Tuesday, April 14, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part13

courtesy:Sri.S.V.Narayanan


வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம-13.

 

ராகம்:ஆஹீரி                                          தாளம்:த்ரிபுட

 

பல்லவி:யெந்த்லெது வைபவம்பு இபுடு நீகு சிந்ததீர பவளிஞ்சு ஸ்ருங்கார ராயா- யெந்த்

 

கணக்கில்லாத் சிறப்பான நித்ய திருவிழாக்கள் உனக்கு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது கவலைகள் தீரும்படியாக படுத்து ஒய்வு எடுத்துக்கொள் நளினமாக இருக்கும் தலைவனே

 

ச.1.கெத்தமீத வேஞ்சேஸி கனக தல்பமுனந்து அர்த்தமு ராத்ரிதாக அலஸிதிவி

தித்துகொன்ன சதிதோட திருவிஸ்மாரகிஞ்சி பொத்துபோயே பவளிஞ்சு

        போகாலராயா—யெந்த்

 

கருடன்மேல் தங்கத்தாலான ஸிம்ஹாஸனத்தில் பாதி இரவு ஆஹும் வரை பக்தர்ஹளுக்கு அருள்செய்ய அலைந்து திரிந்திரிக்கிறாய் அழஹாஹ அலங்காரம் செய்துகொண்டிருக்கிற உன் நாயகியுடன் அரவணை (அக்காரஅடிஸ்ல்) சாப்பிடு.இரவு முடிந்துவிடும் சமயம் வந்துவிட்டது படுத்துக்கொள் இவ்வுலக சுகங்களை தரும் தலைவனே

 

ச.2.உப்பரீக சவிகலோனு உய்யால் மஞ்சமுபைனி ஒப்பைன செலுலந்தருனு ஊசி பாடகா

காப்புரம்பு ஸுரடுல காலிபை விசரக தப்பிதீர பவ்வளிஞ்சு  தெய்வால ராயா-யெந்த

 

மேல்தளத்தில் (மொட்டைமாடி)ஊஞ்சல் கட்டிலின்மேல் படுத்துக்கொள். மிஹவும் சிறந்த அழஹான பெண்கள் ஊஞ்சல் ஆட்டி பாடுஹிரார்கள் தன்மயான தென்றல் காற்று சாமரத்தினால் வீஸுவதுபோல் இருக்கிறது உன்னுடைய அலுப்பு தீரும்படியாக படுத்துக்கொள் இறை அருளில் தலைமை வாய்ந்தவனே

 

ச.3.ஈடுலேணி ஜவரான்ட்லு இந்திராதி ரமணுலு தோடிநெச்சலுலதோனு தொடலொத்தகா

மேட மாளிக லோனி மெருகு சித்தரிண்ட்ல வேடுகதோ பவ்வளிஞ்சு வேங்கடாத்ரி ராயா

 

ஈடுஇணையற்ற அழகாண இந்திர உலஹத்து பெண்கள் அவர்ஹளுடைய தோழிஹளுடன் உன் தொடைகளை வலிதீரும்படியஹா அமுக்கிவிட அரண்மனையில் உள்ள ஜொலிக்கும் சித்திரங்கள் உள்ள சயன அறையில் ஆசையுடன் படுத்துக்கொள் வேங்கடமலையின் தலைவனே

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

தன் பக்தர்ஹளை காக்கும் பொருட்டு இரவு பஹலாஹா அலைந்து திரிந்த இறைவனை பக்தர்ஹள் தங்களது மனதை கட்டிலாஹவும் எல்லா சமயத்திலும் இறைவன் பெயர்ஹளை (இறைவனுடயநாமா) சொல்வதினால் மனதைதென்றல் வீஸும் படுக்கையஹா நினைத்து பக்தர்ஹள் மனதில் இறைவனை இருக்குமாறு வேண்டுதலாஹ் இந்த பாட்டு அமைந்துள்ளது

No comments:

Post a Comment