வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-15.
ராகம்:நாதநாமக்ரியா தாளம்:சாபு
பல்லவி;வச்சேனு அலமேலுமங்க யீ பச்சல கடியால பணதி செலங்கா—வச்சேனு
வந்தாள் அலமேலுமங்கை பசுமையான பள்ளி அறை மேலும் அழகுகூட
ச.1.பங்காரு சே தீவடீலு பூனி, ஸ்ருங்காரவதுலு வெய்வேலு, ராக ரங்கைன வின்ஜாமராலு வீவ, மாங்கள்யலீல சொம்பகு ஜவராலு
தோழிகள் உடன் வர சில தோழிகள் தங்கதலான தீவட்டீயுடனும் சிலர் நாட்யம் ஆடிக்கொண்டும் சிலர் வெண்சாமரம் போடவும் தாயாரின் ஒய்யார நடையில் மாங்கல்யம் ஆட ச்ந்தொஷ்மாஹ வந்தாள்
ச.2.பலுகுல தேனீய லொலுக செந்த கிலுகுலு கலகல பலுக ரவல கிலுகு பவலு முத்து குலுக மேடி கலிகி ஜூபுலமொனனுதளுகனிஜிலுக
தேன் ஒழுக பேசிக்கொண்டு உடன் வரும் பெண்கள் கிளிகளை போல் கலகலவென்று பேசிகொண்டு அழஹான கன்னங்கள் ஒளிவீஸ ஒய்யாரமாஹ பார்த்துக்கொண்டு தன் உடம்பு தகதகவென ஜொலிக்க வந்தாள்
ச.3.ரம்பாதி சதுலெல்ல ஜேரி யெதுட கம்பீர கதுலனு மீரி நடன ரம்பமுலனு மேலுகோரி கொலுவ அம்பொஜாஷுடௌ வேங்கடேஸ்நு ஒய்யாரி
ரம்பை முதலான தோழிஹள் சேர்ந்து கம்பீரமாஹ அபிநயம் செய்தும் இதுநாள் வரை இல்லாத அளவுக்குமேல் நடனம் செய்து உலஹில் உள்ள ஜீவராசிஹல் மேன்மையடைய பிரார்த்தனையுடன் தாமரை போன்ற கண்களையுடைய வேங்கடேஸனின் பிரியமான தாயார் வந்தாள்
இந்த பாட்டின் உட் பொருள்
இறைவனின் பக்கத்தில் நாம் நெருங்கி போஹிரோம் என்னும் பரவசத்தால் பக்தர்கள் தனனை மறந்து இருப்பதை கவி வெளிப்படுத்துஹிறார்
No comments:
Post a Comment