்- உலகின் பாரத்தைத் தாங்குபவர். தன் பக்தர்களின் சுமையைத் தாங்கி அவர்களுக்கு ச்ரமமின்றி செய்பவர் .
852. கதித- பரம்பொருள் என வேதங்களால் போற்றப்பட்டவர்
853. யோகீ- ஞானம், பக்தி, கர்ம யோகம் இவற்றால் அடையப்படுபவர் . யுஜ்யதே என்ற வினைச் சொல்லிற்கு சேர்ப்பது என்று பொருள். யுஜ்யதே இதி யோகீ. குண்ங்களை ஒன்று சேர்த்து உலகை படைப்பது, தன்னை அண்டினோரைத் தன்னுடன் சேர்ப்பது முதலியவைகளால் யோகீ எனப்படுகிறார்.
854.யோகீச: - யோகத்துக்கெல்லாம் ஈசனாக இருப்பவர். சஞ்சயன் கீதையின் கடைசி ஸ்லோகத்தில் கண்ணனை யோகேஸ்வரன் என்கிறான்.
855. ஸர்வகாமத:- எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவர்.
No comments:
Post a Comment