Thursday, November 30, 2023

Trayambakam yajamahe meaning

யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் ருத்ரத்தின் நடுவில் அமைந்துள்ளது நமசிவாய மந்திரம். 

அதற்குச் சற்றுப் பின்னால் சிவனின் பெருமையைக் கூறுகையில் 'ம்ருத்யுஞ் ஜய மந்திரம்' என்று போற்றப் படும் ஒரு சிறிய மந்திரம் வருகிறது. 

ரிக் வேதத்திலும் இந்த மந்திரம் இருக்கிறது . 

இதைவழங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி. 

'ம்ருத்யு' என்றால் மரணம் (இறப்பு)
அதை ஜயிக்கக்கூடிய மந்திரம் என்பதால்—-மரணத்தை வெல்லும் இம் மந்திரத்துக்கு ''மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம்'' என்று பெயர். 

இதில்தான் வெள்ளரிப் பழம் வருகிறது. 

ஓம்  த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

மந்திரத்தின் பொருள்:- 

ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! 

நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.

ஸுகந்திம் = இயற்கையான நறுமணம் உடையவரும்

புஷ்டிவர்த்தனம் = கருணையால் அடியார்களை ஊட்டி வளர்ப்பவரும் ஆகிய

த்ரயம்பகம் = முக்கண்ணனை

யஜாமஹே = பூஜித்து வழிபடுகிறோம்.

உர்வாருகம் இவ = வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல

ம்ருத்யோ: = சாவினுடைய

பந்தனாத் = பிடியிலிருந்து

முக்ஷீய = உமது அருளால் விடு படுவோமாக!

மா அம்ருதாத் = முக்தி வழியில் இருந்து விலகாமல் இருப்போமாக

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் அழகிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள தமிழ் வடிவம் 

இயற்கை நறுமணம் உடைய தேவரே

ஈடில்லாக் கருணையால் அடியாரை வாழ்விக்கும்

வியத்தகு முக்கண் உடைய எம்பெரும

வினயமாய்ப் போற்றி அஞ்சலி செய்தோம்

வெள்ளரிப் பழம் காம்பினின்று விடுவதொப்ப

மேவிய உமதருளால் மரணத்திலிருந்து விடுபடவும்

தெள்ளிய சன்மார்க்க நெறியில் இருந்து யாம்

திசை மாறாதென்றும் வாழ்ந்திடுவோமாக

வேதம் படித்த சைவர்கள், விபூதி பூசும் போது இந்த மந்திரத்தைச் சொல்லிகொண்டே விபூதி இட்டுக் கொள்வார்கள். 

யாருக்காவது, ஆயுள் அதிகரிக்கவோ, மரண பயம் நீங்கவோ, நோய்கள் நீங்கவோ வேண்டுமானால் மிருத்யுஞ் ஜய ஹோமமும் நடத்துவது வழக்கம். 

இந்தச் சிறிய மந்திரத்தை அனைவரும் சொல்லலாம். 

 வெள்ளரிப் பழத்தை ஏன் இதில் சொன்னார்கள் 

மற்ற பழங்கள் பழுத்தவுடன் அது கீழே விழும். 

பழம் விழுந்தால் அது தரும் அதிர்ச்சியை நாம் அறிவோம். 

கீழே விழுந்தாலும் சரி ஒருவரின் தலையில் விழுந்தாலும் சரி, அதில் பக்க விளைவுகள் உண்டு. 

ஆனால் வெள்ளரிப்பழம் மட்டும் பழுத்தவுடன் பழம் இருந்த இடத்திலேயே இருக்கும். 

ஒரு அங்குலம் கூட நகராது, 

அதன் காம்பு மட்டும் தனது தொடர்பை அழகாகத் துண்டித்துக் கொள்ளும்.

 பழுத்த பழத்துக்கு அவ்வளவு மரியாதை. 

காம்பே ஒரு 'கும்பிடு போட்டு விட்டு' சற்றே விலகிவிடும்.

சிவபெருமான் காரணமின்றியே, அவர் மீது பக்தி இல்லாவிடினும், அருள் செய்து - 

இதற்கு வடமொழியில் 'அவ்யாஜ கருணா' அல்லது 'நிர்ஹேதுக க்ருபா' என்று பெயர்-, 

நறுமணத்தையும், ஊட்டத்தையும் அளிக்கிறார்.

 அவர் மீது நமது பக்தி கூடக் கூட, அவற்றை அதிகரிக்கச் செய்பவர் என்பதையே 'வர்தனம்' என்ற சொல் உணர்த்துகின்றது. 

நறுமணம் என்பது மனமகிழ்ச்சி, போன்ற உள்ளம் சார்ந்த வளங்களையும், 

'புஷ்டி' என்பது  உடலுடன் தொடர்புடைய நோயின்மை, சுகம் என்ற நலன்களையும் சுட்டுகின்றன. 

வடமொழியில் 'யஜனம்' என்றால் யாகம் செய்தல் என்று பொருள். 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 1957-59 ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடத்திய உபந்யாசம் ஒன்றில் வெள்ளரிப் பழ விஷயத்தை சுருக்கமாகத் தொட்டுக் காட்டினார்

Wednesday, November 29, 2023

vidura neethi part26

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

*விதுர நீதி 26*

*(விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்)*

*வேலைக்காரன் பற்றி விதுரர் கூறியுள்ளது என்ன - விதுர நீதி தொடர்ச்சி*

இந்த காலத்தில் நல்ல வேலைக்காரர்கள் கிடைப்பதே அரிது. பெரிய நிறுவனமாய் இருந்தாலும் சரி, சின்ன நிறுவனம் இருந்தாலும் சரி அல்லது தனி நபராக இருந்தாலும் சரி, நல்ல ஆள் கிடைப்பதே அரிதாகி விட்டது. மகாபாரத்தில் விதுரர் அப்போதே வேலை காரரை எப்படி தேர்வு செய்ய வேண்டும் எப்படி நடத்த வேண்டும் என்று கூறி விட்டார்.

வேலைக்கு ஆளை அமர்த்தும் முன் அவர் செய்ய வேண்டிய வேலை பற்றி முதலிலேயே கூறி விட்டு வேலைக்கு அமர்த்த வேண்டும். வேலைக்கு அமர்த்தி விட்டு அதிக வேலை கொடுத்தால் பிரச்சினை தான் வரும். மேலும் வேலைக்கு வைப்பதற்கு முன் சம்பளம் பற்றி பேசி தீர்த்து விட வேண்டும். சம்பளத்தை குழப்பமாக பேசக் கூடாது. வேலைக்கு ஆள்வந்தவுடன் அதிகம் வேலை கொடுக்கலாம் என்றும், சம்பளத்தை குறைத்துக் கொடுக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு வேலைக்காரனை வைத்தால் அது பிரச்சினையில் கொண்டு போய் முடியும்.

வேலைக்காரன் நம் மீது விருப்பம் உடையவனாய் இருந்தால் அவன் மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. அவனை வசவு பாடாமல் இருக்க வேண்டும். ஆபத்தில் அவனை கை விட்டு விடக் கூடாது. மேலும் ஒரு கஷ்டமான வேலையை வேலைக் காரர்களைக் கொண்டுதான் சாதிக்க முடியும். தனியாக இருந்து எதையுமே சாதிக்க முடியாது. எனவே வேலை காரனை நீக்கும் போது நிதானமாக யோசிக்க வேண்டும்.

காலத்தை தாழ்த்தாமல் முதலாளிக்கு எது பிடிக்குமோ அதை தாங்களாகவே செய்பவர்கள் நல்ல வேலைக்காரர்கள். மேலும் முதலாளி தப்பு செய்யும் பொது அதைத்தாழ்ந்த குரலிலாவது சொல்பவர்கள் நல்ல வேலைக்காரர்கள் என்று வேலைகாரர்களின் குணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த குணம் உள்ள வேலைக்காரனை உடனடியாக வேலையிலிருந்து எடுத்து விடும்படியும் விதுர நீதியில் கீழ் வருமாறு கூறியுள்ளார்:

எந்த வேலை ஆள் நாம் சொன்னதை செய்ய மறுக்கிறானோ
எந்த வேலை கொடுத்தாலும் அதை நாளை செய்வேன் என்று காலம் தாழ்த்துகிறானோ
எவன் ஒருவன் தனக்குத்தான் தெரியும் என்று நினைக்கிறானோ

இவ்வாறு வேலைக் காரர்களை பற்றி அழகாகக் கூறி உள்ளார். மேலும் விதுர நீதியில் உள்ள சமாச்சாரங்களை நாளை காண்போம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏

Tuesday, November 28, 2023

Dhaanam - HH Bharati teertha mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்* 

தானம் கொடுப்பது சிலாக்யமானது. ஆனால் அதை ஆத்மப்ரசாரத்துக்காக செய்யக்கூடாது. धर्मः क्षरति कीर्तनात् என்று சாஸ்திரம் கூறுகிறது. தானம் கொடுப்பதை பறைசாற்றினால் தானத்தின் புண்யத்தை இழந்து விடுகிறோம் .

 அதேபோல், अतिथि देवो भव, நம் அதிதிகளை அன்புடன் வரவேற்க வேண்டும். மேலும்  अभ्यागतः स्वयं विष्णुः, ஒரு பெரிய மனிதன் நம் வீட்டுக்கு அழைப்பு இல்லாமலே வந்தால், அதை நாம் பெரிய அதிர்ஷ்டமாக கருத வேண்டும். இவ்வாறு, நல்லதை செய்து விட்டு அதற்கான பெருமையை ஸ்வீகரிக்காமல், நாம் அடக்கத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

மேலும் நமக்கு யாரேனும் எப்பொழுதாவது உதவி செய்திருந்தால், அதை நாம் ஒருபொழுதும் மறக்கக்கூடாது. நமக்கு மற்றவர்கள் செய்த நன்மைகளை மறந்துவிடுவது பெரிய பாபம். कृतघ्ने नास्ति निष्कृतिः, அந்த பாவத்துக்கு பிராயச்சித்தம். கிடையாது.

பகவத் கிருபைதான் நமக்கு ஐஸ்வர்யத்தை கொடுக்கிறது. அதை பகவத் சேவைக்கும் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதற்கும் உபயோகப்படுத்துவது அதி உசிதம்.  மாறாக கர்வத்தை வளர்த்து நம் ஆஸ்திகளை துஷ்பிரயோகம் செய்வது முட்டாள்தனம். பணக்காரனாக இருந்தாலும் ஒருவன் கர்வத்தை தவிர்த்து நல் முறையில் நடந்து கொள்ள வேண்டும். 

ஒரு பொழுதும் மற்றவர்களுக்கு கெடுதல் செய்யக்கூடாது. மற்றவர்களைப் பற்றி மதிப்புக்குறைவான பேச்சுக்களை பேசி அவர்களை மனம் நோகச் செய்யக் கூடாது. நாம் மற்றவர்களை பற்றி எப்பொழுதும் நல்லதாகவே பேசவேண்டும், ஒருபொழுதும் கெடுதலாக பேசக்கூடாது. 

நல்ல வாழ்க்கையை நடத்துவதில் தீவிரமாக உள்ள ஒருவன் நமக்கு பெரியோர்கள் எடுத்துக் காட்டியிருக்கும் நல்ல வழிகளை பின்பற்றி நடந்து கொள்வது மிகவும் நல்லது

Vidura neethi part17

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

*விதுர நீதி 17*

*விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்*

தர்மபடி தான் நீதி சொல்ல வேண்டும், உறவாக இருந்தாலும் நீதியையே சொல்ல வேண்டும். - விதுர நீதி தொடர்ச்சி

மகாபாரத்தில் அரிய பல கருத்துக்கள் சொல்லப் பட்டுள்ளன. அதில் நாம் விதுர நீதியைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து நீ சுவராஸ்யமான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிராயே நன்மை தரும் பல விஷயங்களை மேலே சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

விதுரர் தொடர்கிறார். திருதராஷ்டிரா எல்லா ஜீவ ராசிகளிடம் நேர்மை யாக நடந்துக் கொண்டாலே சகல தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். எனவே எப்போதும் நியாமாக நடந்து கொள் என்று கூறுகிறார். மேலும் உதராணமாக பிரகலாதன் எப்படி நியாமாக நடந்து கொண்டான் என்பது பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேள் என்று ஒரு கதையை  ஆரம்பிக்கிறார்.

பிரகலாதனுக்கு விரோச்சணன் என்று ஒரு மகன் இருந்தான். (பிரகலாதன் தந்தை ஹிரண்ய கசிபு,  பிரகலாதன் மகன் விரோச்சணன் மற்றும் விரோச்சணன் மகன் மகாபலி ஆவார்கள். ) பிரகலாதனுக்கு வயதாகிற்று. விரோச்சணன் வாலிபத்தை அடைந்தான். அப்போது சுதன்வா என்ற பிரமாணனும் அந்த ராஜ்யத்தில் இருந்தான்.  அங்கு கேசினி என்ற அழகிய பெண்ணும் இருந்தாள். கேசினியை மணக்க விரோச்சணனும் சுதன்வாவும் ஆசைப் பட்டார்கள். எனவே கேசினிக்கு குழப்பம் ஆயிற்று.  எனவே இரண்டு பேரில்  ஒருவனை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தாள். கேசினியை விரோச்சணன் சந்தித்தான். நாங்கள் தேவர்கள், பிராமணர்கள்  மற்றும் அனைவரையும் வென்றாயிற்று. நான்தான் சுதன்வாவை விட உயர்ந்தவன்.   என்னை மணந்து கொள் என்று கேட்டுக் கொண்டான்.

கேசிநியோ உனக்கு மட்டும் தான் என்னை மணக்க தகுதியோ! சுதன்வாவுக்கு ஏன் தகுதி கிடையாது.  நாளை இரண்டு பேரும் வாருங்கள் நான் எனக்கு பிடித்தமானவரை தேர்ந்தெடுக்கிறேன்  என்று கூறினாள்.

மறு நாள் விரோச்சணன் முதலில் வந்தான். கேசினியின் அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். பிறகு சுதன்வா அங்கு வந்தான்.  கேசினி சுதன்வாவை  நமஸ்கரித்தாள். அவனுக்கு தர வேண்டிய மரியாதையை தந்தாள். பிறகு விரோச்சணன் சுதன்வாவைப்  பார்த்து நீயும்  இங்கு அமர்ந்து கொள் என்று கூறினான். சுதன்வாவோ  தகப்பனார் பக்கத்தில் பிள்ளை அமர்ந்து கொள்ளலாம். ஒரு சத்திரியன் அருகில் மற்றொரு சத்திரியன் அமர்ந்து கொள்ளலாம். ஒரு பிராமணன் அருகில் மற்றொரு பிராமணன் அமர்ந்து கொள்ளலாம். ஒரு உயர்ந்தவன் ஒருகில் மற்றொரு உயர்ந்தவன் அமர்ந்து கொள்ளலாம். நான் உனது அருகில் அமர மாட்டேன் என்று கூறினான். அதற்கு  விரோச்சணன் ஆமாம் நீ கீழேயே தர்ப்பத்தை விரித்து அமர்ந்து கொள் என்று கேலி செய்தான்.

அதற்கு சுதன்வா விரோச்சனனைப் பார்த்து நான் உன்னவிட உயர்ந்தவன். நான் உட்கார்ந்திருந்தால் உனது தந்தை எனக்கு சமமாக உட்காரமாட்டார். எனவே நான்தான் உயர்ந்தவன் என்று கூறினான். இரண்டு பேருக்கும் யார் உயர்ந்தவர் என்ற போட்டி உண்டாயிற்று. விரோச்சணன் என்னிடம் உள்ள சொத்து அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன், நீ உயர்ந்தவன் என்று தெரிந்தால் அத்தனையையும் கொடுத்து விடுகிறேன் என்று கூறினான். அதற்கு சுதன்வா,  வேண்டும் என்றால் உயிரை பணயமாக வைப்போம் மற்ற எந்த சொத்தும் எனக்கு தேவை இல்லை என்று கூறினான்.

இருவருக்கும் நீதியை சொல்ல ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமே. எனவே சுதன்வா விரோச்சனனைப் பார்த்து இந்த தேசத்து ராஜாவும்  உனது தந்தையும்  ஆகிய பிரகலாதனுக்கு அந்த தகுதி இருக்கிறது. அவர் நியாயத்தை சரியாக சொல்வார். அவரிடம் செல்வோம் என்று கூறினான். விரோச்சணனும் ஒத்துக் கொண்டு பிரகலாதனிடம் செல்ல முடிவு செய்தனர்.

இருவரும் ராஜாவிடத்தில் சென்றார்கள். இருவரும் சேர்ந்து வருவதை பார்த்து விரோச்சனிடம்,  சுதன்வா உனக்கு நண்பனா என்று கேட்டார். அதற்கு விரோச்சணன் நாங்கள் இருவரும் நேர் விரோதம் கொண்டவர்கள் யார் உயர்ந்தவர் என்று தெரிந்து கொள்ள வந்துள்ளோம் என்று கூறினான்.  ராஜாவும் நடந்ததை கேட்டு உயிரைப் பணயமாக வைத்துள்ளதுப் பற்றியும் அறிந்துக் கொண்டார்.  பிறகு ராஜா சுதன்வாவை  நமஸ்கரித்து பருத்த வெள்ளைப் பசுவை தானமாக கொடுத்தார்.

சுதன்வா, இந்த தானத்தை விட உன்னிடம் சத்யத்தை எதிர்ப் பார்க்கிறேன். எனவே சத்யத்தை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ராஜாவோ நீ பிரம்மத் ஞாநி  அவனோ எனது பிள்ளை,  நான் என்ன கூற வேண்டும் என்று சுதன்வாவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார். சுதன்வா உனது சொத்தையும் ராஜ்யத்தையும் உனது மகனுக்கு கொடு. நீ சத்யத்தை மட்டும் சொல்.  எங்களில் யார் உயர்ந்தவர் என்று கூறு என்று கேட்டுக் கொண்டான்.

ராஜா இந்த தர்ம சங்கடாமான சூழ்நிலையில் நான் பொய் சொல்லிவிட்டால் என்ன ஆகும் என்று கூறு என்று கேட்டுக் கொண்டார். சுதன்வா பொய் சொல்பவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றி கூறினான்.

நீ ஒரு வேளை பொய் சொல்லிவிட்டால் -

1.  அக்னி முன்பு கை பிடித்த மனைவியை வேறு பெண்ணிற்க்காக கை விட்டு விட்டால் முதல் மனைவிக்கு ஏற்படும் துன்பத்தை அனுபவிப்பாய்.

2.  சூதாட்டத்தில் மொத்த சொத்தையும் இழந்து விட்டவன் எவ்வாறு தவிப்பானோ அவ்வாறு தவிப்பாய்.

3.  தலை முழுக்க அதிக பாரத்தை ஏற்றி விட்டு அவனை வெய்யிலில் விட்டால் அவன் எவ்வாறு தவிப்பானோ அவ்வாறு தவிப்பாய். 

மேலும் பொய் சொல்பவர்கள்  என்ன தண்டனைக்கு உள்ளாவர்கள் என்றும் சுதன்வா கூறினான்.

1.  பிராநிக்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் ஐந்து தலை முறை கெட்டுப் போவான்.

2. பசுவுக்காக பொய் சொன்னால் அவன்  பத்து தலை முறை கெட்டுப் போவான்.

3. ஒருவன் குதிரைக்காக பொய் சொன்னால் அவன் நூறு தலை முறை கெட்டுப் போவான்.

4. ஒருவன் ஒரு பெண் விஷயத்திற்காக பொய் சொன்னால் அவன் ஆயிரம் ஜென்மம் கெட்டுப் போவான்.

5.தங்கத்திற்காக
 ஒருவன் பொய் சொன்னால் அவன் ஒரு தலை முறை முன்பும் ஒரு தலை முறை பின்பும் கெட்டுப் போவான்.

ஆனால் பூமிக்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் எத்தனை தலை முறை உண்டோ அதனை தலை முறையும் கெட்டுப் போவன்.  கேசினி பூமிக்கு சமம். அவள் விஷயத்தில் பொய் சொல்லக் கூடாது. எனவே எங்களில் யார் உயர்ந்தவர் என்று சரியாக சொல் என்று கேட்டுக் கொண்டான்.

பிரகலாதன் நறுக்கு தெரித்தார் போல தனது தீர்ப்பை சொன்னார் தனது மகனைப் பார்த்து. சுதன்வா தந்தை உனது தந்தையை விட உயர்ந்தவர். சுதன்வா தாய்  உனது தாயை விட உயர்ந்தவர்.  விரோச்ச்சனா நீ அகங்காரம்  கொண்டு உள்ளாய்.    உன்னைவிட சுதன்வாவே உயர்ந்தவன் என்று கூறி முடித்தார்.   பிறகு சுதன்வாவை  நமஸ்கரித்து எனது மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடு என்றும் கேட்டுக் கொண்டார்.

சுதன்வா எனக்கு உனது மகனின் உயிர் வேண்டாம்.  கேசினியும்  எனக்கு வேண்டாம். நீ சத்யம் தவறாது பேசினாயே அது போதும் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். இவ்வாறு கதையை முடித்து விட்டு விதுரர் அமைதி காத்தார். பிறகு பாண்டவர்களுக்கு சேர வேண்டிய ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்துவிடு என்று திருதராஷ்டிரனிடம் கூறினார்.

திருதராஷ்டிரனோ கேட்பதாக இல்லை. மேலும் தனது உரையை விதுரர் தொடர்ந்தார். மேற்கொண்டு என்ன தெரிவித்தார் என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏

Monday, November 27, 2023

Remove I then God will reside in you - Story

*ஆண்டவன் தங்கும் இடம் எது?*

கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான்...
 வீதியெங்கும் அலங்கார  வளைவுகள்...
 பூரணகும்பம் கொண்டு வரவேற்பு...
 
 பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான்...
 
 கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!!
 
 கண்ணன் கேட்கிறான்: "பச்சை வர்ணம் பூசப்பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே..! அது யாருடைய வீடு?''
 
 "அச்சுதா அது என்னுடைய வீடு" துரோணர் சொல்கிறார்.
 
 கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"
 
 கிருபர்:  ''மாதவா! அது என்னுடைய வீடு.''
 
 கண்ணன்: "மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"
 
 பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"
 
 கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"
 
 அஸ்வத்தாமன்:  "ரிஷிகேசா.. அது என்னுடைய வீடு''
 
 கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப் பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் பரம சாத்வீகம் பொருந்தி நிற்கிறதே...! அது யாருடைய வீடு?"
 
 *விதுரர்: "கண்ணா.. அது உன்னுடைய வீடு!"*
 
 கண்ணன்:  "என்னுடைய வீடா? இந்த அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று எண்ணியிருந்தேன்... இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது நான் பிறர் வீட்டில் தங்குவதா?''
 
 பீஷ்மர், கிருபர் யாவரும் அவரவர் வீட்டுக்கு கண்ணனை அழைத்தனர்.
 
 ''நான் என் வீட்டிற்கு போகிறேன்.'' - என்று சொல்லிவிட்டு விதுரர் வீட்டிற்குள் நுழைந்தான் கண்ணன்.
 
 எல்லாமே இறைவனுடையது என்கிற அர்ப்பண உணர்வுடையவரையே கடவுள் விரும்புகிறார்...
 
 *'யான்' "என்னுடையது என்னும் செருக்கை அறுப்பவனின் உள்ளத்தில்தான் ஆண்டவன் இருப்பான்!"*

படித்ததில் பிடித்தது 
பகிரவும்

Why we have to eat?

*अवश्यमेव भोक्तव्यं कृतं कर्म शुभाशुभम् ।*

- ब्रह्मवैवर्तपुराणम् १.४४.७४

अपने हर शुभ और अशुभ कर्म को भुगतना ही पड़ता है। 

We Have To Endure Our Every Good Or Bad Karma.


Greatness of Tulasi

பிருந்தாவன துளசி பூஜை

 பிருந்தா, பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா, விஸ்வபாவனி, 
புஷ்பஸாரா, நந்தினீ, துளசீ, கிருஷ்ண ஜீவனி,
ஏதந் நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம் நாமார்த்த ஸம்யுதம் 
ய: படேத் தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத்..

மஹா விஷ்ணு புகழ்ந்து போற்றிய இந்த துதியின் எட்டு நாமங்களும் 
காரண பெயர்கள் ஆகையால் இதை மனனம் செய்வோர் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.

துளசி ஒரிடத்தில் மிக நெருங்கி அடர்ந்து இருப்பதால் அவளை பிருந்தை என்று போற்றுகிறோம்..!

பிருந்தாவனம் தோறும் இருந்து பிருந்தாவனீ என்ற பெயர் பெற்றாள். 

அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என்ற பெயர் பெற்றாள். 

எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாக்கி விஸ்வபாவனீ என்ற பெயர் பெற்றாள்.

மலர்களின் மீது ப்ரீதி உள்ள தேவர்களும் அவைகளால் ஆன்ந்தமடையாமல் துளசியாலேயே ஆனந்த மடைந்ததால் புஷ்ப ஸாரா என்ற பெயர் பெற்றாள். 

அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையினால் நந்தினீ என்ற பெயர். பெற்ற துளசி. க்ருஷ்ணனால் உருக்கொன்டு வாழ்வதால் க்ருஷ்ண ஜீவனி என்ற பெயர். பெற்றவள்.

துளசியின் தோத்திரம் புனிதம் மிக்கது.

மஹா விஷ்ணுவின் மனைவி பகவானின் அம்சம் நிறைந்த துளசி செடி.
பிருந்தையாகிய துளசி மஹா விஷ்ணுவை மணந்து கொன்ட நாள் . ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசி திதி. ப்ருந்தாவன த்வாதசி என்று போற்றப்படுகிறது..!.

துளசி செடியை ஒரு மேடையில் அல்லது பூந்தொட்டியில் வைத்து ப்ருந்தாவனம் என்று வணங்குவோம்..!

துளசி செடியில் துளசி தேவியையும் பக்கத்தில் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி மர குச்சியையோ வைத்து அதில் மஹா விஷ்ணுவை ஆவாஹனம் செய்து துளசி அமைந்துள்ள இடத்திற்கு ( பிருந்தாவனத்திற்கு) அருகில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து பூஜை செய்வது விஷேசம்..!

 பக்தியுடன் துளஸியை பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி, ஒற்றுமை, ,குடும்பத்தில் அமைதி, லக்ஷிமி கடக்ஷம், வம்சம் தழைக்கும்.உடல் வலிமை, மனோ தைர்யம் உண்டாகும்.நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும்.,

பூஜை செய்யும் துளசி செடியிலிருந்து துளசி பறிக்க கூடாது. 
வேறு துளசி செடியிலிருந்து தான் துளசி பறிக்க வேண்டும்..

ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம்
புஷ்பாஞ்சலி ப்ரதானேன தேஹி மே பக்தவத்ஸலே.

இல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம். 

துளசியின் மஞ்சரியை ஸ்ரீகிருஷ்ணருக்குச் சமர்ப்பிப்பவர் எல்லா 
விதப் பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள்

துளசி இலை, ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்தப் பூஜையின் பலன் கிடைப்பதில்லை. 

 நிவேதனத்தின் போது துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார். 

ஆகவே, துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.

துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சிப்பவர், தம் முன்னோர்களையும் பிறவித்தளையில் இருந்து விடுவிக்கிறார். 

துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகிறது. 

எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.

அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாகியது. இல்லத்தில் வசிப்பவர்களுக்கு யம பயம் கிடையாது. துளசியை வளர்த்து, தரிசித்து, பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.

துளசியைப் பூஜிப்பது, கங்கா ஸ்நானத்திற்குச் சமமான பலனைக் கொடுக்கும்.

துளசி மணிமாலை அணிவது உடலை நோய்கள் அண்டாது காக்கும். 

துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜபம் பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.

மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், 
துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரணப் பலன் கிடைக்கிறது. 

தானங்கள் செய்யும் போது முழுமையான பலன், தானம் செய்யும் பொருளுடன் துளசித் தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது.

சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும். 

கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை `பிருந்தாவன துவாதசி' என கர்நாடக, மராட்டிய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள். 

அன்றுதான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.

நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.

 நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம். 

எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து,

துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும். வலம் வரும் போது

"பிரசீத துளசி தேவி பிரசீத ஹரி வல்லயே
க்ஷீ ரோதமத நோத்புதே துளசி த்வாம் நமாம்யகம்''

என்ற மந்திரம் சொல்ல வேண்டும்.

harivarasanam meaning in Tamil

ஹரிவராசனம் அஷ்டகம் - பொருளுடன்

🍁ஹரிவராஸனம் விஸ்வமோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( சிறந்த சிங்கத்தை வாகனமாக கொண்டவனும்
தனது அழகால் உலகத்தில் உள்ளவர்களை மயக்குபவனும் தேவர்களால் ஆராதிக்கப்படுகின்ற திருவடிகளை உடையவனும் எதிரிகளை அழிப்பவனும் தினமும் நர்த்தனம் செய்வதில் விருப்பமுடையவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁ஸரணகீர்த்தனம் ஸக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( சரணம் அய்யப்பா என்று எவர் அழைக்கின்றனரோ அவர்களின் மனதை தன் இருப்பிடமாக கொண்டவனும் தன்னை அண்டிய அடியவர்களைக் காப்பதில் விருப்பம் கொண்டவனும் ஆலயத்தில் ஆடுபவனும் சிவந்த நிறத்தால் ஒளிவீசுபவனும் பூதகணங்களின் தலைவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்ஜிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( உண்மையான அன்பிற்கு கட்டுப்பட்டவனும் எம் உடலில் உள்ள பிராணவாயுக்கு தலைவனும்
தன்னை அடிபணிந்தவர்களின் விருப்பங்களைக் கற்பகத்தரு போன்று நிறைவேற்றுபவனும் ஒளிப்பிழம்பால் சூழப்பட்டவனும் ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தை ஓதும் அடியார்களிடம் அன்பு கொண்டவனும் அடியார்கள் செய்யும் துதி மொழிகளில் நாட்டமுடைய மனதை கொண்டவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁துரகவாஹனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிவராத்மஜம் தேவமாஸ்ரயே

( குதிரையை வாகனமாகக் கொண்டவனும் அழகு பொருந்திய முகத்தைக் கொண்டவனும் சிறந்த கதாயுதத்தைக் கையில் ஏந்தியவனும் தேவர்களால் துதிக்கப்படுபவனும் அடியவர்களுக்கு அளவில்லாத கருணையைப் பொழிகின்றவனும் தன்னை துதிப்பவர்களிடம் அன்பு கொண்டவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம்ப்ரபும் திவ்யதேஸிகம்
த்ரிதசபூஜிதம் ஸிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( மூன்று உலகங்களிலும் வழிபடுகின்ற பேறு பெற்றவனும் அனைத்து தேவர்களின் வடிவினைக் கொண்டவனும் மூன்று கண்களுடன் கூடிய தலைவனும் தலைசிறந்த குருவின் வடிவானவனும் அமரர்களால் அர்ச்சிக்கப்படுபவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁பவபயாபஹம் பாவுகாவகம்
புவனமோஹனம் பூதிபூஷணம்
தவளவாரணம் திவ்யவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( உலகத்தில் உள்ள சம்சார இன்னல்களை அழிப்பவனும் புனிதத்தன்மையை தோற்றுவிப்பவனும் தனது சௌந்தர்யத்தால் உலகை மயக்குபவனும் திருநீற்றை அணிந்தவனும் வானுலகத்து வெள்ளை வாரணத்தை வாகனமாக கொண்டவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁களம்ருதுஸ்மிகம் ஸுந்தரானனம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேஸரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( முகத்தில் எப்பொழுதும் புன்முறுவல் கொண்டவனும் அழகிய வதனம் கொண்டவனும் செஞ்சந்தனத்தை உடல் முழுவதும் பூசியிருப்பவனும் அனைவரையும் தன் உடல் அழகால் கவர்பவனும் சிங்கம் ; யானை ; குதிரை; புலி இவைகளை வாகனமாக கொண்டவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁ஸ்ரிதஜனப்ரியம் ஸிந்திதப்ரதம்
ஸ்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ஸ்ருதிமனோஹரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( தன்னை அண்டிய அடியவர்களிடம் அளவற்ற அன்பு கொண்டவனும் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பவனும் வேதங்களில் வர்ணிக்கப்படுபவனும் சான்றோர்களுக்கு நல்வாழ்க்கையை நல்குபவனும் செவிக்கு இனிமை வாய்ந்த பாடல்களால் துதிக்கப்படுபவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

Saturday, November 25, 2023

Vidura neethi part15

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

*விதுர_நீதி_15*

*விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்*

*சிறந்த ஆசிரியன் எப்படி இருக்க வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி*

மஹா பாரதத்தில் நமக்கு வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் உத்தியோக பர்வத்தில் உள்ள விதுர நீதியை பற்றி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருதராஷ்டிரனுக்கு விதுரர் உபதேசித்தது நமக்கு இன்றும் உபயோகமுள்ளது ஆகும். மேற்கொண்டு சிறந்த ஆசிரியனாக விளங்க கீழ்க் கண்ட குணங்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். (விதுர நீதியில் இதுவரை சொல்லப்பட்டதை பழைய பதிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளவும்.)

1. யார் ஒருவன் அடங்கிப் போன சண்டையை மூட்டிவிடாமல் இருப்பானோ அவன் சிறந்த ஆசிரியன். -

இந்த காலத்தில் நமது பகையை மறந்து இருக்கும்போது நமக்கு அதை நினைவூட்டி பகையை ஞாபகமூட்டி சண்டையை மூட்டி விடுபவர்களே அதிகம் இருக்கிறார்கள். நாம்தான் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டும்.

2. யாரிடம் கர்வம் இல்லையோ அவன் சிறந்த ஆசிரியன் -

 ஆசிரியனிடம் கர்வம் சிறிதளவும் இருக்கக் கூடாது. எல்லாம் தெரிந்திருப்பதால்தான் அவன் ஆசிரியன் ஆவான். தனக்கு தெரிந்து இருப்பதை கர்வமாக நினைப்பவன் சிறந்த ஆசிரியன் ஆக மாட்டான்.

3. தனது வறிய நிலையை சொல்லாதவனே சிறந்த ஆசிரியன் -  

ஆசிரியன் தனது கஷ்டத்தப் பற்றி மாணவர்களிடம் சொல்லக் கூடாது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கொடது. இந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம் இருந்தாலும் அவர்கள் இன்னும் கிடைக்கவேண்டும் என்று நினைத்தால் அதை வறிய நிலை என்று எடுத்துக் கொள்ளலாம்.

4. எந்த துன்பத்தில் இருந்தாலும் செய்ய கூடாத காரியத்தை செய்யாதவனே சிறந்த ஆசிரியன். - 

ஆசிரியன் மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். தனக்கு எதாவது கஷ்டம் வந்தால் அதிலிருந்து தப்பிக்க எந்த கெட்ட காரியத்தையும் செய்து விடக் கூடாது. பகவான் நம்மை சோதிக்கலாம். நாம்தான் மன தைரியத்துடன் எந்த கஷ்டத்தையும் தாங்கிக்கொள்பவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய குணங்களை விதுர நீதியில் கூறியுள்ளார். மேற்கொண்டு என்ன சொன்னார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏

Friday, November 24, 2023

Why sandhyavandanam part2

தொடர்- 6
*கணபதி தியானம் :-*
"சுக்லாம் பரதரம்" என்று தொடங்கும் மந்திரத்தை சொல்லி மகா கணபதியை தியானித்து சிரசில் உள்ள அமிர்தம் எல்லா நாடிகளிலும் இறங்கி பாய்வதாக எண்ணி *சிரத்தின் இரு புறமும் முஷ்டிகளால் ஐந்து முறை மெதுவாக குட்டிக் கொள்ளவேண்டும்*. தலையில் குட்டிக்கொள்வது கணபதி ஆராதனையில் விசேஷமான அம்சம்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
 சசிவர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
 ஸர்வ விக்நோப சாந்தயே !!
*எங்கும் நிறைந்தவரும் அன்பர்க்கு உகந்த வடிவம் ஏற்பவரும் வெண்மையான ஆடை உடுத்தியவரும் நிலவு போன்ற ஒளியுள்ளவரும் நான்கு கைகளுள்ளவரும் ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக த்யானம் செய்யவேண்டும்.*
*பிராணாயாமம் :-*
அஷ்டாங்க யோகத்தில் இதனை பதஞ்சலி முனிவர் நான்காவது அத்யாயத்தில் அமைத்துள்ளார். மனித உடல் செம்மையாக இயங்க மனித உடலில் 108 இடங்களில்
உயிர்க்காற்று நின்று இயங்குகின்றது இதுவே உயிர்நிலை ஓட்டம் என அழைக்கப்படுகிறது மனித உடலில் உள்ள 10 வாயுக்கள் மேற்சொன்ன 108 மையங்களில் உள்ள உயிர்க்காற்றை இயக்குவதாக சித்தர்கள் கண்டு பிடித்துள்ளனர். சித்தர்களின் கணக்குப்படி முன்சொன்ன 108 இடங்களில் உள்ள அகப்பிராணனை இந்த தச வாயுக்களும் எவ்வாறு இயக்குகின்றது என்பதே பிராணாயாமத்தின் உட்பொருள்.
சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. *12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும்* என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.
இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் . எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைக்கப்படுகறது.
வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும்.
எனவே இதை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைக்கப்படுகிறது.
இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைக்கப்படுகிறது.
*பிராணாயாமத்தில் மூன்று வகை செயல்பாடுகள் உண்டு.*
*ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் மடக்கி கட்டை விரல் பவித்திர விரல்களால் மூக்கை இருபுறமும் தொட்டுக்கொண்டு வலப்புறம் அழுத்தி இடதுபக்கம் மெதுவாக மூச்சை இழுத்து பின் இருபுறமும் அழுத்தி மூச்சை நிறுத்தி முடிவில் வலது பக்கம் மெதுவாக மூச்சை விட வேண்டும்*.
*இதில்
இழுப்பது பூரகம்
நிறுத்துவதே கும்பகம்
விடுவது ரேசகம்*.
பூரக கும்பக ரே சக மூன்றும் சேர்ந்தது ஒரு பிராணாயாமம். *இதன் கால அளவு 1:3:2 என்ற விகிதத்தில் இருத்தல் சிறந்தது.*
"ஓம் பூ: ஓம் புவ: ஓ৺ம் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓ৺ம் சத்யம்
ஓம் தத்சவிதுர்வரேண்யம் |  பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: பரசொதயாத் ॥"
என்ற மந்திரத்தை ஸ்மரித்துக் கொண்டு பிராணாயாமம் செய்ய வேண்டும்.
ஓங்காரமே பூலோகம், ஓங்காரமே புவர்லோகம், ஓங்காரமே சுவர்லோகம், ஓங்காரமே மஹர்லோகம், ஓங்காரமே ஜனலோகம், ஓங்காரமே தபோலோகம், ஓங்காரமே சத்தியலோகம், ஓங்கார பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை த்யானிப்போம். ஓங்காரமே ஜலமும் ஒளியும் ரசம் பொருந்திய அனைத்தையளிக்கும் பூமியும், உயிருக்கு ஆதாரமான வாயுவும், எங்கும் பரந்த ஆகாசமும், பூ: புவ: சுவ: என்ற வ்யாஹ்ருதீகள் குறிப்பிடும் மனம் புத்தி அஹங்காரம் என்ற தத்துவங்களாக குறிப்பிடப்படுகிறது
*தொடர்-7*
சங்கல்பம்:-
பிராணாயாமத்திற்கு பிறகு ஸங்கல்பம் செய்து தான் எந்தக் கர்மத்தையும் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஸங்கல்பத்தில் இடது கை கீழும் வலது கை  மேலுமாக வலது தொடை மீது வைத்துக் கொள்ள வேண்டும்.
*"ஸங்கல்போ வாவ மனசோ பூயான் யதாவை ஸங்கல்பயதே அத மனஸ்யதி,அதவாசமீரயதி,  தாமுநாம்னீரயதி,  நாம்னி மந்த்ரா ஏகம் பவதி, மந்த்ரேஷு கர்மாணி*,
      *--- உபநிஷத்*
சங்கல்பம் மனதிலும் பெரியது. எப்போது ஒருவன் சங்கல்பிக்கிறானோ அப்போது தெளிவாக சிந்தித்து தீர்மானிக்கிறான். தீர்மானத்தை பேச ஆரம்பிக்கிறான், பேச்சு பெயர் வடிவாகிறது , பெயர் வடிவில் மந்திரங்கள் ஒடுங்குகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்குகின்றன.
யஜுர் வேதம் :-
மமோபாத்த ஸமஸ்த்த துரித க்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத சந்த்யாமுபாசிஷ்யே ||
(மாத்யானிகம் கரிஷ்யே ||) (சாயம் சந்த்யாமுபாசிஷ்யே ||
பொழிப்புரை: என்னால் செய்யப்பட்ட பாவங்களை நசிக்க செய்வதன் மூலம் ஈஸ்வரனின் அருளுக்கு பாத்திரமாகும் பொருட்டு காலையில் (நடுப்பகலில்; மாலையில்) சந்த்யா தேவியை உபாசிக்க ஆரம்பிக்கிறேன் ..
வைஷ்ணவ சம்பிரதாயம் :-
மமோபாத்த ஸமஸ்த (ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்யம் என்று தென்கலையாரும், ஸ்ரீபகவதாக்ஞயயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் என்று வடகலையாரும்) துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (காலையில்) ப்ராதஸ்ஸந்த்யாம் உபாஸிஷ்யே என்றும் (மத்தியானத்தில்) மாத்யாஹ்னிகம் கரிஷ்யே என்றும் (சாயங்காலத்தில்) ஸாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்யே, என்றும் சங்கல்பம் செய்த பின் ஓம் என்று பவித்ரவிரலால் ஜலத்தில் எழுதி ஸ்ரீ கேசவாய நம: என்று நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளவும்.
தொடர்-10
*புனர்மார்ஜனம் :-*

ப்ரயோகம்- முதலில் ததிக்ராவ்ண்ண மந்திரங்களாலும் ,பின்னர் ஆபோஹிஷ்டா தொடங்கி 7 மந்திரங்களாலும் பவித்ர  விரலால் ப்ரோக்ஷித்து கொண்டு, "யஸ்ய க்ஷயாய ஜிந்வத: என்ற மந்திரத்தால்  பாதங்களை தொட்டு
ஆபோ ஜநயதா ச ந:" என்ற மந்திரத்தால் ஆத்ம பரிஷேஷனம் செய்து கொள்ள வேண்டும்.

"ததிக்ராவ்ண இதி மந்த்ரஸ்ய வாமதேவ ரிஷி: அனுஷ்டுப் ச்சந்த:
ததிக்ராவா தேவதா ப்ரோக்ஷணே வினியோக:"

ததிக்ராவ்ண்ண மந்திரத்திற்கு வாமதேவர் ரிஷி. அனுஷ்டுப் சந்தஸ்.
ததி க்ராவா என்பது தேவதை. ப்ரோக்ஷணத்தால் இந்த மந்திரம் வினியோகிக்கப் படுகிறது.

"ததிக்ராவிண்ணோ அகாரிஷம் | ஜிஷ்ணோரஶ்வஸ்ய வாஜிந: |
ஸுரபிநோ முகாகரத் ப்ரண ஆயூகும்ஷி தாரிஷத் |"

--------தைத்ரிய ஸம்ஹிதை.

ஜயசீலரும், ஜகத்வ்யாபியும், அன்னமுள்லவரும் ஆகிய ததிக்ராவா எனும் தேவதைக்கு ஸ்திதிகளைச் செய்கிறோம். அவர் எங்கள் முகத்தை வாஸனையுள்ளதாக செய்யட்டும். வாழ்க்கையும் உபத்ரவமில்லாமல் நடத்தப் படட்டும். தீர்க்காயுஸ் உள்ளதாகச் செய்யட்டும்.

"ஆபோஹிஷ்டா மயோ புவ: | தாந ஊர்ஜே ததாதந | மஹேரணாய சக்ஷஸே | யோ வ: ஶிவதமோ ரஸ: | தஸ்ய பாஜயதேஹ ந: | உஶதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாமவ: |
யஸ்ய க்ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:"

(ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:)
ஓ ஜலதேவதையே ! தாங்கள் இன்பத்தைத் தருவதாக இருக்கிறீர். அப்படி இன்பம் தரும் நீர் எங்களுக்கு அதிகமாகவும் ப்ரகாஸமாகவும் இருக்கின்ற அறிவு உண்டாவதற்காக அன்ன ரஸத்தை அளியும். ! உம்மிடம் எந்த ரஸம் மிகச்சிறந்ததாக இருக்கிறதோ அந்த ரஸத்தை அன்புள்ள தாய் மகனுக்கு அளிப்பதுபோல் எங்களுக்கு அளியும். அந்த ரஸமானது ஸ்திரமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அந்த ரஸத்தைப் பெறுவதற்காக உங்களை விரைவாக வந்தடைகிறோம். ஓ ஜலதேவதையே ! எங்களை நல்ல பிறப்புள்ளவர்களாகச் செய்யும். !

தொடரும்.....

Vidura neethi part14

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

*விதுரநீதி_14*

*விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்*

*இந்த பத்து பேர்களை தள்ளி வைக்க வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி*

மஹா பாரதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன. ராமாயணம் மற்றும் மஹா பாரதத்தை நாம் இரண்டு இதிகாசங்களாக ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆதமாவிர்க்கு நன்மை பயப்பதாய் சத் விஷயங்களை காட்டி கொடுப்பதாக மஹா பாரதம் விளங்குகிறது. அது பெரியதாக இருப்பதாலும் உயர்ந்ததாக இருப்பதாலும் தான் அது மகாபாரதம் என்று அழைக்கப்படுகிறது. இதை தினமும் ஒரு சிறு பகுதியாவது நாம் படித்தால் நமக்கு நன்மைகள் பல கிட்டும். நாம் நமது பிறவிப் பயனைப் பெற்று பிரம்மத்தை அடைவோம் என்பது நிச்சயம்.

விதுரர் தொடர்ந்து செய்த போதனைகளை மேற்கொண்டு பார்ப்போம். கீழ்க் கண்ட பத்து பேர்களை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்கிறார்:

1. கள் குடித்து போதையில் வெறி பிடித்தவன்.

2. எதையுமே கவனமின்மையால் தப்பு தப்பாகவே செய்பவன்.

3. பைத்தியம் - இவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

4. களைத்தே காணப்படுபவன் - எந்த வேலை சொன்னாலும் கை சரியில்லை, கால் சரியில்லை என்று ஏதாவது காரணம் சொல்லுபவன். இவனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

5. கோபப்படுபவன். - எதற்கெடுத்தாலும் கோபம் அடைவதால் எந்த நன்மையையும் கிடைக்காது. மூளைதான் மழுங்கிப் போகும்.

6. பெரும் பசியாளன் - எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன். இவனாலும் ஒரு நன்மையும் இல்லை.

7. பதட்டத்தில் அவசரமாக எந்த செயலையும் செய்பவன். இவன் செய்த வேலையில் சுத்தம் எப்போதுமே இருக்காது.

8. எதையும் யாருக்கும் கொடுக்காமல் தானே அனுபவிப்பவன். - இவனுக்கு பிறவி விமோசனமே கிடைக்காது.

9. எல்லாவற்றிற்கும் ஆசைப்படுபவன். - இவனது கவனம் ஏதாவது பொருட்களின் மீதே இருக்கும்.

10. எதற்கெடுத்தாலும் பயப்படுபவன். - எந்த செயலையும் செய்ய மாட்டான். பயந்து கொண்டே இருப்பான். இவனாலும் ஒரு பிரயோஜனமும் கிடையாது.

ஆக இந்த பத்து பேரையும் தள்ளி வைக்க வேண்டும் என்று விதுரர் கூறியுள்ளார். மேற்கொண்டு உபதேசித்ததை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்‌.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏

How to apply for Gita Gyana Yagna Sringeri Bhagavad gita examination?

Visit https://sringeri.net/activities/propagation-of-sanatana-dharma/gita-gyana-yajna

Download the pdf , fill it up with your photo & send it by post to the address given in the form. 

Form attached for your reference. 

Normally they were examining 6 persons per week.
You shall get an invitation normally in 18 months. 

 Due to overwhelming response, from my batch onwards they have started examining 12 persons per week.
So likely to get an invitation a little early also.

Namaskarams



Thursday, November 23, 2023

Why sandhyavandanam?

 *அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்:*
தொடர்:- 1
நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய கர்மாக்களை 
1. *நித்ய'* 
2. *நைமித்திக* 
3. *காம்ய*
என்று மூன்றாக பிரித்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
நாம் எந்த பிரதிபலனையும் விரும்பாமல் ஒரு கடமையின் பாவத்துடன் செய்யக்கூடிய கர்மங்கள்  "நித்ய கர்மா " எனப்படும்.இதை எல்லோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயம். '
ஒரு நிமித்தத்தை உத்தேசித்து செய்யக்கூடிய கர்மம் 'நைமித்யக' கர்மம் என்று கூறப்படுகிறது. இதில் தான் பித்ரு ஸ்ராத்தம் திருவாராதனம் ஆகியன அடங்கும்.
'காம்ய' கர்மம் மூன்றாவதாகும்.
அதாவது. ஹோமங்கள் யக்ஞங்கள் பரிகார பூஜைகள் என்பன
இதைச் செய்வதோ செய்யாமல் இருப்பதோ கர்த்தாவின் விருப்பம் ஆகும். நித்ய'கர்மாக்களின் வரிசையில் சந்தியாவந்தனம் அடங்கியுள்ளது.
ஸந்தி என்றால் இரவும்- அதிகாலையும் .,காலையும் மதியமும்., மாலையும் இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம்
அதாவது ஸந்தியாகாலம் என்பது அதிகாலை, மத்யான்னம் ஸாயங்காலம் என்னும் மூன்று காலங்கள் ஆகும்.
நித்ய கர்மாவில் அடங்கிய ஸந்தியாவந்தனத்தைச் செய்யாமல் இருந்தால் 'பாபபாக்' (பாபி) ஆகிவிடுவான் என தேவீபாகவதத்தில்  கூறப்படுகிறது
ஸந்தியாவந்தனம் செய்ய கற்றுக் கொண்டவன் துவிஜன் அல்லது இருபிறப்பாளர்  என்று அழைக்கப்படுகிறான். தர்ம சாஸ்திரங்கள் ,
*"ஜன்மனா  ஜாயதே சூத்ர: !*
*கர்மணா ஜாயதே த்விஜ: "*
அதாவது  பிறப்பால் எல்லோரும் சூத்திரர்களே என்றும் ஞானக்கண் திறக்கப் பெற்று பிரம்மார்ப்பணமாக கர்மானுஷ்டானம் செய்யத் தொடங்கிய பின்னரே "த்விஜன் " எனப்படுவர் என்கிறது.
*"ஸந்த்யாவிஹீநோ ஸுசிர்நித்யம் அநர்ஹ:* *சர்வகர்மஸு*
*யதன்யத் குருதே கர்ம ந தஸ்ய பலபாக்பவேத்"*
*ஸந்த்யாவந்தனம் செய்யாதவன் அபவித்ரன்.*
*அவர்கள் ஆன்மிக கர்மாக்களில் ஈடுபடத் தகுதியில்லை.* அவன் எந்த யாகத்தைச் செய்தாலும் அதன் பலனை அடையமாட்டான்.
பகவத் ஞானம் கிடைக்கவேண்டும் என்றால் நரஜன்மத்திலே பிறக்க வேண்டும்.
வேதாத்யயனம் மற்றும் ஸந்த்யா உபாசனைகளைச் செய்யாதவன் "த்விஜன்"அத இருபிறப்பாளன்  (இரண்டாவது முறை பிறந்தவன், முதலில் தாயின் வயிற்றிலிருந்து, இரண்டாவது முறையாக உபநயனம் செய்து கொண்டபொழுது) என்ற  தகுதியை இழக்கிறான்..
 *மூன்று காலங்களும் ஸந்தியாவந்தனம்  கட்டாயமாகச் செய்யவேண்டும்.*
மந்த்ரங்களை உச்சரிக்கும்பொழுது அதன் பொருளையும் கவனிக்க வேண்டும்.

சந்தியாவந்தனத்தில் தனக்கு சம்பவித்த வாசிக, மானஸிக, இராத்ரி சொப்பன இந்திரிய மூலமாக நித்தம் ஏற்படும் பாபங்கள் நாசமாகட்டும் என்ற ப்ரார்த்தனைகள் உள்ளது.
வைதிக தர்மத்தை அனுசரிப்பவர்களுக்கு வேதம் மிக முக்கியமானதாகும்.
வசிஷ்ட, வாமதேவ, ஆகிய ரிஷிகளின் முக கமலங்களிலிருந்து வேத மந்திரங்கள் வெளியே வந்ததால் மந்த்ரங்கள் மேலும் வலிமை கொண்டுள்ளன.
புதியதாக உபநயனமான வடுவை முதலாக கொண்டு மற்ற எல்லா ஆசிரமத்தினர்களுக்கும் சந்தியாவந்தனம் கண்டிப்பாக செய்யவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
"உத்யந்தமஸ்தம் யம்தமாதித்யம் அபித்யாயன் ப்ராம்ஹணோ வித்வான் ஸகலம் பத்ரமஸ்நுதே"

       -  ஸூத்ரம்
உதித்து வரும், அஸ்தமனமாகிற சூர்யனை யார் தியானிக்கிறாரோ அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் மங்களம் தான் உண்டாகும்.
ஒருவனின் தேஜஸ், பலம், ஆயுள் ஆகியவற்றுக்கு சூர்யன் தான் காரணம். 'வர்த்மாபுனர்ஜன்மனாம்' என்ற வராஹமிஹிரரின் சொல்லின்படி பரந்தாமத்தை நோக்கி செல்பவர்களுக்கு சூர்ய மண்டலம் தான் மார்க்கம்.
காலையில் சந்தியாவந்தனம் செய்ய உகந்த காலம் -
"உத்தமா தாரகோபேதா மத்யமா லுப்ததாரகா கநிஷ்டா ஸூர்ய சஹிதா ப்ராத: சந்த்யா த்ரிதாஸ்ம்ருதா"

   - ஸூத்ரம்
*அதிகாலையில் இரவில் தோன்றிய நட்சத்திரங்கள் வானில் இருக்கும் பொழுதே சந்தியாவந்தனம் செய்வது உத்தமம்*
*நட்சத்திரங்கள் மறைந்த பிறகு மத்யமம் ஆகும்*.
சூர்யன் உதயம் ஆனபிறகு  செய்யக்கூடிய சந்தியாவந்தனம் கநிஷ்டம்.
*மாத்யானிகம் செய்ய ஏற்ற காலம்*-
*சூரிய பகவான் நேர் உச்சி ஸ்தானத்திற்கு (அபிஜித் முகூர்த்தம்) வரும்போது செய்வது உத்தமம்.*
*சாயம் சந்தியாவந்தனம் செய்ய ஏற்ற காலம்-*
"உத்தமா ஸூர்யசஹிதா மத்யமாலுப்ததாரகா
கநிஷ்டா தாரகோபேதா ஸாயம் சந்த்யா த்ரிதா ஸ்ம்ருதா"
- ஸூத்ரம்.
*மாலையில் சூர்யன் இருக்கும் பொழுது செய்யக்கூடிய சந்தி உத்தமம்*.
*நட்சத்திரங்கள் வருவதற்கு முன்பு செய்வது மத்யமம்.*
*நட்சத்திரங்கள் வந்த பிறகு செய்வது கநிஷ்டம்*
தொடர் -4
*பிரம்மாவின் தியானத்தின் முதிர்ந்த பயனாய் தோன்றிய பரதேவதைக்கு சந்தியா என்று பெயர்* அவளை இருதய ஆகாசத்திலும் பேராகாசத்திலும் அன்றாடம் உதித்து அஸ்தமிக்கும் சூரியனிடத்திலும் வந்தனம் செய்வது சந்தியாவந்தனம்.
*"ப்ரஹ்மணோ த்யாயதோ யஸ்மாத் ஸம்யக் ஜாதா  வராங்கனா ! அத: ஸந்த்யேதி  லோகேஸ்மின் அஸ்யா: க்யாதிர்  பவிஷ்யதி !!"*
உபநயனம் செய்விக்கப்பட்ட த்விஜன் அல்லது இருபிறப்பாளன் என்பவர்கள் கண்டிப்பாக சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.
உபநயனம் எனப்படுவது இரண்டாவது பிறப்பின் வாயிலாக அமைகிறது.
"உப "என்றால் சமீபத்தில் என்று பொருள்படுகிறது. எதற்கு சமீபத்தில்? பிரம்மத்தின் சமீபத்தில் , "நயனம் " என்பதற்கு அழைத்துச் செல்லுதல் என்று பொருள். ஆகவே உபநயனம் எனும் சொல்லுக்கு ஆச்சாரியன் சிஷ்யனை பிரம்மத்திற்கு சமீபத்தில் அழைத்துச் செல்வது என்று பொருளாகும்.
பிராமணர்களும் ஷத்ரியர்கள் வைசியர்களும்  கர்ப்பத்திலிருந்து முறையே, 8,  12,  16 வயதுக்குள், காமம் மனத்தில் புகுமுன் உபநயன தீக்ஷை பெறவேண்டும் என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.
வாமன மூர்த்தியாக அவதரித்த பகவானுக்கு உபநயனம்" செய்வித்ததை  ஸ்ரீமத் பாகவதம் அழகாக வர்ணிக்கிறது.
*சூரியதேவன் காயத்ரி மந்திரத்தை வாமனருக்கு உபதேசித்தார்.*
*பிரகஸ்பதி தவத்தை காக்கும் யக்ஞோபவீதத்தை கொடுத்தார்.* பிரம்மச்சரியத்திற்கு ரக்ஷை போன்ற முஞ்சி" கயிற்றை கஸ்யபர் இடுப்பில் கட்டினார். ஆயுளை வளர்க்கும் மான் தோலை பூமிதேவி போர்த்தினாள். ஓஷதிகளின் பதியான சோமன் பலாச தண்டத்தை அளித்தார். தாயான அதிதி கெளபீனத்தையும், மேலுலக தேவதை குடையையும், பிரம்மா கமண்டலத்தையும் சப்தரிஷிகள் தர்ப்பையையும், சரஸ்வதி ஜெபமாலையையும், குபேரன் பிக்ஷை பாத்திரத்தையும் அளித்தனர். உமாதேவி பிக்ஷை இட்டாள். இவ்வாறு உபநயனம் செய்விக்கப்பட்ட வாமனர் பிரம்ம தேஜஸ்ஸுடன் பிரகாசித்தார். தக்க வயதில் ஒழுங்காக உபநயனம் செய்விக்கப் பெறும் ஒவ்வொரு சிறுவனும் வாமன பிரம்மச்சாரியின் திருவுருவைபோலவே காட்சி அளிப்பான்.
உபநயனத்தில் குருவானவர் சிஷ்யனை ஒரு கல்லின் மேல் கால் ஊன்றி நிற்க செய்து ஆசீர்வதிப்பது.....
*"ஆதிஷ்டேமம் அச்மானம் அச்ம இவத்வம் ஸ்திரோபவ !*
*அபிதிஷ்ட ப்ருதன்யத:*
*ஸஹஸ்வ ப்ருதானாயத:  "*
    *- ஸூத்ரம்..*
இக்கல்லை போன்ற வலிமை கொண்ட உடலும் உறுதி கொண்ட நெஞ்சும் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊரு செய்பவர்களை எதிர்த்துப் போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும் என்பதே.
மேலும் கூறுவதாவது
"ப்ரஹ்மசார்யஸி !"
 நீ ப்ரம்மசாரியாகிவிட்டாய் .
"அபோ (அ)சான:! கர்ம குரு :! மாஸுஷுப்தா !"
சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும். அறியாமையிலிருந்து விழித்தெழு ! உறங்காதே !
என்றெல்லாம் பலவாறாக உபநயத்தின்போது உபதேசிக்கப் படுகிறது.
தொடர் - 5.
*ஸந்தியாவனந்தத்தின் ஜீவநாடி போன்றவை மூன்று. அவை 'அர்க்கியப் பிரதானம்',  'பிராணாயாமம்'
மற்றும் 'காயத்ரீ ஜபம்'*
*மார்ஜனம்,  பிராசனம்,  உபஸ்தானம் முதலிய பகுதிகள் அங்கங்களாக அமைகின்றன*. அர்க்கியப்  பிரதானத்தின் கருத்தை விளக்க ஒரு கதை வேதத்திலே கூறபடுகிறது. சூரியனை எதிர்த்து  அரக்கர்கள் அன்றாடம் போராடுகின்றனர் என்றும்,  ஸந்தியாவந்தனம் செய்பவன் காயத்ரீ ஜபித்து விடும் அர்க்கியம் வஜ்ராயுதம்  போல் வலிமை படைத்து அரக்கர்களை முறியடிக்கிரதென்றும் அது கூறுகிறது. அஞ்ஞானமே  அரக்கர் படை. ஞானமே சூரியன்.போர்க்களம் மனிதனுடைய மன வெளி. இப் போரில் வெற்றி காண  பிரம்மாஸ்திரம் போன்றது காயத்ரீ மந்திரம். அசுரர் படை திரும்ப திரும்ப வந்து  அகவெளியில் சூழ்ந்துக் கொள்வதால் போர் புரிந்துக்கொண்டே இருக்கவேண்டும்.  தினந்தோறும் சாப்பிட மறந்தாலும் ஸந்தியாவந்தனத்தை மறக்க கூடாது.
*இனி ஸந்தியா வந்தன பிரயோகங்களை காண்போம்.*
*1)  ஆசமணம் ||*
*காலை மற்றும் மதிய வேலையில் கிழக்கு நோக்கியும்,  மாலையில் வடக்கு நோக்கியும் ஆசமனம் செய்ய வேண்டும். மேற்கு  நோக்கியும்,  தெற்கு நோக்கியும் செய்யக் கூடாது*.
நாஸாமே  தாஸனஸ்-தாங்க்ரீர்- ந பத்தாசன ஏவ வா !
ந ப்ரஸாரி தபதோ வா  பஹிர்-ஜானு- கரோபிவா !
முக்தாங்குஷ்ட - கனிஷ்டாப்யாம் த்ரி: பிபேத்  ப்ரம்ம- தீர்த்தத: !
- ஸூத்ரம்.
கைகள் முழந்தாளுக்கிடையில்  அடங்கியிருக்கும்படி குந்திட்டு உட்கார்ந்து செய்ய வேண்டும்.
சுண்டு விரலையும்,  கட்டை விரலையும் விட்டு மற்ற விரல்களைச் சற்று வளைத்தால் ஏற்ப்படும் உள்ளங்கைக் குழியில் சிறுது சிறிதாகத் தீர்த்தத்தை ஏந்தி உட்கொள்ள  வேண்டும்.
"மஹாவியாதி -ப்ரசமனி-நாமத்ரயீ வித்யா !!"
அச்சுதானந்த-கோவிந்த -நாமோச்சாரண-பேஷஜாத் ! நச்யந்தி ஸகல ரோகா : ஸத்யம்  ஸத்யம்  வஹாமயஹம் !!
-போதாயன  ஸூத்ரம்.
அச்யுதாய நம:
அனந்தாய நம:
கோவிந்தாய நம:
என்னும் மூன்று மந்திரங்களும் உடலிலும் உள்ளத்திலும் உறையும் எல்லா வியாதிகளயும் போக்கவல்லது.
*இதற்கு நாம - த்ரயீ வித்யா என்று பெயர்*.
இந்த மந்திரங்களுடன் ஆசமணம் செய்யவேண்டும்.
"த்ரிராசாமேத்  ! த்வி: பரிம்ருஜய ஸக்ரு - துபஸ்ப்ருச்ய !"
  - ஸூத்ரம்.
பவித்ரம் அணிந்திருந்தால் அதை கழற்றி வலது காதில் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு பின் அதை அணிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு பின் கேசவா,   நாராயணா என்ற  12 நாமாக்களால்  கண் காது முதலிய உறுப்புக்களை தொட்டு அனைத்தையும் பரமாத்மாவின் பணிக்கு  உரியனவாக்க வேண்டும். ஐந்து இந்திரியங்களும் உள்முகப்பட்டால் ஆனந்தம் தானே உதிக்கும்.
அங்குஷ்டோ$க்னீரிதி-க்யாத: ப்ரோக்தா வாயு: ப்ரதேசினி ! அநாமிகா ததா  ஸூர்ய: கனிஷ்டா மகவா  ஸ்ம்ருதா!! ப்ராஜபதிர்  மத்யமா து ஜ்ஞேயா சுத்திமபீப்ஸத: !!
- ஸூத்ரம்
கட்டை விரலும், வாயும்,
அக்னியின் ஸ்தானம் ஆகையால், "கேசவா, நாராயணா "என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும்,
பவித்ர விரலும் கண்களும் சூரியனுடைய ஸ்தானமாகையால் "மாதவா ,கோவிந்தா" என்று பவித்ர விரலால் கண்களையும்
ஆள்காட்டி விரலும், நாசியும், வாயுவின் ஸ்தானமாகையால் "விஷ்ணு :,மதுசூதனா" என்று ஆள்காட்டிவிரலால் நாசித் துவாரங்களையும்,
சுண்டு விரலும் காதுகளும் இந்திரனுடைய ஸ்தானமாகையால் "திரிவிக்ரம ,வாமனா" என்று சுண்டுவிரலால் காதுகளையும்,
நடுவிரலும் தோள்களும் பிரஜாபதியின் ஸ்தானமாகையால் " ஸ்ரீதரா, ஹ்ருஷிகேசா" என்று நடு விரலால் தோள்களையும்,
"பத்மநாபா, தாமோதரா" என்று பரமாத்மாவின்  ஸ்தானமாகையால் தொப்புளிளும் உச்சந்தலையிலும் முறையே தொட்டு கொள்ள வேண்டும்.

தொடரும் ...,..

"Bhagavan Maheshvara is the Jagat-karana Brahman"

===========================
"Bhagavan Maheshvara is the Jagat-karana Brahman" ~ so opine the Advaitian Acharyas
===========================

As known to all, Bhagavan Shiva has always been  dear to the Advaitians. He is verily beheld as the Jagat-karana Brahman in the tradition.  This conviction of the Advaitians is deeply rooted in the works of their Acharyas.  Here is a small collection of such verses. 

1)  A verse quoted by Bhagavatpada in his Brahma-sutra bhashya 

'नाम रूपं च भूतानां कर्मणां च प्रवर्तनम् ।
 वेदशब्देभ्य एवादौ निर्ममे स महेश्वरः' इति

~ Bhagavatpada, Brahma Sutra  Bhashya (1.3.28)

[ In the beginning, Bhagavan Maheshvara, created from the words of the Veda alone, the names and forms of creatures and also promoted Karma]

Madhusudhan Saraswati ji also quotes this verse in his tika on Sankshepa-shareerika and attributes it to Bhagavan Manu. Similar verses are also found in Kurma Purana and Mahabharata 



2. Verse from Bhagavan Sureshvaracharya's Brihadaranyaka Vartika 

In  his Brihadaranyanaka Bhashya Vartika(1.4) , Shri Sureshvaracharya ji  addresses the Parabrahman as Maheshvara. He says that Maheshvara is verily the Nitya, Shuddha, Buddha Atman (i.e. Parabrahman itself). Yet, owing to Avidya, Maheshvara, who is verily the shuddha Chaitanya, becomes the cause of creation. Thus, Bhagavan Maheshvara is the Jagat-karana-brahman. 

नित्यशुद्धश्च  बुद्धश्च यस्मादात्मा परः स्वतः ।
मुक्तश्चातोऽवसेयोऽसौ सद्वेदान्तोक्तिमानिना ॥ ४९१ ॥

[Because that highest Atman is ever pure, having knowledge as its essence, and, of itself liberated, it is therefore to be ascertained (to be thus) by one who respects that authoritative statement of Vedanta]

एवंभूतोऽप्यसंबुद्धस्वात्मतत्त्वो महेश्वरः॥
आपेदे कारणात्मत्वं नामरूपादिसर्जने ॥ ५९२ ॥ 
[ Maheshvara, even though of such nature( i.e. though being the ever pure Atman), was (yet) ignorant (lit. not enlightened) about his own nature (and therefore) became the cause of creation of name, form etc.]

Tikakara Shri Anandagiri Swamiji makes an interesting remark on the word 'Maheshvara' used in the Vartika.

 In our common understanding, Maheshvara is the destroyer of creation and Brahma is the creator. But why does the aforementioned Vartika describe Maheshvara as the creator?   Warding off this objection, Shri Anandagiri Acharya says that Sureshvaracharya ji deliberately uses the word Maheshvara here to convey the fact that the creator of Jagat  is non-different from its destroyer and hence establishing the abheda of Trimurtis. 
स्रष्टुः संहर्तुश्चाभेदमभिप्रेत्य महेश्वरग्रहणम्  || ( Anandagiri Tika) 

We may again object saying that this interpretation is merely a concoction of Anandagiri ji. But there is no room for such a doubt as Bhagavan Sureshvaracharya ji himself asserts Trimurti-abheda in explicit terms in the same work. 

यः पृथिव्यामितीशोऽसावन्तर्यामी जगद्गुरुः ।
हरिर्ब्रह्मा पिनाकीति बहुधैकोऽपि गीयते ॥ ३७७ ॥

~ Vartikakara Bhagavan Sureshvaracharya ( Brihadaranyaka bhashya vartika 1.4) 

3. Shri Sayanacharya's Mangalacharana verse in his Madhaveeya Vedartha Prakasha 

Bhagavan Sayanacharya ji, the Veda-bhashyakara,  has to his credit the authorship of the most comprehensive commentary on all existing branches of Veda.  He was the disciple of Shri Vidya Tirtha Mahaswamiji, the 11th Acharya of Shringeri. In every single chapter of  his Veda-bhahsya texts, Sayanacharya ji invokes his Guru in the form of Bhagavan Maheshvara in the following manner -

यस्य निःश्वसितं वेदा यो वेदेभ्योऽखिलं जगत् |
निर्ममे तमहं वन्दे विद्यातीर्थ-महेश्वरम् || 

~ Shri Sayanacharya, Madhaveeya Vedartha Prakasha

[ I bow down to Shri VidyaTirtha, who is verily Bhagavan Maheshvara,whose outgoing breath is verily the Veda and who creates the Jagat from the Veda]

Thus, from the aforementioned evidences, we understand that the Advaitian Acharyas have always envisioned Bhagavan Maheshvara as the Jagat-Karana Brahman. 

॥ हर नमः पार्वती पतये हर हर महादेव ॥
॥ भव शङ्कर देशिक मे शरणम् ॥

Wednesday, November 22, 2023

Vidura neethi part7

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

🌸 *விதுர நீதி 7*🌸*

*விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்*

தெரிந்து கொள்ள வேண்டிய *மூன்றுகள்*- *விதுர நீதி தொடர்ச்சி*

விதுரர் மேலும் தொடர்கிறார். கீழ்கண்ட மூன்று பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் வலியுறுத்துகிறார்.

1. மனிதர்கள் மூன்று வகைப்பட்டவர்கள்
*தாழ்ந்தவன்* - தான் வாழ பிறரை கெடுப்பவன்.
*மத்திமன்* - தானும் வாழ்வான் பிறரையும் வாழ விடுவான். *உத்தமன்* - தான் கெட்டாலும் பிறரை வாழ வைப்பான். 

இந்த காலத்தில் உத்தமனாக  வாழ்வது மிகக் கடினம். குறைந்த பட்சம் நாம் *மத்திமனாக*  வாழலாம்.

2. இந்த மூவருக்கும் தனித்து சொத்து கிடையாது
*மனைவி*, *வேலைக்காரன்* மற்றும் *பிள்ளைகள்* மனைவியின் சொத்து கணவர் வசமே இருக்கும். பிள்ளைகள் சொத்து தகப்பனையே சேரும். (இந்த காலத்தில் கணவனையோ தகபனையோ சார்ந்து இருக்காதவர்களுக்கு  இது பொருந்தாது. ) 

3. இந்த மூன்று குற்றம் நம்மை கெடுத்தே தீரும்.
*பிறர் சொத்துக்கு ஆசைப்படுதல்*. *பிறன் மனை நோக்குதல்* மற்றும் *நமக்கு நன்மை நினைத்தவனை விட்டு விடுதல்*. மேற்கண்ட குற்றங்கள் உடம்புக்கு உடனடியாக நன்மை தந்தாலும் ஆத்மாவுக்கு நாசம் தந்து விடும்.

4. இந்த மூன்று தோஷங்களை விட்டு விட வேண்டும்.
*காமம், குரோதம் மற்றும் பேராசை*. இந்த மூன்றும் இருந்தால் *நரகத்தின்* வாசல் நமக்காக திறந்தே இருக்குமாம்.

5. இந்த மூன்றை விட நண்பனை எதிரியிடம் இருந்து காப்பதே மேல்.
*நல்ல வரம்*, *ராஜ்யம்* மற்றும் *பிள்ளை பேரு*.  நண்பன் எதிரியிடம் மாட்டிக் கொண்டால் மேல் சொன்ன மூன்று நன்மைகளை நாம் கேட்டு அடைவதை விட  அவனை காத்தல் மிகவும் சிறப்பானது என்று கூறுகிறார்.

6. இந்த மூன்று பேரை எந்த காலத்திலும் விட்டுவிடக் கூடாது
*பக்தன்*, *வேலைக்காரன்*, நம்மிடம் *சரண் அடைந்தவன்*.

இவ்வாறு நமக்கு இருக்க வேண்டிய சிறப்புகளை மூன்று மூன்றாக அழகாக அடுக்கி வைக்கிறார். அடுத்த அத்தியாயத்தில் நான்குகள் பற்றி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏

vedanta students class notes

Birth of ekadashi

ஒரு காலத்தில் முரன் என்ற ஒரு அரக்கன், தேவர்களாலும், மும்மூர்த்திகளாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். அசுரன் அபரிமிதமான பலம் வாய்ந்தவனாக இருந்தான். அதனால் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் மிகுந்த தொல்லைகளைக் கொடுத்தான். அவர்கள் திருமாலை சரணடைந்தனர். அவரும், அவர்களைக் காக்கத் திருவுள்ளம் கொண்டு, முரனுடன் சண்டையிட்டார். கடும்போர் நடந்தது. ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனம் வரையில் சண்டை நடக்கும். பிறகு போரை நிறுத்திவிட்டு அடுத்த நாள் போர் தொடரும். இவ்வாறு ஆயிரம் வருடங்கள் சண்டை நடந்தது. திருமால், இதற்கு ஒரு வழி செய்யவேண்டும் என்று தீர்மானித்தார்.

ஒரு நாள் சூரிய அஸ்தமனத்திற்குப் பின், திருமால், பத்ரியில் உள்ள ஒரு குகையில் ஓய்வெடுக்கச் சென்றார். மும்மூர்த்திகளுள் அவரும் ஒருவராதலால் .முரனைக் கொல்ல முடியாது. அதே சமயம், முரன், பெண்ணால் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெறவில்லை.அதனால், தனது திருமேனியிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார். பிறகு, தூங்குவது போல் படுத்திருந்தார். முரன், போர் விதிக்குப் புறம்பாக, திருமாலைத் தாக்கும் எண்ணத்துடன் குகைக்கு வந்தான். திருமாலைத் தாக்கக் கையை ஓங்கினான். அப்போது திருமாலால் உருவாக்கப்பட்ட அந்தப் பெண்ணின் "ஹூம்" என்ற மூச்சுக் காற்றில் எரிந்து சாம்பலானான். திருமால் அவளைப் புகழ்ந்தார். மேலும், "என்னுடைய 11 இந்திரியங்களில் இருந்து உருவானதால் உனக்கு 'ஏகாதசி' என்று பெயரிடுகிறேன். நீ தோன்றிய இந்த நாளில், யார் உபவாசம் இருந்து என்னை வழிபடுகிறார்களோ, யார் உன்னைத் துதிக்கிறார்களோ, உன்னுடைய வரலாற்றை யார் கேட்கிறார்களோ, பேசுகிறார்களோ அவர்களுடைய பாபங்களெல்லாம் தொலையும்"என்று வரமளித்தார். 

மார்கழி மாதம் தேய்பிறையில் தோன்றியதால் இதற்கு 'உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். இதுவே பாத்ம புராணப்படி 'ஏகாதசி' தோன்றிய கதை. 

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' எனப்படும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசியில் திருமாலை வழிபடுகிறவர்களுக்கு, இம்மையில் அனைத்து செல்வங்களும், மறுமை இல்லாத வைகுந்தப் பேறும் கிடைக்கும். 

ஏகாதசியின் தத்துவம்: ஏகாதசி என்பதற்கு பதினொன்று என்று அர்த்தம். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஒருமைப்படுத்தி, தியானம் செய்வதே ஏகாதசியின் தத்துவமாகும். இவ்வாறு உடலும் உள்ளமும் ஒன்றி, உபவாசம் இருந்து திருமாலை வழிபடுவதை 'ஏகாதசி விரதம்' என்று கூறுவர்.

Bhagavad Gita repeat phrases

The man behind Thirupugazh

திருப்புகழ் கிடைக்க காரணம் நம்ம கடலூர் கோர்ட்
திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்..

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த 24 நான்கு வருட உழைப்பை நாம் அறிவோமா? அதற்கு யார் காரணம் என்பதை வரலாறு அறியுமா?

அருணகிரிநாதர் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்
திருப்புகழ் ஆகும். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. அதாவது கிடைத்துள்ளன. இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும். இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசை நூல்களில் அடங்காத தனித்தன்மை பெற்றவை. 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன்...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை.... என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்பொழிவுகளைத் தொடங்குவார். அவர் மூலமே அடியேனுக்கும் திருப்புகழ் அறிமுகம் ஆனது.

அத்தகைய திருப்புகழ் நமக்கு கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்றது தொண்டினாலும், ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது 
அந்த போற்றுதலுக்குரிய அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.

திருப்புகழ் நமக்கு கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது.
அவர் குறித்து ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது.
அதை இப்போது சித்தர்களின் குரல் வாயிலாக பார்ப்போம்.....

பிரிட்டிஷ்காரர்கள் என்ற மாபாவிகள் இந்தியாவை ஆண்டபோது இந்தியர்களுக்கு அரிதாகவே அரசுப் பணி தருவார்கள். ஒருவர் மாவட்ட ஆட்சியர் ஆகும் தகுதி இருந்தால், அவர் இந்தியராக இருந்தால், அவருக்கு எழுத்தர் வேலை கொடுப்பார்கள்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர்.

அப்பாடலின் வரி;

வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை
மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே...

பொருள்:
              வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே....

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் அந்தப் பாடலை கேட்ட மாத்திரத்தில் சொக்கிப் போனார். என்ன பாடல் அது எனக் கேட்டார். அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்கள் 16000 இல் ஒன்று என்று சொன்னார்கள். எங்கே அந்நூலைக் காட்டுங்கள் என்றார். ஓலைச்சுவடி ஒன்றை நீட்டினார்கள். மீதம் பாடல்கள் எங்கே.. என்று பதறினார்... எங்களிடம் இல்லை என்று கை விரித்தார்கள்.

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக் கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின.....

(1) 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 

(2) 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. 

(3) அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 

(4) 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 

(5) 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது "என் சரித்திரம்" நூலில் பதிவுசெய்துள்ளார்.

அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,

"எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே" என்ற வாக்கால் கூறியுள்ளார்.

ஆனால் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது.

ஓலைச்சுவடிகளின் குறை களைக் களைந்து சீர் செய்வ தற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார்.

திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் தமது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும்புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

நாம் இன்று முருகனை நினைந்து உருகிப் பாடும் திருப்புகழ் ஒரு தனி நபர் விடா முயற்சியால் தான் என நாம் நினைக்கும்போது அய்யா வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் பெருந்தொண்டு எத்தகையது என நன்றியுடன் வணங்குவோம்.

சந்த முனி யின் 1324 திருப்புகழ் பாடல்களில் மொத்தமாக 857 சந்தங்களும் அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன. என ஓர் ஆய்வுக் குறிப்பு சொல்கிறது.

நமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் 857 சந்த பேதம்; 16000 பாடல்களும் கிடைத்திருந்தால்….!!

உதாரணமாக ஒரு மிக எளிய பாடல் பழனி திருப்புகழில் இருந்து பார்ப்போம்.

சந்தம்:

தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான

பாடல் :

அபகார நிந்தைபட் ...... டுழலாதே
     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
     உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
     இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
     திருவாவி னன்குடிப் ...... பெருமாளே..

 இப்பாடலில் அருணகிரிநாதர் சாமிகள் முருகனின் அருள் பெறுவதற்கான எளிய வழிகள் சொல்கிறார்.
      பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அதனால் வினைகளை ஈட்டி விடாமல், அவ்வாறு தீய குணங்கள் கொண்ட மனிதர்களுடன் பழகாமலும், உரிய கிரியைகளுடன் கூடிய பூசையை தினம் செய்தால் முருகனின் அருள் பெறலாம் என்கிறார். ஒவ்வொரு சைவரும் ஜெபமாலை வைத்து இருக்க வேண்டும்.

திருமுருகன் ஆறுபடைகளில் மூன்றாவது படைவீடு திருஆவினன்குடி என நக்கீரதேவ நாயனார் அவர்களால் திருமுருகாற்றுப்படை நூலில் பாடப்பட்டு இருக்கிறது. இத்திருக்கோயிலில் மயிலில் ஆரோகணித்து திருமுருகன் வீற்றிருப்பார். பழனி மலைமேல் இருக்கும் தண்டபாணி கோயில் படை வீடு அல்ல என்பர் பெரியோர்.

திருத்தணி திருப்புகழில் அருணகிரிநாதர் சுவாமிகள் திருப்புகழ் சிறப்பு சொல்கிறார்.

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்.

அய்யா வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் நம் கையில் உள்ளது. நெருப்பையும் எரிக்கும் நெருப்பான திருப்புகழில் இருந்து எளிய பாடல் ஒன்றாவது தினம் ஒன்று விடாமல் சொல்வோம்... முருகனின் திருவருள் பெறுவோம்.

நன்றி முகநூல் பதிவு

Gita recitation in full

सहर्षं सप्रश्रयं निवेदयामि यत् अद्य  श्रृङ्गगिर्यां श्रीमद्भगवद्गीतामामूलाग्रं कण्ठस्थीकृत्य
परीक्षायां अनन्तश्री विभूषित जगद्गुरु श्रीभारतीतीर्थमहास्वमिभि: परिपूर्णानुग्रहेण प्रथमश्रेण्याम् उत्तीर्य जगद्गुरु श्रीविधुशेखर भारती महास्वमिभि: करकमलात् प्रमाणपत्रमिमम्  अलभे।
बहुचिरादपूर्णस्वप्नमिमं  अद्य साकारोऽभवत् ।
मम जीवने अविस्मरणीय सुघटना एषा ।
।। *सर्वं श्री कृष्णार्पणम्*।।
तेन विना तृणमपि न अचलति । 


Vidura neethi part 6

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

*விதுர_நீதி*
*பகுதி 6*

*விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்*

எந்த இரண்டுகளை பற்ற வேண்டும், எந்த இரண்டுகளை விட வேண்டும் - *விதுர நீதி* *தொடர்ச்சி*:

அடுத்ததாக இரண்டுகளைப் பற்றி கீழ் வருமாறு விதுரர் விவரிக்கிறார்.

1.  இந்த  இரண்டு பேரும் பாம்பின் வாயில் அகப் பட்ட தவளை போல அழிந்து விடுவர்.

சத்ரியன் ராஜாவாகவும் ராணுவ தலைவனாகவும் இருந்து விட்டு வரவழைத்த யுத்தத்திற்கு போக மாட்டேன் என்று சொல்பவன்.

பிராமணனாக  இருந்து ஊர் ஊராக  சென்று தொண்டு புரியாதவன். (பிராம்மண குலமே  அழிந்து விடும்)

2. இந்த இரண்டு விஷயங்களை செய்பவர்கள் கொண்டாடப் படுவர்.

கெட்டவன் என்று தெரிந்து அவனை அர்ச்சிக்காதவன் அல்லது அவனை நல்லவன் என்று புகழாதவன்

மற்றவர்களை துன்புறுத்தும் வார்த்தைகளை உபயோகிக்காதவனை  கொண்டாடுபவன்.

3. இந்த இரண்டு பேர்களுக்கும் சுய புத்தி கிடையாது.

மற்ற ஸ்திரிகளின் வஸ்துகளுக்கு (பொருட்களுக்கு) ஆசை பட்டு அதை அனுபவிக்க, வாங்க ஆசைப்படும் ஸ்திரிகள்.

ஒருவனைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே மற்றவர்கள் சொன்னார்கள் என்று உண்மையை தெரிந்துகொள்ளாமல் அவனைப் பற்றி புகழ்பவர்கள்.

4. இந்த இரண்டும் முள் போல குத்திக் கொண்டே இருக்கும்.

ஒருவனது கையில் காசு இல்லை என்றாலும் பலவற்றை வாங்க வேண்டும் என்று ஆசைபட்டால் அந்த ஆசை

தனக்கு சக்தி அல்லது பதவி  இல்லை என்று தெரிந்தும் கோபப்பட்டால்  அந்த கோபம்.

5. இந்த இரண்டு கர்மாக்களை செய்பவன் விளங்குவதில்லை.

எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் கிரகஸ்தன் (இல்லத்தரசன்)

வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் சந்நியாசி.

6. இந்த இரண்டு பேரும் சொர்க்கத்தை விட உயர்ந்த இடத்தில நிற்கிறார்கள்.

பொறுமை உள்ள பணக்காரன்  
தரித்திரனாக இருந்தும் தன்னிடம் உள்ளதை தானம் செய்பவன்.

7. இந்த இரண்டு செயல்களும் ஏற்று கொள்ளப் படாது

ஏற்பதுக்கு தகுதி உள்ளவனுக்கு கொடுப்பது
ஏற்கும் சக்தி உள்ளவனுக்கு கொடுக்காமல் இருப்பது

8. இந்த இரண்டு பேரும் கழுத்தில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்குபவர்கள்.

தனம் இருந்தும் ஈயாதவன் (சம்சாரக் கடலில் மூழ்கி விடுவான். )

 உலகத்து கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாதவன்.  (திருடு, கொள்ளை அன்று பல விதங்களில் மாட்டிக் கொண்டு விடுவான்.)

9. இந்த இரண்டு பேரும் சூரிய மண்டலத்தை தாண்டிய உயர் கதியை அடைவார்கள்.

யோகம் மற்றும் வைராக்கியம் உள்ள சந்நியாசி
போர்களத்தில் இறந்த வீரன்.
 
இவ்வாறு விதுரர் இரண்டுகளைப் பற்றி அழகாக விவரிக்கிறார். அடுத்து மூன்றுகளைப் பற்றி என்ன விவரித்தார் என்று அடுத்த அத்தியாத்தில் பார்ப்போம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏

Tuesday, November 21, 2023

Knowledge gives satisfaction - mahabharata

*विद्यैका परमा तृप्तिः।*

- महाभारत, उद्योगपर्व ३३.५२

एक विद्या ही परम संतोष देती है ।

Only Knowledge gives ultimate satisfaction.

*सुप्रभातम् सर्वेभ्यः।*

Fate & freewill Ramayana

Courtesy: Sri. Balasubramaniam Vaidyanathan 
ராமனுக்கு லக்ஷ்மணனின் பதில்...

विक्लबो वीर्यहीनो यस्स दैवमनुवर्तते।
वीरास्सम्भावितात्मानो न दैवं पर्युपासते।।2.23.16।।
दैवं पुरुषकारेण यः समर्थः प्रबाधितुम्।
न दैवेन विपन्नार्थः पुरुषस्सोऽवसीदति।।2.23.17।।

குழம்பியவனாகவும், வீர்யஹீனனாக உள்ளவன் எவனோ, அவனே விதியைப் பின்தொடர்கிறான். மரியாதை கொண்ட மனத்தினனான வீரன் விதியை உபாஸிப்பதில்லை. எந்தப்புருஷன் மனிதச்செயலால் விதியை பாதிக்கும் ஸமர்த்தனோ, அந்தப்புருஷன் விதியினால் அழிவுற்ற பொருளுக்காக சோர்வுறுவதில்லை.

அயோத்யா காண்டம் 23 வது ஸர்கம்

#ராமம்பஜேஶ்யாமளம்

Daanam & their benefits

*தானங்களும் அதன் பலன்களும்* 

Monday, November 20, 2023

Advice to an atheist

👊
*வக்கீல் ஒருவர் தி.க. காரருக்கு கொடுத்த செம டோஸ்*

கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் புதியதாக அவர் கட்டியிருக்கும் வீட்டிற்கு வருகின்ற 9ம் தேதி புதுமனை புகுவிழா வைத்திருப்பதாகக் கூறி எனது அலுவலகத்தில் வைத்து அழைப்பிதழ் தந்தார்.

அவர் வந்த நேரத்தில் அலுவலகத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்வதற்காக வந்திருந்த ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். தி.க மனிதர் சம்பந்தம் இல்லாமல் மூக்கை நுழைத்து அந்தப் பெண்ணிடம்,

"உன் கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு ஜாதக பொருத்தம் பார்த்திருப்பே? சந்ததி விருத்தியா நூறு வருசம் பூவும் பொட்டுமா வாழ்வேனு ஜோசியன் புளுகியிருப்பான். இப்போ பாரு! ஒரே வருசத்துல தாலிய அத்து போடுறதுக்கு வக்கீல் கிட்டே வந்து நிற்குற. எப்போ இந்த சாமி, சாத்தான்னு கும்பிடுறதை மனுசன் விட்டுட்டு பெரியார் வழிக்கு வர்றானோ அப்போ தான் உருப்படுவான்" என்றார்.

அந்தப் பெண் அழ ஆரம்பித்து விட்டார். நான் அவரிடம் கேட்டேன்,

"யார் கிட்டே என்ன பேசணும்னு தெரியாதா? ஏற்கனவே நொந்து போயிருக்கிற பொண்ணோட மனசை ஏன் அமங்கள வார்த்தைகளால குதறி எடுக்குற?"

தி.க நண்பர் சிரித்துக் கொண்டே பதில் பேசினார்,
"இந்த உலகத்தில் நிர்மூடர்கள் அதிகம். உங்களுடைய மூடநம்பிக்கையை எடுத்து சொன்னால் அது குற்றமா? வார்த்தைல ஏது மங்களம்? அமங்களம்? உள்ளதை உள்ளபடி சொல்லுறதுல தப்பே இல்லை"

அலுவலகத்தில் அமைதி நிலவியது. சில நிமிடங்கள் அவர் தந்த அழைப்பிதழை பார்த்து விட்டு அவரிடம் சொன்னேன்,

"9ம் தேதி நான் திருவாடானை நீதிமன்றம் போவதால் உன் இல்ல விழாவிற்கு வரமுடியாது. அதனால இப்போவே உன் பெரியாரை நினைச்சுக்கிட்டு வாழ்த்திடுறேன்.

"நீ கடன் வாங்கி கட்டியிருக்கிற வீட்டோட கடனை நீ அடைக்க முடியாமல் போய் வீடு ஜப்தி ஆயிடாமலோ, பால் காய்ச்சி குடியேறினதும் யாரும் செத்து போயிடாமலோ, கட்டுமானம் சரியில்லாம போய் வீடு கீழே விழுந்து மண்ணோட மண்ணாகிப் போயிடாமலோ நல்லா இருக்கட்டும்!"

நண்பரின் முகத்தில் இருள் சூழ்ந்தது. எதுவும் பேசாமல் தளர்வாய் வெளியேறினார்.

அலுவலகத்தில் இருந்த அந்தப் பெண் கேட்டாள், 
"ஏன் சார் இவ்வளவு கடுமையா பேசினீங்க? ரொம்ப அப்சட் ஆகிப் போயிட்டாரு"

நான் சொன்னேன்,

"அவன் தானம்மா சொன்னான் வார்த்தைகள்ல மங்களம், அமங்களம்னு கிடையாதுன்னு.. அவன் கொள்கைப்படி வாழ்க்கைல நடக்குறதை உள்ளதை உள்ளபடி சொல்லி "நல்லா இருக்கட்டும்"னு வாழ்த்தத்தான செய்தேன்.." 

அடுத்தவங்க மனசை அவன் கொள்கை புண்படுத்துறதைப் பற்றி கவலைப்படாத போது, அதே கொள்கையை அடுத்தவங்க அவன் கிட்டே பிரயோகிக்கும் போதும் கவலைப்படக் கூடாது..

அப்படி கவலைப்பட்டால், அவன் தான் மூடநம்பிக்கையில ஊறிக் கிடக்குற ஒண்ணாம் நம்பர் நிர்மூடன். அந்த வகையில் இவன் நிர்மூடன்! மட நாய்க்கு தடிக் கம்பு தான் சரி!"

👍😄😄

Why the 4th homa to be done in marriage?

विवाह में चतुर्थी कर्म का महत्व

*विवाह में चतुर्थीकर्म की आवश्यकता*

विवाहके अनन्तर चतुर्थी-होम कर्म आवश्यक कर्म बताया गया है, जो विवाहसंस्कार का महत्त्वपूर्ण अंग है। चतुर्थीकर्म के प्रयोजनमें बताया गया है कि *कन्या के देहमें चौरासी दोष होते हैं*, उन दोषों की  निवृत्तिके लिये प्रायश्चित्तस्वरूप चतुर्थीकर्म किया जाता है-
*चतुरशीति दोषाणि कन्यादेहे तु यानि वै।*
*प्रायश्चित्तकरं तेषां चतुर्थी कर्म ह्याचरेत्॥ (मार्कण्डेय)*

*चतुर्थीकर्म से सोम, गन्धर्व तथा अग्निद्वारा कन्याभुक्त दोष का परिहार हो जाता है।* क्योंकि पहले कन्या का भोग सोम गंधर्व और अग्नि करते हैं । अतः हारीत ऋषि ने बताया है कि जो कन्या चतुर्थी- कर्म करती है, वह सदा सुखी रहती है, धनधान्य की वृद्धि करने वाली होती है और पुत्र-पौत्र की समृद्धि देनेवाली होती है। शास्त्र में यह भी बताया गया है कि- *चतुर्थीकर्म न करनेसे वन्ध्यात्व और वैधव्य दोष आता है।*  चतुर्थीकर्म से पूर्व उसका पूर्ण भार्यात्व भी नहीं होता है। कहा भी गया है कि- *जबतक विवाह नहीं होता है, उसकी कन्या संज्ञा होती है, कन्यादानके अनन्तर वह वधू कहलाती है, पाणिग्रहण होनेपर पत्नी होती है और चतुर्थीकर्म होनेपर भार्या कहलाती है-*

*अप्रदानात् भवेत्कन्या प्रदानानन्तरं वधूः।।*
*पाणिग्रहे तु पत्नी स्याद् भार्या चातुर्थिकर्मणि॥*

विवाह निवृत्त होने पर चौथे दिन रात्रिमें पतिके देह, गोत्र और सूतक में स्त्री की एकता हो जाती है-
*विवाहे चैव निवृत्ते चतुर्थेऽहनि रात्रिषु।*
*एकत्वमागता भर्तुः पिण्डे गोत्रे च सूतके॥*

चतुर्थी होमके मन्त्रोंसे त्वचा, मांस, हृदय और इन्द्रियों के द्वारा पत्नी का पतिसे संयोग होता है, इसी से वह पतिगोत्रा हो जाती है-
*चतुर्थीहोममन्त्रेण त्वङ्मांसहृदयेन्द्रियैः।।*
*भर्त्रा संयुज्यते पत्नी तद्गोत्रा तेन सा भवेत्॥ (बृहस्पति)*

अतः विवाह दिनसे चौथे दिन रात्रि में अर्धरात्रि बीत जानेपर यह कर्म करना चाहिये अथवा अशक्त होनेपर अपकर्षण करके विवाह के अनन्तर उसी दिन रात्रिमें उसी विवाहाग्निमें विना कुशकण्डिका किये यह कर्म किया जा सकता है।

Sunday, November 19, 2023

How a pada is formed in sanskrit?

Mini-series on account of Sri Sri Bharati Tirtha

🧵04/10 of our Mini-series on account of 73rd Vardhanti Mahotsava(Birth anniversary) of #Jagadguru #Shankaracharya Sri Sri Bharati Tirtha Mahasannidhanam :

Sitarama Anjaneyulu (The Acharyal's name in HH's poorvashrama) was born into a devout family bearing the name "Tangirala", of Apastamba sutra, Krishna sakha, Kutsasa gotra, living in Alugumallepadu village in Palnadu area of Guntur, on the banks of river Naguleru. He was born on April 11, 1951 as a result of long prayer by his father Sri Venkateshwara Avadhani and mother Smt Anantalakshmamma. With a great desire to have a son, Sri Avadhani used to wake up early in the morning, bathe in the river and worship Lord Bhavani Shankara, the local deity, with Rudrabhishekha. This he did for a year. He also used to perform Sri Rama Navaratrotsava. He took a vow to name his child after Sita and Rama if his wish was fulfilled. The Lords Shankara and Rama were kind to him. He was blessed with a son. For her part, Smt.Anantalakshmamma had sought Lord Anjaneya's favour and promised to name the male child born to her 'Anjaneyulu'. Hence the infant was named Sitarama Anjaneyulu. 

Sri Sitarama Anjaneyulu even at the age of three evinced signs of great devotion towards the Gods. The name of Lord Shiva was on his lips constantly. During his boyhood days he used to forget himself worshipping the Lord. Born in into a family of Vedic scholars as a result of great penance of His parents, Sri Seetharama Anjaneyalu became renowned for His strict dharmic ways of life, deep devotion to God and uncompromising desire for scriptural learning, even as a young boy. As a small boy, Sri Anjaneyalu used to visit the houses of His relatives and return home well in time. One day He did not return for a very long time. Smt. Anantalakshmamma felt worried and started searching for Him in almost all her relatives" places but could not find Him anywhere. With her fears growing, she finally visited the temple of Lord Hanuman near her house. To her great relief she saw the child sleeping under a tree. She woke Him up and scolded Him but was extremely surprised at His polite reply: "I was only saying 'Sambo, Siva Siva, Sambo, Siva Siva and fell asleep. Why, anything wrong?" The amazed mother could not reply. Sri Anjaneyalu seemed to be calm and composed in spite of having lost the company of His mother. His courage was what surprised her a lot! His Upanayanam took place in 1957 and he was duly initiated into Vedic studies by his erudite father. Courtesy ahambrahmaasmi. org

By the time he was nine, he had acquired considerable command over the divine language Sanskrit. Aachara and Puja were ingrained in Sri Anjaneyalu from a very young age.

"Once everyone had to attend a function in the peak of summer. By mid-day, everyone decided to quench their thirst by purchasing a chilled soda. However he, despite being only a 6 year old, refused it affirming that he would only consume home cooked items and never eat anything prepared outside. Such was his resolve at such a young age. When he was around 9, our family had been to attend a sacred thread ceremony. He had not taken breakfast but felt hungry at 11 am. The hosts were in a fix because there was nothing to appease his hunger then. That was when my father suggested that a Panchayatana Puja and a coconut be given to him and he will get engaged in Puja. That suggestion was immediately accepted. Sure enough, he kept himself immersed in Puja feeling neither hunger nor thirst, until he was called for lunch a few hours later." - Ve Br Sri T. Dakshinamurthy (Premonastic brother of the Mahaswamiji)

#Sringeri #shankaracharya #SanatanaDharma #sanatandharma #Hinduism #Rishis #Sages #AdiShankara #Guru #Parampara

Source FB

manidweepam

மணித்வீபம்   -    நங்கநல்லூர்   J K  SIVAN 

சிவனுக்குக் கைலாசம், விஷ்ணுவுக்கு வைகுண்டம் மாதிரி லலிதாம்பாளுக்கும் தனி லோகம் உண்டு. மற்றவர்களுக்கு ஒன்று  என்றால் அம்பாளுக்கு  ரெண்டு வாச ஸ்தலங்கள். ஒன்று பிரம்மாண்டம்.  அதில் தான் எல்லா  க்ரஹங்களும் தன்னைச் சுற்றி வரும்படி,  மத்தியிலிருக்கும் மேரு சிகரத்தில் இருப்பது.  ரெண்டாவது த ப்ரஹ்மாண்டத்தில்  உட்படாத  தனி லோகம். அதைத் தானே ஸ்ரிஷ்டி செய்து, அதற்குள் ஒரு தீவு அமைத்து  அதில் வசிப்பவள் . "ஸுதா ஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ, காமதாயிநீ" என்று  ஸஹஸ்ரநாமத்தில்  இந்த அம்ருத சாகர இருப்பிடத்தைக்  குறிப்பிட்டிருக்கிறது.  காமாக்ஷி இருக்கும் இடம் அது.   அந்த தீவின் பெயர் 'மணித்வீபம்'  ஆச்சார்யாள் இதை வர்ணித்துள்ளார்.  

மேரு மத்தியானாலும் சரி, அம்ருத ஸாகரமானாலும் சரி.  அவள் தனது  தீவுக்குப்  போய் விட்டால் அங்கே ஒன்றும் வித்தியாசமில்லை. வெளிக் கோட்டையிலிருந்து ஆரம்பித்து அரண்மனையில் அவள் கொலுவிருக்கும் இடம் வரையில் இரண்டிலும் ஒரே மாதிரியான  ப்ராஹாரங்கள், வனங்கள், தடாகங்கள், பரிவாரங்கள்தான்.  இருபத்தைந்து கோட்டைகளும் ப்ரஹாரங்களும் சூழ்ந்தது. முதலில் இரும்பு, அப்புறம் கடைசியில் ஸ்வர்ணம் வரை ஒவ்வொரு  உலோகத்தாலும்  ஒவ்வொரு கோட்டை.  அப்புறம் நவரத்தினங்கள் ஒவ்வொன்றாலும்  செங்கல் மாதிரி இணைத்துக் கட்டப்பட்ட கோட்டை. இப்படியே ஸூக்ஷ்மமாகப் போய் மனத்தாலேயே ஆன கோட்டை,  புத்தியாலேயே ஆன கோட்டை, அஹங்காரத்தாலான கோட்டை எல்லாம் கூட உண்டு. கடைசியில் சூர்ய தேஜஸ், சந்திர தேஜஸ், மன்மத தேஜஸ் இவற்றைக் கொண்டே ஒவ்வொரு கோட்டை.
இப்படிப்பட்ட  கோட்டைகளுக்கு நடுவே திவ்ய வ்ருக்ஷங்கள் உள்ள பல ஆரண்யங்கள், காடுகள்,  பல நீர்  ஓடைகள்.   இதை எல்லாம்  தாண்டிப் போனால் இருபத்தைந்தாவது ஆவரணத்தில் (சுற்றில், அதாவது  ப்ரஹாரத்தில்)  மஹா பத்மவனம் என்று ஒரே தாமரை மயமாய்ப் பூத்த தடாகம்  வரும். அது அகழி மாதிரி. அதற்குள்ளே செங்கலுக்குப் பதில் சிந்தாமணிக் கற்களையே வைத்துக் கட்டப்பட்ட  அம்பாளின் அரண்மனை தெரியும். அம்பாளின் வீட்டுக்குப் பெயர்  'சிந்தாமணி க்ரஹம்'.

ஸௌந்தர்ய லஹரி முதல் பாகமான  சிவானந்த லஹரியில் 8வது ஸ்லோகம் ஏற்கனவே உங்களுக்கு அளித்திருக்கிறேன். மீண்டும் அதை எழுதுகிறேன்.  

8.  சிந்தாமணி க்ரஹம்
सुधासिन्धोर्मध्ये सुरविटपिवाटीपरिवृते मणिद्वीपे नीपोपवनवति चिन्तामणिगृहे ।
शिवाकारे मञ्चे परमशिवपर्यङ्कनिलयां भजन्ति त्वां धन्याः कतिचन चिदानन्दलहरीम् ॥8॥

sudhāsindhōrmadhyē suraviṭapivāṭīparivṛtē maṇidvīpē nīpōpavanavati chintāmaṇigṛhē ।
śivākārē mañchē paramaśivaparyaṅkanilayāṃ bhajanti tvāṃ dhanyāḥ katichana chidānandalaharīm ॥ 8 ॥

ஸுதா ஸிந்த்தோர் மத்த்யே ஸுரவிடபி வடீ பரிவ்ருதே மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
ஶிவாகாரே மஞ்சே பரமஶிவ பாயாங்க நிலயாம் பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம்.

பகவானுடைய அனுக்ரஹம் இல்லாமல் நம்மால் மனஸை அடக்கவோ, ஞானமார்கத்தில் செல்லவோ முடியாது என்பது வாஸ்தவம். அதை அடைந்தவனுக்கு எல்லாம் ஒன்றே. அது அவனே. வித்யாசமே எதிலும் கிடையாது. அதைதான் அத்வைத வாஸனா என்பது. மாயை தான் ஒவ்வொருவரையும் தன் வழியில் நம்மை இழுத்துச் செல்வது. அதை உணர்ந்து அதன் பிடியில் சிக்காதவன் ஞானி. சர்வ சக்தியாக எல்லாமும் தானேயானவள் அம்பாள் மஹா த்ரிபுர சுந்தரி என்று ஞானி அறிந்தவன், 
ஸர்வ வியாபியான பரமேஸ்வரியின் இருப்பிடம், அமிர்தக் கடலின் நடுவில் கல்பகவிருக்ஷங்கள் நிறைய சூழ்ந்து இருக்கும் ரத்ன மயத் தீவில் கதம்ப மரங்கள் நிறைந்த உத்தியான நந்தவனத்தில் தோன்றும் சிந்தாமணி க்ரஹத்தில். அங்கே அவள் பரம மங்கல வடிவமான சிம்மாஸனத்தில் பரமசிவனுடைய மடியில் வீற்றிருக்கிறாள். அவள் ஞானானந்தக் கடலின் அலை போன்றவள் . ஆனந்த லஹரி எவ்வளவு அழகாக வர்ணிக்கப்படுகிறது! அம்மா தாயே, உன்னை புண்ணியவான்களான சிலரே வழிபடுகிறார்கள் ஏனென்றால் அவர் பாக்யம் பண்ணியவர்கள். புண்யசாலிகள்.
நமக்கு எல்லாம் வீடு இருப்பது போல் இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் க்ரஹத்தை அழகாக காட்டி யிருக்கிறது. அம்பிகையின் வாசஸ்தானமான சிந்தாமணி க்ருஹம் ஸகல அண்ட ப்ரம்மாண் டங்களுக்கும் அப்பால் அமிருதஸாகரத்தின் மத்தியில் ரத்தினத்தீவில் இருக்கிறது என்கிறார். அதன் வெளி ப்ரஹாரங்கள் ஒன்று ரெண்டல்ல. இருபத்தைந்து: அவை எதனால் ஆனது தெரியுமா? (1) இரும்பு (2) எஃகு (3) செம்பு (4) வெள்ளீயம் (5) பித்தளை (6) பஞ்சலோகம் (7) வெள்ளி (8) தங்கம் (9) புஷ்பராகம் (10) பத்மராகம் (11) கோமேதகம் (12) வஜ்ரம் (13) வைடூரியம் (14) இந்திரநீலம் (15) முத்து (16) மரகதம் (17) பவழம் (18) நவரத்தினம் (19) நானாரத்தினம் . இதோடு கூடம் நமது (20) மனம் (21) புத்தி (22) அஹங்காரம் (23) சூரியனின் தேஜஸ் (24) சந்திரனின் தேஜஸ் (25) மன்மதனின் தேஜஸ் . போதுமா?
இந்த 25 ப்ரஹாரங்களில் எட்டாவது தான் மேலே சொன்ன கதம்பவனம் –இதில் யார் காணப்படுகிறார்? லலிதாம்பிகையின் மந்திரிணியான ஸ்யாமளாதேவி வசிக்கும் ஸ்தலம்.
பதினைந்தாவது ப்ரஹாரத்தில் அஷ்ட்திக்பாலர்கள் இருக்கிறார்கள். பதினாறாவது ப்ரஹாரத்தில் ஸேனா நாயகி தண்டினி, இன்னொரு பெயர் வாராஹி இருக்கிறாள். இங்கேயும் ஸ்யாமளாதேவி காணப்படுகிறாள்.
பதினேழாவதில் முழுக்க முழுக்க யோகினிகள். பதினெட்டில் மஹாவிஷ்ணு; பத்தொன்பதில் ஈசானன். இருபதில் தாரா தேவி, இருபத்தொன்றில் வாருணி. இருபத்திரண்டாவது ப்ரஹாரம் அஹங்காரக் கோட்டை. அதில் வசிப்பவள் குருகுல்லா தேவி. இருபத்துமூன்றாவது சூரிய ப்ரஹாரம் அதில் இருப்பவர் தான் மார்த்தாண்ட பைரவர். இருபத்துநான்காவது ப்ரஹாரம் சந்திரன் இருக்கும் ஸ்தலம். கடைசியாக 25வது ஸ்ருங்கார வனம். அழகு மிகுந்தது. அதில் இருப்பவன் தான் மன்மதன்.
இதற்குள் மஹாபத்ம வனமும் கற்பகவிருக்ஷத் தோப்பும், அதன் நடுவில் சிந்தாமணிக்கிருஹமும் இருக்கிறதும். அம்பாளின் சிந்தாமணி க்ரஹம் எப்படி இருக்கிறது! வாஸ்து மாதிரி அந்த சிந்தா மணி க்ருஹத்தின் அக்னிமூலையில் சிதக்கினி குண்டமும், கிழக்குத் துவாரத்தின் இருபுறமும் மந்த்ரிணி, தண்டினி தேவிகளின் கிருஹங்கள் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவல் இருப்பர். இது தான் அவள் கோட்டை, அதன் செக்யூரிட்டி ஏற்பாடுகள். இதை தான் நவாவரணம் அழகாக சொல்ழும் ஸ்ரீசக்கரம். இந்த ஸ்ரீசக்ரத்தின் நடுவில் ஸர்வானந்தமயம் என்னும் பிந்துபீடத்தில் பஞ்சப் பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாத்ரிபுரஸுந்தரி எழுந்தருளியிருப்பாள்.

பஞ்சப் பிரம்மாஸனம் என்பது என்ன? பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகிய நாலு பேரும் நாலு சிம்மாசன கால்கள். அதன் பீடம் ஸதாசிவனுடைய மடி, எனும் மேல் பலகை கொண்ட கட்டில் . இதுவே " அ-உ-ம-அர்த்த, AUM எனும் ஓங்காரம். பிந்து" வடிவான ஓங்கார மஞ்சம்.

தேவர்களுக்கெல்லாம் மேலே ராஜ தர்பார் நடத்துகிற ராணிஅம்பாள்.  அம்ருத சாகர மத்தியிலே உத்தமமான சாதகர்களுக்குக் காமேஸ்வர பதிவ்ரதையான   தாயாகவும்  காட்சி தருகிறாள்.   அப்படிப்பட்ட அம்பாளுடைய வாசத்தைத்தான் அம்ருத சாகரத்திலிருந்து ஆரம்பித்துக் காமேஸ்வரனுடைய மடி வரையில் சுருக்கமாக ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார்.
நீபம் என்ற மரங்களைக் கொண்ட உபவனத்திலே – (கதம்பத்தின் இன்னொரு பெயர் நீபம் ) ஆனந்தமாக அம்பாள் சஞ்சாரம் பண்ணுபவள்.  மதுரையில் கதம்ப வனம், மணித்வீபத்தில்  இப்படி ஒரு உபவனம்.  ஒரு குட்டி  ஆரண்யம். காடு

ஆதி சங்கரர்  செளந்தரிய லஹரியில் ஒரு ஸ்லோகத்தில்  அம்பாளின்  தாடங்க மஹிமையை  வர்ணிக்கிறார். உன்னால் ஹாலஹால  விஷத்தை உண்டும் சிவபெருமான் அழிவில்லாதவராக, நீலகண்டனாக  என்றும்  இருக்கிறார் என்று அந்த ஸ்லோகம் சொல்லும். கைலாசபதியாகிய பரமேசுவரனத் தன் பதியாகப் பெற்ற அம்பிகை எப்போதும் கணங்குழையை அணிந்தவளாக, நித்திய மங்கலமுடையவளாக, விளங்குகிருள்.   அம்பாளுக்கு  'ஸுமங்கலி' என்று ஒரு பெயர்.
சிந்தாமணி க்ரஹத்தைச் சுற்றிக் கதம்பவனம். அது  இருக்கும் இடம் மணித்வீபம்.சுற்றிலும்  கற்பகக் காடு/  எல்லாமே  அம்ருத சமுத்திரத்தின் நடுவில் அமைந்தவை.

தொடரும்