Wednesday, November 22, 2023

Vidura neethi part7

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

🌸 *விதுர நீதி 7*🌸*

*விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்*

தெரிந்து கொள்ள வேண்டிய *மூன்றுகள்*- *விதுர நீதி தொடர்ச்சி*

விதுரர் மேலும் தொடர்கிறார். கீழ்கண்ட மூன்று பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் வலியுறுத்துகிறார்.

1. மனிதர்கள் மூன்று வகைப்பட்டவர்கள்
*தாழ்ந்தவன்* - தான் வாழ பிறரை கெடுப்பவன்.
*மத்திமன்* - தானும் வாழ்வான் பிறரையும் வாழ விடுவான். *உத்தமன்* - தான் கெட்டாலும் பிறரை வாழ வைப்பான். 

இந்த காலத்தில் உத்தமனாக  வாழ்வது மிகக் கடினம். குறைந்த பட்சம் நாம் *மத்திமனாக*  வாழலாம்.

2. இந்த மூவருக்கும் தனித்து சொத்து கிடையாது
*மனைவி*, *வேலைக்காரன்* மற்றும் *பிள்ளைகள்* மனைவியின் சொத்து கணவர் வசமே இருக்கும். பிள்ளைகள் சொத்து தகப்பனையே சேரும். (இந்த காலத்தில் கணவனையோ தகபனையோ சார்ந்து இருக்காதவர்களுக்கு  இது பொருந்தாது. ) 

3. இந்த மூன்று குற்றம் நம்மை கெடுத்தே தீரும்.
*பிறர் சொத்துக்கு ஆசைப்படுதல்*. *பிறன் மனை நோக்குதல்* மற்றும் *நமக்கு நன்மை நினைத்தவனை விட்டு விடுதல்*. மேற்கண்ட குற்றங்கள் உடம்புக்கு உடனடியாக நன்மை தந்தாலும் ஆத்மாவுக்கு நாசம் தந்து விடும்.

4. இந்த மூன்று தோஷங்களை விட்டு விட வேண்டும்.
*காமம், குரோதம் மற்றும் பேராசை*. இந்த மூன்றும் இருந்தால் *நரகத்தின்* வாசல் நமக்காக திறந்தே இருக்குமாம்.

5. இந்த மூன்றை விட நண்பனை எதிரியிடம் இருந்து காப்பதே மேல்.
*நல்ல வரம்*, *ராஜ்யம்* மற்றும் *பிள்ளை பேரு*.  நண்பன் எதிரியிடம் மாட்டிக் கொண்டால் மேல் சொன்ன மூன்று நன்மைகளை நாம் கேட்டு அடைவதை விட  அவனை காத்தல் மிகவும் சிறப்பானது என்று கூறுகிறார்.

6. இந்த மூன்று பேரை எந்த காலத்திலும் விட்டுவிடக் கூடாது
*பக்தன்*, *வேலைக்காரன்*, நம்மிடம் *சரண் அடைந்தவன்*.

இவ்வாறு நமக்கு இருக்க வேண்டிய சிறப்புகளை மூன்று மூன்றாக அழகாக அடுக்கி வைக்கிறார். அடுத்த அத்தியாயத்தில் நான்குகள் பற்றி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏

No comments:

Post a Comment