*அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்:*
தொடர்:- 1
நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய கர்மாக்களை
1. *நித்ய'*
2. *நைமித்திக*
3. *காம்ய*
என்று மூன்றாக பிரித்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
நாம் எந்த பிரதிபலனையும் விரும்பாமல் ஒரு கடமையின் பாவத்துடன் செய்யக்கூடிய கர்மங்கள் "நித்ய கர்மா " எனப்படும்.இதை எல்லோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயம். '
ஒரு நிமித்தத்தை உத்தேசித்து செய்யக்கூடிய கர்மம் 'நைமித்யக' கர்மம் என்று கூறப்படுகிறது. இதில் தான் பித்ரு ஸ்ராத்தம் திருவாராதனம் ஆகியன அடங்கும்.
'காம்ய' கர்மம் மூன்றாவதாகும்.
அதாவது. ஹோமங்கள் யக்ஞங்கள் பரிகார பூஜைகள் என்பன
இதைச் செய்வதோ செய்யாமல் இருப்பதோ கர்த்தாவின் விருப்பம் ஆகும். நித்ய'கர்மாக்களின் வரிசையில் சந்தியாவந்தனம் அடங்கியுள்ளது.
ஸந்தி என்றால் இரவும்- அதிகாலையும் .,காலையும் மதியமும்., மாலையும் இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம்
அதாவது ஸந்தியாகாலம் என்பது அதிகாலை, மத்யான்னம் ஸாயங்காலம் என்னும் மூன்று காலங்கள் ஆகும்.
நித்ய கர்மாவில் அடங்கிய ஸந்தியாவந்தனத்தைச் செய்யாமல் இருந்தால் 'பாபபாக்' (பாபி) ஆகிவிடுவான் என தேவீபாகவதத்தில் கூறப்படுகிறது
ஸந்தியாவந்தனம் செய்ய கற்றுக் கொண்டவன் துவிஜன் அல்லது இருபிறப்பாளர் என்று அழைக்கப்படுகிறான். தர்ம சாஸ்திரங்கள் ,
*"ஜன்மனா ஜாயதே சூத்ர: !*
*கர்மணா ஜாயதே த்விஜ: "*
அதாவது பிறப்பால் எல்லோரும் சூத்திரர்களே என்றும் ஞானக்கண் திறக்கப் பெற்று பிரம்மார்ப்பணமாக கர்மானுஷ்டானம் செய்யத் தொடங்கிய பின்னரே "த்விஜன் " எனப்படுவர் என்கிறது.
*"ஸந்த்யாவிஹீநோ ஸுசிர்நித்யம் அநர்ஹ:* *சர்வகர்மஸு*
*யதன்யத் குருதே கர்ம ந தஸ்ய பலபாக்பவேத்"*
*ஸந்த்யாவந்தனம் செய்யாதவன் அபவித்ரன்.*
*அவர்கள் ஆன்மிக கர்மாக்களில் ஈடுபடத் தகுதியில்லை.* அவன் எந்த யாகத்தைச் செய்தாலும் அதன் பலனை அடையமாட்டான்.
பகவத் ஞானம் கிடைக்கவேண்டும் என்றால் நரஜன்மத்திலே பிறக்க வேண்டும்.
வேதாத்யயனம் மற்றும் ஸந்த்யா உபாசனைகளைச் செய்யாதவன் "த்விஜன்"அத இருபிறப்பாளன் (இரண்டாவது முறை பிறந்தவன், முதலில் தாயின் வயிற்றிலிருந்து, இரண்டாவது முறையாக உபநயனம் செய்து கொண்டபொழுது) என்ற தகுதியை இழக்கிறான்..
*மூன்று காலங்களும் ஸந்தியாவந்தனம் கட்டாயமாகச் செய்யவேண்டும்.*
மந்த்ரங்களை உச்சரிக்கும்பொழுது அதன் பொருளையும் கவனிக்க வேண்டும்.
சந்தியாவந்தனத்தில் தனக்கு சம்பவித்த வாசிக, மானஸிக, இராத்ரி சொப்பன இந்திரிய மூலமாக நித்தம் ஏற்படும் பாபங்கள் நாசமாகட்டும் என்ற ப்ரார்த்தனைகள் உள்ளது.
வைதிக தர்மத்தை அனுசரிப்பவர்களுக்கு வேதம் மிக முக்கியமானதாகும்.
வசிஷ்ட, வாமதேவ, ஆகிய ரிஷிகளின் முக கமலங்களிலிருந்து வேத மந்திரங்கள் வெளியே வந்ததால் மந்த்ரங்கள் மேலும் வலிமை கொண்டுள்ளன.
புதியதாக உபநயனமான வடுவை முதலாக கொண்டு மற்ற எல்லா ஆசிரமத்தினர்களுக்கும் சந்தியாவந்தனம் கண்டிப்பாக செய்யவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
"உத்யந்தமஸ்தம் யம்தமாதித்யம் அபித்யாயன் ப்ராம்ஹணோ வித்வான் ஸகலம் பத்ரமஸ்நுதே"
- ஸூத்ரம்
உதித்து வரும், அஸ்தமனமாகிற சூர்யனை யார் தியானிக்கிறாரோ அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் மங்களம் தான் உண்டாகும்.
ஒருவனின் தேஜஸ், பலம், ஆயுள் ஆகியவற்றுக்கு சூர்யன் தான் காரணம். 'வர்த்மாபுனர்ஜன்மனாம்' என்ற வராஹமிஹிரரின் சொல்லின்படி பரந்தாமத்தை நோக்கி செல்பவர்களுக்கு சூர்ய மண்டலம் தான் மார்க்கம்.
காலையில் சந்தியாவந்தனம் செய்ய உகந்த காலம் -
"உத்தமா தாரகோபேதா மத்யமா லுப்ததாரகா கநிஷ்டா ஸூர்ய சஹிதா ப்ராத: சந்த்யா த்ரிதாஸ்ம்ருதா"
- ஸூத்ரம்
*அதிகாலையில் இரவில் தோன்றிய நட்சத்திரங்கள் வானில் இருக்கும் பொழுதே சந்தியாவந்தனம் செய்வது உத்தமம்*
*நட்சத்திரங்கள் மறைந்த பிறகு மத்யமம் ஆகும்*.
சூர்யன் உதயம் ஆனபிறகு செய்யக்கூடிய சந்தியாவந்தனம் கநிஷ்டம்.
*மாத்யானிகம் செய்ய ஏற்ற காலம்*-
*சூரிய பகவான் நேர் உச்சி ஸ்தானத்திற்கு (அபிஜித் முகூர்த்தம்) வரும்போது செய்வது உத்தமம்.*
*சாயம் சந்தியாவந்தனம் செய்ய ஏற்ற காலம்-*
"உத்தமா ஸூர்யசஹிதா மத்யமாலுப்ததாரகா
கநிஷ்டா தாரகோபேதா ஸாயம் சந்த்யா த்ரிதா ஸ்ம்ருதா"
- ஸூத்ரம்.
*மாலையில் சூர்யன் இருக்கும் பொழுது செய்யக்கூடிய சந்தி உத்தமம்*.
*நட்சத்திரங்கள் வருவதற்கு முன்பு செய்வது மத்யமம்.*
*நட்சத்திரங்கள் வந்த பிறகு செய்வது கநிஷ்டம்*
தொடர் -4
*பிரம்மாவின் தியானத்தின் முதிர்ந்த பயனாய் தோன்றிய பரதேவதைக்கு சந்தியா என்று பெயர்* அவளை இருதய ஆகாசத்திலும் பேராகாசத்திலும் அன்றாடம் உதித்து அஸ்தமிக்கும் சூரியனிடத்திலும் வந்தனம் செய்வது சந்தியாவந்தனம்.
*"ப்ரஹ்மணோ த்யாயதோ யஸ்மாத் ஸம்யக் ஜாதா வராங்கனா ! அத: ஸந்த்யேதி லோகேஸ்மின் அஸ்யா: க்யாதிர் பவிஷ்யதி !!"*
உபநயனம் செய்விக்கப்பட்ட த்விஜன் அல்லது இருபிறப்பாளன் என்பவர்கள் கண்டிப்பாக சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.
உபநயனம் எனப்படுவது இரண்டாவது பிறப்பின் வாயிலாக அமைகிறது.
"உப "என்றால் சமீபத்தில் என்று பொருள்படுகிறது. எதற்கு சமீபத்தில்? பிரம்மத்தின் சமீபத்தில் , "நயனம் " என்பதற்கு அழைத்துச் செல்லுதல் என்று பொருள். ஆகவே உபநயனம் எனும் சொல்லுக்கு ஆச்சாரியன் சிஷ்யனை பிரம்மத்திற்கு சமீபத்தில் அழைத்துச் செல்வது என்று பொருளாகும்.
பிராமணர்களும் ஷத்ரியர்கள் வைசியர்களும் கர்ப்பத்திலிருந்து முறையே, 8, 12, 16 வயதுக்குள், காமம் மனத்தில் புகுமுன் உபநயன தீக்ஷை பெறவேண்டும் என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.
வாமன மூர்த்தியாக அவதரித்த பகவானுக்கு உபநயனம்" செய்வித்ததை ஸ்ரீமத் பாகவதம் அழகாக வர்ணிக்கிறது.
*சூரியதேவன் காயத்ரி மந்திரத்தை வாமனருக்கு உபதேசித்தார்.*
*பிரகஸ்பதி தவத்தை காக்கும் யக்ஞோபவீதத்தை கொடுத்தார்.* பிரம்மச்சரியத்திற்கு ரக்ஷை போன்ற முஞ்சி" கயிற்றை கஸ்யபர் இடுப்பில் கட்டினார். ஆயுளை வளர்க்கும் மான் தோலை பூமிதேவி போர்த்தினாள். ஓஷதிகளின் பதியான சோமன் பலாச தண்டத்தை அளித்தார். தாயான அதிதி கெளபீனத்தையும், மேலுலக தேவதை குடையையும், பிரம்மா கமண்டலத்தையும் சப்தரிஷிகள் தர்ப்பையையும், சரஸ்வதி ஜெபமாலையையும், குபேரன் பிக்ஷை பாத்திரத்தையும் அளித்தனர். உமாதேவி பிக்ஷை இட்டாள். இவ்வாறு உபநயனம் செய்விக்கப்பட்ட வாமனர் பிரம்ம தேஜஸ்ஸுடன் பிரகாசித்தார். தக்க வயதில் ஒழுங்காக உபநயனம் செய்விக்கப் பெறும் ஒவ்வொரு சிறுவனும் வாமன பிரம்மச்சாரியின் திருவுருவைபோலவே காட்சி அளிப்பான்.
உபநயனத்தில் குருவானவர் சிஷ்யனை ஒரு கல்லின் மேல் கால் ஊன்றி நிற்க செய்து ஆசீர்வதிப்பது.....
*"ஆதிஷ்டேமம் அச்மானம் அச்ம இவத்வம் ஸ்திரோபவ !*
*அபிதிஷ்ட ப்ருதன்யத:*
*ஸஹஸ்வ ப்ருதானாயத: "*
*- ஸூத்ரம்..*
இக்கல்லை போன்ற வலிமை கொண்ட உடலும் உறுதி கொண்ட நெஞ்சும் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊரு செய்பவர்களை எதிர்த்துப் போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும் என்பதே.
மேலும் கூறுவதாவது
"ப்ரஹ்மசார்யஸி !"
நீ ப்ரம்மசாரியாகிவிட்டாய் .
"அபோ (அ)சான:! கர்ம குரு :! மாஸுஷுப்தா !"
சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும். அறியாமையிலிருந்து விழித்தெழு ! உறங்காதே !
என்றெல்லாம் பலவாறாக உபநயத்தின்போது உபதேசிக்கப் படுகிறது.
தொடர் - 5.
*ஸந்தியாவனந்தத்தின் ஜீவநாடி போன்றவை மூன்று. அவை 'அர்க்கியப் பிரதானம்', 'பிராணாயாமம்'
மற்றும் 'காயத்ரீ ஜபம்'*
*மார்ஜனம், பிராசனம், உபஸ்தானம் முதலிய பகுதிகள் அங்கங்களாக அமைகின்றன*. அர்க்கியப் பிரதானத்தின் கருத்தை விளக்க ஒரு கதை வேதத்திலே கூறபடுகிறது. சூரியனை எதிர்த்து அரக்கர்கள் அன்றாடம் போராடுகின்றனர் என்றும், ஸந்தியாவந்தனம் செய்பவன் காயத்ரீ ஜபித்து விடும் அர்க்கியம் வஜ்ராயுதம் போல் வலிமை படைத்து அரக்கர்களை முறியடிக்கிரதென்றும் அது கூறுகிறது. அஞ்ஞானமே அரக்கர் படை. ஞானமே சூரியன்.போர்க்களம் மனிதனுடைய மன வெளி. இப் போரில் வெற்றி காண பிரம்மாஸ்திரம் போன்றது காயத்ரீ மந்திரம். அசுரர் படை திரும்ப திரும்ப வந்து அகவெளியில் சூழ்ந்துக் கொள்வதால் போர் புரிந்துக்கொண்டே இருக்கவேண்டும். தினந்தோறும் சாப்பிட மறந்தாலும் ஸந்தியாவந்தனத்தை மறக்க கூடாது.
*இனி ஸந்தியா வந்தன பிரயோகங்களை காண்போம்.*
*1) ஆசமணம் ||*
*காலை மற்றும் மதிய வேலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் வடக்கு நோக்கியும் ஆசமனம் செய்ய வேண்டும். மேற்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் செய்யக் கூடாது*.
நாஸாமே தாஸனஸ்-தாங்க்ரீர்- ந பத்தாசன ஏவ வா !
ந ப்ரஸாரி தபதோ வா பஹிர்-ஜானு- கரோபிவா !
முக்தாங்குஷ்ட - கனிஷ்டாப்யாம் த்ரி: பிபேத் ப்ரம்ம- தீர்த்தத: !
- ஸூத்ரம்.
கைகள் முழந்தாளுக்கிடையில் அடங்கியிருக்கும்படி குந்திட்டு உட்கார்ந்து செய்ய வேண்டும்.
சுண்டு விரலையும், கட்டை விரலையும் விட்டு மற்ற விரல்களைச் சற்று வளைத்தால் ஏற்ப்படும் உள்ளங்கைக் குழியில் சிறுது சிறிதாகத் தீர்த்தத்தை ஏந்தி உட்கொள்ள வேண்டும்.
"மஹாவியாதி -ப்ரசமனி-நாமத்ரயீ வித்யா !!"
அச்சுதானந்த-கோவிந்த -நாமோச்சாரண-பேஷஜாத் ! நச்யந்தி ஸகல ரோகா : ஸத்யம் ஸத்யம் வஹாமயஹம் !!
-போதாயன ஸூத்ரம்.
அச்யுதாய நம:
அனந்தாய நம:
கோவிந்தாய நம:
என்னும் மூன்று மந்திரங்களும் உடலிலும் உள்ளத்திலும் உறையும் எல்லா வியாதிகளயும் போக்கவல்லது.
*இதற்கு நாம - த்ரயீ வித்யா என்று பெயர்*.
இந்த மந்திரங்களுடன் ஆசமணம் செய்யவேண்டும்.
"த்ரிராசாமேத் ! த்வி: பரிம்ருஜய ஸக்ரு - துபஸ்ப்ருச்ய !"
- ஸூத்ரம்.
பவித்ரம் அணிந்திருந்தால் அதை கழற்றி வலது காதில் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு பின் அதை அணிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு பின் கேசவா, நாராயணா என்ற 12 நாமாக்களால் கண் காது முதலிய உறுப்புக்களை தொட்டு அனைத்தையும் பரமாத்மாவின் பணிக்கு உரியனவாக்க வேண்டும். ஐந்து இந்திரியங்களும் உள்முகப்பட்டால் ஆனந்தம் தானே உதிக்கும்.
அங்குஷ்டோ$க்னீரிதி-க்யாத: ப்ரோக்தா வாயு: ப்ரதேசினி ! அநாமிகா ததா ஸூர்ய: கனிஷ்டா மகவா ஸ்ம்ருதா!! ப்ராஜபதிர் மத்யமா து ஜ்ஞேயா சுத்திமபீப்ஸத: !!
- ஸூத்ரம்
கட்டை விரலும், வாயும்,
அக்னியின் ஸ்தானம் ஆகையால், "கேசவா, நாராயணா "என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும்,
பவித்ர விரலும் கண்களும் சூரியனுடைய ஸ்தானமாகையால் "மாதவா ,கோவிந்தா" என்று பவித்ர விரலால் கண்களையும்
ஆள்காட்டி விரலும், நாசியும், வாயுவின் ஸ்தானமாகையால் "விஷ்ணு :,மதுசூதனா" என்று ஆள்காட்டிவிரலால் நாசித் துவாரங்களையும்,
சுண்டு விரலும் காதுகளும் இந்திரனுடைய ஸ்தானமாகையால் "திரிவிக்ரம ,வாமனா" என்று சுண்டுவிரலால் காதுகளையும்,
நடுவிரலும் தோள்களும் பிரஜாபதியின் ஸ்தானமாகையால் " ஸ்ரீதரா, ஹ்ருஷிகேசா" என்று நடு விரலால் தோள்களையும்,
"பத்மநாபா, தாமோதரா" என்று பரமாத்மாவின் ஸ்தானமாகையால் தொப்புளிளும் உச்சந்தலையிலும் முறையே தொட்டு கொள்ள வேண்டும்.
தொடரும் ...,..
No comments:
Post a Comment