சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(38)*
🌸 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌸
🌸 *பாம்பாட்டிச் சித்தர்.* 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
பாம்பென்றால் படையே நடுங்கும் என அனைவரும் சொல்வோம்.
ஆனால் ஒரு மனிதவுருவைக் கண்டு பாம்புகளே நடுங்கியது என்றால் அது இந்த பாம்பாட்டிச் சித்தரைத்தான்.
பாம்புகளிடம் பிடிப்பது, அவற்றைப் படமெடுத்து ஆட்டு விப்பது, அவற்றின் விஷத்தை சேமிப்பது, இவையெல்லாம் இந்த சித்தரின் விரும்பத்தகுந்த பொழுது போக்கான விஷயம்.
எவ்வளவு நீளவான பாம்பானாலும், கடுமையான விஷம் கொண்டவையாக இருந்தாலும் அப்பாம்புகளைப் பிடித்து அதன் விஷத்தைக் கக்க வைத்து விடுவார் இந்த பாம்பாட்டிச் சித்தர். அதனால்தான் இவரை பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் ஏற்பட்டது.
வனத்தில் பாம்புகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வந்தது. இருக்கும் பாம்புகள் இவரைக் கண்டதும் கதிகலங்கி புதருக்குள் ஓடியொளிந்தது.
பாம்புகளுடன் சகஜநிலையில் பழகி வந்த இவருக்கு, பாம்புகள் இவரைத் தீண்டினால் அவ்விஷத்தை முறியடிக்கும் மூலிகைகள் இவருக்கு அத்துபடி.
இதனால் இவரிருக்கும் இடங்களில் பாம்புக் கடிக்கு சிறந்த வைத்தியம் ஒழுகியவராக இருந்தார். எனவே பொது ஜனங்களும் வேறான வைத்தியர்களும் இவரிடம் தொடர்பு இருந்த நிலையிலேயே இருந்தனர்.
விளையாட்டுக்காக இவர் பிடித்த பாம்புகளால், இப்போது அது ஆராய்ச்சி வரை நீள்கொண்டன. இதன் ஆராய்ச்சிக்காகவே விஷ வைத்திய ஆய்வுக் கூடம் ஒன்றை மருதமலைப் பகுதியில் தொடங்கினார்.
ஒருநாள் சில வைத்தியர்கள் ஒன்றாகச் சேர்ந்து, பாம்பாட்டிச் சித்தரை அணுகினர். அவர்கள் பாம்பாட்டிச் சித்தரிடம்...............
"மருதமலையான இவ்விடங்களில் மிகப் பெரிய அரியதான நவரத்தினப் பாம்பு ஒன்று வசிக்கிறதென்றும், அந்தப் பாம்பின் நஞ்சு பெரிய பெரிய சித்து வித்தைகளுக்கு திறனானது என்றும், அதனின் மாணிக்கம் அதிக விலைக்கு மதிப்புள்ளது என்றும், மேலும் முக்கியமாக அதன் விஷம் மருந்திற்குத் தேவைப்படுகிறது என்றும், எனவே அந்தப் பாம்பைப் பிடித்துக் கொடுத்தால் மிகவும் உபகாரமாக இருக்கும் என்றும் கூறி அவரிடம் எப்படியாவது அநதப் பாம்பைப் பிடித்துத் தரும்படி சொன்னார்கள.
இளம் காளையரான பாம்பாட்டிச் சித்தர் அவ்வரியதான பாம்பைப் பிடிக்க வனத்திற்குள் விரைந்தார். பாம்பாட்டி சித்தரின் வருகையினை, இவரின் மோப்ப வாசனையைத் தெரிந்து கொண்ட பாம்புகள் அத்தனையும் தங்களை வளைகளுக்குள் புகுந்து பாதுகாப்பாகிக் கொண்டன.
காட்டிற்குள் வந்த பாம்பாட்டி சித்தரின், கண்களுக்கு பாம்புகள் எவையும் கண்ணில் படவில்லை. இடுக்கு புதர் புதராக தேடி அலைந்தார். பாம்புகள் எவையும் கண்ணிற்கு சிக்காததால், கண்ணில்படும் புற்றுக்களையெல்லாம் இடித்தார். இப்படியெல்லாம் இடிக்கப்பட்ட வனத்தின் புற்றுக்கள் முழுமையும் காலியாகிப் போனது.
அந்த நேரத்தில் திடீரென வனம் பூராவும் எதிரொலிக்கும்படியான சிரிப்புச் சத்தம் கேட்டது.
தான் நின்றுகொண்டிருக்கும் இடத்தைச் சுற்றி எண்திசைகளையும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். சிரிப்பு வந்த சுவடு காணப்படவில்லை.
*"சிரித்தவர் யார்"* *யாராகிலும் என்னொதிரில் வாருங்கள்.* என பாம்பாட்டி சித்தர் ஆக்ரோஷமாக கூவினார்.
இவரின் ஆக்ரோஷ கூச்சலுக்கு எதிரே வராமல்,.........
ஒரு *ஒளி* மட்டுமே தெரியத் துவங்கின.
*ஒளி யார்? ...நாளை.......*
திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(39)*
🍁 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🍁
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🍁 *பாம்பாட்டிச் சித்தர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
உயர்ந்து ஒளிந்த ஒளிபிரவாகம் அகன்று விரிந்தன.
அப்போது ஒளி வீசும் திருமேனியுடன் சட்டைமுனி சித்தர் இளைஞன் எதிரே தோன்றினார்.
அவரைப் பார்த்த இளைஞன், "யார் நீங்கள்?....எங்கிருந்து வருகிறீர்கள்?...அலறிய சிரிப்பு ஏன் சிரித்தீர்கள்? என்று கேட்டான்.
தம் முன்னே ஒளிப்பிரவாகத்துடன் தெரிந்த சித்தர், யாரென்று பாம்பாட்டி சித்தருக்குத் தெரியவில்லை.
"இது நான் கேட்க வேண்டிய கேள்வியப்பா. இந்தக் காட்டில் வசிப்பன் நான். நாட்டிலிருந்து வந்தவன் நீ. காரணத்தை நீதான் சொல்ல வேண்டும். அதைவிட்டு நீ என்னை கேள்வி கேட்கிறாய்.
"பாம்பு பிடிக்கும் வைத்தியன் வேறெதுக்கு காட்டிற்கு வருவான். பாம்பு பிடிக்கத்தான் வந்தேன். அதற்குள் அலறிச் சிரித்து பாம்புகளெல்லாம் ஒடி ஒளியச் செய்து விட்டீரே!.
காரியம் என்னால் கெட்டதா? சித்தர் பரம்பரையில் மிகவும் சிறிய வயதுடையவன் நான். எவ்விதப் பயனும் இல்லாத உன் செயல்களையும் கண்டேன். அதனால் சிரிக்கத் தோன்றியது. சிரித்தேன். நீ செய்யும் காரியம் எந்த விதத்தில் உனக்கு உபயோகப்படும்?....
"எந்த வித பலனுக்காகவா இதை செய்கிறேன்!..உலக நன்மைக்காகத்தான் இதை செய்கிறேன். அதுவும் மருத்துவத்திற்காகவே இந்த நவரத்தின பாம்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இதைப் போய் பலனற்ற செயல் என்று சொல்கிறீர்களே! என கேட்டான்.
நீ அந்த நவரத்தின.பாம்பைத் தேடி அலைகிறாய் என்பது எனக்குத் தெரியும்! நீ ஒரு திறமை படைத்தவன் என்பதும் எனக்குத் தெரியும்......அது சரி!.....உன் உடம்புக்குள்ளேயும் ஒரு நவரத்தின பாம்பு.ஒன்று இருக்கிறதே" அது தெரியுமா உனக்கு!.....
அதனை ஆட்டுவிப்பவன் ஒரு அறிவாளி! அதை அடக்கி ஆள்பவன்தான் சித்தர்கள். அதனால்தான் கூறுகிறேன். வெளியில் திரியும் பாம்புகளை பிடிக்காதே! அதை விட்டுவிடு. உன் உடம்பிற்குள் இருக்கும் பாம்பை முதலில் அடக்க வழியைப் பாரு!
இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைந்து கொண்டிருக்காதே!"
இவ்வளவையும் கேட்ட பாம்பாட்டி வைத்தியர், பயமேயறியாத அவர் சித்தர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.
"நாளெல்லாம் காடுகாடாக பாம்புகளைத் தேடி வீணே அலைந்திருக்கிறேனே! இவர் கூறியது போல எனக்குள்ளிருக்கும் பாம்பை அறியாதிருந்திருக்கேனே!?" மீண்டும் அவரை நோக்கி..... தயவு செய்து தாங்கள் அதனைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்"என பணிவோடு கூறினார்.
அவனைக் கனிவோடு பார்த்த சித்தர் அவனுக்குள் ஏற்பட்ஞ பக்குவ நிலையை உணர்ந்து விளக்கமளிக்கத் தொடங்கினார்.
"அப்பா!...இறைவன் படைப்பில் அற்புதமாகக் கிடைத்தது இந்த உடம்பு. அவ்வுடம்புக்குள்ளே ஆதியிலிருந்தே ஒரு பாம்பு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு *குண்டலினி* என்று பெயர்.
உள் தூங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பு அறிவை மழுங்க வைக்கிறது. அறியாமை இருளை பெருக்குகிறது. இவ்வறியாமையால் நுட்பங்களைப் பெற முடியவில்லை. மனித துயரத்திற்குக் மூலதாரமாய் உடலுக்குள் தலைகீழாசனம் புரியும் இந்தப் பாம்பின் உறக்கந்தான் காரணம்.
பரமனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அதன் காரணமாக தூங்கும் குண்டலினி என்னும் பாம்பு விழித்துக் கொள்ளும். சிவத்தில் ஒடுங்கும். அதனால் ஆன்மா சுதந்தரமடைந்து அறிய வேண்டியவைகளை அறிந்து ஆனந்தமயமாக்கும். எனச் சொல்லி முடித்தார் சட்டைமுனி எனும் அந்த சித்தர்.
குராநாதரே!...நீங்கள் விழிப்படையச் செய்த வழியே உத்தமமானது!...எனவே இவ்வழியை விட்டு விலகமாட்டேன் என்று கூறி சித்தரை வணங்கியெழுந்தான்.
இவன் பக்குவப்பட்டு விட்டான் என அறிந்த அந்த சித்தர், அவனுக்கு அருள்புரிந்து விட்டு உடனே அங்கிருந்து மறைந்தார்.
இளைஞனான சித்தன் தன் முன்னாலிருந்த ஆத்திமரத்தடியில் போய் அமர்ந்தான்.
சித்தரின் அருள் வாக்குப்படி யோக சிந்தனையை தூண்ட முடிவெடுத்தார்.
யோகம் கை கூடியது.
குண்டலினி கிளர்ந்து அசைந்தாடியது.
இருள் கவ்விய அவர் கண்களுக்குள் இப்போது உலகம் முழுமையும் ஒளிமயமானதாக தோன்றியது.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(40)*
🍁 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🍁
___________________________________________
🍁 *பாம்பாட்டிச் சித்தர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
இளைஞன் சித்தனின் கண்களுக்குள் ஒளிமயமானதாகத் தோன்றியதை எண்ணியபடி அதிலேயே லயித்திருந்தார்.
ஒரு நாள் குருவான சட்டை முனி அவன் முன்னே காட்சி தந்து....அப்பனே!...உன் பெயர் என்ன? நான் தெரிந்து கொள்ளவே கேட்கிறேன் என்றார்.
என்ன பெயரைக் கூறுவதென சிந்தித்த இளைஞ சித்தர்க்கு, இதுவரை தூலமான பாம்புகளைப் பிடித்துக் கொண்டிருந்த நான் இப்போது குண்டலினி எனும் வகையான பாம்பைப் பிடித்திருக்கிறேன் என்கிற சிந்தனையே மேலோங்கி இருந்தது. அதனால் அவ்விளைஞ சித்தன், *நான் அப்போது பாம்பையே பிடித்துக் கொண்டிருந்தேன்.* *இப்போதும் பாம்பைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஆக நான் பாம்பை ஆட்டுவித்ததில் நான் பாம்பாட்டி.* *குருதேவா!.. என் பெயர் பாம்பாட்டி.* என்றான்.
சட்டை முனி சித்தர் புண்ணகைத்துக் கொண்டே, "உண்மைதான், நீ பாம்பாட்டிச் சித்தன்தான்" என்று மகிழ்ச்சியோடு கூறிவிட்டு அவனை ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.
சட்டைமுனி சித்தரின் ஆசீர்வாதத்தால் எல்லா வகையான சித்துக்களும் பாம்பாட்டிச் சித்தரை வந்தடைந்தன.
இரசவாத சித்தமெல்லாம் சாதாரணமாக கைகூடியது. எதைத் தொட்டாலும் பொன்னாகும் ஆற்றல் பாம்பாட்டிச் சித்தர்க்கு கை வந்த கலையாகியது. ஆனால் இவ்வரிய சித்துக்களையெல்லாம் எண்ணி அவர் மகிழ்ச்சி கொள்ளவில்லை.
நவரத்தினப் பாம்பினைத் தேடினேன். கற்களையே நவரத்தினங்களாக ஆக்கும் சக்தி கிடைக்கப் பெற்றேன். இந்த நவரத்தினக் கற்களும் வேண்டாம் என நினைத்து அந்த நவரத்தினக் கற்களை தூர வீசி எறிந்தார்.
இரவு பகலாகப் பல இடங்களில் பல நாடுகளில் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார்.
ஒருநாள் வான் வழியே பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் செவிகளுக்குள் அழுகைக் குரல் கேட்டது.
மன்னன் ஒருவன் தீயவர்களின் சேர்க்கையால் பல தீய காரியங்களைச் செய்து, அவன் மனைவி எவ்வளவோ திருத்த முயன்றும் முடியாமல் போக, திருந்தாத அம்மன்னன் முடிவில் இறந்து போனான். அம்மன்னன் பிணத்தைச் சுற்றி எல்லோரும் அழுது கொண்டிருந்த அழுகுரல்தான் பாம்பாட்டிச் சித்தரின் காதில் கேட்டது.
சித்தரின் இதயம் இரக்கத்தால் விம்மியது. உடனடியாக பூமிக்கு இறங்கினார். தன் உடம்பை ஒருபக்கம் பத்திரமாக வைத்தார். இறந்து கிடந்த பாம்பு ஒன்றை எடுத்து இறந்து போன மன்னனின் முன்னால் அமர்ந்திருந்தவர்களின் கூட்டத்துனுள் வீசினார்.
கூட்த்தில்லோர் அனைவரும் பதறிச் சிதறி ஓடினார்கள். ஆனால் அரசியார் மட்டும் கணவனின் உடலை விட்டு நீங்கிப் போகவில்லை.
கூடுவிட்டு கூடு பாயும் வித்தையின் மூலமாக பிணமாயிருந்த மன்னனின் உடலுக்குள் புகுந்து கொண்டார்.
இறந்து கிடந்த மன்னரின் கை கால்கள் அசைவு கொடுத்தன. விழித்திறைகள் விலகி விரிந்தன. இப்போது கண்களை முழுமையாகத் திறந்து அரசியைப் பார்த்தான். இதானதைக் கண்ட அரசிக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும் மேலிட்டது. சந்தோஷம் தாளவில்லை. கூடியிருந்தவர்களும் மன்னனின் உயிருடன் இருப்பதைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.
மன்னரோ......அனைவருடைய ஆரவாரத்திலும் பங்கெடுக்கவில்லை. அவரது கவனம் யாவும் செத்துக் கிடந்த பாம்பின் மீதே இருந்தது.
*"பாம்பே....*நான் எழுந்து விட்டேன். *நீயும் எழுந்திரு"* என்றார்.
என்ன வியப்பு?.....
செத்துக் கிடந்த பாம்பு உயிருடன் ஊர்ந்தது! மனித கூட்டத்தை விட்டு விலகி வெளியேற முயன்றது.
மன்னரோ......பாம்பைப் பார்த்தார்.
"பாம்பே....என்ன? அவசரம்!...
"எங்கே ஓடுகிறாய்?......
இறந்து போன....நீ .....உயிருடன் வந்து விட்டாய்!".........
"இன்னும் என்ன ஆசையை பாக்கி வைத்திருக்கிறாய்"!......
உன் மனைவி மீது நினைவோ......
பிறந்து......இறந்து.....பிறந்து.......ஏமாறாதே!.....எனச் சொன்னதோடு.....
*ஆடு பாம்பே* என ஆணையிட்டார்.
அவர் கட்டளைக்குப் பாம்பு சீறி சீறிப் படமெடுத்து ஆடியது!
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(41)*
🍁 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🍁
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🍁 *பாம்பாட்டிச் சித்தர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சித்தர் ஆடு பாம்பே என ஆணையிட......
அவரிட்ட கட்டளைக்கு பாம்பு படமெடுத்து எழும்பி ஆடியது. பாம்பு ஆடிக் கொண்டிருக்கும் போது, பல தத்துவக் கருத்துக்களைப் பாடல்களாக வெளிப்படுத்தித் தான் ஒரு சித்தர் என்பதைனையும், மன்னன் உடம்பில் புகுந்திருப்பதையும் குறிப்பால் பாடிப் பாடி உணர்த்தினார்.
இப்படிப் அவர் பாடிய பாடலில் இவ்வுணர்த்துகளை கூடியிருந்த யாவரும் புரிந்து கொள்ளவில்லை.
*தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே--சிவன் சீர் பாதம் தெளிந்து ஆடு பாம்பே.*
*ஆடு பாம்பே தெளிந்து ஆடு பாம்பே சிவன் அடியினைக் கண்டோம் என்று ஆடுபாம்பே.*
--இது பாம்பாட்டிச் சித்தர் பாடிய பாடல்.
மன்னர் பிழைத்து விட்டாலும்கூட அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. செத்துப் போன பாம்பைப் பிழைக்க வைத்து ஆடச் சொல்கிறார்.
அதுவும் மகுடிக்குக் கட்டுப்பட்டாற் போன்று அவர் சொல்லுக்குத் தப்பாமல் ஆடுகிறது. இது எப்படி?... நாட்டு மக்கள் ஆளாளுக்குப் பேசிக் கொண்டு போனார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் மனம் அதிர்ந்தது. அரசி ஆடும் பாம்பையும் பார்த்தாள். அதை ஆட்டிவிக்கும் மன்னனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
நாடாளும் மன்னன். திரண்ட சொத்துக்கு அதிபதி. மூடத்தனம், மூர்க்கத்தனம் புரிந்த இந்த அரசர் செத்துப் பிழைத்த பிறகு எப்படி இவரால் இவ்வளவு தத்துவ அறிவோடு பேசமுடிகிறது....எப்படி இது?"... கேள்வி கேட்க நினைத்தவருக்கு பதில் சொல்வது போல் மன்னனிடம் இருந்து பாடல் வெளிப்பட்டு வந்தது.
*"நாடு, நகர், வீடு மாடு, நற்பொருள் எல்லாம்*
*நடுவன் வரும் போது நாடி வருமோ?....*
*கூடு போன பின்பு அவற்றால் கொள் பயன் என்னோ?*
*கூத்தன் பதங் குறித்து நின்று ஆடாய் பாம்பே!*
*யானை சேனை தேர் பரி யாவும் அணியாய்*
*யமன் வரும் போது துணையாமோ அறிவாய்"*
அரசி அதிர்ந்து போனாள். நாம் நினைப்பதற்கு பதில் சொல்வது போல் இவர் பாடுகிறாரே. முக்கனியும் பாலும் முழுநேரமும் பெண்கள் சுகமே என பொழுதைப் போக்கியவர் இவர் இப்போது இப்படியாகப் பேசுகிறாரே?.
அதற்கும் பாடலாகவே பதில் வந்தது.
*முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும்*
*முதிர் சுவை பண்டங்களும் முந்தியுண்டவாய்*
*மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க*
*மெய்யாகக் கண்டோமென்று ஆடாய் பாம்பே!*
ராணி எண்ணிய எண்ணத்திற்கு மன்னனிடமிருந்து பாடலில் பொருளிருந்தது.
ராணியின் உடம்பு ஆடிப் பௌனது. அவளுக்குள்ளிருந்த சந்தேகக் கணைகள் கேள்விகளாய், மன்னரைப் பார்த்து நேரடியாகவே கேட்கத் தொடங்கினாள்.
"சுவாமி! தாங்களாக இருப்பது நீங்களா? அல்லது மன்னரா? இல்லை, வேறொரு மகானின் ஆத்மாவாக இவ்வுடம்போடு புகுந்து புதிராயிருக்கிறீரா?......
இவ்விதம் கேள்வியைத் தொடுத்த அரசிக்கு பதில் சொல்லத் தொடங்கினார் மன்னர்.
*"அரசியாரே!, உனக்கு உண்மை புலர ஆரம்பித்துள்ளது. நீயும் ஊராரும் இறந்து போன மன்னனைச் சுற்றி அழுது கொண்டிருந்த உங்கள் துயரத்தைப் போக்குவதற்காகத்தான் உங்கள் மன்னனின் சடலத்துக்குள் புகுந்திருக்கிறேன். நான் சித்தன். பாம்பாட்டிச் சித்தன் என்றார்.
இப்போது அனைத்தும் புரிந்து போயிற்று அரசிக்கு....சுவாமி! எங்களுக்கு நல்லதே அருளியிருக்கிறீர். மீதியையும் எங்களுக்குத் தெளிவு உண்டாகும் வழியையும் தாங்களே அருளித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மன்னனிடமிருந்து பல பாடல்கள் உபதேசமாக, தத்துவமாக வெளிவந்தன. அவைகளை உள்ளத்தில் பதித்து அதன் மூலம் அமைதி கொண்டாள் அரசி.
எல்லோருக்கும்தான் உண்மை புரிந்து விட்டதே!..இனி எதற்கு இந்த வேஷம்? அரசர் உடலில் இருந்து சித்தர் வெளியேற அரசர் உடல் கீழே விழுந்தது. அது வரை ஆடிக் கொண்டிருந்த பாம்பும் அங்கே.மறைந்து போனது.
மன்னனுக்குரிய இறுதிச் சடங்கை அரசி நடத்தி முடித்தாள். சித்தர் உபதேசங்களைக் கருத்தில் கொண்டு அதன்படி நடந்து உயர்வடைந்தாள்.
அரசர் உடலிருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் பத்திரப்படுத்தி வைத்திருந்த உடலில் புகுந்தார்.
மக்களுக்குப் பலவித அறிவுரைகளைப் புகட்டினார். ஆனால் அனைத்தையும் மக்கள் செவிமடுக்காமல் விழலுக்கிறைத்த நீராய் போனது. தேடிப் போய் உதவி செய்தும் இவர்கள் திருந்தவில்லையே என வருந்தியதுடன் எவர் கண்ணிலும் படாமல் மறைந்தார்.
இவர் தவமிருந்த குகை கோவை மருதமலையில் காணப்படுகிறது.
இவர் மருதமலையில் சித்தி அடைந்ததாக சிலரும், துவாரகையில் சித்தி அடைந்ததாக சிலரும், விருத்தாச்சலத்தில் (பழமலை) சித்தி அடைந்ததாக சிலரும் கூறுவார்கள்.
ஆனால் மேற்கூறிய மூன்று தலங்களிலும் இவரின் அமைந்துள்ளது.
பாம்பாட்டிச் சித்தர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தார். மருதமலையில் வாழ்ந்தார் என கூறப்படுவர்.
கோவை மருதமலையில் அவர் வாழ்ந்ததற்கு அடையாளமாக அங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை, சுணை போன்றவைகள் காணப்பெறுகின்றன.
இவர் திருக்கோகர்ணத்தில் பிறந்தார் என்று ஒரு நூலிலும் இருக்கிறது.
இவருடைய நூல்கள்: பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள். சித்தராரூடம், மற்றும் சில வைத்திய நூல்கள் சில உண்டு.
*இத்துடன் பாம்பாட்டிச் சித்தர் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.*
திருச்சிற்றம்பலம்.
*நாளை கோரக்கர்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment