🌹வாசல் தெளித்து கோலம் போடுவது பூமி பூஜையே*🌹
*ஒரு முறை ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியை வணங்கிவிட்டு , தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார்.*
*"அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா " என்று கேட்டார்.*
*அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.*
*_பணக்காரக் குடும்பத் தினருக்கு, ஒரு நொடி 'சப்'பென்று போய்விட்டது._ தங்களின் செல்வத்திற்கு மதிப்பு அளித்து,*
*'ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்' ,* *'ஆயிரக்கனக்கானவர்க்கு* *அன்னதானம் செய்'*
*என்று பெரிய அளவில் தான் எதாவது கூறுவார் என்று நினைத்திருந் தனர். இருந்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, 'செய்யப்படுகிறது' என்றனர்.*சிஎஸ்வி*
*ஆச்சரியார் அதோடு விடுவதாக இல்லை.*
*'யாரால் செய்யப் படுகிறது?' என்று வினவினார்.*
*இது கூடத் தெரியவில்லையா? என்ற தொனியில் 'வேலைக்காரி தான்' என்றாள் தனவானின் மனைவி.*
*மஹா ஸ்வாமிகள் பொறுமை இழக்கவில்லை. , நிதானமாக,. "பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்து விட்டது!" என்றார்.*
*அவ்வளவு தான் . . . அடுத்த நொடி குடும்பமே சாஷ்டாங்கமாக பணிந்துவிட்டது.*
*தாய்க்குலம் குழந்தைகளை மட்டுமே அதுவும், பத்து மாதம் மட்டுமே சுமக்கிறது. பூமித் தாயோ எல்லாவற்றையும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக் கிறாள்.*
*எனவே நாம் அனைவரும் நம் குடும்பம் சிறக்க பூமி பூஜையை தினமும் நாமே செய்ய வேண்டும் என ஆசீர்வாதம் செய்தார்.*
*மறவாமல் தினமும் வீட்டின் வாசலில் வீட்டின் பெண்கள் தண்ணீர் தெளித்து கோலமிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதுவே சிறந்த குடும்ப சந்தோஷமும் நிம்மதியையும் தரும்.*
🙏
உலகின் முதல்வனே அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையாரே உன் மலர் பாதம் சரணம் . 🌿🌿
**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என் வரமே.
🌹🌹
No comments:
Post a Comment