Wednesday, August 7, 2019

Caaturmasya vratam

*சாதுர்மாஸ்ய வ்ரதம் 13-07-19 முதல் 08-11-19 வரை* 

चतुरो वार्षिकान् मासान् देवस्य उत्थापनाऽवधि ।
इमं करिष्ये नियमं निर्विघ्नं कुरु मेच्युत ।।

சதுரோ வார்ஷிகாந் மாஸாந் தேவஸ்ய உத்தாபநாऽவதி ।
இமம் கரிஷ்யே நியமம் நிர்விக்நம் குரு மேச்யுத ।।

சாதுர்மாஸ்ய வ்ரதத்தில் ஸன்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருப்பது நமக்கு தெரியும்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் க்ரஹஸ்தர்களுக்கும் வ்ரதம் உண்டு.
சாந்த்ரமான படி ஆஷாட மாஸம் முதல் கார்திக மாஸம் வரை ஆஹாரத்தில் சில நியமங்களுடன் இந்த நான்கு மாஸ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். 

श्रावणे वर्जयेच्छाकं दधि भाद्रपदे तथा ।
दुग्धमाश्वयुजे मासि कार्तिके चामिषं त्यजेत् ।

ஶ்ராவணே வர்ஜயேச்சாகம் ததி பாத்ரபதே ததா ।
துக்தமாஶ்வயுஜே மாஸி கார்திகே சாமிஷம் த்யஜேத் ।

*ஶாக வ்ரதம்*
13-07 முதல் 11-08 வரை அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் புளி மிளகாய் தேங்காய் முதலியவைகள் சாப்பிடக்கூடாது

*ததி வ்ரதம்* 
12-08 முதல் 09-09 வரை தயிர் மற்றும் தயிர் வகைகளை சாப்பிடக் கூடாது

*பயோ வ்ரதம்* 
10-09 முதல் 09-10 வரை பால் மற்றும் பால் வகைகளை சாப்பிடக்கூடாது

*த்வி தள வ்ரதம்* 
10-10 முதல் 08-11 வரை பருப்பு போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விதைகள் இருக்கக்கூடிய தானியங்களை (பருப்பு வகைகளை) சாப்பிடக்கூடாது. 

இப்படி சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பதால் உடல் ஆரோக்கியமும் மன அமைதியும் உண்டாகும்

*ஸ்ம்ருதி கௌஸ்துபம்*

No comments:

Post a Comment