Friday, April 5, 2019

Narada bhakti sutram 57 to 60 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரதபக்திசூத்ரம்

57.உத்தரஸ்மாத உத்தரஸ்மாத் பூர்வபூர்வ ஸ்ரேயாய பவதி
இதில் பின்னால் வருவதை விட முன்னால் இருப்பது சிறந்தது.

அதாவது தமோ பக்தியைக்காட்டிலும் ரஜோ பக்தி உயர்ந்து. அதைவிட சத்வ பக்தி உயர்ந்தது..

அதேபோல ஆர்த்தி அர்தார்தீ ஜிக்ஞாஸு இவர்களில் மூன்றாவது பராபக்தி அடைவதற்கு சுலபமானது மற்றவை முறையே அடுத்துவருபவை. ஆர்த்தீ தன் துன்பம் நீங்கியதும் மற்ற அபிலாஷைகளை நிறைவேற்ற அர்த்தார்தீ ஆகிறான். பிறகு அவனுக்கு உண்மையான பரம்பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் உண்டாகிறது. அதாவது அவன் ஜிக்ஞாஸு எனப்படுகிறான். கடைசியில் பராபக்தியைப் பெற்று ஞானி ஆகிறான்.
.
58. அன்யஸ்மாத் சௌலப்யம் பக்தௌ
பக்தி என்பது அடைவதற்கும் அறிவதற்கும் எளியதாகும்.

இது முக்யபக்தி என்பது பகவானிடத்தில் வேறு எதையும் எதிர்பார்க்காமல் இருக்கும் பக்தியாகும். கலியுகத்தில் தியானம் தவம், யக்ஞம் இவை செய்வது கடினம்.அதனால் பக்தி ஒன்றே கலியுகத்தில் முக்தி சாதனம். நாம சங்கீர்த்தனம், அல்லது பகவத் ஸ்மரணம் என்பது நம் நித்ய கர்மங்களுக்கிடையே எளிதாக செய்யக்கூடியது. எல்லா செய்கைகளையும் பக்வதர்ப்பணமாக செய்தல் பராபக்திக்கு வழிவகுக்கும்.

59.ப்ரமாணாந்தரஸ்ய அனபேக்ஷத்வாத் ஸ்வயம் ப்ரமாணத்வாத் 
பக்திக்கு வேறு நிரூபணம் தேவையில்லை அதுவே தன்னைத்தானே விளக்கிகொள்வதால்.

சாதாரண அன்பிற்குக் கூட ருசு தேவையில்லை. ஏனென்றால் அன்பு என்பது உணரவது அறிவதல்ல. அதே போல் பக்திக்கும் உணர்வே போதுமானது. வெளிப்படையான காரணங்கள் மற்றவர்களுக்கு பக்திமான் என்று காட்டப் பயன்படலாம். ஆனால் பக்தி இருக்கிறதா என்பது அவரவர் உள்ளத்தில்தான் உணரமுடியும்.

60. சாந்திரூபாத் பரமாநந்தா ரூபாத் ச 
. முழு மன அமைதி, பேரானந்தம் இவை பக்திக்கு சான்றுகள் ஆகும்.

மச்சித்தா மத்கதப்ராணா: போதயந்த: பரஸ்பரம் 
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்திதி ச (ப.கீ.-1௦.9)
"என்னிடம் லயித்த மனதுடன், என்னையே உயிராகக் கொண்டு, என் பக்தர்கள் ஒருவருக்கொருவர் என்னைப் பற்றி, தங்கள் கருத்துகளைப் பறிமாறிக்கொண்டும் பேசிக்கொண்டும், பேரானந்தத்தை அடைகின்றனர்." 

No comments:

Post a Comment