உ
சிவாயநம. திருச்சிற்றம்பவம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(4)*
🍁 *சிவத்தல பெருமைகள், அருமைகள்,*🍁
நேரில் சென்று தரிசித்ததை போல தொடர்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 *திருவிசயமங்கை.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்.* விஜயநாதேஸ்வரர், விஜய நாதர்.
*இறைவி.*மங்களாம்பிகை, மங்கை நாயகி.
*தலமரம்.* வில்வம்.
*தீர்த்தம்.* அர்ச்சுன தீர்த்தம், கொள்ளிடம், மண்ணியாறு தீர்த்தங்கள்.
சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள 63 தலங்களுள் 47-வது ஆக போற்றப்படுகிறது.
*இருப்பிட வழி..*
திருவைகாவூரிலிருந்து ஆற்றோரமாக இடப்புறமாகத் திரும்பி செல்லும் கிளைப் பாதையில் இரண்டு கி.மீ.தூரம் சென்று இத்தலம் அடையலாம்.
*பெயர்க் காரணம்.*
அர்ச்சுனன்-- விஜயன் வழிபட்ட தலம். ஆதலின் விஜயமங்கை எனப்படுகிறது.
*கோவில் அமைப்பு.*
மண்ணியாற்றின் வடகரையில் கோவில் கிழக்கு நோக்கிப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.
இராஜ கோபுரம் கிடையாது.
கொடிமரம் இல்லை.
வாயிலிலிருந்து நேராக உள்ளே நுழைந்தோமானால், வாயிலை நோக்கிய வண்ணம் மூலவர் சந்நிதி உள்ளது.
மூலவர் கிழக்கு நோக்கி உள்ளார்.
அர்ச்சுணன் அம்பு பட்ட தழும்பும், வரைகோடும், சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல காணப்படுகின்றன.
மகாமண்டபம் கல்.மண்டமாக காட்சியளிக்கிறது.
ஒரு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளன.
வெளிப்பிரகாரம் விசாலமான அமைப்புடன் விளங்குகிறது.
சோழர்.கால முறைப்படி கட்டப்பட்ட கோவில்.
மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும் அமையப் பெற்றுள்ளன.
கோவிலுக்கு வெளியே அர்ச்சுன தீர்த்தம் அமையப் பெற்றுள்ளன.
பிரகாரத்தில், அனுக்ஞை விநாயகர் அருள்பாலிக்கிறார். அதோடு....சண்டிகேஸ்வரர், சூரியன், நால்வர், மற்றும் காலபைரவர் உள்ளனர்.
சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.
சிவன் சந்நிதி கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
அம்மை மங்கநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருளாட்சி புரிகிறார். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும், பின் இரண்டு கைகளில், ஒரு கையில் அட்சர மாலையும், மற்றொரு கையில் நீலோத்பவ மலருடன் அருள் பார்வை பொழிகிறாள்.
*தல பெருமை.*
சம்பந்தர், அப்பர் இருவரும் இத்தலத்தைப் போற்றி தேவாரம் பாடியுள்ளனர்.
அப்பர் எமனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பாடியுள்ளார்.
இதனால் ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயினில் பீடிக்கப் பட்டோர் குணமாக வேண்டுதலை வேண்டிக் கொண்டு இங்கு வந்து தொழுகிறார்கள்.
செயல்களில் வெற்றி (விஜய்--ஜெயம்) பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜய நாதரை வழிபடுகிறார்கள்.
படித்து முடித்து முதலில் வேலைக்குச் செல்பவர்கள் இங்கு வந்து இறைவன் இறைவிக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வணங்கி வேண்டிக் கொள்கிறார்கள்.
*தல பெருமை.*
மகாபாரதப் போரின் போது பாண்டவர், கெளரவர் படையினர் ஒருவருக்கொருவர் நிகராகப் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
இவ்வேளையில் வேதவியாசர் அர்ச்சுனரிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.
அதன்படி அர்ச்சுனன் சிவனை வேண்டி தவம் மேற்கொண்டான்.
அர்ச்சுனன் தவமிருப்பதை அறிந்த துரியோதனர், மூக்காசுரனை அனுப்பி ,அர்ச்சுனரின் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான்.
பன்றி உருவெடுத்து வந்த அசுரனை, அர்ச்சுனன் வீழ்த்தினான்.
அதே சமயத்தில் வேடன் ஒருவன் அம்பு எய்ய, தானே பன்றியை வீழ்த்தியதாகச் சொன்னான்.
அம்பு எய்ததில் இருவருக்கும் வாக்கு வாதம் முற்றி மோதிக் கொண்டனர்.
அந்த வேளையில்,சுய ரூபம் காட்டினார் சிவபெருமான்.
பாசுபத அஸ்திரம் கொடுத்தார்.
அருகிலிருந்த அம்பாள் சிவனிடம் ஆயுதங்களிலே உயர்ந்ததான பாசுபத அஸ்திரம் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி உடையவன்தானா? என்றாள்.
சிவனும் சந்தேகத்துடன் அம்மையிடம், அர்ச்சுனன் மஸ்ஸிய ரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம் என்றார்.
அர்ச்சுனனும்,அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளைக் காட்டினாராம்.
அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார்.
அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார்.
அர்ச்சுனனுக்கு விஜயன் என்ற பெயர் உள்ளதால், சிவன் விஜய நாதர் எனும் பெயர் பெற்றார்.
தலத்திற்கும் விஜயமங்கை என்று பெயர் ஏற்பட்டது.
*திருவிழாக்கள்.*
திருக்கார்த்திகை,
சிவராத்திரி,
பங்குனித் திருக்கல்யாணம் ஆகியன.
*தேவாரம் பாடியவர்கள்.*
மொத்தம் பதிகங்கள் இரண்டு.
*சம்பந்தர்* 3- ல் ஒன்றும்,
*அப்பர் பெருமான்* 5- ல் ஒன்றும் ஆக மொத்தம் இரண்டு பதிகங்கள்.
*நாவுக்கரசர் தேவாரம்:*
ஐந்தாம் திருமுறை
*ஆதாநாதன் அடல்விடை மேலமர் பூத நாதன் புலியத னாடையன் வேத நாதன் விசயமங் கையுளான் பாத மோதவல் லர்க்கில்லை பாவமே.*
""""""""""""""""""""""""""""""'''''''''''""""""""""""""""""""""""""
*பூசை முறை.*
சிவாகம முறையில் ஒரு கால பூசை.
காலை 9.00 மணி முதல் பகல் 10.00 மணி வரை.
மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்து வந்துதான் தரிசனம் செய்ய முடியும்.
*அஞ்சல் முகவரி.*
அருள்மிகு. விஜயநாதேஸ்வரர் திருக்கோயில்.
திருவிஜயமங்கை.
புள்ளம்பூதங்குடி அஞ்சல்.
கும்பகோணம் வட்டம்.
தஞ்சை மாவட்டம்.
*தொடர்புக்கு.*
கண்ணப்ப குருக்கள்: 0435--2941912,,,,
94435 86453.....93443 30834...
செந்தமிழ்ச் செல்வன்: 98436 06985
திருச்சிற்றம்பலம்.
*நாளை....திருவைகாவூர்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment