Friday, April 5, 2019

Vishnu Sahasranama 184 to 191 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -21

184.மஹேஷ்வாச: -மஹான் இஷுணா ஆஸ:- பெரிய வில்லாளி . ராமாவதாரத்தைக்க் குறிக்கும் நாமம். 'ராமோ சசஸ்த்ரப்ரருதாம் அஹம் ,' "வில்லாளிகளில் நான் ராமன்," (ப.கீ. 1௦. 31)

185. மஹீபர்த்தா – பூமியை தாங்குபவன். கூர்ம வராஹ அவதாரங்கள். 
186. ஸ்ரீனிவாஸ: -ஸ்ரீதேவியின் இருப்பிடமாக உள்ளவர்.
187. ஸதாம் கதி: - சாதுக்களுக்கு கதியானவர். வழியும் அவனே அடையவேண்டிய இலக்கும் அவனே. ( both path and the goal)

188.அநிருத்த: - தடுக்க முடியாத வல்லமை உள்ளவர். 
189.ஸுரானந்த:- ஸுஷ்டு ராதி இதி ஸுர:- ரா என்றால் கொடுப்பது ஸுஷ்டு என்றால் நன்றாக. கேட்பதை கொடுப்பவர்கள் தேவர்கள் (ஸுரர்கள்) அவர்களுக்கு தீங்குவராமல் காத்து மகிழ்வித்து அவர்கள் நன்றாக கொடுக்கச் செய்பவர். ஸுரான் ஆனந்தயதி இதி ஸுரானந்த:

190.கோவிந்த: - கோ என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் 
1. காம்- (சுவர்க்கம் -மோக்ஷம்) விந்தயதி- மோக்ஷத்தை அடையும்படி செய்வதால் கோவிந்தன் 
2.காம் (இஷும்- அஸ்திரம்) விந்ததி – விச்வாமித்திரரிடம் இருந்து ராமாவதாரத்தில் அஸ்த்ரசஸ்த்ரங்களை பெற்றான்.,
3. கா: (பசூன்) விந்ததி- கிருஷ்ணாவதாரத்தில் பசுக்கள் தண்டகாரண்ய ரிஷிகள் என்று அறிந்தவன். 
4.கோபி: ( வேதை:) விந்த்யதே – வேதங்களால் அறியப்படுபவன்.
5.காம் ( வஜ்ரம்) விந்தயதி- இந்திரனுக்கு வஜ்ராயுதம் கிடைக்க வழி செய்தவன்.
6.கவா (த்ருசா- திசைகள்) விந்ததி –எல்லா திசைகளிலும் அறியப்படுபவன். புஜப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹாவிஷ்ணும் நமாம்யஹம் ( மந்த்ரராஜ பத ஸ்தோத்ரம்)' வ்யாப்தம் த்வயைகேன திசஸ்ச ஸர்வா:' எல்லா திசைகளும் உன்னால் வியாபிக்கப்பட்டன." (ப.கீ. 11.2௦) 
7.கா: ( நேத்ராணி- கண்கள் ) விந்ததி- ஸஹஸ்ராக்ஷஸ்ஸஹஸ்ரபாத்- புருஷ சூக்தம்.
8.கா: ( ஜ்வாலா: ) விந்ததி- நெருப்பு ஜ்வாலைகளை உடையவன். சூர்யமண்டல மத்ய வர்த்தீ – உபநிஷத். நரசிம்ஹாவதாரம்
9. காம் (பூமிம்) விந்ததி- பூமியை வராஹமாக வெளிக்கொணர்ந்தவன், வாமனனாக வந்து அளந்தவன். பரசுராமனாக பூமியை வென்றவன் 
1௦. காம் ( ஜலம்) விந்ததி- மத்ஸ்ய, கூர்ம அவதாரங்கள்
11. காம்(வாக்கு ) விந்ததி- வாக்குக்கதிபதி- ஹயக்ரீவன்., 
12. காம்( இந்திரியம்) விந்ததி- இந்த்ரியங்களை கட்டுப்படுத்துபவன்- ஹ்ரிஷீகேசன் 
அதனால் தான் கோவிந்த நாமத்திற்கு சிறப்பு. கோவிந்தா என்றால் எல்லா உருவங்களும் மகிமைகளும் அதில் அடங்குகின்றன.

191. கோவிதாம் பதி: - கோ என்றால் வேதம் அதை அறிபவர் கோவித: அவர்களின் தலைவன். கோ என்றால் வாக்கு பசு நர பக்ஷி எல்லாவற்றிற்கும் மொழி உண்டு. அந்த மொழி வருவது அவனிடம் இருந்து, அவன் அருளால்.


No comments:

Post a Comment