தாத்தா ஏன் நிறைய பேர் இப்போ எல்லாம் மஹா பெரியவா பத்தி நிறைய செய்திகள் அதிசயங்கள் எல்லாம் பத்திரிகையிலே மெயில் லே எல்லாம் போடறா. முன்பெல்லாம் அவர் இருக்கும்போது இவ்வளவு விஷயங்கள் வெளியே வரவில்லையே?
ரொம்ப நல்ல கேள்வி கேட்டாய் கோபு?
உன்கிட்டே பர்ஸ்லே 100 ரூபா நோட்டு இருக்கு. அதை தேடுவியா? அது கீழே எங்கோ விழுந்தோ, காணமால் போனாலோ தேடுவியா?
அது எங்கிட்டே இல்லாம போனால் தேடுவேன்?
எதுவரையிலும் தேடுவே?
கிடைக்கிற வரையிலும்.
மஹா பெரியவா இருக்கிரவரைக்கும் காஞ்சிக்கும் அவர் இருக்கிறத் இடத்திற்கும் அலை அலையா சென்று அவரை தரிசித்தோம். மனதில் நினைத்ததெல்லாம் திருப்தியானது பேசவோ எழுதவோ என்ன தேவை.
அவா மகா சமாதி அடைந்ததற்குப் பிறகு தான் அடடா இனி அவரை எங்கே காண்போம் என்று தேடி அலைந்து அவர் பற்றிய செய்திகள் எல்லாம் சேகரித்தும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறோம்.
இதுவரை அவரை அறியாதவர்களும் ''இப்படி ஒரு தெய்வம் நம்மோடு இருந்ததா?'' என்று அறிந்து முன்பை விட இப்போது அவரது பக்தர்கள் எண்ணற்றவர்கள் ஆகிவிட்டார்கள்.
மஹா பெரியவா அப்பவும் இப்பவும் எப்பவும் சர்வ வியாபி. புரிகிறதா. அள்ள அள்ள குறையாத அமிர்த கடலில் இருந்து ஒரு துளி முத்துக்கள் தான் இது.
No comments:
Post a Comment