Monday, November 27, 2023

harivarasanam meaning in Tamil

ஹரிவராசனம் அஷ்டகம் - பொருளுடன்

🍁ஹரிவராஸனம் விஸ்வமோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( சிறந்த சிங்கத்தை வாகனமாக கொண்டவனும்
தனது அழகால் உலகத்தில் உள்ளவர்களை மயக்குபவனும் தேவர்களால் ஆராதிக்கப்படுகின்ற திருவடிகளை உடையவனும் எதிரிகளை அழிப்பவனும் தினமும் நர்த்தனம் செய்வதில் விருப்பமுடையவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁ஸரணகீர்த்தனம் ஸக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( சரணம் அய்யப்பா என்று எவர் அழைக்கின்றனரோ அவர்களின் மனதை தன் இருப்பிடமாக கொண்டவனும் தன்னை அண்டிய அடியவர்களைக் காப்பதில் விருப்பம் கொண்டவனும் ஆலயத்தில் ஆடுபவனும் சிவந்த நிறத்தால் ஒளிவீசுபவனும் பூதகணங்களின் தலைவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்ஜிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( உண்மையான அன்பிற்கு கட்டுப்பட்டவனும் எம் உடலில் உள்ள பிராணவாயுக்கு தலைவனும்
தன்னை அடிபணிந்தவர்களின் விருப்பங்களைக் கற்பகத்தரு போன்று நிறைவேற்றுபவனும் ஒளிப்பிழம்பால் சூழப்பட்டவனும் ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தை ஓதும் அடியார்களிடம் அன்பு கொண்டவனும் அடியார்கள் செய்யும் துதி மொழிகளில் நாட்டமுடைய மனதை கொண்டவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁துரகவாஹனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிவராத்மஜம் தேவமாஸ்ரயே

( குதிரையை வாகனமாகக் கொண்டவனும் அழகு பொருந்திய முகத்தைக் கொண்டவனும் சிறந்த கதாயுதத்தைக் கையில் ஏந்தியவனும் தேவர்களால் துதிக்கப்படுபவனும் அடியவர்களுக்கு அளவில்லாத கருணையைப் பொழிகின்றவனும் தன்னை துதிப்பவர்களிடம் அன்பு கொண்டவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம்ப்ரபும் திவ்யதேஸிகம்
த்ரிதசபூஜிதம் ஸிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( மூன்று உலகங்களிலும் வழிபடுகின்ற பேறு பெற்றவனும் அனைத்து தேவர்களின் வடிவினைக் கொண்டவனும் மூன்று கண்களுடன் கூடிய தலைவனும் தலைசிறந்த குருவின் வடிவானவனும் அமரர்களால் அர்ச்சிக்கப்படுபவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁பவபயாபஹம் பாவுகாவகம்
புவனமோஹனம் பூதிபூஷணம்
தவளவாரணம் திவ்யவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( உலகத்தில் உள்ள சம்சார இன்னல்களை அழிப்பவனும் புனிதத்தன்மையை தோற்றுவிப்பவனும் தனது சௌந்தர்யத்தால் உலகை மயக்குபவனும் திருநீற்றை அணிந்தவனும் வானுலகத்து வெள்ளை வாரணத்தை வாகனமாக கொண்டவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁களம்ருதுஸ்மிகம் ஸுந்தரானனம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேஸரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( முகத்தில் எப்பொழுதும் புன்முறுவல் கொண்டவனும் அழகிய வதனம் கொண்டவனும் செஞ்சந்தனத்தை உடல் முழுவதும் பூசியிருப்பவனும் அனைவரையும் தன் உடல் அழகால் கவர்பவனும் சிங்கம் ; யானை ; குதிரை; புலி இவைகளை வாகனமாக கொண்டவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

🍁ஸ்ரிதஜனப்ரியம் ஸிந்திதப்ரதம்
ஸ்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ஸ்ருதிமனோஹரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

( தன்னை அண்டிய அடியவர்களிடம் அளவற்ற அன்பு கொண்டவனும் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பவனும் வேதங்களில் வர்ணிக்கப்படுபவனும் சான்றோர்களுக்கு நல்வாழ்க்கையை நல்குபவனும் செவிக்கு இனிமை வாய்ந்த பாடல்களால் துதிக்கப்படுபவனும் அரிகரசுதனும் ஆன அய்யப்பனே உன்னை நான் சரணடைகின்றேன் )

No comments:

Post a Comment