வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம-14
ராகம்:கேதாரகௌளம் தாளம்:த்ரிபுட
பல்லவி: காசுகொந்நாடு அதுகொ நீ காந்துடு ஏகாந்தமுனனு
தாசின ஸிக்கெந்தாக ஜாரகதவோ அம்மா
தக்கர ஜெரகதோவோ அம்மா--காசு
காத்துகொண்டு இருக்கிறான் அங்கே உன் நாயகன் தனியாக நீ இதுவரை வெளிக்காட்டாமல் இருந்த வெட்கத்தை விட்டு நாயகன் மேல் சாயக்கூடாதா அம்மா பக்கத்தில் சேரக்கூடதோ அம்மா
ச.1.கொமர வயஸு நாடிகொத்தபென்ட்லி கூதுரா
கமலமுலோனி பங்காரு பொம்ம
விமலமை நிலுவெல்ல வென்னேல காசே தல்லி
செமரிம்ப விபுசெந்த ஜெரகதோவோ அம்மா--காசு
தக்க ப்ராயத்தை(சரியானவயது)உடைய மணப்பெண்ணே தாமரை பூவின் உள்ளே இருக்கும் தங்கத்தால் ஆன பதுமையே(மஹாலஷ்மி) அஹில உலஹத்தையும் பஹலாக்குவது போல் நிலவு ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது தாயாரே சந்தோஷமாஹ் அஹில உலஹமும் மேன்மையடைய நாயகனோடு சேர்ந்துகொள்வாய் அம்மா
ச.2.சந்தமாமதோ புட்டின ஜவ்வனம்பு வெலுவலு
கந்துவலேணி கபுரம்பு கந்தி
கந்தபு வாஸனமேனி கலஸாப்தி கன்ய கோவிந்துனி பாதமுலொத்த
வேஞ்சேயகதவோ அம்மா
சந்திரனின் சாஹோதரியைப்போல் இந்த உலகம் ஒளிமயமாக்குபவளே ஈடு இணை இல்லாத ஒளிமயமான அழகை உடையவளே சந்தன வாசனையுள்ள உடம்பையுடைய சமுத்ர ராஜனின் பெண்ணே கோவிந்தனின் பாதங்களை அமுக்கிவிட போஹக்கூடாதோ அம்மா
ச.3.அதிமோகனாங்கியைன அலமேலுமங்கம்மா
சதுலலோனு மிகுலகலிகி சிலுகல கொலிகி
பதியைன ஸ்ரீவேங்கடபதி கௌகலீயக
அதனிதோ ரதிநோலாலாடகதவோ அம்மா தாக்கர ஜெரகதவோ
அம்மா
(இங்கு திரும்பவும் பல்லவி காசுகொன்னாடு என்று பாடக்கூடாது ஜெரகதவோ அம்மா என்று முடிக்கவேண்டும் மேலும் இந்த பாட்டில் யம்மா என்று முடியும் இடத்தில் அம்மா என்று சொல்லவும் யம்மா என்றால் தெலுங்கு மொழியில் சொல்ல தஹாத வார்த்தை )
மிஹவும் அழஹான அலமேலுமங்க தாயாரே உலஹத்தில் உள்ளவர்களிலேயே கிளியைப்போல் உள்ள பெண்ணே ஸ்ரீவேங்கடேஸன் (வஷ்ஷஸ்தலம்) அன்னைத்து கொள்ளும்படியாக அவனுடன் கூடி விளையாட கூடாதா அம்மா அருஹில் போய் ஸேர்ந்துகொள்
இந்த பாட்டின் உட் பொருள்
இந்த பாட்டில் கவி ஸ்ருங்காரத்தை அதிஹமாஹ சொல்லியிருந்தாலும் அங்கே பக்திரஸ்மும் அதிஹமாஹவே உள்ளது
பக்தனுக்கு இறைவன் காத்துக்கொண்டு இருப்பதுடன் பக்திக்கு தகுந்த மனபக்குவம் உள்ளவர்கள் மட்டுமே தங்கம்போல் ஜொலித்து தேஜஸ் ஆஹ இருப்பார்கள். இந்த நிலையில் பரப்ப்ரஹ்ம ஸ்வரூபத்தை தரிசிக்க இறைவனிடம் பக்தியுடன் ஈடுபடுஹிரார்கள் பரப்ப்ரஹ்ம ஸ்வரூபத்தை காணும் பாக்யத்தை பெற்ற பக்தன் மிஹவும் ஜொலிப்புடனும் நல்ல குணமுள்ளவனாஹவும் இருக்கிறான்.தாயார் இறைவன் பக்கத்தில் இருக்கிறாரோ அந்த பாவத்தில் நாயகனஹா இருக்கும் இறைவனை அடைய ஆடம்பரம் இல்லாத பக்தியுடன் நாம சங்கீர்த்தனம் செய்வீர்கள் பக்தர்களே
No comments:
Post a Comment