Tuesday, February 12, 2019

How to do Aditya hrudaya stotra parayanama on ratha saptami?

Courtesy:smt.Dr.Saroja Ramanujam

இன்று ரதசப்தமி. சூரியன் தன் மார்க்கத்தை தெற்கிலிருந்து வடக்கு திசைநோக்கித் திரும்பும் நாள்.
ஆதித்ய ஹ்ருதயம் 9 தடவை பாராயணம் செய்தால் கஷ்ட நிவ்ருத்தி , இஷ்ட ப்ராப்தி.
இதை எப்படி பாராயணம் செய்யவேண்டும் என்பதில் ஒரு முறை.

;ததோ யுத்த ப்ரிஸ்ராந்தம்' லிருந்து ஆரம்பித்து ரச்மிமந்தம் சமுத்யந்தம் வரை சொல்லிப் பிறகு தொடர்ந்து 'தப்த சாமீகராபாய ஸ்லோகம் முடிய சொல்லவேண்டும்.
பிறகு மேலே தொடராமல் மறுபடி சர்வதேவாத்மகோ ஹ்யேஷ: விலிருந்து ஆரம்பித்து தப்த சாமீகராபாய வரை தொடர வேண்டும். இப்படி 9 முறை செய்து ஒன்பதாவது முறை மேலே தொடர்ந்து முடிக்க வேண்டும்.

Begin at the beginning and continue till sloka 6. And then continue from sloka 7 till sloka 21. Then go back to sloka 7 and continue till sloka 21. Do this 9 times and the 9th time complete the rest .

இங்கு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ரத சப்தமியைப் பற்றி முகநூலில் படித்திருப்பீர்கள்.அதை சொல்லப்போவதில்லை.

கவிகள் அந்த காலத்தில் சாதாரணமாக இலக்கிய அறிவுடன் பூகோளம் வான ஸாஸ்திரம் முதலய அறிவையும் பெற்றிருந்தார்கள். காளிதாசனுடைய மேகதூதத்தில் இதைக்காணலாம்.

காளிதாசனுடைய காவியங்களில் குமாரசம்பவம் மிகச்சிறந்தது. அதில் இந்திரனின் கட்டளைப்படி மன்மதன் சிவனுடைய தவத்தைக் கலைக்க வசந்தனுடன் வருகிறான். அப்போது அந்த பிரதேசத்தில் உரிய சமயத்திற்கு முன்பாகவே வசந்த காலம் தோன்றுகிறது. அதாவது சூரியன் உத்தராயணத்தில் வடக்கு திசை நோக்கி பிரயாணம் செய்வதற்கு பதில் அதற்கு முன்பே வடக்கு திசை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறான். அதை தனக்கே உரித்தான கவிநயத்துடன் காளிதாசன் சொல்வதைக் கேளுங்கள்.

குபேரகுப்தாம் திசம் உஷ்ண ரச்மௌ
கந்தும் பிரவ்ருத்தே சமயம் விலங்க்ய
திக் தக்ஷிணா கந்தவஹம் முகேன
வ்யலீகக நிச்வாஸம் இவ உத்ஸஸர்ஜ

இதன் பொருள் : சூரியன் உரிய காலம் வருமுன்பே குபேரனுக்கு உரித்தான வடக்கு திசையை நோக்கிச்செல்ல தெற்குதிசை தன் காதலன் தன்னைப் பிரிந்து செல்லும் போது வருந்தும் காதலியைப் போல் மலர்களின் நறுமணம் மிகுந்த பெருமூச்சை வெளியிட்டது.

மலர்களின் நறுமணம் வசந்தகாலம் வந்ததனால்.
குமாரசம்பவத்தில் இந்த மூன்றாவது அத்தியாயம் மிகவும் அழகானது.
(மீள் பதிவு)

No comments:

Post a Comment